WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australia's "Anti-Terrorism" Bill: the
framework for a police state
ஆஸ்திரேலியாவின் ''பயங்கரவாத- எதிர்ப்பு'' மசோதா: ஒரு போலீஸ் அரசிற்கான
கட்டமைப்பு
Statement of the Socialist Equality Party (Australia)
3 November 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பிரதமர் ஜோன் ஹோவார்ட் மற்றும் 6 ஆஸ்திரேலிய
அரசு பிரதமர்கள் மற்றும் 2 பிரதேசங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் இணைந்து கொடூரமான புதிய சட்டங்களை
வரைந்துள்ளார்கள், அவை ஒரு போலீஸ்-அரசிற்கான சட்டரீதியான தாங்குகோல்களை உருவாக்குவதாகும். 2005
பயங்கரவாத-எதிர்ப்பு மசோதாவின் பொருளடக்கத்திலும், அதை மாநில மற்றும் கூட்டாட்சி நாடாளுமன்றங்களில்
நடைமுறைக்கு கொண்டுவர செய்யப்பட்ட சதிமிக்க வழிமுறை ஆகிய இரண்டிலும் இதற்கு
முன்னொருபோதுமில்லாததுமாகும்.
2001 செப்டம்பர் 11-க்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத-எதிர்ப்பு
சட்டத்தில் ஏற்கனவே அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்களை வழங்குகிறது இரகசிய காவலில்
வைப்பதற்கும், குற்றச்சாட்டு எதுவும் கூறப்படாமல் ஒரு வாரம் வரை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதற்கும்
மற்றும் நிர்வாக கட்டளை மூலம் அரசியல் அமைப்புக்களுக்கு தடை விதிப்பதற்கும் அதிகாரங்கள் வழங்குகிறது.
புதிய சட்டங்கள் இந்த தாக்குதல்களை மேலும் அதிகரித்திருக்கின்றன. முதலாவதாகவும்,
மிக முக்கியமாகவும் மத்திய மற்றும் மாநில போலீசார் ''சந்தேகிக்கப்படுபவர்களை'' குற்றச்சாட்டோ அல்லது
விசாரணையோ இல்லாமல் காவலில் வைக்க ஒருதலைப்பட்ச அதிகாரத்தை வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் கீழ்,
போலீசார் ஒரு எதிர்கால பயங்கரவாத செயலில் தலையிட எண்ணக்கூடும் அல்லது அத்தகைய நடவடிக்கை பற்றிய
தகவல் கிடைக்குமானால் எவரையும் 48 மணி நேரம் வரை ''கைது செய்து தடுப்புக்காவலில்''
வைத்திருக்கமுடியும். தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு நீதிபதி, முன்னாள் நீதிபதி அல்லது ''தனிப்பட்ட திறனில்''
நீதிபதியாக செயல்படுபவர், (அதாவது ஒரு நீதிமன்றமாக அல்லாது ஆனால் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக)
தொடக்க கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமலே அதாவது ''சந்தேகிக்கப்படுபவர்'' ஆஜர்படுத்தப்படாமலே
14 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கும் முத்திரை குத்துவார்.
சந்தேகிக்கப்படுபவர் ஏன் தான் காவலில் வைக்கப்படுகிறார் என்று அறிந்துகொள்கின்ற
உரிமை எதுவும் இருக்காது. அவர் பிறரோடு தொடர்புகொள்ள முடியாமல் காவலில் வைக்கப்பட்டிருப்பார் மற்றும்
அவர் ஒரு வக்கீலுடன் நடத்துகின்ற உரையாடல் கண்காணிக்கப்படும்----வழக்குரைஞர்-கட்சிக்காரருடைய சிறப்புரிமை
போன்றவை எதுவும் நீக்கப்பட்டுவிடும். அவரது குடும்ப உறுப்பினர்கள் வழக்குரைஞர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட
யார் அவர், காவலில் வைக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை அம்பலப்படுத்தினாலும் அவர்களை 5 ஆண்டுகள் வரை
சிறையில் வைத்திருக்க முடியும். தனது மகனோ அல்லது மகளோ காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை பெற்றோர்கள்
ஒருவருக்கொருவர் தகவல் கூறிக்கொள்ள முடியாது. இந்த அசாதாரணமான விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டது
எவ்வளவு பேர் அல்லது ஏன் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும்
என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகும்.
இரண்டாவதாக, ''கட்டளை பிறப்பிக்கும் நீதிமன்றங்கள்'' ''கட்டுப்பாட்டு
கட்டளைகளை'' சிறப்பாக வடிவமைக்கும் -அவற்றில் வீட்டுக்காவல், தனிப்பட்ட முறையில் கண்காணிப்பு கருவிகளை
அமைப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மீதான தடை மற்றும் எல்லா வகையான தகவல்
தொடர்புகளும்------எந்தவிதமான தொடக்க முன்னறிவிப்போ அல்லது விசாரணையோ இல்லாமல் நடவடிக்கை
எடுக்கப்படும். தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களை போல் வீட்டுக்காவலில் இருப்பவர்களும் தாங்கள் கைது
செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு தகவல் தந்து உஷார்படுத்த முடியாது. இந்த கட்டுப்பாட்டு
கட்டளைகள் 12 மாதங்கள் வரை நீடிக்கும் மற்றும் தொடர்ந்து அவை புதுப்பிக்கப்படும். காவலில்
வைக்கப்பட்டிருப்பவர்கள் அவற்றை அதே சிறப்பு நீதிமன்றங்களில் ஆட்சேபனை சமர்ப்பிக்க வாரக்கணக்கில் அல்லது
மாதக்கணக்கில் காலதாமதம் ஏற்படலாம்.
புதிய சட்டங்கள் குற்றவாளி இல்லை என்று ஏற்றுக்கொள்வதை இரத்து செய்கின்றன.
''சந்தேகிக்கப்படுபவர்'' எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க உத்தேசித்திருக்கலாம் என்று அரசாங்க மற்றும்
பாதுகாப்பு அமைப்புக்கள் சந்தேகிக்கும் எவரையும் அவற்றின் அடிப்படையிலேயே காவலில் வைத்திருப்பதாக அவை
வகை செய்கின்றன. மிக அற்பமான சாக்குபோக்குகளை சுமத்தி ''நியாயமான சந்தேகங்கள்'' பயங்கரவாத
நடவடிக்கையில் ஈடுபடும் ''நோக்கம்'' பற்றி அல்லது ''நியாயமான அடிப்படைகள்'' உள்ளன என்று கூறி கைது
செய்ய முடியும் அல்லது ''நியாயமான அடிப்படைகள்'' ஒரு பயங்கரவாத செயலை தடுப்பதற்கு ''கணிசமான
அளவிற்கு உதவும்'' என்று கருதியும் இந்த கட்டளைகள் பிறப்பிக்கப்படும்.
2001 முதல் பல்வேறுவகைப்பட்ட முக்கிய குற்றவியல் குற்றங்கள் ஏற்கனவே
அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு பயங்கரவாத நடவடிக்கை முயற்சி மற்றும் நிதி, உதவி, பயற்சியளிப்பது, தயாரிப்பு
உட்பட பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது அல்லது ஒவ்வொரு எண்ணிப்பார்க்கக்கூடிய பங்கெடுப்பும் உள்ளடங்கும்.
கடைசியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திட்டவட்டமாக போலீசாரும் புலனாய்வு அமைப்புக்களும் அத்தகைய
தொடர்புகள் குறித்து எந்த சான்றையும் காட்ட முடியாதபோது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வகை
செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புதிய அதிகாரங்களில் பல கடந்தகாலத்திற்குரிய அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பு என்று தடை விதிக்கப்படாத அமைப்புக்களை சேர்ந்தவர்களாக இருந்து
அதற்கு பின்னர் அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் அந்த அமைப்புக்களில் கடந்த காலத்தில் பயிற்சி
பெற்றவர்கள் அத்தகைய குழுக்கள் முதலில் கைது செய்யப்படுவார்கள் என்று சட்டமா அதிபர் பிலிப் ரூடாக்
கோடிட்டுக்காட்டியுள்ளார்.
மேலும், தடுப்புக் காவலும் கட்டுப்பாட்டு கட்டளைகளும் ஒரே நேரத்தில்
உச்சக்கட்டத்தில் பிறபிக்கப்படும். 2003ல் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு மேலாக
இவை பயன்படுத்தப்படும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பும்
(ASIO) போலீசாரும்
7 நாட்கள் வரை புலனாய்விற்காக காவலில் வைத்திருக்க முடியும். இதன் பொருள் என்னவென்றால் 14 நாட்கள்
''தடுப்புக்காவலுக்கு'' பின்னரும் ஓராண்டு அல்லது அதற்கு மேலாக வீட்டுக்காவலில் வைத்திருந்த பின்னரும் எவரையும்
ஒரு வாரத்திற்கு காவலில் வைத்திருக்க புதிய சட்டம் வகை செய்கிறது.
பொதுவாக சர்வாதிகார ஆட்சிகளோடு அடையாளம் காணக்கூடிய நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு இந்த சட்டம் வழியமைத்து தருகிறது. போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்படும் மக்கள்
''காணாமல்'' போய்விடுவர் ஊடகங்களோ அல்லது வேறு எவருமோ அது பற்றி எந்த தகவலையும் தரமுடியாத
நிலை ஏற்படும். அரசியல் எதிரிகள் மீது நீண்டகால வீட்டுக்காவல் விதிகளை பயன்படுத்த முடியும், இரகசிய
சான்றுகளை பயன்படுத்துவது சர்வசாதாரணமாக ஆகிவிடும் மற்றும் பாதுகாப்புப்படைகள் ''கொல்வதற்கு
சுடுகின்ற'' அதிகாரங்களை பெறும்.
பல்வேறு வக்கீல்கள் சங்கங்கள் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல் தடுப்புக் காவல்
மற்றும் கட்டுப்பாட்டு கட்டளைகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைக்கும் பயன்படுத்தமுடியும் நூற்றுக்கணக்கான மக்களை
இரகசியமாக தெருக்களில் இருந்து இழுத்துச்செல்ல முடியும் அவர்களை வெளியுலக தொடர்பிலிருந்து தனிமைப்படுத்த
முடியும். 2001 இருந்து ஏற்கனவே நடைமுறையிலுள்ள நிறைவேற்றப்பட்ட சட்டங்களின்படி ''பயங்கரவாத
நடவடிக்கைகள்'' என்பவற்றிற்கு மிக பரவலான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அந்த விளக்கத்தில் வன்முறைக்கு
இட்டுச்செல்கின்ற எந்த அரசியல் கண்டனமும் அல்லது ஒரு தனி நபருக்கோ அல்லது சொத்திற்கோ கடுமையான
தீங்கு விளைவிக்கின்ற எந்த அரசியல் கண்டனமும் பயங்கரவாத நடவடிக்கை என்கின்ற விளக்கத்தின்கீழ் வருகிறது.
மிக அடிப்படையான அளவில் பார்த்தால் புதிய சட்ட விதிமுறைகள் அரசியல்
எதிர்ப்பை அமைதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. எந்த அமைப்பு ஒரு பயங்கரவாத நடவடிக்கையை
''ஆதரவளித்தாலும்'' ''பாராட்டினாலும்'' அல்லது ''ஆலோசனைகளை'' கூறினாலும் அது சட்ட பாதுகாப்பை
இழந்துவிடும். தானாகவே குற்றத்தை வெளிப்படுத்தப்பட்டால் அதன் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும்
நிதியளிப்பவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும். பயங்கரவாதத்தை ''பாராட்டுவது'' என்பது வெறும்
அனுதாபத்தை தெரிவிப்பது அல்லது பயங்கரவாதத்தின் சமூக பொருளாதார அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும்
என்று கூறுவது ஆகியவையும் தடை செய்யப்பட்ட நடவடிக்கையில் அடங்கும்.
அரசிற்கு எதிரான நடத்தை சட்டத்தின் தீவிர விரிவாக்கம் அதிகமாக
வெளிப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான ''அதிருப்தியை ஊக்குவிப்பது'' பல்வேறு குழுக்களுக்கிடையே
''நல்லெண்ணத்தை சிதைப்பது அல்லது பகையை உருவாக்குவது'' அல்லது ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு எதிராக
''ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு நாடு அல்லது அமைப்பிற்கு'' உதவியளித்தல் போன்ற
நடவடிக்கைகள் மற்றும் போர்ப்பிரகடனம் செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டவிரோதமானவை என்று
புதிய சட்டங்கள் வகை செய்கின்றன. இந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டிக்கப்படுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை
சிறைதண்டனை விதிக்கப்படும் மற்றும் அத்தகைய உணர்வுகளை ஆதரிக்கின்ற அமைப்புக்கள் ''சட்டவிரோதமான
கூட்டுக்கள்'' என்று அறிவிக்கப்படும்.
இந்த சட்டங்கள் அரசாங்கத்தை எந்த வகையில் விமர்சித்தாலும் அல்லது ஆஸ்திரேலிய
இராணுவ தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஆதரவு காட்டினாலும், அத்தகைய நடவடிக்கைகளை கிரிமினல்
நடவடிக்கைகளாக அனுமதி வழங்குகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பு அல்லது ஆசிய-பசிபிக்
பிராந்தியத்தில் சாலமன் தீவுகள் பாப்பா நியூகினி, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய
படைகள் அனுப்பப்பட்டது ஆகிய நடவடிக்கைகளை விமர்சித்தலும் அடங்கும். ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கழகம் நடத்திய
''ஊடக கவனிப்பு'' நிகழ்ச்சி பற்றிய சட்டஆலோசனை பெறப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஜோன் பில்கர் நடத்தினார்.
அவர் ஈராக்கில் நடைபெற்று வருகின்ற கிளர்ச்சி இரண்டாவது உலகப்போரின் போது பிரான்சில் நாஜிக்கள் திணித்த
விச்சி (Vichy)
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட நியாயமான போராட்டத்தோடு ஒப்புநோக்கி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்காக இந்த புதிய சட்டத்தின்படி அவர் மீதும் ABC
ஒலிபரப்பு மீதும் அரசிற்கு எதிரான கிளர்ச்சிக்காக குற்றம் சாட்டப்படமுடியும்.
புதிய சட்டங்கள் சாதாரண மக்களை பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றுவதற்கு
எந்த வகையிலும் சம்மந்தப்பட்டிருப்பவை அல்ல. லண்டனில் ஜூலை 7ல் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களை
தொடர்ந்து ஹோவார்ட் இதை முன்மொழிவு செய்தார், ''உள்நாட்டில் வளரும்'' பயங்கரவாதிகளை சமாளிப்பதற்கு
புதிய அதிகாரங்கள் தேவை என்று கூறினார். ஆனால், சிட்னி மோர்னிங் ஹெரால்டிற்கு ஒரு
பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு வட்டாரங்கள் தந்திருக்கும் தகவலைப்போன்று, ஜூலை 7 நிகழ்ச்சிக்கு
நீண்ட நாட்களுக்கு முன்னரே இந்த நடவடிக்கைகள் அரசாங்க திட்ட வாரியங்களில் இருந்து வந்தன.
ஆஸ்திரேலியாவில் எந்த பயங்கரவாத சம்பவமும் நடைபெறவில்லை. அப்படியிருந்தும்
அமெரிக்காவில் புஷ்ஷை போன்றும், பிரிட்டனில் பிளேரைப் போன்றும் ஹோவார்ட், 2001 செப்டம்பர் 11ல்
தொடங்கி 2002 வரை பாலி குண்டு வெடிப்புக்களில் ஆரம்பித்து லண்டன் குண்டு வெடிப்புக்கள் வரை மற்றும் மிக
அண்மையில் பாலியில் நடைபெற்ற தாக்குதல்கள் வரை, வேறு எங்கு இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் அதை
கையில் எடுத்துக்கொண்டு மிக அடிப்படையான சட்ட மற்றும் அரசியல் உரிமைகளை பறிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்கள்.
ஜனநாயகத்திற்கு எதிரான சதி
புதிய சட்டங்களின் மிக ஆழமான பிற்போக்குத்தன்மையின் சாரம் அசாதாரணமான
அரசியல் சதியை சுற்றியுள்ள அபிவிருத்தியினால் கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஹோவார்ட்டும் அவரது
மாநில தொழிற்கட்சி பிரதமர் மற்றும் முதல்வர்களும், ஆஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய
''பயங்கரவாதத்திற்கு-எதிரான'' உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலிய அரசாங்கங்களுக்கான சபையில்
(COAG)
செப்டம்பர் 27ல் ஒரு இரண்டு மணிநேரம் இரகசிய கூட்டம் நடத்தி இந்த நடவடிக்கைகளுக்கு கையெழுத்திட்டனர்.
ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கத்திற்கு மாகாண முதல்வர்களின் ஆதரவு தேவை
ஏனென்றால் இந்த சட்டங்கள் ஆஸ்திரேலிய அரசியலமைப்பை வெளிப்படையாக மீறுவதாக அமைந்திருக்கின்றன.
கொடுங்கோண்மைக்கு எதிராக அரசியலமைப்பில் மனித உரிமைகள் சாசனமோ அல்லது வேறு எந்த பாதுகாப்போ
இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய அரசியல் சட்டத்தில் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை
தனிமைப்படுத்தி பிரித்து வைத்திருக்கிறது. ஒரு முறையாக அமைக்கப்பட்ட நீதிமன்ற விசாரணை எதுவும் இல்லாமல்
ஒரு குடிமகனை எந்த வகையிலும் சிறையில் வைப்பதற்கு அல்லது தண்டிப்பதற்கு அரசியலமைப்பு தடை விதிக்கிறது.
இந்த அடிப்படை உரிமைகளை மீறுகின்ற வகையில் ஹோவார்டும் மாநில மற்றும்
பிரதேச தலைவர்களும், மத்திய அதிகாரிகள் 48 மணி நேரம் வரை ''தடுப்புக் காவல்'' நடவடிக்கையை
கொண்டுவர முடியும் என்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். மாநிலங்களும் பிரதேசங்களும் அதிகார பிரிவு சட்டத்திற்கு
கண்டிப்பாக கட்டுப்பட்டவை அல்ல என்பதால் தடுப்புக் காவலை 14 நாட்கள் வரை நீடிக்க முடியும்.
அரசியல் சட்டபூர்வமான ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக
பிரதமர்கள் தொடக்கத்தில் விடுத்திருந்த கோரிக்கை என்னவென்றால் நீதிபதிகள் இரகசியமாக தங்களது அறைக்குள்
தடுப்புக் காவல் மற்றும் கட்டுப்பாட்டு கட்டளைகளை வழங்க வேண்டும் என்பதுதான். அவர்கள் கணக்கிட்டது
என்னவென்றால் இப்படிச் செய்வது நீதித்துறை மேற்பார்வையிடுகிறது என்ற தோற்றத்தை உருவாக்கும் என்பதுதான்.
ஆனால், பல்வேறு சட்டநிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை போன்று இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று
தீர்ப்பு அளிக்கப்படலாம் ஏனென்றால் அது நீதிபதிகள் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்துவதற்கு கேட்டுக்கொள்வதாக
அமைந்திருக்கிறது. தொழிற்கட்சி பிரதமர்கள் தமது கவலைகளை பிரதிபலிக்கையில், அரசியலமைப்பு கீழறுக்கப்படுகிறது
என்பதற்காக அவர்கள் கவலை தெரிவிக்கவில்லை ஆனால் அந்த சட்டங்கள் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படலாம்
என்பதற்காக கவலைத் தெரிவித்னர்.
மாநில மற்றும் மத்திய சட்ட அதிகாரிகளின் ஒரு தொடர் கூட்டங்களுக்கு பின்னர்
ஹோவார்ட் தடுப்புக்காவல் கட்டளைகள் நீதிமன்ற ஆய்விற்கு உட்படுத்தப்படும் என்று வாய்மொழியாக உறுதியளித்த
பின்னர் நியூ சவுத்வேல்ஸ் தொழிற்கட்சித்தலைவர் மொரிஸ் லெம்மாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் மாகாண
தலைவர்கள் பிரதமரோடு தோளோடு தோள் இணைந்து நிற்பதாக அறிவித்தனர்.
அரசியலமைப்பை சீர்குலைத்ததுடன்
COAG
உடன்படிக்கையின் மற்றொரு முக்கியமான நோக்கம் நாடாளுமன்ற விவாதம் எதையும் தடுப்பது, எதுவும்
ஆஸ்திரேலியாவில் இதுவரை நடைபெற்றிறாத அளவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மிகவும் கொடூரமான சட்டங்கள்
மீது நியாயமான பொது விவாதம் எதுவும் தலையிடாது தடுப்பதாகும்.
2002 மற்றும் 2003ல் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பல வாரங்களுக்கு முன்னர் வரை நாடாளுமன்ற குழு விசாரணைகளில் பாராளுமன்ற
உறுப்பினர்களிடம் நூற்றுக்கணக்கான எதிர்ப்பு மனுக்கள் வெள்ளம்போல் குவிந்தன. இதன் விளைவாக
ASIO
தடுப்புக்காவல் திட்டம் ஓராண்டு வரை தாமதப்படுத்தப்பட்டது. இறுதியாக சட்டங்கள் சிறிதளவிற்கு மாற்றப்பட்டு
தொழிற்கட்சி ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன. இந்த முறை பொதுமக்களுக்கு எந்த தகவலும் தெரியாமல்
இருட்டடிப்பில் வைப்பதற்கு கூட்டாக மாநில மற்றும் பிரதேச தொழிற்கட்சி தலைவர்கள்
COAG
நிகழ்ச்சிபோக்கை முன்மொழிவு செய்தனர்.
அவர்களது திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையில் ஆஸ்திரேலிய தலைநகர்
பிரதேச (ACT)
முதலமைச்சர் ஜோன் ஸ்டான்ஹோப் பகிரங்கமாக தனது இணைய தளத்தில் மசோதாவின் தொடக்க நகலை
வெளியிட்டார். அந்த மசோதாவை COAG
கூட்டத்தில் அவர் ஆதரித்தாலும், ஸ்டான்ஹோப் அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற சட்ட மற்றும்
அரசியல் விளைபயன்கள் பற்றி கவலை கொண்டார். அந்த சட்டம் அரசியலமைப்புப்படி செல்லாது என்பதுடன் தனது
சொந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ள மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்ற சட்ட ஆலோசனை
அவருக்கு வழங்கப்பட்டது.
ஸ்டான்ஹோப்பின் செயல்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆத்திரத்தோடு கருத்துக்களை
தெரிவித்தது. அவரை ''பொறுப்பற்றவர்'' என்று முத்திரை குத்தியது. அவற்றின் படுமோசமான அச்சங்களை மிக
வேகமாக உறுதிப்படுத்துகின்ற வகையில் இந்த மசோதாவின் ஷரத்துக்களை படித்த சிவில் உரிமைக் குழுக்கள்,
வழக்குரைஞர்கள் அமைப்புக்கள், பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதை கண்டிக்கத் தொடங்கினர்.
தென்னாபிரிக்காவில் பிறந்து நோபல் பரிசை வென்றெடுத்திருக்கும் நாவலாசிரியர்
J.M. கோயிட்சே
''(தென்னாபிரிக்க சட்டங்களை) உருவாக்கியவர்கள் சட்டபூர்வமான அரசை செயல்திறனுடன் நிறுத்தி வைத்துவிட்ட
தார்மீக காட்டுமிராண்டிகள் என்று நான் நினைத்தேன். இந்த அனைவரும் காலத்திற்கு முந்தியவர்கள் என்பது
இப்போது எனக்குத் தெரியும். தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் காலத்திற்கும் இதற்கு முந்திய காலத்திலும்
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரால் இதுபோன்ற நடவடிக்கைகளும் அதற்கு அதிகமாகவும்
மேற்கொள்ளப்பட்டன.'' என குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் சொந்த மனித உரிமைகள் மற்றும் சம வாய்ப்புக்கள் பற்றிய
ஆணைக்குழுத்தலைவர் உறுதிப்படுத்தியது என்னவென்றால் இந்த மசோதா சர்வதேச சிவில் மற்றும் அரசியல்
உரிமைகள் ஒப்பந்தமும் உள்ளடங்கும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறுவதாக உள்ளதாக பல்வேறு சட்ட
ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சட்டத்துறையின் உச்சி அமைப்பான சட்டக் குழு நீதிபதிகள் புதிய கட்டுப்பாடுகளை
புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
சென்றவார கடைசியில்
COAG கூட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு மற்றொரு
நகல் அனுப்பப்பட்டபோது, அது பகிரங்கமாக வெளியிடப்பட்டால் வழக்கு தொடரப்படும் என்று அச்சுறுத்தும் ஒரு
கடிதமும் வந்தது. சட்ட ஆலோசனை பெற்று ஸ்டான்ஹோப் அதன்படி செயல்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
நம்பிக்கை நிபந்தனையை மீறி செயல்பட்டால், பொது அமைப்பிலிருந்து ஒரு ''சட்ட பதில் ஆபத்தை சந்திக்க
வேண்டியிருக்கும்'' என்று அவர் அறிவித்தார்.
பொதுமக்களது வளர்ந்து வரும் எதிர்ப்பை பற்றி கவலைப்படாமல் அதை
பொருட்படுத்தாமல் தொழிற்கட்சி புதிய சட்டங்களுக்கு தொடர்ந்து தனது ஆதரவை தந்து வருகிறது. மத்திய
எதிர்க்கட்சி தலைவரான கிம் பீஸ்லீ இறுதி நகல் மசோதாவை படிக்காமல் கூட அல்லது தனது கட்சி கூட்டாளிகளை
கலந்தாலோசிக்காமலே கூட ஆதரிக்கப்போவதாக அறிவித்தார்.
ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒரு சோசலிச வேலைதிட்டம்
நடப்பிலுள்ள கூட்டணியில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை சுற்றிலும் ஒன்று
சேர்ந்திருப்பது தனிமனிதர்களின் சம்பந்தப்படுத்துதலை ஜனநாயக விரோத போக்குகளினால் மட்டுமே எளிதில்
விளக்கம் தந்துவிட முடியாது. ஹோவார்ட் ரூடாக் அல்லது ''பாம்பர்'' பிஸ்லே மற்றும் அவரது ''சட்டம்
ஒழுங்கை'' நிலைநாட்டும் மாகாண தொழிற்கட்சி நண்பர்களது நடவடிக்கைகளை மட்டும் கருத்தில் கொண்டு இந்த
கூட்டணிக்கு விளக்கம் தந்துவிட முடியாது. அது ஆழமான பொருளாதார சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிபோக்கில்
வேர்விட்டிருக்கிறது.
ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக் மீது குற்றமிக்க படையெடுப்பை நடத்தி ஆக்கிரமிப்பு செய்ததற்கு
நேரடியாக பொறுப்பு வகிக்கும் மூன்று அரசாங்கங்களான அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள்
போலீஸ் அரசு நடவடிக்கைகளை உள்நாட்டு எதிர்ப்பை ஒடுக்குவதற்கு அறிமுகப்படுத்தியமை தற்செயலாக நடந்துவிட்டதல்ல.
உண்மையிலேயே ஹோவார்டின் புதிய மசோதா புஷ்ஷின் இழிபுகழ் தேசபக்த சட்டம் மற்றும் பிளேயரின் தொழிற்கட்சி
அரசாங்க பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல அம்சங்களை முன்மாதிரியாக கொண்டு இயற்றப்பட்டிருக்கிறது
என்றாலும், வழக்கறிஞ்ஞர்கள் மற்றும் நீதிமன்றங்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கிறது.
வளம் செறிந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கில் அமெரிக்காவின்
தட்டிக்கேட்பாரற்ற மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டமை
நவ-காலனித்துவ ஆக்கிரமிப்பின் ஒரு புதிய காலகட்டத்தை குறிக்கிறது. ஆஸ்திரேலியா முழுவதிலும் போருக்கு
எதிரான வெகுஜன உணர்வுகள் தெரிவிக்கப்பட்டாலும், ஆசிய, பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய
பெருநிறுவனங்களின் நலன்களை காப்பாற்றுவதற்கு அதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவின்
ஆதரவை வென்றெடுப்பதற்காக ஹோவார்ட் இவ்வாறான ஒழுங்கிற்கு சமிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் நடக்கும் போர் கொள்கையை தொடர்ந்து உள்நாட்டில் அரசியல்
ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாத அளவிற்கு பின்னிப்பிணைந்துள்ளது. எப்படி சாதாரண
ஈராக்கியர், அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ''பயங்கரவாதிகள்''
என்று கண்டிக்கப்பட்டு வருகிறார்களோ அதுபோன்று ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற எவரும்
இராஜ துரோகம் செய்ததாக அல்லது பயங்கரவாதத்திற்கு வாதிட்டதாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
அதே நேரத்தில் இருதரப்பு தாக்குதல் ஊதியங்கள் மீது வேலை வாய்ப்புக்கள் மீது
நடத்தப்பட்டு வருவதும், இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு சமூக ஏற்றதாழ்வுகள் பெருகிக்கொண்டு வருவதும்,
மிகப்பரவலான பொதுமக்கள் பிரிவுகள் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் விரோதம் கொள்வதற்கு தூபம்
போட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய செழுமைமிக்க ஆண்டுகளில் அரசியலில் சமூக
சமரசங்களும் சலுகைகளும் தரப்பட்டு வந்த நிலை கைவிடப்பட்டு தற்போது சமூக கொந்தளிப்புக்களும், ஆழமாகிக்கொண்டுவரும்
சமூக துருவமுனைப்புக்களையும் பழைய அரசியல் வழிமுறைகளில் தீர்த்து வைக்க முடியாது. எனவேதான் அரசாங்கமும்
எதிர்க்கட்சியும் கூட்டாக இணைந்துகொண்டு ஜனநாயக ஆட்சி விதிமுறைகளை இரத்து செய்வதற்கு முயன்று வருகிறது.
புதிய சட்டங்களை ASIO
உம் மத்திய மற்றும் மாநில போலீசாரும் எப்படி
பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்பதற்கு ஒரு முன் உதாரணமாக சென்ற செப்டம்பர் மாதம்
அமெரிக்காவின் போர் எதிர்ப்பு மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் நடத்தி வரும் ஸ்காட்
பார்க்கினை ''ஆஸ்திரேலிய சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் அல்லது சட்டம் ஒழுங்கிற்கும் ஆபத்தை விளைவிக்கும்
வகையில் செயல்பட்டார்'' என்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.
ASIO தற்போது
வைத்திருக்கும் பட்டியலில் 80 அல்லது அதற்கு மேற்பட்டோர் மீது கட்டுப்பாட்டுக் கட்டளைகள் பிறபிக்கப்படலாம்
ஏனெனில் அவர்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் இஸ்லாமிய குழுக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்று
குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது முதலில் பழிவாங்கப்படுபவர்கள் பட்டியலில் முஸ்லீம்கள் இடம்பெறுவார்கள் என்பதில்
சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் அவர்களுக்கு எதிராக முன்னோடியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பரவலான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
1990களின் தொடக்கத்தில் சமுதாயத்தில் மிக பலவீனமானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட
பிரிவுகளை சார்ந்த தஞ்சம் கோரியோர் முதலில் சட்டபூர்வமான தடுப்புக்காவல் நடவடிக்கைக்கு உள்ளானார்கள்.
1992ல் தொழிற்கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய விசாரணை இல்லாமல் காலவரையின்றி காவலில் வைத்திருக்கும்
நடைமுறை அடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்ததாலும், தொழிற்சங்கங்களது ஆதரவினாலும்,
தொடர்ந்து நீடித்தது. இது அரசியல் அடிப்படையிலும், சட்டபூர்வமாகவும் ஹோவார்டின் புதிய ஜனநாயகத்திற்கு
விரோதமான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்தது.
அடிப்படை சட்ட உரிமைகளின் பாதுகாவலராக பணியாற்றுவதற்கு பதிலாக நீதிமன்றங்கள்
அவற்றை அழிப்பதற்கு உதவின. சென்ற ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பாலோர் தஞ்சம் கோருவோரை
காலவரையறையற்று கைதிகளாகக்கூட வைத்திருப்பதற்கு அனுமதித்தனர். அரசாங்க சிறைகளில் மிகக்கொடூரமான கடுமையான
நிலவரம் இருப்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. தண்டனை வழங்கும் நோக்கங்களுக்காக இல்லாமல்
சமுதாயத்தை ''பாதுகாப்பதற்காக'' பிரஜைகளையும், காலவரையற்ற காவலில் வைத்திருக்கலாம் என்று பல
நீதிபதிகள் ஆலோசனை கூறினர்.
இந்த நிலைசான்றுகள் எடுத்துக்காட்டுவது என்னவென்றால், நாடாளுமன்றமோ,
அல்லது நீதித்துறையோ, மிக அடிப்படையான குடியுரிமைகளைக்கூட தற்காத்து நிற்காது என்பதைத்தான். பசுமைக்
கட்சிக்காரர்கள் வேண்டுகோளுக்கு அப்பாலும், ஆஸ்திரேலிய ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மற்றும் பல்வேறு அதிருப்தியாளர்கள்
எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், எவ்வளவுதான் பொதுமக்களது அழுத்தங்கள் இருந்து வந்தாலும், இந்த நடவடிக்கைகளின்
போக்கை மாற்றிவிட முடியாது. ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்பதற்கு யுத்தத்திற்கு மூலகாரணமான சமூக
பிற்போக்குத்தனத்திற்கும் சமத்துவமின்மைக்கும் காரணமான இலாப அமைப்பு முறையை நேரடியாக எதிர்க்கும் ஒரு
சோசலிச மூலோபாயத்திற்காக போராடும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை
தவிர வேறு வழியில்லை.
Top of
page |