World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan election: Wije Dias speaks at poll declaration இலங்கை தேர்தல்: தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் இடத்தில் விஜே டயஸ் உரை By our correspondent இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவின் முறையான அறிவிப்பு, கொழும்பில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது. இந்த வைபவம் அரசாங்கத்திற்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சி சேவைகளிலும் மற்றும் பல தனியார் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒலி/ஒளிபரப்பப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) பிரதம மந்திரியான மகிந்த இராஜபக்ஷ இராணுவ அதிகாரிகள் புடைசூழ அலுவலகத்திற்கு வந்திருந்தார். தான் சாதாரண மக்களுடைய பிரதிநிதி என்றும் புதிய இலங்கையை கட்டியெழுப்பும் "மக்கள் நலன்சார்ந்த" அரசாங்கத்திற்கு தலைமை தாங்க இருப்பதாகவும் அவர் சுருக்கமாக கூறினார். வரவிருக்கும் அபாயத்திற்கு கட்டியம் கூறுவதுபோல், "கெளரவமான சமாதானத்திற்கு" தான் ஆதரவு தருவதாகவும், "சட்டத்தையும் ஒழுங்கையும்" பாதுகாக்கப் போவதாகவும் இராஜபக்ஷ பிரகடனம் செய்தார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்கள தீவிரவாத கட்சிகளுடன் பிரதமர் கூட்டு வைத்திருந்த போதிலும், தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தன்னை ஒரு சமாதானப் பிரியராக காட்டிக் கொண்டிருந்தார். பிரச்சார விளம்பரங்கள் ஒரு வெள்ளைப் புறாவை அவர் அணைத்துக் கொண்டிருப்பதைக் காட்டியிருந்தன. "கெளரவமான" சமாதானம் பற்றி இராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதற்கு ஒரு பொருள்தான் இருக்க முடியும்: அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்தச் சலுகையும் கிடையாது என்னும் சிங்கள இனவாதிகளின் ஒரு சங்கேத சொல்லேயாகும். ஜே.வி.பி உடனான அவரது தேர்தல் ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுடனான எத்தகைய "பேச்சுவார்த்தைகளும்" இறுதி நிபந்தனைகளின் வடிவிலேயே இருக்கும் என்பதை ஏற்கனவே தெளிவாக்கியுள்ளது; அவை போர்நிறுத்தத்தை திருத்தியமைத்தலும் ஆயுதங்களை கைவிட்டு நிகழ்வுப் போக்குடன் இணைந்துகொள்ள வேண்டும் என்பதுமாகும். இது யுத்தத்திற்கான பாதையே அன்றி, சமாதான பேச்சுவார்த்தைக்கான வழிமுறை அல்ல. இரண்டாவது பேச்சாளர், சோசலிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு இடது மத்தியவாத அமைப்பான ஐக்கிய சோசலிச கட்சியின் (ஐ.சோ.க) வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய ஆவார். ஜயசூரிய ஒலிவாங்கிக்கு முன் செல்கையில், இராஜபக்ஷவின் கையை தன் இருகைகளாலும் பிடித்துக் குலுக்கி, மகிழ்ச்சியுடன் வெற்றியாளரை பாராட்டினார். இச் செயலே அவருடைய பேச்சுக்கும் தொனி அமைத்துக் கொடுத்தது. அது புதிய ஜனாதிபதிக்கு சமரச ஆலோசனை கூறும் தன்மையைக் கொண்டிருந்தது. தமிழ் பேசும் சிறுபான்மையினரை "அடக்குவதற்காக" தேர்தல் காலத்தில் முன்னணிக்கு வந்த "சிங்கள தேசியத்தை" கட்டுப்படுத்த வேண்டிய "பெரும் சவாலும் விசேடமான பொறுப்பும்" இராஜபக்ஷவுக்கு உண்டு என ஜயசூரிய பிரகடனம் செய்தார். இந்த ஜனாதிபதி காலத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் கூறிய அவர், அவ்வாறு செய்யாவிடின் பெரிய அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். ஆனால் மன்னிப்புக் கோரும் வகையில்: "இன்றைய நல்லபொழுதில் மேலும் எதிர்மறைக் கருத்துக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை," என ஜயசூரிய மேலும் தெரிவித்தார். இராஜபக்ஷ தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக "ஜனநாயக ரீதியாக எதைச் செய்யமுடியுமோ, அவற்றை இன்றில் இருந்தே ஐ.சோ.க தொடங்கும்" என்றும் அவர் அறிவித்தார். மூன்றாவது பேச்சாளர் புதிய இடதுசாரி முன்னணியின் (பு.இ.மு) பிரதிநிதியாவார்: ஆனால் கட்சியின் வேட்பாளர் சமில் ஜயனெத்தியோ அல்லது எந்தவொரு முக்கிய தலைவரோ அங்கு வந்திருக்கவில்லை. நீண்டகால போட்டிக் கட்சியான ஐ.சோ.க யினால், தங்கள் கட்சி மறைக்கப்பட்டுவிட்டது என்பதில் இக்கட்சி விரக்தியடைந்திருந்தது போல் தோன்றியது. ஐ.சோ.க வேட்பாளரின் கருத்துக்களுக்கு ஒப்புதல் தெரிவித்து மிகவும் சுருக்கமாக பேசிய பு.இ.மு பேச்சாளர், சமாதானத்திற்காக இராஜபக்ஷ தெற்கில் இருக்கும் சிங்கள மக்களை வடக்கேயுள்ள தமிழ் மக்களுடன் ஐக்கியப்படுத்த தைரியமாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இராஜபக்ஷ தன்னுடைய தேர்தல் உறுதிமொழிகளை காப்பாற்றும் வகையில் பு.இ.மு அவருக்கும் அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் பிரகடனம் செய்தார். நான்காவது பேச்சாளர், ஸ்ரீ.ல.சு.க க்கும் மற்றும் இராஜபக்ஷவுக்கும் சார்பாக செயற்படும் ஸ்ரீலங்கா தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விமல் கீகனகே ஆவார். 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தத்தை இலங்கைக்கு கொண்டு வந்த புகழ்பெற்ற துறவியான முதல் மகிந்தாவிற்கு பின் நாடு பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்று அவர் அறிவித்தார். பின்னர் இரண்டாம் மகிந்தவின் (இராஜபக்ஷ) வரவைப் பெரிதும் ஆர்ப்பரித்த கீகனகே, இராஜபக்ஷ நாட்டின் கலாச்சாரம், நாகரிகம், வளங்கள் மற்றும் பொருளாதாரத்தையும் மீட்பார் என்று மெழுகு பூசினார். சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜே டயஸ் முற்றிலும் வேறுவிதமான உரையை நிகழ்த்தினார். ஐ.சோ.க மற்றும் பு.இ.மு ஆகியவற்றின் பாராட்டுரைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்த அவருடைய சுருக்கமான உரை, சோசலிச சமத்துவக் கட்சியை இராஜபக்ஷவிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியதோடு புதிய ஜனாதிபதித் தேர்தல் கொண்டுவரக்கூடிய ஆபத்துக்களை பற்றி தொழிலாள வர்க்கத்தை எச்சரித்தது. " சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையில், இந்நாட்டில் சில வாக்குகளை சேகரிப்பதற்காக இத்தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்று எமது பிரச்சாரத்தின் ஆரம்பத்திலேயே நான் கூறியிருந்தேன். எமது இலக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது கொள்கைகள் மற்றும் முன்னோக்கு பற்றி ஒரு விவாதத்தை இலங்கை, இந்தியத் துணைக்கண்டம், தெற்கு ஆசியா மற்றும் சர்வேதேச அளவிலும் தொடக்கி வைப்பதாகும். அது ஒரு அனைத்துலக சோசலிச முன்நோக்காகும். இந்தப் பணியை முன்னெடுப்பதில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக சோ.ச.க உறுப்பினர்களுக்கும் அதற்கு ஆதரவு தந்தவர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்."இப்பொழுது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளதோடு ஒரு புதிய ஜனாதிபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், தமிழ் மக்கள் மற்றும் ஏனைய பிரிவினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்றேனும் தீர்க்கப்படும் என்று சோசலிச சமத்துவக் கட்சி நம்பவில்லை. இத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் நேர்மையீனமும், ஒருபோதும் செயல்படுத்தப்படாத உறுதிமொழிகளுமே இருக்கின்றன. என்னுடைய குறிப்பு வெறும் ஊகம் அல்ல. இந்தப் பெயரளவிலான சுதந்திர அரசின் கடந்த 58 ஆண்டுகால வரலாற்றுப் படிப்பினை இதுவேயாகும். ஐ.தே.க 30 ஆண்டுகளாகவும் அதன்பின்னர் பல கூட்டணிகள் மற்றும் முன்னணிகளுடன் ஸ்ரீ.ல.சு.க யும் இந்த நாட்டை ஆண்டு வந்துள்ளன. ஆனால் மக்களுடைய பிரச்சினைகளில் ஒன்றுகூட தீர்த்துவைக்கப்படவில்லை. "எனவேதான், சோசலிச சமத்துவக் கட்சியினரான நாங்கள், யுத்தத்திற்கு முடிவுகட்ட, அனைவரதும் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்க மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முடிவு கட்டவும் ஒரு சோசலிசத் தீர்வைக் கொண்டுவரும் ஒரு வேலைத்திட்டத்திற்காக வெகுஜனங்கள் போராட வேண்டும் என்று அவர்களுக்கு உறுதியுடன் வலியுறுத்துகின்றோம். வெகுஜனங்களுக்கு அவசியமான வேலைத் திட்டமும் முன்னோக்கும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டமாகும். எதிர்வரும் காலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய வேலைத்திட்டத்தை மக்களுக்கு வழங்கும் என்றும் மற்றும் அதற்காகப் போரடும் என்றும் உறுதிகூறி என்னுடைய உரையை முடிக்கிறேன்." ஜனநாயக ஐக்கிய முன்னணியின் அஜித் குமாரவும் மற்றும் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணியின் பி. நெல்சன் பெரேராவும் பேரினவாதச் சொற்றொடரில் இராஜபக்ஷவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தேசிய அபிவிருத்தி முன்னணியின் பிரதிநிதி ஒருவர், கட்சியின் வேட்பாளர் அச்சல அஷோக சுரவீர எழுதிய கடிதம் ஒன்றை வாசித்தார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஜனாதிபதியுடனும் சேர்ந்து செயலாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரும், பிரதானமாக இராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான ரனில் விக்கிரமசிங்க கூட்டத்தில் கலந்து கொள்ளாததோடு ஒரு பிரதிநிதியை கூட அனுப்பிவைக்கவில்லை. ஜனாதிபதி பதவியை அடைவதில் தொடர்ந்து மூன்றாம் முறை தோல்வியுற்றதில் அக்கட்சி பெரும் அழிவை கண்டுள்ளது என்பது தெளிவு. |