:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
UAW-GM deal: a new stage in the corporate assault on
American workers
UAW-GM
உடன்பாடு : அமெரிக்க தொழிலாளர்கள் மீது பெருவணிகத்தின்
ஒரு புதிய மட்டத்திலான தாக்குதல்
By Barry Grey
24 October 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
கடந்த வாரம் ஜெனரல் மோட்டார்ஸ் (GM)
மற்றும் யுனைடட் வாகன தொழிலாளர்கள் சங்கம் (UAW)
இரண்டிற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு அமெரிக்க தொழிலாள
வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள், சுகாதார நலன்கள், ஓய்வூதியம் போன்றவற்றின் மீது பெருவணிகம் நடத்தும்
ஆழ்ந்த தாக்குதலுக்கான ஒரு புதிய மட்டத்தை உருவாக்கியுள்ளது.
பல மாதங்கள் இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர்,
1979-80 கிறைஸ்லர் (Chrysler)
நிறுவனத்தை காப்பாற்றிய முயற்சிக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய வகையில்
செலவினங்களை குறைக்கும் சலுகைகளுக்கு UAW
ஒப்புக் கொண்டது. தற்போதுள்ள மணிக்கணக்கு ஒப்பந்த தொழிலாளர்களும்,
ஓய்வூதியம் பெறுவோரும் ஊதியங்களிலும், சுகாதார நலன்களிலும் பில்லியன் கணக்கில் இழப்பை அடைவதற்கான
நிறுவனத்தின் கோரிக்கைக்கு சங்கம் நிபந்தனையற்ற சரணாகதியை அடைந்தது; மேலும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள
அனைத்து சுகாதார நலன்கள் அனைத்தும் படிப்படியாக குறைக்கப்படும் வடிவமைப்பிற்கும் அது ஒத்துக் கொண்டது.
ஜெனரல் மோட்டார்சின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான
Richard Wagoner
அக்டோபர் 17ம் தேதி "ஜெனரல் மோட்டார்சின் வரலாற்றிலேயே ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய
செலவினக் குறைப்புக்களாக இது இருக்கக் கூடும்" என்று இந்த உடன்பாட்டை வரவேற்றார். ஜெனரல்
மோட்டார்ஸ் உடைய நீண்ட கால பொது சுகாதார பாதுகாப்பு செலவினங்களில் $15 பில்லியன் அல்லது 25
சதவிகிதம் இது மிச்சப்படுத்தும் என்றும், நிர்வாகத்தின் வருடாந்தர மருத்துவச் செலவினங்கள் $1 பில்லினுக்கும் மேலாகக்
குறையும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், கட்டுமான ஆலைகள் மற்றும் உதிரிப்பொருட்கள் ஆலைகளை மூடும்
திட்டத்தை விரைவுபடுத்தும் என்றும், இவற்றையொட்டி 25,000 வேலைகள் குறைக்கப்பட்டுவிடும் என்றும் ஜெனரல்
மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. விட்டுக்கொடுப்பு பற்றிய உடன்பாடு ஒரு தொடக்கம்தான் என்றும் "நாம் பின்னர்
கட்டமைக்கப்படுவதற்கு ஒரு பெரிய படி போன்றதுதான்" என்றும் இதை அழைத்த வகையில்,
Wall Street
இற்கு ஒரு தெளிவான குறிப்பையும் Wagoner
உணர்த்தினார்.
போர்ட் மற்றும் டைம்லர்/கிறைஸ்லரும் உடனடியாக அந்நிறுவனங்களும் இதேபோன்ற
விட்டுக்கொடுப்புகளை தங்களுடைய ஆலைகளுக்கும் கொடுக்க
UAW வை
வற்புறுத்தும் என்று அறிவித்துள்ளன.
இதை Wall Street
உடனடியாக பெரும் ஆர்வத்துடன் எதிர்கொண்டது; வங்கிகளும், பெரு முதலீட்டாளர்களும் எதிர்பார்த்ததைவிட
செலவுக் குறைப்புக்களின் அளவு அதிகம் என்றும் சுட்டிக் காட்டியது. ஜெனரல் மோட்டார்ஸ் உடைய பங்கின்
மதிப்பு, ஒரு பங்கிற்கு $2.11 அல்லது 7.5 சதவிகிதமாக, இதை அறிவித்த தினத்தன்றே உயர்ந்தது. இதே
நாளில் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட $1.6 பில்லியனை விட நஷ்டம் மோசமாக இருக்கும் என்று
ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்தும்கூட இவ்வுயர்வு இருந்தது. இந்த நஷ்டம் மூன்றாம் முறையாக தொடர்ந்த
காலாண்டு நஷ்டம் என்பதோடு 2005ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மொத்த நஷ்டம் $3.8 பில்லியன்
ஆகியுள்ளது.
The Detroit Free Press
என்ற ஏடு UAW
உடைய ஓய்வு பெற்றவர்களுடனான உடன்பாட்டின் புதிய திட்டமான
Voluntary Employee Benefit Association
பற்றி உற்சாகத்துடன் எழுதியுள்ளது; இந்த அமைப்பு பெருகிய சுகாதாரச் செலவினங்களில் இருந்து ஓய்வுபெற்ற மணிநேர
ஒப்பந்த தொழிலாளர்களின் கஷ்டங்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்டிருந்தது. கட்டுரையாளர் டொம் வால்ஷ்,
"கடைசியாக, வாகன தொழிலாளர்கள் சங்கம் உண்மையை ஏற்கிறது" என்ற தலைப்பில் அக்டோபர் 18 அன்று
எழுதினார்:
"திங்களன்று அறிவிக்கப்பட்ட
UAW-GM
சுகாதாரப் பிரிவு உடன்பாட்டின் முற்றப்பெறாத வரையறைக்கான முன்னோடியாகவும், தைரியமானதாகவும்
இருப்பது எது?
"இரண்டு சொற்கள் : "வரையறுக்கப்பட்ட பங்களிப்பு"
"இந்தச் சொற்றொடர் ஜெனரல் மோட்டார்ஸ் நிதியளித்து,
Voluntary Employee Benefit Association
இனால் செயல்படுத்தப்படும் திட்டத்தை விளக்க பயன்படுத்தப்படுகின்றது; அதாவது இதுகாறும் மணிக் கணக்கு
ஒப்பந்தத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளரின் குறிப்பிடப்படாத சுகாதார நல சலுகைகளில் உள்ள குறைபாடுகளைக்
களைய உதவும்."
"வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அணுகுமுறை என்பது வரையறைக்குட்பட்ட நலன்களுக்கான
மாதிரியை தீவிரமானமுறையில் கைவிடுவதாகும். இந்த வரையறைக்குட்பட்ட நலன்கள் பல தசாப்தங்களாக
UAW
வாகன தொழிலாளர் சங்க ஒப்பந்தத்தின் ஓய்வூதிய, சுகாதார நலன்களின் அடித்தளமாக இருந்தது."
வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டத்தின்படி, முதலாளி செலவிடும் தொகை ஒரு
கட்டத்திற்கு வந்தபின்னர், தொழிலாளர்களின் சலுகைகள் குறைக்கப்படும், அவர்கள் தாமாக செலவழிக்கும்
தொகை அதிகமாகும். இதனால் பெரிதும் உயரும் சுகாதாரக் பாதுகாப்புச் செலவுகள் நிறுவனத்தால் அல்லாது
தொழிலாளர்களால் ஏற்கப்படும்.
மிச்சிகன் அன் ஆர்பரில் இருக்கும் வாகனதொழில் பற்றிய ஆய்வு மையத்தில் தலைவர்
டேவிட் கோலை, வால்ஷ் மேற்கோளிட்டுக் கூறுவதாவது: "வரையறுக்கப்பட்ட நலத்திட்டங்களில் இருந்து விலகிச்
செல்லும் போக்கு சிலகாலமாக இருந்தவருகிறது; ஆனால் இது மிகச் சிறிய அளவில்தான் உள்ளது. முதலாளிக்கு
இறுதிச் செலவு என்ன என்பது தெரியாமல் இருந்த வரையறுக்கப்பட்ட நலன்கள் பற்றிய திட்டங்களுக்கான காலம்
முடிவடைந்து விட்டது."
வாகனத் தொழில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகள்
பல தலைமுறைகள் நிகழ்த்திய போராட்டத்தில் விளைவாக அடைந்திருந்த நலன்களின் அடிப்படையை
UAW ஒரே
கணத்தில் கைவிட்டுவிட்டது.
செய்தி ஊடகம் இந்த உடன்பாட்டை புகழ்ந்து கொண்டிருந்தபோதே, இன்னும்
கூடுதலாக விட்டுக் கொடுக்க தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் அது முன்வைத்தது.
அக்டோபர் 18 அன்று Free Press,
"கார் உற்பத்தியாளரின் நோக்கத்தை அடையக்கூடிய திட்டத்தை வல்லுனர்களால் விற்ற முடியவில்லை" என்ற
தலைப்பில் வந்துள்ள கட்டுரை ஒன்றில் அது குறிப்பிட்டதாவது: "திங்களன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள்
செலவினங்களை குறைக்கும் வகையில் நல்ல ஆரம்ப முயற்சியாகும்; ஆனால்
GM உடைய
வருங்கால ஆபத்துக்களைப் பற்றிக் கருத்திற்கொள்ளமளவிற்கு இல்லை என்று
Wall Street
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்."
நியூயோர்க்கில் உள்ள
Argus Research Company என்று நிறுவனத்தைச் சேர்ந்த
Kevin Tynan
ஐ மேற்கோளிட்டு வந்துள்ள தகவல்: "GM
ஊதியக் குறைப்பு தேவை, தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும், வேலை வங்கி உடன்பாடு
அகற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது; ஆலையில் நடக்கும் தொழிலுக்கு தொழிலாளர்கள் தேவையில்லை
என்றாலும்கூட இப்பொழுது அது அவர்களுக்கு ஊதியம் கொடுக்கிறது."
மிச்சிகனில் Grand
Rapids என்ற இடத்தில் இருக்கும்
IRN Inc.,
என்று கருத்துகணித்து கூறும், வாகனதொழில் ஆலோசனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான
Erich Merkle
செய்தித்தாளிடம் "இப்பொழுதைய ஒப்பந்தம் 2007ல் முடிவடையும்போது,
UAW இடம் இருந்து
இன்னும் கூடுதலான விட்டுக் கொடுத்தல்களை GM
க்குத் தேவை." எனத்தெரிவித்தார்:
The Detroit News
தன்னுடைய அக்டோபர் 18 முக்கிய தலையங்கத்திற்கு "GM-UAW
சுகாதார பாதுகாப்பு உடன்படிக்கை நல்ல தொடக்கம், இன்னும் அதிகம் தேவை" என்ற தலைப்பை
கொடுத்துள்ளது. வேலை வங்கித் திட்டம் அழிக்கப்பட வேண்டும் என்று இந்த செய்தித்தாள் தேர்ந்தெடுத்து
கூறியுள்ளது; "30க்கும் மேலானவர்கள் வெளியே", அதாவது மணிநேரக் கணக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் முழு
சலுகைகளுடன் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஓய்வு பெறலாம் என்ற திட்டம் தகர்க்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறது.
போருக்குப் பின் பெரும் தீவிரத்துடன் வாகனத்தொழிலாளர்கள் இந்த முக்கியமான நலனுக்காகப்
போராடியிருந்தனர்.
அக்டோபர் 17 உடன்பாட்டை அறிவிக்கையில்,
GM உடைய
Wagoner
(இவருடைய ஆண்டு வருமானம் $2.2 மில்லியன் ஆகும்), ஆண்டு ஒன்றுக்கு
நிறுவனத்திற்கு $5 பில்லியன் சேமிப்பைக் காட்ட விரும்பும் மறுசீரமைப்பு திட்டத்தில் ஒரு பகுதிதான் சுகாதார
பாதுகாப்பு செலவினங்களின் குறைப்பு என்று கூறினார். அக்டோபர் 18 அன்று
Wall Street Journal
"GM
செய்தித் தொடர்பாளர் ஒருவர் நான்காம் காலாண்டு காலத்தில் சில ஆலைகள் மூடப்படும் என்று கூறியுள்ளார்.
UAW
உடன் எந்த இடத்தில், எவ்வளவு ஆலைகள் மாற்றப்படும், குறைக்கப்படும் என்ற பேச்சு வார்த்தைகள் நடைபெற்று
வருகின்றன." என குறிப்பிட்டது.
Detroit News , அக்டோபர்
18 அன்று "சில ஆலைகள் மூடுவதற்கு இலக்காக இருக்கலாம் எனத் தோன்றுகின்றன; இது
GM மறுபடியும்
UAW
உடன் 2007ல் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் வரலாம்." மேலும் அகற்றப்படவுள்ள முக்கியமான ஆலைகள்
பற்றிய பட்டியலும் கொடுக்கப்பட்டது. Doraville,
Georgia, Moraine, Ohio, Oklahoma City, Okhahoma, Jamesville, Wisconsin,
Arlington, Texas, மிஷிகனில் உள்ள
Pontiac ஆகிய
இடங்களில் உள்ள பொருத்தும் ஆலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன'' என அறிவித்தது.
வியாழனன்று, அமெரிக்கா முழுவதும இருக்கும்
GM ஆலைகளின் சில
நூற்றுக்கணக்கான உள்ளூர் UAW
அதிகாரிகள், டெட்ராயிட்டில் கூடி உடன்பாட்டின் முழு விவரங்களையும் அறிந்து கொண்டனர்; தொழிற்சங்கத்தின
தலைவர் Ron Gettelfinger
மற்றும், GM
உடைய தொழிற்சங்க துறைக்கு தலைமைதாங்கும் துணைத் தலைவர்
Richard Shoemaker
ஆகியோர் இந்த உடன்படிக்கைகளுக்கான பேச்சுவார்த்தைகளை
நடத்தியவர்கள் ஆவர். உள்ளூர் அலுவர்கள் ஒருமனதாக திட்டத்திற்கு வாக்களித்த வகையில்
GM உடைய
UAW
உறுப்பினர்கள் அனைவரும் உறுதிப்படுத்தும் வாக்கு அளிப்பதற்கு வழிவகுத்துள்ளனர். இந்த விட்டுக் கொடுத்தல்களினால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படவில்லை.
ஒரு எதிர்ப்பு வாக்குக் கூட பதிவாகவில்லை என்ற உண்மை,
UAW உடைய
பெருநிறுவன கொள்கை சார்பை அறிந்தவர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கவில்லை என்றாலும், எந்த அளவிற்கு இந்த
அமைப்பு ஒரு அதிகாரத்துவ அமைப்பாக, தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் விருப்புகளில் இருந்து விரோதமான
முறையில், அந்நியப்பட்டு செயல்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொழிற்சங்கத்திற்கும் அன்றாட வாகனத்தொழிலாளர்களுக்கும் இடையே இருக்கும்
உண்மையான உறவு இவ்வார தொடக்கத்தில், ஓய்வு பெற்ற அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள்
GM மற்றும்
UAW
க்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றபோது அவர்கள் அதைத் தடைசெய்ய முற்பட்டார்கள் என்பதின் மூலம்
எடுத்துக்காட்டப்படுகிறது. (See "US auto union
goes to court against its own members" October 22, 2005.)
உள்ளூர் தொழிற்சங்க அலுவலர்களுடன் பேசியதைத் தொடர்ந்து,
UAW,
GM உடன் கொண்ட
ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்டது. UAW
தன்னுடைய உறுப்பினர்களுக்கு சுகாதார நலன்களை பெற்றுத் தந்ததற்கு பின் முதல்தடவையாக ஓய்வுபெற்ற
தொழிலாளர்கள் மாதாந்தர கட்டணத்தை செலுத்த வேண்டும். தனிநபராக இருக்கும் ஓய்வு பெற்றவர்கள் அல்லது
கணவனை இழந்தவர்கள் மாதம் ஒன்றுக்கு $10 செலுத்தவேண்டும். குடும்பங்கள் $21 கட்டணம் செலுத்தவேண்டும்.
இதைத் தவிர ஆண்டு ஒன்றிற்கு ஒரு கழிப்பும் உண்டு; ஓய்வு பெற்ற தனிநபர்கள்
$150 கட்டணம் செலுத்த வேண்டும்; குடும்பங்களுக்கு $300 கட்டணம் ஆகும். மருந்துகளுக்காக ஓய்வு
பெற்றவர்கள் தமது கையால் செலவழிக்க வேண்டிய பணமும் அதிகரிக்கப்படும்.
மாதாந்தர கட்டணத் தொகை, ஆண்டு ஒன்று கொடுக்கப்பட வேண்டிய தொகை,
கூட்டு காப்புறுதி செலவுகள் ஆகியவற்றிற்கு உச்சவரம்பும் உடன்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது; இது தனி நபருக்கு
ஆண்டு ஒன்றுக்கு $370 என்றும், குடும்பங்களுக்கு $752 என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு $8,000 க்கும் குறைவாக உள்ள குறைந்த வருமானம் உடைய ஓய்வு
பெற்றவர்கள் புதிய சுகாதார திட்ட கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு பெறுவர்.
UAW வின் தீவிர உறுப்பினர்கள்
இந்தக் கட்டணங்களையோ, கழிப்புத் தொகைகளிலோ இடம் பெறமாட்டார்கள்; ஆனால் அவர்களுடைய மருந்துச்
செலவுகள் அதிகமாகும். மாறாக அவர்கள் அடுத்த ஆண்டு கிடைக்க இருக்கும் மணி ஒன்றுக்கு $ 1 கூடுதல்
வருவாயை ஒத்தி வைக்க வேண்டும். இந்த வருமானக் குறைப்பில், ஆண்டு வருமான உயர்வில் இருந்து 83 சென்ட்டுகளும்,
வாழ்க்கைத் தரப்படி கணக்கீட்டில் (COLA)
இருந்து 17 சென்ட்டுக்களும் எடுத்துக் கொள்ளப்படும்.
இதைத்தவிர, வாழ்க்கை தரப்படி கணக்கீட்டில் இருந்து ஒவ்வொரு காலாண்டும் 2
சென்ட்டுக்களை தொழிலாளர்கள் நாள்பின்தள்ளித்தான் வாங்கவேண்டும். இது டிசம்பர் 2006ல் இருந்து
நடைமுறைக்கு வரும். இவ்வாறு இழக்கப்படும் ஊதியங்கள்
Voluntary Employee Benefit Association
நிதிக்கு சேரும்; இது மிகப் பெரிய அளவு நிதியாக UAW
உடைய அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
மேலும் வியாழனன்றே,
Ford Motor உம் $284 மில்லியனை காலாண்டு இழப்பாக
அறிவித்துள்ளது; இதன் தலைவரும், தலமை நிர்வாகியுமான
Bill Ford இப்பொழுது
UAW
உடன் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் மறு சீரமைப்புத் திட்டத்தில் சுகாதார
பாதுகாப்பு நலன்கள் மாறுதல்கள், "மற்றும் முக்கிய ஆலைகள் மூடல்" ஆகியவையும் அடங்கும் என்று கூறியுள்ளார்.
GM ஐப்
பற்றியும், தற்போது வங்குரோத்து நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள
Delphi வாகனத்தொழில்
உதிரிபாக தயாரிப்பாளரின் நிலைமையையும் உட்குறிப்பாக சுட்டிக்காட்டி,
Bill Ford
"நம்முடைய தொழிற்துறை அவசியம் தேவையான பாரிய மறுசீரமைப்பை ஆரம்பித்துள்ளது" என குறிப்பிட்டார்.
Top of page |