World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSEP debates radical "left" in Sri Lankan presidential election campaign இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி தீவிர "இடதுகளுடன்" விவாதிக்கிறது By our correspondent Lanka Left வலைத் தளத்தினால், நவம்பர் 17ம் தேதி நடக்கவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலையொட்டி கடந்த புதன்கிழமையன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவாதம் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) க்கும் தங்களை "சோசலிஸ்ட்" எனக் கூறிக்கொள்ளும் பல "இடது" கட்சிகளுக்கும் இடையே உள்ள பிளவை பற்றிய பிரகாசமான உட்பார்வையை வழங்கியது.சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயசுடன் விவாதத்தில் நவ சமசமாஜ கட்சித் (NSSP) தலைவர் விக்ரமபாகு கருணரத்னா, ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) இன் அமைப்பு செயலாளர் மகிந்தா தேவகே, புதிய ஜனநாயகக் கட்சி (NDP) தலைவர் இ. தம்பையா மற்றும் தமிழ் தேசிய கூட்டணி (TNA) பாராளுமன்ற உறுப்பினர், நடராஜா ரவிராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். LTTE இன் கருத்துக்களை வெளியிடும் கருவியாக செயல்படும், வெளிப்படையான முதலாளித்துவ தமிழ் கட்சிகளின் கூட்டணியான TNA, கூட்டத்தின் நோக்குநிலையை நன்கு வெளிப்படுத்தியது. சோசலிச சமத்துவக் கட்சியை தவிர விவாதத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கட்சிகளும் LTTE இன் ஜனநாயக விரோதப் போக்குக் கூற்றான, "தான்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி" என்ற கருத்திற்கு விமர்சனமற்று தலைசாய்க்கின்றவை ஆகும்.போரை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உண்மையான ஒரே வழி தமிழ், சிங்கள தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்படுத்துதல்தான் என்னும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கிற்கு NSSP, USP, NDP ஆகியவை விரோதம் கொண்டுள்ளன என்பதை விவாதம் தெளிவுபடுத்திக் காட்டியது. "ஜனாதிபதித் தேர்தல்கள் -- சமாதானமும் இடதும்" என்பதில் ஐந்து கட்சிகளும் பங்கு பெறும் என்று கூட்ட அறிவிப்பு கூறியபோதிலும், அது விரைவில் விஜே டயசிற்கும் மற்ற நான்கு பேர்களுக்கும் இடையேயான விவாதமாக ஆயிற்று. ஆளும் உயர்தட்டுக்களின் அனைத்து கன்னைகளில் (பிரிவுகளில்) இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் இருக்க வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் வலியுறுத்தல் மீது குறிப்பாக தாக்குதலை தொடுப்பதற்கு தங்களுடைய குறுகிய வேறுபாடுகள் அனைத்தையும் அவர்கள் விரைவில் மறந்தனர். Lanka Left ன் பிரதிநிதியான Joseph Stalin Fernando கடந்த காலத்தில், பெயரைக் குறிப்பிடாமல், "இடதுகள்" தமிழ் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை ஆதரித்திருந்தனர் என்று தன்னுடைய ஆரம்ப கருத்துக்களின் பொருளுரையை தொடக்கி வைத்தார். பெரும் சக்திகளின் ஆதரவை கொண்டுள்ள சமாதானப் பேச்சு வார்த்தைகள் எனக் கூறப்படுபவை, "தமிழ் மக்களின் பேரவாக்கள்" உடன் இயைந்தவை என்றும் "அனைத்து இடது சக்திகளின் ஐக்கியத்தால் அது காக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். "தமிழ் மக்களின் பேரவாக்கள்" என்று கூறியபோது அவர் கருத்திற்கொண்டது விடுதலைப்புலிகள் (LTTE) ஆகும்; அதுதான் தன்னுடைய அவாக்களை பெருக்கிக் கொள்ளும் வகையில் முதலாளித்துவ இலங்கையின் அதிகாரத்தையும் சலுகைகளையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய உடன்பாட்டை காண முற்பட்டுள்ளது.முதல் பேச்சாளரான NSSP தலைவர் கருணரத்னா, புதிய இடது முன்னணிப் பதாகையில் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் NSSP தலைவர் "சிங்கள பெளத்த அரச சக்திகளுக்கு" எதிராக போரிட ஆதரவு திரட்ட முற்படுகிறார் எனக் கூறினார். இத்தேர்தலில், "இடது என்ற முறையில் நாம் செய்யவேண்டியது", "வகுப்புவாத இராணுவ சக்திகளை எதிர்கொள்ள வேண்டும்" என்பதாகும் என்று அவர் அறிவித்தார். "இனவெறி இராணுவவாதக் கொள்கைகள் மூலம் பூகோள முதலாளித்துவ கொள்கையை செயல்படுத்திவிடலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்." "வகுப்புவாத, இராணுவவாத சக்திகள்" எனக் கூறிய வகையில் சிறீலங்கா சுதந்திர கட்சியின் (SLFP) வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை, கருணரத்னா குறிப்பிடுகிறார்; பிந்தையவர் முறையாக சிங்கள பேரினவாதக் கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) மற்றும் ஜாதிக ஹெல உறுமய (JHU) ஆகியவற்றுடன் கூட்டு கொண்டுள்ளார். ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டால் போருக்கு மீண்டும் செல்லக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆளும் உயர் தட்டுக்களில் ஒரு பிரிவிற்கு எதிராக வாதிடுகையில் கருணரத்னா அதன் போட்டியாளரின் தயவில் தொழிலாள வர்க்கத்தைப் பிணைத்து விடுகிறார்; இங்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வேட்பாளரான ரனில் விக்கிரமசிங்க "குறைவான தீங்காக" கொள்ளப்படுகிறார். கடந்த காலத்தில் இத்தகைய முன்னோக்கு தொழிலாள வர்க்கத்திற்கு எவ்வளவு பேரழிவுகளை தந்தது என்பதற்கான அரசியல் விவரிப்புக்களை கருணரத்னா குறிப்பிட முற்படவில்லை. லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) 1970 èOTM SLFP உடன் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைத்திருந்தபோது, NSSP தலைவரே அதில் இருந்திருந்தார். தமிழர்களுக்கு எதிராக வெளிப்படையாகவே பாரபட்ச உணர்வுடன் கூடிய நடவடிக்கைகளை தொடர்ந்து அந்த அரசாங்கம் செய்திருந்தது. கூடுதலான தீமை நிறைந்திருந்த வலதுசாரி UNP ஐ விடக் குறைந்த தீமைதான் அது என்பதுதான் LSSP இன் வாதமாக இருந்தது. பின்னர் 1994ம் ஆண்டு, SLFP தலைமையிலான மக்கள் கூட்டணி மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்காவை NSSP ஆதரித்திருந்தபோது இதே வாதம்தான் பயன்படுத்தப்பட்டது. கூட்டத்தின் தலைவர் ஒவ்வொரு பேச்சாளர்களையும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றி பேசுமாறு கேட்டுக் கொண்டார்: ராஜபக்ச பற்றி நல்லவிதமான அறிக்கைகள் சமீபகாலமாக ஏன் கூறிக்கொண்டிருக்கிறார் என்று கருணரத்னா கேட்கப்பட்டார் -- அதாவது "வகுப்புவாத இராணுவவாத சக்தியின்" வேட்பாளர் என்ற அடைமொழி அவருக்குக் கொடுக்கப்படும் போது ஏன் இந்த நிலைப்பாடு என்று. NSSP ராஜபக்சேயைத் தன்னுடைய "தொழிலாளர்களுக்கான சாசனத்தை" செயல்படுத்த அழுத்தம் கொடுத்திருந்ததால்தான் இந்நிலை என்று கருணரத்னா தயக்கத்துடனேயே இக்கேள்வியை உதறித் தள்ளினார். அவர் தனது கூற்றுக்கு ஏதேனும் ஆதாரத்தைக் கொண்டுள்ளாரா என்று கூட்டத் தலைவரை சவால்செய்தார். ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) பேச்சாளரான திவாகே யும் இதேபோன்ற வகையைத்தான் கையாண்டார். SEP சமீபத்திய தொலைக்காட்சி விவாதத்தில் எடுத்துரைத்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட அவர், UNP ஆதரவிற்குட்பட்டுள்ள "சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு" தன்னுடைய கட்சி கொடுக்கும் ஆதரவை நியாயப்படுத்தும் வகையில் உரைத்தார். அவர் "இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் தேசிய பிரச்சினையை தீர்க்க முடியாது" என்பது உண்மையே என்றார். ஆனால் "குறைந்த தீமை" என்ற வாதத்தில் சென்று அவர் கூறியதாவது: "(முதலாளித்துவ) சமூக சக்திகளுடன் இணைந்து செயலாற்றுவதில் எங்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லை; பரந்துள்ள சமூகத்தில் வகுப்பு வாதத்திற்கு எதிராக அவர்கள் செயலாற்றும்போதும், அவற்றுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன." கூட்டத் தலைவர் கேள்வி ஒன்றுக்கு விடையிறுக்கையில் திவாகே, "இடதின்" அற்பத்தனமான அரசியல் சூது பற்றிய தெளிவான சித்திரம் ஒன்றைக் கொடுத்தார். ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு "இடது" ஏன் தவறிவிட்டது என்று கேட்கப்பட்டதற்கு, 1998ல் USP புதிய இடது முன்னணியின் பகுதியாக இருந்தது என்றும் அந்த உடன்பாடு, மேற்கு மாகாணக் குழுவில் தன்னுடைய நலன்களுக்காக NLF வெற்றி பெற்ற இடத்தை பயன்படுத்த முற்பட்டபோது மீறப்பட்டுவிட்டது என்றும் குறைகூறினார். இப்படி திட்டம், கோட்பாடு என்பதற்கு பதிலாக அற்ப சலுகைகள் என்ற பிரச்சினைதான் NSSP யில் இருந்து பிரிந்து வந்த USP ஐ பொது வேட்பாளரை நிறுத்தவிடாமற் செய்துள்ளது. ஒரு சோசலிச மாற்றீடு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரான விஜே டயஸ் முற்றிலும் மாறுபட்ட குரலை எழுப்பினார். இலங்கைவின் தேசியவாத அரசியல் வடிவமைப்பிற்குள் செயல்படும் மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல், சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கைத்தான் சோசலிச சமத்துவக் கட்சி அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பதை டயஸ் தெளிவுபடுத்தினார். அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு, ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புக்கள் என்ற உலக அரசியல் நிலைமையை மையப் பிரச்சினையாக எழுப்பிய ஒரே பேச்சாளர் இவர்தான். போர் என்பது ஒரு சர்வதேசப் பிரச்சினை என்று டயஸ் வலியுறுத்தினார். "உலகப் பொருளாதாரத்தின் மீது தன்னுடைய தனித்த ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்பதற்காகத்தான் புஷ் நிர்வாகம் இராணுவப் படையெடுப்புக்களில் ஈடுபட்டுள்ளது. உலக சமாதனத்திற்கு எது தேவை என்பதை நாம் விவாதித்தே ஆகவேண்டும். இலங்கையில் அமைதி என்பது அதில் ஒரு பகுதியே ஆகும். உலக சமாதானத்தை தொழிலாள வர்க்கம் அடைவதற்கான ஒரு மூலோபாயத்தை நாம் விவாதிக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் அறிக்கையில் இருந்து அவர் மேற்கோளிட்டுக் கூறினார்: "சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடிப்படை முக்கியத்துவம் சர்வதேசியமாகும். இலங்கையில் வெறும் வாக்குகளை அடைவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் நிற்கவில்லை; இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் ஒரு சோசலிச வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கை ஏற்பதற்கான தேவை பற்றிய விவாதத்தை தொடக்குவதற்குத்தான் தேர்தலில் நிற்கிறோம்." சோசலிச சமத்துவக் கட்சி இந்தச் சொற்களை வெறுமனே மறந்துவிடுவதற்காக எழுதவில்லை என்றும், இந்தியாவில் இளைஞர்கள், தொழிலாளர்களிடையே சோசலிச சர்வதேசியத்திற்காக போராட வேண்டிய தேவையை உணர்த்தும் வகையில் சென்னையில் ஒரு கூட்டத்தையும் சோசலிச சமத்துவக் கட்சி நடாத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI-M) புகழாரம் சூட்டியது, மற்றும் அது அண்மையில் இந்திய-அமெரிக்க கூட்டு விமானப் படை பயிற்சிகள் நடத்தியதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாராட்டியது என்று கருணாரத்னவின் செயற்பாடுகளுக்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சி நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன என்று டயஸ் விளக்கினார். CPI-M இன் நிலைப்பாடு முற்றிலும் போலித்தன்மையானது என்று அவர் விளக்கினார்; புது டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துடன் தன்னுடைய உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மேற்கு வங்க முதன் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா போர்விளையாட்டுக்களை தன்னுடைய மாநிலத்தில் நடத்துவதற்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், CPI-M -ன் நிலைப்பாடு முற்றிலும் போலியானது என்றார் அவர். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் வேண்டும் என்று வலியுறுத்தும் சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்திற்கு NSSP யும் மற்ற "இடது" கட்சிகளும் விரோதப் போக்கு காட்டுவதற்கு காரணம் அவை அனைத்தும் முக்கிய முதலாளித்துவ கட்சிகளுடன் வெவ்வேறுவித உறவுகளை கொண்டிருப்பதுதான் என்று டயஸ் சுட்டிக்காட்டினார். NSSP தலைவர் கருணாரத்ன UNP தலைவர் விக்கிரமசிங்கவை "ஒரு ஜனநாயகவாதி" என்று Daily News க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதையும் அவர் மேற்கோளிட்டார். கருணரத்ன கூட்டத் தலைவருக்கு விடுத்த அறைகூவலுக்கு விடையிறுக்கும் வகையில், டயஸ், Daily News இல் வந்திருந்த நீளமான கட்டுரை ஒன்றில் NSSP தலைவர் ராஜபக்ச "என்னுடைய நல்ல நண்பர், தனிப்பட்ட முறையில் மிகக் கடினமான சூழ்நிலையில் என்னை காப்பாற்றியவர்" என்று அறிவித்ததை மேற்கோளிட்டுக் காட்டினார். ராஜபக்சவுடன் எத்தகைய கள்ளத்தனமான பேரங்களை கொண்டிருந்தீர்கள் என்று டயஸ் வினவினார். இக்கேள்விக்கு பதில் கூறப்படவில்லை. UNP மற்றும் SLFP க்குக் கடந்த மூன்று தசாப்தங்களில் NSSP கொடுத்த ஆதரவின் வருந்தத்தக்க சான்றுகள் பற்றி டயஸ் விரிவாகக் கூறினார். தொழிலாள வர்க்கத்திற்கு இதன் விளைவுகள் பேரழிவை தந்தன என்றும் அவர் சுட்டிக் காட்டினார். USP, NSSP தலைவர்கள் SLFP-LSSP 1970 களின் கூட்டணியில் ஒரு பகுதியாக இருந்ததையும் அவர் விளக்கினார். "இத்தகைய கூட்டணி அரசியல் வழக்கத்தை அவர்கள் நிறுத்திவிடவில்லை. எனவேதான் ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்க பற்றிய அவர்களின் புகழ்தலை நாம் காண்கிறோம்.""இதுதான் இன்று "இடது" கொண்டுள்ள பங்கு. எனவே சோசலிச சமத்துவக் கட்சியினராகிய நாங்கள் இடது என்று அழைத்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் சர்வதேச சோசலிசவாதிகள்; அப்படித்தான் எங்களை அழைத்துக் கொள்ள விரும்புகிறோம். NSSP, USP போன்றவை வலதிற்கு இடதில் உள்ளனர்; அதாவது ராஜபக்ச, விக்கிரமசங்கவிற்கு இடதில் இருப்பவை" என்று அவர் கூறினார். இலங்கை இராணுவம் வடக்கில் இருந்தும், கிழக்கில் இருந்தும் உடனடியாக திருப்பப் பெறுவதற்கு போராட சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக அழைப்பு விடுத்து, போருக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வர்க்கத் தீர்வை டயஸ் கோடிட்டுக் காட்டினார். அத்தகைய போராட்டம் தெற்கு ஆசியாவிலும், சர்வதேச அளவிலும் ஒரு சோசலிச மாறுதல் வருவதின் ஒரு பாகமாக சிறீலங்கா ஈழ ஐக்கிய சோசலிச குடியரசுக்கான அடிப்படையை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றய கட்சிகளை போல் இல்லாமல், சோசலிச சமத்துவக் கட்சி முழு உணர்வுடன் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமைக்காக ஸ்தூலமான வகையில் போராடிக் கொண்டிருக்கிறது என்றும், இவ்வகையில் யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது என்றும் அக்கூட்டம் "மக்கள் படை (People's Army) என்று தன்னை அழைத்துக்கொண்ட குழுவினால் பலவந்தமாக தடுக்கப்பட்டது என்றும் டயஸ் சுட்டிக்காட்டினார். "இங்கு, வடக்கில், நாங்கள் என்ன செய்கின்றோம் என்று சிலர் கேட்கின்றனர். ஆம், நாங்கள் எங்கள் அரசியல் பணியைத்தான் வடக்கில் செய்கிறோம். வடக்கில் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கை ஏற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." யாழ்ப்பாணத்தில் ஒரு முதலாளித்துவ வர்க்கம் இல்லாத நிலையில், LTTE ஐ, சோசலிச சமத்துவக் கட்சி ஏன் ஒரு பூர்ஷ்வா அமைப்பு என்று விவரிக்கிறது என விளக்குமாறு தலைவர் டயஸை கேட்டுக் கொண்டார். தமிழ் பூர்ஷ்வாக்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் தமிழ் புலம் பெயர்ந்தோர் பகுதியிலும் செயல்படுகின்றனர் என்று சுட்டிக் காட்டினார். LTTE வேலைத்திட்டத்தில் இருக்கும் பூர்ஷ்வா தன்மையை குறிப்பிட்ட டயஸ் கூறினார்: இங்கு "ஒரு புலி பொருளாதாரத்தை" (tiger economy') கட்டமைப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று LTTE இன் தத்துவார்த்தவாதியான அன்ரன் பாலசிங்கம் கூறியுள்ளார். அவருடைய குறிப்பு தென் கிழக்கு ஆசியாவில் உள்ள முதலாளித்துவப் பொருளாதாரம் பற்றியது; அது உலக முதலாளித்துவத்திற்கு குறைவூதிய உழைப்பு நிலைமைகளை அளிக்கும்." பிளவு விரிவடைதல் புதிய ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் இ. தம்பையா சற்றே பரிதாபமான வகையில் தேர்தல் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஜனாதிபதிப் பதவியை இடது வெல்லமுடியாது; வென்றாலும் 1970களில் சிலியில் சோசலிஸ்ட் கட்சித் தலைவர் சால்வடோர் அலண்டே பதவியில் இறக்கப்பட்டது போன்ற நிலைதான் இங்கும் ஏற்படும். எனவே புறக்கணிப்பின் மூலம் நாம் ஏன் பரந்த மக்கள் சக்தியை உருவாக்கக் கூடாது என்று அவர் வினவினார். அரசியல் வேலைத்திட்டத்தை, கொள்கைகளை மற்றும் முன்னோக்கை பொறுத்தவரையில், எத்தன்மையை அத்தகைய "பரந்த மக்கள் சக்தி" அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு பற்றி தம்பையா ஆலோசனை ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாண நகரில் ஒரு பொதுக்கூட்டம் போடுவதற்கு முன்னர், சோசலிச சமத்துவக் கட்சி "யாழ்ப்பாண மக்களை" கலந்துபேசியிருக்க வேண்டும் என்று கூறிய வகையில் தான் எப்படி முற்றிலும் LTTE க்கு பணிந்து நடப்பவர் என்பதை அவர் தெளிவாக்கினார். "யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழ் மக்களில்", கூட்டத்திற்கு வந்திருந்த 50 அல்லது 60 பேர், கூட்டத்தை நடக்கவிடமால் இருப்பதற்கு "மக்கள் படை" கையாண்ட சண்டித்தன முறையை பற்றி சீற்றம் அடைந்தது பற்றியும் அவர் ஏதும் குறிப்பிடவில்லை. TNA யின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் உரையில் விவாதம் மிக மட்டமான தரத்தை அடைந்தது. ஜனாதிபதித் தேர்தலை பற்றி அவருடைய கட்சியின் பார்வை என்ன என்று தலைவரால் கேட்ப்பட்டதற்கு கட்சியின் அரசியல் மேலாளர்களான LTTE இன்னும் முடிவெடுக்காததால் TNA ஏதும் கூறவியலாது என்று அவர் விளக்கினார். இப்பிரச்சினை பற்றி LTTE தலைவர்களுடன் விவாதிப்பதற்கு கிளிநொச்சிக்கு ஒரு TNA தூதுக்குழு விரைவில் செல்லும் அதன் பின்னர் ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.சிறிதும் தவறாமல் வகுப்புவாத பாணியில் பேசிய ரவிராஜ் அறிவித்தார்: "சிங்கள மக்கள் எடுக்கும் முடிவிற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். போரை நிறுத்துவதற்கு சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்போமா அல்லது போரின் மூலம் அழிவைக் காண்போமா என்று முடிவு செய்வேண்டும். TNA, LTTE ஐப் பொறுத்தவரையில் தொழிலாள வர்க்கம் என்று ஒன்றும் கிடையாது -- "சிங்கள மக்கள்", "தமிழ் மக்கள்" என்றுதான் உள்ளனர். கேள்விநேரம் தொடங்கியவுடன் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இருக்கும் பிளவுக் கோட்டின் தன்மை தெளிவாயிற்று. அரங்கில் இருந்து கேட்கப்பட்ட முதல் கேள்வி விஜே டயசிடம்தான்: தேசியப் பிரச்சினைக்கு உங்களின் "நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வு" என்ன? வடக்கு, கிழக்கில் இருந்து படைகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், அனைவருக்கும் உண்மையான ஜனநாயக உரிமை வழங்கும் புதிய அரசியல் அமைப்பை இயற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாட்டை விஜே டயஸ் மீண்டும் வலியுறுத்தினார். இந்த முன்னோக்கிற்கு பாடுபடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டிய தேவையையும் அவர் வலியுறுத்தினார். NSSP இன் அரசியல் சோசலிச சமத்துவக் கட்சியினால் அம்பலப்படுத்தப்பட்டதில் அதிர்வு அடைந்த முறையில், கருணாரத்ன நீண்ட, வனப்புரை ஒன்றை தொடக்கினார்; எங்களுடன் இல்லையென்றால் நீங்கள் வலதுசாரிகள் என்று முழங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பவாதியின் பொதுவான அவதூறும் இதில் அடங்கியிருந்தது."விஜே டயஸ் படைகள் திரும்பப் பெறவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் LTTE உட்பட தமிழ் மக்கள் அவற்றை தாக்கி, அடித்து விரட்டும்... இரண்டு விஷயங்களும் இணைந்து செல்லும்.... தேசிய விடுதலைக்கான ஜனநாயகப் போராட்டத்தில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், தொழிலாள வர்க்கத்திற்கும் மற்ற சக்திகள் அனைத்திற்கும் ஒரு பிணைப்பு ஏற்படும். நீங்கள் (டயஸ்) இதை ஒப்புக்கொள்ளுகிறீர்களா இல்லையா? இல்லையென்றால் நீங்கள் JVP முகாமில்தான் உள்ளீர்கள்." LTTE தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை கருணாரத்ன ஒப்புக்கொண்டார்; ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் LTTE க்கு அரசியல் சவால் கூடாது என்பதை வலியுறுத்தினார். அத்தகைய அறைகூவல் சிங்கள இனவெறிக்காரர்களான JVP போன்றோருக்கு ஆதரவு கொடுப்பதற்கு சமம் என்றார்; JVP க்கு வளைந்து கொடுக்காத எதிர்ப்பை பொதுவில் எப்பொழுதும் காட்டிவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாட்டிற்கு இது நாணயமற்ற வகையிலான தாக்குதல் ஆகும்.சோசலிச சமத்துவக் கட்சி எப்பொழுதுமே தமிழர்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு போராடுவதில் முன்னணியில்தான் உள்ளது என்றும் டயஸ் சுட்டிக்காட்டினார்; ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கம் நடத்தும் போராட்டத்தின் மூலம்தான் அது சாதிக்கப்படமுடியும் என்றும் அவர் கூறினார். அந்த விதத்தில் சோசலிச சமத்துவக் கட்சி தமிழ் மக்களின் விடுதலைக்கு முன்னிற்கிறது. ஆனால் அது LTTE ஐ ஆதரிவிக்கவில்லை; ஏனெனில் தான்தான் தமிழர்களுடைய "ஏகப் பிரதிநிதி" என்ற மோசடித்தனமான கூற்றை நிலைநாட்டுவதற்கு அது மிகுந்த ஜனநாயக விரோத வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது. NSSP தலைவர் Linus Jayathialka வேறுவிதமாக தாக்கினார். போர் ஒரு சர்வதேசப் பிரச்சினை என்பதில் டயஸுடன் உடன்பட்டாலும், முக்கிய பிரச்சினை பூகோள முதலாளித்துவத்தின் ஆணைகளை எதிர்த்துப் போராடுவதாகும். "பூகோள முதலாளித்துவத்தின் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் பரந்த மக்கள் இயக்கத்தை கட்ட இருக்கிறோம்... சர்வதேச இயக்கத்துடன் ஐக்கியம் கொள்ளும் மிகப் பெரிய போராட்ட இயக்கத்தை தோற்றுவிப்பதில் நாம் முன்னிற்க வேண்டும்."கூட்டத்தில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் விலானி பீரிஸ், ஜயதிலகா குறிப்பிடுவது முதலாளித்துவத்தை அகற்றாது என்றும் அதை முட்டுக் கொடுத்து நிறுத்தத்தான் உதவும் என்றும் சுட்டிக் காட்டினார். "இவருடைய திட்டம் World Social Forum (WSF) உடன் பிணைந்துள்ளது. அது முதலாளித்துவத்திற்குள் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டுள்ளது. ஏகாதிபத்திய சக்திகள் நிதி கொடுக்கும் அமைப்புக்கள் நிறைந்த NGO க்களின் கூட்டணிதான் WSF." தேசிய பொருளாதார நெறிப்படுத்தலுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட இத்தகைய வேலைத்திட்டம் உலக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஒரு பொறி ஆகும்." இறுதியில் கெளரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் கருணரத்னா மீண்டும் குறுக்கிட்டு பேசினார். இந்தியாவில் இருக்கும் CPI-M போன்றவை ஸ்ராலினிச வகை, சோசலிச வகை இல்லை என்பதை ஒப்புக் கொண்டார் ஆனால் அவற்றை சோசலிச சமத்துவக் கட்சி விமர்சிப்பதை எதிர்த்தார்; அவர்களை விரோதித்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார். சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்க NSSP தோல்வியடைந்ததை நியாயப்படுத்தும் வகையில் அவர் அறிவித்தார்: "சோசலிசம் சிறு தீவுகளில் கட்டமைக்கப்பட முடியாது. வருங்காலத்தில், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட சோசலிசம் ஏற்படுத்தப்படும். ஆனால் அதற்கு முன்பு நாம் பூகோள முதலாளித்துவத்தின் ஆணைகளை எதிர்கொள்ள நேரிடும்." நேரம் முடிந்துவிட்டது என்பதற்கான மணி அடித்ததால், கருணாரத்ன தப்பினார். விவாத அமைப்பாளர்கள், நேரமாகிவிட்டது என்று கூறி கூட்டத்தைத் திடீரென்று முடித்துவிட்டனர். நிகழ்ச்சியை பார்வையிட்டோர், கருணாரத்னவின் புதிய "சுனாமி" கோட்பாடான சோசலிசம் பிரான்ஸ், அமெரிக்காவை "சூழ்ந்து கொள்ளும்" என்பதை அறிந்தனர்; இதற்காக உலகில் எவரும், குறிப்பாக NSSP யில் ஒருவரும், போராடத் தேவையில்லை போலும். மார்க்சிசத்திற்கு அதாவது தொழிலாள வர்க்கத்தினுள் விஞ்ஞான சோசலிச நனவை வளர்த்தெடுப்பதற்கான அன்றாடப் போராட்டத்திற்கு NSSP கொண்டுள்ள இயல்பான விரோதப் போக்கிற்கு இதைவிடத் தெளிவான உதாரணம் தேவையில்லை; அந்தப் போராட்டம் இலங்கைவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச சமத்துவக் கட்சியாலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் நடத்தப்பட்டுவருகிறது. |