ஐரோப்பா
:
பிரான்ஸ்
Eyewitness to Paris riots charges police with deliberate
provocation
போலீசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதாக பாரிஸ் கலகங்களை நேரில் பார்த்தவர்கள்
குற்றம் சாட்டுகின்றனர்
By Antoine Lerougetel
5 November 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
பிரான்சில் பாரிஸ் புறநகர்ப்பகுதிகளிலும் ஏனைய நகரப் பகுதிகளிலும் வறுமையில்
வாடும் சீற்றம் நிறைந்த இளைஞர்கள் போலீசுடன் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதால் கலகங்கள் வெள்ளி
முதல் இரண்டாவது வாரமாக தொடர்ந்தன. டிஜோன் நகரத்தின் கிழக்குப்பகுதியிலும் மார்சை துறைமுக நகரத்தின்
தெற்குப் பகுதியிலும் கைகலப்புக்கள் பரவின.
பிரான்சின் அரசியல் உயர் தட்டுக்கள், வேலையின்மை பற்றி "நடவடிக்கை" எடுப்பது
என்னும் வெற்று உறுதிமொழிகளுக்கும் -- இன்னும் கடுமையான அடக்குமுறை கையாளப்படும் என்ற அச்சுறுத்தல்களுக்கும்
இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும்போது, இனவாத எதிர்ப்பு
Les mots sont importants (lmsi.net--Words
are Important சொற்கள் மிக முக்கியமானவை) ஆல் இணையத்தில்
வெளியிடப்பட்டுள்ள ஆவணம் ஒன்று Chêne-Pointu
குடியிருப்பில் போலீஸ் ஆத்திரமூட்டல் பற்றி நேரடி சாட்சியை வெளியிட்டுள்ளது.
Clichy-sous-Bois
என்னும் பாரிசின் வடகிழக்கு புறநகர்ப்பகுதியில் குடியிருப்பைக் கொண்ட இரு இளைஞர்கள் அக்டோபர் 27 அன்று
போலீஸ் வேட்டையில் இருந்து தப்புவதற்காக ஓடியபொழுது மின்சாரத் தாக்குதலினால் இறந்ததுதான் தற்போதைய
அமைதியற்ற அலையை தொடக்கியுள்ளது.
இரு இளவயது இளைஞர்கள் இறந்த பின்னர் ஆரம்பத்தில் ஏற்பட்ட கலகங்கள் குடியிருப்பில்
குறைந்த பின்னர், போலீஸ் நடவடிக்கைகள் மிகப் பெரிய வகையில் வேண்டுமேன்றே வடிவமைக்கப்பட்டதாக இணையதள
ஆவணம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் கட்டுரையின் ஆசிரியரான அந்துவான் ஜேர்மா என்னும் புவியியல், வரலாற்று
ஆசிரியர் முன்னுரையாக எழுதியிருப்பதாவது: "சனிக்கிழமை காலையில் இருந்து
Clichy-sous-Bois
நிலைமை பற்றி France Inter radio
செய்தியாளருடன் தொடர் நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்காக அப்பகுதிக்கு சில முறை சென்றிருந்தேன். அக்டோபர்
27 வியாழன் முதல் இந்த சிறுநகரம் கொந்தளிப்பில் உள்ளது.... இதைத்தான் நான் பார்த்தேன், கேள்விப்பட்டேன்,
உணர்ந்தேன், உரைக்கப்பட்டேன்."
போலீசார் இளைஞர்களை துரத்தினர் என்பதை பிரான்சின் வலதுசாரி உள்துறை மந்திரி
நிக்கோலா சார்க்கோசி மறுத்திருப்பது முதற்கண் ஏற்கத்தக்கது அல்ல என்று இவர் கூறுகிறார். "அவர்களுடைய
குடியிருப்பு அருகாமையில் இருக்கும்போது இந்த இளைஞர்கள் அந்தச் சந்தில் ஓடி வேலியை கடந்து
EDF (அரசாங்க
மின் நிறுவன) மின்னழுத்த மாற்றுங் கருவிக்கு (Transformer)
அருகே ஏன் மறைந்து கொள்ளவேண்டும்?" என்று அவர் கேட்கிறார்.
அன்று இரவும், மறுநாள் இரவும் பலத்த ஆயுதம் தரித்த
CRS கலகப்படை
போலீசாருடன் உக்கிரமான கலவரத்தையும் போர்களையும் கண்டன.
ஆனால் Zyed Benna,
Bouna Traore-ருடைய துன்பியலான மரணத்திற்கு நினைவு
அஞ்சலியாக முஸ்லிம் குழுக்களும் உள்ளூர் மசூதியும் ஏற்பாடு செய்திருந்த அமைதி ஊர்வலம் நடந்த அக்டோபர் 30
அன்று, "நாள் முழுவதும் அனைத்தும் அமைதியாக இருந்ததுடன், சட்டத்தை செயல்படுத்தும் சக்திகளும் அங்கு
காணப்படவில்லை."
ஜேர்மன் தொடர்ந்து எழுதுவதாவது: "சனிக்கிழமை இரவு, ரமதான் நோன்பு
முடிவில், மாலை 6.30 அளவில் 400 CRS
படையினரும் காவல்துறையினரும் இணைந்து ரோமானியப் படைகள் போல் விரைந்து வந்து, முகத் தடுப்பை
இழுத்துவிட்டுக் கொண்டு, தற்காப்பு கேடயத்தை கொண்டிருந்ததோடு கைகளில் ரப்பர், பிளாஸ்டிக் தோட்டா
செலுத்தும் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் புலப்படாத விரோதியைத் தேடி ஒவ்வொரு தெருவழியேயும் சென்றனர்.
அந்நேரத்தில் ஒவ்வொருவரும் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்; வெளியே ஒருவரும் இல்லை. தெருக்கள் குறிப்பிடத்தக்க
வகையில் அமைதியாக இருந்தபோது ஏன் இந்த படையினரின் அணிவகுப்பு? உள்ளூர் மக்கள் இதைத்தான் "போலீசார்
செய்த ஆத்திரமூட்டல்" எனக் கூறுகின்றனர்.
ஆசிரியருடைய குறிப்பு தொடர்கிறது: "ஒரு மணி நேரம் கழித்து, ஒரு சில இளைஞர்கள்
வெளிவந்து போலீசாரை எதிர்கொள்கின்றனர்; அனைவரும் மோதல் தொடங்குவதற்கு காத்திருக்கின்றனர். இத்தகைய
போலீஸ் மூலோபாயத்திற்கு, 'அவர்களுடைய பிரதேசத்தை குறிக்கின்றனர்' என்பதை தவிர வேறு என்ன பொருளை
கொடுக்க முடியும். அதாவது தமது மிருகத்தனமான வலிமையைக் காட்டி "குடியரசு ஒழுங்கை" நிலைநிறுத்தவேண்டும்
என்ற வேட்கை புலப்படுத்தப்பட்டது என்பதைத் தவிர?" ஆனால் அந்துவான் ஜேர்மா சனிக்கிழமை இரவு தோன்றிய
வன்முறை, முந்தைய இரு இரவுகளில் இருந்த வன்முறையைக் காட்டிலும் குறைவானது என்று கருதுகிறார்; ஒரு மசூதியின்
மீது கண்ணீர்ப் புகைக் குண்டை ஞாயிறு 9 மணி அளவில் போலீசார் பயன்படுத்தினர்; உண்மையிலேயே கலகத்தை
மறுபடியும் தொடக்கியதற்கு போலீசார்தான் முக்கிய காரணம்; என்பது அவர் கருத்து.
இப்பொழுது எழுப்பப்பட வேண்டிய வினா இதுதான்:
போலீசாரை தலையிட்டு சமூகத்தின் சீற்றத்தை தூண்டுமாறு,
இளைஞர்களை நடவடிக்கையில் ஈடுபடுமாறு தூண்டும் வகையில் நடந்து கொள்ள யார் போலீசிற்கு உத்தரவிட்டது?
சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட, மிக வறிய நிலையில் உள்ள பிரிவுகளுக்கு எதிராக அரசின் ஆத்திரமூட்டல் ஏவப்படுதல்
எவருக்கு நன்மை பயப்பது போல் உள்ளது? கடுமையான அடக்குமுறை, சட்டம் ஒழுங்குச் செயற்பட்டியல் மூலம்
தாங்கள் பயன்பெறலாம் என்று கருதும் அரசியல் சக்திகள்தாம் அத்தகைய நலன்களைப் பெறும்.
உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி பாரிசை சூழ்ந்துள்ள புறநகர் குடியிருப்பு
பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் கலகம் செய்யவேண்டும் என்ற வகையில் தூண்டுதலை நடாத்த தயாராக உள்ளார்
என்று நம்புவதற்கு காரணம் உண்டு.
"இழிந்தவர்கள்", "தசை அழுகிப்போனவர்கள்" என்றும் அவர்கள் மணல் தூவி
மறைத்துவிடப்படவேண்டும் என்றும் தொழிலாளர் வர்க்க பிரிவுகளில் இருக்கும் புலம்பெயர்ந்திருந்த, முஸ்லிம்
இளைஞர்களை பற்றிய ஆத்திரமூட்டும் தன்மை கொண்ட விவரிப்பிற்காக, மிகப்பரந்த விமர்சனம் வந்தபின் --சில
ஆளும் கட்சியான UMP
இல் இருந்தே வந்தன-- அவர் தன்னுடைய நிலைப்பாட்டை நவம்பர் 3ம் தேதி விளக்கிக் கூறியதாவது:
"சொற்களின் மீது முழுக்கவனத்தையும் காட்டுகின்றனரே ஒழிய உண்மைகளின் மீது
இல்லை என்பதுதான் வியப்பைத் தருகிறது.... இந்த பகுதிகளை தீயகுழுக்கள், கறுப்புப் பண பொருளாதாரம்,
போதைக் கடத்தல்காரர்கள் ஆகியோரிடமிருந்து விடுவிக்காவிட்டால் நம்முடைய பகுதிகளுக்கு எதிர்காலம்
இல்லாமற்போய்விடும்... உறுதியாக இருத்தல், நீதியைக் காத்தல் என்பவைதாம் இரு முக்கியமான சொற்கள்."
கலகங்கள் ஒன்றும் "தன்னெழுச்சியாக தோன்றிவிடவில்லை" என்றும் "நன்கு திட்டமிட்டு நடக்கின்றன" என்றும் அவர்
கூறினார்.
இந்தப் பிரிவுகளில் இருக்கும் வறுமை, சமூகக் கொடுமைகள் இவற்றைப் பற்றி
சார்க்கோசி ஏதும் குறிப்பிடவில்லை; அதேபோல் அரசாங்கம் அவர்களுடைய வளங்களை குறைப்பது பற்றியும் ஏதும்
கூறவில்லை: அரசு அதிகாரத்தின் அனைத்து பிரதிநிதிகள்மீதும் காட்டப்படும் எதிர்ப்புணர்வின் அடிப்படைக் காரணம்
அவைதான்; அவரது போலீஸ் ஒடுக்குமுறைகளும், இழிவான சொற்களை பேசுதலும் கூடுதலான வகையில் அந்த
உணர்வை தூண்டிவிட்டுள்ளன.
மிகுந்த ஆயுதமேந்திய கலகப் படை போலீசார் நுழைந்த பின்னர், பாரிசின் வடக்கு
புறநகர்ப்பகுதிகள் அனைத்துமே தொந்தவுகளினாலும், போலீசிற்கும் இளைஞர்களுக்கும் இடையே பூசல்கள்
தொடர்வதாலும் பாதிப்பிற்கு உள்ளாயின.
சார்க்கோசியின் சமீபத்திய இருண்ட கருத்துக்கள் இளைஞர்களின் அடிப்படையான மற்றும்
அழிக்கும் கோபத்தைத்தான் பெரிதும் அதிகமாக்கின எனக் கூறலாம். பாரிஸ் பகுதியில் முந்தைய இரவு இருந்த
222 எண்ணிக்கையைவிட மறுநாள் 519 வாகனங்கள் எரிக்கப்பட்டன. இவை அரசு அதிகாரத்தின் மீதான தாக்குதல்கள்
என்பதின் அடையாளம் ஆகும்: ஒரு போலீஸ் நிலையம்; பல கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் கொண்டுவரப்படும்
Bobigny
குற்றவியல் நீதிமன்றக் கட்டிடம்; Trappes
ல் ஒரு பேருந்து பணிமனை; Stains
இல் ஒரு ஆரம்ப பள்ளி; கார் காட்சி விற்பனையகங்கள், ஒரு சூப்பர் மார்க்கெட்; பொருட்கள் சேமிப்புக் கிட்டங்கிகள்
அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன, சூறையாடப்பட்டன.
விரைந்து பல இடங்களுக்கும் செல்லும் இளைஞர்கள் குழுக்களின் தகவல்களின்படி
வெவ்வேறு குடியிருப்புக்களுக்கு சென்று 1,300 போலீசாரும் பகுதி முழுவதும் பரவி நிற்குமாறு செய்தனர்.
பிரான்சின் மற்ற பகுதிகளில் 77 வாகன எரிப்புக்கள் ஏற்பட்டன என்று தகவல்கள்
கூறுகின்றன; இளைஞர்களுக்கும் போலீசுக்கும் இடையே மார்சையிலிலும் டிஜோன் குடியிருப்புக்களிலும் கைகலப்புக்கள்
ஏற்பட்டன.
புறநகர்ப்பகுதி கலவரத்தின் முதல் வாரத்தில் 135 பேர் கைது செய்யப்பட்டனர்;
27 பெரியவர்கள் குற்றம் சாட்டப்பட்டு 16 பேருக்கு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
Bobigny யில்
புதன் மாலை ஒரு 21 வயதுக்கு மேற்பட்டவர் ஒருமாத கால சிறை தண்டனை பெற்றார்; மற்றொருவருக்கு மூன்று
மாத சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. மூன்று பேருக்கு ஆறில் இருந்து ஒன்பது மாத கால சிறைத் தண்டனை
கொடுத்து, அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாரிசுக்கு அருகே எஸ்ஸோன் என்ற இடத்தில் பயிற்சி மையப் பொறுப்பாளராக
இருக்கும் Amar Henni
செய்தி ஊடகத்திற்குக் கூறியதாவது: ஒரு நாள் பெரும் பொது எழுச்சி ஏற்படப்போகிறது -- இளைய தலைமுறையினரை
தவிர மற்றவர்களிடமும் எதிர்ப்பு உணர்வு பெருகும்போது இது தோன்றும்."
அத்தகைய நிலைமை வருமோ என்ற அச்சத்தில், சோசலிஸ்ட் கட்சி சார்புடைய
Liberation
என்னும் நாளேடு, முன்னர் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தலையங்கம் ஒன்றை எழுதியிருந்த ஏடு, இளைஞர்களின்
"வன்முறையானது அநீதி, விலக்கல் மற்றும் வறுமை ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட மனஉலைவின் வெளிப்பாட்டின் ஒரு
பகுதிதான்... அதிகாரம் சட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும். நாம் முழுப் பிராந்தியத்தையும் சிறுபான்மையினரின்
வன்முறைக்காக கைவிட்டுவிடக்கூடாது; அந்த வன்முறை அப்பிரிவுகளில் வாழும் மற்றவர்களுடைய வாழ்க்கையையும்
நச்சுப்படுத்திவிடும்" என்று அறிவித்து அடக்குமுறை சக்திகளுடன் தன்னை இணைத்துக் கொண்டது.
இதற்கிடையில் Le
Figaro
என்னும் வலதுசாரி நாளேடு, சமீபத்திய தலையங்கம் ஒன்றில்,
சார்க்கோசியை மிகையான சொற்களை பயன்படுத்தியதற்காக மெதுவாகக் கடிந்து கொண்டுள்ளது; இதற்கு
நவீன-பாசிசவாதியான ஜோன் மரி லூ பென் முழு ஆதரவையும் கொடுப்பார். இந்த பிரச்சினையின் வேர்களே
"கட்டுப்பாடற்ற குடி வரவு கொள்கையின் விளைவாக உள்ளது" என்று இது கூறியுள்ளது.
குடிவரவு - எதிர்ப்பு என்ற வெறித்தனத்தின் மூடுதிரைக்குள் பிரான்சின் அரசியல் ஸ்தாபனம்
வலதிற்கு தீவிரமாகச் சென்றுள்ளமையானது, முழு தொழிலாள வர்க்கத்திற்கும் அவற்றின் அடிப்படை நலன்கள் மற்றும்
உரிமைகள்மீது பெருகிய முறையில் என்றும் அதிகரிக்கும் தாக்குதல்களுக்கான ஒரு எச்சரிக்கையாக சேவைசெய்கிறது.
See Also:
பிரான்ஸ்: போலீசிற்கு
எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன
போலீசிற்கு எதிரான
கலகங்களால் பாரிஸ் கடும் பாதிப்பு
Top of page
|