ஐரோப்பா
:
பிரான்ஸ்
Amiens rally for "no" vote on EU constitution
The French left and the politics of
evasion
ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு மீதான "வேண்டாம்" வாக்கிற்கு அமியான் பேரணி
பிரெஞ்சு இடதும், தவிர்க்கும் அரசியல் முறையும்
By Peter Schwarz
28 May 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
வியாழக்கிழமையன்று பிரான்சின் வட பகுதி நகரமான அமியான் இல் "அரசியலமைப்பிற்கு
வேண்டாம் என்போம்: ஒரு சமூக, ஜனநாயக ஐரோப்பாவிற்காக" என்ற தலைப்பில் நடந்த ஒரு கூட்டம், முந்தைய
நாள் மாலை பாரிசில் இக்கட்டுரையாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையைக்
கொண்டிருந்தது.
சூழ்நிலையானது, நம்பிக்கை நிறைந்து, உற்சாகம் அளிப்பதாகவும், சோசலிஸ்ட்
கட்சிக் கூட்டத்தை பண்பிடும் கசப்புணர்வு, விரோதப் போக்கு இவை இல்லாமல் அமைந்திருந்தது. மக்களின் பரந்த
எதிர்ப்பு அலை என்ற உற்சாகத்தில் தாங்கள் மிதந்திருந்ததாகத்தான் அமியான் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்
தெளிவாக உணர்ந்திருந்தனர். ஞாயிறன்று நடக்க இருக்கும் தேசிய வாக்கெடுப்பில் பிரெஞ்சு வாக்காளர்கள் தங்கள்
தீர்ப்பைக் கூறவிருக்கும் ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றி சில சொற்பொழிவாளர்கள் கருத்துச் செறிந்த தன்மையில்
விமர்சித்தனர்; இது அரசியலமைப்பிற்கு ஆதரவு முகாம் நடத்திய கூட்ட அரங்கில் பேசியவர்கள் தொடுத்த இறுதி
எச்சரிக்கை, அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு மாறுபட்ட முறையில் நன்கு அமைந்திருந்தது. ஆனால் இடது குழுக்களின்
கூட்டம் செய்ததெல்லாம் இவ்வளவுதான்.
முதலாளித்துவ செய்தி ஊடகம், அநேகமாக தோற்றேவிடும் என்று கருதும், வாக்கெடுப்பின்
விளைவுகளை பற்றிய திறனாயும் மதிப்பீடு கிடைக்கும் என்று எவரேனும் எதிர்பார்த்திருந்தாலோ, பிரான்சிலும்,
ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள சிக்கல் வாய்ந்த, கடினமான பிரச்சினைகளுக்கு விடை
கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாலோ, இந்தக் கூட்ட அரங்கிற்கு வரும் சிரமத்தைத் தடுத்திருக்கலாம்.
ஒரு சமூக நீதியும், ஜனநாயகமும் நிறைந்த ஐரோப்பாவை நிறுவுவதற்கு நேரடிப்
பாதையில் ஒரு பெரிய கட்டமாக "வேண்டாம்" வாக்கு முகாம் வெற்றியடைதல் இருக்கும் என்று, தான்
எதிர்பார்க்கும் வெற்றியை பற்றிய கருத்தை தெரிவித்தது. ஒரு "வேண்டாம்" வாக்கு ஐரோப்பா முழுவதும் பரந்த
ஒரு வழிவகையை ஏற்படுத்தி, புதிய-தாராளவாத சக்திகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளிவிடும்
என்று அவர்கள் அறிவித்தனர்.
அவர்களுடைய ஆட்சியின் முதலாளித்துவ மற்றும் தேசிய அஸ்திரவாரங்கள் மற்றும்
வடிவமைப்புக்களை பற்றி கேள்விக்குட்படுத்தாமல், முன்னோக்கானது ஆளும் வட்டங்களின் மீது மக்கள் அழுத்தத்தை
தீவிரமாக்கவேண்டும் என்ற வரம்பிற்குத்தான் குறைக்கப்பட்டது. இது ஒரு கற்பனையான முன்னோக்கு என்பது
ஐரோப்பிய முதலாளித்துவ கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து கொண்டுள்ள வலதுபுறம் நோக்கிய வளைவரை
பாதையினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது; இவற்றில் சமூக ஜனநாயகவாதிகளும், பசுமைக் கட்சியினரும் அடங்குவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக "வேண்டாம்" வாக்கில் இருக்கும் "ஒற்றை இயக்கமுறை
(Unitary Dynamic)
க்குதான் பெரும் புகழாரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அமியான் கூட்டத்தில்
பிரதிநிதித்துவம் பெற்ற பல்வேறு உறுப்புக்கட்சிக் குழுக்களுக்கும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் அரசியல்
பொது மன்னிப்பிற்கு இது மறைத்துக் கூறலாக இருந்தது. இதில் சோசலிஸ்ட் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு,
பசுமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி (PCF),
அட்டாக், மற்றும் Ligue Communiste
Revolutionnaire (LCR) ஆகியவை இருந்தன. மேடையில்
இருந்த கட்சிகள் பெரும்பாலனவற்றில் இருந்து, அதாவது சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், பசுமை வாதிகள் என்று
உரை நிகழ்த்திய, இக்கட்சிகள்தாம் கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பகுதியில் அரசாங்கம் நடத்தியதிவர்கள்
என்பதையும் அவர்கள்தான் இப்பொழுது தாங்களே குறைகூறும் ஐரோப்பிய அரசியலமைப்பின் விதிகள் பலவற்றை செயல்படுத்துவதற்கு
பொறுப்பானவர்கள் என்பதையும் வசதியாக மறந்துவிட்டனர்.
தொழிற்சங்கவாதிகள், ஏனைய அக்கறையுடைய கட்சியினர், ஏற்பாடு செய்திருந்த
அமைப்பாளர்கள், அவர்களுக்கு ஆதரவாளர்கள் என கிட்டத்தட்ட 400 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எல்லா வயதுக்காரர்களையும் காணமுடிந்தது. மேடை அரங்கில்
LCR ன் கொடி
ஒரு புறமும் PCF
இன் கொடி மறுபுறமும் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கிடையில் பல அமைப்புக்களின் "வேண்டாம்"
சுவரொட்டிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
பசுமைக்கட்சியின்
Francine Bavay தான் முதல் பேச்சாளராக இருந்தார்.
இந்த அம்மையார், அரசியலமைப்பின் ஜனநாயகமற்றதன்மை மற்றும் சமூக விரோத தன்மையை குறைகூறினார். இதில்
பட்டியலிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மிகக் குறைவாக உள்ளன என்றும் இது 1789ம் ஆண்டின் புகழ்பெற்ற
மனித உரிமைகள் பிரகடனத்தில் இருந்து கணிசமான பின்னடைவாகும் என்றும், வேலை உரிமை, வேலைப்பயிற்சி பெறுதல்
ஆகியவை ஆவணத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டன என்றும் கூறினார்.
இவர் பேசும்போது: "தொழிலாளர்களுக்கு இடையே நாம் போட்டியை
விரும்பவில்லை; ஆனால் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளும், சமூகத் தரங்களும் வேண்டும் என்று
விரும்புகிறோம்." சுற்றுச் சூழல் கொள்கை பற்றிப் பேசுகையில், "வங்கி" என்ற சொல் 600 தடவைக்கும்
மேலாக வந்துள்ளது என்றும் அதே நேரத்தில் "சூழல்" என்ற சொல் ஒரே ஒரு முறைதான் வந்துள்ளது என்றும்
குறிப்பிட்டார்.
சோசலிஸட் கட்சியின்
Gerard Flioche அரசாங்கத்திற்கு எதிரான சமூக
எதிர்ப்பிற்கும், அரசியலமைப்பு நிராகரிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறினார். மற்ற நாடுகளிலும்
அரசியலமைப்பிற்கு கணிசமான எதிர்ப்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். கிரேக்கத்தில், 10,000 பேர்
கருத்துவாக்கெடுப்பு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினாலும்கூட, பாராளுமன்றம் அரசியலமைப்பிற்கு ஒப்புதல்
கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் ஒரு மாநிலத் தேர்தலில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி ஒரு
பெரும் தோல்வியடைந்தமை பற்றிக் குறிப்பிடுகையில், கூட்டமைப்பின் அதிபர்
Gerhard Schroder
தன்னுடைய வலதுசாரி அரசியலுக்காக நல்ல மூக்கறுப்பு பெற்றார் என்று குறிப்பிட்டார்: "தன்னை இடது என்று
அழைத்துக் கொண்டு, இடதுசாரிக் கொள்கையை ஒருவர் செயல்படுத்தாவிட்டால் இப்படித்தான் ஏற்படும்"
என்றார்.
அரசியலமைப்பு மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்படவேண்டும் என்று
Filoche அழைப்பு
விடுத்தார். "ஒருவருக்கு ஒன்று வேண்டும் என்றால் "வேண்டாம்" என்று சொல்ல வேண்டும்" என்பதை ஒரு தொழிற்சங்கவாதி
என்னும் முறையில் தான் அறிந்துள்ளதாக அவர் கூறினார். அரசியலமைப்பு பிரான்சின் மக்களால் நிராகரிக்கப்பட்டால்,
அது "நெருக்கடியின் வெளிப்பாடு என்றில்லாமல் ஐரோப்பா பக்குவம் அடைந்துள்ளது" என்று எடுத்துக்கொள்ளப்பட
வேண்டும் என்று அவர் கூறினார். இதன் பின் அரசியலமைப்பில் இயைந்துள்ள பொருளாதாரத்தின் "சுதந்திர
சந்தை"யின் தாராளமய பொருளாதாரம் எவ்வாறு தொழிலாளர்களின் வாழ்வில் உட்குறிப்புக்களை கொண்டுள்ளன
என்பது பற்றி விரிவாக அவர் விளக்கினார். போல்கின்ஸ்டைன் இயக்க நெறி என அழைக்கப்படும் கருத்து
அகற்றப்படவேண்டும் என்றும் ஐரோப்பா முழுவதும் குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டும்
என்ற கோரிக்கையுடனும் தன்னுடைய உரையை அவர் முடித்தார்.
அட்டாக்கை சேர்ந்த
Pierre Khalfa "வேண்டாம்" பிரச்சாரத்தில்
வெளிப்படுத்தப்பட்டுள்ள "ஒற்றை இயக்கநெறி" பற்றிப் பாராட்டி தன்னுடைய உரையை தொடங்கினார். இது ஒரு
"அடிப்படை வெற்றி" என்றும் இதன் விளைவுகள் ஞாயிறன்று எதிர்பாராமல் அரசியலமைப்பு ஏற்கப்பட்டாலும் நல்ல
தன்மையை கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாக்கு மையம் கொண்டிருக்கும் பிரச்சினை இதுதான் என்றும் கால்பா அறிவித்தார்:
"புதிய- தாராளவாத கொள்கைக்கு ஆதரவு வேண்டுமா, வேண்டாமா". அரசியலமைப்பின் உரை முழுவதும் புதிய
தாராளவாத கொள்கையில் நிறைந்துள்ளது என்று அவர் கூறினார். அவருக்கு முன்னால் பேசியவரை போலவே,
கால்பா அரசியலமைப்புச் சீர்திருத்தம் வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். புதிய உடன்படிக்கைகளை
ஏற்படுத்தி, சமரசம் காண்பதற்கு கருத்துவாக்கெடுப்பில் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்
கூறினார்.
இந்தக் கட்டம் வரை பேச்சாளர்கள் வாதத்தைப் பொருந்தும் வகையில் கூற
முற்பட்டிருந்த நிலையில், அடுத்த பேச்சாளரான LCR
ஐ சேர்ந்த Francois Sabado
ஒலிபெருக்கிக் கருவிக்குள் உரக்கக் கூவினார். கேட்பவர்களின் திறனாயும்
உணர்வுகளை மரத்துவிடச் செய்யக்கூடிய அவருடைய உரத்த சப்தம் முந்தைய பேச்சாளர்களால்
முன்வைக்கப்பட்டிருந்த நயமான முதலாளித்துவ சீர்திருத்த முன்னோக்கை மறைக்க உதவியது.
ஞாயிறன்று ஒருவேளை "வேண்டும்" முகாம் வெற்றியடைந்தது என்று கொண்டாலும்,
"வேண்டாம்" முகாம் வாதத்தை பொறுத்தவரையில் வெற்றி பெற்றுவிட்டதாக உறுதியுடன் கூறமுடியும் என்று,
Sabado
தன்னுடைய உரையை தொடங்கினார். ஆரம்பத்தில் வாதம் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைதல் போன்ற
வலதுசாரிக் கருத்துக்களைப்பற்றி இருந்தது என்ற அவர், இப்பொழுது விவாதத்தின் மையத்தானத்தில் சமூகப்
பிரச்சினைகள் வந்துவிட்டன என்றார். "இடதின் "வேண்டாம்" என்னும் வாக்கு சமூக, சர்வதேச தன்மை
வாய்ந்தது" என்று அவர் கர்ச்சித்தார். "இது சமூக இயக்கத்தால் அடித்துத்தள்ளிக் கொண்டுவரப்படும்".
அதன் பின் அவர் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால் அதன் விளைவுகள் எவ்வாறு
இருக்கும் என்று பெரும் திறமையுடன் வர்ணிக்கலானார். அது ஒரு "இடது விடையின்" தொடக்கமாக இருக்கும்
என்றும் "ஐக்கியத்தை நோக்கிய வளர்ச்சியாக (அதாவது பல அமைப்புக்களின் ஒத்துழைப்பாக) இருக்கும் என்றும்
குறிப்பிட்டார். 'வேண்டாம்' முகாம் வென்றது என்றால், வரலாறு வேறுவிதமாக எழுதப்பட்டுவிடும், என்று அவர்
குறிப்பிட்டார். அதனால் ஏற்படும் விளைவு ஒன்றும் "பெருங்குழப்பமும் நெருக்கடியும்" அல்ல என்றும் புதிய-தாராளவாத
அரசியலுக்கு ஒரு தாக்குதலாகவும் சமூக ஐரோப்பாவை நோக்கி முன்னேறும் ஒரு அடிஎடுத்து வைப்பாகவும்
இருக்கும் என்றும் குறிப்பிட்டார். பிரான்சில் "வேண்டாம்" என்பது தவிர்க்க முடியாமல் மற்ற நாடுகளுக்கும் பரவும்
என்றும் கூறினார்.
இந்தப் பிரச்சாரத்தில் அரசியல் கண்டிப்பாக தொடரவேண்டும்" என்று
Sabado
கூறினார்; அதே நேரத்தில் மேடையில் இருக்கும் கட்சி நண்பர்கள் புண்படக்கூடாது என்பதில் தான் பேசும்
கருத்துக்களில் பெரும் கவனத்தையும் காட்டினார். "இன்னொரு விதமான அரசியலும் நிகழலாம்", அது
"முதலாளித்துவ-விரோத" தன்மையைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் "முதலாளித்துவ தாராளவாத கொள்கையுடன்
உடைவை கொண்டிருக்கவேண்டும்" என்ற இலக்கை கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இவருக்கு அடுத்த பேச்சாளர்,
Institute Copernic
என்னும் இடதுசாரி சிந்தனைக் குழுவை சேர்ந்த Yves
Salesss ஆவார்; இவர் அரசியலமைப்பு பற்றிய திறனாய்வில்
கவனம் செலுத்தினார். "வேண்டாம்" வாக்கு ஐரோப்பாவிற்கு எதிராக இயக்கப்படவில்லை என்றும் "ஆழ்ந்த
முறையில் ஜனாயக விரோதமாக" இருக்கும் அரசியலமைப்பிற்குத்தான் எதிராக உள்ளது என்றும் கூறினார்.
இதைவிடச் சிறந்த அரசியல் அமைப்பு சாத்தியமில்லை, ஆகவே இதற்கு "வேண்டும்" வாக்குப் போடுங்கள் என்று
எவரேனும் ஒஈரவர் அறிவித்தால், அவர் அனைத்தையும் இழந்த கீழ்நோக்கிய சரிவிற்கு ஆளாகியுள்ளார் எனக்
கூறிப்பிட்டார்.
மக்களுடைய விருப்பத்தை ஒரு அரசியலமைப்பு நன்கு வெளிப்படுத்தவேண்டும் என்று
அவர் அறிவித்தார். 1789ம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்டிருந்த தேசிய சட்ட மன்றத்தை கலைக்க வேண்டும்
என்று கூறிய அரசரின் தூதரிடம் Mirabeau,
"நாங்கள் இங்கு மக்களுடைய வேண்டுதலின்பேரில் கூடியிருக்கிறோம்" என்று பிரகடனப்படுத்தியிருந்தார் என
நினைவுகூர்ந்தார்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதியாக இருக்கும்
Francis Wurtz
என்பவர்தான் கடைசிப் பேச்சாளர் ஆவார். இடதின் ஒற்றுமையைப் புகழ்ந்து உரையை தொடக்கிய வர்ட்ஸ் பின்னர்
ஒரு தலைப்பில் இருந்து மற்றொரு தலைப்புக்கு சென்று இறுதியில் விதிகள், பத்திகள் பற்றிய ஒழுங்கற்ற விரிவுரைகளில்
சிக்கிக் கொண்டபோது, கூட்டத்தலைவர் அவரை உரையை முடித்துக் கொள்ளுமாறு ளெளரவமாக
கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் கூட்டம் "சர்வதேச கீதம்"
இசைக்கப்பட்டதுடன் முடிவடைந்தது.
பெரும்பாலான பேச்சாளர்கள் "வேண்டாம்" பிரச்சாரத்தை பயன்படுத்தி
சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி மாற்றத்தினால் வந்துள்ள அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்ப ஒரு புது அரங்கு
அல்லது அமைப்பை ஏற்படுத்த முயன்றனர். பிந்தையது அரசியலமைப்பிற்கு ஆதரவாக கடுமையாக பிரச்சாரம்
செய்த வகையில் தன்னையே இழிவுபடுத்திக் கொண்டுள்ளது.
சீர்திருத்தவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும்
LCR ஆகியோர்
அடங்கிய அத்தகைய அமைப்பின் உருவாக்கம், தொழிலாளர்களின் அரசியல் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கும்,
தொழிலாள வர்க்கத்தை சீர்திருத்தவாத எதிர்ப்புத் திட்டத்துடன் மட்டுப்படுத்தவும், அதன் மூலம் உண்மையான
சுயாதீனமான சோசலிச இயக்கம் வளர்ச்சியுறாமல் தடுத்து நிறுத்தும் முயற்சிக்கும்தான் பயன்படும்.
இந்த முறையில் மிகவும் செயலூக்கமான வகையில்
LCR- ஆல்
பங்காற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. அரசியல் அமைப்பு நிராகரிக்கப்படுவது "சமூக இயக்கத்தை" ஆரம்பித்து,
அது தவிர்க்க முடியாமல் "சமூக ஐரோப்பா" ஏற்படுத்தப்படும் என்ற வாதமானது, அரசியலில் தொழிலாள
வர்க்கத்தை நிராயுதபாணியாக செய்துவிடும். உண்மையில் அரசியல் அமைப்பு நிராகரிக்கப்படுதல் --அது முற்றிலும்
சரியான முடிவு, தேவையான முடிவு-- அதுதாமே தீர்வுகாணப்பட வேண்டிய அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வை
கொடுத்துவிடாது. ஆளும் வர்க்கங்கள் ஏற்கனவே இந்தப் பிரச்சினையில் தோல்வியை செயலற்றமுறையில்
ஏற்கமாட்டோம் என்று தெளிவாக்கியுள்ளன. வாக்காளர்கள் கருத்துக்கு இதை விடும் முதல் முடிவே தவறு என்று
அவர்கள் வருந்துவதுடன் இன்னும் கூடுதலான கடுமையான ஆட்சிவகைக்கு தயார் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்த வட்டங்களின் சிந்தனையின் அடையாளமாக வெள்ளியன்று
Le Monde
இல் ஒரு தலையங்கம் வெளியானது: அது அரசியலமைப்பின்
எதிரிகளை மிகத் தீங்கான வகையில் தாக்கியுள்ளது. ஆசிரியர்
Jean Karie Comombani,
"வேண்டாம்" வாக்காளர்கள் "ஒர் இரட்டை பொய்த்தோற்றத்தை" வளர்த்துக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
தாங்கள் சக்தி வாய்ந்தவர்களை தண்டித்து ஐரோப்பாவை மாற்ற முடியும் என்று நம்புகின்றவர்கள் போலும் என்று
அவர் எழுதியுள்ளார்.
அவர் மேலும் தொடர்கையில், ஜனாதிபதி சிராக்கை தண்டித்தல், ஏனைய சீற்றத்தின்
வெளிப்பாடு போல ஓரளவு நிம்மதியை கொடுக்கலாம். "எப்படியிருந்தபோதும் அது எதையும் மாற்றாது --
உறுதியாக பொருளாதாரம், மற்றும் பிரெஞ்சு சமூகத்தின் முக்கிய சிக்கலான "பெரும் வேலையின்மை நிலையை மாற்றாது."
அநேநேரத்தில் அரசாங்க மாற்றத்தை தாமதப்படுத்தும் ஆபத்தையும் கொண்டுள்ளது, "ஏனெனில் இந்தப் பிரச்சினையில்
இருந்து ஆழ்ந்த மற்றும் நீடித்த முறையில் பிளவுற்றுத்தான் இடது வெளிப்படுகிறது."
வேறுவிதமாகக் கூறினால், தொழிலாள வர்க்கம் இந்த ஜனநாயகமற்ற
அரசியலமைப்பை கசப்புடன் ஏற்கவேண்டும் அல்லது வெறுப்பிற்குரிய வலதுசாரி அரசாங்கத்தின் ஆட்சியை நீண்ட
காலத்திற்கு எதிர்கொள்ளவேண்டும்.
தன்னுடைய Nouvel
Observateur ல் "வேண்டாம்" வாக்குகள்
போடுபவர்கள் "வலது சாரிகள், இனவெறியர்கள்" எனக் கூறியிருந்த, ஜேர்மனிய தத்துவவாதியான
Jurven Habermas
ஐ எதிரொலிக்கும் வகையில், Colombani,
அரசியலமைப்பிற்கு எதிர்ப்புக் காட்டுபவர்கள் சோவினிச உணர்வுகளால் உந்தப்படுகின்றனர் என்று குற்றம்
சாட்டியுள்ளார்: "வேண்டாம்" வாக்கிற்கு நிலைப்பாடாக இருக்கும் உயர் சிந்தனை --அரசியலமைப்பை
எதிர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிரெஞ்சுக்காரர்களை விட மற்ற ஐரோப்பியர்களுக்கு கூடுதலான முறையில்
நலன்கள் கொடுக்கப்படுகின்றன என்ற கருத்தை உடையவர்கள் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுவது --கூடுதலான
இறைமைப் போக்கை காட்டுகிறதே அன்றி இடதை போக்கை அல்ல."
இந்த அவதூறின் உட்குறிப்புக்களில் தவறுக்கு இடம் இல்லை; சோவினிசத்தால் மாசுபடுத்தப்பட்டுள்ள
ஒரு மக்களை "பொருளாதாரத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு" தீர்வு காண்பதில் தடைசெய்யவும், பிரான்சை
பலமிழக்கச் செய்யவும் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகள் மீறப்படுதலை ஏற்கத்
தயாராக இருக்கவேண்டும்.
LCR மற்றும் அதன் "வேண்டாம்"
கூட்டணியின் பங்காளிகளுடைய அதிக சிந்தனையனற்ற, மேம்போக்கான தன்னம்பிக்கை, இந்த அரசியல் ஆபத்துக்களை
எதிர்கொள்ளும் நிலையில் தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக்கியுள்ளது. இவர்கள் அனைவரும் லூ பென் அவருடைய
தேசியமுன்னணி, அல்லது ஏனைய வலதுசாரி தீவிர அமைப்புக்கள்
எந்த அடிப்படையில் "வேண்டாம்" வாக்கிற்கு ஆதரவைக் கொடுக்கின்றனர் என்று குறிப்பிடக் கூடவே இல்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள்தான் சிராக்கிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு
கொடுக்கவேண்டும் என்று அழைப்புவிடுத்தனர். இதற்கு அவர்கள் அது ஒன்றுதான் இவருக்கு போட்டியாக இரண்டாம்
சுற்றில் இருக்கும் லூ பென்னை அடக்கும் வழி என்று வாதிட்டனர். இவர்களுடைய தற்போதைய பெருமித உணர்வு
2002ல் அவர்கள் காட்டிய பீதியின் மறுபக்கம் ஆகும்; அப்பொழுது அப்பீதி அவர்களை சிராக்கின் தோள்களை
ஆதரவிற்கு பற்றச் செய்தது.
இந்த இரு பதில்செயற்பாடுகளுமே பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொழிலாள
வர்க்கத்தை எதிர் கொண்டுள்ள அடிப்படை பணியை, அதாவது சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில்
சோசலிச அடித்தளத்தில் ஐரோப்பாவின் ஐக்கியத்திற்கு போராடும் ஒரு புதிய சுயாதீனமான கட்சியை
கட்டியமைக்க வேண்டும் என்பதை தவிர்க்கின்றன.
See Also:
ஐரோப்பிய அரசியலமைப்பு
பற்றி பிரான்சில் வாக்கெடுப்பு: உத்தியோகபூர்வமான விவாதம்
பாரிஸ்
கூட்டத்தில் வாக்கெடுப்பிற்கு முன்னதாக
ஐரோப்பிய அரசியலமைப்பிற்கான வாக்கெடுப்பில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் "வேண்டாம்"
வாக்காளர்களைத் தூற்றுகின்றனர்
ஐரோப்பிய
அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக
பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு
: ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி தலைமைதாங்குகிறார்
பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு
எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது
தோல்வியை தழுவுகிறது
Top of page
|