World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

At Paris meeting on eve of vote

French Socialist Party leaders slander "no" voters in referendum on EU constitution

பாரிஸ் கூட்டத்தில் வாக்கெடுப்பிற்கு முன்னதாக

ஐரோப்பிய அரசியலமைப்பிற்கான வாக்கெடுப்பில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் "வேண்டாம்" வாக்காளர்களைத் தூற்றுகின்றனர்

By Peter Schwarz
27 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

பாரிஸ் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பிற்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 450 கூட்டங்களில், ஒன்றில் கலந்து கொண்ட அனுபவம், ஞாயிறு வாக்கெடுப்பு அநேகமாக அரசாங்கத்திற்குத் தோல்வியில் முடியலாம் என்ற நம்பிக்கையை உறுதிசெய்கிறது.

மே 25 அன்று சோசலிஸ்ட் கட்சியால் (PS), இலத்தீன் குடியுருப்புக்களில்(Latin Quarter) Mutualite ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டம் தன்னம்பிக்கை, பிறரை மதியாமை மற்றும் செருக்கு ஆகியவை நிறைந்து காணப்பட்டது. அநேகமாக கட்சியின் விசுவாசத்திற்குரிய, உறுப்பினர்கள், கிட்டத்தட்ட 150 பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இருந்த சூழ்நிலையில் இறுக்கம் ஏதுமில்லை. ஒவ்வொருவரும் மற்ற அனைவரையும் அறிந்திருந்து பெரும் உரிமையுடன் பேசிக் கொண்டனர். பேச்சுக்களுக்கு இடைய சிறிதே நகைச்சுவைத் துணுக்குகளும், கதைகளும் காணப்பட்டன.

அன்றாட வாழ்வின் உண்மைகள் கூட்டத்திற்கு நுழைவதற்கு முன்னரே பின்தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. எந்தப் பேச்சாளரும், வேலையின்மை, பொதுநலச் செலவினக் குறைப்புக்கள், வறுமை இன்னும் பிரான்சிலும், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் தீமைகளைப் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஒரு ஜனநாயக மற்றும் பெரும் இணக்கத்துடன் இருக்கும் கண்டத்தைப் பற்றிய பொய்த் தோற்றத்தைத்தான் பேச்சாளர்கள் சித்தரித்தனர்.

அதிக ஆரவாரமில்லாத வகையில் கூட்டம் துவங்கியது. மூன்றாம், நான்காம் குடியரசுகளின் முதலாளித்துவமுறையின் முக்கியத் தூணாக, பழமைத் தன்மையின் அடையாளமாக இருந்த தீவிரவாத கட்சி என்பதின் பிரதிநிதி அரசியலமைப்பிற்குத் தன்னுடைய ஆதரவை நியாயப்படுத்தினார். ஒரு ஜனநாயக ஐரோப்பாவிற்கு அது அடையாளமாக இருக்கிறது என்று உறுதியுடன் கூறினார். அவர் கொடுத்த நிரூபணம்? அது மரண தண்டனையைத் தடுத்துள்ள விதியாம். சீனாவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தூக்கிலிடப்படுகின்றனர்; அமெரிக்காவில் டஜன் கணக்கில் அவ்வாறு நடக்கிறது என்றார். இந்த வாதத்தின் தர்க்கத்தைப் பெரும்பாலானவர்கள் கூட்டத்தில் பின்பற்ற முடியவில்லை; ஏனெனில் ஒருகால் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால் ஐரோப்பாவில் மீண்டும் மரண தண்டனை புகுத்தப்படவேண்டும் என்று எவரும் ஆலோசனை தெரிவித்ததில்லை.

அடுத்த பேச்சாளர் பாரிசின் துணை மேயரான Anne Hidalgo ஆவார். நாற்பதுகளின் நடுவயதில் இருக்கும் இவ்வம்மையாருடைய வாழ்க்கையில் நீர் நிறுவனமான Vivendi யில் சிறிது காலம் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கிறார். இவர் கட்சி வழியே உறுதியாக நின்று உரையாற்றினார். "வலிமையான ஐரோப்பாவில், வலிமையான பிரான்சிற்காக", "பிரான்சின் சமூக முன்மாதிரியை ஏற்றுமதி செய்வதற்காக", என்பவை அடிபட்டன. உலகம் முழுவதும், உதாரணமாக "தெற்கு அமெரிக்காவிலும், ஆசியாவிலும்" "நமக்கு ஒரு வலுவான ஐரோப்பா தேவை" என்ற குரலைக் கேட்க முடிகிறது என்று இந்த அம்மையார் தெரிவித்தார். உரையில் எப்பொழுதேனும் அரசியலமைப்பின் விரோதிகளைப் பற்றிக் கடுமையான சொற்களை வீசினார். சோசலிஸ்ட் கட்சிக்குள்ளேயே "வேண்டாம்" முகாமிற்கு முக்கிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் Laurent Fabius ஐ ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு கருத்துத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு நடவடிக்கைகள் சற்று சப்தம் நிறைந்தவையாகப் போயின. சோசலிஸ்ட் கட்சியில் மூன்றாம் அந்தஸ்தை வகிப்பவரும், "வேண்டும்" பிரச்சாரத்திற்கு பொறுப்பேற்றுள்ள கட்சியின் நிர்வாக உறுப்பினருமான Franois Rebsamen, அனைத்துவிதமான மக்களை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலானார்.

பிரெஞ்சு சோசலிச முன்னாள் முக்கிய பிரமுகர்களான Jean Jaures மற்றும் Leon Blum ஆகியோருடைய ஆவிகளை வேண்டிக்கொண்டார். சோசலிஸ்டுகளுடைய மிக அடிப்படையான மதிப்பீடுகளில் ஒன்றான சர்வதேசியம் ஆபத்திற்குட்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சோசலிச சர்வதேசத்துவம் தொழிலாளர்களை முதலாளித்துவ முறை மற்றும் அவற்றின் அரசாங்கங்களுக்கு எதிராக ஒற்றுமைப் படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதையும், அதேவேளை முன்மொழியப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பு ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் பெருவணிகத்தை மக்களுக்கெதிராக ஒன்றுபடுத்த முயல்கிறது என்பதை Rebsamen மறந்துவிட்டார்.

ஆயினும்கூட, Rebsamen "தடையற்ற, உண்மையான போட்டி" அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும், அதை நியாயப்படுத்தும் வகையில், இந்த நிபந்தனை ஏற்கனவே 1957, ரோம் உடன்படிக்கையிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். ஹிட்லருடைய தேசிய சோசலிசத்தின் அனுபவத்தில் இருந்து கிடைத்த ஒரு முடிவு என்று அவர் வாதிட்டதுடன், அனைவருக்கும் தெரிந்துள்ளபடி, தேசிய சோசலிசம் பெரும் ஏகபோக உரிமைகளையும் அறக்கட்டளைகளையும் நம்பியிருந்தது என்றும் குறிப்பிட்டார். அரசியலமைப்பில் குறித்துள்ள "சுதந்திர சந்தை" பொருளாதார விதிகள் துல்லியமாக ஐரோப்பாவின் மிகச் சக்தி வாய்ந்த நிதியங்களில் நலன்களுக்குத்தான் பெரும் ஆதரவைக் கொடுக்கின்றன என்பதை Rebsamen அலட்சியம் செய்தார்.

அரசியலமைப்பு பற்றி சோசலிஸ்டுகள் "பொறுப்பான முடிவு" எடுத்ததற்காக Rebsamen அவர்களைப் பாராட்டினார். சோசலிஸ்ட் கட்சி, "வேண்டும்" என்ற வாக்குக்கிற்கு அழைப்புக் கொடுக்கவில்லை என்றால், பிரெஞ்சு வாக்காளர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் "வேண்டாம்" வாக்குப் போடுவர் என்ற உண்மையை வெளிப்படுத்தும் கருத்தைக் கூறினார். பிரான்சில் ஆளும் வர்க்கம் சோசலிஸ்டுகளுக்கு நன்றியறிதலுடன் இருப்பதற்குப் பல காரணங்கள் இருப்பது உண்மையா. அவர்களுடைய முயற்சிகள் அரசியலமைப்பு வேண்டும் என்ற வாக்கைப் பெறுவதற்குப் போதுமானவையா என்பது மிகவும் உறுதியற்ற நிலையில்தான் உள்ளது.

இத்தகைய நிலை Rebsamen ä, சீற்றம் கொள்ளப் போதுமானதாக இருந்தது, அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் பொறுப்பற்ற தன்மை உடையவர்கள் என்று குற்றம் சாட்டிய வகையில் தன்னுடைய பங்களிப்பை முடித்துக் கொண்டார். "பின்னர் என்ன ஆகும்" என்ற கேள்விக்கு அவர்கள் விடை சொல்வதிலிருந்து விலகியுள்ளனர் என்று அவர் வீறாப்புப் பேசினார்.

இக்கூட்டத்தின் முக்கிய பேச்சாளர், லயனல் ஜொஸ்பன் பிரதமராக இருந்தபோது, முன்னாள் ஐரோப்பிய விவகாரங்கள் மந்திரியாக இருந்த Pierre Moscovici ஆவார். பிரான்சின் அரசியல் உயர் அடுக்கின் முக்கியப் பயிற்சிப் பள்ளியான National School of Public Administration (ENA) உடைய பட்டதாரியான இவர், Alain Krivine தலைமையில் இயங்கும் LCR எனப்படும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில், 1984ல் சோசலிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு முன் இருந்தார். அரசியலமைப்பு நிர்ணய மாநாட்டின் உறுப்பினராக இருந்து, அதை இயற்றுவதில் பங்கு பெற்றிருந்த அவர், இப்பொழுது அதை எதிர்ப்பவர்கள்மீது சரமாரியாகத் தூற்றுதல்களை வழங்குகிறார்.

இவருடைய பேச்சு முழுவதும் "சீற்றம்" என்ற சொல்லைச் சுற்றித்தான் இருந்தது: தரக் குறைவாகப் பேசுவதற்கும் இவர் தயங்கவில்லை. "வேண்டாம்" முகாமின் பிரதிநிதிகள், சோசலிச-எதிர்ப்பு வாதிகள், சர்வதேச-எதிர்ப்பு வாதிகள் என்று மட்டுமின்றி பெரும் முட்டாள்களாகவும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு பற்றி அவர்கள் பிழைபடத் திரித்துக் கூறிவருகின்றனர் என்றும் பிரமைகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் கூறினார். அவர்கள் "இரும்புத் திரையை" மீட்க விரும்பிகின்றனர் -- ஒரு ருமேனியத் தந்தை மற்றும் போலந்துத் தாயினுடைய மகன் என்ற முறையில் தான் அதைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அவர் கூறினார். கிழக்கு ஐரோப்பாவின் பொருளாதார முன்னேற்றத்தை வலுவாகப் புகழ்ந்தார்; ஆனால் அப்பகுதியில் இருக்கும் பேரழிவு தரக்கூடிய சமூக நிலை பற்றி எதுவும் கூறவில்லை. இதன் பின்னர், அவர் Laurent Fabius ஐ ஒரு மனநிலை மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்பது பற்றி விரிவாக உரைத்தார்.

கூட்டத்தினரிடையே மெதுவாக கிளர்ச்சி எழுந்தது

Moscovici ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்குப் அரசியல் அமைப்பின்பால் போதிய ஈடுபாடு இல்லை என்று குற்றம்சாட்டியவுடன் கரவொலி பெருகியது. ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு ஆதரவு தரும் ஊக்கத்திற்குப் பகிரங்கமாகத் தலையிட்டபோதெல்லாம், கருத்துக் கணிப்புக்கள் நடவடிக்கைக்கு ஆதரவு குறைந்ததைத்தான் பதிவு செய்தன என்பதைக் குறிப்பிட்டார்.

இந்தக் குறிப்பைப் பொறுத்தவரையில் Moscovici இன் உரை Mutualitéல் குழுமியிருந்த விசுவாச உறுப்பினர்களின், பெரும் ஏமாற்றத்திற்குட்பட்ட இதயங்களை, நேரடியாகச் சென்றடைந்தது. 2002 தேர்தலில், சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தங்கள் கட்சி வேட்பாளர் ஜொஸ்பன் முதல் சுற்று ஜனாதிபதி வாக்கெடுப்பில் தேசிய முன்னணித் தலைவரான புதிய பாசிச Jean Marie Le Penனிடம் தோற்றவுடன், சிராக்கிற்கு ஆதரவான பிரச்சாரத்தை வழிநடத்தி நின்றனர். அந்த நேரத்தில் சிராக் தன்னுடைய UMP (Union for a Popular Movement) கட்சியை ஒன்றிணைத்து பாராளுமன்றத் தேர்தல்களுக்குத் தயார் செய்தார்: அதிலும் ஒரு பெரும்பான்மையுடன் வேற்றி பெற்றார் (இதற்குக் காரணம் பிரெஞ்சு இடதின் ஏமாற்றுத்தனம்). இப்பொழுது சோசலிஸ்ட் கட்சி மீண்டும் சிராக்கிற்காக கறைபடிந்த செயலைச் செய்ய கடப்படாடுடையதாக இருக்கிறது; பிந்தையவர் விஷயங்களை தன்னுடைய சிந்தனையற்ற மற்றும் மக்களுக்குப் பிடிக்காத குறுக்கீடுகள் மூலம் அவதிக்கு உட்படுத்துகிறார்.

Moscovici தன்னுடைய எஞ்சிய "சீற்றத்தை" ஞாயிறன்று "வேண்டாம்" வாக்குப் பதிவு செய்ய இருப்பவர்களுக்கு ஒதுக்கி வைத்தார். அரசியலமைப்பிற்கு எதிராக உள்ள இடது மற்றும் வலது சாரிகளை ஒரே பானையில் வைக்க விரும்பவில்லை என்றும், "வேண்டாம்" முகாம் வெற்றி பெற்றால் அது Le Penனிற்கு ஒரு வெற்றி என்று குறிப்பிட்டார். கருத்துக் கணிப்புக்கள், அரசியலமைப்பிற்கு 50 சதவிகிதத்திற்கும் மேலான எதிர்ப்பு வலது சாரித் தீவிர முகாமில் இருந்து வருவதாகத் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இது அவதூறுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. அரசியலமைப்பின் எதிர்ப்பாளர்களை மிரட்டும் வகையில் அவர்கள் வலதுசாரி தன்னல அரசியல் வாதிகளுக்கு "அவர்களின் முதல் பெரும் வெற்றிக்கு" வேண்டாம் வாக்குப் போடுபவர்கள் உதவுகின்றனர் என்ற உட்குறிப்பில் Moscovici பேசுகிறார்.

சோசலிஸ்டுகள் 2002 நிகழ்வுகளில் இருந்து எந்தப் படிப்பினையையும் கற்றுக் கொள்ளவில்லை. அந்த நேரத்தில் இவர்களுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் முன்பான இடத்தில்தான் Le Pen இருந்தார்; பல வாக்காளர்களும் ஜொஸ்பன்னுடைய தொழிலாளர் வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளை நிராகரித்திருந்தனர். சோசலிஸ்ட் கட்சி உடைய நிலைமை பின்னர் சிராக்கின் ஆதரவிற்குச் சென்று, பல தொடர்ச்சியான ஊழல்களில் தொடர்பு கொண்ட இந்த வலதுசாரி அரசியல்வாதிதான் குடியரசைக் காப்பாற்றப் போகிறவர் என்று அறிவித்தனர். இப்பொழுது அவர்கள் மீண்டும் சிராக்கிற்காக தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிற்பதுடன் இவர்களை எதிர்க்கும் அனைவரையும் பாசிஸ்டுகளின் கூட்டாளிகள் என்று வேறு கூறுகின்றனர்.

பொதுமக்கள் கருத்துக்களுடன் கூட்டம் முடிவிற்கு வந்தது. கட்சியின் பெருந்தலைவர்கள் உணர்வுப் பெருக்கு நிறைந்த உரைகளை, மறைந்து கொண்டிருக்கும் நம்பிக்கைகளை எப்படியும் புதுப்பிக்கவேண்டும் என்ற ஆற்றொணா முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சில சிந்திக்கவைக்கும் கருத்துக்களும் கேட்கப்பட்டன.

ஓர் இளவயது கறுப்பினத் தாயார் தான் பல தேர்தல் கூட்டங்களுக்கு இதுகாறும் வந்துள்ளதாயும், அப்படியும் கூட எப்படி வாக்களிக்கவேண்டும் என்ற முடிவிற்கு வரமுடியவில்லை என்றும் குறிப்பிட்டார். தனக்கு இந்த அரசியல் அமைப்பு, குறைந்த ஊதியம், பாதுகாப்பு, தன்னுடைய குழந்தைகளின் கல்வி ஆகியவற்றிற்கு, என்ன செய்யும் என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார். அவருடைய உரை, பெரும் வியப்புடன் மேடையில் இருந்தவர்களாலும், பார்வையாளர்களாலும் கேட்கப்பட்டது.

சற்று வயதான, தயக்கத்துடன் பங்கேற்ற ஒருவர், தன்னுடைய எதிரிகளைத் தாக்குவதற்குப் பதிலாக, ஏதேனும் சிறந்த செய்திகள் கொடுக்கப்பட்டிருந்தால், பிரச்சாரம் இன்னும் கூடுதலான வெற்றியடைந்திருக்கும் என்று தைரியமாகக் குறிப்பிட்டார். ஆயினும், "ஓர் ஐரோப்பிய இதயம், ஐரோப்பிய அச்சத்திற்குப் பதிலாக" வேண்டும் (பிரெஞ்சு மொழியில் இது ஓசை நயத்தைக் கொண்டது), போன்ற சில விளம்பர முழக்கங்களை மட்டுமே அவரால் தெரிவிக்க முடிந்தது.

இத்தகைய கூட்டத்தைப் பற்றி என்ன நினைப்பது?

சோசலிஸ்ட் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மகத்தான பிளவைத்தான் இது காட்டுகிறது. கட்சி, சாதாரண மக்களுடைய சிக்கல்களையும், அக்கறைகளையும் எடுத்துரைக்க முடியவில்லை என்பதோடு, அவற்றைப் பற்றி பொருட்படுத்தாமலும் இருக்கிறது. ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், உணர்வும் அற்ற தன்மையைக் கொண்டு, கட்சியின் தலைமையிடம் உள்ளிருந்தும் வெளியிருந்தும் எதிர்ப்பு அடையாளங்கள் வரும்போது தூண்டுதலுக்குட்பட்டும் அவமதிக்கப்படுவதாகவும் கருதுகிறது. பிரச்சார உணர்வு அரங்கிற்குள் மலர்வதற்கே சற்று நேரம் பிடித்தது; ஆனால் இந்த உணர்வு உண்மையான ஆர்வத்தின் வெளிப்பாடு என்று கூறுவதற்கில்லை; கட்சி படிநிலை அமைப்பின் சொந்தத் திகைப்பை மூடிமறைக்கும் முயற்சியாகத்தான் இது விளங்கியது.

சோசலிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது; இது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து வரவில்லை; கீழிருந்து எதிர்ப்புத் தெரிவிப்பவர்களிடம் இருந்து வந்துள்ளது. வெறித்தனத்துடன் "வேண்டாம்" வாக்குப் போடுபவரைக் கண்டிக்கும் வகையில் கூறப்படும் பொய்கள் அனைத்தும் நனவுடன் அல்லது நனவற்றமுறையுடன் வலதுசாரித் தீவிரத்திற்குத் துணை நிற்பவையாகும். உழைக்கும் மக்கள் இன்னும் வலதிற்கு நகருவதற்கு விடப்படும் புதிய சவால்களுக்கு சோசலிஸ்ட் கட்சி சந்தேகத்திற்கிடமின்றி எதிர்த்தாக்கத்தைக் கொள்ளும்.

See Also:

பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு : ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி தலைமைதாங்குகிறார்

பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது தோல்வியை தழுவுகிறது

பிரெஞ்சு இடதும் ஐரோப்பிய அரசியலமைப்பு மீதான கருத்தெடுப்பும்

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஸ்பெயினின் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

Top of page