World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Election in North Rhine-Westphalia

The implications of the SPD's decline

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் தேர்தல்

சமூக ஜனநாயக கட்சி வீழ்ச்சியின் விளைபயன்கள்

By Statement by the Socialist Equality Party (Germany)
20 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

மே 22ல் வடக்கு ரைன்-வெஸ்ட் பாலியா மாநிலத்தில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 15 மில்லியனுக்கும் சற்று குறைவான வாக்காளர்களை கொண்ட வடக்கு ரைன்-வெஸட்பாலியா 16 ஜேர்மன் மாநிலங்களின் அதிக நெரிசலான மக்களை கொண்டது என்பது மட்டுமல்லாமல்; Ruhr மாவட்டத்தையும் உள்ளடக்கியது, அது ஜேர்மனியின் மிகப்பெரிய தொழிற்துறை மையமாகும். நீண்ட காலத்திற்கு முன்னரே, பல நிலக்கரி சுரங்கங்கள், மற்றும் எஃகு ஆலைகள் மூடப்பட்டுவிட்டாலும் மத்திய கூட்டாட்சி குடியரசிலேயே மிகக் குவியலான தொழிற்துறை பிராந்தியமாக Dortmund மற்றும் Duisburg நகரங்களுக்கு இடையிலுள்ள பகுதி அமைந்திருக்கிறது.

மாநிலத்திலுள்ள நடப்பு ஆளும் கட்சியான SPD (ஜேர்மன் சமூக ஜனநாயகக்கட்சி)- பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கம் பதவி இழக்குமானால் ----மற்றும் தற்போது அனைத்து வாக்குப்பதிவு மதிப்பீடுகளும் அந்த வழியைத்தான் சுட்டிக்காட்டுகின்றன---- அதனால் நாடாளுமன்றத்தின் மேல்சபையில் அரசியல் சக்திகளிடையே ஒரு பெரிய மாற்றம் உருவாகும், தேசிய அரசாங்கம் முயற்சிகள் எதையும் மேற்கொள்வதற்கு இடம் இருக்காது. அத்தகையதொரு அபிவிருத்தி, Schleswig-Holstein மாநிலத்தில் அண்மையில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி சந்தித்த தோல்விகளை தொடர்ந்து நடக்குமானால், 2006-ல் நடைபெறவிருக்கும் தேசிய தேர்தல்களில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக்கட்சி கூட்டணிக்கு தேசிய அளவில் முற்றுப்புள்ளியாக அமைந்திருக்கும். பதவிக்கு வந்து ஆறரை ஆண்டுகளுக்கு பின்னர் அரசாங்கம் தற்போது வாழ்வதற்கு போராடிக்கொண்டிருக்கிறது.

பல ஜேர்மன் தொழிலாளர்களுக்கு, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வாக்களிப்பது ஒரு நம்பிக்கையோடு சம்மந்தப்பட்டது, அது என்னவென்றால், ஒரு ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் ஏதாவதொரு வகையில் உழைக்கும் மக்களது நலன்களை முன்னிறுத்துவதற்கு அழுத்தங்களை கொடுக்க முடியும், அல்லது செல்வாக்கை செலுத்தமுடியும் என்ற நம்பிக்கையில்தான். அண்மை ஆண்டுகளின் அனுபவம் அது இயலாது என்பதை தெளிவுபடுத்துகிறது.

பேர்லினிலும், மாநில தலைநகரான Düsseldorf இலும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கூட்டணிகள் கொண்டுவந்த தீவிரமான சமூக வெட்டுக்கள் பொதுமக்களது சக்திவாய்ந்த எதிர்ப்பை சந்தித்தன. அதன் ஒரு விளைவாக, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி ஒன்றன்பின் ஒன்றாக மாநில தேர்தல்களில் பலத்த அடி வாங்கியது. ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற நேரத்தில், கூட்டாட்சி அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) அல்லது ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி நிர்வாக குழுவை சார்ந்த ஒரு பேச்சாளர் தொலைக்காட்சி கமராக்கள் முன்தோன்றி இந்தத் தேர்தல் முடிவு எந்தவழியிலும், அரசாங்கத்தின் செயல்பாட்டை பாதிக்காது என்பதாகும்.

சென்ற ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கூட்டணி சமூகக் கொள்க்ைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதற்கு தெருக்களில் அணிவகுத்து வந்தபோது இப்படி ''தெரு கண்டனங்களால்'' தங்கள் போக்கு மாறாது என்று அரசாங்க பேச்சாளர்கள் அறிவித்தனர். ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து நீரோடைபோல், தொடர்ந்து பதவி விலகல் நடைபெற்ற நேரத்தில் கூட ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியானது, கட்சி தலைமையின் நிலைநோக்கை மாற்ற முடியவில்லை. அதற்கு எதிராகவே நடைபெற்றது! சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வாதிடுபவர்கள் கட்சியிலிருந்து விலகிவிடுவார்களானால், 2010 செயல்திட்டம் என்றழைக்கப்படுவதையும் Hartz IV சட்டங்களையும் அவற்றால் அமுல்படுத்தப்பட்ட வெட்டுக்களையும் எளிதாக நிறைவேற்றிவிட முடியுமென்று கட்சி செயற்குழுவில் நம்புகின்றவர்கள் அவர்களை எந்தவகையிலும் முக்கியத்துவமற்ற தட்டினர் அல்ல என்று கருதுகிறது.

சமூக ஜனநாயகக் கட்சி முற்றிலுமாக அடிமட்டத்திலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டது மற்றும் அதன்மூலம் மிகப்பெரும்பாலான மக்களை அரசியலில் முடிவு எடுக்கும் எந்தப் பங்களிப்பிலிருந்தும் விலக்கிவிட்டது. தேர்தல்கள் எந்தவிதமான முக்கியத்துவம் இல்லாத சாதாரண வழக்கமான நடவடிக்கையாகிவிட்டது, எந்தக்கட்சி என்றாலும் அதே விளைவுகள்தான் ஏற்படும் என்ற நிலை தோன்றியுள்ளது.

ரைன் மற்றும் ரூகரில் சமூக ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பு

வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா அளவிற்கு, வேறு எந்த ஜேர்மன் மாநிலத்திலும், தொழிலாள வர்க்கத்திற்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இருப்பது போன்ற நெருக்கமான உறவு, ஆழமாக வேரூன்றி நிற்கவில்லை. "இன்றைய தினம் யார் 60 வயதை நெருங்கிக்கொண்டிருந்தாலும், அவர்கள் ரைனுக்கும், வெஸருக்கும் இடையில் தாங்கள் விரும்புகிற எவருக்கும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கலாம் ஆனால் தேர்தல் முடிவு எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்------ அது மாநிலத்தை சமூக ஜனநாயகம் ஆள வேண்டும் என்பதுதான்." என்று சிலவாரங்களுக்கு முன்னர் (Westdeutsche Allgemeine Zeitung -WAZ) எழுதியது.

ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக, மாநில தலைநகர் Düsseldorf இல் சமூக ஜனநாயகக் கட்சி பிரதமர் பதவியை வகித்து வருகிறது. 12 ஆண்டுகள் Heinz Kuhn கீழும் அதற்கு பின்னர், 20 ஆண்டுகள் Johannes Rau கீழும் அவர் பின்னர், மத்திய கூட்டாட்சி ஜனாதிபதியாக ஆனார்; அதற்கு பின்னர் நான்கு ஆண்டுகள் வொல்ப்காங் கிளமண்ட்டின் கீழும் (அவர் தற்போது மத்திய கூட்டாட்சி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பணியாற்றி வருகிறார்); மற்றும் அதற்கு பின்னர் 2002 இளவேனிற்காலத்தில் Peer Steinbrück பணியாற்றி வருகிறார். "இங்கு அல்லாமல் வேறு எங்கே சமூக ஜனநாயகக் கட்சி தன்னை மதிப்பீடு செய்ய முடியும்?" என்று WAZ கேட்டது, அது தனது சொந்தமான நெருக்கமான உறவுகளை சமூக ஜனநாயகக் கட்சியோடு வைத்திருக்கிறது.

போருக்கு பிந்திய காலத்தில் வடக்கு ரைன் வெஸட்பாலியாவில் சமூக ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பு 1966ல் மாநில அரசாங்கத்தில் அது முதலில் பதவிக்கு வருவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. போர் முடிந்தவுடன் போர்க்குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்ட நிலக்கரி மற்றும் எஃகு தொழிலதிபர்களான Krupp von Bohlen மற்றும் Halbach, சிறைக்கு அனுப்பப்பட்டபோது, தொழிலாளர்கள் உற்பத்தியில் மறுசீரமைப்பு செய்தது. "நிலக்கரி சுரங்கங்கள் மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும்!" என்று பேரணிகள் நடத்தினர். அதற்கு பின்னர் இது ''சமூகமயமாக்கல் இயக்கம்'' என்றழைக்கப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சி கம்யூனிச தொழிலாளர் குழுக்களின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதில் தனது முயற்சிகளை ஒருநிலைப்படுத்தியது.

1920களின் இறுதியிலும் 1930-களிலும் சோவியத் ஒன்றியத்தில் தனது நிலைநாட்டப்பட்டுவிட்ட ஒரு கொடூரமான ஆட்சி மூலம் மாஸ்கோ விசாரணைகளில் ஒரு தலைமுறை மார்க்சிஸ்டுக்கள் முழுவதையுமே கொன்று குவித்ததன் மூலமும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் புரிந்த குற்றங்கள் தொடர்பாக பரவலாக நிலவிய வெறுப்பை சமூக ஜனநாயகக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியின் முதலாவது தலைவரான Kurt Schumacher கம்யூனிஸ்டுகளை ''சிகப்பு வண்ணம் பூசப்பட்ட பாசிஸ்டுகள்'' என்று வர்ணித்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த (SBZ), பிராந்தியத்தில் ஸ்ராலினிஸ்டுகளது நடவடிக்கைகளையும், பின்னர் ஜேர்மன் ஜனநாயக குடியரசிலும் தனது பிரச்சாரத்தில் இதனை பயன்படுத்திக்கொண்டார்.

1953 ஜூன் 17ல் கிழக்கு பேர்லினில் தொழிலாளர்களின் புரட்சியை சோவியத் டாங்கிகள் நசுக்கியதை தொடர்ந்து மற்றும் 1956ல் நடைபெற்ற ஹங்கேரிய எழுச்சிக்கு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டது - ஆக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு தொழிற்சங்கங்களிலும், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களிலும் ஒரு பெரும்பான்மை கிடைத்தது. 20ம் நூற்றாண்டின் முதல் பாதியைப்போன்று இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி நெருக்கடி சூழ்நிலைகளில் முதலாளித்துவ ஆட்சியை நிலைநாட்டுவதிலும், ஸ்திரப்படுத்துவதிலும் ஒரு முக்கிய பங்களிப்பு செய்தது. இதை தங்களது பிரதான நோக்கமாக கொண்டுதான், 1960களிலும் 1970களிலும் சீர்திருத்தங்களில் ஈடுபட்டது.

இது வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் சிறப்பாக தெளிவாயிற்று. 1950களின் இறுதியில் மொத்த தொழிலாளர்களில் மூன்றில் ஒருபகுதியினர் நிலக்கரி மற்றும் எஃகு தொழில்களில் பணியாற்றினர். மூன்று தசாப்தங்களுக்கு பின்னர், 1980களின் இறுதியில் இந்த தொழில்களில் இந்த பிராந்தியத்தில் 4 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர்.

1950களின் இறுதியில் உள்நாட்டு நிலக்கரிக்கு பதிலாக மலிவான மூலப்பொருட்கள், எண்ணெய், அல்லது மலிவான இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பயன்படுத்தப்பட்டபோது, வடக்கு ரைன் வெஸட்பாலியாவில் சுரங்கத் தொழில் தனது முன்னணி நிலைப்பாட்டை தொடர்ந்து இழந்து கொண்டே வந்தது. 1957க்கும் 1967க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே மொத்தம் 141 நிலக்கரி சுரங்கங்களில் 51 மூடப்பட்டது. மொத்த தொழிலாளர்கள் 3,00,000 பேருக்கு மேல் இருந்தனர், அவர்களது எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டது, உற்பத்தி 20 சதவீதமாக குறைக்கப்பட்டது.

1960களின் மத்தியில், பொதுமானியங்களால் உற்பத்தியை நிலைநாட்ட முடியாத நிலையில் அந்த நேரத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி ''நிலக்கரி 'மறு ஒழுங்கமைப்பு கொள்கைக்காக'' கிளர்ச்சி செய்தது. 1964 டிசம்பரில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றிவந்த Heinz Kühn நாடாளுமன்ற சர்வக்கட்சி நிலக்கரிக்குழுவை அமைக்க வேண்டும் என்று முன்மொழிவு செய்தார். பெரிய கட்சிகளின் பிரதிநிதிகள் மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் பெருவர்த்தக நிறுவனங்கள் கூட்டாக அந்த தொழிலை மறுசீரமைப்பதற்காக முன்மாதிரியை கூட்டாக உருவாக்கின. அவர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த மற்றும் கண்டனப் பேரணிகள் நடத்திக்கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களுக்கு எதிராக இந்தக் கொள்கையை கடைபிடித்தனர்.

1966 இறுதியில் "பொது நாடாளுமன்ற நிலக்கரிக்குழு" மேற்கொண்ட முடிவுகளுக்கு எதிராக நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்கள் வன்முறை மோதல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது, 90 சதவீத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென வாக்களித்தனர், ஆனால் தொழிற்சங்கத்தலைவர்கள் அது தொடங்குவதற்கு முன்னரே எந்த நடவடிக்கையையும் இரத்து செய்தனர், மற்றும் ஒரு சொற்பமான சமரசத்திற்கு உடன்பட்டனர். ஆத்திரமடைந்த சுரங்கத் தொழிலாளர்கள் தங்களது பதில் நடவடிக்கையாக தொழிற்சங்க மத்திய அலுவலகத்தை மட்டுமின்றி மாநில நாடாளுமன்ற கட்டிடத்தையும் பிடித்துக்கொண்டனர். நெருக்குதலின் காரணமாக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மாநில அரசை தன்கையில் எடுத்துக்கொண்டது, மானியங்கள் மூலமாகவும், இதர துணை நடவடிக்கைகள் மூலமும், எந்த ஒரு சுரங்கத் தொழிலாளியும் அனாதையாக விடப்படமாட்டார் என்று ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி உறுதியளித்தது.

"பெரிய கூட்டணி" என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இணைந்த கூட்டு அமைக்கப்பட்ட பின்னர் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் மத்திய பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட Karl Schiller நியமித்த, "தீவிரமான நடவடிக்கை", "பொது நாடாளுமன்ற நிலக்கரி குழுவிற்கு" முன்னோடியாக அமைந்தது.

1968 கடைசியில் Ruhr நிலக்கரி பின்னர் Ruhr நிலக்கரி AG மற்றும் RAG அமைக்கப்பட்ட பின்னர் தொழில் முகவர்கள், அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அமைப்பு ரீதியிலான ஒத்துழைப்பு நீடித்தது. அந்த நேரத்தில் ஒரு புதிய தொழில் முயற்சியாக 25 நிலக்கரி சுரங்க தொழிலதிபர்கள் இணைந்து செயல்பட்டனர். 80 சதவீதத்திற்கு மேற்பட்ட ஜேர்மனியின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், 52 சுரங்கங்களை 2 டசினுக்கு மேற்பட்ட எரிக்கும் தொழிற்சாலைகளையும் அது அமைத்தது.

புதிய தொழிற்துறை திட்டங்களை தீவிரமாக ஆதரித்ததன் மூலம் Kuhn தலைமையிலுள்ள சமூக ஜனநாயக அரசாங்கம் உழைக்கும் மக்களை தனது கட்டுப்பாட்டின் கீழும் செல்வாக்கிற்கு உள்ளேயும் கட்டுப்படுத்த முயன்றது. 1962ல் Bochum நகரில் அதற்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் இருந்த பகுதியில் ஒரு புதிய ஓப்பல் கார் தொழிற்சாலை திறக்கப்பட்டது, இந்த மூலோபாயத்தின் ஒரு ஒளிமிக்க உதாரணமாக கருதப்பட்டது.

அதே நேரத்தில் 1960களின் கடைசியில் எழுந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டனப் பேரணியிலிருந்து ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி திட்டமிட்டே தொழிலாள வர்க்கத்தை தனிமைப்படுத்த முயன்றது. ஒரு சர்வதேச இயக்கத்தின் ஓர் அங்கமாக மாணவர்களும், இளைஞர்களும் தெருக்களில் கண்டனப்பேரணிகளை நடத்தினர், அவர்கள் ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் நிலவுகின்ற மோசமான நிலைகளுக்கு எதிராகவும், மத்திய Chancellor Kurt George Kiesinger-ன் கடந்தகால நாஜி தொடர்புகளுக்கு எதிராகவும் வியட்நாம் போர் மற்றும் 1968ல் சோவியத் டாங்கிகள் Prague மீது படையெடுத்ததற்கு எதிராகவும் கண்டனப் பேரணிகளை நடத்தினர்.

1969 செப்டம்பரில் தொழிற்சங்கத்தின் விருப்பத்திற்கு மாறாக Dortmurd, Essen மற்றும் Duisburg நகரங்களில் எஃகு தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் இறங்கினர், மற்றும் அவர்கள் ஒரு கணிசமான அளவிற்கு ஊதிய உயர்வை பெற்றனர், மாநில அரசாங்கம் கலவரமடைந்தது, இதற்கு பதிலளிக்கின்ற வகையில் ''Ruhr மேம்பாட்டு திட்டம்'' ஒன்றை மாநில அரசு அறிவித்தது. தீவிரவாத கண்டனப் போக்கிலிருந்து இளைஞர்களை முடிந்தவரை விரைவாக திசை திருப்பும் நோக்கத்தில் விரைவான மற்றும் தகுந்த நிதியளிக்கப்பட்ட கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு அது வகை செய்தது.

1970லிருந்து Kuhn மந்திரி சபையில் அறிவியல் அமைச்சராக பணியாற்றிவந்த Johannes Rau கட்டளையின்கீழ் 1970 ஆகஸ்டிலிருந்து Stegen Wuppertal, Munster, Hagen, Eassen, Lemgo, Cologne, Dortmund, Aachen, Bielefeld, Bochum, Patterborn, Dusseldorg, Duisburg மற்றும் "Krefeld ஆகிய நகரங்களில் உயர்கல்வி வசதிகள் உருவாக்கப்பட்டன. இன்றைய தினம் Duisburg ற்கும், Dortmund விற்கும் இடையில் மட்டுமே 14 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன, வடக்கு Rhine - West Phalia மாநிலம் முழுவதிலும் 53 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

1969ல் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தேசிய அரசாங்கத்தை கைப்பற்றுகின்ற அளவில் வெற்றியும் பெற்றது. Willy Brandt (SPD) சிறிய கூட்டணி அரசான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) அடங்கிய கூட்டணியுடன் அதிபராக ஆக பொறுப்பேற்றார். ஓராண்டிற்கு பின்னர் Bavaria வின் பிரதமர் Franz Joseph Strauas (CSU) ஒரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்மூலம் Brandt அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றார். தங்களது வாழ்க்கை தரத்தையும் பணியாற்றும் நிலைகளை மேம்படுத்தும் என்றும் நம்பிய ஒரு அரசாங்கத்தை தற்காத்து நிற்பதற்கு Ruhr மாவட்ட தொழிலாளர்கள் ஒரு முக்கிய பங்களிப்பு செய்தனர். அவர்கள் ஒரு அரசியல் பொது வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்தினர், எதிர்க்கட்சிகள் பின்வாங்கின, மற்றும் தொழிலாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியை ஒரு அரசியல் வெற்றி என்று கொண்டாடினர்.

ஆனால் தோற்றங்கள் மோசடியானவை, சமூக சலுக்ைகள் மற்றும் துணிச்சலான அதிக ஜனநாயக அதிகாரங்களை செயல்படுத்துவது என்ற தீவிரவாத வாய்வீச்சுக்களுக்கு இடையில் Brandt அரசாங்கம் ஆட்சியின் அதிகாரங்களை பெருக்கிக்கொண்டது, பொது வேலைவாய்ப்பிலிருந்து இடதுசாரிகளுக்கு தடைவிதிக்கும் ''தீவிர கட்டளை''(radical decree) என்றழைக்கப்படும் நடவடிக்கை மூலம் எல்லாவகையான சோசலிச எதிர்க் கட்சிகளையும் அது ஒடுக்கியது, அதைத் தொடர்ந்து சமூக மோதல்கள் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் Brandt ராஜினாமா செய்தார், அரசியல் அதிகாரத்தை Helmut Schmidt (SPD) இடம் ஒப்படைத்தார், அவர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவோடு தீவிரமான செலவினங்களை வெட்டும் திட்டத்தை மேற்கொண்டார்.

சர்வதேச பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததும், தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் இடைவிடாது அதிகரித்தன. இந்த வகையில் நீண்டகால கிளர்ச்சிகளுக்கு பின்னர் மற்றும் நிலக்கரி சுரங்கத்தை மூடுவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விதிவிலக்கல்ல, இவற்றிற்கு பின்னால் 1975ல் ''நூற்றாண்டு ஒப்பந்தம்'' உருவாயிற்று, இதற்கு நிதியளித்தது பெருவர்த்தக நிறுவனங்கள் அல்ல, மின்சார கட்டணத்திற்கு ஒரு துணைக்கட்டணமாக நிலக்கரி மீதான ''எரிபொருள் கட்டணம் விதிக்கப்பட்டது'' அதை ஒவ்வொருவரும் செலுத்தினர்.

பூகோளமயமாக்கலின் தாக்கங்கள்

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி போக்கும் தொழிற்சங்கங்களின் அரசியல் வங்குரோத்தும் ஆழமான புறநிலை காரணங்களைக் கொண்டது. உற்பத்தி பூகோள மயமாக்கப்பட்டதால் சர்வதேச நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் குறைந்த ஊதியங்களை மலிவான மூலப்பொருட்கள் மற்றும் சுரண்டலுக்கான சிறந்த சூழ்நிலைகளை தேடி அலைந்து கொண்டிருந்ததால் அவை, தேசிய அரசு நலன்புரி கொள்கைகளின் அடிப்படையை சிதைத்துவிட்டன.

எனவே, அண்மையில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் Franz Müntefering, முதலாளித்துவத்தின் விமர்சனங்களை உண்மையிலேயே நியாயம் என்று நம்புகிறவர்கள் மற்றும் உண்மையிலேயே அது ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு புத்துயிர் கொடுக்கும் வாய்ப்புகளை தருவது என்று நம்புபவர்கள் ஒன்று எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாத அடிமுட்டாளாக இருக்க வேண்டும், அல்லது அரசியல் மோசடி பேர்வழியாக இருக்க வேண்டும். Müntefering அதிக சமூக பொறுப்புணர்ச்சியோடு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று பாராட்டுக்களை தெரிவித்திருப்பதும், ''நாட்டை பீடித்துள்ள வெட்டுக்கிளிகள்'' என்று சர்வதேச நிறுவனங்களையும் நிதி நிர்வாகிகளையும் ஒப்பிட்டிருப்பது, ஷ்ரோடர் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கான முகமூடியாக மட்டுமே பயன்படுகிறது.

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் குறைகாண்கின்ற செயற்குழு உறுப்பினர்கள் பொதுமக்களது எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் இரட்டை தந்திரோபாயம் ஒன்றை மேம்படுத்துவது, விருப்பத்தக்கது என்று ஆலோசனை கூறியுள்ளனர். Muntaferrung சமூக பொறுப்புணர்விற்கு அழைப்பு விடுக்கின்ற நேரத்தில் அதிபர் ஷ்ரோடர் பெருவர்த்தக நிறுவனங்களுக்கு மேலும் வரி வெட்டுக்களை அறிவிக்கிறளார். இந்த இரட்டை தந்திரோபாயம் தொடர்பாக அண்மையில் விமர்சனம் வெளியிட்டுள்ள Süddeutsche Zeitung "நாட்டையே ஒட்டுமொத்தமாக அடியோடு சுரண்டிக்கொண்டிருக்கின்ற வெட்டுக்கிளிகள் பற்றி Franz Müntefering புலம்புகின்ற நேரத்தில் ஷ்ரோடர் அவர்களுக்கு கூடுதல் தீவனத்தை வழங்கிக்கொண்டிருப்பது, சந்தேகத்திற்கு இடமின்றி வியப்பளிப்பதாக உள்ளது" என்று கூறியுள்ளது.

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் Oskar Lafontaine நடத்தி வருகின்ற பிரச்சாரங்களும் மற்றும் ''தேர்தல் மாற்றீடு'' (WASG) என்றழைக்கப்படுவதும் அதே நோக்கத்திற்கு தான் பயன்படுகின்றன. 1970களின் சமூக சீர்திருத்த வாதத்திற்கு மீண்டும் சென்றுவிட இயலும் என்று கூறுவது தவறான வழிகாட்டுதல் அடிப்படையிலும் அரசியலில் பிற்போக்குத்தன்மை கொண்டதுமாகும். அத்தகைய மாயைகள் தொழிலாளர்களை ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி வட்டாரத்திற்குள் வைத்திருக்கவும், ஒரு சோசலிச கண்ணோட்டத்திலிருந்து அவர்களை திசை திருப்புவதற்கும்தான் பயன்படுகிறது.

மற்ற நாடுகளுக்கு உற்பத்தியை மாற்றுவது என்பது ஒரு வெறும் அச்சுறுத்தல் அல்ல ஆனால் அது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளது என்பதை ஓப்பல் போன்ற தொழிற்சாலைகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒருவர் பார்த்தாலே போதும். அது ஒரு இடத்தை, ஒரு தொழிலாளர் குழுவை மற்றொரு இடத்து தொழிலாளர் குழுவிற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. பெருவர்த்தக நிறுவனங்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தை பின்பற்றுகின்றன, அதே நேரத்தில் அவர்களது WASG போன்ற தொங்குதசைகள் உட்பட ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி உம் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேசிய மூலோபாயம் உருவாகாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன.

தொழிலாள வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான பணி, இந்த தேசிய அடிப்படையில் இயங்கும் அதிகாரத்துவங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வது என்றாலும் கட்சியிலிருந்து பதவிவிலகல்கள் போன்ற அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே போதுமானவையல்ல, அதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். தொழிலாள வர்க்கம் அரசியல் அடிப்படையில் தங்களது கண்ணோட்டத்தை மீண்டும் திருத்திக்கொள்ள வேண்டும், இதற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவை. உலகின் எந்தப்பகுதியிலும் இன்றைய தினம் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள எந்த ஒரு பிரச்சனையும் தேசிய கட்டுக்கோப்பிற்குள் தீர்த்துவிட முடியாது.

நாங்கள் சோசலிச சமத்துவக் கட்சி - திட்டவட்டமாக ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் எந்த முயற்சிகளையும் மற்றும் சமூக ஜனநாயகத்திற்கான திட்டங்களையும் புறக்கணிக்கிறோம். ஒரு அரசியல் சவத்திற்கு உயிர்கொடுக்கும் ஆதரவு நடவடிக்கைகளை எடுப்பது பிரச்சனையல்ல, ஆனால், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக்கட்சிக் கொள்கைகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏற்படுத்திய விளைவுகளை முழுமையாக ஆராய வேண்டும், அத்தகையதொரு அரசியல் மதிப்பீட்டின் மூலம்தான் சமூக ஜனநாயகம் மற்றும் பசுமைகளின் கொள்கை வழி செயல் திட்டங்களை ஆராய முடியும் அப்போதுதான் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீன இயக்கத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட முடியும்.

தொழிலாள வர்க்கம் உற்பத்தியில் பூகோளமயமாக்கல் மற்றும் அத்தோடு தொடர்புடைய அனைத்து சமூக பயன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் மீது நடந்துவரும் தாக்குதல்களை ஒரு புதிய சமுதாயம் பற்றிய தனது சொந்தக்கருத்தால் மட்டுமே எதிர்த்து நிற்க முடியும், அந்தக்கருத்து தனிமனித அகங்காரத்தால் எழுந்ததல்ல, இலாப நோக்கு மற்றும் நலன்புரி வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டதல்ல மாறாக ஐக்கியம் மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. அது ஒரு அரசியல் முன்னோக்கை கையில் எடுத்தாக வேண்டும், அது மக்களது தேவைகளை பெருவர்த்தக நிறுவனங்களின் இலாப நலன்களுக்கு மேலாக கருதுவதாக அமைய வேண்டும். இதற்கு, ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டமும் ஒரு புதிய புரட்சிகர கட்சியை அமைப்பதும் அவசியமாகும்.

தொழில்நுட்பத்தின் அபிவிருத்தியாலும், அதிகரித்துள்ள உற்பத்தியாலும் திறந்துவிடப்பட்டுள்ள பாரிய சமூக சாத்தியப்பாடுகளுக்கும் அவை இன்றைய தினம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கும் இடையேயுள்ள முரண்பாடு இப்போதுள்ளதுபோல் வரலாற்றில் மிக அபூர்வமாகத்தான் காணப்படுகிறது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமுதாயத்தின் அறிவுபூர்வ வளர்ச்சி நலன்களுக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக ஆளும் செல்வந்தத்தட்டினர் உற்பத்தி சக்திகளில் நிலவும் தனியார் உடைமையை தங்களை பணக்காரர்கள் ஆக்கிக் கொள்வதற்கும் சமூகத்தின் இதர பிரிவுகளை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தி வருகின்றன.

இதற்கு முன்னர் காணப்பட்டதைவிட இன்றைய தினம் கார்ல் மார்க்ஸ் கூறியதுபோல, உற்பத்தி கருவிகள் தனியார் உடைமையாக இருப்பது உற்பத்தி சக்திகளின் சமூகத்தன்மைக்கு ஏற்புடையதல்ல என்பது இன்றைய தினம் மிகப்பொருத்தமாக உள்ளது. தொழிலாளர்கள் ஒரு சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு சோசலிச அடிப்படையை கொண்டுதான் பூகோள நிறுவனங்களை சமூக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்ராலினிஸ்ட்டுகள் சிதைத்த நேரத்தில், மார்க்சிச முன்னோக்கான சோசலிசத்தை லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்பு 1922களின் மத்தியில் ஆரம்பத்திலிருந்து பாதுகாத்து நின்று, நான்காம் அகிலத்தை நிறுவியது, இன்று சோசலிச சமத்துவக் கட்சி (PSG) அத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி 1997ல் நிறுவப்பட்டது மற்றும் அதற்கு முந்திய சோசலிச தொழிலாளர் கழகத்தை போன்று இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவாக இயங்கி வருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ராலினிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்ததும், தற்போது ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியல் வங்குரோத்தும், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் ஒரு வரலாற்று அடிப்படையிலான உறுதிப்படுத்தலாக அமைந்திருக்கிறது. மகத்தான சோசலிச மற்றும் ஜனநாயக பாரம்பரியங்கள் அடங்கிய தொழிலாளர் இயக்கத்தின் தன்மையை நோக்கி தொழிலாள வர்க்கம் திரும்பவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகையதொரு அரசியல் மற்றும் அமைப்பு ரீதியிலான மறு தயாரிப்பில் தொழிலாள வர்க்கத்திற்குள் மிக முக்கியமான கருவியாக உலக சோசலிச வலைத் தளம் உள்ளது. இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது.

Top of page