World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The closure of MG Rover and the need for an international perspective

MG Rover நிறுவனம் மூடப்படுதலும், சர்வதேச முன்னோக்கிற்கான தேவையும்

பகுதி 3

Statement by the Socialist Equality Party (Britain)
28 April 2005

Back to screen version

இது ஒரு மூன்று கட்டுரைத் தொடரின் கடைசிப் பகுதியாகும்.

ஷங்காய் வாகன தொழிற்துறை கழகம் (Shanghai Automotive Industry Corporation-SAIC) MG Rover நிறுவனத்தை வாங்குவதில் இருந்து வெளியேறிச்சென்றமை, எந்த அளவிற்குப் பிரிட்டிஷ் நிறுவனம் நடத்தப்பட முடியாமற் போயிற்று என்பதையும், அதன் நிர்வாக இயக்குனர்களால் அழிக்கப்பட்டு விட்டது என்பதையும் நிரூபணம் செய்துவிட்டது.

SAIC தன்னுடைய உரிமையிலேயே கார்களை உற்பத்தி செய்யும் வகையில், ரோவரின் தொழில்நுட்பத்தை அடையப் பெரும் ஆர்வம் காட்டியது. இதற்காகத்தான் அது 67 மில்லியன் பவுண்டுகளை MG ரோவருக்கு அக்டோபர் 2004ல் கொடுத்தது. Economist பத்திரிகையின் கருத்தின்படி, ரோவர் 25, ரோவர் 75 மற்றும் ரோவர் 45 கார் மாதிரிகளுக்கான அறிவுஜீவித சொத்து உரிமையை SAIC க்கு கொடுத்தது; அதில் புதிய மாதிரிகள் வளர்ச்சிக்கான வடிவமைப்பு முறைகள் மற்றும் ரோவர் முத்திரையை சீனாவில் பயன்படுத்தும் உரிமையும் அடங்கியிருந்தது என்பதாகும். SAIC இதைத் தவிர, K தர எஞ்சின்கள் தயார் செய்வதற்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்யும் உரிமையையும் பெற்றிருந்தது.

ஆனால், ரோவர் மிக ஆழ்ந்த நிதி நெருக்கடியில் உள்ளது என்பதை அறிந்தவுடன், சான்ஸ்லர் ஆப் எக்செக்கர் (நிதி மந்திரி) கோர்டோன் பிரெளன் கொடுத்த அழுத்தத்தையும் மீறி வெளியேறியது; கடந்த பெப்ரவரி சீனாவில் இருந்தபோது நிதி மந்திரியும், பிரதம மந்திரி டோனி பிளேயரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சிறிய அளவிலான உதவிகள் வழங்கப்படும், சில நல்ல செயற்பாடுகளும் வழங்கப்படும் என்று உறுதி மொழி கொடுத்தும் கூட இந்நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு, ரோவரின் நஷ்டங்கள் 250 மில்லியன் பவுண்டுகளை எட்டிவிட்டிருந்தன. இதன் நிர்வாகப் பொறுப்பாளர்களான PriceWaterhouse Coopers (PWC), எந்தச் சொத்தும் இனி நிறுவனத்திற்கு இல்லை என்பதைத் தெளிவிபடுத்திவிட்டனர். ஆல்கெமியின் நிர்வாகப் பங்களாளியான ஜோன் மெளல்டன், PWC சுற்றறிக்கைக்கு விட்ட ஆவணங்களை பற்றிக் குறிப்பிட்டதாவது: "அதைப் படிக்க எனக்கு இரண்டு நிமிஷங்கள்தான் ஆயிற்று. வரும் திட்டம் பற்றி அது MG முத்திரை அளிப்பதாகக் கூறினாலும் அது ரோவர் பெயரைப் பற்றி எந்தக் குறிப்பையும் கொடுக்கவில்லை. இந்த அளவு இருக்கும் எந்த நிறுவனத்தில் இருந்தும் இத்தகைய முறையை நான் பார்த்ததில்லை. அதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏதுமில்லை."

கிட்டத்தட்ட 500 மில்லியன் இருப்புத் தொகை மற்றும் சொத்துக்களுக்குச் சரியான கணக்கு காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஓய்வூதியத் நிதி முதலீடு மூலோபாயம் பற்றிய வினாக்களும் எழுப்பப்பட்டன; BMW போனிக்ஸ்க்கு 2001 இல் மாற்றியிருந்தபோது அது கூடுதல் தொகையைக் காட்டியிருந்தது----2003இல் 67 மில்லியன் பவுண்டுகள் குறைவாகப் பணம் இருப்பது பற்றியும் கேள்விகள் எழுந்தன.

ரோவருடைய வீழ்ச்சி

ரோவர், மே, 5 பொதுத் தேர்தலுக்கு முன்னரே சரிந்துவிடும் என்பது தெளிவானவுடன், தொழிற்கட்சி அரசாங்கம் முதலில் வாக்காளர்களிடம் இருந்து மறைக்கும் முயற்சியை எதிர் கொண்டது. ஆனால் இத்தகயை கட்டுக்கதை உதவாது என்று தெரிந்தவுடன், அதன் அரசியல் விளைவைக் குறைக்கும் வகையில் ஈடுபடலாயிற்று.

SAIC க்கு நெருக்கமான அமைப்புக்களின் ஆவணச் சான்றுகள், அறிக்கைகள் ஆகியவை இந்த அரசாங்கம் பல மாதங்களுக்கு முன்பே சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதனை அறிந்திருந்தது என்றும், பொது மக்கள் ஏற்கட்டும் என்பதற்காக வேறுவிதமாகக் கூறிவந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

மார்ச் 29, வணிகத் தொழிற்துறை அமைச்சுக்கு (DTI) எழுதியுள்ள கடிதத்தின்படி, SAIC தான் எந்த நிதி அபாய பொறுப்பையும் எடுத்துக் கொள்ளத்தயாராக இல்லை என்பதை தெளிவாக்கியிருந்தது. நிறுவனத்தில் ஓய்வுதிய நிதியில் பற்றாக்குறை இல்லாமல் இருக்கவேண்டும் மற்றும் உறுதிபடுத்தப்பட்ட வங்கி நிதி வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டன; இல்லாவிடில் அரசாங்கம் குறிப்பிட்ட ஆண்டுகள் இதன் திவாலற்ற தன்மைக்கு உறுதிசெய்யவேண்டும் என்று கோரப்பட்டது.

இதே போன்ற தகவல்தான் ஏப்ரல் 4, 5 இல் எழுதப்பட்ட கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கைகளை அருகில் இருந்து கவனித்து வந்த ஆதார அமைப்பு ஒன்று மேற்கோளிட்டது: "ஏற்கத் தயாராக 'இல்லை' என்ற சொல்லின் ஒரு பகுதி தெரியவந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?"

SAICயை பொறுத்தவரையில் திவாலுகும் நிலையில் உள்ளது அல்லது ஏற்கனவே திவாலாகிவிட்டது என்பதை அது அறிந்திருந்ததால், நிறுவனத்தை வாங்க மறுத்துவிட்டது. SAIC நிறுனத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி ஞாயிறன்று ஸ்காட்லாந்திற்கு தெரியவந்த விஷயம், நிறுவன அதிகாரிகள், வணிகச் செயலர் பாட்ரிசியா ஹிவிட்டிடம் மூன்று மாதங்களுக்கு முன்னரே தங்களுக்குக் கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லை என்று கூறிவிட்டாராம். "உலகில் எந்த நிறுவனமும் ஒரு சில வாரங்களுக்குள் திவாலாகி போக இருக்கும் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் பங்காளியாகச் சேராது" என்று அது கூறிவிட்டது.

ஏப்ரல் 17 அன்று Observer, SAIC இற்கு நெருக்கமான ஆதாரத்தைக் குறிப்பிட்டு, இந்த நிறுவனம் Ernst & Young என்ற கணக்காளர்களிடம் இருந்து மார்ச் மாதம் ஓர் அறிக்கையைப் பெற்றது; அதன்படி MG Rover மிக உண்மையில் திவாலாகி விட்டது என்பது தெளிவு. "இக்குழுவுடன் வங்கிக் கடன் எதுவும் இல்லை என்பது மிகத் "தீமையான செயல்" என்று அந்த ஆதாரம் தெரிவித்திருந்தது."

இது இரண்டு வினாக்களை எழுப்புகிறது: முதலில், ரோவர் இயக்குனர்கள் முன்னரே சொத்துக்களின் மதிப்பு, நிறுவனக் கடன்கள் இவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருந்தனர் என்றும், அதையொட்டி MG Rover திவாலாகிவிட்டது என்பதை அறிந்திருந்தனர் என்றால் சட்டவிரோதமாக விற்பனைக்கு முயன்றனர் என்ற பொருள் ஆகிறது.

இரண்டாவதாக, அது உண்மையானால்------SAIC அந்த சந்தேகத்தைத்தான் கணக்கு வழக்குகளை பார்க்கும் போது கொண்டது, அரசாங்கத்திற்கும் அது பற்றித் தெரியும்; அல்லது அதற்குக் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது

ஆனால், நிறுவனத்தின் இறுதி மணி நேரம் வரைகூட, அரசாங்கம் SAIC உடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற கூற்றைத்தான் வெளியிட்டு வந்தது. சீனாவிற்கு மந்திரிகள் அனுப்பப்பட்டு, வணிகத் தொழிற்துறை ரோவரின் ஒரு வார ஊதியமான 6.5 மில்லியன் பவுன்களை கொடுப்பதற்கும் முன்வந்து, இன்னும் கூடுதலாகக் கூட உதவி வரலாம் என்று கூறியது. பிளேயரே கூட உதவித் தொகையாக 100 மில்லியன் பவுண்டுகளைக் கொடுப்பதற்கான திட்டத்தை கடைசி நேர முயற்சியாக எப்படியும் SAIC உடன் ஒப்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்ற வகையில் வலியுறுத்திக் கூறியிருந்தார். அதுவும் ஆட்சி உயரலுவலர்கள், மந்திரிகள் ஆகியோர் இது ஒரு தவறான மூலோபாயம் மட்டும் இன்று வரிசெலுத்துபவரின் பணத்தைச் சட்டவிரோதமாகச் செயல்படுத்துவதற்கு ஒப்பாகும் என்று ஆலோசனை கூறியிருந்தபோதும் பிளேயர் அவ்வாறு கூறினார்.

இத்தகைய தொழிற் கட்சியின் திமிர்த்தனப் போக்குத்தான், போக்குவரத்து, பொது தொழிலாளர்கள் சங்கத்திலும் (TGWU) காணப்பட்டது; அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு அது மேடைகளில் MG ரோவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சீன ஒப்பந்தம்தான் என்று அது கூறிவந்தது.

TGWU வைப் பொறுத்தவரையில் அதற்கு ரோவரில் என்ன நடக்கிறது என்பது நன்றாகத் தெரியும். நவம்பர் 2003 இலேயே, நிர்வாகத்துடன் பேச்சு வார்தைகளை நடத்தி உயர் அலுவலர்களுக்குக் கொடுக்கப்படும் மிக அதிக ஊதியத்தைப் பற்றிய அக்கறைகளைக் காட்ட முற்பட்டது; மேலும் 73 மில்லியன் பவுண்டுகள் ஓய்வூதியப் பற்றாக் குறை இருப்பதையும், 13 மில்லியன் பவுண்டுகள் நம்பிகை நிதி இயக்குனர்களுக்காக நிறுவப்பட்டது பற்றியும் அது பேச விரும்பியிருந்தது.

2004 மார்ச் மாதம், இரண்டு சுதந்திரமான இயக்குனர்கள் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்தது. ஏனெனில் அப்பொழுது குழுவின் இயக்குனர்கள் தங்களுக்காக மில்லியன் கணக்கில் ஓய்வூதிய நிதிக்கு பணம் ஒதுக்கியதில், "அறநெறிக்கு ஏற்கத்தகாத நடவடிக்கைகளை" செய்துள்ளனர் என்றும் அது தெரிவித்தது. TGWU பொது செயலாளர் Tony Woodley BBC இற்கு ''நிர்வாகிகளின் அண்மைக்கால அறநெறிக்கு ஒவ்வாத நடவடிக்கைகளை தவிர அவர்கள் ''வேறுபட்ட சூழ்நிலையில் ஒரு மிகவும் நல்ல வேலை'' செய்துள்ளார்கள் என கூறியிருந்தார்.

மற்றொரு புறத்தில், அதிகாரத்துவம் தன்னால் இயன்ற வரை , அரசியல் அளவில் அரசாங்கத்திற்குச் சங்கடம் ஏற்படுத்தக் கூடிய எந்த எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நிறுவனம் மூடப்படுவதற்கு வகை செய்தது. இதுவும் அதிகாரத்துவத்திற்கு ஒரு பெரும் கவலையைக் கொடுத்ததாகும்; அதுவும் பொதுத் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் இது முக்கியமாகும்; சொல்லப் போனால் முதலாளித்துவத்திற்கே இது பெரும் கவலையைக் கொடுத்தது. Independent பத்திரிகை, ஆலை மூடலுக்கு ஏதேனும் எதிர்ப்புப் புறப்பட்டால், அதைச் சமாளிக்கும் வகையில் கலகமடக்கும் போலீஸ் படை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

SAIC பகிரங்கமாகவும், திட்டவட்டமாகவும் ரோவர் ஒரு செயலாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இல்லை என்பதால் ஒப்பந்தத்தில் ஈடுபாடு கொள்ளவில்லை என்று அறிவித்த பின்னர்தான் அரசாங்கம் தன் இழிநிலைப் போலித்தனத்தை முடித்துக் கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டது.

இகழ்வுணர்வு, வியப்பு என்று போலித்தனத்தைத் தொடர்ந்து காட்டிய அரசாங்கம்,விமர்சனத்தை தன்னிடம் இருந்து போனிக்ஸ் இயக்குனர்கள் பால் திசைதிருப்ப முற்பட்டது. பினான்சியல் ரிப்போர்டிங் மீளாய்வு பட்டியல் எனப்படும் நிதி அறிக்கை ஆய்வுக்குழுவினால், கணக்கு வழக்குகள் சரியாகத் தயாரிக்கப்பட்டனவா என்பதைப்பற்றி ஒரு விசாரணை நடத்தப்படும் என்று அது அறிவித்தது. இந்தக் குறைந்த நிலை ஆய்வுகூட நிதி ஒழுங்கீனங்களைப் பற்றிய விசாரணையாக இருக்காது, இதவும் தேர்தலுக்கு முன்பு முற்றுப்பெறாததாக இருக்கும்.

ரோவருடைய இறப்பு என்பது வெறும் திறமையற்ற நிர்வாகம் அல்லது சொத்துத் தகர்ப்பு என்பதால் ஏற்பட்டது எனக் கூறுவதற்கில்லை. மிகக் கடுமையான பூகோளசந்தை முறைக்குள், நிறுவனம் இயக்கமுடியாத தன்மைக்குள் தள்ளப்பட்டது. போனிக்ஸ் நிறுவனர்கள் வெறுமே நிறுவனத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்; பிளேயர் அரசாங்கம் இதைக் காணாமல் இருந்து விட்டது.

Towers மற்றும் அவருடைய சக இயக்குனர்கள் நிறுவனச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாதது எதையும் செய்தனர் என்பது இதுவரையில் எதுவும் எடுத்துக்காட்டப்படாதபோதிலும், பல விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

மூலதன நிலைப்பாட்டியிலிருந்து, போனிக்ஸ் செய்தது சட்டபூர்வமானதா இல்லையா என்பது முக்கிய பிரச்சினை அல்ல. ஆனால், தொழிலாளர் வர்க்கத்திற்கு இது ஒரு இரண்டாந்தர, கிட்டத்தட்ட முக்கியத்துவம் அற்ற வினாவாகும். சட்டபூர்வமோ, இல்லையோ, MG ரோவரில் நடந்தது, தன்னலம் உடைய முதலாளித்துவக் குழு ஒன்று, பல தலைமுறைகள் வரிப்பணம் மற்றும் தொழிலாளர்களின் உழைப்பு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட சமூகச் சொத்துக்களைக் கொள்ளயடித்தது என்பதைவிடக் குறைவாக ஏதும் கூறுவதற்கு இல்லை. "முதலாளித்துவத்தில் ஏற்கவியலாத முகம்" என்று இல்லாமல், இதுதான் முதலாளித்துவத்தின் உண்மையான முகமாகப் அதிகரித்தமுறையில் வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள்தாம் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன, அதிலும் MG ஐயும் விடப் பெரிய நிறுவனங்களிலும், மிக உயர்ந்த ஊதியம் பெறும் நிதி, சட்ட ஆலோசகர்கள் ஏராளமானவர்களின் உதவி, ஊக்கத்தோடு இத்தகைய செயல்கள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டிஷ் பாராளுமன்றக் கீ்ழ்ப்பிரிவின் வணிகம், தொழில்துறை, சிறப்புக் குழுவின் தலைவர் பீட்டர் பீலே, போனிக்ஸ் இயக்குனர்களை ஏமாற்றுத் தந்திரவித்தை செய்வதாகக் குறைகூறிய போதிலும், நான்கு இயக்குனர்களில் ஒருவர் தங்கள் நிலையைக் காக்கும் வகையில், "இது முற்றிலும் நடைமுறையில், புத்தகத்தில் கூறப்பட்டுள்ளபடி நிறுவனங்களை நடத்தும் முறையில்தான் நடைபெற்றுள்ளது" என்று கூறினார்.

இத்தகைய செயற்பாட்டு நெறி மிகப்பரந்த வகையில் உள்ளது என்பது எந்த அளவிற்கு இன்றைய பெருநிறுவன முதலாளிகள் உற்பத்தி சக்தியை வளர்ப்பதற்குத் திறன் அற்று உள்ளனர் என்பதை மட்டும் இல்லாமல் அதைப்பற்றிய அக்கறைகூட காட்டாமல் இருக்கின்றனர் என்பதின் வெளிப்பாடு ஆகும். உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவத்தின் முக்கிய நோக்கம் அவர்களுடைய சொந்தச் செல்வக் கொழிப்பு உடனடியாக மிகப் பெரிய அளவில் ஊதியங்கள், பங்குப் பத்திரங்கள் பெறுதல், ஓய்வுதிய நலன்களைத் தங்களுக்குப் பெற்றுக் கொள்ளுதல் இன்னும் வருமானத்தைப் பெருகிக் கொள்ள சட்டபூர்வ, சட்டவிரோதச் செயல்கள் எவை உண்டோ அவற்றைச் செய்தல், இவை தங்களுடைய நிறுவனம் என்றில்லாமல், இலாப முறையின் நீண்டகால நலன்களைப் பற்றியும் கவலைப்படாமல் விடும் அளவிற்கு சென்றுவிட்டனர்.

தொழிலாளர்களுடைய நலன்களும், அவர்களை வேலைக்கு அமர்த்தி இருப்பவர்களுடைய நலன்கள் முற்றிலும் எதிரிடையானவை என்பதை மிகத் தெளிவாக இது சித்தரித்துக் காட்டுகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பங்கு இந்த அடிப்படைப் பிரச்சினையை மூடி மறைக்க வேண்டும் என்று இருப்பதுதான், தொழிலாளர் வர்க்கம் இதற்குக் கொடுத்துள்ள ஒரு பெரும் விலையாகும்.

ஒரு சர்வதேச முன்னோக்கிற்கான தேவை

MG ரோவருடைய வீழ்ச்சி என்பது தொழிற்கட்சியின் அதிகாரத்துவம் தேசியவாத முன்னோக்கில் முற்றிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் உள்ளது என்பதையே நிரூபிக்கிறது. பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை "கடைசியாக இருக்கும் பிரிட்டஷ் உடைமையான" மிகப் பெரிய கார் உற்பத்திக் கூடத்தை காப்பாற்ற அழைப்புக் கொடுத்துள்ளனர். அவர்கள் பிரிட்டிஷ் பெருநிறுவன முதலாளிகளின் திறமையிலும், விருப்பத்திலும், அரசாங்க, வங்கி ஆதரவு பெற்றவர்களான அவர்கள் தொழிலாள வர்க்கத்தை வருங்காலத்திலும் பாதுகாக்கும் வகையில் நிறுவனத்தை நடத்துவர் என்று எதிர்பார்த்தனர். அத்தகைய கண்ணோட்டம் ஆபத்தான நிலைப்பாட்டில் கொண்டுவிடும் என்பது நன்கு அம்பலமாகியுள்ளது.

அப்படியிருந்தும், இப்பொழுதும் கூட பல இடதுகுழுக்கள் பிரிட்டனில், MG Rover மூடப்பட்டதற்கு, அது மீண்டும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பதிலாக முன்வைப்பது தொடர்பாக ஒத்தகூக்குரல் எழுப்புகின்றன.

ரெஸ்பக்ட் யூனிடி கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மே 5 பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) கூறுகிறது: "இந்த நெருக்கடிக்குத் தீர்வு மிக எளிதாகும்---- மீண்டும் ரோவரைத் தேசியமயமாக்குக." ரெஸ்பெக்டின் வேட்பாளராக Birmingham Sparkbrook, Small Heath நிறுத்தப்பட்டுள்ள Salma Yaqoob, கூறுகிறார்: "ரோவர் ஆண்டு ஒன்றுக்கு 180,000க்கு கார்கள் விற்பனை செய்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும். இப்பொழுது அது 110,000 கார்களை விற்பனை செய்கிறது. புதிய தொழிற்கட்சி ரோவரின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, பீனிக்ஸ் நால்வர் என்ற மில்லியனர்களிடம் கொடுக்காமல் தானே சில முதலீட்டை செய்திருந்தால், இந்நிறுவனம் இன்னும் தொடர்ந்து கார்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும்."

இத்தகைய SWP இன் "எளிய" தீர்வு என்பது பார்க்கும்போதே எத்தனை ஏளனத்திற்குரிய முன்னோக்கு என்பது தெரியவரும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்றதை கண்டபின்னர், தேசிய மயமாக்குவதற்கு ஒன்றும் இல்லை என்பது தெரியவரும். மேலும் பிளேயர் எதையும் மீண்டும் தேசியமயமாக்குவார் என்று அழுத்தம் கொடுக்கப்படலாம் என்பது தொழிற் கட்சி அத்தகைய நடவடிக்கை கொடுக்வேண்டும் என்பதற்காகக் கூறப்படுவது; உலகச் சந்தையில் நிலைத்து நிற்க முடியாத நிறுவனம் மில்லியன் கணக்கில் பொதுமக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படவேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.

மிக உடனடியான நிலையில், MG ரோவர் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக செய்யப்பட வேண்டிய சரியான கோரிக்கை, அவர்களுக்கு முழுமையான மறுபயிற்சி கொடுத்து இது தொடர்புடைய தொழில்துறையில் இப்பொழுது வாங்கும் ஊதியத்திற்கு சமமாகக் கொடுத்தல் (விருப்பம் உடையவருக்கு) என்பதாகும்; மற்றவர்களுக்கு கெளரவமாக இழப்புத்தொகைகள் கொடுக்கப்பட்டு அனைவருக்கும் ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும்; பெருநிறுவங்களில் இருந்து வரிகளைக் கூட்டி இவ்வாறு செய்ய வேண்டும். MG ரோவருடைய கணக்குகள் தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதிகளினதும் மற்றும் கணக்காளர்களினதும் பார்வைக்கு திறந்துவைக்கப்படவேண்டும்.

இதையும் விட முக்கியமாக செய்யவேண்டியது, மறுதேசியமயமாக்கபடல் என்ற கோரிக்கை தொழிற்கட்சிக்கும், தொழிற்சங்கத்திற்கும் எதிரான ஒரு அரசியல் கிளர்ச்சியுடனான மாற்றாக கொள்ளப்பட்டு, தொழிலாளர் இயக்கத்தை மறு ஒழுங்குபடுத்த போராடுவதன் மூலமாக அது இன்னும் கூடுதலான முறையில் கார்த் தொழிற்துறை முழுவதும் இழப்புக்களில் வரவுள்ள வேலை இழப்புக்களுக்கு எதிராகப் போரிடத் தயாரித்தல் ஆகும்.

இக்கோரிக்கை Birmingham Northfield தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியுள்ள சோசலிஸ்ட் கட்சியினால் வைக்கப்பட்டுள்ள வெளிப்படையாக தேசியமயமாக்கும் கோரிக்கையை தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கத்திற்கு தாழ்ந்து நடக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் மிகத் தெளிவாக்கப்பட்டுள்ளது. அது கூறுகிறது "சோசலிச மாற்றீடு வேட்பாளர் தொழிற்சாலை பிரதேசம் மற்றும் சொத்துக்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு கோரிக்கை எழுப்புதல் ஒருவிதத்தில் பிளேயரின்மீது அழுத்தும் கொடுத்தல் போலாகும்; ஆனால் தொழிற்சங்கங்களும் இப்பொழுதே நடவடிக்கை எடுக்கவேண்டும்". போனிக்ஸ் உடைய கணக்குகள் "தொழிற்சங்கங்களினால் பார்வையிடப் படவேண்டும்" என்று கூறுவது ஏதோ TGWU மற்றும் Amicus உம் தொழிலாளர் நலன்களை காக்கும் என்பது போல் இக்கருத்து கூறப்படுகிறது.

தொழிற்சங்க அதிகாரத்துவமும், அதன் பாதுகாவலர்களும் குறுகியவாதத்தை ஊக்குவித்தது மற்றும் பிரிட்டனில் கார் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள உண்மையான நிலையை மறைக்கிறது; அதன் விதி தவிர்க்க முடியாமல், உலகில் மற்ற பகுதிகளில் உள்ள, தங்கள் சக தொழிலாளர்களுடன்தான் பிணைந்துள்ளது.

MG ரோவரின் வீழ்ச்சி பிரிட்டிஷ் கார் தொழிலின் முடிவு என்ற கூற்றை பிரதிபலித்தாலும், பிரிட்டன் ஐரோப்பிய கார் உற்பத்தி நாடுகளில் முக்கியமான ஒன்றாக உள்ளது; அநேகமாக ஒவ்வொரு முக்கிய கார் தொழிற்சாலைகளும் இங்கு பிரசன்னமாக உள்ளனர். தொழிற்துறை சந்தைப் போக்கின்படி, 2002ம் ஆண்டு 210,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கார் உற்பத்தியில் ஈடுபட்டு 1.6 மில்லியன் கார்களையும் 1.8 மில்லியன் வணிகமுறை வாகனங்களையும் உலக நிறுவனங்களுக்காக பிரிட்டனில் அமைந்துள்ள கூடங்களில் தயாரித்தன. இதற்கும் மேலாக இன்னும் 1.2 மில்லியன் மக்கள், மொத்த விற்பனை, சில்லரை விற்பனை, வாகனங்கள் பழுது பார்த்தல் என்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

MG ரோவர் மறு தேசியமாக்கப்படல் என்பது, பிரிட்டன் முழுவதும் ஆபத்திற்குட்பட்டுள்ள, பல நூறாயிரக்கணக்கான வேலைகளைப் பாதுகாக்க பயன்படாது; உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தொழில்களையும் பாதுகாக்காது.

நிலைமை மிகவும் ஆபத்தான தன்மையைத்தான் கொண்டுள்ளது. பிரிட்டனுக்குள், பிரான்சுக்கு சொந்தமான 5,000 தொழிலாளர்களை நியமித்துள்ள Coventryக்கு அருகில் உள்ள Ryton இருக்கும் Peugeot ஆலை உற்பத்தியை குறைத்து தன்னுடைய எஞ்சியுள்ள பழைய கார் மாதிரி உற்பத்தியையும் குறைக்கவுள்ளது. உலகின் கார் தொழில் மொத்தம் 80 மில்லியன் கார்கள், மற்ற பாரம்குறைந்த வாகனங்கள் தயாரிக்கும் ஆற்றலைப் படைத்தவை; ஆனால் இப்பொழுது இவை 60 மில்லியன்தான் உற்பத்தி செய்து வருகின்றன; இன்னும் கூடுதல் திறன் இருந்து குறைவு உற்பத்தி என்பது வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்படுகிறது. இதையொட்டி வெட்டுக்களும், மூடல்களும் பெரிய வகையில் நிலவுகின்றன.

உலகின் முக்கிய கார் உற்பத்தி நாடான அமெரிக்காவில், ஜெனரல் மோட்டார்ஸ் இப்பொழுது 1 பில்லியன் டாலர் இழப்பை இந்த ஆண்டு முதல் கால் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் ஐரோப்பிய பிரிவிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது; வட அமெரிக்கச் சந்தையில் குறைந்த விற்பனைதான் இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது; அங்குதான் இதன் வருவாயில் 60 சதவிகிதம் கிடைக்கிறது; இதன் விளைவாக இப்பொழுது நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் மதிப்புத் தரம் (Credit ratings agencies) கூறும் அமைப்புகள் இதன் கடன் மதிப்பை உபயோகமற்ற பத்திரங்கள் நிலைக்குத் தள்ளியுள்ளன; இதையொட்டி GM இன் கடனுக்கான செலவுகள் அதிகமாகும்; அபாய வரம்பின் விளிம்பிற்கு அது தள்ளப்படக் கூடும்.

உலகில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க நிறுவனமான போர்ட், அதன் அதிக இலாபம் தரும் மாதிரிகளான SUV களுக்கு தேவை குறைவு என்பதை அடுத்து பிரச்சினையை எதிர்கொள்ளுகிறது. இது ஏற்கனவே தொடர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது; அதற்கு பாகங்களை விநியோகிப்போர் திவால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரியுள்ளனர்.

இதே நிலை ஒவ்வொரு நாட்டிலும் தொடர்கிறது; பெரு நிறுவனங்கள் மட்டும்தான் உலகரீதியாக இயங்கு தன்மையை கொண்டுள்ளன என தொழிற்சங்க அதிகாரத்துவம் உறுதிப்படுத்தும்வரை தொழிலாள வர்க்கம் தனது நலன்களை பாதுகாக்க முடியாது. தொழிலாளர்கள் பழைய, தேசியரீதியான தொழிற்சங்க அமைப்பின் போராட்டங்களில் இருந்து வெளியே வந்து தங்களை ஒரு சர்வதேச வர்க்கமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இன்றியமையாத முன் தேவை ஒரு சோசலிச, சர்வதேச கட்சியை உருவாக்குவதாகும். பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி இதனைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

முற்றும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved