ஐரோப்பா
:
பிரான்ஸ்
The French referendum: Sarkozy leads turn to right in
ruling party
பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு : ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி
தலைமைதாங்குகிறார்
By Antoine Lerougete
21 May 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஆளும் கன்சர்வேடிவ் கட்சியான
UMP (Union for a Popular Movement)
இன் தலைமையிடத்திற்கு ஜனாதிபதி ஜாக் சிராக்கின் போட்டியாளரும், 2007 ஜனாதிபதித் தேர்தலில்
வேட்பாளருக்கு போட்டியாளருமான, நிக்கோலா சார்கோசி மே 29ம் தேதியன்று நடக்கவிருக்கும் கருத்துவாக்கடுப்பில்,
ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் தன்னுடைய ஜனாதிபதியின் அணுகுமுறைக்கு பகிரங்கமாக
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிராக்கின் அரசியல் பார்வைக்கு இது இவருடைய இரண்டாம் பெரிய சவலாகும்:
2004ம் ஆண்டுக் கடைசியில் ஒரு UMP
இன் தேசியக்குழு, ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேர்க்கப்படுவது பற்றிய பிரச்சினையில் சிராக்கிற்கு எதிராக
சார்கோசிக்குத்தான் ஆதரவு கொடுத்திருந்தது; அப்பொழுது 90.8 சதவிகிதப் பெரும்பான்மை துருக்கிக்கு உறுப்புநாடு
அந்தஸ்து கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருந்தது.
UMP தலைவர் பதவிப் பொறுப்பு
எடுத்துக் கொள்ளுவதற்கு முன்பு உள்நாட்டுத்துறை மற்றும் நிதி மந்திரியாக இருந்த சார்கோசி, கருத்தெடுப்புப்
பிரச்சாரத்தின் மையமாக சுதந்திர சந்தை முறைக்கு சிறிதும் தடைக்கட்டு இன்றி ஆதரவு கொடுப்பதற்கு
மறுப்பதற்காக சிராக்கை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளார். ஏப்ரல் 13ம் தேதி
மொன்பெலியே இல் கருத்துவாக்கெடுப்பில் "வேண்டும்" வாக்கு போடுவதற்கு ஆதரவாகப் பேசிய சார்கோசி,
மிகத் தீவிர வலதுசாரித்தன்மையை நினைவுறுத்தும் மொழியைப் பயன்படுத்தி, ஜனாதிபதியையும் அவருடைய ஆதரவாளர்களையும்
(Mad Cow)
விசர்பிடித்த பசு நோயின் மாதிரியிலான விசர் நோய் பிடித்த செம்மறி
ஆட்டை ஒத்த நிலையில் உள்ளனர் என்று ஒப்பிட்டுப் பேசினார்.
Le Figaro ( மே7ம் தேதிப்
பதிப்பு) -வில் வந்துள்ள கட்டுரை ஒன்று, "இது பிரான்சின் சமூக முன்மாதிரியை" காக்கும் வகையில் இருக்கும் என்பதால்,
முன்மொழியப்பட்டுள்ள ஐரோப்பிய அரசியலமைப்பை காத்திடல் வேண்டும் என்று சிராக் கூறுதலை எதிர்க்கும்
UMP
நபர்களை பற்றி குறிப்புக்கள் கொடுத்துள்ளது.
"சார்கோசிக்கு நெருக்கமாக இருந்தாலும், இல்லாவிடினும், "வேண்டும்" வாக்கிற்கு
பிரச்சாரம் செய்யும் பல பிரதிநிதிகளும் தங்களை பொருளாதார தாராளவாத கொள்கைக்கு எதிராக
கருத்துக்கள் கூறும் ஜாக் சிராக்கின் நிலைப்பாட்டில் இருந்து தங்களை பெரிதும் ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளனர்.
ஏப்ரல் 14ம் தேதி நடந்த விவாதத்தில், அவர் அரசியலமைப்பு "ஒரு தாராளவாதமற்ற தர்க்கத்துடன் இயைந்து"
இருப்பதாக களிப்புடன் கூறிப்பிட்டார். "வேண்டாம்" வாக்குப் போடலாம் என்ற கருத்துடைய, பெரும்பாலும்
தொழிலாள வர்க்கம் மற்றும் இடதை சார்ந்த வாக்காளர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கும் வகையில் மூத்த
மந்திரிகளாலும் திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. 'இந்த ஒப்பந்தம் எப்படிப் பார்த்தாலும், தாராளவாதம்
அற்றது' என்று வேலை, தொழிலாளர், சமூக இணக்கம் என்ற துறையில் மந்திரியான
Jean-Louis Borloo
குறிப்பிட்டார். வரவுசெலவுத் திட்ட மந்திரியும் அரசின் செய்தி தொடர்பாளருமான
Jean-Francois Cope
அக்கருத்தையே வலியுறுத்தும் வகையில், 'இந்த அரசியலமைப்பு தன்னகத்தே ஒரு பிரெஞ்சு சமூக மாதிரியைக்
கொண்டுள்ளது' என்று கூறினார்.
சுதந்திர சந்தை முறையை ஆதரிப்பது பற்றி, அதையொட்டி பிரான்சின் பொதுநல
அரசுமுறை அகற்றப்படுவது பற்றி, அச்சமும் பெருங்கவலையையும் சிராக்கின் முகாம் கொண்டுள்ளதாக மே 6ம்
தேதி சார்கோசி குற்றம் சாட்டினார். பகிரங்க விவாதத்தில் பண்பான சொற்களை பேசுவதையும் அவர்
கைவிட்டுவிட்டார். இக்கட்டுரை மேலும் கூறுகிறது: "தன்னுடைய பிரச்சாரத்தில், சிராக்கின் வழியில் இருந்து தான்
தெளிவாக ஒதுங்கி இருப்பதைக் காட்டிக் கொள்ளுவதற்கு நிக்கோலா சார்கோசி மிகவும் கவனத்துடன் உள்ளார்.
'நம்முடைய சமூக முன்மாதிரி எனக் கூறப்படுவது மற்றையவர்களைவிட இருமடங்கு அதிகமான வேலையற்றவர்களை
கொள்ளுவதுபோலும். அதிருஷ்டவசமாக, எள்ளி நகையாடக்கூடிய நிலையில் இருப்பது என்பது உறுதியான அழிவு நிலை
அல்ல. சுதந்திர சந்தை முறையை அதிகமாக பயன்படுத்துதல் பிரான்சை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என நான்
கருதவில்லை. மிகத் தீவீர தாராளவாத பொருளாதாரத்தை பற்றி செம்மறியாடுகளின் இந்த நடுக்கத்தை நான்
ஏற்கவில்லை ... தாராளவாத பொருளாதாரம் என்ற கருத்தியல் உலகத்தில் எவரையும் மாய்த்துவிடவில்லை.' "
மூத்த UMP
உறுப்பினரும், பாரிஸ் தொகுதியின் பிரதிநிதியும், பாராளுமன்ற இராணுவக் குழுவின் தலைவரும், அமெரிக்காவுடன்
போட்டியிடக்கூடிய இராணுவ வலிமை பெற்றிருக்கவேண்டும் என்று வற்புறுத்தும்
Pierre Lellouche,
அரசியலமைப்பிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்: "அரசியலமைப்பினால்
ஒவ்வொருவிதத்திலும் பிரான்சிற்கு நன்மைதான். பிரெஞ்சு பொருளாதாரம் நவீனப்படுத்தப்பட்டமை பிரஸ்ஸல்ஸினால்
திணிக்கப்பட்டது. ஐரோப்பாதான் சீர்திருத்தத்திற்கு ஊக்கம் தந்துள்ளது. ...நம்முடைய நாடு மாறுதலை
எதிர்க்கும் ஒரு போக்கை கொண்டுள்ளது; மாறுவதற்கு நிர்ப்பந்தம் இல்லாதவற்றிலிருந்து வரும் அழுத்தத்தை
மட்டுமே எதிர்க்கின்றன."
Drome தொகுதியில் இருக்கும்
UMP
பிரதிநிதியான Herve Mariton
உம், தடையற்ற சந்தையை வெளிப்படையாகப் பெரும் ஆதரவிற்குட்படுத்தாதற்காக சிராக் முகாமை கடிந்து
கொள்ளுகிறார்: "ஐரோப்பாவில் இருந்து வந்துள்ள சுதந்திர சந்தை சீர்திருத்தங்கள் மக்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்துமோ என்ற காரணத்திற்காக நல்ல முறையில் வலதினால் இசைவு கொடுக்கப்படவில்லை" என்று அவர்
கூறினார்.
முன்பு சற்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த, பிரெஞ்சு அரசியலின் தீவிர சுதந்திர சந்தை
ஆதரவளரான Alain Kadelin
இப்பொழுது UMP
யின் தலைவர் இருக்கும் அதே அலைநீளத்திலேயே தானும் இருப்பதை கண்டுள்ளார். "பொருளாதார
தாராளவாதம், அதை ஒட்டிய மாறுதல்களை பற்றிய நனவை உயர்த்தவேண்டிய நிலையில் இருக்க வேண்டியபொழுது,
பூகோளமயமாக்கலின் மீது தீவிர இடதின் பகட்டாரவார பார்வையை ஏற்றதற்காக" சிராக்கை கடும்
கண்டனத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
Le Figaro வின் கட்டுரையாளர்
ஒருவர் நிலைமையை இவ்வாறு சுருக்கமாகக் கூறியுள்ளார்: "பிரான்சின் சமூக மாதிரியை" உயர்த்தும் பெருமை
உடையது எனும் அடிப்படையில் சிராக்கின் "வேண்டும்" வாக்கு உள்ளது; அதே நேரத்தில் சார்கோசியின்
"வேண்டும்" வாக்கு, பிரான்சை சீர்திருத்துவதற்கான நெம்புகோலாக ஐரோப்பாவை பார்க்கிறார்."
தொழிலாள வர்க்கத்தின் விழைவுகளுக்கு எதிராக உள்ள வாக்கெடுப்பை சூழ்ந்துள்ள
தன்மையில், தூண்டிவிடும் வகையில் வலதுசாரியினர் இறுக்கமாக இருப்பதற்கான வாதத்தின் நிலைப்பாடும்
Francois Fillon
ஆல் குரல்கொடுக்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஆட்சிப் பணி மந்திரி என்ற
முறையில் பிய்யோன்தான் கடும் எதிர்ப்பிற்கிடையே ஒய்வூதிய உரிமைகளை மிக அரக்கத்தனமான முறையில்
குறைத்தவர் ஆவார்; இப்பொழுது பள்ளி மாணவர்களிலிருந்து பரந்த, உறுதியான எதிர்ப்புக்கு எதிராக மக்கள்
வெறுக்கும் மாறுதல்களை கல்வி முறையில் சுமத்தி வருபவரும் இவரே. "வாக்குப் பெட்டியில் இழந்ததை தெருக்களில்
பெறலாம் என்ற கருத்துடைய சிறுபான்மையினரிடம் போலித்தனமான சமூக முறை உரையாடலை காட்டிலும், நமக்கு
உறுதியான அரசியல்வாதிகள் தேவை. நிலைமை கடுமையாக மாறும்போது, நாம் இருக்கையின் பெல்ட்டை இறுக்கிக்
கொண்டு முன்னேற வேண்டும்" என்று அவர் கூறினார்.
இவ்வகையில் சிராக்கிற்கும், சார்கோசிக்கும்
UMP க்குள்ளேயே
வெடித்துள்ள நிலையானது மார்கரெட் தாட்சர், எட்வர்ட் ஹீத்துடன் முறித்துக் கொண்டதையும், "ஒரே நாடு"
டோரிக்கள் என்ற கருத்தில் அவ்வம்மையார் வெளிப்படையாக தொழிலாள வர்க்கத்தின்மீது போர் தொடுக்க தயாராக
இருந்ததையும்தான் நினைவிற்குக் கொண்டு வருகிறது. சமரசப் போக்கு வேண்டும் என்ற டோரிக்களை "குளிரில் உறைபவர்கள்"
என்று அவர் வெறுத்தார்: ஆனால் அது கூட சார்கோசி இப்பொழுது குறிப்பிட்டுள்ள மந்தத்தனம் நிரம்பிய
செம்மறியாட்டுக் கூட்டம் என்ற கற்பனைக்கு நிகராக இழிவைத் தரவில்லை என்றாலும், பொதுவாக
ஏளனத்தன்மையைத்தான் கொண்டிருந்தது.
இந்த குறிப்பிடத்தக்க மாற்றம்,
UMP இன் சமூக
கோலிச முகமூடியை கிழித்தெறிந்து காட்டுவது, செய்தி ஊடகத்தில் அதிகமாக கவனத்திற்கு உட்படவும் இல்லை; சிராக்
அல்லது அவருடைய பரிவாரத்தில் இருந்து வெளிப்படையான கண்டனத்தையும் காணவில்லை. வலதுசாரி
Le Figaro
தான் இதைப் பற்றிய தகவலை, அதன் மே 13 தலையங்கத்தின் மூலம் அளித்துள்ளது: "இப்பொழுதில் இருந்து
விஷயங்கள் தெளிவாக உள்ளன. தனிநபர்களின் பூசல்களுக்கு பின்னே இரண்டு மாதிரிகளின் பூசல்கள் வெளிப்படையாக
தெரிகின்றன. ஒருமித்த உணர்விற்கான கட்டாயத்திற்கு எதிராக மாற்றத்திற்கான தர்க்கம். தாராளவாத
பொருளாதாரம் கோலிசத்திற்கு எதிராக. சிராக்கிற்கு எதிராக சார்கோசி அல்லது வில்பனுக்கு எதிராக (உள்துறை
மந்திரியான Dominique de Villepin)
என்பது. இந்த இரு மாதிரிகளுக்கிடையே 'போட்டியை காண பிரெஞ்சு மக்கள் விரும்புகின்றனர்' என்று சார்கோசி
குறிப்பிட்டார். தேர்தல் திறமைத் தன்மை என்ற நிலையில் இருந்து எனப்பார்த்தால்கூட, விஷயம் விவாதத்திற்குரியதுதான்.
ஆனால் பிரான்சின் வலதின் கவனத்தை பல ஆண்டுகளாக கொண்டுள்ள இந்த விவாதம் ஏதேனும் ஒரு நாள் முடிவிற்குக்
கொண்டுவரப்பட வேண்டும்."
UMP யில் வெளிப்படையான
நெருக்கடி மிக நுட்பமான முறையில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிராக்கின் தொகுதிக் கோட்டையான
Correze ல் ஒரு
பிரச்சாரக் கூட்டத்தில் மே 17 அன்று ஓரளவு பூசல்களை செப்பனிடும் அவசர முயற்சி மேற்கொள்ளப்பட்டன என்று
கூறவியலும்.
Le Figaro தெரிவிக்கிறது:
"பிரிவ் என்னுமிடத்தில், கிட்டத்தட்ட 1,000 பேர் இருந்த கூட்டத்தில் பேசிய உரை ஒன்றில்
UMP தலைவர்
1975ல் முதன்முதலில் தான் ஜாக் சிராக்கைச் சந்தித்ததில் இருந்து, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்து வரும்
அழுத்தம் தரும் கணங்களைப் பற்றிப் பேசிவிடாமல்,
அவருடைய தனிப்பட்ட தொடர்பை நினைவுகூர்ந்தார். ஆனால்
இக்காலகட்டத்தில், "ஒரே ஒரு நபர் தன்னுடைய நேசக் கரங்களை எனக்கு நீட்டி, எனக்கு மரியாதை
கொடுத்துள்ளார்; அது நீங்கள்தான் அம்மையாரே என்று அவர்
Bernadette Chirac
ஐ (ஜனாதிபதியின் மனைவியாரைப்) பார்த்துக் கூறினார். மேலும், "நிலைமை இனி மாற்றப்படமுடியாத தன்மைக்கு
செல்லவில்லை என்று தடுக்கப்பட்டால், இதற்குக் காரணம் அவற்றின்மீது தன் பார்வையை ஒரு நல்ல தேவதை
செலுத்தியிருந்ததுதான்; அதன் விளைவாகத்தான் சுதந்திரம், மரியாதை இவற்றின் வரம்புகளை அவை
கடந்துவிடவில்லை" என்று அவர் கூறினார்.
தன்னுடைய அரசியல் குடும்பத்தின் "தொடர்ச்சிக்கு" தன்னையே "உறுதிகொடுப்பவர்"
என்றும் அவர் அறிவித்துக் கொண்டார். "ஜாக் சிராக் 2002ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்
வெற்றிபெற்றிருக்காவிட்டால் இந்த அரசியல் குடும்பம் தோன்றியே இருந்திருக்காது என்பதை தான் முழுமையாக
அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்." இது இதுகாறும் நாட்டின் தலவருக்கு கொடுக்கப்பட்டிராத மரியாதையாகும்.
பூகோள சந்தையின் அழுத்தங்கள், பிரான்சின் பெருவணிக அரசியல் பிரதிநிதிகளுக்கு
மிகக் கடினமான முறையில் தங்கள் இலக்கான தொழிலாளர்களின் சமூக உரிமைகள் இழப்பை உலகச் சந்தையில்
போட்டியிடுவதற்காக அகற்றுவதை மூடி மறைத்தல் என்பது பெருகிய முறையில் கடினமாக்கி இருக்கிறது. பிரான்சில்
கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் போக்கும், "வேண்டும்" வாக்கு கேட்டாலும், "வேண்டாம்" வாக்குக்
கேட்டாலும், சிராக்கில் இருந்து தீவிர இடது Ligue
Communiste Revolutionnaire மற்றும்
Lutte Ouvriere
வரை முதலாளித்துவ சொத்துடைமை உறவுகள் ஓர் பூகோளமயமாக்கப்பட்ட உலகில் தக்க வைத்துக் கொண்டு
அதேநேரத்தில் சமூக நலப் பணிகள், வாழ்க்கை தரம் உயர்த்துதல் இவற்றையும் தக்கவைத்துக் கொள்ள முடியும்
என்ற பொய்யில் காலத்தை கடத்துகின்றனர். இவர்கள் இதை "சமூகச் சந்தைப் பொருளாதாரம்" என்று அழைத்து
புதிய தாராளக் கொள்கை என்பது முதலாளித்துவ அமைப்பை சேதப்படாமல் அப்படியே பேணிக்கொள்ளும்
அதேவேளை, முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே நிராகரிக்கப்படக்கூடிய வித்தியாசமான ஒன்று என்று
கூறுகிறன்றனர்.
பிரெஞ்சு வணிகத்தின் முக்கிய பிரிவுகளை பிரதிபலிக்கும் சார்கோசி --- இவருடைய
சகோதரர் Guillaume
தான் இப்பொழுது பெரும் தொழில் தலைவர்களின் முக்கிய சங்கமான
MEDEF (Movement
of French Enterprise பிரெஞ்சு தொழில் முயல்வோரின்
இயக்கம்) ன் தலைமைப் பதவிக்கு முக்கிய போட்டியாளராக உள்ளார். சமூகச் சந்தை, ஒருமித்த கருத்துடைய
அரசியல் இரண்டும் நிலைத்திருக்கக் கூடியவை என்பது போலித் தோற்றம் என அறிவிப்பதற்குப் பொறுமையிழந்தது
போல் சார்கோசி தோன்றுகிறார்; மேலும் தொழிலாள வர்க்கத்தை கடுமையான முறைகளை கையாண்டு வறியவர்களாக்குவதுதான்
இன்றைய நிலைப்பாடு என்றும் கருதுகிறார். UMP
உடன் சமரசம் ஆகிவிட்டாலும், சமூக சந்தைப் பொருளாதாரத்திற்கான அவரின் பகட்டாரவார கூற்றுக்களின் வெளிப்படல்
ஒரு பணி என்பது மட்டுமின்றி, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையும் ஆகும்.
உண்மையில், இனவெறி பக்கத்திற்கு பெருகிய முறையில் திரும்புவது தொழிலாள
வர்க்கத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அதைப் பிரிப்பதற்கும் ஆகும், இது உறுதியாக இவர்களின் செயற்பட்டியலில்
இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பான்மை அந்தஸ்திற்கு முழு விரோதத்தையும் பிரகடனப்படுத்தும்
வகையில் நிலைப்பாட்டை காட்டியிருப்பது பாசிச ஜோன் மேரி லூபென்னுக்கும், தீவிர தேசியக் கத்தோலிக்கரான
Philippe de Villers
க்கும், முன்னாள் பிரதம மந்திரி மற்றும் "வேண்டாம்" வாக்கிற்கு முக்கிய பிரச்சாரகராக இருக்கும்
Laurent Fabius
மற்றும் சர்கோசி என்று அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்கிறது. மூடிய வகையில் இஸ்லாத்திற்கெதிரான தகவல்
தெளிவான முறையில் அனுப்பப்படுகிறது. துருக்கி நுழைவதற்கு எதிர்ப்பாளர்கள் தங்களுடைய வாதத்தில், துருக்கியர்கள்
துருக்கியர்களாக இருப்பதே எதிர்ப்பதற்கு போதுமான காரணம் என்று கூறி வாதம் புரிகின்றனர்.
சரியான தருணத்தில் செயலாற்றும்
Dominique de Villepin
உம் "வேண்டும்" ஆதரவிற்கான பிரச்சாரத்தில் தன்னுடைய அளிப்பாகக் கூறியிருப்பது சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை
அகற்ற சட்டபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இதையொட்டி சட்டபூர்வமாக குடியேறுவோருக்கும்
அனுமதி கிடைப்பது கடினமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
WSWS "வேண்டாம்" வாக்கு,
வாக்கெடுப்பில் போடப்படவேண்டும் என்று கோருகிறது, ஆனால் அது முதலாளித்துவ ஐரோப்பாவை நிராகரித்தலின்
அடிப்படையின் மீதும் கீழிருந்து ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டியமைத்தலின் அடிப்படையின் மீதும்
ஆகும்.
See Also :
பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு
எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது
தோல்வியை தழுவுகிறது
Top of page |