:
ஐரோப்பா :
ரஷ்யா மற்றும் முந்தைய USSR
Bush visit to Georgia increases tensions with Putin government
ஜோர்ஜியாவிற்கான புஷ்ஷின் பயணம் புட்டின் அரசாங்கத்துடன் பதட்டங்களை அதிகரிக்கிறது
By Simon Whelan
18 May 2005
Back to screen
version
மே 10-ம் தேதி டிபிலிசியில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ், தான்
அருகிலுள்ள பகுதியில் இருப்பது போல் உணர்வதாகவும் "உற்சாகமாக நாட்கள் கடக்கப்படுவதை சிந்திப்பதாகவும்" பசப்புரை
செய்தார். ஆனால் ஜோர்ஜிய நாட்டின் தலைநகருக்கு அவரின் வருகை தற்செயலானது அல்ல. சுயதிருப்திப்பட்டுக்
கொண்டிருக்கும் களிப்புக் கிடையில், புஷ்ஷும் ஜோர்ஜிய ஜனாதிபதி மிகாய்ல் சாகேஷ்வில்லியும், ஒரு காலத்தில் சோவியத்
ஒன்றியத்தின் பகுதிகளாக இருந்த எல்லைப் பகுதிகள் மற்றும் காக்கஸஸ் பகுதியின் மீதான மேலாதிக்கத்திற்காக ரஷ்யா
மற்றும் அமெரிக்காவிற்கிடையில் போராட்டத்திற்கான வெடித்தெழுந்து கிளைகளாகப்பரவும் பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர்.
சாகேஷ்வில்லி புஷ்ஷின் வருகை ஒன்றும் "எண்ணைய்க்குழாய் பற்றியோ அல்லது இராணுவ
ஒத்துழைப்பு பற்றியோ" அல்ல என்று பகிரங்கமாக மறுத்துரைத்தார். ஆனால், ரஷ்ய செல்வாக்கை அப்காசியாவிலும்,
தெற்கு ஒசேட்டியாவிலும் எவ்வாறு குறைப்பது என்பது பற்றிய மற்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஜோர்ஜிய படைகள்
தொடர்ந்து நிறுத்திவைக்கப்படுவது பற்றிய பிரச்சினைகளுடன் சேர்ந்து அவைதான் ஐயத்திற்கு இடமின்றி விவாதிக்கப்பட்டன.
பாகு-டிபிலிசி-ஸீகன் எண்ணெய் குழாய்த்திட்டம் மே 25 அன்று திறக்கப்படவுள்ளது. 3.6
பில்லியன் டாலர் குழாய்வழி (Conduit)
எண்ணெய் நிரப்பப்படுவதற்கு மட்டுமே ஐந்து மாதங்கள் பிடிக்கும். இது ஜோர்ஜியாவிற்கும் தெற்கு ஒசெட்டியாவிற்கும்
தகராறுக்கு உட்பட்டுள்ள எல்லைப் பகுதியை ஒட்டியிருப்பதால் தாக்குதலுக்கான ஆபத்தைக் கொண்டுள்ளது. மேலும் தன்
நாட்டின் இராணுவத்தை செம்மைப்படுத்த வாஷிங்டன் கொடுத்துக் கொண்டிருக்கும் மில்லினியம் சேலஞ் பணத்தைப் (Millennium
Challenge money) பற்றி விவாதிப்பதற்கும் சாகேஷ்வில்லி
ஆர்வத்துடன் இருந்திருப்பார்.
ஐரோப்பாவில் வெற்றியடைந்த தினத்தின் நிறைவு விழாவை ஒட்டி மாஸ்கோவில் நடந்த
நிகழ்ச்சிகளில் புஷ் கலந்து கொண்டதற்கு பின்னர் இந்தச் சந்திப்பு நடந்தது, அந்த விழாவில் கலந்து கொள்ள
சாகேஷ்வில்லி மறுத்துவிட்டார். அண்மையில் மாஸ்கோவிற்கும் டிபிலிசியுக்கும் இடையே ரஷ்ய படைகள் ஜோர்ஜிய
நிலப்பகுதியில் உள்ள இரு தளங்களிலிருந்து வெளியேறுவது பற்றிய விவாதங்கள் சமீபத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
மிகக்கணிசமான முறையில் நிதி, இராணுவ உதவி பெறப்பட்ட அளவில், ஜோர்ஜியா
நடைமுறையில் ஒரு வாடிக்கையாளர் அரசாகி விட்டுள்ளது, அதன் மூலம் வாஷிங்டன் தன்னுடைய பொருளாதார, அரசியல்
மற்றும் இராணுவப் பேரவாக்களை யூரேசியாவில் பின்பற்றி வருகிறது.
அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கு வரவேற்பு தருவதற்குப்
பொதுமக்களை வருமாறு வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளன. அவர் வருவதற்குப் பல வாரங்களுக்கு முன்னரே டிபிலிசி
நகர் முழுவதும் புஷ்ஷின் புகைப்பட சுவரொட்டிகள் நிறைந்திருந்தன; எனவே தன்னுடைய 700 பேர் அடங்கிய குழுவுடன்
அவர் தலைநகருக்கு வருகை தந்தது ஒரு காலனித்துவ கட்டுப்பாட்டிற்கு வருகை தந்த தோற்றத்தை கொடுத்தது.
சாகேஷ்வில்லி புஷ்ஷிடம் கூறினார்: "விடுதலைக்கு போராடுபவர் போல உங்களை நாங்கள்
வரவேற்கிறோம்." டிபிலிசிக்கு 500 மைல்கள் தெற்கேதான் ஈராக்கின் தலைநகரான பாக்தாத் உள்ளது; 800
ஜோர்ஜிய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள அந்த இடத்தில், புஷ்ஷிற்கு இத்தகைய உற்சாக வரவேற்பு கிடைக்காது. மற்றொரு
200 ஜோர்ஜிய படைகள் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் பணிபுரிகின்றன. புஷ் "உலகத்தில் சுதந்திரத்தை
ஊக்குவிப்பதற்கான" அவரது அரும்பாடுபடல் என்று கூறப்படுபவதற்காக, ஜோர்ஜிய ஜனாதிபதி புஷ்ஷை, நாட்டின்
ஆதரவாளரான துறவியின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட, புனித ஜோர்ஜின் முதல் விருதைப் பெற்றுக் கொள்ளுபவர் என்று
பெருமைப்படுத்தினார்.
அக்டோபர் 2003-ல் அமெரிக்க ஆதரவுடன் எட்வார்ட் ஷவர்ட்நாட்சே பதவியில் இருந்து
அகற்றப்பட்ட பின்னர், சாகேஷ்வில்லி அதிகாரத்திற்கு வந்தார். தெற்கு காக்கஸ் பகுதியில் கருங்கடலுக்கும் காஸ்பியன்
கடலுக்கும் இடையே மிக முக்கிய மூலோபாய நிலையை ஜோர்ஜியா கொண்டுள்ளது. மாஸ்கோவின் விருப்பிற்கேற்ப
நடக்கும் அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தீவிர ரஷ்ய-எதிர்ப்பு நிறைந்த மற்றும் மேற்கு-நோக்குநிலையுடைய
அரசாங்கத்தை அமைத்தல் என்றும் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட மூலோபாயத்திற்கு இந்த நாடுதான் முதலாவது
உதராணமாக இருந்தது. ஜோர்ஜியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேரவேண்டும் என்று சாகேஷ்வில்லி
அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார், இது மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு எதிராக இழிசொற்களை அள்ளிவீசுவதற்கும் எந்த
வாய்ப்பையும் அவர் தவறவிடுவதில்லை.
புஷ் ஜோர்ஜிய மக்களுக்கு ஆற்றிய உரை வழக்கமான சமாதானம், சுதந்திரம் பற்றிய வெற்றுப்
பேச்சாகத்தான் இருந்தது. "சுதந்திரத்தின் ஒளிவிளக்கு" என்று ஜோர்ஜியாவை அழைத்து, "ரோஜா புரட்சியில்" வெற்றி
கண்டதற்காக சாகேஷ்வில்லியை அவர் பாராட்டினார். ஆனால் அவருடைய உரையில் சிறிதும் மறைக்கப்படாத வகையில்
ரஷ்யாவை பற்றிய அச்சுறுத்தல்கள் ஏராளமாக இருந்தன. "சுதந்திரம் முன்னேறிக்கொண்டிருக்கும் பெரும் வரலாற்றுக்
கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இது கருங்கடலில் இருந்து காஸ்பியன் கடல் வரையிலும், அங்கிருந்து
பாரசீக வளைகுடாவிற்கும் அதற்கும் அப்பாலும் படர்ந்து செல்லும்" என்று புஷ் அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னுடைய அரசாங்கம் பிரிந்து செல்லும் பிராந்தியமான
அப்கஜியா மற்றும் தெற்கு ஒசெட்டியா இவற்றுடன் மோதல் கொண்டிருக்கும் டிபிலிசிக்கு இராணுவ உதவி அளிக்கும் என்பதை
புஷ் மறுத்தார். ஏப்ரல் மாதம் ஜோர்ஜியாவில் அமெரிக்க தூதராக இருக்கும் ரிச்சர்ட் மைல்சும், காஸ்பியனில் எரிசக்தி
தொடர்புடைய பிரச்சினைகளை தீர்க்கும் ஸ்டீவன் மன்னும் அப்கஜியன் தலைநகரமான சுகுமிக்கு, டிபிலிசியுடன் சமரசம்
காணும் முயற்சிக்காகப் பாடுபட்டு அதில் தோல்வியடைந்தனர்.
ஆனால் சுகுமிக்கும் தெற்கு ஒசெட்டியாத் தலைநகரான ட்ஷ்கின்வலிக்கும் ஜோர்ஜியா
சார்பில் தொலைபேசித் தொடர்பு கொள்ளுவதற்குத் தான் விருப்பத்துடன் இருப்பதாக புஷ் ஒப்புக் கொண்டார்.
சாகேஷ்வில்லி அதிகாரத்தை எடுத்துக் கொண்டவுடன், புஷ் தொலைபேசி மூலம் மாஸ்கோவிற்கு தப்பியோடுவதற்கு முன்
அஸ்லன் அபஷிட்ஜேயை அச்சுறுத்திப் பேசியதாக தகவல்கள் வந்தன; அதன்பின் ஜோர்ஜிய படைகள் தன்னாட்சிகொண்ட
மாஸ்கோ சார்புடைய அஜாரியக் குடியரசின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
புஷ் இவருடைய பயணத்தின் போது பிரிந்து சென்றுள்ள குடியரசுகளின் பிரச்சினை
தீர்க்கப்படுவது ஜோர்ஜியா நேட்டோவில் சேருவதற்கு இன்றியமையாத செயலாகும் என்று புஷ் சுட்டிக் காட்டினார்.
பிரிந்து செல்லும் குடியரசுகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று அவர் கிரெம்ளினுக்கு நேரடியாக
எச்சரிக்கை விடுத்தார். "ஜோர்ஜியாவில் நிலப்பகுதி முழுமையாக காக்கப்படுவதற்கும் நாட்டின் இறையாண்மை
காக்கப்படவேண்டியதும் அனைத்து நாடுகளினாலும் மதிக்கப்படவேண்டிவையாகும்" என்று வலியுறுத்தினார்.
இரண்டு பிரிந்து சென்றுள்ள குடியரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜோர்ஜியாவின் இன
சிறுபான்மையினரின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த புஷ் 45 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொண்டார்.
ஜோர்ஜியாவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறுதல் பற்றி கணிசமான அளவில் இன சிறுபான்மையினராக இருக்கும்
ஆர்மீனியர்கள் கவலை கொண்டுள்ளனர்; ஏனெனில் ரஷிய படைகள் இருந்தால்தான் அண்டை நாடான துருக்கியில் இருந்து
எந்த அச்சுறுத்தலும் வராமல் தாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்ற கருத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.
புஷ்ஷின் வருகைக்கு முன் தொடர்ந்து பலகாலம் டிபிலிசி பராமரிக்கப்பட்டு வந்தது.
பெரிதும் பாதிப்பிற்குட்பட்டுள்ள ஜோர்ஜியத் தலைநகரம் கடந்த சில வாரங்களாக அமளிப் பட்டுக் கொண்டிருந்தபோது,
நூற்றுக்கணகான தொழிலாளர்கள் சிதைந்துள்ள உள் கட்டமைப்புகளுடன் பூசல்களை தீர்க்க விரும்பியிருந்தனர். இந்த
வரலாற்று மையம் 1980-களில் ரஷ்ய ஜனாதிபதி லியோனிட் பிரெஷ்நேவ் 1980-களின் ஆரம்ப ஆண்டுகளில் வருகை
புரிந்திருந்தபோது வண்ணப் பூச்சுப் பொலிவைக் கண்டிருந்தது, அதன் பின்னர் இப்பொழுதுதான் சீர்கெட்ட சாலைகளும்
செப்பனிடப்பட்டுள்ளன.
இந்த வருகைக்கான தயாரிப்புக்கள் கணக்கிலடங்கா சொற்ஜாலங்களையும் வெளிப்படுத்தின,
உள்ளூர் மக்கள் புஷ் அடிக்கடி வருகை புரிந்தால், அரசாங்கம் வேறு வழியின்றி நாடு முழுவதையும் மறுசீரமைத்துவிடும்
என்று நகைச் சுவையாகக் கூறினார். ஆனால் எப்படி வெள்ளையடித்தாலும், தார் பூசினாலும் ஜோர்ஜிய சமுதாயத்தின்
ஆழ்ந்த மோசமான நிலையை மறைத்துவிடமுடியாது. சாகேஷ்வில்லியை ஒரு ஜனநாயகவாதி என்று புஷ் பாராட்டினாலும்,
ஜோர்ஜியத் தலைவர் ஓர் அரசியல் கெடுமதியாளராகவும், உறுதியான வகையில் சுதந்திர சந்தைக்கு ஆதரவாளராகவும்,
தன்னுடைய அரசியல் இலக்குகளில் முற்றிலும் கருணை அற்ற முறையில் நடந்து கொள்ளுபவராகவும்தான் இருக்கிறார்.
ஏப்ரல் 12-ம் தேதி, மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human
Rights Watch) "ஜோர்ஜியா - உறுதியற்ற சித்திரவதைச்
சீர்திருத்தம்" என்ற ஓர் அறிக்கையில், சாகேஷ்வில்லியின் நிர்வாகம் நாட்டின் மிக மோசமான மனித உரிமைகள்
நிலைமையை முன்னேற்றுவிக்க எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
போலீசாரும், பாதுகாப்புப் படைகளும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் முறையை
HRW பட்டியலிட்டுக் காட்டியுள்ளதுடன், குற்றத்தை ஒப்புக் கொண்டு,
தண்டனையை பேரம் பேசும் முறையின் மூலம் எவ்வாறு செல்வம் உடையவர்கள் அரசாங்கத்திற்கு அபராத தொகையைக்
கட்டி, விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்ளுகின்றனர் என்று கூறியுள்ளது.
HRW தன்னுடைய அறிக்கையை வெளியிட்ட
அன்றே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஜோர்ஜியாவும் ரஷ்யாவும் 13 செச்செனியர்களுடைய உரிமைகளை
மீறியதாக தீர்ப்புக் கொடுத்தது. அத்தகைய இரண்டு செச்சேனியர்கள் தலைமறைவாகிப் பின்னர் ரஷ்யாவில் கைதிகளாக
பட்டியலிடப்பட்டனர்.
ஷவர்ட்நாட்சே அகற்றப்பட்ட பின்னர், "எதுவுமே உண்மையில் மாறவில்லை" என்று மனித
உரிமைகள் தகவல் மற்றும் ஆவணத்தயாரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனரான
Ucha Nanuashvili
தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியக் குழு சாகேஷ்வில்லியை சுற்றி ஏற்கனவே மிகுந்த அரசியல் அதிகாரம்
சூழ்ந்துள்ளது என்று முன்பே எச்சரிக்கை கொடுத்துள்ளது; நாடானது, ஒரு கட்சி ஆட்சி அல்லது ஒரு மனிதன்
சர்வாதிகாரம் என்ற நிலைக்கு தள்ளப்படக் கூடிய அபாயத்தைக்கூட கொண்டிருக்கிறது என்று அது கூறியுள்ளது. கடந்த
பெப்ரவரி மாதம் மர்மமான முறையில் அப்போதிருந்த பிரதம மந்திரி ஜுரப் ஜாவியா மரணம் அடைந்தபின்னர்,
ரோஜா புரட்சியை நடந்திய மூவரணியில் ஒருவராகிய நிநோ புர்ஜனட்ஜேயை, சாகேஷ்வில்லி ஒதுக்கி வைத்துள்ளார்.
அஸ்லன் அபஷிட்ஜே அகற்றப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு விழாவிற்கு கூட கடைசி நிமிடம் வரை, இந்த அம்மையாருக்கு
அழைப்புக் கூடக் கொடுக்கப்படவில்லை.
சாகேஷ்வில்லிக்கு இசைவு தெரிவித்திருந்த ஜோர்ஜிய மக்களுடைய ஆதரவுகூட அவர்
அதிகாரத்திற்கு வந்த பின்னர் 25 சதவிகிதம் குறைந்துவிட்டது. கருத்துக் கணிப்பில் 38 சதவீத ஆதரவைத்தான் அவர்
தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். மின்சாரம், குடிதண்ணீர், தன்னிச்சையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும்
சாகேஷ்வில்லியின் இறுமாப்பு தன்மையை பற்றிய பொது அதிருப்தி ஆகியவை, அண்மையில் அமெரிக்க பயிற்சி பெற்ற
இவ்வழக்குரஞர் ஒரு காலம் அவருக்கு முன்பு இருந்தவரும், அவருக்கு ஆசானுமான ஷவர்ட்நாட்சே சென்ற வழியைத்தான்
இவரும் அடைவார் என்று கூறப்படுகிறது.
Transistions On-line -யில்
வெளிவந்த கட்டுரை ஒன்றில் Jaba Devdarani
கொடுத்த எச்சரிகையாவது: "இத்தகைய மாதிரியான சமூக அதிருப்தி அலைதான் ரோஜா புரட்சியை வழிநடத்திச்
சென்ற ஷவர்ட்நாட்சேயை பதவியில் இருந்து இறக்கிவிட்டது... அரசாங்கம் இதைப்பற்றி அக்கறை செலுத்தாவிடில் அமைதியின்மை
ஒரு பெரும் வெடிப்புத் தன்மையாக திரும்பிவிடும்."
சில செய்தி ஊடக வர்ணனையாளர்கள் வாஷிங்டன் அல்லது டிபிலிசியில் புஷ்ஷின் வருகையை சுற்றி
மட்டரகமான வெற்றிவிழாவிற்குரியதன்மை இருப்பது பற்றி எச்சரித்துள்ளனர். நியூயோர்க் டைம்ஸ்-ல் வந்த ஒரு
தலையங்கம் புஷ் லாட்வியாவிற்கும், ஜோர்ஜியாவிற்கும் தூண்டுதல் வகையில் பயணங்கள் மேற்கொண்டதால் ரஷ்யாவை
விரோதப்படுத்திக் கொண்டதாகவும், மற்றும் இரண்டு சிக்கல்களையும் மாஸ்கோவிற்கு இடையில் வைத்து நசுக்குவதாகவும்
புலம்பியுள்ளதோடு, ஈரானுடைய அணுவாயுதப் பேரவாக்களை கட்டுப்படுத்த மாஸ்கோவின் ஆதரவை திரட்டுமாறும் கூறியுள்ளது.
லண்டனின் டைம்ஸூம் இதேபோல் புஷ்ஷின் நளினமற்ற அணுகுமுறை பற்றி அதிருப்தியை
காட்டியுள்ளது. ஜோர்ஜியா ஒரு திறமையுடன் செயல்படும் தேசிய அரசாக நொறுங்கிவிடும் தன்மையில்தான் உள்ளது
என்பதை வாஷிங்டனுக்கு சுட்டியும் காட்டியிருக்கிறது: "எரிசக்தி அளிப்புக்கு அநேகமாக முழுமையாக ரஷ்யாவைத்தான்
ஜோர்ஜியா நம்பியிருக்கும் நிலை உள்ளது... அதன் பொருளாதாரம், இப்பொழுது ரஷ்யாவில் இருக்கும் ஒரு மில்லியனுக்கும்
மேற்பட்ட ஜோர்ஜிய நாட்டு மக்கள் பணம் அனுப்பவில்லை என்றால், சரிந்துவிடும்" என்று கூறியது.
டைம்ஸ் தன்னுடைய வாசகர்களுக்கு அப்கஜியா மற்றும் தெற்கு ஒசெட்டியா இரண்டின்
சனத்தொகையுமே டிபிலிசியிடம் அல்லாமல் மாஸ்கோவுடன்தான் உடன்பாடு கொள்ளத் தயாரக இருப்பதைப் பலமுறையும்
வெளிப்படுத்தியுள்ளதை நினைவுபடுத்தியிருக்கிறது.
சாகேஷ்வில்லிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அனைத்தையும் செய்வதற்கு எதிராக
வாஷிங்டனுக்குள்ளேயே புஷ் நிர்வாகத்திற்கு எதிராக, எச்சரிக்கை ஒலிகள் எழுந்துள்ளன. அமெரிக்க-ஜோர்ஜியன் உறவுகள்
பற்றி ஜோர்ஜ்டெளன் பல்கலைக்கழகத்தில் ஒரு வல்லுனராக இருக்கும் சார்ல்ஸ் கிங், குடியரசுக் கட்சி நிர்வாகம்
ஜோர்ஜியாவின் துயரங்களுக்காக ரஷ்யாவையே தொடர்ச்சியாக குற்றம்சாட்டுதல் எவ்வித நல்ல விளைவுகளையும் தராது
என்று எச்சரித்துள்ளார்.
கார்டியன் செய்தித்தாளுக்கு பேட்டி கொடுக்கையில் அவர், "நாளடைவில்
ஜோர்ஜியாவின் நண்பர்கள் கூட இத்தகைய போலி எல்லைகளை கொண்ட ஒரு நாடு, அவற்றை உண்மையாக கொள்ளும்
திட்டம் இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே உதவிக்கு தகுந்ததா என்று வியப்புறுவர்" என்று புலம்பினார். |