World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Behind China-Japan tensions

Washington fuels Japanese militarism

சீன-ஜப்பானிய பதட்டங்களின் பின்னணியில்

ஜப்பானிய இராணுவவாதத்திற்கு வாஷிங்டன் ஊக்கமளிக்கின்றது

பகுதி 1 | பகுதி 2

By Peter Symonds
26 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

இரு பகுதி கட்டுரைத் தொடரின் முடிவுப் பகுதி கீழே பிரசுரிக்கப்படுகிறது. முதலாம் பகுதி 13 may 2005 ல் தமிழில் பிரசுரிக்கப்பட்டது.

ஜப்பானிய பாதுகாப்பு நிலைப்பாட்டில் சமீபத்திய ஆவணங்களில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம், அரசாங்கம் ஒரு மிக விரிவான பாதுகாப்பு அறிக்கை --தேசிய பாதுகாப்புத் வேலைதிட்ட குறிப்பு (National Defence Program Outline- NDPO)--, என்ற பெயரில் வந்துள்ள இது, முதல் தடவையாக வடகொரியாவுடன், சீனாவும் ஜப்பானுக்கு ஓர் அச்சுறுத்தல் கொடுக்கும் திறனுடையது என்று குறிப்பிட்டுள்ளது. "சீனா.... தன்னுடைய கடல்வகை செல்வாக்கு மண்டலத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது; அதே நேரத்தில் அதன் அணுவாயுத, ஏவுகணை சக்திகளையும், கடல், விமானப் படைகளையும் நவீனமயமாக்கும் உந்துதலையும் அது மேற்கொண்டுள்ளது. இந்தப் போக்குகளை பற்றி ஜப்பான் கவனம் செலுத்தவேண்டும்" என்று அது அறிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு, உளவுத்துறை மீளாய்வுகள், இப்பொழுதுள்ள, வருங்கால சீனப் பாதுகாப்பு திறன்களை பற்றிய மிகைப்பட்ட கருத்துக்களை கூறியதை பிரதிபலிக்கும் வகையில்தான் NDPO-வும் கூறியுள்ளது. அரசியலமைப்பின் சமாதான விதிக்கு வெறும் உதட்டளவில் பரிவு காட்டிவிட்டு, கடந்த ஐந்து தசாப்தங்களில், ஜப்பான் தன்னுடைய "சுய-பாதுகாப்புச் சக்திகளை" உலகில் சக்தி வாய்ந்த இராணுவப் படைகளில் ஒன்று என்ற முறையில் கொண்டுள்ளது. ஜப்பான் உத்தியோகபூர்வமாக இராணுவத்திற்காக செலவழிக்கும் பணம் சீனா செலவழிப்பதைக் காட்டிலும் இரண்டு மடங்காகும்.

பெப்ரவரி 2005ன் நடுப்பகுதியில், ஜப்பானிய, அமெரிக்கப் பாதுகாப்பு, வெளியுறவு மந்திரிகளின் உயர்மட்ட கூட்டம் இரண்டாவது தீர்க்கமான மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதன் கூட்டு அறிக்கை குறிப்பிடத்தக்க வகையில் தைவானை, முதல் தடவையாக இருபக்கத்திற்குமான பாதுகாப்பு அக்கறை உடையதாக அது குறிப்பிட்டது. "தைவான் ஜலசந்தியை பொறுத்த வரையிலான பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு தேவை" என அழைக்கப்பட்ட இந்தக் குறிப்பு பலவீனமாக இருந்தாலும், இதன் உட்பொருள் மறுக்கப்பட முடியாததாகும். டோக்கியோ, சிறிதும் அசைந்து கொடுக்காமல் "ஒரு சீனாதான்" என்ற கொள்கைக்கு முன்பு ஆதரவு கொடுத்திருந்தது, வாஷிங்டன் பெயரளவிற்கு சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்றாலும் பெய்ஜிங்கிற்கு எதிராக அதைக் காக்கும் என்ற கருத்தை வெளியிட்டு ஒரு நிச்சயமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது; இதை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் டோக்கியோவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் முக்கியத்துவம் பெய்ஜிங்கிற்கு புலனாகாமல் போகவில்லை, ஜப்பான் தன்னுடைய உள்விவகாரங்களில் தலையிடுவதாக சீனா கோபத்துடன் கண்டித்தது. உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் ஜப்பான், ஆழமாக ஒத்துழைத்தல் என்பது அமெரிக்க சுற்றுவளைக்கும் மூலோபாயத்தின் (Strategy of encirclement), ஆபத்தான கூறுபாடு ஆகும் என்று பெய்ஜிங் நியாயமான முறையில் கவலைப்படுகிறது. செப்டம்பர் 2001ல் அமெரிக்கா இராணுவத் தளங்களை ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் ஸ்தாபித்ததை அடுத்தும், அமெரிக்கா பாதுகாப்பு உறவுகளை இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளிடம் நெருக்கமாக கொண்ட பின்னரும், அமெரிக்கா தன்னுடைய இராணுவ பிரசன்னத்தை தென்கிழக்கு ஆசியாவில் நிலைநிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அடுத்தும் இந்தப் பயம் உயர்ந்துள்ளது.

திரைக்குப் பின்னால், அமெரிக்க-ஜப்பான் இராணுவ உறவுகள், அமெரிக்க இராணுவம் ஒரு பரந்த ரீதியான பூகோள புதிதாகநிலைப்படுத்தும் வகையின் ஒரு பகுதியாக, ஒரு பெரிய மறுஒழுங்கமைப்பை உருவாக்குகின்றன. வாஷிங்டன் டைம்ஸ் தன்னுடைய ஏப்ரல் 15 பதிப்பில், வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்க, ஜப்பானிய இராணுவ அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் வாஷிங்டன், டோக்கியோ மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டுப்பாட்டு தலைமையிடமான ஹவாய் ஆகியவற்றில் பேச்சு வார்த்தைகள் நடத்துவர் என்றும், "இதில் அமெரிக்க, ஜப்பானுக்கு இடையே விரைவில் முதிர்ந்துள்ள உறவுகளுக்கு வலிமை கொடுப்பது பற்றிய விவாதங்கள் இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட இருக்கும் கூட்டறிக்கைக்காக தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படும் இந்த ஆழ்ந்த விவாதங்களின் நோக்கம், "1960ம் ஆண்டு அமெரிக்க, ஜப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதற்கு பின், "அந்த உடன்பாடு பற்றிய அடிப்படையான, தொலைநோக்குடைய திருத்தத்தை கொள்ள வேண்டும் என்பதாகும்". வாஷிங்டன் டைம்ஸின் கருத்தின்படி, இந்தப் புதிய உறவு "கிட்டத்தட்ட சம நிலையில் இருப்பவர்களிடையே" ஏற்படும் ஒப்பந்தம் என்றும், இவை கூடுதலான முறையில் பயிற்சி, புலனாய்வுத்துறை, போர்த்திட்டம், மற்றும் செயற்பாடுகள் இவற்றைப் பற்றிய உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.

ஏப்ரல் 13 பதிப்பில் Asahi Shimbun, ஜப்பானிய அரசாங்கம் கொள்கையளவில் திட்டங்களின் ஒரு முக்கிய கூறுபாட்டிற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டதாக அறிவிக்கிறது: அதாவது அமெரிக்க முதலாம் படைப்பிரிவின் தலைமையிடம் வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து டோக்யோவின் தெற்கே, யோகோகமாவிற்கு அருகே உள்ள Camp Zama ற்கு மாற்றப்படும் என்பதே அது. அமெரிக்க-ஜப்பானிய இராணுவ உறவுகளை மிக உயர்ந்த மட்டத்தில் உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாறுதல், அமையும்; இதே நேரத்தில் அமெரிக்கப் படைகள் ஜப்பானிலும், தெற்கு கொரியாவிலும் குறைக்கப்படும், இது பென்டகனுடைய திட்டமான, கூடுதலான வளைந்துகொடுக்கும் தன்மையுடைய, நகரும் ஆற்றல் உடைய அமெரிக்க இராணுவம் உலகின் எந்தப்பகுதியையும் தாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இணங்கவும் இருக்கும்.

அரசியலமைப்பு திருத்தங்கள்

அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்குமிடையில் இராணுவ ஒத்துழைப்பு, ஜப்பானில் அரசியலமைப்பு மாற்றத்திற்கான புதிய அழுத்தங்களை தோற்றுவித்துள்ளது. அரசியலமைப்பின் 9ம் சட்டவிதி உருத் தெரியாத அளவிற்கு பெரிதுபடுத்தப்பட்டு ஜப்பானிய படைகள் வெளிநாடுகளில் தீவிர போர் பகுதிகளில், ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்காவிற்கு உதவுவதற்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கோய்ஜுமி இத்தகைய சூழ்ச்சியை பயன்படுத்தி, ஜப்பானிய இராணுவ படைகள் மனிதாபிமான முயற்சிகளில்தான் ஈடுபட்டுள்ளது என்று சாதாரணமாக கூறுகிறார், 1990களில் கிழக்கு தீமோர் மற்றும் கம்போடியாவில் "சமாதான பாதுகாவலர்" என்ற பெயரில் இப்படித்தான் ஜப்பானிய படைகள் அனுப்பியதை போலிக்காரணத்தைக்கூறி நியாயப்படுத்தினார்கள்.

ஆயினும் கூட சட்டவிதி 9, வெளிநாட்டுப் போருக்கு கூட்டணியினருக்கு உதவ அல்லது நேரடியான ஜப்பானிய ஈடுபாட்டில் படைகளை அனுப்பவதற்கு சட்டபூர்வமான தடையாகத்தான் உள்ளது. வெகு அருகில் இருக்கும் வட கிழக்கு ஆசிய பகுதிக்குள் கூட, அரசியலமைப்பு, அமெரிக்க, ஜப்பானிய படைகளின் கூட்டுத் திட்டம், செயற்பாடுகள் இவற்றை ஏற்படுத்துவதில் சிக்கலைகளை தோற்றுவித்துள்ளது. கோய்ஜுமி அரசாங்கம், ஜப்பானிய இராணுவம் பென்டகனுடன் இராணுவ ஒத்துழைப்பு கொள்வதற்கு வகை செய்துள்ளதோடு மட்டும் இல்லாமல் அப்பிராந்தியத்தில் பரந்த முறையிலான அமெரிக்க நடவடிக்கைகளுக்கும் ஜப்பானிய படைகளின் ஒத்துழைப்பு இருக்கும் என்ற ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. ஆயினும்கூட, ஒரு "சுய பாதுகாப்பிற்காக" என்று தைவானுக்கு ஆதரவாக அமெரிக்காவுடன் ஜப்பானிய படைகள் நுழைந்தால், நியாயப்படுத்துவது எங்ஙனம் என்று கூறுவது சற்று கடினமேயாகும்.

அமெரிக்க-ஜப்பானிய ஒத்துழைப்பு தொலைதூர ஏவுகணை பாதுகாப்பு வளையம் (Ballistic Missile Defence Shield) தொடர்பான கூட்டுழைப்பு என்று வரும்போது, பிரச்சினை கூடுதலான முறையில் நெருக்கடியை எதிர்கொள்ளும். ஜப்பான் ஒரு வட கொரிய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளுவதற்கு அமெரிக்கத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற முறையில் ஜப்பான் இதை ஏற்கவேண்டும் என்ற கோய்ஜுமி நியாயப்படுத்திப் பேசியுள்ளார். இந்த அரசியல் சாக்குப்போக்கு அல்லது சமரச நிலைப்பாடு, சீனாவின் ஏவுகணை ஆயுதக்கிடங்கை செயலற்றதாக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை, உண்மையை மறைக்க முடியவில்லை. ஆனால் ஜப்பானிய பாதுகாப்பு என்பதை தவிர, வேறு எந்த முறையிலும் கூட்டு ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை எடுத்துக்கொள்ளல் பிரச்சினையை சிக்கலாக்கிவிடும்.

"அமெரிக்க-ஜப்பானிய கூட்டணி ஏற்படவுள்ளது" ("The arrival of the US-Japanese Alliance") என்ற தலைப்பில், செல்வாக்குப் பெற்ற, வலதுசாரி அமெரிக்கச் சிந்தனைக் குழுமங்களான அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்ட்டிட்யூட் (American Enterprise Institute) தயாரித்துள்ள கட்டுரை பெரும் களிப்புடன் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான இராணுவப் பிணைப்பை வரவேற்றுள்ளது. எவ்வாறாயினும், இக்கட்டுரையின் ஆசிரியரான Dan Blumenthal "சுய-பாதுகாப்பிற்கு" என்றில்லாமல் ஜப்பானை வேறு ஏதேனும் கடல் வழித் தாக்குதல்களுக்கு கடற்படையை அமெரிக்கா கோரும்போது எழும் பிரச்சினைகளை பற்றிக் கூறியுள்ளார். "ஒரு ஏவுகணையை தடுத்து நிறுத்துவதற்காக தேவைப்படும் குறுகிய கால அவகாசம் என்ற நிலை இருக்கும்போது, கொள்கை இயற்றுபவர்கள் நீண்ட காலம் பேசி முடித்து முடிவைக் கொடுப்பது என்பது முடியாத செயல். இராணுவ உயர் அதிகாரிகள் அக்கணத்திலேயே சில முடிவுகளை எடுக்க வேண்டும்; அவர்கள் ஜப்பானுக்கா, அல்லது வேறு ஒரு அமெரிக்க நட்பு நாட்டிற்கா அல்லது அமெரிக்க உள்நாட்டிற்கா இந்த ஏவுகணைகள் செல்லக்கூடும் என யோசித்து ஏவுகணைகளை நிறுத்த முடியாது" என்று அவர் விளக்கியுள்ளார்.

ஜப்பானிய அரசியலமைப்பு முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டியதற்கான திட்டங்களும் முன்னேறியுள்ள நிலையில் உள்ளன. நாட்டுப் பாராளுமன்றமான டையட்டின் கீழ்மன்றம் அதன் இறுதி அறிக்கையை, ஐந்து ஆண்டுகள் விவாதத்தின் சுருக்கத்தை ஏப்ரல் 15 அன்று சமர்ப்பித்தன. இந்த அறிக்கை அரசியலமைப்பிலுள்ள பல்வேறு கூறுபாடுகளை பற்றி ஆய்ந்துள்ளது, ஆனால் அவற்றுள் மிகச் சிக்கல் வாய்ந்த மாற்றங்கள், சட்டவிதி எண் 9ஐ பொறுத்த வரையில் கொண்டுவர உள்ள திட்டத்தை ஆராய்கின்றன. அனைத்துப் பாராளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இருப்பதால் தெளிவான பரிந்துரை ஏதும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இந்தத் திட்டங்களின் உந்துதல் இன்னும் வெளிப்படையாக, "தற்காப்பு", "கூட்டுப் பாதுகாப்பு" இவற்றை ஒட்டி உள்ளது--- இந்தச் சொற்றொடர்கள் கூடுதலான வகையில் பாதுகாப்பு உடன்படிக்கைகளை, குறிப்பாக அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும். இதே போன்ற மேல்மன்ற அறிக்கையும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மிகத்தீவிரமாக கோய்ஜுமி, அரசியல் அமைப்புத் திருத்தங்களுக்கு உந்துதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாராளவாத ஜனநாயகக் கட்சிக் குழு ஒன்று அரசியலமைப்புத் திருத்த வரைவுகள் பற்றிய அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறது. ஆனால் அரசாங்கம் இந்த அரசியலமைப்பு மாற்றத்திற்கான பெரிய தடைகளை எதிர்கொள்ளுகிறது, ஏனெனில் டையட்டின் இருபிரிவுகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை என்பதோடு மக்களுடைய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கும் பெரும்பான்மை பெறுவதற்காக, அது அனுப்பி வைக்கப்பட வேண்டும். தாராளவாத ஜனநாயகக் கட்சியின் கூட்டணிக் கட்சி புதிய கோமீட்டோ கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஜப்பானிய ஜனநாயகக் கட்சி ஆகியவை திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளபோது, சமூக ஜனநாயகக் கட்சியும், ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்துள்ளன. "கூட்டுப் பாதுகாப்பு" என்ற முக்கியமான பிரச்சினையில், குழு மூன்று விதப் பிளவுகளை, அதாவது எதிர்ப்பவர்கள், ஆதரவாளர்கள், குறைந்த வகையில் திருத்தத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் என்ற முறையில் கொண்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டவிதி 9ஐ மாற்றுவதற்கு, பாராளுமன்ற எதிர்ப்பு, தயக்கங்கள் சில கவலைகளை பிரதிபலிக்கின்றன. போருக்கு பிந்தைய அரசாங்கங்களை பொறுத்த வரையில், சமாதானம் பற்றிய விதி மிக வசதியான முறையில் ஜப்பான் மீண்டும் ஆயுதக்கலங்களை பெருக்கிக் கொள்வது பற்றி சீனா, மற்ற நாடுகளில் இருந்து எழுந்த விமர்சனங்களை இராஜதந்திர முறையில் திசைதிருப்பிவிட உதவியது. இன்னும் அடிப்படையாக 1930, 1940களில் ஜப்பானிய மிருகத்தனமான இராணுவ ஆட்சி இருந்தது ஏகாதிபத்திய போர் பற்றி உழைக்கும் மக்களிடையே ஆழ்ந்த விரோதப் போக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த உணர்வுகள் கோய்ஜுமி, தேசியவாத உணர்வுகளை தூண்டி விடும் வகையில் பேசினாலும்கூட இன்னும் உள்ளன. ஜப்பானியப் படைகள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டு, சட்டவிதி 9 மாற்ற இருப்பது ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரதிபலித்துள்ளன. மே மாதத்தில், Mainichi Shimbun நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஜப்பானியர்களின் 78 சதவிகிதத்தினர் அரசியல் அமைப்பு மாற்றத்தை விரும்பினர் என்றும் 70 சதவிகிதத்தினர் விதி 9 மாற்றப்படுவதை எதிர்த்தனர் என்றும் தெரிவிக்கிறது.

ஜப்பானிய இராணுவவாதத்திற்கு அமெரிக்க ஆதரவு

சட்டவிதி 9 திருத்தப்படுதல், மற்றும் ஜப்பான் மீண்டும் ஆயுதபாணியாக்குவது தொடர்பாக மிக வலுவான ஆதரவு, டோக்கியோவைவிட வாஷிங்டனில் கூடுதலாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கொடுத்த பேட்டி ஒன்றில் முன்னாள் அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பவல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பத்திற்கு, இந்த விதியை மாற்றுவது பற்றி ஜப்பான் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார். "ஜப்பான் உலக அரங்கில் முழுப்பங்கை கொள்ள வேண்டும் என்றால், பாதுகாப்பு சபையில் பங்கு பெறும் உறுப்பு நாடாக செயலாற்ற வேண்டும் என்றால், அக்குழு உறுப்பினர் என்னும் முறையில் தனக்குரிய கடமைகளை செய்ய வேண்டும் என்றால், விதி 9 அதற்கேற்ப ஆய்வு செய்யப்படவேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார். புஷ் நிர்வாகம் ஜப்பானுடன் மட்டும் என்றில்லாமல், தன்னுடைய நாட்டில் உள்ள, மிக வலதுசாரி, அரசியல் அமைப்பின் இராணுவவாதப் பிரிவின் போக்கை இவருடைய கருத்துக்கள் பிரதிபலித்து நின்றன.

கடந்த மாதம் ஆசியாவிற்கு வருகை புரிந்த போது, பவலுக்குப் பிறகு அவருடைய பதவிக்கு வந்த கொண்டலீசா ரைஸ் உற்சாகத்துடன் கூறினார்: "தன்னுடைய முயற்சியினாலும், சொந்த குணநலன்களினாலும், ஜப்பான் உலக நாடுகள் இடையே பெரும் மதிப்பான நிலையை பெற்றுள்ளது. எனவேதான் அமெரிக்கா குழப்பத்திற்கு இடமில்லாத வகையில், ஜப்பானுக்கு ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர இடம் வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கிறது." டோக்கியோவில் சோபியா பல்கலைக்கழகத்தில் பேசுகையில், ரைஸ், "கிழக்கு ஆசியப் பகுதி அனைத்திலும் அரசியல், பொருளாதார நிகழ்ச்சிப்போக்கிற்கு" ஜப்பான் முன்மாதிரியாக இருக்கும் தன்மையையும் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போரில்'' அதன் பங்குதாரரை வியந்தும் பாராட்டினார். ஜப்பான், மற்றும் பிற நாடுகளுடன் அமெரிக்கா கொள்ளும் உடன்படிக்கைகள் "சீனாவிற்கு எதிராக இல்லை என்று" கூறிய அவர் மேலும் குறிப்பிட்டார்; "நாம் சீனா ஒரு நல்ல போக்கிற்கு வரவேண்டும் என்பதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுகிறோம்" என்ற அறிவித்தார். தென் கொரியாவில், ஜப்பான் மீண்டும் ஆயுதமயமாக்கல், அதற்கு ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் ஆகியவை பற்றிய அமெரிக்க நிலைப்பாடு பற்றி நிருபர்கள் வினாக்கள் எழுப்பிய போது, அமெரிக்க ஜப்பானிய கூட்டணியை பெரிதும் பாராட்டி, அவற்றை இந்த அம்மையார் உதறித்தள்ளினார்.

தன்னுடைய சமீபத்திய அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டியூட் (American Enterprise Institute-AEI), கட்டுரை ஒன்றில், Dan Blumenthal வாஷிங்டனின் மூலோபாயத்துடைய இலக்கு பற்றி அந்த அளவிற்கு எச்சரிக்கையுணர்வுடன் பேசவில்லை. அமெரிக்க கொள்கை இயற்றுபவர்கள், ஜப்பான் எழுச்சி பெற்று அமெரிக்காவின் சக்திவாய்ந்த கூட்டணி என்று வருதலைப் பற்றி வரவேற்க வேண்டும் என்று அவர் கூறினார்: "கூட்டணி அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள உறவு, டோக்கியோவில் ஏராளமான மூலோபாய நோக்கங்களுக்கு உதவும் என்றாலும், ஜப்பான் அமெரிக்காவுடன் தனது முக்கிய மூலோபாயமான சீனா என்ற பெரு-வல்லரசின் அபிலாசைகளை தடை செய்ய உதவும் என்பதில் ஐயமில்லை. பிரதம மந்திரி ஜுனிஷிரோ கோய்ஜுமியின் தலைமையில், டோக்கியோ அமெரிக்கத் தலைமையிலான பயங்கரவாதத்தின் மீதான போரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது, ஜப்பான் தன் பாதுகாப்பு முயற்சிகளின் திறனை அதிகப்படுத்திக் கொள்ளுவதற்கு வாஷிங்டனின் ஊக்கம் கிடைத்துள்ளதுடன், மற்றும் வட கொரியாவின் அணுவாயுத மூர்க்கத்தனம் தனிமைப்படுத்தப்பட்டு, சர்வதேச சமூகத்தில் தன்னுடைய திறனுக்கும் தகுதிக்கும் ஏற்ப உயர்ந்து நிற்பதில் உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளது."

கோய்ஜுமிவின் செயல்துடிப்பிற்கு Blumenthal பாராட்டியுள்ளது, அமெரிக்கா, டோக்கியோவுடன் கொண்டுள்ள நட்பின் மற்றொரு தன்மையை சுட்டிக் காட்டுகிறது: ஜப்பானிய தேசியவாதத்தை, கிளறிவிடுவதை பாதுகாப்பதற்காக வெளிப்படையாக அதிகரித்தளவில் அரசாங்கம் முயற்சிக்கிறது. புஷ் தனது மிகத் தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ அடிப்படை வாதிகளைப் பெரிதும் நம்பி இருப்பதுபோல், கொய்ஜுமியும் ஆசியாவில் ஜப்பானிய காலனித்துவ செயல்கள், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தில் இருந்து "விடுதலைக்கான போர்" என்ற கருத்தைக் கொண்டிருந்த இராணுவத் தட்டுக்களின் தளத்தை அடிப்படையாக கொண்டுள்ளார்; இது நாஜி ஆதரவு சார்ந்த, ஹோலோகோஸ்ட் மறுப்பாளர்கள் எவ்வாறு நான்கிங்கில் நிகழ்ந்த கற்பழிப்புக்கள் மேலை கற்பனையுரை எனக் கூறுகிறார்களோ அதே போலத்தான் இருக்கிறது. எனவே புஷ் நிர்வாகம் ஜப்பானிய இராணுவவாதத்திற்கு வால் பிடிப்பவர்களுடன் சேர்ந்து கொண்டிருப்பதில் வியப்பு ஏதும் இல்லை-----அவரைப் பொறுத்தவரையில் அமெரிக்க நலன்களை இது முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

கோய்ஜுமியின் கெட்டிக்காரத்தனத்திற்கு பாராட்டுக் கொடுக்கும் வகையில், அதாவது "வரலாற்றுத் துருப்புச்சீட்டை" அவர் பயன்படுத்தும் முறையை Blumenthal புகழ்கிறார்---- யாசாகுனி புனித தளத்திற்குச் சென்றது, வரலாற்றுப் புத்தகங்களில் ஜப்பானிய போர் நடவடிக்கைகளை மூடிமறைத்தது என்பவை அத்தன்மையானவை என்று அவர் கூறுகிறார். "அவருடைய சீனா பற்றிய மூலோபாயத்தை உருவாக்கியதில், கோய்ஜுமி மக்கள் கருத்தையும் ஆதரவையும் பெற வேண்டும் என்பதோடு சீன அழுத்தத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த இரட்டை இலக்குகளை மிகவும் திறமையுடன் பயன்படுத்தி ஜப்பானின் பெரும் தலைவலியான சீனக் கொள்கை-----'வரலாற்றுத் துருப்புச் சீட்டை" அரசியல் சாதகத்திற்கு பயன்படுத்திவிட்டார்.

Blumenthal இன் கருத்தின்படி கோய்ஜுமியின் பெரும் திறமை, ஜப்பானிய மக்களின் கருத்தை துருவப்படுத்திக்கொண்டது மட்டும் இல்லாமல், பிராந்திய பதட்டங்களை அதிகரிக்கும் வகையில் போர்க்கால ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் அடையாளங்களை தன்னுடைய அடிப்படை நோக்கமான ஜப்பான் மீண்டும் ஆயுதமயமாக்கப்படவேண்டும் என்பதற்கான திரையாக பயன்படுத்திக்கொண்டதாகும். "சீனத் தலைமை இந்த அடையாளப் பிரச்சினையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், கோய்ஜுமியின் உண்மையான சீர்திருத்தத்தின் தற்காப்பு நிலைப்பாடு உண்மையில் பெறவேண்டிய விமர்சனத்தைவிடக் குறைவாகத்தான் பெற்றுள்ளது. உண்மையில், சீனா தன்னுடைய நிலையை அதிகப்படுத்தியதால், ஜப்பான் எதிர்ப்பு என்பது சீன மக்களிடையே கொதிக்க செய்துவிட்டது."

வோல் ஸ்டீரிட் ஜேர்னல், ஏப்ரல் 13ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரையில் Blumenthal இன் சக ஊழியருள் ஒருவரும் அமெரிக்க ஹெரிடேஜ் இன்ஸ்டிட்யூட்டில் இருப்பவரான ஜேம்ஸ் லில்லே, இதேபோன்ற கருத்தைத்தான் சீனாவில் நடைபெற்ற சமீபத்திய ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் கூறுகின்றார். ஜப்பானுடைய நிலப்பகுதிகள் உரிமை கோரலுக்கும், பாடப்புத்தகங்களில் வந்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றிய பிராந்திய பிரதிபலிப்பு "ஆழ்ந்த முறையில் வரலாற்று விரோதப் போக்குகள்" எவ்வாறு இருந்தன என்பதைப் பிரதிபலிக்கிறது என்றுள்ளார்; ஆனால் வெளிப்படையாக கோய்ஜுமியின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் கூறுவதாவது: "ஜப்பான் இரக்கமில்லாத முறையில் சீனாவாலும் கொரியாவாலும் 20ம் நூற்றாண்டு படையெடுப்புக்கள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றிற்காக தாக்கப்பட்டது; சிலர் உண்மையான உணர்வை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஜப்பானை ஒரு தற்பாதுகாப்பு நிலைக்குத் தள்ளும் முயற்சியை இது பிரதிபலித்தாலும், அதேநேரத்தில் அதன் பொருட்கள், உயர்ந்த தொழில் நுட்பம் ஆகியவற்றை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வையும் காட்டுகிறது."

சீனாவும், தென் கொரியாவும் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக தேசியவாத உணர்வை பயன்படுத்திகின்றன என்பது தெளிவு. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சுதந்திர சந்தை மறுசீரமைப்பிற்கு தலைமை வகிக்கும் பெய்ஜிங்கின் அதிகாரத்துவம், எழுச்சி பெறும் முதலாளித்துவ வர்க்கத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்ள முற்படும் அதிகாரத்துவமும், தன்னுடைய கடந்த கால சோசலிசப்பாசாங்கு கருத்துக்களை முற்றிலும் கைவிட்டுவிட்டது. சீனத்தலைவர்கள், ஜப்பானிய தலைவர்கள் போலவே, தேசியவாதத்தை தூண்டிவிட வேண்டும் என்ற வகையில் நடந்து கொண்டு, தங்கள் நாட்டில் உள்ள வறுமை, வேலையின்மை இவற்றிற்கு எதிராக இருக்கும் பரந்த, ஆழ்ந்த விரோதப் போக்கை திசை திருப்பும் வகையில், சீனாவிற்கு அப்பிராந்தியத்திலும், சர்வதேசரீதியாகவும் கூடுதலான பங்கு வேண்டும் என்று கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், அதேநேரத்தில், ஆசிய மக்களில் பரந்த தட்டுக்களிடையே, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பழைய குற்றங்களை நியாயப்படுத்தும் முயற்சிகள், புதியவை தயாரிக்கப்படுவதற்கு முன்னோடிதான் என்ற புரிந்து கொள்ளக் கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. 1930களை போலவே, ஜப்பான் மிகப் பெரிய அளவில் மூலப் பொருட்கள், குறிப்பாக எண்ணெயை தன்னுடைய மிகப் பெரிய உற்பத்தித்தளத்தை இயக்குவதற்கு, இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் பொருளாதாரச் சரிவு, நெருக்கடி இவற்றில் இருந்த பின்னர், டோக்கியோவின் ஆளும் செல்வந்த தட்டு, கூடுதலான முறையில், ஆக்கிரோஷமான விரிவாக்க முயற்சிகளில் ஈடுபட்டு மலிவான பண்டங்கள், தொழிலாளர், சந்தைகள் ஆகியவற்றை பாதுகாக்க விரும்புகின்றன. சீனா, ரஷ்யா, மற்றும் தென் கொரியாவுடனான நிலப்பகுதி பற்றிய பூசல்கள் எண்ணெய், எரிவாயு நிறைந்துள்ள வளமான பகுதிகளை சுற்றியுள்ளவை என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தன்னுடைய பேரவாக்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஜப்பான் தன்னுடைய இராணுவ வலிமையைப் பயன்படுத்த முயலுகிறது.

அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்களின் அனைத்துப் பிரிவுகளும் ஜப்பானிய இராணுவவாதம் மீண்டும் எழுச்சி அடைவதை வரவேற்கவில்லை. சிலர் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியம் பசிபிக் பகுதியில் தன்னுடைய ஆசியப் பொருளாதார, மூலோபாய நலன்களை காப்பதற்கு கடுமையான, பேரழிவு கொடுத்த போரில் ஈடுபடவேண்டியதாயிற்று என்பதை நினைவு கூர்கின்றனர். தற்போதைய புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையை, பொறுப்பற்ற தன்மையுடையது என்றும் குறுகியகால நோக்கு உடையது என்றும்தான் கருதுகின்றனர். இப்பொழுது, டோக்கியோ, தன்னை மீண்டும் வலிமைப்படுத்திக் கொள்ளவும் தன்னுடைய அந்தஸ்தை "சாதாரண நாடு" எனக் காட்டிக் கொள்ளுவதற்கும், வாஷிங்டனுக்கு பக்க வாத்தியம் வாசிக்க தயாராக இருக்கலாம். ஆனால் வழிமுறைகள் இவற்றையெல்லாம் மாற்றலாம். ஜப்பானிய நலன்கள், சீனாவுடன் மட்டும் இல்லாமல், இன்னும் அடிப்படையான முறையில் வாஷிங்டனுடைய நீண்ட கால திட்டங்களான அமெரிக்க கட்டுப்பாடு ஆதாரங்கள் நிறைந்திருக்கும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியப் பகுதிகளில் கட்டுப்பாடு கொள்ள வேண்டும் என்பவற்றிற்கும் எதிரிடையானவை ஆகும். இவைதான் 1941ல் வெடித்த பசிபிக் போருக்கு விதையூன்றின. அவையே மீண்டும் மற்றொரு பெரும் குருதி சிந்தும் போருக்குத் தூண்டுதல் கொடுக்கலாம்.

ஜப்பானிடம் தற்போதைய அமெரிக்கக் கொள்கை பற்றிக் கடும் தாக்குதல் நிறைந்த ''உண்மையான 'சீன அச்சுறுத்தல்''' (The real 'China threat') என்ற கட்டுரையில் வல்லுனரான Chalmers Johnson கீழ்க்கண்ட கருத்துக்களைக் கூறியுள்ளார்.

"நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் சீன, ஜப்பானியத் துறைகள், சர்வதேச உறவுகள் பற்றி என்பதில் பேராசிரியராக புதிதாக பணிக்கு வந்தபோது, Edwin O Reischauer ஒரு முறை "1945ல் நமக்கு கிடைத்த பெரும் பரிசு, நிரந்தரமாக ஆயுதமிழந்த ஜப்பான்" என்று கூறியதை நான் நினைவு கூருகிறேன். ஜப்பானில் பிறந்து, ஒரு ஜப்பானிய பேரசாரியராக ஹார்வர்டில் இருந்து Reischauer அமெரிக்காவின் தூதராக டோக்கியோவில், ஜோன் கென்னடி, லிண்டன் ஜோன்சன் ஆகியோருடைய காலத்தில் இருந்திருந்தார். விந்தையான முறையில், 1991ல் பனிப்போர் முடிவடைந்ததில் இருந்து, அதிலும் குறிப்பாக ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் காலத்தில் இருந்து, ஜப்பானியர் மீண்டும் படைவலிமை பெறுதலை விரிவுபடுத்தவேண்டும் என்பதை ஊக்குவிப்பது மட்டும் இல்லாமல் அதை விரைவுபடுத்துவதற்காக எதையும் செய்யத்தயாராக இருக்கும் முறையில் அமெரிக்கா உள்ளது.

"இத்தகைய வளர்ச்சி சீனா, ஜப்பான் என்ற இரண்டு கீழை வல்லரசுகளுக்கு இடையே விரோதத்தை வளர்க்கும்; இரண்டு சிக்கல் நிறைந்த இடங்கள் மற்றும் சீன கொரிய போர்களின் பின்விளைவுகளான தைவான், வட கொரியா இவற்றின் அமைதியான முறையில் தீர்வு காணப்படுவதை நாசப்படுத்தி, ஒரு சீன ஜப்பானிய போர் ஏற்பட்டு அதில் அமெரிக்கா உறுதியாகத் தோற்று விடும் நிலையையும் உருவாக்கிவிடும். வாஷிங்டனில் இருக்கும் சிந்தனையாளர்களும் போர் வெறியர்களும் தாங்கள் எதைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவார்களா என்பது தெளிவாக இல்லை; அதாவது உலகின் மிக விரைவாக மலரும் தொழிற்துறை பொருளாதாரமான சீனாவிற்கும், சற்று சரிந்துகொண்டிருந்தாலும் உலகின் இரண்டாம் பெரிய உற்பத்தியாளர் நாடு என்ற நிலையைக் கொண்ட ஜப்பான் இவற்றிற்கிடையே மோதல் என்பது அமெரிக்காவால் தூண்டப்படுகிறது; அது இதில் பெரும் அழிவிற்கு உட்பட்டுவிடலாம்."

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள சமீபத்திய பதட்டங்களுக்கு, அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வடகிழக்கு ஆசியாவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் உள்ள பதட்டங்களுக்கு வாஷிங்டனின் பிரதிபலிப்பு தாங்கள் எதைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனரா என்பது தெளிவாக இல்லை என்பது மட்டமில்லாமல், புஷ் நிர்வாகத்தின் போர் வெறியர்கள் ஜப்பானுடன் ஒரு இராணுவ உடன்படிக்கையை, பேரழிவான விளைவுகளை அது ஏற்படுத்தக் கூடிய தன்மையை உள்ளடக்கியிருந்தாலும் அதனை தொடர முற்பட்டுள்ளனர்.

முற்றும்.

Top of page