WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ரஷ்யா
மற்றும் முந்தைய USSR
On the 60th anniversary of the victory of the Red Army over Nazism
Anti-Russian nationalism in the Baltic States
நாசிசத்தின் மீது செம்படை வெற்றி கொண்டதின் 60 ஆண்டு நிறைவு விழா
பால்டிக் அரசுகளில் ரஷ்ய தேசியவாத எதிர்ப்பு
பகுதி 1 |
பகுதி 2
By Niall Green
9 May 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
இது ஒரு இரு கட்டுரைத் தொடரின் முதற்பகுதி ஆகும்.
லாத்வியன் தலைநகரான ரீகாவில், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மே 7-ம் தேதி
உரையாற்றியபோது அதை முன்னாள் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவின் மீது செலுத்தியிருந்த ஆதிக்கத்தை
"வரலாற்றின் மிகப் பெரும் தவறுகளில்" ஒன்று எனக் கண்டனம் செய்வதற்கு வாய்ப்பாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
ஐரோப்பாவில் போர் முடிந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ளதை குறித்துப் பேசுகையில்,
புஷ் லாத்வியா, எஸ்தோனியா மற்றும் லித்துவேனியா ஆகிய பால்டிக் அரசுகளை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சோவியத்
ஆக்கிரமிப்பின்போது "நீண்ட விழிப்புடன் துன்பங்களை சுமந்து, நம்பிக்கையை விடாமல் காத்ததற்காக" பெரிதும்
பாராட்டினார். இரண்டாம் உலகப்போரின் முடிவு இந்த நாடுகளுக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த போதிலும்,
அது "ஆக்கிரமிப்பு, கம்யூனிஸ்ட் ஒடுக்குமுறை" இவற்றையும் கூட கொண்டுவந்தது என்று புஷ் அறிவித்தார்.
மாஸ்கோவின்மீது தாக்குதலை தொடர்வதற்கு லாத்வியாவை புஷ் தேர்ந்தெடுத்தமை
ரஷ்யாவிற்கும் மூன்று பால்டிக் அரசுகளிலிருக்கும் அரசியல் செல்வந்த தட்டுகளுக்கும் உள்ள உக்கிரமான பதட்டங்களை
சுரண்டிக்கொள்ளும் வகையில் அமைந்தது. மாஸ்கோவில் சோவியத் ஒன்றியமும் அதன் கூட்டணி வல்லரசுகளும், நாஜி
ஜேர்மனிக்கு எதிராக கண்ட வெற்றியின் 60 ஆண்டுகள் முடிவடைந்ததை நினைவுகூரும்வகையில், ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமீர் புட்டின், முன்னாள் சோவியத் நாடுகளின் தலைவர்களுக்கு, மே 9 அன்று நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுமாறு
அழைப்பு விடுத்ததை அடுத்து, பால்டிக் நாடுகளில் இருக்கும் அரசியல் வாதிகளும், செய்தி ஊடகங்களும் ஏற்கனவே
ஒரு கம்யூனிச-எதிர்ப்பு, ரஷ்ய-எதிர்ப்பு வெறி ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்தன.
இந்த மூன்று பால்டிக் நாடுகளிலும் இருக்கும், உள்நாட்டு செய்தி ஊடகம் மற்றும்
கல்விக்கழக வர்ணனையாளர்கள், ரஷ்ய/சோவியத் "ஏகாதிபத்தியம்", "ஆக்கிரமிப்பு" பற்றிய விழா என்று வகைப்படுத்தி,
அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தங்களுடைய நாட்டுத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தை,
நாஜி ஜேர்மனிக்கு இணையான ஒழுக்கநெறி மற்றும் அரசியல் சம்மதிப்பு உடையது என்று சித்தரித்துக்காட்ட கிடைத்த
பெரும்பாலான சந்தர்ப்பங்கள் நழுவவிடப்படவில்லை.
எஸ்தோனியாவின் ஜனாதிபதி அர்னோல்ட் ரூட்டல் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் மே
9 தின நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முதலில் அறிவித்தார். சற்றுத் தயக்கம் காட்டிய
பின்னர், லித்துவேனியாவின் ஜனாதிபதி Valdas
Adamkus தானும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று
அறிவித்தார். லாத்விய அரசின் தலைவரான Vaira
Vike-Freiberga ஒருவர்தான் விழாவில் கலந்து
கொள்வதாக இருந்தார்.
மாஸ்கோவுடன் கொண்டுள்ள முக்கியமான பொருளாதார உறவுகளுக்கு பாதிப்பு
ஏதேனும் ஏற்பட்டுவிடக் கூடுமோ என்ற அக்கறைகள்தாம் லாத்வியா சற்று குறைந்த உணர்வற்ற முறையில் அழைப்பிற்கு
விடையிறுத்த நிலைக்குக் காரணம் ஆகும். இந்த மூன்று பால்டிக் அரசுகளுமே அவற்றின் பெரும்பான்மை வணிகத்திற்கும்,
பெரும்பாலான எரிசக்தி தேவைகளுக்குமாக பொருளாதார ரீதியில் ரஷ்யாவை சார்ந்திருக்கின்றன, ஆனால் லாத்வியாதான்
மிக அதிக அளவில் ரஷ்ய பொருளாதாரத்துடன் இணைந்த முறையில் உள்ளது.
மாஸ்கோவிற்கு சலுகைகள் கொடுத்துள்ள போதிலும்கூட,
Vike-Freiberga,
இந்த வாய்ப்பை பயன்படுத்தி சோவியத் காலத்தை "மிருகத்தனமான ஆக்கிரமிப்பு" என்று கூறப்போவதாக
தெரிவித்துள்ளார். இவ்வம்மையார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முடிவு எஸ்தோனிய வெளியுறவு மந்திரி ரீன்
லாங்கின் ஆதரவை பெற்றுள்ளது; இது சோவியத் ஆக்கிரமிப்பு காலமும், நாஜிக்களின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு
இணையானது என்று பிரகடனப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு தருகிறபடியால் "லாத்வியா இப்பொழுது செய்து
கொண்டிருப்பது மூன்று பால்டிக் அரசுகளுக்கும் நல்லது" என்று கூறியுள்ளார்.
இதுதான் பால்டிக் அரசுகளில் சோவியத் காலத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அரசியல்
கருத்தின் பொதுத் தன்மையாகும்.
60 ஆண்டு நிறைவு விழா நினைவு தினத்திற்கு மாஸ்கோவிற்கு போவதா வேண்டாமா
என்ற விவாதம், முதலாளித்துவ அரசியலை அடிப்படையாகக் கொண்ட, தேசிய, கம்யூனிச-எதிர்ப்பு கருத்தியல்களின்
சமீபத்திய வெளிப்பாடுதான் என்பது அறியப்படவேண்டும்.
சோவியத்திற்கு பிந்தைய காலம் முழுவதும், பால்டிக் நாடுகளின் செல்வந்த
தட்டுகளும், அவர்களின் செய்தி ஊடகங்களும், கல்விக்கழக வக்காலத்து வாங்குபவர்களும் முன்னாள் சோவியத்தின்
ஏனைய பகுதிகளில் இருந்த தொழிலாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பாராம்பரியத்திலிருந்து தொழிலாள
வர்க்கத்தைப் பிரிக்கும் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிப்போக்கு
USSR வீழ்ச்சிக்கு நெடுநாள் முன்னரே ஸ்ராலினிச
அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழே தொடங்கிவிட்டது.
உண்மையில், பால்டிக் தொழிலாள வர்க்கம் தங்களது ரஷ்ய சகோதர,
சகோதரிகளுடன் பொதுவாகக் கொண்டுள்ள வளமான புரட்சிகர வரலாற்றினைக் கொண்டுள்ளது, இதை ஸ்ராலினிச
அதிகாரத்துவத்தின் குற்றங்கள் அழித்துவிட முடியாது.
1917-ம் ஆண்டு, இப்பகுதி முதல் உலகப்போரில் போர்க்களமாக இருந்தபோது,
சோவியத்துக்கள் அல்லது தொழிலாளர்களின் சபைகள் லாத்வியாவின் தலைநகரான ரீகாவிலும் ஜேர்மனியின்
ஆக்கிரமிப்பு இல்லாத பல இடங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில், போல்ஷிவிசம் ரீகா
தொழிலாள வர்க்கத்திடையே ஆதிக்கம் கொண்ட அரசியல் சக்தியாக ஆனது. எஸ்தோனியாவில், போல்ஷிவிக்குகள்
1917-ல் ஏறுமுக நிலையை அடைந்தனர், அங்கிருந்த தொழிலாளர்கள், கடற்படை வீரர்கள் மற்றும்
படைவீரர்களின் சோவியத்துக்கள் பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் சக்திவாய்ந்த ஈர்ப்பு முனையாக
மாறின; பெட்ரோகிராட்டில் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர் முதலாளித்துவ பிராந்திய
சட்டமன்றமான மாபேயிவ்வை விடக் கூடுதலான திரண்ட சக்தியாக விளங்கியது.
அக்டோபர் 1917-ஐ ஒட்டி, போல்ஷிவிக்குகள் தங்களை எஸ்தோனியா, லாத்வியன்
சோவியத்துக்களுள் முன்னணி போக்காக அமைத்துக் கொண்டுவிட்டனர். இப்பிராந்தியத்தில் இருந்து
பெட்ரோகிராடிற்கு பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் பெருகி எழுந்து கொண்டிருந்த புரட்சிகர
நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கினைக் கொண்டிருந்தனர். புரட்சியை தொடர்ந்து, பால்டிக் நாடுகளில் இருந்த
தொழிலாளர்கள், புரட்சிக்கு ஏதிரான வெண் படைகளை அமைத்திருந்த உள்ளூர் பிரபுக்குலம்,
முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் தாக்குதல்களில் இருந்து புரட்சியை பாதுகாப்பதற்கு
லியோன் ட்ரொட்ஸ்கியால் தோற்றுவிக்கப்பட்டிருந்த செம்படையில் சேர்ந்து போரிட்டனர். லாத்வியன் துப்பாக்கி
வீரர்கள் லெனினுடைய தனிப்பட்ட காவற்படையிலும் பங்கு பெற்றிருந்தனர்.
ஜேர்மனி நவம்பர் 1918-ல் தோல்வியுற்றதை தொடர்ந்து, செம்படை, மற்றும்
நாடுகடத்தப்பட்டிருந்த சோசலிஸ்டுகள் பால்டிக் பகுதிகளில் ஜேர்மன் இராணுவம் காலிசெய்திருந்த இடங்களில்
நுழைந்து சோவியத் ஆட்சியை ஸ்தாபித்தனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப்போரில், செம்படை
அப்பிராந்தியத்தில் உள்ளூர் எதிர்ப்புரட்சிகர தேசியவாத சக்திகளுக்கும் அவர்களை ஆதரித்திருந்த வெளிநாட்டு
ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிராக பரந்த ஆதரவைப் பெற்றது. இந்த ஆதரவு முக்கிய நகர மையப் பகுதிகளில்
மட்டுமின்றி கிராமப் புறங்களில் இருந்தும் கிடைத்தது, அங்கு பல விவசாயிகளும், மத்தியகாலத்தில் இருந்து நிலத்தை
சொந்தமாகக் கொண்டிருந்த ஜேர்மனிய, போலந்து பிரபுக்குலத்தினர்களிடம் இருந்து தங்களை விடுவிக்கவுள்ளவர்கள்
என்று போல்ஷேவிக்குகளுக்கு பரிவுணர்வுடன் ஆதரவு காட்டினர்.
எவ்வாறாயினும், மிக அதிக அளவு படர்ந்திருந்த காரணத்தால், செம்படை
தன்னுடைய பிடியை பால்டிக் பகுதிக்குள் தொடர்ந்து கொண்டிருக்க முடியவில்லை; 1920-ம் ஆண்டு மாஸ்கோவில்
இருந்த போல்ஷிவிக் அரசாங்கம் மூன்று புதிய முதலாளித்துவ அரசுகளான லித்துவேனியா, லாத்வியா மற்றும்
எஸ்தோனியா ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த நாடுகள் உள்ளூர்
தொழிலாள வர்க்கத்தின் தோல்வியின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்டவையாகும், இதில் பல்லாயிரக் கணக்கான
புரட்சிகர தொழிலாளர்கள் சோவியத் ஒன்றியப் பிராந்தியத்திற்குள் புகலிடம் கோரி ஓட வேண்டியதாயிற்று.
முன்னாள் சோவியத் ஒன்றிய தொழிலாள வர்க்கத்தால் பொதுப் போராட்டங்கள்
நடத்தப்பட்ட நிலைக்கு மாறாக, இன்று பால்ட்டிக்கின் செல்வந்த தட்டு போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில்
நிறுவப்பட்ட எதிர்ப்புரட்சிகர முதலாளித்துவ அரசாங்கங்களை பெருமைப்படுத்தி பேசுகின்றன. 1920ம் ஆண்டு
தோற்றுவிக்கப்பட்ட மூன்று அரசுகளும், அவற்றின் இன்றைய பின்தோன்றல்கள் போலவே, தங்களின் மிகப் பெரிய
அண்மை நாடுகளின் பொருளாதாரத்திற்குத் தாழ்ந்து நின்று தேசிய பிறஇன பழிப்புவாதம் நடைமுறை என்ற அளவிற்கு
இவ்விடங்களில் அரசியல் சூழல் பாராமரிக்கப்பட்டு வந்தது.
போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த சுதந்திரத்தின்போது, பால்ட்டிக்
செல்வந்த தட்டு வலதுசாரிகள் மற்றும் பாசிசக் கூறுபாடுகளை தங்களுடைய ஆட்சிக்குத் தூண்களாக நம்பியிருக்க
வேண்டியிருந்தது. பொருளாதாரத்தில் மிகவும் பலவீனமாகவும் மூன்று நாடுகளிலும் மிக அதிகமான
பிற்போக்கானதாகவும் இருந்த லித்துவேனியா, தொழிலாளர் வர்க்கம் ஏராளமான சமூக ஜனநாயகவாதிகளை
எதிர்க்கட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்த பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர் அதன் வலதுசாரிக் கூட்டணி
அரசாங்கம் ஒரு உள் நெருக்கடியை சந்தித்த பொழுது, 1926-ம் ஆண்டு ஒரு சர்வாதிகார ஆட்சியாக
வடிவமெடுத்தது. தங்களுடைய பிளவுகளை தீர்க்கமுடியாமலும், பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்டிருந்த பெரும்
அச்சத்தின் காரணமாகவும், ஆளும் செல்வந்த தட்டு, பாசிச தேசியவாத சங்கத்தின் தலைவரான
Antonas Smetova-டம்
உதவியை நாடினர், மாஸ்கோவின் முகவாண்மைகள் பெரும் கொலைகள் மூலம் பலர் அகற்றப்படுவர் என்ற பயத்தை
ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்ததற்கு மத்தியில் அவர் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம்
அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
எஸ்தோனியாவில், முன்னாள் போர் வீரர்களின் சுதந்திரக் குழு என்ற அமைப்பு
1928-ல் நிறுவப்பட்டது; இது குட்டி முதலாளித்துவக் கூறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு
நாஜி-முறையிலான அமைப்பு, அது செம்படையுடன் போரிட்டு பின்னர் அந்நாட்டில் கம்யூனிச-எதிர்ப்பு அமைப்பாக
வளர்ச்சியுற்றது. அந்நாட்டில் தேசியவாத முடைநாற்றம் வீசும் சூழ்நிலை நிலவிய அக்காலக்கட்டத்தில், இந்த
அமைப்பு 1920-களின் கடைசிப் பகுதியிலும், 1930-களிலும் இருந்த பொருளாதார, சமூக நெருக்கடிகளை
பயன்படுத்திக் கொண்டு ஆதரவைத் திரட்டியது. தேசிய செல்வந்த தட்டுடன் நல்ல தொடர்பை இக்கட்சி
பெற்றிருந்தபோதிலும்கூட, அதிகாரத்தை அமைப்பதற்கு போதுமான உறுதி இதற்கு இல்லை என்றுதான்
கருதப்பட்டது. ஆனால் அதன் எழுச்சி, Konstantin
Pats-உடைய இராணுவ ஆட்சியையும் சர்வாதிகார ஆட்சியையும்
1934-ல் அமுல் படுத்துவதற்கு எஸ்தோனிய முதலாளித்துவத்திற்கு ஒரு போலிக் காரணத்தைக் கொடுத்தது.
எஸ்தோனியாவின் உதாரணத்தை வெகுவிரைவிலேயே லாத்வியாவும் தொடர்ந்தது,
ஏனெனில் இதன் செல்வந்த தட்டு எஸ்தோனிய நிகழ்வுகளுக்கு விடையிறுக்கும் வகையில் இங்கும் தொழிலாள
வர்க்கத்தின் இடது இயக்கம் ஏற்பட்டுவிடுமோ என்பதைப் பற்றியும் பொருளாதாரப் பின்னடைவு என்ற பெரும்
அச்சத்தின் பிடியிலும் இருந்தது. மே 1934-ல் "தேசிய ஐக்கிய மந்திரி சபை" என்ற அரை சர்வாதிகார
அதிகாரங்கள் கொண்ட அமைப்பு ஒன்று உருவாயிற்று.
ஸ்ராலினிசத்தின் பங்கு
தேசியவாதத்தின் மூலம் தங்களுடைய ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிலைநிறுத்தும்
முயற்சியில் ஈடுபட்டுள்ள பால்ட்டிக் அரசுகளில் உள்ள இன்றைய முதலாளித்துவ வர்க்கம் ஸ்ராலினிச
அதிகாரத்துவத்தால் காட்டிக்கொடுக்கப்பட்ட பல தசாப்தகால மரபை பயன்படுத்திக் கொண்டுள்ளனர், நாட்டின்
இன்றைய அரசியல் செல்வந்த தட்டுக்களின் பல உறுப்பினர்களும் இவர்களின் அணிகளில் இருந்து
பெறப்பட்டவர்கள்தான்.
ஸ்ராலினால் வலுப்படுத்தப்பட்ட அதிகாரத்துவ ஆட்சியும், 1920களின் கடைசிப்
பகுதியை ஒட்டி அவரைச் சூழ்ந்திருந்த குழுவும், 1928-ல் இடது எதிர்ப்பாளர்கள் பரந்த அளவில் கைது
செய்யப்பட்டபின்னர் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கும் உலகப் புரட்சிக்கும் பெரும் பின்னடைவு
ஏற்படுத்தியதைக் குறித்தது. அதன் தேசியக் கொள்கையான "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாதக்
கொள்கையை ஒட்டி மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஸ்ராலினிசம் சோவியத்
ஒன்றியத்தில் இருந்து விரோதப்படுத்திவிட்டது; இது 1929-ம் ஆண்டில் இருந்து மிருகத்தனமான விவசாயக்
கூட்டுப்பண்ணைமயமாக்கல் போன்ற பேரழிவு தரக்கூடிய மிகக் கடுமையான விளைவுகளைத் தோற்றுவித்தது.
தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற முன்னோக்கை ஏற்றமை கம்யூனிஸ்ட் கட்சிகளின்
மூலோபாய அச்சான---உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நிராகரித்ததைக் குறித்தது. இதன்
இடத்தில் ஒரு தேசியவாத முன்னோக்கு அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்திடல் வேண்டும் என்பது
முதன்மையாக இருத்தப்பட்டது; அதன் பின்தங்கிய நிலமை, தனிமைப்படல் இவற்றின் விளைவாக சோவியத்
ஒன்றியத்திற்குள்ளே எழுந்த அதிகாரத்துவ சாதி, ஸ்ராலினை சுற்றி சலுகைமிக்க வகையில் இருப்பதற்கான
அடிப்படையும் நீட்டிக்கப்பட்டது.
புரட்சிகர உணர்வு விரிவடைந்து செல்வது மற்றும் அதன் செயலாற்றத்தூண்டும் தாக்கம்
ஆகியவை சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே அதன் சொந்த இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவித்துவிடும் என்று
அஞ்சி, ஸ்ராலினிச அதிகாரத்துவம்தான் முதலில் ஆழ்ந்த ஐயுறவாத தன்மையையும் பின்னர் ஐரோப்பிய மற்றும்
சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டங்களுக்கு வெளிப்படையான விரோதப்
போக்கையும் காட்டியது: 1933-ம் ஆண்டு ஜேர்மன் தொழிலாள வர்க்கம் ஸ்ராலிஸ்டுகளால் பின்பற்றப்பட்ட
பேரழிவுகர கொள்கைகளின் விளைவாக பெரும் தோல்வியை தழுவியது, மற்றும் ஹிட்லர் ஒரு குண்டு கூட
வெடிக்காமல், ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. சோவியத் ஒன்றியத்திற்குள்ளே நனவுபூர்வமாக எதிர்ப்
புரட்சிகர சக்தியாக வெளிப்பட்ட அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான ஒவ்வொரு அரசியல்
நடவடிக்கையையும் செயலூக்கத்துட்ன் நசுக்கியது. இது கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிகாரத்துவம் தேசியரீதியாக
கருதியிருந்த நலன்களின் பாதுகாப்பிற்கு உகந்த கருவிகளாக மாற்றிவிட்டது.
சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு புரட்சிகர வழிகளால் பாதுகாக்கப்படவில்லை,
மாறாக பலதரப்பட்ட முதலாளித்துவ வல்லரசுகள் அல்லது முதலாளித்துவ அரசுகளுள்ளே உள்ள முற்போக்கு சக்திகள்
என்று கூறப்படுபவை ஆகியவற்றுடன் உடன்பாட்டை நாடுவதன் மூலம்தான் பாதுகாக்கப்படும் என்று ஆயிற்று.
ஸ்ராலினிஸ்டுகள் பிராங்கோவிற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் தொடர்ந்து ஜனநாயக
முதலாளித்துவத்திற்கு தாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி தங்களுடைய சோசலிச, இடது
எதிர்ப்பாளர்களை மிருகத்தனமாக அடக்கிய பொழுது, இந்தக் கொள்கை அதன் பெருந்துன்பம் நிறைந்த
வெளிப்பாட்டை ஸ்பானிய புரட்சி காட்டிக்கொடுப்பிலும் அப்புரட்சியின் தோல்வியிலும் கண்டது. ஸ்ராலினிச
தன்னலக்குழு நாஜி ஜேர்மனியுடன் உடன்பாட்டை காணும் முயற்சிகளில் அழிவு தரும் விளைவுகளை பின்னர் இது தந்தது,
இது இரண்டாம் உலகப் போர் ஏற்படுவதற்கு சற்று முன்னர் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தை
நிராயுதபாணியாக்கவும் நோக்குநிலை தவறச்செய்யவும்தான் பயன்பட்டது.
1939-ம் ஆண்டு மோலோடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஜேர்மனிக்கும் சோவியத்
ஒன்றியத்திற்கும் இடையே ஒருவர்க்கொருவர் ஆக்கிரமிப்பு கூடாது என்றும் வடகிழக்கு ஐரோப்பா இரு நாடுகளுக்கும்
இடையே எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியது.
சோவியத் ஒன்றியம், பால்டிக் நாடுகளில் படைகளை நிறுத்திவைத்தது, 1940-ல்
மூன்று அரசுகளும் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன. தேசியவாதிகள், ஸ்ராலினிச-எதிர்ப்பாளர்கள் இவர்களை
களையெடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஸ்ராலினுடைய மிருகத்தனமான, உணர்வற்ற முறையில் நடத்தும் விதம்
வலதுசாரி தேசிய சக்திகளுக்கும், அரசியலில் நோக்குநிலை தவறிய தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு
நம்பிக்கையைக் கொடுத்தது. இதன் விளைவு, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அதன் திருப்திப்படுத்தும் முயற்சியாக
பால்டிக் பிராந்தியத்தில் படையெடுப்பை மேற்கொண்டபோது, ஜேர்மனியப் படைகள் திருப்பித்தாக்கிய பொழுதும்
1941-ல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போருக்குச் சென்றபோதும் அதற்கான எதிர்ப்பை இப்பிராந்தியத்தில்
பலவீனப்படுத்தியது.
பால்டிக் நாடுகளை ஜேர்மனி ஆக்கிரமித்திருந்த காலத்தில், ஆயிரக்கணக்கான உள்ளூர்
மக்கள் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு காட்டும் படைப்பிரிவுகளுள் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். ஆயினும், ஏனைய பலரும்
தாமே விரும்பிப் படையில் சேர்ந்தனர். உக்ரைனிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இதர பகுதிகளிலும் செய்ததுபோல்
நாஜிக்கள் பால்டிக் அரசுகளின் மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்ட முடிந்தது என்றால், அது முந்தைய காலத்தில்
ஸ்ராலினிசம் செய்திருந்த காட்டிக் கொடுப்புக்களின் பழிகூறத்தக்க பெரும் குற்றச் சாட்டாக இருக்கின்றது.
1945-ம் ஆண்டு மே மாதம், செம்படை நாஜி ஜேர்மனி மீதான தன்னுடைய இறுதி
வெற்றியை பேர்லினில் நிகழ்ந்த கடும் போருக்குப் பின்னர் பெற்றது. இதுதான் நான்கு மாதங்கள் மேற்குப்புறத்தில்
சோவியத் படைகள் கடுமையாக நிகழ்த்திய தாக்குதலின் இறுதிக்கட்டமாகும்; இது வார்சோ விடுதலையில் தொடங்கி,
பின்னர் பால்டிக் அரசுகளும் ஜனவரியில் விடுதலைபெற்றதை கண்டது. ஸ்ராலினிச காட்டிக் கொடுப்புக்களின் வரலாறு
இருந்த போதிலும்கூட, செம்படை பால்டிக் பிராந்தியத்தை, ஜனவரித் தாக்குதல்கள் தொடங்கிய சில நாட்களிலேயே
கைப்பற்ற முடிந்தது; இதில் பலநேரமும் உள்ளூர் நாஜி எதிர்ப்பாளர்களின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்தது.
பால்டிக் அரசுகள் சுதந்திரம் அடைந்த பின்னர், நாஜி ஆக்கிரமிப்பின்போது நிகழ்த்தப்பட்ட
குற்றங்களின் முழு பரிமாணமும் வெளிவந்தது. போர்களுக்கு இடைப்பட்ட சுதந்திரகாலத்திலேயே குறைந்துவிட்டிருந்த
உள்ளூர் யூத மக்கட் தொகையினர் கொல்லப்பட்டனர். 1939-ம் ஆண்டு, லித்துவேனியாவில், பல்லாயிரக்கணக்காக
இருந்த யூதர்களில் பெரும்பாலானோர், நாட்டின் மக்கள்தொகையில் 6 சதவீதத்திற்கும் மேலாக இருந்தவர்கள்,
1945-ல் அழிக்கப்பட்டுவிட்டனர்.
தொடரும்...
Top of page
|