World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canada's Liberal government faces imminent defeat

கனடாவின் தாராளவாத அரசாங்கம் உடனடி தோல்வியை எதிர்நோக்குகிறது

By Keith Jones
20 April 2005

Back to screen version

கனடாவின் தாராளவாத அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறி அரசாங்கம் தனது பதவியை இழக்கின்ற ஒரு பெரிய ஆபத்து தோன்றியுள்ளது, அரசாங்கம் ஊழல் தொடர்பாக நடைபெற்ற ஒரு பொதுவிசாரணையில் சாட்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எதிர்கட்சிகள் முயன்று வருகின்றன.

Groupaction சந்தைப்படுத்தும் நிறுவன முன்னாள் தலைவர் Jean Brault மற்றும் இதர சாட்சியங்கள் கியூபெக்கில் கனடா மத்திய அரசாங்கத்தின் திட்டம் ஒன்றை விளம்பரப்படுத்துவதற்காக நன்கொடை அளிப்போர் பட்டியலை தயாரித்து அவர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட நிதி சட்டவிரோதமாக தாராளவாத கட்சிக்கு திருப்பிவிடப்பட்டது என்பது தொடர்பான குற்றச்சாட்டுக்களை நீதிபதி ஜோன் கோமரி விசாரணையில் தெரிவித்துள்ள விவரங்கள் கனேடிய அரசியலில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. Groupaction, மற்றும் இதர விளம்பர நிறுவனங்களின் நிர்வாகிகள் விளம்பரம் செய்வதற்கான ஒப்பந்தம் கிடைப்பதற்காக தாராளவாத கட்சிக்கு ஏராளமான நன்கொடைகள் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். சில துணை ஒப்பந்தங்கள் தாராளவாத கட்சியோடு தொடர்புள்ளவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தாராளவாதக்கட்சி தொழிலாளர்கள் அந்த நிறுவனங்களின் ஊதியங்களை பெற்று வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

கனேடிய மக்களில் சாதாரணமானவர்கள் பலர் இந்த சாட்சியங்கள் குறித்து அதிர்ச்சியடைதிருந்தாலும் கனடா அரசியலை நன்கு புரிந்து கொண்ட நிபுணர்கள் எதிர்கட்சிகளின் ஆவேசம் மற்றும் பத்திரிகைகளில் பெரும்பாலானவற்றின் விமர்சனங்கள் ஆகிவற்றிற்கும் அப்பால், அத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்மாதிரிகள் எதுவும் இல்லாமல் இல்லை. Globe and mail பத்திரிகையின் ஆசிரிய தலையங்கத்தில் பழமைவாதக்கட்சி தலைவர் ஸ்டீபன் ஹார்பருக்கு, டோரி பிரதமர் பிரையன் மல்ரோனியின் ஒரு தலைமை உதவியாளர் நோர்மன் ஸ்பெக்டர் இந்த வாரம் ஒரு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார் ''ஸ்டீபன் அவர்களே நீங்கள் நீண்டகாலமாக ஒட்டாவாவை சுற்றி நடப்பதை அறிந்திருக்கிறீர்கள், உங்களுடைய பழமைவாதக் கட்சி அரசாங்கத்திலும் இது போன்ற அரசாங்க ஒப்பந்தம் மற்றும் கட்சிக்கு நன்கொடைகள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கக்கூடும்.''

எவ்வாறிருந்தபோதிலும், ஹார்பர் ஸ்பெக்டரின் கோரிக்கையை புறக்கணித்து, நீதிபதி கோமரி இறுதி அறிக்கை வெளியிடும்வரை அரசாங்கத்தை கவிழ்க்கமாட்டார் என்று கருதுவதற்கு இடமில்லை'' என்னுடைய மனச்சாட்சியும் கனேடிய மக்கள் விருப்பத்தையும் பொறுத்து எனது நடவடிக்கையை அமைத்துக்கொள்வேன்'' என்று பழமைவாத கட்சி தலைவர் குறிப்பிட்டார். இதை வேறுவார்த்தைகளில் குறிப்பிடுவதென்றால் இலையுதிர் கால கடைசியிலோ அல்லது கோடை கால தொடக்கத்திலோ பழமைவாத கட்சிக்காரர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்குமானால் அவர் தாராளவாத கட்சிக்காரர்கள் ஆட்சி புரிவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள் என்று வாதிடுவார்.

பழமைவாதிகள் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ள ஆர்வத்துடன் உள்ளதுடன், நாட்டை எதிர்நோக்கியுள்ள மத்திய பிரச்சனையான ''ஊழலுக்கு எதிராகவா ஆதரவாகவா உள்ளது'' என்பதை மையப்படுத்தி தங்களது தேர்தல் வாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். அமெரிக்காவின் குடியரசுக் கட்சிக்காரர்களின் நெருங்கிய நண்பர்களான பழமைவாதிகள், தாராளவாத கட்சி அமைப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மற்றும் சாட்சியங்களை பெரிதுபடுத்தி பிரச்சாரம் செய்து தங்களது சொந்த வலதுசாரி செயல்திட்டம் மற்றும் மத அடிப்படையிலான வலதுசாரிகளின் தொடர்புகள் பற்றி விவாதிப்பதை தவிர்க்க விரும்புகின்றனர்.

ஏறத்தாழ ஒரு தசாப்தம் வரை நடைபெற்ற 200 மில்லியன் டாலர் செலவினங்களில் தாராளவாத கட்சி முறைகேடாக செலவிட்டது. அதனால் ஏற்பட்ட குற்றவியல் அடிப்படையிலான முறைக்கேடுகள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள குற்ற்றச்சாட்டுக்களின் தன்மைகளை திசைத்திருப்பி, மத்திய அரசாங்கத்தின் செலவினங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை எனவே அவற்றை கடுமையாக வெட்டவேண்டும் என்ற தங்களது வாதத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர்.

உண்மையிலேயே இந்த விளம்பர நிறுவன ஒப்பந்தங்களில் சம்மந்தப்பட்டிருக்கின்ற பணம் உண்மையிலேயே தராளவாதிகள் பொது மற்றும் சமூக சேவைகளின் செலவினங்களில் வெட்டுச் செய்திருக்கும் பில்லியன்கணக்கான டாலர்கள் மற்றும் வரி வெட்டுக்கள் மூலம் பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் வசதியானவர்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளோடு ஒப்பிடும்போது இந்த மோசடியில் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் தொகை கோழித்தீவன அளவிற்கு உள்ள சொற்ப தொகைதான்.

கியூபெக்-சார்பு சுதந்திர இயக்கமான Bloc Québécois வும் ஒரு புதிய தேர்தலை நடத்துவதற்கு நிர்பந்திப்பது தங்கள் நலனுக்கு உகந்தது என்றே நம்புகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் Bloc Québécois இன் சகோதரக்கட்சியான Parti Québécois தொழிலாள வர்க்க வாக்காளர்கள் கூட்டங்கூட்டமாக அக்கட்சியிலிருந்து வெளியேறியதால் தேர்தலில் படுதோல்விகண்டது. ஒன்பது ஆண்டுகளாக அரசாங்கத்தை நடத்தி வந்த Parti Québécois நிர்வாகத்தில் பொது சுகாதார சேவைகள் கல்வி மற்றும் இதர பொதுசேவைகள் சீர்குலைந்துவிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவ்வாறு தொழிலாளர்கள் அக்கட்சியை புறக்கணித்தனர். ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவோடும் மத்திய தாராளவாத அரசாங்கத்தின் ஊழல் மற்றும் கியூபெக் தாராளவாத அரசாங்கம் கடைபிடித்த வலதுசாரி கொள்கைகளிலும் மக்களது ஆத்திரத்தை பயன்படுத்தி Parti Québécoisவும், Bloc Québécoisவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தன.

நாடாளுமன்ற பதவிகளை பெற்றுவிடமுடியும் என்று Bloc Québécois கணக்கிடுகிறது. அது ஒட்டாவா மாகாணத்தில் ஆங்கில இனவாத்தோடு பாரம்பரியமாக சம்மந்தப்பட்டுள்ள பழமைவாதிகள் ஆட்சிக்கு வருவதை எதிர்க்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒரு பழமைவாத அரசாங்கம் கியூபெக் மாகாணத்திலிருந்து எந்த பாராளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பவில்லை. அதன் மூலம் மத்திய அரசாங்கம் கியூபெக் மாநிலத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, என்று BQவும், PQவும் வாதிடுவது எளிதாக உள்ளது. கனடாவின் மேற்குப்பகுதியிலுள்ள பெருவர்த்தக நிறுவனங்களிடமிருந்து தனது ஆதரவில் பெரும்பகுதியை பெற்றுக்கொண்டு வருகின்ற பழமைவாதக்கட்சி நீண்டகாலமாக மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் என்று கோரிவருகிறது.

பழமைவாதிகளும், BQவும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் 153 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறது, எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கூட தவறாமல் நாடாளுமன்ற கூட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்களானால் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஒரு வாக்கு குறைவாக உள்ளது.

இதுவரை சமூக-ஜனநாயக புதிய ஜனநாயகக்கட்சி (NDP) தனது 19 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை தோற்கடிக்க வாக்களிப்பார்களா என்பதை தெளிவாக அறிவிக்கவில்லை.

புதிய ஜனநாயகக்கட்சி பெருவர்த்தக தாராளவாதிகளோடு நீண்டகாலமாக உறவு வைத்திருக்கின்ற இழிபுகழ் சாதனைபடைத்தது. 2004 ஜூனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது புதிய ஜனநாயகக்கட்சி தலைவரான Jack Layton மத்திய சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கின்ற வகையில் தனது கட்சிக்கு போதுமான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று தெளிவாக அறிவித்தார். சென்ற பொதுத்தேர்தல்களுக்குப் பின் Layton இன் சமிக்கைகளை தாராளவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் மேலும் தொடர்ந்து வலதுசாரி பக்கம் சாய்ந்தனர். புஷ் நிர்வாகத்துடன் நேசம் பாராட்டி, பெருநிறுவன வரி விதிப்புக்களை மேலும் குறைத்து, இராணுவ செலவினங்களை அதிகரித்தனர். எனவே சமூக ஜனநாயவாதிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு தாம் தாராளவாதிகளை ஆதரிப்பதை நியாயப்படுத்த இயலவில்லை.

என்றாலும் புதிய ஜனநாயகக்கட்சி வாக்குகள் இல்லாமலேயே மூன்று சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரது ஆதரவை பெற்றாலே பழமைவாதிகள் மற்றும் BQ வினர் இணைந்து அரசாங்கதை தோற்கடித்துவிட முடியும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் ஒரு காலத்தில் பழமைவாதிகளாக இருந்தவர்கள்.

எந்த அளவிற்கு தாராளவாத அரசாங்கம் தோல்வியின் விளிம்பில் உள்ளது என்பதை கோடிட்டுக்காட்டுகின்ற வகையில் திங்களன்று தாராளவாதிகள் தங்களது அரசாங்கத்திற்குள்ள தனி அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள்சபை நாட்காட்டியில் இடம்பெற்றிருந்த எதிர்கட்சிகள் தினத்தை இரத்துசெய்துவிட்டனர். எதிர்கட்சிக்களுக்கென்று மக்களவையில் ஒதுக்கப்படும், தினங்களில் எதிர்கட்சிகள் வாதத்திற்குரிய பிரச்சனைகளையும் தீர்மானங்களையும் தாக்கல் செய்யமுடியும் டோரிக்கள் இந்த தினங்களைப்பயன்படுத்தி ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தாராளவாதிகள் அஞ்சியதால் அந்த எதிர்கட்சி தினங்களை மக்களவை நிகழ்ச்சிநிரலில் இருந்து இரத்து செய்துவிட்டனர்.

அதைவிட சற்று அதிகமாக அம்பலப்படுத்துகின்ற வகையில் தாராளவாதிகள் தங்களது பழமைவாதிகளுக்கு எதிரான வாய்வீச்சை முடுக்கிவிட்டிருக்கின்றனர். டோரிக்கள் பிரிவினைவாத BQ வை ஆதரிப்பதாகவும் உதவிவருவதாகவும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிளவுவாத சமூகக்கொள்கைகளை கடைபிடிப்பார்கள் என்று தாராளவாதிகள் கூறுகின்றனர். தாராளவாதிகள் அண்டாரியோவின் பழமைவாத முன்னாள் பிரதமர் மைக்ஹா ரீஸ் மற்றும் புதிய பழமைவாதிகளின் பிரதான அங்கமான கனடா கூட்டணியின் நிறுவனர் பிரஸ்டன்மேனிங்கும் இணைந்து தயாரித்துள்ள ஒரு அறிக்கையை தாராளவாதிகள் உடனடியாக பொதுமக்களது கவனத்திற்கு சுட்டிக்காட்டி கனடாவின் அனைவருக்கும் பொதுவான பொது சுகாதாரத்திட்டம் ஆபத்தில் இருப்பதாக கூறியுள்ளனர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு வலதுசாரி முன்மொழிவுகளில் மேலும் ஓராண்டிற்கு 80 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வரிவெட்டுக்கள் செய்வதற்கும் சுகாதார சேவைக்கு மத்திய அரசாங்கம் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யக்கூடாதென்று வசதிபடைத்தவர்கள் பணம் செலவிட்டு சிறந்த மருத்துவ சேவைகளை பெறுவதற்கும் பரிந்துரைகள் அடங்கியிருக்கின்றன. வலுவான சுதந்திரமான கனடா என்ற அந்த அறிக்கையின் முன்மொழிவுப்படி மிகப்பெரும்பாலான மக்கள் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட பொது சுகாதார சேவைகளை நம்பியிருக்க வேண்டியநிலை ஏற்படும்.

ஹாரிசும், மானிங்கும் தங்களது கட்சிக்கொள்கையை உருவாக்கவில்லையென்று பழமைவாதிகள் பதிலளித்துள்ளனர், ''மறைமுக டோரி செயல்திட்டம்'' பற்றிய குற்றச்சாட்டுக்களை பழமைவாதிகள் மறுத்துள்ளனர் தாராளவாதிகள் தங்களை பூதாகரமாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டினர்.

ஒருவகையில் பார்த்தால் இருதரப்பினருமே சரியாகத்தான் கூறுகின்றனர். டோரிக்கள் தங்களது கவனத்தை தாராளவாதிகளின் ஊழல் மீது தங்களது கவனத்தை திருப்பியிருப்பது தங்களது உண்மையான நோக்கங்களை மூடிமறைப்பதில் அவர்களது கவலையைக்காட்டுகிறது. தாராளவாதிகளுக்கு பழமைவாதிகள் ஒரு ''மிதவாத'' மாற்றீடு என்று ஹார்பர் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் ஒரு நவீன-பழமைவாத சிந்தனையாளர், அவரது கட்சி அமெரிக்க குடியரசுக் கட்சிக்காரர்களையும் புஷ் நிர்வாகத்தையும் தனது முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறது. கனடாவின் ஒரு பழமைவாத அரசாங்கம் உருவாகுமானால் அது பாரிய பொருளாதார மந்த நிலைக்கு பின் கனடாவின் மிக வலதுசாரி தேசிய அரசாங்கமாக இருக்கும்.

தாராளவாதிகளை பொறுத்தவரை, முற்போக்கு பழமைவாதிகள், சீர்திருத்தக்கட்சி கனடா கூட்டணி மற்றும் தற்போது புதிய பழமைவாதக்கட்சி ஆகியவற்றை தனது வலதுசாரி முகமூடியாக பயன்படுத்திக்கொள்கிறது, ஒரு பிற்போக்குவாத அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு அது பொது மற்றும் சமூக தேவைகளை ரத்துசெய்துவிட்டு பணக்காரர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதை தவிர்க்கும் ஒரேவழி என்று சொல்லி தாராளவாதிகள் வாக்குகளை பெறுகின்றனர். பதவியில் உறுதியாக அமர்ந்து கொண்ட பின்னர் தங்களது எதிர்கட்சிகளான வலதுசாரிகளின் கொள்கைகளை நிறைவேற்றுகின்றனர். ஆக தாராளவாதிகள் மல்ரோனி அரசாங்கத்தின் GST மற்றும் NAFTA திட்டங்களை ஏற்றுக்கொண்டனர், சீர்திருத்தக்கட்சி மற்றும் கனடாக்கூட்டணி கோரிய பாரியளவு செலவின மற்றும் வரிவெட்டுக்களை செயல்படுத்தியது கியூபெக் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஹார்பர் மற்றும் மானிங் கூறிய அளவிற்கு ஏற்றுக்கொண்டது. அந்த முன்மொழிவுகளில் கியூபெக்கை பிரிவினை செய்யும் அச்சுறுத்தலும் அடங்கியிருக்கிறது. இப்போது பழமைவாதிகள் கோரிய பாரியளவு இராணுவ செலவின அதிகரிப்பை தவணை முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் புதிய ஜனநாயகக்கட்சி எப்போது எந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் கடந்த ஒன்றரை தசாப்தத்திற்கு மேலாக நவீன தாராளவாத செயல்திட்டங்களான பொது மற்றும் சமூக சேவைகள் வெட்டு பற்றாக்குறையில்லாத வரவுசெலவுத்திட்டம், தனியார்மயமாக்கல் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றிவருகிறது. அவை தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகளின் திட்டங்களில் இருந்து அடிப்படையில் வேறுபட்டவையல்ல.

ஒரு முதலாளித்துவ அமைப்பின் கட்சியான புதிய ஜனநாயகக்கட்சி இப்போது கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. கனடாவில் பெருவர்த்தக நிறுவனங்களின் பாரம்பரிய ஆளும் கட்சியான தாராளவாதிகளுக்கு வாக்களிப்பது உழைக்கும் மக்களது நலன்களுக்கு உகந்தது என்று முதலில் Jean Chrétien உம் இப்போது கோடீஸ்வர கப்பல் அதிபர் Paul Martin உம் கூறிவருவதற்கு பதிலளிக்கவேண்டிய கட்டாயம் புதிய ஜனநாயகக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

தேர்தல்கள் நடக்கும் என்று தோன்றுகின்ற இந்த நேரத்தில் தாராளவாதிகள், திடீரென்று தங்களை அப்பட்டமான ஒரு முற்போக்கு கட்சி என்று காட்டிக்கொள்ள தன்னை மாற்றிக்கொண்டிருப்பது குறித்து புதிய ஜனநாயகக்கட்சி தலைமை கவலையடைந்திருப்பதாக Globe and Mail தகவல் தந்திருக்கிறது அந்த பத்திரிக்கைக்கு பேட்டியளித்த புதிய ஜனநாயகக்கட்சியின் உள்விவகாரங்கள் தெரிந்த ஒருவர் ''எனவேதான் நாங்கள் தற்போது டோரிக்களை பூதாகரமாக சித்தரித்து அவர்களை அவதூறு செய்யவிரும்பவில்லை ஏனென்றால் அது உண்மையிலேயே எங்களை திரும்பதாக்கிவிடும், எனவே நாங்கள் டோரிக்களை ஒரு மிதவாத அமைப்பாகவே சித்தரிக்கிறோம், சட்டபூர்வமான மும்முனைப்போட்டியை விரும்புகிறோம்'' என்று குறிப்பிட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமை மீது முடிவற்ற தாக்குதல்கள் நடைபெற்று வருவதற்கு எதிரான பதில் பழமைவாதிகளுக்கு எதிராக தாராளவாதிகளோடு அணிசேர்வதோ அல்லது பழமைவாதிகளிடமிருந்து வருகின்ற அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. தோற்றுவிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் தேசியவாத சீர்திருத்த முன்னோக்கை தொழிலாள வர்க்கம் உதறித்தள்ளிவிட்டு ஒரு சர்வதேச அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிரான வேலைதிட்டத்திற்காக போராடும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தன்னை மாற்றிக்கொள்வதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved