:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா :
பிரித்தானியா
An exchange on the nationalism of the
Scottish Socialist Party
ஸ்கொட்டிஷ் சோஷலிஸ்ட் கட்சியின் தேசியவாதம் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்
By Chris Marsden
25 April 2005
Back to screen version
கீழ்க்கண்ட மின்னஞ்சல், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையான "பிரித்தானிய
தொழிலாள வர்க்கமும் 2005
பொதுத் தேர்தலும்"
என்பதற்குப் பிரதிபலிப்பாக வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரித்தானியாவின்
சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளரான கிறிஸ் மார்ட்சனுடைய பதிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
2005 பொதுத் தேர்தலைப் பற்றி வெளிவந்த சோசலிசச் சமத்துவக் கட்சி (பிரித்தானியா)
அறிக்கை, ஸ்கொட்டிஸ் சோசலிச கட்சியை பற்றிய முழுப் பிழையான பிரதிபலிப்பைக் காட்டியதின் மூலம் சிதைவுற்றுள்ளது.
சுதந்திரத்திற்காக அழைப்புவிடும் அரங்கில் நின்றாலும், நாங்கள் "தேசியவாதிகள் அல்ல". முதலாளித்துவத்திற்கு
மாற்றாக உள்ள ஒரே கட்சி ஸ்கொட்லாந்தில் எங்களுடையதுதான். ஏன், ஏன், இடது கட்சிகள், எல்லா நேரங்களிலும்,
ஒன்றை ஒன்று நெரித்துக் கொல்ல முற்படுவதற்குப் பதிலாக, அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்படமுடியாது? மாற்றத்தை
நாம் சாதிக்க முடியும் என்றால் -- எவ்வளவு சிறிய வகையிலாவது என்றாலும்கூட -- அது தொழிலாள வர்க்கத்திற்கு
நலன்களை உருவாக்குவதுடன் அவர்களை இன்னும் கூடுதலாக, எதிர்பார்ப்பையும் கொள்வதற்கு வழி வகுக்காதா? சில நேரங்களில்
சோசலிசத்திற்கான போராட்டம் என்பது ஒரு பெரிய விளையாட்டுத் திடலில் நடக்கும் விளையாட்டுப் போல் நடத்தப்படுகிறது
என்று நான் நினைக்கிறேன்; இங்கு சொற்தாக்குதல்கள், அவமதிப்புக்கள்தான் பறக்கின்றனவே ஒழியாக, உருப்படியாக
ஏதும் நடக்கவில்லை. நான் ஸ்கொட்டிஸ் சோசலிசக் கட்சியில் சேர்ந்ததற்குக் காரணம் உண்மையில் ஏதாவது செய்யவேண்டும்
என்பதற்காகவே ஒழிய விளையாடுவதற்கு அல்ல. டோரிக்கள், அவர்கள் தொழிற்கட்சியினர், தாராளவாத ஜனநாயகவாதிகள்,
பழைமைவாதிகள் அல்லது ஸ்கொட்டிஷ் தேசியவாதிகள் என்று எவராக இருந்தாலும், அதுவும் சக சோஷலிஸ்டுகள் எனக்
கூறிக் கொள்பவர்கள் நம்முடைய முதுகுகளில் குத்தாமல் பார்த்துக்கொண்டு அவர்களோடு போராடுவதே கடினமாக இருக்கிறது;
ஸ்கொட்லாந்தில் நாங்கள் கூறுவதுபோல்: எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்.
N.A. ஸ்கொட்லான்ட்.
திருமதி A
அவர்களுக்கு;
்ஸ்்ெகாட்டிஷ் சோசலிஸ்ட் கட்சியை பற்றி நாங்கள் கொடுத்துள்ள மதிப்பீடு அரசியல்
ரீதியானதாகும்: இதில் பிறரை அவமதிக்கும் இழிசொற்களை கூறவேண்டும் என்ற கருத்து சிறிதும் கிடையாது. ஸ்கொட்டிஷ்
சோசலிஸ்ட் கட்சியை நாங்கள் ஒரு தேசியவாத கட்சியென்று வரையறை கொடுத்துள்ளது, அதை அவமதிப்பதற்காக
அல்ல; இது அவர்கள் கட்சியின் திட்டவகையிலான அஸ்திவாரங்களில் ஒன்றாக உள்ளது.
உண்மையில் ஸ்கொட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி தேசியவாத கட்சி என்பதை நீங்கள் மறுப்பதில்
ஓர் அரசியல் குருட்டுத்தன்மையின் கூறுபாடு காணப்படுகிறது. சோசலிஸ்டோ, வேறுவிதமோ தன்னுடைய முக்கிய நோக்கம்
ஒரு சுதந்திரமான ஸ்கொட்லாந்தை அடைய வேண்டியது என்ற வகையில் பலமுறையும் வலியுறுத்திக் கூறுவது, பல சீர்திருந்த
நடவடிக்கைகளை ஏற்கும் வகையில் ஆதரவு கொடுப்பது, ஒரு நல்ல நாணயத்திற்கு விமர்சனரீதியான தகமைகள் தேவை
அல்லது ்ஸ்கொட்டிஷ் சோசலிஸ்ட் கட்சியின் கண்ணோட்டதை ஏற்றல் என்ற சோசலிசம் பற்றிய வார்த்தை ஜாலங்கள்
அதனை எடுத்துக்காட்டுகின்றன.
உங்களுடைய நலனுக்கும் எங்களுடைய வாசகர்களின் கவனத்திற்காகவும், ஸ்கொட்டிஷ்
சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட முறை, அதன் கொள்கைகள் பற்றி நாங்கள் எவ்வாறு பகுப்பாய்ந்தோம் என்பதைக்
கூறுவது தேவையாகிறது.
1998ம் ஆண்டு, ரொமி ஷெரிடன் தலைமையில்,
Scottish Militant Labour Group (SML)
எடுத்த ஆரம்ப முயற்சிகளின் அடிப்படையில் ஸ்கொட்டிஷ் சோசலிச கட்சி
நிறுவப்பட்டது. இதைச்செய்வதற்கு SML
மத்தியதர வர்க்க தீவிரவாதிகள், முன்னாள் தொழிற்கட்சியினர், ஸ்ராலினிஸ்டுகள் ஆகியோர் இருந்த
Scottish Socialist Alliance
என்ற கூட்டமைப்பை தன்னுடன் இழுத்து அரசியலில் தன்னுடைய இங்கிலாந்து
தாய்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி, மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சர்வதேச அமைப்பான
Committee for a Workers International
(CWI)
இவற்றில் இருந்து முறித்துக் கொண்டது.
ஸ்கொட்லாந்தில் நிலைகொள்வதற்கு
CWI உடனான
தொடர்ந்த இணைப்பு தேவையில்லை என்று SML
வாதிட்டது; மேலும், கூடுதலான போராளித்தன்மை, அரசியல் முன்னேற்றம் கண்டிருந்த ஸ்கொட்டிஷ் தொழிலாளர்
வர்க்கம், பின்தங்கிய, பிற்போக்கான தெற்கு எல்லைக்கு அப்பால் (பிரித்தானியா) உள்ள தங்கள் சகோதர, சகோதரிகளுடைய
நிலைக்கு அடிபணிந்து நிற்க வேண்டியதில்லை என்றும் கூறியது. மாறாக புதிதாக அமைக்கப்பட்ட ஸ்கொட்டிஷ் சோசலிசக்
கட்சி ஒரு ஸ்கொட்டிஷ் சோசலிசக் குடியரசை நிறுவி, அது பிறருக்கும் ஒளிகாட்டும் வகையில் செயல்படும் என்றும் கூறிற்று.
இது அதே நேரத்தில் பிரித்தானிய தேசிய நாட்டை உடைத்து விடும் என்றும் அது ஒரு முன்னேற்றமான வளர்ச்சியாகத்தான்
இருக்கும் என்றும் கூறியது.
அதனுடைய அரசியலில் பிரித்தானிய, ஸ்கொட்டிஷ் மற்றும் சர்வதேச தொழிலாள
வர்க்கத்துடன் இணைந்து போராட்டம் நடாத்துவதில் எந்தப் பயனும் கிடையாது என்ற முறையில்தான்
SSP உடைய அரசியல்
கணிப்பீடுகள் இருந்தன.
SSP தோற்றுவிக்கப்படுவதற்கான உடனடிப்
பின்னணி, பிளேயரின் அரசாங்கம் பதவிக்கு வததும், அது ஸ்கொட்லந்து, மற்றும் ஒரு ஸ்கொட்டிஷ் பாராளுமன்றத்திற்கு
அதிகாரம் வழங்கும் என்று உறுதிமொழி கொடுத்ததும்தான். இந்தப் போக்குகளை பயன்படுத்திக் கொண்டு தொழிற்சங்கம்
மற்றும் தொழிற்கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆதரவுடனும் மற்றும் தேசியவாத நப்பாசைகளை கொண்டிருந்த தொழிலாளர்கள்
மற்றும் Scottish National Party
இன் உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுவிடலாம் என்ற வாய்ப்பை
SSP கண்டது.
இத்தகைய நப்பாசைகள் தொழிலாள வர்க்கத்திடையே இருந்ததே, தொழிற்கட்சி மற்றும்
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசியல் காட்டிக் கொடுப்புக்கள் ஸ்கொட்டிஷ் எல்லையின் இருபுறமும் இருந்ததுதான்.
18 ஆண்டுகள் கன்சர்வேடிவ் ஆட்சி இருந்த காலமான 1979ல் இருந்து 1997 வரை, ஸ்கொட்லாந்து, தொழிற்கட்சியின்
அரணாக இருந்தது; டோரிக்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துவர் என்ற தொழிலாளர்களின் நம்பிக்கையில்
வீணானது. மாறாக, தொழிற்கட்சி இன்னும் கூடுதலான முறையில் வலதிற்குப் பாய்ந்து 1984-85 சுரங்கத் தொழிலாளர்
கட்சியின் வேலையிறுத்தத்தில் தாட்சர் அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குணமிக்கதான எதிர்ப்பு எப்படியிருந்தாலும்
அவற்றை முறியடிப்பதற்குத்தான் வசதியளித்தது.
Poll Tax எனப்படும் தலைவரி
சுமத்தப்படுவதற்கு எதிராக எந்த எதிர்ப்பையும் தொழிற்கட்சி காட்ட மறுத்தது மிக இழிவான உதாரணங்களில்
ஒன்றாகும். இது மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பை கொண்டிருந்த, வரிகொடா இயக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டு,
நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெருந்திரளாக தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்களாக வெளிப்படுத்திய போதிலும்
இதே நிலைதான் தொடர்ந்தது.
Scottish Militant Labour ,
மற்றும் குறிப்பாக ரொமி ஷெரிடன் முதலில் தலைவரி எதிர்ப்புப் பிரச்சாரத்தின் தலைமைப் பங்கின் விளைவாக அரசியல்
முக்கியத்துவம் அடைந்திருந்தனர். ஆனால் இதை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்பிற்கு தேசியவாத
முறையில் விடையிறுக்கும் வகையிலான அரங்காக அவர்கள் பயன்படுத்தினர். இதன் விளைவாக அவர்கள் மில்லியன்
கணக்கானவர்களை கொண்டு சமூகப் போராட்டங்களை நடத்தி வந்தபோதிலும் இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்தை
உதறித் தள்ளினர். அதன் தலைவர்களின் காட்டிக் கொடுப்பிற்காக தொழிலாள வர்க்கத்தை குற்றம்சாட்டிக்கொண்டு அதே
நேரத்தில் இது ஸ்கொட்டிஷ் தொழிலாள வர்க்கத்தை இன்னும் கூடுதலான தீவிரமானதும் சோசலிசப் போக்கும்
கொண்டதாக பாராட்டியது.
அவர்களுடைய உண்மையான சார்புப் போக்கு, ஸ்கொட்லாந்தின் தொழிற்சங்க,
தொழிற்கட்சி அதிகாரத்துவம், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி மற்றும் அவற்றை சார்ந்திருக்கும்
அமைப்புக்களில் இருந்து பல இடதுகளையும் உறுப்பினர்களாக அணிதிரட்டி கொள்ளலாம் என்பதுதான் ஆகும். இந்த சக்திகள்
அனைத்துமே தங்களுடைய அரசியல் வரலாற்றுத் தோல்வியை மறைப்பதற்கு உண்மையான பிரச்சனை இலண்டனில் உள்ள ஆட்சி
என்றும் அது உண்மையிலேயே முடிக்கப்பட்டுவிட்டால், அனைத்தும் சாத்தியமானது என்றும் கூறின.
ஆரம்பத்தில் இருந்தே, ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியுடன், ஸ்கொட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி தேசியவாத
வாக்குகளுக்காக போட்டியிட்டது. ஒரு சுதந்திரமான ஸ்கொட்லாந்து, தொழிலாள வர்க்கத்தின் மூலம்தான் அடையப்பெற
முடியும் என்றும் அத்தகைய ஸ்கொட்டிஷ் நாடு சோசலிசத்தை கட்டமைக்க அடிப்படையாக இருக்கும் என்றும் கூறிவந்தது.
இவ்வகையில் SSP
ஸ்ரானிச அதிகாரத்துவத்தின் கோட்பாடான "ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதை சில வகைகளில் பிரதிபலித்தது.
உண்மையில், SSP
யின் அரசியல் நிலைப்பாடு உண்மையிலேயே ஒரு முதலாளித்துவ ஸ்கொட்டிஷ் நாட்டின் வடிவமைப்பை ஏற்பதாகத்தான்
இருந்தது. அதன் செயல்கள் புதிய ஸ்கொட்டிஷ் பாராளுமன்றத்தில் இடம் பெறுவதை மத்தியப்படுத்தி இருந்தன. இதன்
வேட்பாளர்கள், வடக்குக் கடலின் எண்ணெய், ஸ்கொட்லாந்தின் செழுமையான இருப்புக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி
தொழிலாளர்களுக்கு ஒரு சுவர்க்கத்தை படைப்பதாக உறுதிமொழி கொடுத்தனர். சம்பிரதாயமான அறிக்கைகளில் மட்டும்
அரிதான முறையில்தான் ஐரோப்பாவோ, சர்வதேச தொழிலாள வர்க்கமோ சோசலிசம் அடையப்படுவதற்கு தேவை
என்று கருத்து எழுவது ஒரு புறம் இருக்க
இங்கிலாந்து தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று
கூறப்பட்டது.
சுருக்கமாக, அது ஒரு தேசிய சீர்திருத்தவாத முன்னோக்கிற்கு ஒரு புரட்சிகர
வார்த்தைஜாலம் இயைந்து கூறப்பட்டது; அது முந்தைய தொழிற்கட்சியினர் கூறியதில் இருந்து ஒரு குறுகிய மட்டுப்பட்ட
தன்மையில்தான் ஸ்கொட்லாந் நாட்டிற்கு ஏற்ப என்ற அடிப்படையில்தான் வேறுபட்ட தன்மையை கொண்டிருந்ததுடன், முழு
பிரித்தானியாவில் கிடைக்கும் பாரிய மூலவளங்களின் அடிப்படையில் என்பது ஏற்கப்படவில்லை.
அக்டோபர் 1998ல் வெளியிட்டிருந்த (See
"Scottish Socialist Party fosters nationalist divisions"),
நான் குறிப்பிட்டிருந்தேன்: "மார்கிஸ்டுகளைப் பொறுத்தவரையில், சோசலிம்
என்பது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கை. இதற்கு தொழிலாளர்கள் தங்களுடைய சமூக
அரசியல் நலன்கள் முதலாளித்துவத்தினருடைய நலன்களுடன் சமரசப்படுத்திவிட முடியாது என்பதை அறிந்து கொள்ளுதல்
அவசியமாகும்.
1848ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்ததில் இருந்து, சர்வதேசிவாதம் சோசலிசத்திற்கான
போராட்டத்தின் மையத்தளமாக உள்ளது. தேசியவாதம் என்பது பூர்சுவாக்களின் தத்துவமாகும். ஏனெனில் அதன் ஆட்சி தேசிய
அரசின் இணைப்பிற்கு வழிகாட்டியை ஒருங்கிணைத்தது. தன்னுடைய இயல்பிலேயே சோசலிசம் என்பது எல்லைகள் கடந்த முறையில்
தொழிலாளர்கள் ஒன்றுபடுத்தப்படுதவதின் மூலம் ஒரு உலக முறையின் மூலம்தான் அடையப்படமுடியும். அதன் நோக்கம், தேசிய
அரசுகளாக பிரிந்திருக்கும் உலகப் பொருளாதாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, உற்பத்தி முறையை தனியார் உடைமையின்
தளைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உலக மக்களின் தேவைக்கு அது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். இதற்கு
தொடர்ச்சியான சர்வதேசப் பார்வை தொழிலாளர்களிடையே அபிவிருத்தி செய்வது அத்தியாவசியமாகும்.
"Scottish Militant
Labour தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ, குட்டி
முதலாளித்துவ சக்திகளின் அரசியல் செல்வாக்கை கடக்கும் மத்திய பணியில் அசட்டையாக இருந்துள்ளது. அவர்களுடைய
புதிய கட்சி, தேசியவாத்தை ஊக்குவிப்பது என்பது சோசலிசத்திற்கு ஒரு புதிய அடித்தளத்தை அளிக்கும் என்ற கூற்றின்
அடிப்படையில், நிறுவப்பட்டது. ஆனால் இந்த, 'பிரித்தானியாவிற்கு எதிராக' 'ஸ்கொட்லாந்திற்காக' என்ற
ஸ்கொட்டிஷ் பிரிவினைவாத முன்னோக்கு சுதந்திரத்திற்காக போராடும் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ தட்டுக்களில்
இருந்து தொழிலாளர்களின் விஷேட நலன்களை பிரித்து காட்ட முடியாது. இது தொழிலாள வர்க்கத்தை பூர்சுவாக்களுடன்
பிணைக்கிறது; அதே நேரத்தில் ஸ்கொட்லாந்தின் தொழிலாளர்களை மற்ற நாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு எதிராக
நிறுத்துகிறது.
"கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில், பரந்த அளவில் பூகோளமயமாக்கல் என்று
அழைக்கப்பட்டுள்ள, உலகப் பொருளாதாரம் அசாதாரண முறையில் ஒன்றுபட்டிருப்பது என்பது தங்களுடைய
போராட்டங்களையும் ஒரு சர்வதேச முன்னோக்கில் அடிப்படையாக கொள்ள வேண்டிய தேவையை மிகச்சிறந்த முறையில்
தொழிலாளர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது. இதற்கு எதிரிடையாக,
Scottish Militant Labour
என்பது சோசலிசத்தை புதிய ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் கொண்டவரப்படக்கூடிய
படிப்படியான வழிவகையின் விளைவு என்று முன்வைக்கின்றது''.
பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியானது,
SSP இன் ஸ்கொட்லாந்து
தொழிலாளர்களின் மத்தியிலுள்ள பிரிவினை உணர்வை முற்போக்கான கருத்து எனச் சித்தரித்துக் காட்டும் முயற்சிகளை
முற்றிலும் நிராகரிக்கிறது. யூகோஸ்லாவியாவில் நடந்த நிகழ்ச்சிகளை மேற்கோளிட்டு, "பிரிவினைவாதத்திற்கான
கோரிக்கையின் வர்க்க தன்மை, அதற்கு ஆதரவு தரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அளவைக்கொண்டு
உறுதிப்படுத்தப்பட முடியாது. எழுப்பப்பட வேண்டிய வினா, "ஸ்கொட்லாந் தேசியவாத்தினால் எவருடைய நலன்கள்
வலிமைப்படுத்தப்படும்?"
"...இன்று, உலகப் பொருளாதாரம்தான் அனைத்து தேசியப் பொருளாதாரங்களின்மீதும்
ஆதிக்கம் செலுத்துகிறது. பாரிய சர்வதேச நிறுவனங்கள் எங்கு தங்களுடைய மூலதனத்திற்குக் கூடுதலான வருவாய்
கிடைக்கிறதோ அங்கு உற்பத்தியை மாற்றுகின்றன. உள்நாட்டிற்கு வரும் முதலீட்டை ஈர்ப்பதற்காகவும், உலகச் சந்தையில்
போட்டியில் நிலைத்திருப்பதற்காகவும், ஒவ்வொரு நாடும், சில சமயம் நாட்டிற்குள்ளேயே போட்டியிடும் பகுதிகளும்,
சமூகநலச் செலவினங்களை குறைத்து, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக
செயல்பட்டு வருகின்றன. ஸ்கொட்லாந் சுதந்திர இயக்கம் இந்த வளர்ச்சியில்தான் வேரூன்றியுள்ளது. .
"ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி, ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தின் தேவை குறைவூதியத்
தொழிலாளர் அரங்கை அமைத்து அது எஞ்சிய இங்கிலாந்து, அயர்லாந்துப் பகுதியுடன் ஐரோப்பியச் சந்தையில் நுழைய
முற்படும் நிறுவனங்களுக்கான மூலதனத்தை ஈர்ப்பதில் போட்டியிடும் வகையில் உதவும் என்று வெளிப்படையாகவே
கூறியுள்ளது. நேரிடையான பிரிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம்
ஸ்கொட்லாந்து, வேல்ஸ், லண்டன், மற்ற இங்கிலாந்து பகுதிகளுக்கு அதிகார பொறுப்பை கொடுப்பதின் மூலம், அங்குள்ள
தொழிலாளர் வர்க்கத்தை பிரிக்கலாம் என்றும், பிராந்தியரீதியாக போட்டியை ஊக்குவிக்கலாம் என்றும் அதையொட்டி
மூலதனத்தை ஈர்க்கும் வகையில் சமூகநலச் செலவினங்களை குறைக்கும் முயற்சிகள் செய்யப்படலாம் என்ற கருத்தைக்
கொண்டுள்ளது. ஸ்கொட்டிஷ் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் நேரடிப் பிரிவினைக்கு ஆதரவு கொடுக்க
காரணம் அவர்கள் உலக சர்வதேச வணிக அமைப்புக்களுடன், தாங்களே நேரடித் தொடர்பு கொண்டால் அதன்மூலம்
கிடைக்கும் ஆதாயங்களை அனுபவிக்க ஆவலுடன் உள்ளனர் என்பதால்தான்.
"Scottish Militant
Labour புதிய ஜனநாயக அரங்கம் என்று பாராட்டப்படும்
ஸ்கொட்டிஷ் பாராளுமன்றத்தின் நோக்கம், ஒரு பிராந்திய அமைப்பு கூடுதலான முறையில் பெருநிறுவனத் தேவைகளுக்கு
பலன் அளிக்கும் முறையில் நேரடியாக நடந்து கொள்ளும் வகையில் இருக்கும் என்பதுதான். தொழிலாள வர்க்கத்தின் சமூக
அதிருப்தியை அரசியல்ரீதியில் கட்டுப்படுத்துவற்குக் கூடுதலான முறையில் ஆயுதபாணியாக இருக்கும் என்பதும் ஒரு
காரணமாகும்."
நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கவேண்டும் என்று வலியுறுத்திகிறேன்; அது வரலாற்றுப்
போக்கில் Militant group
எவ்வாறு ஒரு சந்தர்ப்பவாத முன்னோக்கைக் கொண்டிருந்தது, அதில்,
SSP இன் அரசியல்
துவக்கங்கள், எப்படி ஏற்பட்டன என்பதைப்பற்றி விளக்கியுள்ளது. ஆனால் நாம் இப்பொழுது ஆராயவேண்டியது, எந்த
அளவிற்கு SSP
இன் அரசியல் குணநலன்கள் பற்றிய பகுப்பாய்வு, அது ஏற்படுத்தப்பட்டு கடந்துள்ள ஏழு ஆண்டுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது
என்பதேயாகும்.
பிளேயர் அரசாங்கத்திற்கு மக்கள் காட்டிய விரோதத்தின் அடிப்படையில், ஸ்கொட்டிஷ்
சோசலிசக் கட்சி ஒரு கணிசமான ஆதரவை அடைவதில் வெற்றியடைந்து உள்ளது; இதற்குக் காரணம், தான் எதை அகற்ற
பதவிக்கு வந்ததோ, அந்தக் கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளில் இருந்து, எவ்விதத்திலும் மாறாத
கொள்கைகளைத்தான் தொழிற்கட்சி தொடர்ந்திருந்தது. இதேபோல்தான் ஸ்கொட்டிஷ் தேசசியக் கட்சியில் வலதுசாரிப்
போக்கின் தன்மையும் அமைந்திருந்தது. இது SSP
க்கு ஸ்கொட்லாந்தில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலம் நலனடைந்து ஸ்கொட்டிஸ் பாராளுமன்றத்திற்கு
ஆறு உறுப்பினர்களைத் தேர்தலில் கொள்ள முடிந்ததுடன், உள்ளூர்ஆட்சி அமைப்புக்களிலும் கணிசமான உறுப்பினர்களைப் பெற
முடிந்தது.
தொழிற்கட்சி உடைந்ததும், தொழிலாளர் வர்க்கத்தின்மீது அது நிகழ்த்திய தாக்குதல்களும்
SSP க்கு
ஸ்கொட்டிஷ் பகுதியில் உள்ள Rail Maritime and
Transport தொழிற்சங்கங்கள் மற்றும்
Communication Workers Union
உடைய எடின்பரோ பிரிவின் ஆதரவையும் பெற முடிந்தது. SSP
மிகப் பரந்த அளவில் கூடுதலான நட்புமுறைத் தகவல் வெளியீடுகளையும்
ஸ்கொட்லாந்தின் செய்தி ஊடகத்தின்மூலம் பெற முடிந்தது. உண்மையில் அது தனக்கு அரசியல் கட்டமைப்பினுள் ஒரு
முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
ஆனால் கூடுதலான வகையில் அரசியல் முக்கியத்துவத்தை
SSP பெறும்போது,
இன்னும் கூடுதலான வகையில் அது சோசலிசத்தில் இருந்து தெளிவாக நகர்த்திக் கொண்டுள்ளது என்றும் மிக வெளிப்படையான
முறையில் மக்கள்வாத தேசியவாதக் கருத்துக்களின் சார்பிற்குச் செல்கிறது என்றும் பொருள்படும்.
இதற்கு இரண்டு உதாரணங்கள் மேற்கோளிட்டுக் காட்டப்படலாம்
SSP யும்
ஐரோப்பாவும்
முதலாவது, கடந்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில்
SSP உடைய பிரச்சாரம்
ஆகும். தேசியவாத உணர்விற்கு அழைப்புவிடுவதில் அதன் பிரகடனம் வெட்கம் கெட்டதனமாக இருந்துடன், ஒரு
ஸ்கொட்லாந்து சோசலிசக் கூடியரசை, பின்னர் அடையலாம் என்று கொண்டாலும்கூட, அதைப் பற்றிய தனது முன்னோக்கு
ஸ்கொட்லாந்து சோசலிசக் கூடியரசை அமைப்பதல்ல என்பதை மறைக்க சிறியளவு முயற்சிகூட செய்யவில்லை. இப்பொழுது,
இங்குள்ள நிகழ்வுகளின் நடைமுறையில் SSP
ஒரு சுதந்திரமான முதலாளித்துவ அடிப்படையிலான ஸ்கொட்லாந்தை நிறுவி, அந்த அரசாங்கம் சில சீர்திருத்தவாத நடவடிக்கைகளை
எடுக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் சமூக நிதியில் இருந்து சில உதவிகள் வரும் என்ற கருத்தையும்
கொண்டுள்ளது.
இந்தப் பிரகடனம் வாக்காளர்களிடம் வார்த்தைஜாலமான சில கேள்விகளைக் கேட்டது;
"உங்களுக்கு, உண்மையிலேயே சுதந்தரமான, உரிமையுடைய ஸ்கொட்லாந்து வேண்டுமா ... இந்த ஸ்கொட்லாந்து
தன்னுடைய இயற்கை ஆதாரங்களை தானே கட்டுப்பாட்டில் கொள்ளும், நம்முடைய எண்ணெய், நம் நிலம், நம்முடைய
மீன்பிடிப்பு, நம்முடைய போக்குவரத்து முறை, நம்முடைய தொழிற்சாலைகள் ...ஒரு அமைதியான, கூட்டுச்சேரா
ஸ்கொட்லாந்து, நீதியின் பக்கத்தே துணை நிற்கும் ஒழிய வலிமை, செல்வச் செழிப்பு இவற்றின் புறம் சாயாத
ஸ்கொட்லாந்து வேண்டுமா?
ஆனால், இத்தகைய இலக்குகளை அடையும் அடிப்படை பற்றிய விளக்கத்தைக்
கொடுப்பதற்கு, SSP
சோசலிசத்தின் ஒரு சீர்திருத்தவாத வடிவமைப்பிற்கு வாதிடத்தான் முடிந்தது. "பலவித தன்மைகளும் கொண்ட ஜனநாயக
ஐரோப்பா" வேண்டும் என்று கூறிய அது, "இதில் அனைத்து நாடுகளும் சமமானவை என்று கருதப்படும்" "இதற்குக்
கீழ்மட்டத்தில் இருந்து விருப்பமான ஒத்துழைப்பு" அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் கூறியது.
இதன் சர்வதேசவாதத்தின் வடிவமைப்பு, "பெரிதாக இருப்பது, எப்பொழுதும்
சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று பொருள்படாது" என்று கூறி, மேலும் தொடர்ந்தது: "SSP
இன் உடனடியான இலக்கு மகத்தான பெரும் நாடுகளை ஏற்படுத்துதல் என்பதோ முதலாளித்துவ உலகந்தழுவிய முறைக்குப்
பதிலாக உலகந்தழுவிய சோசலிச முறையைக் கொள்ளுவது என்பதோ இல்லை. நம்முடைய நோக்கம் சோசலிசத்தை
கீழ்மட்டத்தில் இருந்து கட்டமைக்க வேண்டும் என்பதாகும்; அதாவது மத்தியமயமாக்கல் இல்லாத, பிராந்தியங்களான,
நாடுகளுக்கு இடையே விருப்பத்துடனான ஒற்றுமை கொண்ட ஒரு சோசலிசமே."
"21ம் நூற்றாண்டுச் சோசலிசம் பிரஸ்ஸல்ஸின் உயர்மட்டத்தில் தொடங்கிக் கீழ்நோக்கி
வரும் வகையில் கட்டமைக்கப்படாது; மாறாக அது உள்ளூர், தேசிய மட்டத்தில் இருந்து மேல்நோக்கி போராடிப்
பெறப்படவேண்டும்."
இது வெளிப்படையாக மார்க்சிச முன்னோக்கான சோசலிசப் புரட்சியை நிராகரித்தல்
ஆகும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும். SSP
தன்னைத்தான், முதலும் முக்கியமான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, வரலாற்றுரீதியான காப்பாளர்
என்பதை விட இறைமை பெற்ற நாடுகளின் பாதுகாவர் என்று அறிவித்துக் கொள்ளுகிறது.
உண்மையில், "இயல்பாகவே சர்வதேச அல்லது முற்போக்கான தன்மை என்பது ஒரு
ஒன்றுபட்ட ஐரோப்பாவில் இருப்பதாக கூறுவதற்கில்லை; உண்மையில் எவ்வாறு இயல்பாகவோ, முற்போக்கானதாகவோ
ஐக்கிய அரசில் (இங்கிலாந்தில்) இல்லையோ, அதேபோல்தான் இதுவும் ஆகும்." ஐரோப்பாவை ஒன்றுபடுத்துவதை
"ஆஸ்வால்ட் மோஸ்லேயின் 1948 பிரிட்டஷ் பாசிச ஒன்றியம் "புதிய ஐரோப்பா வேண்டும்" என்று கூறுவதோடு
தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை'' என அவ்வறிக்கை கூறுகின்றது.
தன்னுடைய தேசியவாத அழைப்பை மறைப்பதற்காக, தான் ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய
ஒன்றியத்தை பற்றி மட்டும்தான் பேச SSP
முயற்சிகள் செய்தது; ஆனால் அது தான் மாற்றாக ஒரு ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் (United
Socialist States of Europe) தொழிலாள வர்க்கத்தின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஐரோப்பா தேவை என்பது பற்றிய குறிப்பை கொடுக்கவில்லை. மாறாக, அதன்
பிரகடனத்தின் பிரிவுகள் பலவற்றில், "பூகோளமயமாக்கலை எதிர்த்தல்" என்ற தலைப்பின் கீழ் மேலே குறிப்பிடப்பட்டுள்ள
மேற்கோள்கள் வந்துள்ளன; இவற்றில் SSP,
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு SSP
உறுப்பினரின் முதன் பணி "சுயாதீனமான சோசலிஸ்ட் ஸ்கொட்லாந்திற்காக" போராடுவதாக இருக்கும் என்று
வலியுறுத்தியது; இதே நேரத்தில் இது முதலாளித்துவ முறைச் சார்பு உடைய
European Social Forum
மற்றும் விவரித்துக் கூறப்படாத "உலகம் முழுவதும் இருக்கும் முற்போக்கான சக்திகளுடன்" அது கூட்டணியை வைத்துக்
கொண்டுள்ளது.
ஒரு "சோசலிச ஸ்கொட்லாந்து" என்பதற்கு முறையாக வாதிடுவது என்பது
ஐரோப்பாவிற்கு விரிவாக்கப்பட மாட்டாது என்பதை வலியுறுத்த
SSP பெரிதும்
முயன்றுள்ளதுடன், அத்தகைய மாற்றை எதிர்க்கும் தேசியவாத குழுக்களுடன் சேர்ந்து உழைக்கும் முயற்சிகளையும் அது
தவிர்க்கவில்லை. ஒரு சோசலிஸ்ட் ஐரோப்பா வேண்டும் என்று அது அழைப்பு விடவில்லை; மாறாக "உண்மையான
ஜனநாயக, சமூக ஐரோப்பா", "சமூக முன்னுரிமைகளின் அடிப்படையில் சுயாதீனமான நாடுகளின்
கூட்டுஅமைப்பாக இணைந்து நிற்றல் வேண்டும்" என்று வாதிட்டுள்ளது (வலியுறுத்தல் கட்டுரையாளருடையது).
"சமூக, ஜனநாயக" ஐரோப்பா என்று வாதிடுவது, சொற்கள் மாற்றிக் கூறப்பட்டாலும்,
வெளிப்படையாக ஒரு சீர்திருத்தவாத திட்டத்திற்குத்தான் வெளிப்படையாக அழைப்புக் கொடுக்கும் வகையில் உள்ளது.
SSP திட்டமிட்டுள்ள ஐரோப்பிய
பொதுநலவாய அமைப்பு என்பது, ஒரு அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு தேசிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்; அது
"எந்த அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும், எவை தேசிய அளவில் தக்கவைத்துக் கொள்ளப்படும்" என்பதையும் "ஒரு
புதிய ஐரோப்பாவின் அடித்தள சமூக பொருளாதார கோட்பாடுகளைக்கு எவை அடிப்படையாக இருக்கும்?" போன்ற
பிரச்சினைகளை விவாதிக்கும்.
இன்னும், பயப்படத் தேவையில்லை! முதலாளித்துவமுறை சோசலிசத்தைவிட சிறந்த
பொருளாதார முறை என்று எவரேனும் முடிவெடுத்துவிட்டால், "எல்லா முக்கிய தீர்மானங்களிலும் அனைத்து இணைப்பு
நாடுகளுக்கும் தடுப்பு அதிகார உரிமை இருக்கும்."
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
SSP இன் விரோதப் போக்கு மிகுந்த நிபந்தனைகளுடன் கூடித்தான்
இருக்கிறது என்பதையும் கூறவேண்டும். இது SSP
ஸ்கொட்லாந்திற்கு கட்டுமான நிதிவசதிகளை பெற்றுக்கொள்வதற்கு வாதிடுவதை
தடுக்கவில்லை. 1.5 பில்லியன் பவுண்டுகள் பெறும் வேல்ஸுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, தமக்கு 1 பில்லிய
பவுண்டுகள்தான் கிடைக்கின்றது என்று குறைகூறுகின்றது.
SSP இன் ஐரோப்பிய தேர்தல் பற்றி
அறிக்கை ஸ்கொட்லாந் தேசியவாதத்தை அது தழுவியது எப்படி ஐரோப்பாவை பால்கன் முறைச் சிதைவிற்கு உட்படுத்தும்
முன்னோக்காக மாற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது முந்தைய யூகோஸ்லேவியாவில் ஏற்பட்ட
உள்நாட்டுப் போர் போன்ற பிற்போக்குத்தனமான விளைவுகளை எற்படுத்தும் என்பதைத்தான் நிரூபணம் செய்கிறது.
"ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் தேசிய அடக்குமுறையை எதிர்க்கும், இடது மற்றும்
முற்போக்கான அரசியல் கட்சிகள், இயக்கங்களுடன்" உடன்பாடு என்பது அது வேல்ஸ், காடலோனிய, பாஸ்க் நாடு (Wales,
Catalonia, Basque Country) இவற்றின் பிரிவினை
இயக்கங்களுடனும் ஈடுபாடு கொள்ள வைக்கிறது. உண்மையில்,
SSP ஒவ்வொரு வகையான தேசியப் பிரிவினையையும், இருக்கும்
நாடுகள் உடைவதின் வெளிப்பாடுகள் அனைத்தையும் தழுவுகிறது.
அது கூறுவதாவது: "ஐரோப்பாவிற்குள்ளேயே சிறிய, ஒருமித்த உணர்வை கொண்டுள்ள
ஐக்கிய இராஜ்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகள், தங்களை பல தேசிய இனங்கள் இருக்கும் நாடுகளில் இருந்து
ஒன்றுபட்ட தேசிய அரசுகளாக மாற்றிக்கொள்ளும் முயற்சியில் தோற்றுவிட்டன; இதுதான் தேசிய அடையாளத்தின் பலமும்
மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்குள்ளும், ஸ்பெயினிலும் சிறிய தேசிய இன சார்புடைய சக்திகளுக்கு தேசியரீதியான அநீதி
என்பதும் இதுதான். ...இன்று சுதந்திரம் வேண்டும் எனக்கூறும் கட்சிகள் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஸ்பெயின் போன்ற
ஒதுக்கப்பட்டுள்ள நாடுகளுக்குள் கூடுதலான ஆதரவை கொண்டுள்ளன.
இது மார்க்சிசத்திற்கும், சோசலிசத்திற்கும் முற்றிலும் எதிரிடையானது ஆகும். உலக மக்கள்
அனைவரையும் நிறம், மொழி, தேசம், மதம் என்ற வேறுபாடுகளை கடந்து ஒற்றுமைப்படுத்தாமல்,
SSP இருக்கும் தேசிய
நாடுகளுக்குள்ளேயே இன்னும் சிறிய நாடுகளை பிற்போக்குத்தனமான இன, கலாச்சார வேறுபாடுகளைக் காட்டி அடைய
வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
கால்டன் ஹில் அறிக்கை
SSP இன் இரண்டாம் வளர்ச்சி,
தேசியவாதம், அதன் "சுதந்திர அறிவிப்பு" என்று அக்டோபர் 9, 2004ல் எடின்பரோவில் கால்டன் ஹில்லில் நடந்த
நிகழ்விற்கு அது ஆதரவு கொடுத்ததில் முழுமையாக வெளிப்பட்டு நிற்கிறது.
கால்டன் ஹில் அறிவிப்பு என்று அறியப்பட்டுள்ள இந்த ஆவணம்,
Holyrood Scottish Parliament
கட்டிடத்தை திறந்த அன்று ஒரு சில நூறு மக்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில்
அறிவிக்கப்பட்டது ஆகும். SSP
அறிவிப்பின்படி, இது கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் அரசியலமைப்பு சட்ட பேராசிரியராக உள்ள
Adam Tomkins
உடன், நாங்கள் எங்களை எவ்வாறு ஆளவேண்டும் (How We
Should Rule Ourselves) என்ற நூலை அவருடன்
இணைந்து எழுதிய எழுத்தாளர் Alasdair Gray
இன்
உதவியுடன் தயார் செய்யப்பட்டது ஆகும்.
SSP இன் முக்கிய உறுப்பினர்களுடன்,
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் அதிருப்தி அடைந்திருந்த முன்னாள் உறுப்பினர்களும் கால்டன் ஹில் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர். இதில் Stone of Scone
அல்லது "விதியின் கிரீடக்கல்" என்பதை வெஸ்ட்மினிஸ்டரில் இருந்து 1950 களில்
திருட உதவியதில் (1296ல் முதலாம் எட்வார்ட், ஸ்கொட்லந்து அரசர்களின் மரபு வழியிலான கிரீடக்கல் கைப்பற்றப்பட்டது)
பெரும் புகழ் கொண்ட எண்பது வயதான
Ian Hamilton QC
உம் கலந்து கொண்டார்; அவரை தவிர, 27 ஆண்டுகள் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியில் இருந்திருந்த ஸ்கொட்டிஷ் பாராளுமன்றத்தில்
சுயேச்சை உறுப்பினராக இருந்த காம்பெல் மார்ட்டினும் பங்கு பெற்றார். ஏராளமான கலை வல்லுனர்களும், புகழ்பெற்ற
ஸ்கொட்லாந்து எழுத்தாளர்களும் கூட கலந்து கொண்டனர்.
பல பிரபல்ய தேசியவாதிகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் தன்மை,
ஒரு சோசலிசக் குடியரசினை தோற்றுவிக்கும் உறுதிமொழி ஏதையும் இயல்பாகவே கொண்டிருக்கவில்லை. அது கூறுகிறது:
"கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள், ஒரு சுதந்திர ஸ்கொட்டிஷ் குடியரசு, சுதந்திரம், சமத்துவம், மாறுபட்ட இயல்புகள்,
ஒன்றுமை என்ற அடிப்படையில் ஸ்கொட்லாந்தின் வருவாயை முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய, சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படும்
அரசாங்கம் ஒன்று வரவேண்டும் எனக் கூறுகிறோம்."
இது தெளிவாக ஒரு சீர்திருத்தவாத ஆவணமாகத்தான் வடிவமைப்பு கொண்டுள்ளது; "இன்னும்
கூடுதலான சமத்துவம் நிறைந்த சமுதாயம் நம்முடைய பரந்த செல்வத்தை மறு பங்கீடு செய்யும் முறையில் கொண்டுவருதல்
வேண்டும்" என்று ஒரு பொதுவான பணியை மட்டும் அது தனக்கு வரையறுத்துக் கொண்டுள்ளது.
முதலாளித்துவ அஸ்திவாரங்களில் எழுப்பப்பட இருக்கும் ஒரு ஸ்கொட்டிஷ் குடியரசை
தோற்றுவிக்கும் பிரச்சாரத்தில்தான், தாங்கள் கையெழுத்திட்டுள்ளோம் என்பதை
SSP நன்கு அறியும்.
கால்டன் ஹில் கூட்டத்தில் பேசுகையில் ரொமி ஷெரிடனும் அதை ஒப்புக் கொண்ட வகையில்தான் கருத்துக் கூறினார்.
அக்கூட்டத்தில் அவர் கூறினார்: "நாம் அனைவரும் நம்முடைய நம்பிக்கைகள், விருப்புகள்
மற்றும் கனவுகளை ஒரு புதிய ஸ்கொட்லாந்திற்காக கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக இருக்கட்டும்; நம்மில் சிலர்
ஒரு சோசலிச ஸ்கொட்லாந்து வேண்டும் என்கிறோம், சிலர் சமூக ஜனநாயக ஸ்கொட்லாந்து வேண்டும் என
விரும்புகின்றனர்.
ஆனால் SSP
கருத்து வேறுபாடுகள் உள்ளது என்தில் மட்டும் உடன்பாட்டைக் காட்டவில்லை. "இன்று தொடங்கியுள்ள இந்த இயக்கம்,
முழு ஸ்கொட்லாந்திலும், அனைத்துக் குடிமக்களையும் கட்சி எல்லைகளை தாண்டி ஒன்றுபடுத்தும் புதிய இயக்கமாகும்;
எதிர்கால ஒரு சுதந்திர ஸ்கொட்லாந் குடியரசை கட்டமைக்க நடக்க இருக்கும் நிகழ்விற்கு இது ஒரு வருடாந்த
நிகழ்வாகியுள்ளது."
சோசலிசத்தின் முன்னோக்கை முற்றிலும் கைவிட்டால் ஒழிய, கட்சி எல்லைகளுக்கு
அப்பாற்பட்டு குடிமக்களை ஒன்றாக இணைக்க முடியாது. இதற்குப் பொருள் ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி, தொழிற்கட்சி
மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பல பிரிவுகளுடனும் ஓர் அரசியல் கூட்டுக் கொள்ளுவது என்பதாகும்; அதுவும்
ஸ்கொட்லாந்தின் துன்பங்கள் அனைத்தும் முடியாட்சியால்தான் என்று புலம்பும் சோசலிசத்தை எதிர்க்கும் முன்னோக்கை
வெளிப்படையாக கொண்டிருப்பர்களுடன் உடன்பாடு வேண்டும்.
இந்த முன்னோக்கு ஒன்றும் எதிர்காலத்தில் சோசலிசக் குடியரசை நோக்கிச் செல்லும்
வகையில் ஒரு கட்டமாக இருக்கப் போவிதில்லை; ஆனால் எல்லா ஸ்கொட்லாந்துக்காரர்களாலும் பகிர்ந்துகொள்ளப்படும்
பொதுத் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை உள்ளூர்
முதலாளித்துவத்திற்கு அரசியல்ரீதியில் அடிபணியசெய்வதாகும். உண்மையில் ஷெரிடனுடைய மிக இழிவான நேரம், கால்டன்
ஹில்லில், "நாம் பிரித்தானிய தேசத்தை சேர்நதவர்களா அல்லது ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களா?" என்று
கேட்ட கணத்தில்தான் இருந்தது.
SSP, ஸ்கொட்டிஷ் தொழிலாளர்களிடையே
தேசியவாதம் பற்றிய நம்பிக்கையை பரந்த அளவில் பரப்புவது என்பதும், அதையொட்டிய சுதந்திரம் பெறுதல் என்பது
ஒரு முற்போக்கான பாதை என்பதும் உண்மையை சிதைத்தல் ஆகும். நான் மேற்கூறிய காரணங்களுக்காக தேசிய உணர்வு
உள்ளது என்பது மிகக் உருக்குலைந்த நிலையில் இருப்பதுடன், இங்கிலாந்தில் இருந்து பிரிவினை கோரக்கூடிய சக்தி வாய்ந்த
உள்ளுணர்வாக இல்லை. இன்றுவரை, கால்டன் ஹில் அறிக்கை ஆன்லைனில் 600க்கும் குறைந்தவர்களால்தான் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிரித்தானிய தொழிலாள வர்க்கம் ஒரு பொது வரலாற்றை பகிர்ந்து கொண்டு, ஒரு
பொது அடக்குமுறையாளரை எதிர்கொண்டுள்ளது; வரலாற்றுடன் சிறிது தொடர்பு கொண்டுள்ளவர்கள்கூட ஸ்கொட்லாந்தின்
முதலாளித்துவம் அடக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதி என்ற கூற்றை இழிவுடன் உதறித்தள்ளுவர். ஸ்கொட்டிஷ் தொழிலாளர்கள்
எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளின் அடிப்படை ஒரு வர்க்க ஒடுக்குமுறையாகும்; அது ஒன்றும் தேசிய ஒடுக்குமுறை அல்ல;
ஒரு சிறந்த வாழ்விற்காக அவர்கள் போராடவேண்டும் என்றால் அவர்களுடைய உற்ற நண்பர்கள் பிரித்தானியா மற்றும்
உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள்தானே ஒழிய அவர்களுடைய சக "ஸ்கொட்டுக்கள்" அல்ல.
உலகம் முழுவதும் செயலாற்றும் முதலாளித்துவமுறை பெருநிறுவனங்களின் கடுமையான
உண்மையை தொழிலாளர்கள் சந்திக்கும் இந்தச் சகாப்தத்தில் இந்த முன்னோக்குத்தான் ஸ்கொட்லாந்தில் தொழிலாளர்களிடையே
சக்திவாய்ந்த பிரதிபலிப்பை பெறும். ஸ்கொட்டிஷ் சோசலிசக் கட்சி இத்தகைய முன்னோக்கை முன்வைக்கவில்லை; ஏனெனில்
இதன் உண்மையான மக்கள்பிரிவு முன்பு ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் புறம் சுற்றி வந்திருந்த குட்டி முதலாளித்துவ
தட்டாகும். அத்தகைய கூட்டணிகள் மற்றும் உறுப்பினர்களின் முதுகுகளின்மீது நின்றுதான் ஷெரிடனும் அவருடைய கூட்டமும்
ஸ்கொட்லாந்து அரசியலில் பொதுவாகத் தங்களை ஒரு பெரும் சக்தியாக உறுதிபடுத்திக் கொள்ள முற்படுகின்றனர்;
அதுவும் இதை அவர்கள் வசதி மிகுந்த Holyrood
பகுதியில் இருந்து நிறைவேற்ற முயலுகின்றனர்.
ஸ்கொட்டிஷ் தேசியவாதம் தொழிலாளர்களுக்கு எந்த நலனையும் கொடுக்காது. இது
தொழிலாளர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டாதிருக்க சேவை செய்வதுடன், அவர்கள் தங்களுடைய சுயாதீன நலன்களை
விளங்கிக்கொள்ளாது தடுக்க ஒவ்வொரு திருப்பத்திலும்
சிலுவையை அவர்கள் முகத்திற்குமுன் அசைத்துக் காட்டுவதாகும். இதுதான்
SSP யினால் கையாளப்படும்
புறநிலையான அரசியல் பங்கு ஆகும்.
உங்களுக்கு சோசலிசத்தின் பால் இருக்கும் ஈடுபாட்டைக் காணும்போது, உங்களுடைய ஆதரவு
தொழிலாள வர்க்கத்தை பிரித்து, முதலாளித்துவ முறைக்கு எதிராக ஒன்றாகப் போரிடமுடியாமல் தடுக்கும் ஒரு கட்சியின்
திட்டத்திற்கு உங்கள் ஆதரவு தேவைதானா என்பதை மறுபசீலனை செய்யுங்கள் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
சகோதரத்துவத்துடன் உங்களுடன்,
கிறிஸ் மார்ட்சன். |