:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
European governments make an example of Cap Anamur
refugees
ஐரோப்பிய அரசாங்கங்கள் காப் அனமுர் அகதிகளை ஓர் முன் உதாரணமாக நடாத்துகின்றன
By Martin Kreickenbaum
22 July 200 4
Use this version
to print |
Send this link by email |
Email the author
மத்தியதரைக்கடலில், இத்தாலியத் தீவான லாம்பெடுசாவிற்கு அருகில் காப் அனமுர்
எனப்படும் மீட்கும் கப்பல் ஒன்று உப்பிப்போன படகு ஒன்றில் முழுகிக்கொண்டிருந்த 37 ஆப்பிரிக்க அகதிகளை
மீட்டது. மிக அருகில் இருந்த துறைமுகமான சிசிலியில் உள்ள
Empodocle-Oல்
அது ஒதுங்க முற்பட்டபோது, இத்தாலிய கடற்படை சிறுகப்பல்களும் ஹெலிகாப்டர்களும், கடலோரப் பாதுகாப்புப்
படையும், அதை கடலுக்குள் விரட்டியடிக்க அனுப்பி வைக்கப்படனர்.
ஒரு சரக்குக் கப்பலாக மாற்றியமைக்கப்பட்டுள்ள காப் அனமுர், சிசிலியக் கடற்கரைப்
பகுதியில் இருந்து தள்ளியிருந்த சர்வதேச நீர் எல்லையில் 11 நாட்களாக நகந்துகொண்டிருந்தபோது கப்பலின்
தளத்தில் நிலைமை மோசமடைந்தது. காப்பாற்றப் பட்டவர்களில் சிலர் நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு மனமுடைநது
கடலில் குதிக்கவும் தயாராயினர்.
நெருக்கடி நிலைமை என்று கப்பல் தலைவர் அறிவித்தபின்னர்தான் துறைமுகத்திற்குள்
நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது, ஆயினும் கூட எந்த உதவியாயினும் அதன் காலம் மிகக் குறுகியதாகவே
இருத்தது. உதவி அமைப்பின் இயக்குனரான Elias
Bierdel, கப்பலின் தலைவர்
Stefan Schmidt
மற்றும் அவருடைய ரஷ்ய முதல் அதிகாரி அனைவரும் இத்தாலிய மண்ணை
மிதித்த உடன் கைதுசெய்யப்பட்டனர். சட்டவிரோதமாக புலப்பெயர்ந்தோருக்கு உதவுவதாக அவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டது. கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதுடன், எஞ்சியிருந்த மாலுமிகள் கப்பலை விட்டு வெளியேறுமாறு உத்தரவு
இடப்பட்டனர்.
சூடானிலிருந்து வெளியேறியவர்கள் என்று உதவி அமைப்புக்களால் ஆரம்பத்தில்
நம்பப்பட்ட இந்த அகதிகள் Agrigento
என்ற வரவேற்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு, இரண்டு நாட்களுக்குப்
பின்னர் Caltanissetta
விற்கு அனுப்பப்பட்டனர். தஞ்சம் கோரி வந்துள்ளோம் என்ற அவர்களுடைய நிலைப்பாடு பற்றிய முறையீடு, மிக
விரைவில் எந்த ஒரு தனிநபருக்கும் சட்ட உதவி ஏதும் கொடுக்கப்படாமல் முடிவெடுக்கப்பட்டது
ஜூலை 17 அன்று, செய்தி ஊடக அறிக்கைகள் கானாவிலிருந்தும், நைஜீரியாவிலிருந்தும்
வந்திருந்த 37 பேருக்கும் புகலிடம் மறுக்கப்பட்டுவிட்டது என்று இத்தாலிய தொலைக்காட்சி அறிவித்தது. இவர்களில்
பதினான்கு பேர் உடனடியாக சிசிலியில் இருந்து ரோம் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு, நாட்டை
விட்டு வெளியேற்றப்படுவதற்கு முன், காவல் மையத்தில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் இத்தாலியில் மனிதாபிமான
அடிப்படையில் இருப்பதற்கு அனுமானிக்கப்படக்கூடும்.
பெரும்-கடலிலிருந்து காப்பாற்றப்பட்டபின்னர், காப்பாற்றப்பட்டவர்கள் குற்றவாளிகள்
என முத்திரையிடப்பட்டமையும் ஆபத்தில் மூழ்கியிருந்த இந்த அகதிகள் சட்ட விரோதமான புலப்பெயர்ந்தோர்கள்
என்றும் நடத்தப்பட்டதுமே இறுதிவிளைவானது.
எப்படியாயினும் அகதிகளை விரட்டு
இதற்கு முன்பு, ஜேர்மனியின் உள்துறை மந்திரியான ஓட்டோ ஷிலி
(Social Democratic Party -SPD),
அகதிகள் தஞ்சம் கோரியதைப் பற்றிய விவகாரத்தில், காப் அனமுர் ஜேர்மனியக் கொடியின்கீழ் பறந்தாலும்,
எழுத்து மூலமாகத் தஞ்சக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஜேர்மன் அதிகாரிகளுக்குப் பொறுப்பு உண்டு என்பதை
முற்றிலும் மறுத்துவிட்டார். உள்துறை அமைச்சகத்தால் அவர்களுடைய மனுக்களை பயனற்றது மற்றும் அகற்றப்படவேண்டும்
என்று அறிவிக்கப்பட்டும், ஜேர்மன் தேசத்தில்தான் மனுக்கள் கொடுக்கப்படவேண்டும் என்ற கேலிக்குரிய போலிக்காரணத்தைக்
கூறி அறிவித்துவிட்டது.
இதற்குப்பின், இத்தாலிய அதிகாரிகள் தங்கள் கைகளில் இருந்து விஷயத்தைக் கைகழுவிவிடும்
முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு புதிய உறுப்புநாடான மால்டாவிடம் முயற்சி செய்தனர். காப் அனமுர்,
அகதிகளை ஏற்ற பின் மால்டாவின் நீர்ப்பகுதிகளைக் கடந்து வந்ததால் அவர்கள் மால்டாவில் தஞ்சம்
கோரியிருக்கவேண்டும் என்று இத்தாலியர்கள் வாதிட்டனர். அகதிகளைச் சிறைப்பிடித்து வெகு விரைவில் நாடுகடத்துவதில்,
பெரும் இகழையே தேடிக்கொண்டுள்ள மால்டாவின் அரசாங்கம் "இவர்களை லிபியாவிற்கு அனுப்பிவிடுங்கள்" எனக்கூறி,
இவ்விஷயத்தில் தன்னுடைய கைகளையும் கழுவிவிட்டது.
இத்தகைய Kafkaesque
(Kafka கதையில் வரும் அதிகாரத்துவத் தட்டிக்கழிப்பு)
முறையிலான விளையாட்டு பல நாடுகளுக்கிடையே நடைபெற்றதற்கு
அடிப்படைக்கு டப்லின் உடன்பாடு காரணமாகும். இந்த உடன்படிக்கையின்படி, ஓர் அகதி, ஐரோப்பிய ஒன்றிப்பு
நாடு ஒன்றில் அவர் நுழையும்போது ஒருமுறை மட்டும்தான் தஞ்சம் கோரி மனுக்கொடுக்க முடியும். பல நாடுகளின்
தஞ்சக் கொள்கைகள் பற்றி ஒருங்கிணைக்கும் முறையில் இந்த உடன்பாடு இதையொட்டி கருதப்படுகிறது என்றாலும்,
காப் அனமுர் நிகழ்வு டப்லின் உடன்பாடு அகதிகளை எங்கிருந்தும் நிராகரிப்பதற்கு வழிவகை செய்து இறுதியில் அவர்களை
அவர்களுடைய நாட்டிற்கே திருப்பியனுப்புவதற்கான ஒரு முறையைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
"இனி இதேபோன்ற சூழ்நிலைகளில் மற்றவர்களால் இவ்வறு மேற்கொள்ளப்படுவதற்கு
அது முன்னோடியாக அமைத்துவிடக்கூடாது" என்று ஜெர்மனி, இத்தாலி என்று இருநாட்டின் அதிகாரிகளுமே கூறியுள்ளனர்
என்று உள்துறை மந்திரியான ஷிலி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கப்பல் உடைந்து தத்தளிக்கும் அகதிகளை மனிதாபிமானமற்ற
முறையில் நடத்துவதற்குத் தெளிவான முன்னோடி ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஷிலியின் தர்க்கவியல் வாதம்------மற்றும் இத்தாலிய உள்துறை மந்திரி
Guiseppe Pisanu (Flora Italia),
இருவருடைய வாதங்களையும் ஏற்றால், காப் அனமுர் குழு தத்தளித்த அகதிகளை
அவர்கள் விதிப்படி நடக்கட்டும் என விட்டிருக்கவேண்டும்.
Bierdel உடைய அறிவிப்பான, மத்தியதரைக்கடல் பகுதிகளில்
கப்பல் உடைவினால் தத்தளிப்போரைக் காப்பாற்ற உதவி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதை, "பொறுப்பற்ற
பேச்சு" என்று ஜெர்மனியில் உள்துறை அமைச்சகத்தில் செய்தித் தொடர்பாளர்
Rainer Lingenthal
விவரித்துள்ளார். ஜெர்மனிய, இத்தாலிய அதிகாரிகள் உதவிசெய்யும் அமைப்புக்களைக்
குற்றவாளிகளாக்கப் பார்ப்பதோடு எவரேனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்கான அகதிக் கொள்கைகளை
எதிர்த்தால் அவர்களை மிரட்டவும் பார்க்கின்றனர்.
கடந்த சில காலமாகவே, மத்தியதரைக் கடலை ஒட்டியுள்ள, கரையோரப்
பாதுகாப்புப் படையினர், ஐரோப்பிய ஒன்றிப்பிற்குள் அகதிகள் புகுந்துவிடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு
வருகின்றனர். NATO
கடற்படைப் பிரிவுகளின் ஆதரவுடன், நிறைய பேரை ஏற்றிக்கொண்டு வரும் பழைய படகுககள் தடுத்து நிறுத்தப்பட்டு,
மீண்டும் ஆப்பிரிக்கப் பகுதிகளின் நீர் எல்லைக்குள் விரட்டியடிக்கப் படுகின்றன. இதில் இருந்து தப்புவதற்குக் கடலில்
குதிப்பவர்கள் இறக்கப்பட்டு சடலங்களாக இறுதியில் ஐரோப்பிய கடற்கரைகளை வந்தடைகின்றன.
அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின்படி, சமீபகாலத்தில் அப்படிப்
பறிபோன உயிர்கள் 5,000 என்று இருந்தாலும், உண்மை எண்ணிக்கை மிக அதிகமாகத்தான் இருக்கவேண்டும்.
உண்மையில் உயிரைப் பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தஞ்சக் கொள்கையைக்
கொண்டுள்ள, EU
அரசாங்கங்கள் மற்றும் 37 சடலங்கள் ஐரோப்பிய கடற்கரைகளை அடைவதைப் பற்றிச் சிறிதும்
கவலைப்படவில்லை.
பில்லியன் கணக்கில் வரிவிதிப்பில் வரும் யூரோக்களைப் பயன்படுத்தி, ஸ்பெயின்,
இத்தாலி, கிரீஸ் ஆகியவை நன்கு இறுக்கமாகப் பின்னப்பட்ட ஒரு வலையைப் போல் மாற்றப்பட்டு, ஒரு நாட்டுக்
கட்டுமரம் கூட தெரியாமல் நுழையமுடியாதபடி அமைந்துள்ளன. எவ்வளவு செலவு ஆனாலும், அகதிகள் ஐரோப்பிய
ஒன்றியத்திற்குள் அகதிகள் வருவது தடுக்கப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்
தஞ்சம் கோரும் உரிமை காகித அளவில்தான் உள்ளது; ஏனெனில் சட்ட பூர்வமாக
EU-விற்குள்
நுழைவதற்கு வழிகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன.
காப் அனமுர் குழு அகதிக் கொள்கையில் வந்துள்ள மாற்றத்திற்குத் தலையாய
உதாரணமாக உள்ளது.
1979 ல் ரூபர்ட் நியூடெக்கினால் நிறுவப்பட்டுள்ள இந்த உதவி அமைப்பு ஒரு
சரக்குக் கப்பலை, வியட்நாமிலிருந்து வந்த அகதிகளைக் காப்பாற்றுவதற்கு, தென்கிழக்கு ஆசியாவில் "படகு
மக்கள்" என்றழைக்கப்பட்டவர்களை அங்கிருந்த கடற்பகுதியிலிருந்து மீட்க, ஏற்பாடு செய்தது. பத்தாயிரம்
வியட்நாமியர்கள் ஜெர்மனிக்கு காப் அனமுரின் மூலம் கொண்டு வரப்பட்டனர்; இக்கப்பல் மற்றும் ஒரு கப்பலுடைந்து
தத்தளித்திருந்த 30,000 அகதிகளுக்கு மருத்துவ உதவியையும் அளித்தது.
இந்த காப் அனமுரின் மனிதாபிமானப் பணி, ஆளும் செல்வந்த தட்டினால் அதன்
கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தீனி போடப் பயன்படுத்தப்பட்டது. அகதிகள் அதிகாரபூர்வமாக
வரவேற்கப்பட்டு, கப்பலும் ஹாம்பர்க்கில் மலர்கள் தூவப்பட்டு, கரவொலி ஆரவாரத்திற்கிடையே
வரவேற்கப்பட்டது. இக்குழுவினர் அகதிகளைக் "கம்யூனிஸ்ட் கொடுங்கோன்மையிலிருந்து'' தப்பிக்க உதவி
செய்ததற்காகப் பாராட்டுப் பெற்றது.
25 ஆண்டுகள் கழித்து, காப் அனமுரை சிசலியக் கடற்கரையையொட்டி போர்க்கப்பல்களை
எதிர்கொள்ளுகிறது. முன்பு அகதிகள் தப்ப உதவி செய்ததற்குப் பாரட்டுப் பெற்றவர்கள் இப்பொழுது புலப்பெயர்ந்தோரைக்
கடத்துபவர்கள் என இழிவு படுத்தப்படுகின்றனர், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடைக்கோடி எல்லைகளில், அகதிகளைத்
துரத்தி அடிப்பதை, ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரு முன்னுரிமைச் செயலாகச் செய்து வருகின்றன.
காப் அனமுரின் எலியஸ் பையெர்டெல், ஸ்டிபான் ஷ்மிட் இருவரும் பல நாட்கள் காவலில்
அடைக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என அச்சுறுத்தப்படனர். ஒருபடி மேலே சென்று
ஓட்டோ ஷிலி, ஜேர்மன் அதிகாரிகள் கப்பலோட்டும் குழுவே புலப்பெயர்ந்தோர் கடத்தலில் ஈடுபடும் குற்றத்திற்கும்
உட்பட நேரிடும் என எச்சரித்துள்ளார்.
சில பசுமைக்கட்சி அரசியல்வாதிகளான ('' ஐரோப்பாவில் அகதிகளுக்கு பாதுகாப்பான
அரணாக இருக்கவேண்டும் மற்றும் ஜேர்மன் முன்மாதிரியாக இருக்கவேண்டும்)
Claudia Roth மற்றும்
Angelika Beer (" மனிதாபிமானம் ஸ்தாபிக்கப்பட்டு,
வாழும் உரிமையை பாதுகாக்கவேண்டும்), யுடைய அறிக்கைகள் இருந்தபோதிலும், பசுமைகள் சிசிலியுடைய இனவெறிக்
கொள்கையை கடந்த ஆறு வருடங்களாக ஆதரித்து வருகின்றன.
ஐரோப்பாவிலிருந்த அகதிகளை ஒதுக்கித் தள்ளுவதில் ஜெர்மனி முன்னிடத்தைக்
கொண்டுள்ளது. பேர்லினில் உள்ள SPD-Green
அரசாங்கம் எந்த ஒரு அகதியும் ஜேர்மனியை அணுகமுடியாதவாறு
செய்துவிட்டது. கட்டாய வெளியேற்றம் நடைமுறையாக ஆக்கப்பட்டுவிட்டதால் அகதிகளின் எண்ணிக்கையும், புகலிடம்
வழங்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பெரும் சரிவிற்குட்டபட்டுவிட்டன.
காப் அனமுர் மீது செய்தி ஊடகமும் சேர்த்து தாக்குகின்றது
சில நாட்களுக்குப் பிறகு செய்தி ஊடகமும் காப் அனமுர் குழுவின் மீது நடந்து வரும்
தாக்குதலில் சேர்ந்து கொண்டது. பழைமைவாதச் செய்தி ஏடுகாளான
Tagesspiegel
போன்றவை மட்டுமில்லாமல், சற்று தாராளமானவை எனக் கருதப்படும்
Frankfurter Rundschau, Süddeutsche Zeitung
போன்றவையும் மீட்புப் பணிமீது நம்பிக்கை கொள்ளுவதில் சந்தேகத்தைக் காட்டுவதுடன், காப் அனமுர் அன்பளிப்புக்கள்
அதிகம் பெறுவதற்காக இந்நிகழ்வைத் தூண்டிவிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் கூறியுள்ளன.
ஜூலை 14ம் தேதி
Tagesspiegel பதிப்பில்,
Caroline Fet
, காப் அனமுர் வேண்டுமேன்றே "மிக உயர்ந்த நெருக்கடியை" ஏற்படுத்தி
அதற்கு மத்தியதரைக்கடல் அகதிகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மக்களிடையே "காப் அனமுர்
யுத்த அகதிகள்" என்ற எண்ணம் ஏற்படுத்துவதற்காக தாங்கள் சூடான் நாட்டினர் என அவ் அகதிகளை கூறச்சொல்லி
அக் குழுவினர்தான் வலியுறுத்தியதாகவும் கூறினார். அகதிகள் வெறும் "பொருளாதாரக் குடிபெயர்ந்தோர்தாம்
என்றும்" ஐரோப்பாவில் நுழைவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் தான் தரமாட்டேன் என்றும் அவர் அறிவித்தார்.
ஜூலை 13 அன்று,
Suddeutsche Zeitung தன்னுடைய தலையங்கத்தில்
இம்மீட்பு "நல்ல முடிவு ஏற்பட்ட பொது உறவுச் சாகசச் செயல்" என்று இதை அறிவித்தது. உதவி அமைப்பின்
இயக்குனர் எலியஸ் பையெர்டெல் காப் அனமுரின் தளத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர்தான் செய்தியாளர்களுடன்
வந்தார் என்பது "சக்தி வாய்ந்த பொதுத் தொடர்புச் செயலாகும்." இக்கட்டுரை ஆசிரியரான் கிறிஸ்டின்
கோஹ்ல் அகதிகள் கப்பலை விட்டு வெளியேறும்போது தூய வெள்ளை ஆடைகளை அணிந்திருந்ததுடன் அவர்களுக்கு
மருத்துவ உதவியும் தேவைப்படவில்லை என்பதினால் உளைச்சல் உற்றார்.
இந்த வாதத்தைப் பின்பற்றினால், கோஹ்ல், காப் அனமுர் குழு அகதிகளை மூன்று
வாரம் பட்டினபோட்டு அவர்களுக்கு மருத்துவ உதவியில்லாமலும் கொண்டுவந்திருந்தால் வரவேற்றிப்பார் எனத்
தோன்றுகிறது. இவ்வம்மையாருடைய பார்வையில் கிழிந்த உடையுடன், வாடிய உடலுடன் வரும் அகதிகள்தான்
பாதுகாப்பிற்கு உரியவர் போலும். அவருடைய கட்டுரையில் எஞ்சிய பகுதி முழுவதும் காப் அனமுரில் நிகழ்ந்தவை
கட்டுக்கதை என்ற எண்ணத்தையும், அதிகாரிகள் அகிதகளை அனுமதிக்க மறுத்ததும், அகதிகளின் உதவிக்குச் சென்றவர்கள்மீது
குற்றநடவடிக்கை எடுத்ததும் சரியே என்ற கருத்து வாசகரிடையே வரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது ஆகும்.
Frankfurter Rumdschau,
தன்னுடைய ஜூலை 13 பதிப்பில், தாக்குதலில் சேர்ந்து கொண்டது. பழுதுகள்
முடிவடைந்ததும் எதற்காகக் காப் அனமுர் சோதனை ஓட்டத்திற்காக அன்றாடம் அகதிகள் நாடகங்கள் நடைபெறும்
இடத்திற்குச் செல்லவேண்டும் என்று வியப்புடன் குறிப்பிட்டுள்ளது. இதற்கு மறுநாள்,
Joerg Schindler
இன்னும் குறிப்பிட்டு எழுதினார். "ஒரு கப்பலும், பல கேள்விகளும்" என்ற தலைப்பில் தன்னுடைய நோக்கங்களுக்காக
அகதிகளை காப் அனமுர் பயன்படுத்திக் கொள்ளவதாக இவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு நிரூபணமாக அவர்
கப்பல்சிதைவில் தத்தளித்த அகதிகள் தரைக்குச் செல்லும்போது "பார்ப்பதற்கு நல்ல உற்சாகத்துடன்" சென்றதாகவும்"
தளத்தில் எலியஸ் பயெர்டெல் "தன்னுடைய மூடிய கைககளை" அசைத்ததாகவும் தெரிவிக்கிறார்.
இவையனைத்திற்கும் ஆதாரமாக ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் உள்ளது போலும்.
அதன் செய்தித் தொடர்பாளர் Rainer
Lingenthal, ஜூலை 12 அன்று, "சூழ்நிலைகளைப்
பார்க்கும்போது தன் பெருமையை உயர்த்திக்கொள்ளுவதற்காக காப் அனமுர் இதைச் செய்திருக்கலாமோ" எனத்
தோன்றுவதாகச் சிறிதும் மனப்பாதிப்பு இன்றித் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்களுக்கு பதில் கூறும் வகையில் எலியஸ் பயெர்டெல், "ஐரோப்பா
அதன் கடற்கரைப் நீர்ப்பரப்பில் கப்பல் மூழ்கும் அவசரநிலையில் அதனை எதிர்கொள்ளும் முறை வெட்கங்கெட்ட நிலையாகும்"
என்று அறிவித்தார்.
காப் அனமுரில் வந்தோரை குற்றத்திற்கும் அவச் சொல்லிற்கும் உட்படுத்தியதன்
நோக்கம் இதுவே: பிறருக்கு அது அச்சுறுத்தும் மிரட்டலுக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்பதுதான் அது.
துன்பத்திலுள்ள அகதிகளுக்கு எவரேனும் உதவி செய்ய முற்படுவார்களேயாயின் அவர்கள் தண்டிக்கப்படுவர். சிறு படகுககள்
மூழ்கும்போது செய்யவேண்டிய அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு செயல் பயணிகள் அதைப் பொருட்படுத்தாமல் கடந்து
செல்வதே ஆகும்.
Top of page
|