World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Thirtieth anniversary of US imperialism's defeat in Vietnam

வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்திய தோல்வியின் முப்பதாவது நிறைவு விழா

By Bill Van Auken
2 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 30-ந் தேதி சைகோன் வீழ்ச்சியுற்ற மற்றும் இரண்டாம் உலக போருக்கு பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தலையீட்டின் திட்டவட்டமான வீழ்ச்சி ஆகியவற்றின் முப்பதாம் ஆண்டு நிறைவு விழா அமெரிக்க ஊடகங்களில் அக்கறை மிக்க கருத்துக்கள் எதையும் கிட்டதட்ட எழுப்பவேயில்லை.

நிறைவு விழா நிகழ்ச்சிக்கான செய்திப்படப்பிடிப்பின் பிரதானமாக அமைந்திருப்பது வியட்நாமில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பற்றிய ஓரளவு-குறைகாணும் செய்திக் கட்டுரைகள் மற்றும் அந்த இறுதி நாட்களில் மீதமிருந்த அமெரிக்க அதிகாரிகளும் அவர்களை சார்ந்திருந்தவர்களும் அமெரிக்க தூதரகத்தின் மாடியிலிருந்து ஹெலிகாப்டர்களில் தப்பி ஓடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப்பற்றி அக்காலத்திய நீண்டகாலம் அனுபவம் பெற்ற செய்தியாளர்களால் எழுதப்பட்ட மிச்சசொச்சங்களும் ஆகும்.

நியூயோர்க் டைம்ஸ் அந்த வரலாற்று மைல்கல்லை குறிக்கும் வகையில் ஒரு வலதுசாரி பேராசிரியர் ஸ்டீபன் யி. மாரீசை கட்டுரை எழுத தனது தலையங்க கருத்துப்பக்கத்தை திறந்துவிட்டிருக்கிறது, சென்ற பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவர் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியை கம்யூனிச ஆதரவாளர் என்று கண்டனம் செய்து பெயர் வாங்கிக் கொண்டவர். மோரிசின் ஆய்வுக் கட்டுரை என்னவென்றால், வியட்நாம் போரில் அமெரிக்கா வென்றெடுத்திருக்க வேண்டும் மற்றும் அமெரிக்க துருப்புக்களின் தியாகங்கள் ''அவசியமற்ற வகையில் வீணாக்கப்பட்டுவிட்டன'' ஏனென்றால் உள்நாட்டில் அந்த அளவிற்கு அரசியல் அழுத்தங்கள் இருந்தன என்பதாகும்.

வாஷிங்டன் போஸ்ட்டை பொறுத்தவரை புஷ் நிர்வாகம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எழுந்துள்ள எதிர்ப்பின் வலிமையை திட்டமிட்டு குறைத்து மதிப்பிட்டு அதே தவறை ''வியட்நாம் காலத்து தவறுகள் திரும்ப நடப்பதை தவிர்க்க வேண்டும்'' என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆலோசனையின் உள்ளார்ந்த அனுமானம் என்னவென்றால், அத்தகைய தவறுகள் இல்லாமல் வாஷிங்டன் இன்னமும் அந்த மத்திய கிழக்கில் தனது இரண்டாண்டுகால ஏகாதிபத்தியப்போரில் வெற்றி பெற முடியும் என்பதுதான்.

30 வருட அன்றைய தினத்தில் அத்தியாவசிய உள்ளடக்கம் ஏறத்தாழ ஒட்டுமொத்தமாக மறைக்கப்பட்டுவிட்டது: ஆக்கிரமிப்பின் ஒரு குற்றவியல் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு சிதைவுற்ற தோல்வியை சந்தித்தது. ஈராக்கில் நடைபெற்றுக்கொண்டுள்ள போர் உள்நாட்டில் மிகப்பெரிய எதிரொலிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால்---- பெருநிறுவன ஊடகங்கள் அவற்றை ஆழமாக ஆராய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன என்பதை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிறைவுவிழாவில் புரிந்துகொள்ளத்தக்கதாக இருக்கிறது.

வியட்நாமில் ஏற்பட்ட தோல்வி அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து அது இன்னமும் மீளவில்லை. அமெரிக்க இராணுவத்திற்குள்ளே மிகப்பெருமளவில் அதிர்ச்சிக்குள்ளாகும் தாக்கத்தையும், மனமுறிவை உண்டாக்கும் சூழ்நிலையும் முற்றிலும் கலகம் காரணமாக தங்கள் இராணுவமே ஏறத்தாழ சிதைகின்ற நிலைக்கு வந்துவிட்டதை அமெரிக்க இராணுவ தளபதிகள் பார்த்தனர்.

வியட்நாம் தோல்வி அமெரிக்க முதலாளித்துவ அரசியலில் வலதுசாரி கருத்தியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டுகின்ற ஒரு பிரதான பாத்திரத்தை வகித்தது, அது பழிவாங்கும் உணர்வையும் பின்னால் இருந்து மறைமுகமாக தாக்குகின்ற தத்துவங்களையும் வளர்ப்பதற்கு அவை பெரிதும் உதவின, முதலாம் உலகப்போரின் பின்விளைவாக ஜேர்மனியின் வலதுசாரிகளை ஆட்டுவித்த அதே கருத்துக்கள் முதுகில் குத்தும் இந்தத் தத்துவங்களில் குறிப்பிடத்தக்கவையாக விளங்கின.

1980-களிலிருந்து, அமெரிக்காவின் கூட்டு நினைவிலிருந்து வியட்நாம் போர்க்காலத்து நினைவுகளை மறக்கடிக்கச் செய்வதற்கு இடையறாத பிரசாரங்கள் நடைபெற்றன. வியட்நாம் நோய் என்று அழைக்கப்படுகின்ற அளவிற்கு வெளிநாடுகளில் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டிற்கு அமெரிக்க மக்கள் தெரிவிக்கின்ற எதிர்ப்புகளை இந்த உணர்வு வெளிப்படுத்துவதாக இருந்தது, இந்தோசீனாவில் நடைபெற்ற போரில் ஏறத்தாழ 60,000 அமெரிக்க போர்வீரர்கள் மடிந்ததால் இவை மேலும் சக்திமிக்க வகையில் வலுப்பட்டன.

அப்படியிருந்தும் வியட்நாம் போரின் நிழல் அமெரிக்கா மீது படிந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் அந்தப் போரினால் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் பல்லாயிரக்கணக்கானோர் சீரழிந்தனர். அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினரும் அதன் அனைத்து அமைப்புக்களுமே பொய்கள் மற்றும் மோசடிகள் அடிப்படையில் ஈராக் மீது தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள போர் போன்ற நிலையிலிருந்து இன்னும் மீளமுடியாது சீரழிந்துள்ளன.

ஜோன் எப். கென்னடியின் நிர்வாகத்திலிருந்து தொடங்கி லிண்டன் ஜோன்சன் மற்றும் ரிச்சார்ட் நிக்சன் நிர்வாகம் வரை இரண்டு கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் மற்றும் பென்டகன் தலைமை வியட்நாமில் நடைபெற்ற பாரியளவு போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களாகும். இந்த அட்டூழியங்களுக்கு இரண்டாம் உலகப்போரில் தங்களது தோல்விக்கு பின்னர் நாஜி ஜேர்மனியின் தலைவர்களுக்கு தரப்பட்டது போன்ற நடத்தையைத்தான் இந்தத் தலைவர்களுக்கு தரப்பட வேண்டும். அப்படியிருந்தும் எவரும் அத்தகையதொரு விசாரணைக்கு குரல் கொடுக்கவில்லை

வியட்நாம் மக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனுக்கு மேல் சென்றுவிட்டது. யுத்தத்திலிருந்து மேலும் மில்லியன்கணக்கானோர் அனாதைகளாகவும் விதவைகளாகவும் ஆகிவிட்டனர், அதேபோன்று மில்லியன்கணக்கானவர் காயமடைந்துள்ளனர், உடல் ஊனமுற்றவர்களாக ஆகியுள்ளனர். அந்த நாடு முழுவதையும் இராணுவம் குண்டு வீசி அழித்தது, அமெரிக்க இராணுவம் 15 மில்லியன் தொன்களை கொண்ட குண்டுகளையும், தளவாடங்களையும் கட்டவிழ்த்துவிட்டது, இந்த தாக்குதலில் வீசப்பட்ட அமெரிக்க குண்டுகளின் அளவு இரண்டாம் உலகப் போரின்போது எல்லா தரப்புகளிலும் வீசப்பட்ட குண்டுகளின் அளவைவிட அதிகமாகும்.

1961-க்கும் 1971-க்கும் இடைபட்ட காலத்தில் அமெரிக்க இராணுவம் அந்த தென்கிழக்கு ஆசிய நாட்டின்மீது 20 மில்லியன் கலன்களுக்கு அதிகமான நச்சுத்தன்மை கொண்ட இரசாயனவியல் பொருட்களை வீசியது, அந்த நாட்டின் மூன்றில் ஒருபகுதி தரிசுநிலமாயிற்று. அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்தப்பியவர்கள் 3 முதல் 5 மிலிலியன் பேராகும். அந்த பாரியளவு இரசாயன போர்த்தாக்குதலில் பாதிக்கப்பட்டு இன்னமும் பிறவியிலேயே ஊனமுற்ற குழந்தைகள் மனக்கோளாறுள்ள குழந்தைகள், சித்திரகுள்ளர்கள் மற்றும் இதயக்கோளாறுள்ள குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அவர்களது பெற்றோர் மற்றும் பாட்டன் பாட்டிமார் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டதன் விளைவுதான் இத்தகைய குறைபாடுள்ள குழந்தைகளின் பிறப்பாகும்.

இந்த காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பு கிரிமினல் குற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மிக அதிகமாகும். இவற்றில் ஆப்ரேஷன் போனிக்ஸ் என்றழைக்கப்படுவதும் அடங்கும், தேசிய விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக கிராம தலைவர்கள் குறைந்தபட்சம் 20,000 பேர்வரை கொல்லப்பட்டனர். அத்தகைய அட்டூழியங்களில் My Lai கிராமத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளும் அடங்கும், 500 ஆண்களும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்கத் துருப்புக்கள் ஆடுமாடுகளைப்போல் படுகுழியில் தள்ளி சுடுதொலைவில் படுகொலை செய்தார்கள். அத்தகைய கண்மண் தெரியாத கொலைகள் ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட ஒன்றல்ல, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புரட்சிகர அணிதிரட்டலில் ஈடுபட்ட மக்கள் அனைவரையும் ஒடுக்குவதற்கு நடத்தப்படுகின்ற போரின் தார்மீக விளைவுதான் அது.

வியட்நாமில் அதைவிட மோசமாக ஹெலிகாப்டர்களிலிருந்து கைதிகளை வீசி எறிந்தார்கள் பெண்களை கற்பழித்தார்கள், உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கினர், கழுத்தை வெட்டினார்கள், போரின் கிரிமினல் தன்மையை வெளிப்படுத்தும்வகையில் அவர்களது காதுகளை அறுத்து அதையே பரிசுப்பொருளாக வைத்துக்கொண்டார்கள்.

1975 ஏப்பிரல் 30 அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வியானது அபரிமிதமான ஒரு தரப்பு அனுகூலங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் திகைப்பூட்டும் ஒரு வெற்றியை - முப்பது ஆண்டுகளாக நீடித்த ஒரு போராட்டத்தின் உச்சக்கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்தது.

உலகிலேயே மிக வலிமையான ஏகாதிபத்தியத்தை வியட்நாம் மக்கள் வீழ்த்தினார்கள் அந்த ஏகாதிபத்தியம் அரை மில்லியன் துருப்புக்களை மிகவும் மலைப்பூட்டும் விமானப்படை, கடற்படைகள் உதவியோடு வியட்நாமிற்கு அனுப்பியது. ஊழல் மிக்க சர்வாதிகார பொம்மையாட்சியான Gen. Nguyen van Thieu ஆட்சி வாஷிங்டன் 700,000 துருப்புக்களை கொண்ட படையை தனக்காக வீட்டுச்சென்றிருப்பதாக பெருமையடித்துக்கொண்டார், ஆனால் ஒரு போர்கூட நடைபெறாமல் தாக்குப்பிடிக்க முடியாமல் அவரது ஆட்சி சீர்குலைந்தது. வியட்நாம் மக்களின் வெற்றி ஒரு 30 ஆண்டுகால போராட்டத்தை உள்ளடக்கியது. அதில் இறுதிக்கட்டம்தான், அமெரிக்க தோல்வி, அதற்கு முன்னர் ஜப்பான் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை சந்தித்திருக்கின்றது.

வியட்நாம் மக்களின் தீரம் செறிந்த போராட்டம் அமெரிக்கா உட்பட பூகோள அளவில் 1960களிலும் 1970களிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் ஊட்டும் அரசியல் போராட்டத்திற்கு வழி செய்தது.

நாட்டுக்குப் பின் நாடாக தொழிற்துறை தொழிலாள வர்க்கம் அலையலையாக போர்க்குணம்மிக்க போராட்டங்களில் ஈடுபடுவதை போருக்குப் பிந்தைய கிளர்ச்சிஎழுச்சியின் உச்சக் கட்டத்தைக் குறிப்பதாக அமைந்துவிட்டது. அந்தப் புரட்சி வடிவமெடுத்தது 1971-ல் பிரெட்டன்வூட்ஸ் டாலர் - தங்கமாற்று விகிதம் உடைந்ததை தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் ''எண்ணெய் விலை உயர்வு அதிர்ச்சி" ஏற்பட்டு 1930களுக்கு பின் இதுவரை சந்தித்திராத படுமோசமான பொருளாதார பின்னடைவு உருவாகிவிட்டது.

இந்த பூகோள தொழிலாள வர்க்க தாக்குதலில் இருந்து அடிப்படையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வியட்நாம் போராட்டம் தனிப்பட்ட முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது, இந்த நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வியட்நாம் தலைமையும் காரணமாகும், பெரும்பாலும் தேசியவாத வார்த்தையில் அவருடைய நாட்டை ஐக்கியப்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கு போராடுவதாக அது பார்த்தது.

மிக அடிப்படையாக தொழிலாளர் இயக்கத்தில் இருக்கும் தலைமைகளின் பாத்திரத்தை குறிப்பிட வேண்டும், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர் இயக்க தலைமையை குறிப்பிட வேண்டும். ஸ்ராலினிஸ்ட்டுகள் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிகள் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆகியவை ஒவ்வொரு நாட்டிலும் சமூக புரட்சி பாதையிலிருந்து தொழிலாள வர்க்கத்தை நனவுபூர்வமாக திசை திருப்பி முதலாளித்துவ ஆட்சியை நிலைநிறுத்த திட்டமிட்டு பணியாற்றி வந்தன.

வியட்நாம் போரை தொடர்ந்து அமெரிக்காவிற்குள்ளேயே கொந்தளிப்பான வெகுஜன போராட்டங்கள் தொடங்கின, போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன, சமுதாயத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து தொழிலாள வர்க்கத்தினர் நடத்திய நகர்புற கலவரங்கள் நடைபெற்றன, அதை தொடர்ந்து பாரியளவிற்கு வேலை நிறுத்தம் நடந்தது, அதில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆனால் தொழிலாள வர்க்கம் தொடர்ந்து ஒரு கம்யூனிச எதிர்ப்பு AFL-CIO அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்தில் செயல்பட்டு வந்தது. அந்த அதிகாரத்துவம் போரை ஆதரித்தது. உள்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும் இடைவிடாது ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து நடக்கச் செய்தது.

இந்தக் கட்சிதான் வரலாற்று அடிப்படையில் அமெரிக்க தாராளவாதத்தோடும் புதிய பேரம் கொள்கையோடும் சம்மந்தப்பட்டிருந்தது, அந்தக் கொள்கைதான் அந்தப் போர் தொடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. கென்னடி நிர்வாகத்தில் "சிறந்த ஒளிபொருந்திய" எதிர்காலம் மிக்க இளைஞர்களை போருக்குத் திரட்டியது, அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை வடிவமைத்தது குடியரசு கட்சியின் வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்ல, கென்னடி நிர்வகாம் தான்.

ஜனநாயகக் கட்சியின் தலைமைக்குள் இருந்த சக்திகள் போருக்கு எதிராக திரும்பிய அளவிற்கு அவர்கள் தங்களது போக்கை மாற்றிக்கொண்டதற்கு காரணம் நாடு முழுவதிலும் பாரியளவிற்கு நடைபெற்ற எதிர்ப்புதான் காரணமாகும் அந்தக் கட்சியின் போர் தொடர்பான அணுகுமுறை மோசடியாக அமைந்திருந்தது. அந்த மோசடியின் இறுதி வடிவம்தான் ஜோன் கெர்ரி அவர் 2004 தேர்தல் பிரசாரத்தில் போருக்கு எதிரான கண்டனத்தோடு தொடக்கினார். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வியட்நாம் போரில் ஈடுபட்ட தனது சாதனைகளை எடுத்துரைத்தார், அவர் முன்னர் குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.

இந்த வெகுஜன போர் எதிர்ப்பு கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் இதர மத்தியதர வர்க்க தீவிரவாத மற்றும் சமாதானக் குழுக்கள் தங்களது கண்டனங்களை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து செய்யச் செய்தது. ஜோன்சன் நிர்வாகம் வீழ்ச்சியடைந்த பின்னர் கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கு பாடுபட்டது.

இந்தக் கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியவர்கள் ஜனநாயகக் கட்சி அல்லது தொழிலாளர் அதிகாரத்துவத்தோடு கணக்குத் தீர்ப்பதற்கு பணியாற்றுவதற்கு பதிலாக அமெரிக்க உழைக்கும் மக்களை போராடுவதிலிருந்து நிராயுதபாணிகளாக ஆக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்கள். அதைத் தொடர்ந்து வந்த மூன்றாண்டுகளில் தொழிற்சங்கங்கள் சிதைக்கப்பட்டன, சமூக நலத்திட்டங்கள் வெட்டப்பட்டன மற்றும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த நூற்றாண்டில் எந்தக் காலத்திலும் நடந்திராத அளவிற்கு செல்வச் செழிப்பிற்கும், வறுமைக்குமிடையே ஏற்றதாழ்வுகள் பெருகின.

அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சிக்கும் முதலாளித்துவ இருகட்சி ஆட்சி முறைக்கும் அடிமைப்படுத்தியது. அமெரிக்க இராணுவவாதம் மீண்டும் தலையெடுக்க உதவியது. ஈராக் மீது படையெடுப்பதற்கு வழி செய்தது, அதன் மூலம் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வியட்நாமில் ஏற்பட்ட போர்க் குற்றங்களை நினைவுபடுத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கு வழி செய்யப்பட்டது.

ஜோன்சன் எப்படி Tonkin வளைகுடா சம்பவத்தை கற்பனையாக உருவாக்கி முழு வீச்சில் வியட்நாம் போரை துவக்கினாரோ அதே அடிப்படையிலேயே, ஈராக்கில் படையெடுப்பு இல்லாத, பாரிய அழிவுகர ஆயுதங்கள் மற்றும் அல்கொய்தா தொடர்புகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. ``ஒரு கிராமத்தை வாழ வைப்பதற்கு இன்னொரு கிராமத்தை அழிக்கவேண்டியது அவசியம்`` என்ற வியட்நாம் சகாப்தத்து இழிபுகழ் அறிக்கை பல்லுஜா நகரம் முழுவதும் அழிக்கப்பட்ட கொடூரத்திலிருந்து வெளிப்படுகிறது.

வியட்நாம் போர் முடிந்து முப்பதாண்டுகளுக்கு பின்னர், சர்வதேச அளவில் அமெரிக்க இராணுவ வாதத்தை முறியடிப்பதற்கும், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்திற்கு திட்டவட்டமான அரசியல் படிப்பினையாக இருந்து வருகிறது. இந்த படிப்பினைகளில் பிரதானமான ஒன்று அமெரிக்க உழைக்கும் மக்களை அரசியல் ரீதியில் சுதந்திரமாக பெருவர்த்தக நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலுள்ள இருகட்சி முறையிலிருந்து முறித்துக்கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள விரிவான வெகுஜன தொழிலாளர்களோடு அணிதிரட்டி ஐக்கியப்படுத்துவதுதான் இதில் முக்கியமான பிரச்சனை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சோசலிச இயக்கத்தைக் கட்டி எழுப்புவதாகும்.

Top of page