World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Respect-Unity coalition in Britain: a marriage of Labourism and Islamism Part 2

இங்கிலாந்தில் ரெஸ்பக்ட்-யூனிட்டி கூட்டணி:
தொழிற்கட்சி வாதத்திற்கும் இஸ்லாமிசத்திற்கும் ஒரு திருமணப் பிணைப்பு

பகுதி 1 | பகுதி 2

By Chris Maisden and Julie Hyland
20 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஏப்ரல் 18 திங்களன்று (ஆங்கிலத்தில்) தொடங்கிய இரு கட்டுரைத் தொடரின் இரண்டாம் கட்டுரையாகும் இது.

ரெஸ்பக்ட்டுகுக்கு ஆதரவு தேடுவதற்காக இமாம்களுக்கும், பிரித்தானிய முஸ்லிம் சங்கம் போன்ற இஸ்லாமியக் குழுக்களுக்கு அடிபணிந்த தன்மையில் சோசலிச தொழிலாளர் கட்சி(SWP) ஒரு தீர்மானகரமான வலதுத்திருப்பத்திற்கு நகர்ந்துள்ளது; ஆனால் இப்போக்கு பல தசாப்தங்கள் தொழிற் கட்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் அரசியல் பணி புரிந்ததிலேயே தயாரானதுதான்.

வழிபாட்டு உரிமையை காத்தல், முஸ்லீம்களுக்கு எதிராக காழ்ப்புணர்வை தூண்டுவிடுதலை தடுத்தல், பிரதம மந்திரி டோனி பிளேயரின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்தல் இவற்றை செய்ய வேண்டியது சோசலிஸ்டுக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் பொறுப்பில் அடங்கியுள்ளதுதான். ஆனால் மதத்தின் செல்வாக்கிற்காக அரசியல் சமுதாய தன்மையை மாற்றிக்கொள்ளுதல் என்பது தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காட்டிக்கொடுப்பதாகும்.

தொழிலாள வர்க்கத்திடம் சமயத்தின் செல்வாக்கு படர்வது என்பது சிந்தனாரீதியான ஒரு பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடு என்று மார்க்சிச வாதிகள் நெடுங்காலமாக எவ்வித ஐயுறவுமின்றி கருதி வந்துள்ளனர். முக்கியமாக இது வர்க்கபேதமுள்ள சமுதாயத்தில் இயல்பாக விளங்கும் சமூக அடக்குமுறையில் ஆழ்ந்த வேர்களை கொண்டுள்ள சக்தியற்ற தன்மையின் உணர்வுகளின் அடிப்படை வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. விஞ்ஞானத்தை பிரகடனப்படுத்தி ஆதரவு தருவதன் மூலமும், சடத்துவவாத உலக நோக்கை வளர்ப்பதன் மூலமும் மார்க்சிசம் சமயத்திற்கு எதிராக போராட முயன்றுள்ளது. இவ்விரு வகைகளும் பூர்சுவாக்களையும், முதலாளித்துவ அமைப்பு முறையையும் எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் முயற்சியில் இன்றியமையாத அடிப்படையாகவும் கொள்ளப்பட்டுள்ளன.

அத்தகைய போராட்டத்தின் முக்கியத்துவம் சமீப ஆண்டுகளில் அதிகரித்துவரும் இஸ்லாமியத்தின் ஆதிக்கம் மட்டுமல்லாமல் கிறிஸ்துவ அடிப்படைவாதம் மற்றும் பல சமயங்களின் அடிப்படையில் எழுச்சி பெற்றுள்ள இயக்கங்களின் செல்வாக்கின் வளர்ச்சியினால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய முஸ்லீம்களுக்கிடையே இருக்கும் போர் எதிர்ப்பு உணர்வுகளுடன் தொடர்பை தக்க வைத்துக்கொள்வதைத்தான் தங்கள் தற்போதைய அரசியல் போக்கின்திசை உள்ளது என்று பலமுறையும் நியாயப்படுத்தும் வகையில் சோசலிச தொழிலாளர் கட்சி கூறிவருகிறது. ஆனால் அத்தகைய பரிவுணர்வு ஏன் சமய மேலாதிக்கம் நிறைந்த தன்மையை கொண்டுள்ளது, முன்பிருந்ததுபோல் இல்லாமல் ஆசியாவிலிருந்து வந்துள்ள தொழிலாளர்களும், இளைஞர்களும் அரசியல் கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என்று இல்லாமல் முஸ்லீம்கள் என்ற முறையில் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதையும் சோசலிச தொழிலாளர் கட்சி ஒரு முறைகூட விளக்கியதில்லை. மற்ற சமய உணர்வின் வெளிப்பாடுகள் போலவே, இஸ்லாமிய குழுக்களுக்குக் கொடுக்கப்படும் ஆதரவு பழைய தொழிலாள வர்க்க இயக்கத்தின் சரிவு, சீரழிவு ஆகியவற்றினதும் மற்றும் மத்திய கிழக்கு, ஆசிய, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களால் ஆதரவு வழங்கப்பட்ட மதச்சார்பற்ற தேசியவாத கட்சிகளும், ஆட்சிகளும் அவர்களின் நலன்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்கத் தவறிவிட்டதன் பிற்போக்குத்தனமான விளைவாகும்.

உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கம் தன் சமூக நிலைகளிலும், ஜனநாயக உரிமைகள் மீதும் மிகக் கடுமையான தாக்குதல்களை சந்தித்து வருகிறது; அதுவும் தங்களை சுரண்டல், கொள்ளை முறை இவற்றிலிருந்து பாதுகாக்கும் என்று அவர்கள் ஒரு காலத்தில் நம்பியிருந்த கட்சிகளும் அமைப்புக்களுமே அவர்களுக்கு கொடுமைகள் இழைக்கின்றன. பிரித்தானியாவில் போர் வெறியும், குடிஉரிமைகள் மீதும் தாக்குதல்களை தொழிற்கட்சி நடத்தி வருவது இத்தகைய நிகழ்விற்கு தலைசிறந்த உதாரணம் ஆகும். குழப்பத்தில் உள்ள போர் எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களுடைய செல்வாக்கை பரப்பிக்கொள்ளுவதற்கு இஸ்லாமிய குழுக்களினால் முடிகிறது.

இத்தகைய எதிர்மறை வளர்ச்சியை எதிர்த்துப் போரிடாமல் சோசலிச தொழிலாளர் கட்சியும் அதன் ரெஸ்பக்ட் வாகனமும் அதற்கு ஒரு போலி சோசலிச மறைப்பைக் கொடுத்துள்ளன. இவ்வாறு செய்கையில் முஸ்லீம் தொழிலாளர்களின் ஜனநாயக நலன்களைக் காட்டிக்கொடுக்கும் முன்னோக்கை அவை பிரதிபலித்துச் செயல்படுவதுடன், மேலும் இத்தகைய நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளிடம் இருந்து அந்நியப்படுத்துவதோடு குழப்பத்தையும் உருவாக்கின்றது.

ஓர் உதாரணத்தை கொடுக்கவேண்டும் என்றால், ரெஸ்பக்ட் இன் செய்தித் தொடர்பாளர்கள் பல முறையும் முஸ்லீம்கள் தலையில் சுற்றிக்கொள்ளும் ஹிஜப் அல்லது முட்டாக்கை பாராட்டுவதுடன், பெண்களின் உடலை மூடி மறைத்து அணியும் உடைகளையும் முன்னேற்றமானவை என்று புகழ்கின்றனர். ரெஸ்பக்ட் நிறுவப்பட்ட நேரத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர் லிண்சே ஷெர்மன் பல இளம் பெண்கள் ஹிஜப் அணிந்துள்ள கூட்டத்தில் தான் பேசுவது குறித்துப் பெருமைப்படுவதாக கூறினார் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு சமீபத்திய Respect Newsletter ஸம்மர் கான் கூறுகிறார்:"மகளிரை பற்றிய கருத்து, பல நேரமும் அவர்களுடைய உடல் தோற்றம் இவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. மனிதர்கள் என்ற முறையில் பெண்களை பற்றிய மதிப்பீடு சமுதாயத்தால் செய்யப்பட வேண்டும் என்று ஹிஜப் கட்டாயப்படுத்துகிறது. ஹிஜப் அணிந்துள்ள ஒரு பெண்மணி கூறும் செய்தியாவது: "என்னுடைய மூளையைப் பற்றி கவனித்து செயல்படு; உடலை கருதாதே!" அவர் மேலும் எழுதுவதாவது: "தங்களுடைய தனி அடையாளத்தை இழந்து விடுவோமோ என்று அச்சப்படும் பிரித்தானிய முஸ்லீம்களுக்கு ரெஸ்பக்ட் ஒன்றுதான் ஒரே கட்சியாகும்".

முஸ்லீம் மகளிர் எதிர்கொண்டிருக்கும் கடுமையான அடக்குமுறைக்கு நியாயம் தெரிவிக்கும் வகையில் உள்ள கானுடைய வாதம் எள்ளி நகையாடப்படும் தன்மையை கொண்டுள்ளது. இன்னும் தீவிரமான வடிவத்தில் இத்தகையவாதம் ஆண்களையும், பெண்களையும் பிரித்துவைப்பதையும் பர்க்கா அணிவதை தலிபான் நியாயப்படுத்துவதற்கு முன்வைத்துள்ள கருத்தைத்தான் கொள்ளும். ஆண்களுடைய காமப் பார்வையில் இருந்து முற்றிலுமாகப் பெண்களை அகற்றிவிடுவது இன்னும் சிறந்த முறையில் பாலுணர்விற்கு எதிரான பாதுகாப்பு ஆகாதா?

ரெஸ்பக்ட் இன் தலைவர் ஜோர்ஜ் காலோவே மேற்கொண்ட பிரச்சாரத்தின்மூலம் இந்த அமைப்பின் அரசியல் சந்தர்ப்பவாதம் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றது. ஈராக் போருக்கு ஆதரவாக வாக்களித்த தொழிற்கட்சி வேட்பாளர் ஊனா கிங்கிற்கு எதிராக ஜோர்ஜ் காலோவே Bethrel Green and Bow தொகுதியில் போட்டியிடுகிறார்; இங்கு 50% வாக்களர்கள் முஸ்லீம்கள் ஆவர். 40% வாக்காளர்கள் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனவே, தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன் பெப்ருவரி மாதக் கடைசியில் காலவே பங்களாதேஷிற்கு சென்று வந்தார். Financial Express கொடுத்துள்ள தகவல்படி அவர் ஆட்சியில் இருக்கும் பங்களாதேஷ் தேசியகட்சி மற்றும் எதிர்க்கட்சியான அவாமி லீக் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களையும் அங்கு சந்தித்தார். இவ்விரு கட்சிகளுமே கடந்த தசாப்தத்தில் அங்கு மாறி மாறி அரசாங்கம் அமைத்தவையாகும்; மேலும் தொழிலாளர் விரோத முதலாளித்துவ சார்புடைய கொள்கைகளைத்தான் அங்கு அவை பின்பற்றி வந்துள்ளன.

பங்களாதேஷ் தொழிலாளர்களிடம் ரெஸ்பக்ட் ஆதரவு திரட்டும் முயற்சியை விமர்சிக்க ஏதும் இல்லை; ஆனால் இதை ஒரு கொள்கை அடிப்படையில் செய்வதற்கு தொழிற்கட்சி மட்டுமில்லாமல் முக்கியமான குறிப்பாக தங்களுடைய முதலாளித்துவ திட்டத்தை மூடி மறைப்பதற்கு அவை தேசியவாத மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தை ஜாலங்களை தீவிரமாக பயன்படுத்தும் வங்கதேச கட்சிகளிலும் இருக்கும் போலிக் கற்பனைகளில் இருந்து அவற்றை முறிக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, Bangladesh Observer மார்ச் 11 பதிப்பின்படி, வங்கதேச போர் எதிர்ப்பு National Press Club இல் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில், "வங்கதேச மக்களும் கட்சிகளும் அனைத்து வடிவிலான போர்களுக்கும் எதிர்ப்பு காட்டுகின்றனர்; ஈராக், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் என்று எல்லா இடங்களிலும் நிகழும் போர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வங்கதேசம் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பெற்றுள்ள நாடு. இங்கு அடிப்படைவாதமோ, பயங்கரவாதமோ கிடையாது." என முழங்கினார் என்று கூறப்படுகிறது.

உண்மையில் வங்கதேச தேசியக்கட்சி அடிப்படைவாத குழுக்களுடன் பகிரங்கமாக கூட்டணி சேர்ந்து கொண்டுதான் அரசாங்கத்தை நடத்திவருகிறது. மேலும் இஸ்லாமியக் குழுக்களும் அரசாங்க சக்திகளும் இணைந்து செயல்பட்டு தங்கள் அரசியல் விரோதிகளையும், தொழிலாளர் நலவாதிகளையும் தீயமுறையில் கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது; இவ்விதத்தில் போலீஸ் பிடியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும்.

இந்தப் பிரச்சனைகளைப்பற்றி காலோவேவிற்கு நன்றாகவே தெரியும்; ஆனால் ஒரே மொழிபேசும், சமுதாய, அரசியல் வேறுபாடுகளின்றி இருப்பதாகக் கூறப்படும் முஸ்லீம் "சமூகத்திற்கு" வாக்கிற்காக அழைப்பு விடுக்க வேண்டியுள்ளதால் இந்தப் பிரச்சனைகள் குறுக்கே வராமல் இருப்பதற்காக எழுப்பப்படமாட்டாது.

பிரித்தானியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு பிரத்தியேகமான முறையில் ரெஸ்பெக்ட் விடும் இந்த அழைப்பு, பல இந்து, சீக்கிய, யூதர் சிறுபான்மைக் குழுக்களுக்கு உளைச்சல் தரும் நிகழ்வாகத்தான் இருக்கும். மேலும் இது வெள்ளை நிற தொழிலாளர்களுக்கும் குடியேறிய தொழிலாளர்களுக்கும் இடையே பிளவுகளை விதைப்பதற்கான வலதுசாரி சக்திகளின் பிரச்சாரத்திற்கு ஆயுதம் வழங்க வெளிப்படையாக ஊக்கம் தரும் வருந்தத்தக்க வகையிலும் இது இருக்கும்.

காலோவேக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசியல் உரிமம், அமெரிக்காவில் புஷ் நிர்வாகமும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தும் பாரிய தாக்குதலுடன் ரெஸ்பெக்டை ஏற்கெனவே இணைத்துள்ளது.

பல நேரங்களிலும் தான் ஒரு கத்தோலிக்கர் என்ற முறையில் "கருக்கலைப்பிற்கு வலுவான எதிர்ப்பாளர்" என்று காலோவே தெளிவுபடுத்தியுள்ளார்; இந்தக் கருத்தும் அவர் துதிபாடும் இஸ்லாமியக்குழுக்களும் ஆட்சிகளுக்கும் பெரும் உவப்பை கொடுத்துள்ளது. சோசலிச தொழிலாளர் கட்சி பகிரங்கமாக அவருடைய கருத்துக்களுக்கு எதிர்ப்பு கூறவில்லை; அவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் என்று இக்கட்சி கூறுகிறது. காலோவேவுடன் எவ்விதத்திலும் மோதலுக்கு செல்லத் தயாராக இல்லை என்ற அவர்களுடைய கருத்தினால் இந்நிலை விளக்கம் பெறுகிறது; அதைத்தவிரவும், பிரித்தானிய முஸ்லீம்களுக்கிடையே உள்ள சமய உணர்விற்கு ஏற்றவாறு அதன் சொந்த அடிபணிவும் இதில் பிணைந்துள்ளது.

15 ஆண்டுகள் தொடர்ந்து உணர்வற்ற நிலையில் இருந்த தன் மனைவி டெர்ரி ஷியாவோவின் உயிராதரவு கருவிகளை அகற்ற வேண்டும் என்று அவர் கணவர் முயன்றதைத் தடுக்கும் முயற்சியில் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதி புஷ்ஷும் ஈடுபட்டபோது, இத்தகைய அடிப்படை குடிஉரிமைகளின் மீதான தாக்குதலுக்கு காலோவே ஒப்புதல் கொடுத்தார். அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றங்கள் புஷ் மற்றும் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு விரோதமான முறையில் ஷியாவோ இறப்பதற்கு மறுக்கத் தலையீடு செய்ததைத் தள்ளுபடி செய்த சிறிதுநேரத்தில் மார்ச் 31 BBC உடைய Question Time நிகழ்ச்சியில் காலோவே தோன்றினார். பார்வையாளர்கள் இதுபற்றி அவருடைய கருத்தைக் கேட்டபோது அவர் நீதிமன்ற முடிவை எதிர்ப்பதாகவும், நோயாளி மரணத்தை விரும்பினால் உதவலாம் என்ற நிலையுடன் அதை ஒப்பிட்டுக் கூறினார்.

இந்த நிகழ்வு, இஸ்லாமிய முறைக்கு ஏற்றவாறு ரெஸ்பக்ட் மாற்றிக்கொள்ளுவது, எப்படி இன்னும் பொதுவகையில் பிற்போக்குத்தனம், சமய நம்பிக்க்ைகள் என்று வலதுசாரியின் மரபு முறைப் பாதுகாப்பிற்குட்பட்ட நம்பிக்கைகளுக்கும் அது வளைந்து கொடுக்கும் என்பதற்கு நிரூபணமாக இருக்கிறது.

ரெஸ்பக்டின் தலைவர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, கிறிஸ்தவ வலசாரிகளின் "வாழும் உரிமை" பற்றிய கருத்தை எதிரொலித்து பேசுகிறார். அப்படியும் கூட சோசலிச தொழிலாளர் கட்சி காலோவேக்கு எதிரிடையான கருத்துக்களை கூற முடியவில்லை. உண்மையில் பிரிட்டனில் மிகப்பரந்த பரபரப்பை ஏற்படுத்திய டெர்ரி ஷியாவோ விவகாரம் பற்றி இது எக்கருத்தையும் வெளியிடாதது ஒரு முக்கியமான குறிப்பு ஆகும்; இதன் அரசியல் முக்கியத்துவத்தின் ஆழ்ந்த தன்மை பற்றி கூறவேண்டிய தேவையே இல்லை.

wsws ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், ஷியாவோ விவகாரம் பற்றிய அரசியல் முக்கியத்துவத்தின் ஆய்வில் "பிற்போக்குத் தன்மையுடைய சிந்தனைகளுக்கு" எதிராக உறுதியான போராட்டம் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். "தொழிலாளர்களை இணைக்கும் முயற்சிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. தொழிலாளர்களை அரசியல் முறையில் ஒழுங்குற ஒரு வர்க்கமாக இணைத்து அவர்களுடைய போராட்டத்தின் புத்திஜீவித கலாச்சார தரத்தை உயர்த்துதல், அறிவியல் சிந்தனையை சமய மூடநம்பிக்கைகள், பின்தங்கிய நிலை இவற்றிற்கெதிராக கொள்ளுதல், அதாவது சடவாத மார்க்சிச உணர்தலை சமூகத்தின் சமூகப் பொருளாதார உறவுகளுக்கு மட்டும் என்றில்லாமல் மனித முழு உணர்வின் அமைப்பு அடிப்படைகள் இவற்றிற்கும் கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். கடந்த காலத்தைப் போலவே, சோசலிச இயக்கம் கோட்பாடு, கற்பித்தல் வகையில் அது தொழிலாள வர்க்கத்திற்கு மிகப் பரந்த அளவில் பொறுப்புகளை கொண்டிருக்கிறது என்பதை கட்டாயமாக அறியவேண்டும். (See: "The case of Terri Schiavo and the crisis of politics and culture in the United States," April 4, 2005.)

தொழிலாள வர்க்கத்திடையே சமயச் செல்வாக்கு வளர்தலை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதிலாக சோசலிச தொழிலாளர் கட்சி தானே தீவிரமாக அதற்கு ஆதரவைக் கொடுக்கிறது.

ஒரு வறிய தொழிலாள வர்க்க பிரிவினர் தொகுதியில் பிளேயருக்கு இருக்கும் பரந்த எதிர்ப்பு உணர்வை காணும்போதும், குறிப்பாக ஈராக் பற்றி முஸ்லீம்கள் கொண்டுள்ள விரோதப் போக்கையும் காணும்போது காலோவே Bethral Green and Bow வில் கணிசமான அளவு வாக்குகளை பெறக்கூடும். மற்ற இடங்களிலும் இவ்வாறு ரெஸ்பக்ட் வாக்குகளை பெறக்கூடும். ஆனால் இது சோசலிசத்தின் முன்னேற்றத்திற்கோ தொழிலாள வர்க்கத்திற்கான உண்மையான சோசலிசக் கட்சியை கட்டியமைக்கவோ உதவாது. மாறாக தொழிற்கட்சியின் அனைத்துபிரிவுகளுக்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் மற்றும் காலோவே போன்ற சந்தர்ப்பவாத அயோக்கியர்களுக்கும் அவர்களுக்கு துதிபாடும் சோசலிச தொழிலாளர் கட்சி போன்றோளுக்கு எதிரான உணர்மையுடனான ஒரு அரசியல் போராட்டத்தின் மூலம்தான் அத்தகைய வளர்ச்சி விளையும்.

Top of page