World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French referendum on European constitution set for May 29

ஐரோப்பிய அரசியல் அமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்தெடுப்பு மே 29 அன்று நடத்த ஏற்பாடு

By Richard Dufour
18 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய அரசியலமைப்பு உடன்படிக்கை பற்றிய கருத்தெடுப்பு அண்மையில் பிரெஞ்சு ஊடகத்தில் பற்பல ஊகக் கருத்துக்களுக்கு விவாதப்பொருளாயிற்று. செய்திகளின்படி, ஆளும்வட்டங்கள் இந்தப் பிரச்சினையில் பிளவுபட்டிருக்கின்றன. ஸ்பெயினில் கிடைத்துள்ள "ஆதரவு உண்டு" வாக்கின் நலன்களை பயன்படுத்திக்கொண்டு, "ஆதரவு கிடையாது" என்ற வாக்கை நசுக்கும் வகையில் "மின்னல்வேக பிரச்சாரம்" வேண்டும் என்று வாதிடும் குழுவினர், ஒருபுறமும், உடன்பாட்டிற்கு பரந்த எதிர்ப்பு உள்ளது என்ற மறுக்க முடியாத உண்மையை அறிந்ததால், அதையொட்டி மக்களுக்கு எடுத்துரைத்து நம்பவைக்கும் முறையில், "பயில்விக்கும் பிரச்சாரமாக" இருக்க வேண்டும் என்று மறுபுறம் வாதிடும் குழுவினரும் உள்ளதாக தெரியவருகிறது.

பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக் கடந்த வாரம் இரண்டாவது விருப்பத்திற்கு ஆதரவாக முடிவெடுத்துள்ளார். எனவே கருத்தெடுப்பிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள மே 29 தேதி 85 நாட்கள் பிரச்சாரத்தை அர்த்தப்படுத்துகிறது, மக்கள் கலந்தாய்வுக்கு மிக நீண்டகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள இந்தவகையானதில் இதுவும் ஒன்றாகிறது.

சிராக்கின் ஐரோப்பா பற்றிய நோக்குநிலையில் ஆளும் வட்டங்களுக்குள் பரந்த ஒருமித்த கருத்து இருப்பதால், சிராக் மற்றும் அவருடைய வலதுசாரி அரசாங்கமும் பெரும்பான்மை சோசலிஸ்ட் கட்சி (PS) தலைவர்களின் ஆதரவைப் பெற்றுவிட முடியும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கு மாறாக, "வேண்டாம்" என்று கூறும் முகாமோ, லூ பென்னுடைய நவீன பாசிச தேசிய முன்னணியினர் தொடக்கம், தீவிர இடது குழுக்கள் (Ligue Communiste Revolutionnaire, Lutte ouvriere போன்றவை), ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிசக் கட்சியின் சில பிரிவுகள் வரை பரந்த அரசியல் கூறுபாடுகளை கொண்டுள்ளது.

தன்னுடைய ஜேர்மன் பங்காளியுடன் சேர்ந்து கொண்டு பிரெஞ்சு ஆளும் வர்க்கம், அமெரிக்காவின் புவிசார் அரசியல் மேலாதிக்கத்திற்கு ஒரு எதிரெடையாக "வலுவான ஐரோப்பாவை" நிறுவும் வகையிலும், கண்டம் முழுவதும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை தாழ்த்துவதில் முக்கிய ஆயுதமாகவும் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை, நீண்ட பிரச்சார கால விருப்பத்தை சிராக் தேர்ந்தெடுத்துள்ளது நன்கு புலப்படுத்துகிறது; மேலும் சில கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் கருந்தெடுப்பு எடுக்கப்பட இருக்கிறது என்பதைக்காட்டினாலும், "ஆதரவு" முழு உறுதியாக இல்லை என்பதையும் ஆளும் வர்க்கம் அறிந்துள்ளது.

சிராக் அரசாங்கத்தினாலான பொது நலப் பணிகள் மீதான தாக்குதலும், உழைப்பு சந்தையை "தாராளமயப்படுத்தும்" அதன் முயற்சிகளும், அதாவது தொழிலாளர்களின் இழப்பில் இலாபக் குவிப்பிற்கான அனைத்து தடைகளையும் அகற்ற வேண்டும் என்ற இலக்கும், நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான வலுவான இயக்கத்திற்கு ஊக்கம் தருவதும் ஆகும், அதாவது வேலைகள் தனியார் மயமாக்கப்படுதல், வேலைகளை ஏற்றுமதிசெய்தல், இவற்றிற்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவரிடையே ஒரு எழுச்சி என்ற வகையில் இயக்கம் தோன்றியுள்ளது. ஏராளமான மக்கள், ஆபத்துநிறைந்த நிதிநெருக்கடியை சந்திக்க முடியாமலும் செலவுகளுக்காக போதுமான வரவைப் பெற முடியாமல் முடிவில்லா போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

பிரான்சில் -மற்றும் ஐரோப்பாவில்- ஆளும் செல்வந்தத்தட்டு எதிர்கொண்டுள்ள பெரும் சங்கடம் செல்வாக்கு நிறைந்த Le Monde நாளேட்டில் வியத்தகு சொல்லாட்சியில் தொகுத்துரைக்கப்படுகிறது: "ஒவ்வொரு சமூகப் பூசலிலும், ஐரோப்பாவை நிராகரிப்பதற்கான விதைகள், ஏன் வெறுப்பதற்கான விதைகளும் கூட உள்ளன. வேலையின்மை மீண்டும் தலைதூக்குகிறதா? ஐரோப்பாதான் காரணம். ஓர் உற்பத்தி ஆலை இங்கிருந்து வெளிநாட்டிற்குச் சென்றுவிடுகிறதா? ஐரோப்பா. ஓர் அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டு விடுகிறதா? ஐரோப்பா. தேக்கமடைந்துள்ள ஊதிய விகிதங்களா? ஐரோப்பா. வாழ்க்கைச் செலவு மிகவும் உயர்ந்து விட்டதா? ஐரோப்பா."

ஆயினும், இத்தகைய கவலைகளுக்கு தக்க ஆதாரம்தான் உள்ளது. பெருகிவரும் பொருளாதார உறுதியற்ற நிலைமைக்கும் சமூக நிலைமைகளை தாழ்த்த வேண்டும் என்று உந்துதலுக்கான ஐரோப்பிய ஆளும் செல்வந்தத்தட்டின் சேர்ந்து திட்டமிட்ட முயற்சிகளுக்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பை Le Monde ஒரு கேலிச் சித்திரத்தின் மூலம் மறைக்க முயல்கின்றது.

வேலை பற்றிய நிலைமை மிகக் கடுமையான நெருக்கடியில்தான் உள்ளது; இது பிரான்சில் மட்டுமில்லாமல் ஜேர்மனியிலும் அவ்வாறேதான் உள்ளது. பிரான்சில் வேலையின்மையின் 10 சதவீதத்தை கடந்துவிட்டது; ஜேர்மனியில் இது 12.6 சதவீதமாக உள்ளது. வேலையில் இருக்கும் பிரெஞ்சுத் தொழிலாளர்களுள் 20 சதவீதத்தினருக்கு எந்த விதமான வேலை ஒப்பந்தமும் கிடையாது. நீண்ட கால வேலையின்மை (அதாவது ஓராண்டுக்கும் மேலாக), என்பது கடந்த 12 மாதங்களில் பிரான்சில் 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது; மிக நீண்ட கால வேலையின்மை (அதாவது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக என்பது) 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 25 வயதிற்கு உட்பட்டுள்ளவரிடையே வேலையின்மை என்பது 1975ல் 9.8 சதவீதமாக இருந்தது இப்பொழுது 21.8 சதவீதம் என்று உயர்ந்துவிட்டது.

அதே நேரத்தில், பெரும் வணிகநிறுவனங்கள், CAC 40 (பாரிஸ் பங்குச் சந்தைக் குறியீட்டெண்) நிலைச்சான்றாய் மிகப் பெரிய இலாபங்களை பெறுவதை மேற்கோளிட்டுக் காட்டுகின்றன. la Caisse des dépôts என்னும் பிரெஞ்சு வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுனரான Patrick Artus கூறுகிறார்: "எங்களுடைய ஆய்வுகளின்படி, இலாப அதிகரிப்பில் பாதிக்கும் மேலான தொகை, வருவாய் மறுபங்கீட்டு திரித்தல் மூலம், தொழிலாளருக்கு விரோதமான முறையில் மூலதனத்தின் நலன்களை ஒட்டி விளைகிறது." 2004 உற்பத்தித் திறன் 1.8 சதவீதம் உயர்ந்து விட்டபோதிலும், உண்மை ஊதியம் 0.5 சதவிகிதம்தான் உயர்ந்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். "இலாப அதிகரிப்பின் மற்ற பகுதி செலவினங்களின் குறைப்பின் மூலம், அதாவது ஆலைகளை வெளியிடத்திற்கு மாற்றச் செய்வதின் மூலம், ஏற்பட்டுள்ளது" என்று அவர் விளக்குகிறார்.

ஓர் ஒருங்கிணைந்த முதலாளித்துவ ஐரோப்பிய திட்டத்தின் மையம், --அதாவது மே 29 வாக்கெடுப்பின் குறிக்கோள்-- கிழக்கில் இருக்கும் பின்தங்கிய பொருளாதாரத்தின் திகைப்பூட்டும் மட்டத்திற்கு, இந்தக் கண்டம் முழுவதிலும் உள்ள சமூகநிலைமைகளைக் குறைக்கவேண்டும் என்று ஆளும்வர்க்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொதுவான பிரச்சாரத்தின் உள்ளடக்கத்தில், கிழக்கு ஐரோப்பாவிற்குள் விரிவாக்கம் ஆகும்.

ஏற்கனவே தன்னுடைய தாக்கத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் இந்த விரிவாக்கத்தின் தவிர்க்க முடியாத விளைவுகள்தான் இலாபங்களின் கடுமையான ஏற்றம் இருப்பதைப் பற்றி விளக்குகையில் ஆர்ட்டஸ் தெளிவாக எடுத்துக் கூறியது ஆகும்: அதாவது வருமானங்களில் கூடுதலான சமத்துவமின்மை இருப்பது என்பது "முதலாளித்துவத்தின் நலனுக்கு உகந்ததும், தொழிலாளர்களுடைய நலனுக்கு தீமை பயப்பதும் ஆகும்"; மேலும் கிழக்கிற்கு உற்பத்தி முறையை மாற்றுதல் என்பது தொழிலாளர் சட்டங்கள் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதையும், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அநேகமாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் வகையில்தான் உள்ளன.

பொருளாதாரத்தின் பல பிரிவுகளில் இந்த வழிவகை செயல்படுத்தப்படுகிறது. வீட்டு உபயோகப்பொருட்களை உலகளவில் உற்பத்திசெய்வதில் முதல் இடத்தில் உள்ள சுவீடிஸ் நிறுவனமான Electrolux பெப்ரவரி 15ம் தேதி, "செல்வம் கொழிக்கும் நாடுகளில் நாங்கள் கொண்டுள்ள ஆலைகளில் பாதிக்கும் மேலானவை - 27ல் 15 - வேறு இடங்களுக்கு மாற்றப்படும்" என்று அறிவித்துள்ளது. மற்ற உற்பத்தியாளர்களும் மேற்கு ஐரோப்பாவில் ஆலைகளை மூடித் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்தல், அதேநேரத்தில் போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ருமேனியா போன்ற நாடுகளில் புதிய அமைப்புக்களை நிறுவுதல் போன்றவற்றில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நாடுகள் விரைவில் இப்பொழுது பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் 12.8 மில்லியன் எண்ணிக்கையில் பெரும்பாலானவற்றை உற்பத்தி செய்யத் தலைப்பட்டுவிடும். இதேபோன்ற மாறுதல்தான் கார் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்லோவாக்கியா, மக்கட்தொகையில் மிக அதிகமாக கார்களை உற்பத்தி செய்யும் நாடு என்று ஆகிவிடும்

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள நாடுகளில் மிகப் பெரிதான போலந்து நாட்டின் மூன்றாவது பெரிய பங்குதாரராக பிரான்ஸ்-ம் கூட ஆகியுள்ளது. போலந்தில், பிரான்ஸ் முதலீடு செய்துள்ள 13 பில்லியன் யூரோக்களுடன் (இவற்றில் 90 சதவீதம் பெரும் போக்குவரத்துத் தொடர்பு, உற்பத்தித்துறை மற்றும் சக்தி குழுக்களில் உள்ளது) அந்த நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

இதேபோலத்தான், தற்போதைய ஐரோப்பிய பிராந்திய கொள்கை ஆணையரான (European Commissioner for Regional Policy), போலந்து நாட்டைச் சேர்ந்த Danuta Hübner அம்மையார், "ஐரோப்பாவின் இதயத்தானத்தில் அமைந்துள்ள ஆலைகளை மாற்று இடத்திற்குக் கொண்டுவரும் திட்டங்கள்" வேண்டும் என்ற விருப்பத்தையும் அப்பொழுதுதான் இந்த நிறுவனங்கள், பல ஆயிரம் மில்லியன் கணக்கில் வறுமைக் கோட்டு ஊதிய விகிதத்தில் வேலைக்கு தயாராக இருக்கும் மக்களை கொண்டுள்ள "இந்தியா அல்லது சீனா" போன்றவற்றிற்கு மாற்றும் திட்டம் தடுக்கப்படும் என்றும் கூறினார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மக்கள் இந்தப் பங்கை ஆற்ற, அதாவது குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை அளிக்கத்தயாராக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இம் மறுஒழுங்கமைப்பானது, பொருளாதாரம் பூகோளமயமாக்கப்படுதலுடன் தொடர்புடைய சக்திமிக்க புறநிலை சக்திகளால் இயக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்குக்கு சட்டபூர்வ சக்தியை கொடுப்பதுதான் அரசியல் அமைப்பு உடன்படிக்கையின் நோக்கம் ஆகும். இது, இன்னும் கூடுதலான முறையில் ஒருங்கிணைக்கப்படும் முதலாளித்துவ ஐரோப்பா, சமூக நலன்களில் குறிப்பிட்ட ஒரு தரம் இருக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, மிகப் பேரழிவு விளைவுகள் வருவதை தடுப்பதற்கு மக்கள் காட்டக்கூடிய எதிர்ப்பை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிலைதான் போல்க்ஸ்டீன் இயக்கு நெறியைச் சுற்றியுள்ள விவாதத்தை விளக்குகிறது; இதை ஏற்படுத்திய ஐரோப்பிய ஆணையர் போல்க்ஸ்டீனின் பின்னர் இப்பெயரிடப்பட்டது. அது "மூல நாட்டுக்" கோட்பாடு என்ற கொள்கையை முன்வைத்தது: அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்குத் தயாராக இருக்கும் ஒரு நிறுவனம், அது அடிப்படையாகக் கொண்டிருக்கும் அந்த நாட்டின் சமூகத் தரங்களுக்கு ஊறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளது. இந்தப் பின்னணியில் பிரெஞ்சு நிறுவனங்கள் தங்கள் அலுவலகத் தலைமையிடங்களை மாற்றிக் கொள்ளக்கூடும் என்று ஆலோசனை கூறப்பட்டு வருகிறது; உதாரணமாக போலந்திற்கு மாற்றிக் கொண்டால், அதன் பின்னர் போலந்தின் தொழிலாளர்கள் சட்டங்கள் பிரான்சில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்கிறது.

இதன் வெளிப்படையான உட்பொருளின் காரணமாக, இந்த இயக்கும் வழி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கடுமையான முறையிலான சமூக விரோத, புதிய தாராள இயல்பிற்கும் ஓர் அடையாளமாக உள்ளது- மற்றும் இந்த செயல் திட்டத்தின் வெற்றிக்கு அயராது உழைக்கும் ஜாக் சிராக் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள சமூக ஜனநாயக உறுப்பினர்களுக்கு, அவ்வாறு வருவதற்கு முற்றிலும் வாய்ப்பு இல்லை என்பதை நன்கறிந்துள்ள, அண்மையில் இந்த இயக்கும் வழியைத் திருப்பிப் பெறும் சாத்தியத்தை குறிப்பிட்டுள்ள இவர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது.

உத்தியோகபூர்வமாக கருத்தெடுப்புப் பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில், பிரெஞ்சு தொழிலாளர்கள் ஓர் அடிப்படை உண்மையை மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய கண்டத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பு என்பது ஆழ்ந்த சமூக முன்னேற்றத்திற்கான திறன் உள்ள ஒரு புறநிலைப் போக்கு ஆகும். ஆனால் இந்த அவசியமான பணியை ஐரோப்பிய பெரு முதலாளிகளின் பொறுப்பில் விட்டுவிட்டால், மே 29ல் பொது அரசியலமைப்பிற்காக ஆதரவுவாக்கை கொடுத்துவிட்டால், அதன் விளைவு பிரான்சிலும் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரங்களில் பெரும் சீரழிவாகத்தான் இருக்க முடியும்.

ஐரோப்பிய பெரு மூலதனத்தின் அரசியல் அமைப்புத்திட்டத்திற்கு எதிரான அவசியமான மற்றும் சட்டபூர்வமான எதிர்ப்பு ஒரு பிற்போக்கான பின்னோக்கிச்செல்லும், "பிரெஞ்சு பாணியிலான" முதலாளித்துவம் அல்லது கற்பனை வடிவிலான "சமூக ஐரோப்பா" என்று கூறிக்கொண்டு காக்கும் முயற்சிகளை அடித்தளமாக கொள்ளமுடியாது. அது தனிமனிதனின் இலாபக் குவிப்பை இலக்காக கொண்டிராமல் மனித தேவைகள் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பொதுப்போராட்டத்தின் உள்ளடக்கத்தில், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் முன்னோக்கில் மிக உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும்.

See Also:

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஸ்பெயினின் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

ஐரோப்பிய ஒன்றிய அரசியல் யாப்பின் கையெழுத்திடலை மங்கச்செய்யும் ஐரோப்பிய ஒன்றிய கமிசனின் நெருக்கடி

ஐரோப்பிய யூனியன் தேர்தல் படிப்பினைகள்
 

Top of page