World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush picks right-wing attack dog as UN ambassador

வலதுசாரி வேட்டை நாயை ஐ.நா. தூதராக புஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார்

By Bill Van Auken
9 March 2005

Back to screen version

புஷ் நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பன்முகப்பங்கேற்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது மற்றும் ஈராக் மீது அமெரிக்கா சட்ட விரோதமாக படையெடுத்ததால் மனவேறுபாடுகொண்டுள்ள முந்தைய கூட்டாளிகளை சமரசம் செய்துகொள்ளும் நோக்கிலும் திரும்புகிறது என்ற ஊடக ஊகச் செய்திகளை தீர்க்கமாக மறுத்துரைக்கின்ற வகையில் ஜோன் போல்டன் ஐக்கிய நாடுகளில் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வாஷிங்டனின் வெளியுறவு கொள்கை ஸ்தாபனங்களின் வேறு எந்த நபரையும் விட, போல்டன் சர்வதேச சட்டத்தை நிர்வாகம் புறக்கணிப்பதிலும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுத்து செல்வதில் தன்னிச்சையான இராணுவ ஆக்கிரமிப்பை முன்னுரிமையுடைய கருவியாக நம்பியிருப்பதிலும் மானிட உருவாய் திகழ்கிறார்.

போல்டனை தூதராக தேர்ந்தெடுத்திருப்பது ஐக்கிய நாடுகள் சபை மீதே சந்தேகத்திற்கு இடமின்றி தாக்குதல் தொடுப்பதாக அமைந்திருக்கிறது மற்றும் அது அமெரிக்காவின் பூகோள மூலோபாய குறிக்கோள்களுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து செயல்பட தவறுமானால் புஷ் நிர்வாகம் அதன் பேரழிவை செயலூக்கத்துடன் பின்தொடரும் என்று ஒரு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்திருக்கிறது.

ஐக்கிய நாடு மீதான போல்டனின் கருத்துக்கள் அனைவரும் அறிந்ததுதான். 1994-ல், வலதுசாரி சிந்தனைக் குழுமங்களில் மூத்த புஷ் நிர்வாகத்திற்கும் இளைய புஷ் நிர்வாகத்திற்குமிடையில் தனது நேரத்தை முடிவு செய்வதற்காக கட்டளையை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், உலக கூட்டரசு சங்கம் ஏற்பாடு செய்த ஒரு விவாதத்தில் பேசிய அவர், ''ஐக்கிய நாடு என்ற எதுவுமில்லை'' நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமை செயலக கட்டிடமான 10 மாடிகளை இழந்துவிடுமானால், அதனால் ஒரு சிறிய மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை`` என்று அறிவித்தார். அதே காலகட்டத்தில் அவர் அமெரிக்கா ஐ.நா.விற்கு செலுத்த வேண்டிய பாக்கிகள் அனைத்தையும் முற்றிலுமாக வெட்டிவிட வேண்டுமென்று கூறினார்.

2000 ஜனவரி 1-ல்--- ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் பதவியேற்பதற்கு ஓராண்டிற்கு முன்னர்---- வலதுசாரி வீக்லி ஸ்டாண்டர்ட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னனை அவதூறு செய்கிற வகையில் ஒரு கட்டுரையை எழுதினார் மற்றும் நிர்வாகத்தின் உயர்ந்த தரத்தில் ஆத்திரமூட்டப்படாத நிலையில் இராணுவ வாதத்தை முன்னெடுத்துச் செல்லும் கொள்கையை உறுதிப்படுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு சபைதான் ``படை வலிமையை பயன்படுத்துவதை சட்டபூர்வமானதாக ஆக்குகின்ற ஒரே ஆதாரம்`` என்று ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்திக்கூறிய ஆட்சேபிக்க முடியாத கருத்தை அவர் ``அன்னன் கொள்கைவழி`` என்று விவரித்தார். ``இந்தக் கூற்று ஆட்சேபிக்கப்படாமல் நீடிக்க அமெரிக்கா அனுமதிக்குமானால், எதிர்காலத்தில் தனது தேசிய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு தனது விருப்புரிமைப்படி படை பலத்தை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு இடையூறு ஏற்படக்கூடும்`` என்று போல்டன் எச்சரித்தார்.

இது வெறும் கருத்தியல் வலியுறுத்தல் அல்ல. அந்த நேரத்தில், போல்டனும் புஷ் நிர்வாகத்தில் இடம்பெறவிருந்த இதர குடியரசுக் கட்சிக்காரர்களும் ஈராக் மீது படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்துக்கொள்வதில் ஒரு தலைப்பட்சமாய் அமெரிக்கப் படைகளை பயன்படுத்துவதற்கான திட்டத்தை ஏற்கனவே நன்றாக வளர்த்துக்கொண்டிருந்தனர்.

1990-களின் கடைசியில், ஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டு செயல்திட்டத்தின் இயக்குனராக போல்டன் பணியாற்றி வந்தார், அந்த அமைப்பில் புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரும்பாலோர் பணியாற்றி வந்தனர். வாஷிங்டன் செப்டம்பர் 11- மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றிய சாக்குபோக்குகளை உருவாக்குவதற்கு முன்னரே PNAC வெளிப்படையாக ஈராக்கை வென்றெடுப்பதற்கு திட்டங்களை தீட்டியது.

2000 தேர்தலை குடியரசுக் கட்சி திருடியதில் போல்டன் ஒரு பிரதான பங்களிப்பு செய்தார். உச்சநீதிமன்றம் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முடிவு செய்தபின்னர், அவர் புளோரிடா நூலகத்திலிருந்த Tallahassee வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அவர் நுழைந்தார், அங்கு மாநில அதிகாரிகள் மியாமி-- டேட் வாக்குகள் எண்ணப்பட்டு வந்துகொண்டிருந்தன. ``நான் புஷ் செனி குழுவில் இருக்கிறேன், வாக்கு எண்ணிக்கையை தடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்`` என்று அவர் அறிவித்தார்.

புஷ் பதவியேற்ற பின்னர், போல்டன் அரசுத் துறையில் ஆயுதங்கள் கட்டுப்பாட்டிற்கான துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி George Orwell-டைய 1984-ல் இடம்பெற்றிருந்த ``சமாதான அமைச்சகம்`` அளவிற்குகூட பொருத்தமுடையதல்ல. ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த எழுதபட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் போல்டன் எதிர்த்தார்.

குடியரசுக் கட்சியின் வலதுசாரி பிரிவைச் சார்ந்த இதர உறுப்பினர்களைப்போல், போல்டன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தை (Anti-Ballistic Missile Treaty) எதிர்த்தார். அதேபோன்று இரசாயனவியல் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தங்களையும் அவர் எதிர்த்தார், அத்தகைய தடைகளை ஆதரிக்கின்றவர்கள் ``தவறான வழிகாட்டப்பட்ட தனிநபர்கள் அவர்கள் ஒரு பயந்த சுபாவமும், நவீன-சமாதான சிந்தனை வழியிலும் செல்பவர்கள்`` என்று அறிவித்தார்.

சிறு ஆயுதங்களில் சட்ட விரோதமான வர்த்தகத்தை சமாளிப்பதற்கு ஐ.நா மாநாடு ஒன்று கூட்டப்பட்டதை 2001-ல் அவர் முறியடித்தார். ``அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஆயுதங்களை வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.`` அந்த உரிமையை கட்டுப்படுத்துகின்ற எந்த ஒப்பந்ததையும் வாஷிங்டன் புறக்கணிக்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் உயிரியல் ஆயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான நகல் திட்டங்களை தயாரிப்பதற்காக ஐ.நா. ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் சரி பார்க்கும் நடைமுறைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன, போல்டனின் முயற்சிகளால் அந்தத் திட்டம் நாசம் செய்யப்பட்டது. ஒரு தகவலின்படி, அவர் இந்தத் திட்டத்தை முறியடித்தது தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகளிடம் பெருமையடித்துக் கொண்டார். ``அது செத்துவிட்டது, செத்துவிட்டது, செத்த ஒன்று மீண்டும் உயிர் பெற்று வருவதை நான் விரும்பவில்லை`` என்று தமது துறை சகாக்களிடம் கூறியிருக்கிறார்.

என்றாலும், அத்தகைய ஒப்பந்தங்களுக்கு அவரது விரோதம் அடிப்படை கொள்கைகள் சம்மந்தப்பட்டதாகும், மாறாக நன்கு வரையறுக்கப்பட்ட தகவமையல்ல. சர்வதேச சட்டத்திற்கு அமெரிக்க கொள்கை எந்த வகையிலும் கீழ்படிந்து செல்வதை அவர் அடிப்படையிலேயே எதிர்த்து வருபவர்.

1999-ல் அவர் அறிவித்தார்: ''சர்வதேச சட்டத்திற்கு அது குறுகிய காலத்தில் நமக்கு நலன்கள் அளிப்பதாக இருந்தால்கூட அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் தருவது ஒரு பெரிய தவறாகும், ஏனென்றால் நீண்டகால அடிப்படையில் அமெரிக்காவை கட்டுப்படுத்த விரும்புவோர் அதை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடும், அப்படி நினைப்போருக்கு ஏற்றதுதான் சர்வதேசச் சட்டம்.``

2002-ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ''கையெழுத்திட மறுத்ததற்கு'' போல்டன் பொறுப்பேற்றுக்கொண்டார், அவர் அவ்வாறு செய்தற்கு காரணம் அமெரிக்காவின் தன்னிச்சைப் போக்கை வலியுறுத்துவதாகவும், வாஷிங்டன் ஆக்கிரமிப்புக் கொள்கையில் இறங்குவதால் பல்வேறு வகைப்பட்ட போர்க் குற்றங்கள் நிகழக்கூடும் என்று எச்சரிப்பதாகவும் அமைந்திருந்தது. நீதிமன்ற அமைப்பு ஒப்பந்தம் நேரடியாக ஆயுதங்கள் கட்டுப்பாட்டு துணைச் செயலாளர் என்கின்ற முறையில் அவரது நேரடி அதிகார வரம்பின்கீழ் வராவிட்டாலும் அதை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றார், வாஷிங்டன் அதிலிருந்து விலகிக்கொள்கிறது என்று கையெழுத்திடும் கடிதத்தை முறைப்படி ஐக்கிய நாடுகளிற்கு அனுப்ப அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ``எனது அரசாங்க சேவையில் மகிழ்ச்சி நிறைந்த தருணம் இதுதான்`` என்று அப்போது வால் ஸ்டீரிட் ஜேர்னலிடம் தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவ வாதத்தை கட்டுப்படுத்தும் எந்த ஒப்பந்தங்களையும், சட்டங்களையும் அதேபோன்று அமெரிக்கா பேரழிவுகரமான ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் அல்லது சட்டங்களை எதிர்த்து வந்தாலும், போல்டன் அமெரிக்கா பிறநாடுகள் மீது தாக்குதல்கள் நடத்துவதை நியாயப்படுத்துவதற்கு அத்தகைய ஆயுதங்கள் குறித்த தவறான குற்றச்சாட்டுக்களை எழுப்புவதில் மிகத் தீவிரமானவர்களில் ஒருவராவார்.

ஐக்கிய நாடு ஆயுதங்கள் சோதனை வேலைத்திட்டத்தில் ஈராக் தொடர்பாக அவர் திரும்பத் திரும்ப தலையிட்டார் மற்றும் அதன் தலைமையை மாற்ற முயன்றார், அமெரிக்க கட்டளைக்கு மிகவும் அடிபணிந்து நடக்கின்ற அதிகாரிகளை திணித்தார்.

2002 மே-ல், ஹெரிடேஜ் பவுண்டேசனில் அவர் ஆற்றிய உரையில் புஷ்ஷின் ``தீய அச்சு நாடுகளை`` விரிவுபடுத்தினார், அதில் கியூபா, சிரியா மற்றும் லிபியாவை சேர்த்துக்கொண்டார். அவை அத்தனையும் ``போக்கிரி அரசுகள்`` என்றும் பேரழிவுகரமான ஆயுதங்களை உருவாக்குவதிலும், பயங்கரவாதிகளுக்கு உதவுவதிலும் குறியாக உள்ளவையென்றும், ஈராக் மீதான போரை நியாயப்படுத்துவதற்கு அபிவிருத்தி செய்த அதே சாக்குப்போக்குகளை குறிப்பிட்டார்.

புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகள் அவரது கூற்றுக்களை குறிப்பாக கியூபா மற்றும் சிரியா தொடர்பானவற்றை மறுத்துள்ளனர். ஈராக்கிடமில்லாத பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தவறான வாதத்தை எழுப்பிய கொலின் பவலே கூட போல்டனின் கூற்றுக்களை மறுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அரசாங்க துறைக்குள்ளேயே வெள்ளை மாளிகையின் ஒரு முகவாண்மை என்று கருதப்படுகிறார் மற்றும் பென்டகன், சிவிலியன் தலைமையில் வலதுசாரி சிந்தனையாளர் என்று கருதப்படுகிறார்.

இனவாதியும், அதிதீவிர கம்யூனிச-எதிர்பாளருமான வடக்கு கரோலினா செனட்டர் Jesse Helms-ன் நெருக்கமான அடிவருடியாக குடியரசுக் கட்சியின் வலதுசாரி அணியில் போல்டன் தலைமை குருவாக உதித்தெழுந்தார். சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் Helms ``இல்லை செனட்டர்`` என்றழைக்கப்பட்டார், அவர், செனட் வெளியுறவு குழுவின் தலைவராக இருந்தபோது ஐ.நா.விற்கு அமெரிக்கா செலுத்தவேண்டிய கட்டண பாக்கிகளை செலுத்தாமல் தடுத்து நிறுத்தினார்.

ஒரு சந்தேகத்திற்குரிய நிதி திரட்டும் அமைப்பு தொடர்பான சட்டபூர்வமான குற்றச்சாட்டுக்களையும் மோசடியையும் தவிர்ப்பதற்கு Helms-ற்கு உதவிய பின்னர் அதற்கு வெகுமதியாக போல்டன், றேகன் நிர்வாகத்தில் ஒரு அரசியல் நியமனத்தைப் பெற்றார், முதலில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அமைப்பில் (Agency) பணியாற்றினார், அதன் பின்பு அட்டர்னி ஜெனரல் Edwin Meese தலைமை வகித்த, நீதித்துறையில் பணி செய்தார் .

Meese-ன் கீழ், அவர் அந்த துறையின் சமிக்கை காட்டுபவராக பணியாற்றியபோது ஈரான்- கான்ட்ரா மோசடிகள் நடைபெற்ற காலத்தில், நிகராகுவா நாட்டை தாக்குவதற்கு சிஐஏ ஏற்பாடு செய்த கூலிப் படைக்கு நிதி திரட்டுவதற்கான சட்ட விரோத திட்டம் தொடர்பான சாட்சியங்களையும், ஆவணங்களையும் பெறுவதற்கு நாடாளுமன்றம் முயன்றபோது அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினார். இந்த காலகட்டத்தில்தான், இந்த விவகாரத்தில் தலையிட்ட வலதுசாரி அதிகாரிகளோடு அவர் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். அதில் இடம் பெற்ற ஒருவர் இல்லியோட் ஆப்ராம்ஸ், அவர் நாடாளுமன்றத்திற்கு பொய் தகவல் தந்ததாக குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வேண்டியதற்கு நிர்பந்திக்கப்பட்டார் மற்றும் அவர் தற்போது புஷ்ஷின் இரண்டாவது பெரிய அதிகாரியாக தேசிய பாதுகாப்புக்குழு ஆலோசகராக பணியாற்றி வருகிறார், மற்றொருவர் ஜோன் நெக்ரொபொன்ட், ஹோன்டுராசிலிருந்த அமெரிக்க தூதர் அலுவலகத்திலிருந்து கொண்டு கான்ட்ரா நடவடிக்கைகளில் பெரும்பகுதியை இயக்கியவர் மற்றும் அவர் தற்போது புஷ்ஷின் புதிய தேசிய புலனாய்வு இயக்குனர் ஆவார்.

அரசாங்கப் பணியில் இல்லாதபோது, போல்டன் சிலி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்ட்டோ பினோசே மற்றும் தைவான் ஆட்சியாளர்களுக்காக வாதிடுபவர் என்று தனிச் சிறப்பு பெற்றவர். வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி தைவான் ஆட்சியாளர்கள் அவருக்கு 30,000 டாலர்கள் வழங்கினர். அதற்கு கைமாறாக, அவர் 30 ஆண்டுகளாக அமெரிக்கா கடைபிடித்து வந்த ``ஒரே சீனா`` கொள்கையை கைவிட வலியுறுத்தி, தைவான் பற்றியும் அதனை ஐ.நா.வில் ஒரு உறுப்பினராக சேர்ப்பதையும் வலியுறுத்தினார்.

போல்டன் தேந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து சில ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், அவரது நியமனம் ஏறத்தாழ பதவி உறுதிப்படுத்துவதை நிச்சயம் வென்றெடுக்கும். சித்திரவதை செய்வதை ஏற்று பாதுகாப்பவரை நீதித்துறை தலைவராக நியமித்திருக்கும் செனட் சபை, சர்வதேச சட்டத்தை தீவிரமாக எதிர்க்கின்ற ஒருவரை ஐ.நா.விற்கு அனுப்புவதைத் தடுத்து நிறுத்தும் என்று நம்புவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை.

இந்தப் பதவிக்கு போல்டன் ஒரு தகுதி வாய்ந்த வேட்பாளர்தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுமாப்பு, கொடூரத்தன்மை, சூறையாடும் போக்கை உலகிற்கு துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவராக அவர் விளங்குகிறார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved