:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Opposition to Iraq war hitting US military recruitment
Black and female enlistment down sharply
அமெரிக்க இராணுவப்பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதை, ஈராக்கியப் போருக்கான எதிர்ப்பு
பாதிக்கிறது
கறுப்பர்கள், பெண்கள் தேர்வு சரிவைக் காண்கிறது
By David Walsh
12 March 2005
Use this version to
print |
Send this link by email |
Email the author
ஈராக்கியப் போருக்கு வளர்ந்துவரும் எதிர்ப்பும் மற்றும் ஒரு கேள்விக்கு உரிய செயற்பாட்டிற்காக
மரணம், காயத்திற்கு உட்பட வேண்டுமா என்ற அச்சமும் அமெரிக்க இராணுவம், மற்றும் தேசியப் பாதுகாவலர்களுக்கான
ஆட்தேர்வுகளில் விளைவுகளை காட்டத் தொடங்கியுள்ளது என்று சமீபத்திய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏராளமான
இளைஞர்களுக்கு பொருளாதாரத்தில் இருண்ட எதிர்காலமும், புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கவர்ச்சிகரமான
சலுகைகள் என்ற அறிவிப்பு இருந்த போதிலும்கூட இத்தகைய நிலை காணப்படுகிறது.
1990ம் ஆண்டில் இருந்து தனக்குத் தேவையான மனித ஆற்றலை பெறுவதற்கான இலக்குகளில்
எந்தச் சிரமத்தையும் கொண்டிராத இராணுவ நிர்வாகம் 2005ல் தேவையைவிட குறைந்த அளவு வீழ்ச்சி
அடைந்துள்ளது. அக்டோபரில் தொடங்கும் பட்ஜெட் ஆண்டின் மூதல் ஐந்து மாதங்களில், இந்த ஆண்டின் இலக்கை அடைவதில்
நிர்ணயிக்கப்பட்டதற்கு 6 சதவீதம் இராணுவம் பின்தங்கியுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான் இவற்றின் ஆக்கிரமிப்பினால்
இராணுவம் ஏற்கனவே அழுத்தத்தை கொண்டுள்ளது என்றாலும், 30,000 வீரர்கள் அளவில் இன்னும் கூடுதலான விரிவாக்கத்திற்காக
அது திட்டங்களைக் கொண்டுள்ளது.
இராணுவத்தின் தேசியப்பாதுகாப்புப் படை இன்னும் கூடுதலான சிரமங்களைக்
கொண்டுள்ளது. பாதுகாப்புப்படை 2004ல் குறைந்திருந்த எண்ணிக்கையையும் ஈடுசெய்வதன் ஒரு பகுதியாக, இந்த
ஆண்டு புதிதாக 63,000 வீரர்களை நியமிக்க விரும்பியது. ஆனால் இந்த பட்ஜெட் ஆண்டின் முதல் நான்கு
மாதங்களில், ஜனவரி இறுதி வரை, 12,800 ஆடவர் மற்றும் மகளிரை, இலக்கிற்கு 24 சதவிகிதம்
குறைவாகத்தான் அது நியமிக்க முடிந்திருந்தது.
அமெரிக்க கடற்படை பிரிவு பெப்ரவரி மாதத்தில் இரண்டாம் முறை நேரடியாகவே
தன்னுடைய ஆள்சேர்ப்பு இலக்கைச் சாதிக்க முயலவில்லை; ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளில் இரண்டு
தொடர் மாதங்களில் நியமன இலக்கை அடையமுடியாமற் போவதில் இதுதான் முதல் தடவையாகும். கடந்த மாதம்
மரைன்கள் கிட்டத்தட்ட 6.5 சதவிகிதம் குறைவாகத்தான் தங்களுடைய குறியிலக்கை அடைய முடிந்தது. அமெரிக்க
மரைன்கள் பிரிவின் ஆட்சேர்ப்பு கட்டுப்பாட்டு அதிகாரி, "இப்பொழுது துருப்புக்களை தேர்ந்தெடுப்பது மிகக்
கடினமான சூழ்நிலையை காட்டுகிறது" என்று ஒரு பத்திரிகையாளரிடம் கூறினார்.
குறிப்பாக இளவயதுக் கறுப்பர்களும், மகளிரும் "இராணுவத்தில் சேருக என்ற
அழைப்பில் இருந்து ஒதுங்கியே உள்ளனர்" என்று அசோசியேடட் பிரஸ்ஸின் றொபர்ட் பர்ன்ஸ் கூறுகிறார், மேலும்
இந்தப்போக்கு "இராணுவத்தின் மிகப் பெரிய ஆட்சிப்பணி, தன்னுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெருக்க
முயற்சி செய்கையில், ஆட்சேர்ப்பு தேர்வில் சரிவு நிலையை நீண்ட காலம் கொள்ளுமோ என்ற கவலையையும்
காட்டுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட்டில் வந்துள்ள மற்றொரு கட்டுரை, "கடந்த ஐந்து
ஆண்டுகளில் இராணுவத்திற்குப் புதிதாக வரும் ஆபிரிக்க-அமெரிக்க வீரர்களின் சதவீதம் வியத்தகு அளவில்
சரிந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. 2000 நிதி ஆண்டில், கறுப்பர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில்
23.5 சதவிகிதம் இருந்தனர்; இப்பொழுது அந்தச் சதவீதம் 14 ஐ விடக் குறைவாக, அதாவது 40 சதவீதம்
குறைவாக உள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் சதவிகிதமும் இதேகாலத்தில் 23 சதவீதம்,
அதாவது 22ல் இருந்து 17 சதவீதத்திற்கு குறைந்து விட்டது.
கறுப்பர்களை பொறுத்தவரையில் போரைப் பற்றிய பொதுமக்கள் வெறுப்பு பணியில்
சேர்வதில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. "அமெரிக்க இராணுவம் பற்றிய
தோற்றம்" என்ற GfK
Custom
ஆராய்ச்சி அறிக்கை, ஆகஸ்ட் 2004ல், வெளிவந்தது முடிவுரையாகக் கூறுகிறது: "தாங்கள் ஆதரவு கொடுக்காத
ஒரு காரணத்திற்காக போரிடல் என்பது இராணுவப் பணியில் சேர்வதற்கு ஒரு தடை என்று பெருகிய முறையில்
ஆபிரிக்க அமெரிக்கர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
Stars and Stripes
என்னும் இராணுவச் செய்தித்தாள், மே மாதம் பாதுகாப்புத்துறை தானே நடத்திய அதன் சொந்த
கணக்கெடுப்பில், "நிர்வாகக் கொள்கைகளும், ஈராக்கியப் போரும் கறுப்பு இளைஞர்கள் பணியில் குறிப்பாகக்
கூடுதலான முறையில் உயிர்களை பறிக்கும் தரைப்படை, மரைன் பிரிவு (கடற்படையின் நிலப்படைப்பிரிவு) இவற்றில்
சேர்வதற்கு ஆர்வத்தைக் குறைத்துள்ளது" என்று சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்புத் துறையின் இளைஞர் கருத்துக் கணிப்பு, "கறுப்பு இளைஞர்கள் கூடுதலான
முறையில் எதிர்மறை தாக்கம் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். ...ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருப்பதற்கும்,
போர் நியாயமானது என்ற உணர்வு கொள்ளுவதிலும் கறுப்பு இளைஞர்கள் குறைந்த ஆதரவைத்தான் கொண்டுள்ளனர்;
புஷ் நிர்வாகம் வெளியுறவு விவகாரங்களை நடத்தும் முறையில் கூடுதலான இணக்கம் இன்மையைக் காட்டுவதோடு,
நிர்வாகம் அமெரிக்கப் படைவீரர்களை பயன்படுத்தும் முறையில் வெள்ளையர்கள் அல்லது ஹிஸ்பானியர்களை விடக்
கூடுதலான ஏற்க முடியாத தன்மையைத்தான் புலப்படுத்துகின்றனர்" என்று தெரிவிப்பதாக மேலே கூறப்பட்டுள்ள
அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட்டினால் நேர்காணல் செய்யப்பட்ட, அமெரிக்க
பாதுகாப்புத் துறையில் படைத் தயார்நிலைப் பிரிவில் துணை செயலாளராக இருந்த எட்வர் டாம் குறிப்பிட்டார்:
"படையெடுப்பிற்கு வெள்ளையர்கள் வலுவான ஆதரவைக் கொடுக்கின்றனர்; கறுப்பர்கள் கொடுக்கவில்லை. எனவே
இளைய வெள்ளையர்கள் பணியில் சேரும் எண்ணிக்கை அதிகமாகும், கறுப்பர்கள் பணியில் சேரும் எண்ணிக்கை
குறையும்." கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான அமெரிக்கர்கள் இப்பொழுது ஈராக் மீதான படையெடுப்பு ஒரு
தவறு என்று கருதுவதாக காட்டுவதால், இராணுவத்திற்கு பிரச்சினைகள் நிறைந்த வருங்காலம் ஏற்படும் என்று
டார்ன் முன்கருத்தைக் கூறியுள்ளார்: "இது வரவிருக்கும் மாதங்களில் வெள்ளையர்கள் இராணுவப் பணியில் சேருவதிலும்
பாதிப்பை ஏற்படுத்தும்."
மில்வார்ட் பிரெளன் என்ற சந்தை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போருக்கு
எதிர்ப்பு, இறப்புக்கள், அபு கிரைப்பில் சித்திரவதை அம்பலம் போன்ற நிகழ்ச்சிகளின் பாதிப்பினால் எல்லா
பிரிவினரிடையுமே போருக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் தெரிந்தெடுக்கும் (ஆள் எடுப்பு) முயற்சிகளில் நல்ல
பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளது: "ஈராக்கிய நிலைக்கு எதிர்ப்பு, மற்றும் இராணுவத்தைப் பற்றிய
வெறுப்புணர்வு ஆகியவை பெருகிய முறையில் இராணுவப் பணிக்குச் சேரும் ஆர்வத்தைக் குறைத்துள்ள காரணங்களாக
இருக்கின்றன."
GfK மற்றும் மில்வார்ட் பிரெளன்
இரண்டினதும் கண்டறிதல்கள், அமெரிக்க இராணுவம் பற்றி இளைஞர்கள் கொண்டுள்ள அணுகுமுறையின் ஆய்வு அரசின்
மற்றும் செய்தி ஊடக அமைப்புகளுக்கு மனக்களிப்பு தருவதாக இருக்காது. செப்டம்பர் 11 பயங்கரவாதத்
தாக்குதல்களை தொடர்ந்து முன்னோடியில்லாத வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு உலகத்தை
"பாதுகாக்க" அதை வெற்றி கொள்ள வேண்டிய தேவை பற்றிய வெறியுணர்வை அமெரிக்க மக்களிடம் அதிகப்படுத்திய
பின்னர், இப்பொழுது இராணுவத்தில் சேருவது பற்றி இளைஞர்கள் அதிகரித்த அளவில் ஆர்வம் காட்டவில்லை.
GfK அறிக்கை, 2000 மற்றும்
2004 இளைஞர்களின் கருத்துக்களை பற்றி ஒப்பிட்டுப் பார்க்கையில், சமீபத்திய ஆணடுகளில் அமெரிக்க
இளைஞர்களின் அனைத்துப் பிரிவிலுமே இராணுவத்தைப் பற்றிய கண்ணோட்டம் எதிர்மறையாகத்தான் அதிகரித்துள்ளது
என்று குறிப்பிட்டுள்ளது. ஆய்வுகளை தொகுத்துரைக்கையில் அறிக்கையை தயாரித்த ஆசிரியர்கள் எழுதுவதாவது:
"9/11க்கு பின்னர் இராணுவம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் கடினமான நிலையைத்தான் கொண்டுள்ளது.
...இன்றைய இளைஞரிடையே இராணுவப்பணி என்பது மனத்தளவில் உள்மோதலைத்தான் கொண்டுள்ளது...
பெரும்பாலான வயதிற்கு வந்த இளைஞர்களிடையே கல்லூரிதான் தேர்வுக்குரிய விருப்பமாக "வெல்கின்றது".
தக்க காரணத்தை பொறுத்து பத்திற்கு நான்கு பேர் "நாட்டிற்காகப்
போரிடுவேன்" என்ற விருப்பத்தைக் கொண்டுள்ளனர்; "எந்தக் காரணத்திற்காகவும்" நாட்டிற்காக போரிடுவேன்
என்ற விருப்பத்தை 22 சதவீதத்தினர்தான் சுட்டிக்காட்டியுள்ளனர். "ஒவ்வொருவரும் இராணுவப் பணியை
மேற்கொள்ளவேண்டும்" என்ற கருத்தை 10 சதவீதத்தினர்தான் சிந்தித்தனர்.
இராணுவத்தில் சேருவதில் தடையில்லை என்ற கருத்து இருந்தாலும்கூட, சேர்வதற்கு
42 சதவிகிதத்தினரால் சுட்டிக்காட்டப்படும் முக்கிய காரணம், "கல்லூரிப் படிப்பிற்குப் பணம் இல்லை" என்பதாகும்.
கடமையுணர்வு என்பது 34 சதவிகித ஆதரவில் இரண்டாம் இடத்திலும், பயணித்தல், உலகத்தைச் சுற்றிப்பார்க்கும்
வாய்ப்பு என்பது 21 சதவிகித ஆதரவில் மூன்றாம் இடத்தையும் கொண்டிருந்தன.
இராணுவத்தில் சேருவதை எதிர்ப்பவர்கள் மத்தியில் அச்சம்தான் "இராணுவத்தில் சேருவதில்
மிகப்பெரிய தடையாக உள்ளது. கடந்த காலத்தில் [இராணுவத்தில்
சேருவதற்கு]
தடையாக இருந்தவகைகள், வசதிக் குறைவு, வேறுவிதமான வாழ்க்கை போக்கு வேண்டும் என்ற விருப்பங்கள்
ஆகும். இப்பொழுது அவை முற்றிலும், மரணம், ஊனம் பற்றிய அச்சம், என்று வேறுவிதமான காரணங்களை
கொண்டிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இரண்டு மடங்கு இளவயது ஆடவரும் பெண்டிரும் இறந்துவிடுவோமோ,
காயமுற்றுவிடுவோமோ என்ற அச்சம், தங்களை இராணுவப் பணியை மேற்கொள்ள ஒரு தடையாக இருக்கிறது எனக்
கூறியுள்ளனர்" என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இறந்துவிடக்கூடாது அல்லது போர்ப்பகுதியில் காயமுற்றுவிடக் கூடாது அல்லது போர்
நடக்கும் இடத்திற்கே செல்லக் கூடாது என்பது இராணுவத்தில் சேரக்கூடாது என்பதற்கு முக்கிய காரணமாக 26
சதவீதம் கணக்கெடுப்பிற்கு உட்பட்டவர்களால் கூறப்பட்டது. "இராணுவ வாழ்க்கைக்கு" விரோதப் போக்கு என்ற
காரணம் 21 சதவீதத்தினராலும், இராணுவமே ஒரு நிறுவன அமைப்பாக இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள்
20 சதவீதமாகவும் (இது ஒரு கணிசமான எண்ணிக்கைதான்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிந்தைய குழு
போரில் அல்லது பூசலிடுதலில் நம்பிக்கை கொள்ளவில்லை அல்லது "சமாதானப் பிரியர்கள்" என்று தன்னை
கருதவுமில்லை.
ஆட்களை தேர்ந்தெடுப்பதில் சரிவு ஏற்பட்டுள்ளதும், இளைஞரிடையே பெருகிவரும் இராணுவத்திற்கெதிரான
வெறுப்பும் மேற்கூறிய கட்டுரைகள் எதுவுமே கையாள அக்கறை காட்டாத, ஆனால் தவிர்க்கமுடியாத பிரச்சினையை
எழுப்புகின்றன: அது கட்டாய இராணுவ சேவை என்பதேயாகும். இராணுவத்தில் ஆட்குறைப்பு குறைந்து வரும் சூழ்நிலையில்,
வாஷிங்டனுடைய வன்முறையிலும், குருதி சிந்தும் முறையிலும் "ஜனநாயக" முறை வளர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடைய
நாடுகள் அதிகமாகி இருக்கும் நிலையில், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு தன்னுடைய உலகரீதியான நோக்கங்களை,
கட்டாய இராணுவ சேவையை மறுபடியும் மீளவும் அறிமுகப்படுத்தாமல், பின்பற்ற முடியாது.
Top of page |