World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Matthew Parris and the tsunami disaster

"Revelling" as the death toll mounts

பிரிட்டன்: மாத்தியூ பாரிசும் சுனாமிப் பேரழிவும்

இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கையில் "களியாட்டம்"

By Robert Stevens
9 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

சுனாமிப் பேரழிவு குறித்து இறுமாப்புத்தனமான அசட்டையைக் காட்டியிருந்த, பிரிட்டிஷ் நடைமுறையின் வரம்பிற்குள்ளேயும்கூட, இந்த மிகப்பெரிய இறப்புக்கள், துன்பங்களைப் பற்றி மகிழ்ச்சி காட்டிய கட்டுரை ஒன்று பளீரென வெளிப்பட்டது. "பெரும் துயரங்கள் ஏற்படவில்லை என்று கொள்ளுங்கள் -- உலகம் எவ்வளவு ஆரவாரமற்று இருக்கும்" என்ற தலைப்பில் மாத்யூ பாரிசால் எழுதப்பட்டுள்ள கட்டுரை இப்பொழுது ரூபெர்ட் மர்டோக்கின் பொறுப்பில் நடந்துவரும், பிரிட்டனின் மிகப் பழைமையான செய்தித்தாள் டைம்ஸில் ஜனவரி 1ம் தேதி வெளிவந்தது.

அரசியலில் ஒரு "தாராளவாத" டோரி என்றும், நயமான வர்ணனையாளர் என்றும் கருதப்படும் பாரிஸ் இத்தகைய அநாகரிகமான விடையிறுத்தல் கொண்டுள்ள கட்டுரையை எழுதுவார் என்பது பொதுவாக எதிர்பாக்கக்கூடியதல்ல. கேம்பிரிட்ஜ் பல்களைக்கழக சட்டவியல் பட்டதாரியான இவர் 1979ம் ஆண்டு, பாராளமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கன்சர்வேடிவ் பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரின் நிர்வாகத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் வெளியுறவு அமைச்சரகத்திலும் பணிபுரிந்துள்ளார்; பின்னர் பாராளுமன்றத்தை விட்டு விலகி, செய்தியாளர், ஒலிபரப்பாளர் என்ற செயலைத் தொடரலானார்.

எவரேனும் உண்மையிலேயே இயற்கைப் பேரழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவாரோ என்ற கேள்வியுடன் பாரிஸ் தன்னுடைய கட்டுரையைத் தொடங்குகிறார். தங்களுடைய ஆழ்ந்த மனத்தில் எவருக்கும் அப்படி இல்லை என்பதால்தான், இத்தகைய பேரழிவுக்காட்சிகளில் நேரடிப் பங்கு இல்லாமல், காண்பதில் "ஒரு பெரும் திகில்" அடைகின்றனர் என்று அவர் வாதிடுகிறார்.

"ஏன் இத்தகைய திகில்?" என்று பாரிஸ் தொடர்கிறார்.

'' 'FATM' (trill) என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு முன் நான் தயங்கினேன். எளிதில் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். மில்லியன்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மிக இருண்ட காலத்தை குறைமதிப்பிற்குட்படுத்தும் சொல்லாகக் கூட அது தோன்றலாம். ஆனால் இந்தத் துன்பங்களின் தரத்தைப் பற்றி உலகம் முழுவதும் உரைக்கப்படுதவதும், அவற்றின்பால் நாம் கொண்டுள்ள பரிவுணர்வும் ஒருபுறம் இருந்தாலும், (எனக்கு உண்மையில் நம்பிக்கையிருக்கிறது) உங்களுக்கு ஒரு சிறிய மன உவப்பற்ற சிந்தனையை, எனக்கும் ஏற்படுத்தியதுபோல் தோற்றுவித்ததோ எனத் தோன்றுகிறது. இந்தச் சிந்தனை 'ஆகா!' ('Wow!'-அதன் குறிகளுடன்) என்னும் ஒற்றை வார்த்தையில் வெளிப்படுகின்றது".

சுனாமித் தாக்குதலின் அளவு, மிகப் பெரிய இறந்தோர் பட்டியல், துன்பம் அடைந்துள்ளோர் பற்றிய இவருடைய விபரீத ஆர்வத்தை பாரிசால் மறைக்க முடியவில்லை.

"என்னுடைய பின் மண்டையில் ஒரு சிறிய, தொடர்ந்த குரல் கூறுகிறது: "இது பெரும் வியப்பல்லவா?". அடக்கமுடியாத, ஒரு சிறிய பகுதி என்னுள் இதைப் பாராட்டியது, ஆம், பாராட்டியது; இவ்வளவு எண்ணிக்கையை பாராட்டியது. செய்தித்தாழ்களின் தலைப்புக்கள், பேராசையுடன் எண்ணிக்கையின் மொத்தம், இருபது, பின்னர் ஐம்பது, பின்னர் எண்பது, பின்னர் ஒன்றரை நூறாயிரம் என்பதை "நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்றவுடன் என்னுடைய மூளையின் பின்பகுதியில் மறுக்க முடியாமல் ஏதோ ஒன்று பிசைந்தது. எண்ணிக்கை அதிகம் ஆக ஆக, ஒரு பேரார்வம், செய்தி ஊடக அரங்கத்தில் ஒரு பெரிய ஏலவிற்பனையாளர், ஏலம் எடுப்போர் உயர்த்திக் கூறும் எண்ணிக்கையில் தோன்றுவது போன்ற உவகையில், நானும் இன்னும் கூடுதலான எண்ணிக்கையை ஏலம் கேட்பதற்கு விருப்பம் கொண்டது போல் உற்சாகம் தொற்றியது. எப்பொழுது இது நூறாயிரத்தை அடையும்? ஒன்றேகால் மில்லியனை இது அடையுமா? இது ஒரு பெரிய சாதனையா? பேரழிவுகளின் வரலாற்றில் இது எந்தத் தரத்தில் உள்ளது? அந்த அளவிற்கா? ஆகா!

இயற்கையின் சக்திகளுக்கு எதிராக மனிதன் செயலற்றுத் திகைத்து நிற்பதில், ஒரு மதச்சாயல் கொண்ட திருப்தியையும் பாரிஸ் எடுத்துக் கொள்ளுகிறார்.

"TV தொலைக்காட்சிப் படங்களில் பெருங்கடலலைகள் கொந்தளித்து தரையருகே எழுந்து வருவதைக் கண்டேன்; அதனுடைய பாதையில் கட்டிடங்கள் இருந்ததைக் கண்டேன்; " ஆம்! இவற்றையெல்லாம் அழித்து அகற்றுங்கள்! மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதைக் காட்டுங்கள்! நம்முடைய கனவுகள் என்ற தீப்பெட்டிபோல் அகிலம் எவ்வளவு எளிதில் அழித்துவிடும் என்பதைக் காட்டுங்கள்! வேண்டாம், இவை அனைத்தும் என்னுடையது அல்ல, வேறு ஒருவருடைய கனவுகள் என்பதை நீங்கள் எனக்கு நினைவுபடுத்தவேண்டும். கண்சிமிட்டுவதற்குள் எப்படி வாழ்வுகளும் வாழ்க்கைமுறைகளும் ஊதித் தள்ப்படும் என்பதைக் காட்டுங்கள் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்."

சமூக முன்னேற்றத்திற்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் எதிர்ப்புக் காட்டுதல்

தன்னுடைய அழிப்பு, இறப்பு பற்றிய பேரார்வத்தை நியாயப்படுத்த முற்படுகையில், மறைந்த John Lennon-னுடைய "Imagine" கற்பனை செய் என்ற தலப்புடைய பாடல்களுக்கு விடைபோல் கொடுத்துள்ளார்; லெனோனுடய பாடல் உலகம் சிறந்து இருந்து, மனிதகுலம் ஒற்றுமை, சமாதானம், நட்புறவு இவற்றில் நாடுகள் என்ற பிரிவில்லாமல் மேம்பட்டு நிற்கும் ஒரு சோசலிசப் பார்வையைக் கொண்டுள்ளதாகும்.

இது பாரிசுக்குப் பொறுக்கவில்லை, அவர் எழுதுகிறார்: ஜோன் லெனோன் எழுதினார்: சுவர்க்கம் இல்லையெனக் கற்பனை செய்திடுங்கள்/நமக்குக் கீழுலகில் நரகமும் இல்லை/நமக்கு மேலே ஆகாயம்தான் உள்ளது ... ஆனால் இதுபற்றி பெரும் களிப்பைக் கொள்ளுங்கள் என்று லெனோன் என்னைக் கேட்கும்போது, நான் களிப்படைகிறேனா? இல்லை. மேலேயிருக்கும் ஆகாயம் சரிந்து விழக்குடும் என்ற எண்ணமும், கீழே இருக்கும் நரகம் அதிர்ந்து மில்லியன் கணக்கான மக்களை, இப்பொழுது செய்துள்ளதுபோல், மூழ்கடித்துவிடும் என்ற எண்ணமும் பீதியைக் கொடுத்தாலும், மனக் கொழிப்பையும் கொடுக்கிறது."

"கற்பனை செய்யுங்கள், அனைத்து மக்களும்/இன்றைக்காக வாழ்வதை/எதையும் கொல்லவேண்டியதில்லை, எதற்காகவும் கொல்லப்படவேண்டியதும் இல்லை" என்ற பாடல்களை மேற்கோளிட்டு தன்னுடைய வாசகர்களிடம் கேட்கிறார்: "நம்முடைய நல்ல அதிருஷ்டம் கைகொடுக்கும் என்ற உணர்வு இல்லைவிடின், பின் நாம் ஏன் வாழவேண்டும்?" லெனோன் இப்பாடலில் தெளிவாக்கும் கருத்து வெறுமையாகவும், சுவையற்றதாகவும் உள்ளது; 1970களின் தலைமுறையில் நான் ஒருவன் மட்டும் அத்தகைய பாதுகாப்பு உணர்வை விரும்பினேன் என்றும் கூறுவதற்கில்லை."

பெருங்குழப்பத்தையும், துன்பங்களையும் வாழ வேண்டிய முறையாகக் கொள்ளவேண்டும் என்ற இவருடைய கருத்து, இப்பொழுதுள்ள சமுதாய அமைப்பைக் காக்க வேண்டும் என்ற தீவிர உணர்வைத்தான் ஆழமாகக் கொண்டுள்ளது. சோசலிச முன்னோக்கிற்கு ஆழ்ந்த வெறுப்பை புலப்படுத்தும் கண்ணோட்டத்தில்தான் அவருடைய கருத்துக்கள் வேறூன்றியுள்ளன; வகுப்பு அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், இயற்கையின் மீது மனிதன் கொண்டுள்ள வரலாற்று முயற்சியிலான உயர்வினை அடையவேண்டும் என்பதற்குப் பாடுபடவேண்டும் என்பதுதான் சோசலிசப் பார்வையாகும்.

பாரிசின் கட்டுரை, திறனாயும் பகுத்தறிவு சிந்தனைக்கு எதிராக இயக்கப்படுகிறது. இந்தச் சொற்களை அவர் எழுதியபோதே, உலகின் பல பகுதிகளின் இப்பேரழிவு வெறும் இயற்கை சீற்றத்தின் விளைவு மட்டும் அல்ல என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. மாறாக விடை தேடப்படாத சில மனத்தை தாக்கும் பிரச்சினைகள் பற்றிய கேள்விகளைத்தான் இவை எழுப்பின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் கொடும் வறிய நிலையும், வளர்ச்சியற்ற தன்மையும் இன்னும் ஏன் கூடுதலாக இந்தப் பேரழிவினால் இழிந்து போக வேண்டும். ஒரு அடிப்படை வகையில் சுனாமி எச்சரிக்கை முறை ஏன் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைக்கப்படவில்லை? ஆட்சியில் இருந்த சக்திகள் பேரழிவைப் பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்பதில், ஏன் அசட்டையுடனும், துவக்கத்தில் மிகக் குறைவாகவும் இருந்தன? மிக ஏழ்மையான குடியிருப்புக்கள் எந்த அளவில் இதில் பங்கு கொண்டிருந்தன? போன்ற பல வினாக்கள்தாம் அவை.

அதன் மையத்தானத்தில், சுனாமி உலக சமூகத்தின் வளர்ச்சி பற்றியும், பரந்த சமூக பொருளாதார சமத்துவமற்ற நிலையையும் பெரும் எண்ணிக்கையில் இறப்புப் பட்டியல் இருந்ததற்கான வறுமைநிலையை அகற்றுவதற்கான சமுதாய பொருளாதார திட்டமிட்ட வளர்ச்சியின் தேவை பற்றியும் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருக்கும் சமுதாய ஒழுங்கை காக்கும் மனப்பான்மை

சமுதாய ஒற்றுமை, திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட உலகந்தழுவிய முறையில் இத்தகைய நிகழ்வுகளை எதிர்கொள்ளுவதற்கு அரசியல் முறையில் பாரிஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அத்தகைய அவருடைய முன்னோக்கு அவர் காக்க நினைக்கும் முதலாளித்துவ முறையின் தன்மையை பற்றி கேள்வியை எழுப்புகிறது; அந்த முறைதான் இத்தகைய மகத்தான சமத்துவமற்ற நிலைப்பாடுகளையும் சுனாமிக்கு பின்னர் காணப்படும் கஷ்டங்களையும் நிலையாகக் கொள்ள முற்படுகிறது. மனிதகுலத்திற்கு பொதுவான நலன்களைத் தரும் போராட்டம் என்றாலே முதலாளித்துவம் அதை ஒவ்வாத் தன்மையை உடையதாகவும், அச்சுறுத்தல் தரும் தன்மையுடையதாகவும்தான் பார்க்கிறது. இலாப முறை தொடரப்படவேண்டும் என்ற நியாயத்தை கூறும் வகையில்தான் இவருடைய கட்டுரை அமைந்துள்ளது. இருக்கும் நிலையை அறைகூவி மாற்றத்திற்குட்படுத்துதல் என்பது முடியாத செயலாகும் என்றும் "இயற்கைக்கு" புறம்பானது என்றும்கூட இவர் வாதிடுகிறார். சுருங்கக் கூறின், தன்னுடைய வாசகர்களுக்கு முதலாளித்துவ முறையின் கீழ் வாழும் நம்முடைய உலகில் இத்தகைய பேரழிவுகள் தவிர்க்க முடியாதவை என்றும் எனவே அவற்றிற்கு பழகிக் கொண்டுவிடவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இன்னும் முக்கியமாக அவர் கூறுவது, ஆழ்ந்து சிந்தனை செய்யாதே! குறிப்பாக எதையும் மாற்ற முயலாதே! என்பதாகும்.

"வியாதிகளை அகற்றிய பின்னர், மழைகள் பொழிதல் பொருட்டு மேக விதைகள் தூவிய பின்னர், மரபு அணு ஆக்க முறையில் நம்மையும் தயாரிக்க கற்றுக் கொள்ளும் வகையில், அறிவியல் முன்னேற்றம் என்பது இந்த உள்ளத்தளர்வை அதிகரித்து, இயற்கையை வெல்லுவது என்னும் குழுப்பமான கருத்தில் இருந்து சுருங்கிக் குறைந்து மறைந்து போகிறது. அண்டசராசரத்தில் இருந்து நம்முடைய எளிதில் உடைந்து போகும் தன்மைக்கு ஒரு அடையாளம் தருமாறு யாசிக்கிறோம். இத்தகைய அடையாளம் ஒன்றைத்தான் சமீபத்தில் பெற்றோம். இவ்வாறு, இதைக் கூறுவதற்கு வருத்தப்படுகிறேன், ஆனால் இதில் கொடூர புத்தியோ, பிறரைப் புண்படுத்தவேண்டும் என்ற எண்ணமோ இல்லை, பெரும் உற்சாகமும், களிப்பும் இருக்கிறது."

இத்தகைய முறையில் அறிவியல், பகுத்தறிவு, சமுதாய முன்னேற்றத்தின்மீது அப்பட்டமான தாக்குதல் தற்காலத்திய முதலாளித்துவ முறையின் இழிந்த-கீழறுக்கும் பிற்போக்குத் தன்மை பற்றி நிறையவே தெரிவிக்கிறது. "அகற்றித்தள்ளுங்கள் அவற்றை", "ஊதி அணைத்துவிடுங்கள்", "உற்சாகம்" இறந்தோர் பட்டியலில் "பெரும் எண்ணிக்கை" ஆகியவை அனைத்தும் உலகில் வறுமையில் வாழும் மில்லின் காணக்கான மக்கள், இத்தகைய பேரழிவுகளை நிர்க்கதியாக எதிர்கொள்ளும் மக்கள் பற்றிக் காட்டப்படும் இகழ்ச்சி, பொருட்படுத்தா தன்மை கொண்ட ஒரு சமுதாய தட்டு பயன்படுத்தும் மொழிகள்தான்.

உலகளாவிய திட்டம், ஒற்றுமை, இயற்கை அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் சிறப்புக்களை மனிதகுலத்தின் நலன்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்ற சோசலிச சமுதாய முன்னோக்கின் தேவையைத்தான் ஆசிய சுனாமிப் பேரழிவு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. ஜோன் லெனோன் "கற்பனை செய்த" உலகத்திற்கான போராட்டம் உலகின் மக்களால் விரைவில் அடையப்படுவதற்கான உகந்த பணியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

See Also :

சுனாமிப் பேரழிவின் சமூகக் காரணிகள்

ஆசிய சுனாமி: ஏன் எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை

பயங்கரவாதத்தின் மீதான உலகந்தழுவிய போரில் சுனாமி உதவி என்பது ஒரு பகுதி என்று பவெல் அறிவிக்கிறார்
நற்பணியாளர் போர்வையில் ஏகாதிபத்தியம்

தெற்கு ஆசிய பேரழிவை புஷ் எதிர்கொள்ளும் நிலை: அரசியலில் திறமையற்ற தன்மையினால் அசட்டைப் போக்கின் பெருக்கம்

Top of page