World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

A special report from Poland

Part 1: social misery in Silesia

போலந்திலிருந்து ஒரு சிறப்பு அறிக்கை

பகுதி 1: சைலேசியாவில் சமூக துயரம்
பகுதி 2

By Tadeusz Sikorski and Marius Heuser
3 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற ஆண்டு இறுதியில் WSWS நிருபர்கள் மேல் சைலேசியாவில் உள்ள Zabrze நகரத்திற்கு சென்று இந்த நேரடி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர், போலந்து தொடர்பான இரண்டு பகுதிகளை கொண்ட கட்டுரை இது, இதில் முதல் பகுதி வெளியிடப்படுகிறது, கிலிவைசில் உள்ள ஓப்பல் தொழிற்சாலை தொடர்பான அறிக்கை நாளை வெளியிடப்படும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போலந்து நிகரற்ற வகையில் சமூக வீழ்ச்சிக்கு ஆளாகி உள்ளது. 1980களின் இறுதியில் ஸ்ராலினிச ஆட்சி வீழ்ச்சியடைந்ததும் அந்த நாடு தனியார் தொழில் முயற்சிக்கு ஒரு பாலைவனச் சோலையாக ஆகிவிட்டது---- ஆரம்பத்தில் ஒரே நாளில் தீவிர நவீன தாராளவாதிகளாகிவிட்ட பழைய அதிகாரத்துவவாதிகளின் கையில் இருந்தது, மற்றும் அதற்குப் பின்னர் எதிர்கட்சி தொழிற்சங்கமான சொலிடாரிட்டி (ஐக்கியம்) யின் பிரதிநிதிகளின் கீழ் அப்படி ஆகிவிட்டது. அரசாங்கத் தொழில்கள் முதலில், "மறுசீரமைப்பு" செய்யப்பட்டன, அதாவது உபரி ஊழியர்கள் நீக்கப்பட்டனர்---- மற்றும் அதற்கு பின்னர் தனியார் மயமாக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து கதவடைப்பு செய்யப்பட்டு பெருமளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் புதிய தொழிற்சாலைகளில் தலைமைப் பதவிகளை உறுதிப்படுத்திக்கொண்டனர் மற்றும் அளவிற்கு மீறிய செல்வத்தை குவித்துக்கொண்டனர். பல அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்ததால் இந்தக் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில், போலந்தில் உத்தியோகபூர்வமான வேலையில்லா திண்டாட்டம் 18.7 சதவீதமாக இருந்தது. முதலாளித்துவம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நிலக்கரி சுரங்கத் தொழிலில் 250,000க்கு மேற்பட்டவர்கள் வேலையிழந்தனர். அதே நேரத்தில் தொழிற்சாலைகள் மகத்தான அளவிற்கு இலாபத்தை சம்பாதித்தன. 2003-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு சுமார் 3.8 சதவீதம் உயர்ந்தது மற்றும் இது அடுத்த ஆண்டு 5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போலந்தில் மிச்சமிருந்த ஐந்து சுரங்கத் தொழிற்சாலைகளும் 2004-ல் முதல் தடவையாக இலாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியிருந்தும் சமூக நிலவரம் மோசமடைந்தது.

சுரங்கம் மற்றும் எஃகு தொழிலில் முன்னர் மையமாக விளங்கிய சைலேசியா குறிப்பாக மறுசீரமைப்பு அலையால் பாதிக்கப்பட்டது. ஸ்ராலினிச ஆட்சியின் கீழ் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு ''தொழிலாள வர்க்க செல்வந்தத் தட்டினராக" கருதப்பட்டனர், மற்றும் அவர்களுக்கு உயர்ந்த ஊதியங்களும் சிறந்த சமூக பயன்களும் கிடைத்தன. என்றாலும், கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்குறைப்புகளால் அவர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

2004 ஜனவரியில், மேல் சைலேசியாவிலுள்ள Zabrze மக்கள் தொகை 192,000. ஆனால் பல ஆண்டுகளாக அந்த நகரத்தின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது, 1996-ல், 201,000 மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். சென்ற ஆண்டு டிசம்பர் நிலவரப்படி 14,318 பேர் அதிகாரபூர்வமாக வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்தனர் அல்லது உழைக்கும் சக்தியில் 22.9 சதவீதம்பேர் வேலையில்லாதிருந்தனர். மறுசீரமைப்பினாலும், சுரங்கங்கள் மூடப்பட்டதாலும் பல சுரங்கத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். வேலையில்லாதிருப்போர் என்று பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் 11.1 சதவீதம் பேர் மட்டுமே வேலையில்லா திண்டாட்ட உதவித்தொகைகளை பெறுவதற்கு சட்டபூர்வமான தகுதி படைத்தவர்கள் மற்றவர்கள் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு பிரதிபலன்களையே நம்பியிருந்தனர். ஆயினும், இந்த நலன்புரி உதவி உயிர் வாழ்வதற்கு கூட போதுமானதல்ல அவ்வளவு சொற்பத்தொகையாகும்.

ஆறுபேரைக்கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் நாங்கள் பேசினோம், அவர்கள் தங்களது உண்மையான பெயர்களை பயன்படுத்த வேண்டாமென்று கேட்டுக்கொண்டனர், அவர்கள் Zabrze நகர மையப்பகுதிக்கு அருகே மானியத்தொகை அடிப்படையில் குறைந்த வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். திரு. மற்றும் திருமதி "Maciak" மற்றும் அவர்களது இரண்டு வளர்ந்துவிட்ட புதல்வர்களும் வேலையில்லாதிருக்கின்றனர். எட்டாண்டுகளுக்கு முன்னர் அவர்களது தாய் சில்லறை வர்த்தகம் செய்தார் மற்றும் அவர்களது தந்தை கட்டுமானத் தொழிலில் இருந்தார். அவர்களுக்கு எந்த சிறப்பு தொழில் திறமையும் இல்லை, மிகப்பெரும்பாலான சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டபொழுது, முறையான வேலை எதையும் பெறுவதற்கு அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

"எனது கணவர் தொழிற்பயிற்சி பெற்றவர் அல்ல, மற்றும் அடிப்படை பள்ளி கல்வியை மட்டுமே பெற்றவர். தற்போது எல்லா தொழிற்சாலைகளுமே மூடப்பட்டுவிட்ட நிலையில், ஒரு உயர்நிலைப்பள்ளி கல்விச்சான்றிதழ் தேவை" என்று 45 வயது தாய் "சோபியா" கூறினார்.

உத்தியோகபூர்மான புள்ளிவிவரங்களின்படி, 2004 ஜனவரி முதல் நவம்பர் வரை மறுபயிற்சி திட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வேலையில்லாத வருக்கும் தொழிலாளர் அலுவலகம் 467 zloty-கள் (சராசரி சுமார் 117 யூரோக்கள்) மட்டுமே உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி பெறுபவர்கள் அது முடிந்ததும் ஒரு வேலைவாய்ப்பு தருவதாக ஒரு முதலாளி தருகின்ற கடிதத்தை கொண்டு வந்தால்தான் இந்த உதவியும் கிடைக்கும். சோபியாவின் இரண்டு புதல்வர்களுக்கும் மேலும் சிக்கல்கள்தான், ஏனெனில் அவர்கள் இருவரில் எவருக்கும் ஓட்டுநர் உரிமம் இல்லை.

Maciak குடும்பம் வாழும் வீட்டில் இரண்டு அறைகளும் ஒரு சமையல் அறையும்தான் உண்டு. பின் முற்றத்தில் ஒரு கழிப்பறை இருக்கிறது. அந்த வீட்டிற்கு எரிவாயு அளிப்பு இல்லை. வீட்டிற்கு ஒரே ஒரு குளிர்தண்ணீர் குழாய்தான் உண்டு. இவ்வளவு மனித நேயமற்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் வாடகை 210 ஜ்லோட்டிகள் (52 யூரோக்கள்) இது அவர்களது நலன்புரி உதவித்தொகை முழுவதையும் விழுங்கி விடுகிறது. மிச்சமிருப்பது 15 ஜ்லோட்டிகள் மட்டுமே (அது 4 யூரோக்கள் கூட இல்லை) அதைக்கொண்டுதான் குடும்பத்தின் இதர மாதாந்திர செலவினங்களை சரிக்கட்ட வேண்டும். சோபியா எங்களிடம் கூறினார்: "எடுத்துக்காட்டாக கூடுதல் நலன்புரி உதவித்தொகைகள் என்று எடுத்துக்கொண்டால் நான் காலணிகளுக்காக 40 ஜ்லோட்டிகள் (10 யூரோக்களை) பெறுகிறேன். ஆனால் இதைக்கொண்டு எந்தக் குழந்தைக்கு புதிய காலணி வாங்க முடியுமென்று எனக்குப் புரியவில்லை. இவை மிக சொற்பமான பணம். வீட்டில் உட்கார்ந்து கதறியழுவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை".

உத்தியோகபூர்வமாக Maciaks குடும்பத்தினருக்கு அதிக பணம் கிடைக்கிறது, ஆனால் உண்மையில் அதைப்பெறுவது இயலாத காரியமாகும். தொழிலாளர் அலுவலகத்தில் ஏதாவது துணை வருவாய் பெறுவதாக அறிவிக்காதவர்கள் மகத்தான அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். "நாங்கள் குழந்தை நலனுக்காக 86 ஜ்லோட்டிகளை பெறுகிறோம். நான் கழிவு இரும்பை சேகரித்து விற்பதன் மூலம் இருநூறு முதல் முந்நூறு ஜ்லோட்டி வருமானம் பெறுவதாக அறிவிக்கிறேன், சரியாக இல்லாவிட்டாலும் கூட இப்படியொரு பிரகடனத்தை வெளியிட்டாக வேண்டும். இல்லையென்றால் வீடுகளிலிருந்து வெளியேற்றி வீடற்றவர்கள் குடியிருப்பில் சேர்த்து விடுவதாக அச்சுறுத்துகிறார்கள் அல்லது குழந்தைகளை பராமரிக்க பணம் இல்லாததால் அவர்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்து விடுவதாக அச்சுறுத்துகிறார்கள். இதற்கு முன்னர் முழு குடும்பத்திற்கு 50 ஜ்லோட்டிகளை மட்டுமே நாங்கள் பெற்றோம்" என்று தந்தை கூறினார்.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைப்போன்று Maciaks-ம் வேறு வழிகளில் வீட்டு செலவினங்களை ஈடுகட்டியாக வேண்டும். சோபியா பருவநிலைக்கேற்ப சில பணிகளை செய்து வந்தார். இப்போது நான்கு வயதாகும் தனது மகள் பிறந்தது முதல் வீட்டிலேயே இருக்கிறார். புதல்வர்கள் குப்பைகூள தொட்டிகளில் அல்லது உலோகக் கழிவுக் குப்பையில் இருந்து உலோக கழிவுகள் அல்லது வீடாகிப்போன குழிகள் மற்றும் கழிவுக் குப்பைகளில் இருந்து நிலக்கரிகளை தோண்டி எடுத்து சேகரித்து சிறிதளவிற்கு கூடுதல் வருமானத்தை கொண்டு வருகின்றனர். சில வாரங்களில் "கள்ள பொருளாதாரத்தில்'' பணியாற்றுவதற்கு வாய்ப்புக் கிடைப்பதன் மூலம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது.

சோபியா மசியக் Zabrze-க்கு எதிர்காலம் இல்லையென்று கருதுகிறார். "அரசியல் அடிப்படையில் மாற்றம் எதுவும் ஏற்படுவதாக எனக்கு தெரியவில்லை. இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது எனக்கு தெரியவில்லை. எனது மூத்த மகன் மேற்கு பகுதியில் ஹோட்டல்களில் சுத்தம் செய்பவராக இரண்டு வாரம் பணியாற்றினான். எனது இளைய மகனுக்கு நம்பிக்கை எதுவுமில்லை, சில நேரங்களில் சில உறவினர்கள் மூலம் அவனுக்கு வேலை கிடைக்கிறது" என்று கூறினார்.

Beata Dabrowska, மசியக் குடும்பத்தை போன்றே தோன்றுகிறது. அவர் Zabrze-லுள்ள இலாப நோக்கில்லாத ஜனநாயக பெண்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவராக பணியாற்றி வருகிறார். அந்த அமைப்பு தொடக்கப்பட்ட நேரத்தில் ஜனநாயக இடதுசாரி கூட்டணியோடு (SLD) நெருக்கமாக இருந்தது. அரசாங்கக் கொள்கைகளின் தாக்கத்தின் காரணமாக கட்சியிடமிருந்து இந்த அமைப்பு தன்னை தூர விலக்கி வைத்துக்கொண்டது.

Zabrze-TM Dabrowska-வும் அவரது நண்பர்களும் வீட்டில் வன்முறைக்கு இலக்காகும் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி வந்தார்கள். பின்னர் பொது சட்ட ஆலோசனை வழங்கும் வகையில் தங்களது பணியை விரிவுபடுத்தினர். தற்போது நீதிமன்றங்களிலும் அதிகாரிகளிடமும் வாதாடி குடும்பங்களுக்கு உதவுகிறார்கள், விசாரணைகளின்போது கூடச் செல்கிறார்கள், அவர்களுக்கு பணிகளை பெற்றுத்தருவதில் உதவ முயலுகிறார்கள். "உதவிக்கு எவரும் இல்லாதவர்களை நாங்கள் காப்பாற்றி வருகிறோம்" என்று Dabrowska தனது குழுவின் அக்கறைகள் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

Dabrowska-வை பொறுத்தவரை பல குடும்பங்கள் சைலேசியாவின் சமூக நிலவரங்களில் இருந்து பிரிந்து செல்ல இயலாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் குடும்பக் கட்டமைப்பு மிகத் தெளிவாக இருந்தது. கணவன் சுரங்கத்தில் பணியாற்றி குடும்பத்தலைவராக இருந்தான். மனைவி குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டார். கணவனுக்கு வேலை போய்விட்டால் குடும்ப மதிப்பும் சுருங்கிவிடுகிறது, இதனால்தான் பலர் மது குடிக்க ஆரம்பித்தனர். இப்படித்தான் பாரம்பரிய சைலேசிய சுரங்கத் தொழிலாளர் குடும்பம் தனியாக சிதைந்தது.

உத்தியோகபூர்வமான வேலையில்லாதோர் பற்றிய புள்ளி விவரங்கள் துல்லியமானவையல்ல என்று அவர் கருதுகிறார். ஏனெனில் பலருக்கு அரசின் நிதியாதரவு இல்லை, அவர்கள் வேலையில்லாதவர்களாக பதிவு செய்யப்படவும் இல்லை. "என்னுடைய வாடிக்கையாளர்கள் கூறுவது என்னவென்றால், [தொழிலாளர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு] அவர்களுக்கு வீட்டுப்பணி தருகின்றவர்கள் அது குறிப்பிடுகின்ற நாளில் தொழிலாளர் அங்கு சென்று வர அனுமதிப்பதில்லை, மேலும் பல பெண்கள் தங்களை வேலையில்லாதவர்கள் என்று பதிவு செய்து கொள்வதற்கு கூட கவலைப்படுவதில்லை. ஏனென்றால் 20 ஜ்லோட்டி உதவி பெறுவதற்காக தாங்கள் ஏன் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே தான் வேலையில்லாத் திண்டாட்ட அளவு, புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதைவிட மிக அதிகமாக உள்ளது".

ஏற்கனவே தங்களது வீடுகளை இழந்துவிட்டு சாலையோரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். கடந்த காலத்தில், ஒவ்வொரு நாளும், ரயில் நிலையங்களிலிருந்து வண்டிகளில் மக்கள் செல்வதை காணமுடிந்தது. ஆனால் இப்போது நகரத்தின் மையப்பகுதியிலிருந்து வீடற்றவர்கள் விரட்டப்பட்டுவிட்டதால் வேலையில்லாதவர்கள் புள்ளி விவரங்களில் அவர்கள் இடம்பெறவில்லை.

மசியாக் குடும்பத்தை எதிர்நோக்கியுள்ள நிலவரம் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலையல்ல. மிகப்பெரும்பாலான வேலையில்லாதவர்கள் குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்வை நடத்துவதற்காக ஏதாவது ஒரு வேலையை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆக அவர்கள் முதலாளிகளது தயவை முற்றிலும் சார்ந்திருக்கின்றனர் மற்றும் அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. போலீசாரோ அல்லது அதிகாரிகளோ அவர்கள் வீட்டுப்பணி என்று சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்தால் அத்தகைய ஊழியருக்கு 5,000 ஜ்லோட்டி (1200 யூரோக்கள்) அபராதம் விதிக்கப்படுகிறது.

"அன்றாட வீட்டுப்பணி செய்பவர்களுக்கு தினசரி சில சென்ட்டுகள் வருமானம் கிடைக்கிறதே தவிர, அடுத்தநாள் வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாதது என்று Dabrowska குறிப்பிட்டார். "இப்படி தினக்கூலி பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களது சுதந்திரம் பறிக்கப்படுகிறது ஏனெனில் போலந்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரியும் ஒரு முறையான பணியும்தான், எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். அப்போதுதான் உங்களை ஏதோ ஒரு மனிதனாக மதிப்பார்கள். நீங்கள் ஒரு நகரசபையில் வீடு கேட்க முடியும், உங்களுக்கு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு காப்பீடு கிடைக்கும் மற்றும் ஒரு மருத்துவரிடம் செல்ல முடியும், கடன் வாங்க முடியும். தினக்கூலிக்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் வாடகைக்கு தனியாரிடம் வீட்டைக்கூட பெற முடியாது. ஏனெனில் அவர் வருவாய்க்கு சான்று கேட்பார்" என்று அவர் குறிப்பிட்டார்.

"கள்ள பொருளாதாரத்தில்" பணியாற்றுவோருக்கு நிரந்தர ஆபத்து உண்டு. எடுத்துக்காட்டாக பணியாற்றும்போது ஒரு விபத்து ஏற்பட்டு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுவிட்டால் அப்போது முதலாளி எதுவும் தரமாட்டார். சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எதையும் தரமாட்டார்கள். மருத்துவமனையில் அது ஒரு விபத்து என்று சொல்ல முடியாது, ஏனென்றால், அப்படி பதிவு செய்யப்பட்டால் தொழிலாளர் அலுவலகத்திற்கு அது ஒரு விபத்து என்று உடனடியாக தெரிந்துவிடும். அப்போது தொழிலாளரும் அவரது முதலாளியும் 5,000 ஜ்லோட்டி அபராதம் கட்டவேண்டும் மற்றும் வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகையை அந்தத் தொழிலாளி இழந்துவிடுவார். மேலும் மோசடியாக சுகாதார காப்பீட்டு உதவிகளை பெற முயன்றதாக அந்தத் தொழிலாளி மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும். ஏனெனில் வேலையில்லாதிருப்போருக்கு குறைந்தபட்ச காப்பீட்டு திட்டம்தான் உண்டு. அதற்குப்பின்னர் அவர்களை முதலாளி பணியில் சேர்த்துக்கொள்ள மாட்டார். நிரந்தர காயம் அல்லது ஊனம் ஏற்பட்டால் நோயுற்றோருக்கான ஓய்வூதிய சட்டபூர்வ உரிமை எதுவும் கிடைக்காது."

Beata Dabrowska அடுத்த நாள் சாப்பாட்டிற்காக தனது வாடிக்கையாளர்கள் உருவாக்கிக் கொண்டுள்ள இதர மூலோபாயங்களையும் அறிவார். மசியாக் குடும்பத்தைப் போன்று பல குடும்பங்கள் உலோகக் கழிவுகளையும் நிலக்கரி குவியல்களையும் அல்லது இதர பயன்படுத்தப்படக்கூடிய பொருட்களையும் தேடுவர். சில மாவட்டங்களில், பல்வேறு குடும்பங்களுக்கிடையில் தெருக்களை பிரித்துக்கொள்கிறார்கள். இதர இடங்களில் மூடப்பட்டுவிட்ட நிலக்கரி சுரங்கக் குவியல்களில் நிலக்கரி ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுகிறார்கள்.

வீடுகளில் பெண்கள் திறமையாக கூடைகள், அல்லது அடுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் துணிகளை தயாரிக்கிறார்கள், அவற்றை சந்தையில் விற்கிறார்கள். மற்றவர்கள் தங்களுக்கு சொந்தமாக ஒதுக்கப்பட்ட நிலத்திலிருந்து வளர்க்கப்பட்ட காய்கறிகளை விற்கிறார்கள் அல்லது காட்டிலிருந்து சேகரித்து வந்த காய்கறிகளை விற்கிறார்கள். அவர்கள் விற்பதை அதிகாரிகள் பார்த்துவிட்டால் அவர்கள் அபராதம் அதிகம் செலுத்தியாக வேண்டும். Zabrze-ல் பிச்சை எடுப்பது, மோசடிகளில் ஈடுபடுவது, திருட்டு ஆகியவை தினசரி நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன.

சில இளம் பெண்களுக்கு கடைசி சாத்தியக்கூறு, விபச்சாரம்தான் என்று அடிக்கடி ஆகிவிடுகிறது. ஒரு பெண் வேலை தேடுவதை விட்டுவிட்டால், அவருக்கு பல வாய்ப்புகள் வரும். ஆனால் அவை எதுவும் கண்ணியமானவையாக இருக்காது. "முறையாக பேசத்தெரியாவிட்டாலும் எவரும் எந்தக் கேள்வியும் கேட்காத ஒரே சந்தையாக அது ஆகிவிட்டது." Dabrowska இதுபற்றி கருத்து கூறும் போது "பல குடும்பங்களுக்கு விபச்சாரம்தான் பாதுகாப்பான வருமான ஆதாரமாக உள்ளது. சில சம்பவங்களில் கணவன் மனைவியை கட்டாயப்படுத்துகிறான். சில நேரங்களில் பெற்றோர்களே கட்டாயப்படுத்தி தங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்துகிறார்கள். எனது வாடிக்கையாளர்களில் சிலரது கணவன்மார் தங்களது சொந்த வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டு அங்கு தங்களது மனைவிமாரை விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்துகிறார்கள். ஒருவருக்கு ஒரு இளம் பெண் புதிய துணைவியாகிவிட்டால் அவரது முதல் மனைவியை தனக்காக தொடர்ந்து பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார். குழந்தைகளை பறித்துக்கொண்டு சென்று விடுவதாக அச்சுறுத்திகிறார். அவர் சொன்னபடி நடக்காவிட்டால் இதுதான் நிலை".

கத்தோலிக்க மதப்பிரிவு சைலேசியாவில் பரவலாக உள்ளன மற்றும் பழமைவாத தார்மீக நெறிமுறைகள் நிலவரத்தை மேலும் படுமோசமாக்குகின்றன. பல சிறுவர்களும் சிறுமிகளும் தனிப்பட்ட முறையில் தெளிவு பெற்றவர்கள் அல்ல. தங்களது பள்ளிப் பாட புத்தகங்களுக்காகவும், தங்களது குடும்பத்தை ஆதரிப்பதற்காகவும் எந்தவழியையும் நாடுகிறார்கள். இந்த வகையில் தற்செயலாக உருவாகின்ற காப்பங்களால் கடுமையான மனக்கோளாறுகள் உருவாகின்றன. "ஒரு பெண் விபச்சாரியாவது மிக எளிதானது என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் எனது வாடிக்கையாளரிடம் பேசும் போது அதை அவர்கள் மிகக் கடுமையாக நினைக்கின்றனர் மற்றும் அவர்கள் மிகப்பெருமளவில் மனோதத்துவ அடிப்படியில் பாதிக்கப்படுகிறார்கள்" என்று Dabrowska தெரிவித்தார். வெகு சில விபச்சாரிகள்தான் முறையான குடும்ப வாழ்வு எதையும் நடத்த முடிகிறது.

வறுமையிலிருந்து விடுபடுவதற்கு வழி எதுவுமில்லை. "எட்டுபேரைக் கொண்ட ஒரு குடும்பம் ஒரே அறையில் மின்சாரமில்லாமல் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு கூட வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் அவர்களது குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க வேண்டுமென்று வெகுசில சமூக பணியாளர்கள் மட்டுமே சொல்ல முடியும். அவர்களது நிலைமையை மாற்றுவதற்கு வேறு வழியில்லை. அவர்களுக்கு எந்தவகையான பயிற்சியுமில்லை."

குழந்தைகளும் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே தடவை 100 ஜ்லோட்டிகள் (25 யூரோக்கள்) படிப்பிற்கான பொருட்களை வாங்குவதற்கு தருகிறார்கள். பெற்றோர் அவர்களுக்கு வேண்டிய மற்ற எல்லா பொருட்களையும் தர வேண்டும். Dabrowska மேலும் கூறினார்: "பள்ளிக் கூடத்தில் தகவல் தொழில்நுட்ப பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் முந்நூறு முதல் நானூறு குழந்தைகளுக்கு மூன்று கணிணிகள்தான் உள்ளன. அந்த கணிணி அறிவியலை கற்பிக்கிற ஆசிரியர் குழந்தைகளிடம் அதிகம் பணம் கோருகின்றார்கள். வீட்டில் ஒரு கணிணியில் எப்படி பயிற்சி பெற முடியும்? நானே எனது நிதிநிலை படுமோசமாக இருக்கின்ற கட்டத்தை அனுபவித்திருக்கிறேன். இணைய நிலையங்களில் எனது குழந்தைகளை அனுப்பி கணிணியில் பழக்குவதற்கு கூட எனக்கு வசதியில்லாத காரணத்தினால் எனது குழந்தை பள்ளியில் குறைந்த மதிப்பெண்களையே பெற்றது. அடித்தளத்திலுள்ள மக்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்களது குழந்தைகளின் கல்விக்கு பல தடைகற்கள் உள்ளன."

முன்னாள் போலீஸ்காரரும் தற்போது தனியார் துப்பறிபவராக பணியாற்றி வருபவருமான Wojtek Wob (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மிகப்பெரும்பாலான ஏழை குடும்பங்கள் எந்த அளவிற்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாத நிலையில் உள்ளனர் என்பதை விளக்கினார். குடும்ப உறுப்பினர்களை குற்றங்கள் புரியும் கும்பல்களிலிருந்து அல்லது விபச்சாரத்திலிருந்து வெளியே இழுத்து வருமாறு அவர் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்படுகிறார், ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. வறுமையின் காரணமாக மக்கள் மிகத்தீவிரமான நிலைக்கு விரட்டப்படுகின்றனர். அவர் போலீஸ்காரராக இருந்தபோது அவர் ஒரு கார் திருடனை பிடித்தார், தனது குடும்பத்திற்கு உணவு தர தன்னிடம் பணம் இல்லாததால் திருடியதாக ஒப்புக்கொண்டார். Wojtek அந்தக்காரை கைப்பற்றினார், ஆனால் திருடியவனை விட்டுவிட்டார். அவர் மக்களுக்கு உதவ முயலுகிறார். ஆனால் வேலையில்லாத் திண்டாட்டம்தான் குற்றச்செயல்களுக்கான காரணமாக அமைந்து விடுகிறது. முறையான வேலைவாய்ப்புகள் இருக்குமானால் குற்றச்செயல்கள் எதுவும் நடக்காது என்று அந்த தனியார் துப்பறிவாளர் கூறினார்.

Zabrze-விலுள்ள சமூக பாதுகாப்பு அலுவலக துணை இயக்குனர் Edward Orpik பல்வேறு மக்களை எதிர் நோக்கியுள்ள வறுமையை முற்றிலும் அறியாதவராகவும் புறக்கணிப்பு மனப்பான்மை கொண்டவராகவும் இருக்கிறார். அவருடைய அலுவலகம் அளவிற்கு அதிகமான ஆட்களை கொண்டதாகவும் நன்றாக அலங்காரம் செய்யப்பட்டதாகவும் இருக்கிறது. அதில் இருந்துகொண்டு உலகம் பற்றிய கன்பூசியஸ் குழப்ப தத்துவத்தை விளக்குகிறார். "நீ உலகத்தை மாற்ற முடியாது, உன்னை நீயே மாற்றிக்கொள், அப்போது உலகம் மாறிவிடும். பல தசாப்தங்கள் கம்யூனிசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தங்களது சொந்த வாழ்க்கைக்கு தாங்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை மறந்துவிட்டனர். அடிப்படை சமூக அத்தியாவசிய தேவைகளான வேலை, தொழிற்பயிற்சி மற்றும் சுகாதார வசதி போன்றவை ஒரு குறைந்தபட்ச அளவிற்கு உறுதி செய்து தரப்பட்டது. அதன் விளைவாக, தங்களது சொந்த தலைவிதியை நிர்ணயிக்க மக்கள் மறந்துவிட்டனர்."

Top of page