:
ஐரோப்பா
Blair steps up campaign against "old
Europe"
''பழைய ஐரோப்பாவிற்கு'' எதிராக பிளேயர் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறார்
By Chris Marsden and Julie Hyland
22 June 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
பிரதமர் டோனி பிளேயர் ஜூன் 20ல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பொது
விவசாய கொள்கையில் (CAP)
சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றிய சலுகைத்தொகையை நீடிக்க
வேண்டும் என்று வற்புறுத்தி தமது கோரிக்கையை தெளிவுபடுத்தினார். இது மிகவும் அடிப்படையான பொருளாதார
மற்றும் பூகோள-மூலோபாய நோக்கங்களை முன்கொண்டுவரும் ஒரு கருவியாகும்.
பிரிட்டனின் சலுகைத்தொகையை குறைப்பது பற்றிய எந்த விவாதமும், பொது விவசாய
கொள்கை சீர்திருத்தத்தோடு முடிச்சுப் போடப்பட வேண்டும் என்பதன்மூலம் சென்ற வாரக் கடைசியில் நடைபெற்ற
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக சீர்குலைத்தார். பொது விவசாய கொள்கை குறிப்பாக பிரான்சிற்கு
தரப்படும் மானியத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றியதாகும். பிளேயர் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து புதிதாக
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள நாடுகளோடு முந்திய நட்புறவை திரும்ப நிலைநாட்டுவதற்கு தற்போது
முயன்று வருகிறார்.
ஜேர்மனி மற்றும் பிரான்சின் மேலாதிக்கத்தின் கீழ் ஐரோப்பிய அரசியல் மற்றும்
பொருளாதார ஒன்றியம் உருவாவதற்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்டுள்ள பிரசாரத்தில், முன்னாள் ஸ்ராலினிச
ஆட்சிகள் பிரிட்டனின் இயல்பான கூட்டணியினர்கள் என்று கருதப்படுகின்றன. பிளேயராலும் அவரது அமெரிக்க
நோக்குநிலைக்கொண்ட வெளியுறவுக் கொள்கையாலும் வெற்றிகரமானது என நோக்கப்படும் நெறிமுறைப்படுத்தப்படாத
சுதந்திர சந்தை நப்பாசைகள் தங்களுக்கு சாதகமானது என்று அவை கருதுகின்றன.
என்றாலும், கிழக்கு ஐரோப்பிய அரசுகள் பொதுவாக ஐரோப்பிய ஒன்றிய
மானியங்களை பொருளாதாரரீதியாக சார்ந்திருக்கின்றன மற்றும் புதிய வரவுசெலவுத்திட்ட ஏற்பாடுகளின்படி
பொது விவசாய கொள்கை நிதிகளில் ஒரு பெரும்பங்கு பெற
முடியுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதில் சம்மந்தப்பட்டுள்ள தொகை மிகச் சிறியவை என்றாலும்,
நலிந்துவிட்ட தங்களது பொருளாதாரங்களை தூக்கி நிறுத்துவதற்கு அந்தத் தொகைகூட உயிர்நாடி முக்கியத்துவம்
வாய்ந்தவை என்று அந்த அரசுகள் கருதுகின்றன மற்றும் தங்களது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் சீரமைப்புக்கும்
அதன் மூலம் நிதியளிக்க முடியும் என்று கருதுகின்றன.
இதனால், ஈராக் போரில் வாஷிங்டனை ஆதரித்ததற்காக அந்நாடுகள் மீது முன்னர்
சிராக் தாக்குதல் தொடுத்திருந்த போதிலும் போலந்தும் மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பிரெஞ்சு
ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு ஆதரவு தெரிவித்தது குறித்து பிளேயர் அதிர்ச்சியடைந்தார்.
புருஸ்ஸல்ஸ் மீது தனது உடன்பாடின்மையையும், போர் வெறிமிக்க குரலையும் பிளேயர்
தனது வெஸ்ட் மினிஸ்டர் உரையில் நிலைநாட்டினார், அதே நேரத்தில் பிரிட்டன் வரும் ஆறு மாதங்களில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றுகின்ற காலத்தில் சலுகைகள் பற்றி கலைந்துரையாட அவர் தயாராக
இருப்பதாகவும், அதன் மூலம் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறுகின்ற சூழ்நிலை உருவாகும் என்று தெளிவுபடுத்தினார்.
ஜூன் 23ல் அந்த வகையில் பிளேயர் தமது ஆரம்ப உரையை ஆற்றவிருக்கிறார்.
தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்று நாடாளுமன்றத்திற்கு அவர்
தெரிவித்தார் மற்றும் பொது விவசாய கொள்கை சீர்திருத்தம் தொடர்பாக ஒரு உறுதிமொழி இல்லாமல்
இருக்கின்ற,
ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத்திட்டத்தை தான் "சாதாரணமாக இந்த
சபைக்கு பரிந்துரைக்க முடியாது" என்று கூறினார். அவர் "வழக்கமாக திரட்டப்பட்ட சமரசம்" என்று குறிப்பிட்ட
அந்த வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது ''நான் புதிய ஐரோப்பிய நாடுகளின்
கவலைகளை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறேன். அவர்கள் ஒரு உடன்பாட்டை விரும்புகின்றனர். நம்மால்
முடிந்தவரை அத்தகையதொரு உடன்பாட்டை பெற முயலுவோம் மற்றும் அதுதான் அவர்களது தேவைகளை
நிறைவேற்ற உறுதி செய்து தர முடியும்'' என்றார்.
இந்த வரவுசெலவுத்திட்ட காலம் முழுவதிலும் பிரிட்டனுக்கு வழங்கப்படும்
சலுகைத்தொகை தற்போதுள்ள அளவிற்கு சற்று குறைந்த அளவில் முடக்கி வைக்கப்படலாம் என்ற லுக்சம்பேர்க்கின்
சமரச முன்மொழிவை கொள்கை அடிப்படையில் தான் ஆட்சேபிக்கவில்லை என்றும் கூறினார். ஒரு புதிய பேரத்தின்
கீழ் பிரிட்டன் அதிக தொகையை செலுத்த வேண்டிய வரலாம்.
பிளேயர் பிடிவாதத்துடன் இருக்கிறார் என்று கருதப்பட்ட நிலைப்பாட்டை கைவிட அவர்
தயாராக இருப்பது அவர் இதுவரை அந்த சலுகைத்தொகையை பாதுகாத்து நிற்க முடியாதது என்பதை அறிந்தே
இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தியில் 2 சதவீத குறைந்த அளவிற்கு
இடம்பெற்றுள்ள விவசாயத்திற்கு நிதியளிப்பதில்,
ஐரோப்பிய ஒன்றிய மானியத் தொகைகளில் 40 சதவீதம் வழங்கப்படுவது
நியாயமற்றது என்று பிரதமர் புகார் கூறினார்.
அவரது புள்ளி விவரங்கள் தவறான அடிப்படையில் அமைந்தவை, ஏனெனில் ஐரோப்பிய
ஒன்றியத்தின் மொத்த உள்ளூர் உற்பத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டத் தொகை 1
சதவீதம்தான் மற்றும் விவசாயம் ஒன்று மட்டுமே தேசிய அரசாங்கங்களின் வரவு செலவு திட்டங்களில் இருந்து
ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு திட்டத்திற்கு
மாற்றப்பட்டிருக்கின்றன. விவசாய மானியங்கள் பிரச்சனையை சமாளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பதற்கு
பதிலாக, கடந்த காலகட்டத்தில் வரவு செலவு திட்டத்தில் 70 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக பொது
விவசாய கொள்கையில் குறைக்கப்பட்டது.
பொது விவசாய கொள்கைக்கு எதிரான மேலும் குறைப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது
சிராக்கிற்கு அரசியல் தற்கொலைக்கு சமமான நடவடிக்கையாகும். விவசாய மானியங்களை நீண்ட காலமாக கோலிஸ்ட்டுகள்
ஆதரவை பெறுவதற்காகவும் மற்றும் கிராம முதலாளித்துவத்திற்கும், குட்டி முதலாளித்துவத்திற்கும் ஒரு சமூக
அடித்தளத்தை உருவாக்கி தொழிலாள வர்க்கத்திடமிருந்து வருகின்ற அழுத்தங்களை சமாளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு
வருகிறது. இந்த ஏற்பாட்டில் மேலும் ''சீர்திருத்தத்திற்கு'' உடன்படுவது இயலாத காரியம், ஏனெனில் பிரான்சில்
ஆளும் அரசியல் செல்வந்தத் தட்டினரால் முன்மொழியப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டத்தை
தொழிலாள வர்க்கம் புறக்கணித்ததை ஒரு பெரிய பேரிடியாகவும், சமூக பாதுகாப்புக்களை பெருமளவில் வெட்டுவதற்கான
தங்களது தீர்வுகளுக்கும் ஒரு பெரிய அடி விழுந்திருப்பதாக கருதுகின்றனர்.
ஐரோப்பாவில் ஒரு சமூக வெடிப்பை தூண்டிவிடுவதிலுள்ள ஆபத்துக்களின் தன்மை
பிளேயருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரைப் பொறுத்தவரை சிராக்கிற்கு ஏற்பட்டுள்ள சங்கடங்கள்
நெதர்லாந்தில் பதிவான ''இல்லை'' என்கிற வாக்கு மற்றும் அண்மையில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில்
ஜேர்மனியின் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி சந்தித்த தோல்விகள்----அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரை
செப்டம்பரில் முன்கூட்டியே தேர்தலை நடத்த கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது---- ஆகிய அனைத்துமே ஐரோப்பிய
ஒன்றியத்திற்கான பிரிட்டனின் திட்டங்களை அழுத்தம் கொடுத்து முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு என்று அவர்
கருதுகிறார்.
இதை பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் ஜாக் ஸ்ட்ரோ பிரிட்டனின் ஐரோப்பிய
ஒன்றிய ஆணையாளரும்
பிளேயரின் நெருக்கமான கூட்டாளிகளில் ஒருவருமான பீட்டர் மன்டல்சன்
ஆகியோரது கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை தொடர்ந்து, ஸ்ட்ரோ கூறினார்: ``இந்த
துக்ககரமான நாளில் இருந்து திரும்ப இணைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ''கடந்த காலத்தில்
சிக்கிக்கொண்ட ஒரு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமா அல்லது எதிர்காலத்தை சமாளிக்கின்ற வல்லமையுள்ள ஒரு
ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமா என்பதைத்தான்'' ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள்
அடிப்படையிலேயே எடுத்துக்காட்டுகின்றன.
கார்டியனில் எழுதியுள்ள மென்டல்சன் இந்த நெருக்கடியை ''துப்பரவாக்கும்
தாக்கமாக'' பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி ஒரு பயங்கரமான
தேர்வு நெருக்கடி எதிர்நோக்கியுள்ளது ''துன்பம் தரும் சீர்திருத்தங்களா, அல்லது பொருளாதார வீழ்ச்சியா?''
என்பதுதான்.
பிரான்சிலும், ஜேர்மனியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை பிரிட்டிஷ் அரசாங்கம் தனது
வெற்றிக்கான வாய்ப்பாக பகிரங்கமாக கருதுகிறது. பிளேயரின் பொருளாதார கொள்கைகள் மற்றும் அவரது
வாஷிங்டனின் ஆதரவு நோக்குநிலை ஆகியவை குறித்து சாதகமான அறிக்கைகளை வெளியிட்ட வலதுசாரி கிறிஸ்தவ
ஜனநாயக ஒன்றியத் தலைவர் ஏஞ்சலா மெர்கல் செப்டம்பர் தேர்தல்களில் ஜேர்மனியின் சமூக ஜனநாயகக்
கட்சியை தோற்கடிப்பார் என்று அது நம்புகிறது.
அதேபோன்று, 2007 தேர்தலில் முடக்கப்பட்ட நிலையிலுள்ள சிராக்கிற்கு பதிலாக
நிக்கோலா சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்படுகின்ற சாத்தியக்கூறு பற்றி அது கணக்கிடுகிறது. தனது வலதுசாரி
பொருளாதாரக் கொள்கைக்காக அங்கீகரிக்கப்பட்ட அந்த கோலிஸ்ட் கட்சித் தலைவர் பழைய
பிராங்கோ----ஜேர்மனி கூட்டணி பயனளிக்கின்ற காலம் முடிந்துவிட்டது என்று நம்புகிறார். ஐரோப்பிய ஒன்றிய
உச்சி மாநாடு தோல்வியடைந்தது பற்றி கருத்துத் தெரிவித்த அவர் இனி மேலும்
ஐரோப்பிய ஒன்றியம் விரிவடையாது இப்போது நாம்
முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாதை ''பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து மற்றும்
பெனிலுக்ஸ் நாடுகள் அடிப்படையிலான ''ஒரு புதிய மோட்டார் உருவாக்குவதும், ஐரோப்பாவை உருவாக்குவதும்
தான்'' என்று அவர் குறிப்பிட்டார்.
''ஒரு புதிய பொதுக்கருத்தை ஐரோப்பாவில் உருவாக்கிவிட முடியும். அதை
அடைவதற்கு ஜேர்மனியிலும் பிரான்சிலும் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலையை நீங்கள் அதிகம் தெரிந்திருக்க வேண்டிய
அவசியமில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் முன் அடியை எடுத்துவைக்க வேண்டிய தருணம் இது'' என்று மென்டல்சன்
குறிப்பிட்டிருக்கிறார்.
பெரிய ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையில் கூர்மையாகிக் கொண்டு வரும் பகை
உணர்வுகளை பிளேயரின் நிலைப்பாட்டிற்கு தெரிவிக்கப்பட்டு வரும் உற்சாகமான வரவேற்பு கோடிட்டுக் காட்டுகிறது.
வழக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பழமைவாத எதிர்க்கட்சியும், ஐரோப்பிய சார்பு தாராளவாத
ஜனநாயகக் கட்சியும் பிளேயரின் நிலைப்பாட்டை உற்சாகமாக ஆதரித்திருக்கின்றன. ''வழக்கமாக நாம் உடன்படுவதைவிட
அதிகமான அம்சங்களில் இன்றைய தினம் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது'' என்று பழமைவாதக் கட்சித் தலைவர்
மைக்கேல் ஹோவார்டு அறிவித்தார். அதே நேரத்தில் பிளேயரின் நாடாளுமன்ற உரைகளை பின் வரிசைகளில் அமர்ந்திருந்த
டோரிக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டியது அவசியமென்று தாராளவாத ஜனநாயகக் கட்சி
தலைவர் சார்லஸ் கென்னடி வலியுறுத்திக் கூறினார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது ''ஒரு புதிய
கருத்தை உருவாக்க முயற்சிப்பது நமது பொறுப்பாகும்...... ஐரோப்பா சார்பாக செயல்படுவது எந்த
வகையிலும் ஐரோப்பிய அரசியலமைப்புக்கள் சிறப்பாக ''செயல்பட வேண்டும் என்ற சீர்திருத்த ஆதரவு போக்கை
விளக்கி வைப்பதாக அமைந்திருக்கிறது.'' என்றார்.
''பழைய ஐரோப்பா'' என்று குறிப்பிடப்படுகின்ற நாடுகளின் தலைவர்களுக்கு
மேலாக அவர்களை புறக்கணித்துவிட்டு ஐரோப்பிய ஒன்றிய மக்களிடமே நேரடியாக வேண்டுகோள் விடுப்பது என்ற
பிளேயரின் முடிவை மிகப்பெரும்பாலான பிரிட்டிஷ் பத்திரிகைகள் வரவேற்றுள்ளன, ஈராக் போரின் போது
அமெரிக்க பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் அவதூறான முறையில் தெரிவித்த குறிப்பை
நினைவுபடுத்துகிற வகையில் இது அமைந்திருக்கிறது.
பிளேயர் தனது பிரசாரத்தை அவரது வழக்கமான அலங்கார வாய்வீச்சின் மூலம்
''ஐரோப்பிய மக்களுக்கு'' வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் அவர் சரியான மக்களைப் பற்றித்தான்
பேசுகிறார்----அவர்கள் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் பெரிய வர்த்தக நலன்களின் பிரதிநிதிகள். ஆனால்
அவருக்கு ஒரு உண்மை தெளிவாக தெரியாதுள்ளது. அது என்னவென்றால் ஐரோப்பிய பெரும்பான்மையான மக்கள்
அவரது பொருளாதார மறுசீரமைப்பு கோரிக்கைகளுக்கு எதிராக உள்ளார்கள். ஏனெனில் அவற்றால் ஏற்படுகின்ற
செலவினங்களை அவர்கள்தான் ஊதிய வெட்டுக்கள் மூலமும் உயிர்நாடி சமூக சேவைகள் வெட்டுக்கள் மூலமும் ஏற்றுக்கொள்ள
வேண்டிவரும்.
விரோதபோக்கும் போராட தயாராகவும் உள்ள மக்கள் மீது அத்தகைய நடவடிக்கைகளை
திணிப்பதில் ஐரோப்பிய மற்றைய தலைவர்களும் எவ்வளவு உண்மையான சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்
என்பது பற்றி அவர் கொண்டுள்ள அலட்சியப் போக்கைத்தான் அவரது கவனக்குறைவான நிலைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
பிளேயரின் வெட்டிவிட்டு சுட்டெரிக்கும் கொள்கை ஐரோப்பிய வல்லரசுகளுக்கு
இடையே தேவையான ஒத்துழைப்பை உறுதி செய்து மற்றும் சந்தைகளை திறந்துவிடும் நோக்கத்தை
கொண்டதுமட்டுமல்லாது, போருக்கு பிந்திய சிக்கலான சமூக மற்றும் அரசியல் உடன்பாடுகளை ஒழித்துக்கட்டுவதை
மட்டுமே குறிக்கோளாக கொண்டது. இவ்வுடன்பாடுகள் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஐரோப்பாக்
கண்டத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பாசிசத்தின் பயங்கரங்களால் மதிப்பிழந்துபோயிருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கும்
இலாப முறைக்கும் அச்சுறுத்தலாக தோன்றிய சோசலிசப் புரட்சியை இல்லாதொழிக்கவும் அவசியமாக இருந்தவையாகும்.
இவை அனைத்தும் பிளேயரை பொறுத்தவரை கடந்த கால நிகழ்ச்சி. இப்போது அவர்
நிதியாதிக்க குழுவினரின் ஏவல் கருவியாக செயல்பட்டு வருகிறார், அவர் மிகக்குறுகிய நடைமுறை கண்ணோட்டங்களால்
உந்தப்பட்டு செயல்பட்டு வருகிறார்---- அவரது வாஷிங்டன் உறவுகளை பயன்படுத்தி ஐரோப்பாவில் பிரிட்டனின்
செல்வாக்கை பெருக்கிக்கொள்வதை விருப்பமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளால் கட்டவிழ்த்துவிடப்படும்
சக்திகளின் அச்சுறுத்தல் பற்றி அவருக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு அவர்களது
மிக முக்கியமான எதிரியான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓரளவிற்கு ஐக்கியம் தேவைப்படுகின்ற
நேரத்தில்---- அவர் அந்தக் கண்டத்தின் அரசியல் மற்றும் சமூக ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்
நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.
Top of
page |