:
ஆசியா
:
சீனா
Peasant unrest continues in China
சீனாவில் விவசாயிகள் கிளர்ச்சி நீடிக்கிறது
By John Chan
20 June 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
தங்களது வாழ்க்கைத்தரம் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுவத்துவதற்கு மிகத்தீவிரமான
கிளர்ச்சி வடிவங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை காட்டுவதாக சீனாவில்
தற்போது நடந்து வருகின்ற பல்வேறு போர் குணம் கொண்ட கிராம ஆர்ப்பாட்டங்கள் உள்ளன. மார்ச் மாதம்
நடைபெற்ற தேசிய மக்கள் மாநாட்டில் கூறப்பட்ட "ஒரு சமரச சமுதாயத்தை" உருவாக்குவதற்கு பதிலாக, பெய்ஜிங்குடைய
சுதந்திர சந்தைக் கொள்கையின் ஆழமான சமூக வெடிப்புக்களையும், சமூக கிளர்ச்சி தூண்டிவிடுதலையும் திறந்துவிட்டுள்ளது.
ஜூன் 12ல், ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சன் டெய்லி தந்துள்ள
தகவலின்படி, தெற்கு குவாங்டோங் மாகாணத்தின்
Zhongshan அருகிலுள்ள ஒரு கிராமமான
Dacenல் ஆயிரம் பேர் திரண்டுவந்து சுமார் 1000 கலவரத்தடுப்பு
போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகளோடு மோதிக்கொண்டனர்.
உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்படுத்தப்படாத ஊழலின் காரணமாக இந்தக் கண்டனம்
தூண்டிவிடப்பட்டது. 1950களிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிராமம் அல்லது நகரத்தை சேர்ந்த நிலம் மற்றும் தொழிற்சாலைகளின்
அதிகாரம் அத்தனையும் மக்கள் அனைவரின் கூட்டு சொத்தாகும். சீனா முழுவதிலும் நடைபெற்றுக்கொண்டுள்ள ஒரு
சிறிய அம்சம்தான் அங்கு நடப்பதாகும், Dacen
இலுள்ள அரசாங்கமும் கட்சி நிர்வாகிகளும் கூட்டுச் சொத்துக்களை
தங்களது தனியார் சொத்துக்கள்போல் நடத்துகின்றனர்.
உள்ளூர் விவசாயி ஒருவர்
Radio Free Asia வுக்கு பேட்டியளித்தபோது வீடுகளில் பயன்படுத்தப்படும்
சாதனங்களை தயாரிக்கும் நகரப்பகுதி நிறுவனங்களிடமிருந்து ஒரு ஆண்டிற்கு 1,30,000 யான்களை (15,000
அமெரிக்க டாலர்கள்) அதிகாரிகள் பங்கு இலாபமாக பெறுகின்றனர். சென்ற ஆண்டு பெரும்பாலான கிராம மக்கள்
300 யான்களை (36 டாலர்) பங்கு இலாபமாக பெற்றனர்.
[அது]
காரியாளர்கள் ஒரு நாள் ஊதியமாகும்'' என்று அந்த விவசாயி
சுட்டிக்காட்டினார்.
பல கிராமங்களை போன்று குவாங்டாங்கிலும், உள்ளூர் அதிகாரிகள் கூட்டு நிலத்தை
தொழிற்சாலைகளுக்காகவும் மற்றும் கட்டிடங்களை கட்டி (real
estate) மேம்படுத்துவதற்கும் விற்று கொள்ளை இலாபம்
ஈட்டிவருகின்றனர். Dacen
நிர்வாகம் சென்ற ஆண்டு 700 துண்டுகளாக பிரித்து (46.6
ஹெக்டேர்களை, 115.2 ஏக்கர்களை) ஒவ்வொன்றும் 19,000 டாலர் வீதம் விற்றனர். இந்த ஆண்டு
தொடக்கத்தில் நடைபெற்ற கிராம தேர்தல்களின்போது, சுமார் 100 மில்லியன் (12 மில்லியன்) டாலர்கள்
மதிப்புள்ள கிராம ''கூட்டு'' சொத்துக்களை காணவில்லை என்று ஒரு புலன் விசாரணை மூலம் தெரியவந்தது.
இப்படி அதிக இலாபத்துடன் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததும், அந்த கிராமத்தில் மூன்று மில்லியன்
யான்கள் மட்டும்தான் கணக்கு வைக்கப்பட்டன.
அந்த நகரத்தின் சொத்துக்கள் களவாடப்பட்டதற்கு காரணமாக இருந்த
அதிகாரிகளை தண்டிக்கவும், பணத்தை திரும்ப ஒப்படைக்கவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. ஜூன் 8ல், கிராம மக்கள் இரண்டு பிரதான சாலைகளில்
தடுப்புக்களை ஏற்படுத்தினர், வீட்டு பண்ட தொழிற்சாலை சுற்றிலும் போக்குவரத்துக்கள் அனைத்தும்
நிறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தை முறியடிப்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் போலீசாரை அந்தப் பகுதியிலிருந்து
அணிதிரட்டினர், அதன் விளைவாக ஜூன் 12ல் மோதல் ஏற்பட்டது. குறைந்த பட்சம் ஒரு டசின் கிராம மக்கள்
கைது செய்யப்பட்டனர்.
சீனாவிலேயே மற்ற பின்தங்கிய உள்ளூர் பகுதிகளோடு ஒப்புநோக்கும்போது, மிகவும்
வளர்ச்சியடைந்த ஒரு மாகாணத்தை சேர்ந்த ஒரு சமூகமான
Dacen இல்
நடைபெற்றுள்ள சம்பவம் அண்மைக்காலங்களில் வெளிவந்துள்ள கசப்பான சமூக மோதல்களின் ஓர் உதாரணமாகும்.
ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் ஆழமாகிக்கொண்டுவரும் துருவப்படுத்தல் இந்த பதட்டங்களுக்கு
பின்னணியாக உள்ள உந்து சக்தியாகும்.
ஜூன் 11 அதிகாலையில், வடக்கு
Hebei
மாகாணத்தில் ஒரு வன்முறை மோதல் நடைபெற்றது. கூலிக்கு அமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான அடியாட்கள்
Shengyou
கிராமத்தில் ஒரு விவசாயிகள் குழுவை வேட்டை துப்பாக்கிகள், தடிகள் மற்றும் இதர ஆயுதங்களால்
தாக்கினார்கள். ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டனர் மற்றும் அதேபோல் 100 பேர் காயமடைந்தனர். அந்த
கிராமத்து விவசாயிகள் நிலத்தை காவல் புரிந்து வந்தனர், அவர்கள் உள்ளூர்
Guohua மின்சார
நிலையத்தின் நிலத்தை விற்க மறுத்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, திரும்ப திரும்ப ஆத்திரமூட்டல்கள் நடைபெற்று
வந்தன. உள்ளூர் போலீஸார் அந்த கிராமங்களுக்கு தொந்தரவு கொடுத்ததுடன் அவர்களது தலைவர்களையும் கைது
செய்தனர். உள்ளூர் குடிமக்கள் தந்த தகவல்களின்படி, அந்த கிராமத்தை சுற்றி வளைத்து தண்ணீரையும் உணவையும்
வெட்டுவதற்கு முயன்றனர். அந்த கட்டத்தில், கிராமமக்கள் 24 மணி நேரமும் கிராம நிலத்தின் மீது கண்காணிப்பை
ஸ்தாபித்து வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர், 20 முரடர்கள் அடங்கிய ஒரு குழு விவசாயிகளை தாக்கியது,
அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். முரடர்களில் ஒருவர் பிடிக்கப்பட்டார் மற்றும் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது
விவசாயிகளுக்கு ''ஒரு படிப்பினையை புகட்டுவதற்காக'' தனக்கு 12 டாலர்கள் தருவதாக உறுதியளிக்கப்பட்டதாக
தெரிவித்தனர்.
கடைசியாக நடைபெற்ற மோதலை தொடர்ந்து,
Shengyou கிராம மக்கள் ஆறு பேர் மடிந்த பின்னரும்
தங்களது நிலத்தை பாதுகாத்து நிற்க உறுதியுடன் உள்ளனர். இப்படியான தாக்குதல்களின் மோசமான தன்மை
அரசாங்க அதிகாரிகள் தங்களது கொள்கைகளுக்கு ஏற்படும் எதிர்ப்பின் மீது எவ்வளவு கொடூரமான தாக்குதல்களை
மேற்கொள்கின்றனர் என்பதை வலியுறுத்திக்காட்டுவதாக உள்ளது.
கூடுதல் வரிவிதிப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கின்ற வகையில்
Zaduo பகுதியை
சேர்ந்த Qinghai
மாகாண திபெத் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், மே 20ல் அரசாங்க
கட்டிடங்களில் அதிரடியாக புகுந்து அவற்றை தீவைத்து கொளுத்தினர்.
ஹாங்காங்கை தளமாகக் கொண்ட
Sintao Daily
மே 24ல் வெளியிட்டுள்ள தகவலின்படி Ximen
கிராமத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான விவசாயிகள், சீனாவின் பிரதான போக்குவரத்து உயிர்நாடிகளில்
ஒன்றான ஹாங்காங்கிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான இரயில்வே இணைப்பில் மறியல் செய்து ஆறு மணி நேரம்
போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். கிராம மக்கள் ரயில்வே பாதைக்கு நடுவில் படுத்து மறியல் செய்தனர்,
மற்றவர்கள் Jinggangshan
இன் ரயில் நிலையத்தின் ஜன்னல்களை தகர்த்தனர். இந்தக் கண்டனம்
பெய்ஜிங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனெனில் அந்தப்பகுதி ஒரு அடையாளபூர்வமான முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். அந்தப் பகுதியில்தான் 1930களில் மாவோ சேதுங்கின் விவசாய இராணுவம் முதலாவது "கிராம
சோவியத்தை" ஸ்தாபித்தது.
கட்டிடங்களை கட்டிவிற்பதற்காக அந்த நிலத்தை மிக சொற்ப தொகைக்கு உள்ளூர்
அரசாங்கம் விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முற்றுகைக்கு ஆதரவாக
10,000 இற்கு மேற்பட்டவர்கள்
கூட்டமாக திரண்டு விட்டனர். இறுதியாக அதிகாரிகள் துணை இராணுவ போலீசாரை அனுப்பி விவசாயிகளை முறியடித்து
இரண்டு சரக்கு ரயில்களை அந்த ரயில் பாதையில் செல்ல அனுமதித்தனர்.
போலீசார் விரட்டப்பட்டனர்
கிழக்கு மாகாணமான
Zhejiang இல்
Dongyang
நகரத்தின் அருகிலுள்ள Huaxi
கிராமத்தில் ஏப்ரல் 10ல் நடைபெற்ற மிகப்பெரிய கண்டனங்கள் பற்றி செய்திகள் வந்துள்ளன. 20,000 இற்கு
மேற்பட்ட கிராம மக்களை எதிர்கொண்ட 3,000 போலீசார் விரட்டப்பட்டனர், அவர்கள் ஒரு தொழிற்துறை
பூங்காவினால் ஏற்பட்ட சுற்றுப்புற சூழல் மாசுபடுவதற்கு எதிரான கண்டனத்தை முறியடிக்க அனுப்பி
வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்திற்கான பின்னணியை ஜூன் 13ல் வாஷிங்டன் போஸ்ட் ஒரு
விவரமாக வெளியிட்டிருக்கிறது. 2001ல், Dongyang
நகர அதிகாரிகள் 13 தொழிற்சாலைகளை அமைப்பதற்காக
Zhuxi தொழிற்துறை பூங்காவிற்கு 33 ஹெக்டேர் நிலத்தை
கொடுத்தனர், அவை பெரும்பாலும் இரசாயன மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகள். தங்களது 13
ஹெக்டேர் விவசாய நிலம் பறிபோனதுடன் சுற்றுப்புறசூழல் மாசுபடுவதுபற்றி ஆரம்பத்திலிருந்தே கிராமமக்கள்
அச்சமும், அந்த திட்டத்திற்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
உற்பத்தி தொடங்கியவுடன், கிராம மக்கள் உடனடியாக அந்த தொழிற்சாலை
பூங்காலிருந்து வாயு வெளியேறுவதால் கண் எரிச்சலும் இதர நோய்களும் ஏற்படுவதாக புகார் கூறினர். உள்ளூர்
பாசன கால்வாய்களுடன் கலக்கும் இரசாயன தொழிற்சாலையின் கழிவுப்பொருட்கள் பயிர்களை கொன்றுவிட்டன.
Huaxi கிராமத்தை சேர்ந்த
பிரதிநிதிகள் மூலம் மாகாண அரசாங்கத்திற்கும், பெய்ஜிங்கில் உள்ள மத்திய அரசாங்கத்திற்கும் மனுக்களை
கொடுத்தனர், அவர்களது மனக்குறைகளை எவரும் கேட்கவில்லை என்பதுடன், அதன் மீது நடவடிக்கை எதுவும்
எடுக்கவில்லை. 2001 அக்டோபரில் 12 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர், மற்றும் அவர்கள் மீது
தொழிற்துறை பூங்காவில் அத்துமீறி நுழைந்ததாகவும், தொழிற்சாலைகளில் ஒன்றை நாசப்படுத்த முயன்றதாகவும்
குற்றம் சாட்டப்பட்டது. சுற்றுப்புற சூழல் தூய்மை கெடுவது தொடர்பான எந்த சாட்சியையும் விசாரிக்க ஒரு
நீதிபதி மறுத்துவிட்டார் மற்றும் ''பொது ஒழுங்கை கெடுத்ததாக'' அந்த 10 பேருக்கும் நீண்டகால சிறை
தண்டனையை நீதிபதி விதித்தார்.
தங்களது புகார்களை அதிகாரிகள் ஏதாவது ஒருவகையில் அங்கீகரிக்க வேண்டும் என்ற
பல ஆண்டுகள் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் இந்த ஆண்டு மார்ச் 23ல், தொழிற்துறை பூங்காவிற்கு வெளியில்
ஒரு கூடார நகரை உருவாக்கி அந்த தொழிற்சாலை வளாகத்தின் பணிகளை சீர்குலைக்க உள்ளூர் கிராமவாசிகள்
முடிவு செய்தனர்.
வலைத் தளத்தில் அந்த கிராமவாசிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில்:
"தேசபக்தி மிக்க தோழர்களே, நம்மிடம் அதிகாரம் இல்லாவிட்டாலும், நாம் உயிர்வாழ விரும்புகிறோம்,
மற்றும் நமது மனித உரிமைகளை விரும்புகிறோம். நீதிக்காக நாம் நிற்கிறோம் மற்றும் நாம் வெற்றி பெறும்
வகையில் செயல்பட கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பணம் இருந்தால்
நன்கொடை தாருங்கள், இல்லையென்றால், அதன் பாகமாக உங்களது உழைப்பை
தாருங்கள். நாம் ஐக்கியப்பட்டு இருக்கின்றவரை, நமது
நியாயமான நடவடிக்கை தீங்குகளின் மீது வெற்றி பெறும். இறுதி வெற்றி மக்களுக்கே உரியதானதாகும்" என்று
அறிவித்திருந்தது.
முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரிகள் பலாத்காரத்தை பயன்படுத்த
தயங்குவார்கள் என்று எதிர்பார்த்து இருநூறு முதிய கிராம மக்கள் அந்த கூடாரத்தை ஆக்கிரமித்தனர். என்றாலும்,
ஐந்து நாட்களுக்கு பின்னர் அந்த கண்டனத்தை முறியடிப்பதற்காக போலீஸார் அனுப்பப்பட்டனர். கூடாரம்
எரிக்கப்பட்டு சாம்பலாகின மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பதிலளிக்கின்ற வகையில்,
ஆயிரக்கணக்கான கிராமமக்கள் போலீஸாரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி கூடார நகரம் மீண்டும்
ஸ்தாபிக்கப்பட்டது.
ஏப்ரல் 10 காலையில், சுமார் 3,000 போலீசாரும் அரசாங்க அதிகாரிகளும்
அந்த எதிர்ப்பை நசுக்குவதற்காக பேருந்துகளில் அனுப்பப்பட்டனர். மீண்டும் அதிகாரிகள் அந்த முகாம்களில் புகுந்து
உள்ளேயிருந்த மக்களை வெளியே இழுத்துவந்தனர். அதே நேரத்தில் கூடார நகரை அதிகாரிகள் அழித்தனர்.
அந்தப்பகுதி முழுவதிலும் கிராம மக்கள் திரண்டனர், பட்டாசுகள் வெடித்து கண்டனத் தலைவர்கள் ஒரு வெகுஜன
சபைக்கான ஒரு சமிக்கையை காட்டினர்.
அப்போது அந்தக் கூட்டத்தில் இரண்டு வயது முதிர்ந்த பெண்கள் கொல்லப்பட்டார்கள்
என்ற வதந்தி பரவியதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கற்களை வீசினர் கலவரத் தடுப்பு போலீஸாரை
நோக்கி திரண்டனர். அவர்களும் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் உயிர்
தப்பினால் போதும் என்று ஓடினர். கைவிடப்பட்ட டசின்கணக்கான போலீஸ் வாகனங்களும் பேருந்துகளும் உள்ளூர்
அதிகாரிகளின் கார்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஒரு ஹாங்காங் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த
Dongyang
மருத்துவமனை அதிகாரி 140 பேருக்கு காயத்திற்கு சிகிச்சையளித்ததாகவும், அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள்
போலீசாரும், அரசாங்க அதிகாரிகளும் என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி "சில போலீஸ்காரர்கள் தங்களது
சீருடைகளை வீசி எறிந்துவிட்டு தங்களது உள்ளாடையுடன் ஓடிவிட்டதாக கண்டனப்பேரணியில் கலந்து கொண்டவர்களில்
சிலர் நினைவுபடுத்தினர். மற்றவர்கள் பூட்டியிருந்த வகுப்பறைகளின் கதவுகளை உடைத்து கொண்டு அதில் புகுந்து
தப்பினர்''. ''நாங்கள் போலீசாரின் இன்னொரு முகத்தைப் பார்த்தோம். முதலில் சாதாரண மக்கள் பயந்து
கொண்டிருந்தனர். அதற்கு பின்னர் போலீசார்தான் பொதுமக்களைப் பார்த்து பயந்தனர்'' என்று ஒரு விவசாயி
கூறினார்.
இந்த கண்டனத்தை பின்தொடர்ந்து, கிராமவாசிகள் அந்த தொழிற்துறை பூங்காவின்
மீது முற்றுகையிட்டு அதை மூடுவதற்கு கட்டாயப்படுத்தினர். தங்களது மறியலை முறியடிப்பதற்காக பார ஊர்திகள்
முயன்றபோது 10,000 இற்கு மேற்பட்ட கிராமவாசிகள் மே 12ல் திரண்டனர். ஒரு நிலையான கிளர்ச்சியை எதிர்நோக்கிய
நிலையில், Dongyang
அரசாங்கம் ஆறு தொழிற்சாலைகள் அந்தப் பூங்காவை விட்டு அப்புறப்படுத்துவதற்கு கட்டளையிட்டது, மற்றும் கண்டனத்திற்கு
முற்றுபுள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டது. மே 20ல், கிராம மக்கள் தங்களது கூடாரங்களை அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த வாஷிங்டன் போஸ்ட் "சர்வ
வல்லமை படைத்த கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற எழுச்சியில் விவசாயிகள் வெற்றி ஒரு
அபூர்வமானதாகும்.... தொழிலாளர்களும் விவசாயிகளும் தெருக்களை தவிர வேறு எங்கும் முறையிட முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அவர்களது பிரதிநிதிகள் அரசாங்கம் சொல்வதை செய்கின்றன; சுதந்திர அமைப்புக்கள்
தடை செய்யப்பட்டிருக்கின்றன... பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்ட கட்சி அதிகாரிகள் ஆர்வம்
மிக்க தொழில் முகவர்களின் பங்குதாரராக ஆகிவிட்டனரே தவிர செழுமையினால் கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்களாக
செயல்படவில்லை.
என்றாலும் இந்த வெற்றி சொற்ப ஆயுள் உள்ளதுதான். குறைந்தபட்ச சலுகைகளைக்
கூட தர இயலாத நிலையில், எந்தக் கிளர்ச்சிக்கும் பெய்ஜிங்கின் பதில் திரும்ப திரும்ப ஒடுக்குமுறைகளை கையாள்வதுதான்.
Dongyang
நகர நிர்வாகம் ஏற்கனவே கிராமத் தலைவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு புலன் விசாரணைகளை
தொடக்கியுள்ளது. சாதாரண உடையில் போலீசாரும் அந்தப்பகுதிக்குள் ஏராளமாக குவிக்கப்பட்டிருப்பதாக
கூறப்படுகிறது, இவை மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கும் எந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்கு ஒரு
கொடூரமான அடக்குமுறையை கையாள்வதற்கும் மிகவும் முன்னேற்பாடாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
Top of page |