ஆபிரிக்கா
Blair and Bush on Africa: pretense of
aid masks predatory aims
ஆப்பிரிக்கா தொடர்பாக பிளேயரும் புஷ்ஷூம்; சூறையாடும் நோக்கங்களுக்கு முகமூடியணிந்த
உதவி நாடகம்
By Chris Marsden and Julie Hyland
10 June 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஆப்பிரிக்கா கடன் நிவாரணத்திற்கான திட்டங்களை ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை ஏற்றுக்கொள்ளச்
செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட சுற்றுப் பயணத்தை, இந்த வார
துவக்கத்தில் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர் வாஷிங்டனுக்கு மேற்கொண்டார். உலகின் தாராளவாத மனசாட்சி
என்று தனக்கு சாதகமான போக்கை புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாக, ஆப்பிரிக்க நாடுகளின் தலைவிதியை
சிடுமூஞ்சித்தனமாக பிளேயர் சுரண்டிக் கொள்வதற்கு, பிரிட்டனின் ஆளும் செல்வந்தத்தட்டினர் தந்துள்ள முக்கியத்துவத்திற்கு
ஒரு அளவுகோலாக இது அமைந்திருக்கிறது.
வளர்ந்துவரும் போர் எதிர்ப்பு உணர்வுகளின் விளைவுகளால் பொதுத் தேர்தலில் பாரியளவு
தோல்விகளை தொழிற்கட்சி சந்தித்து ஒரு மாதத்திற்கு பின்னர், ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோத போரை
உருவாக்கிய கூட்டு சிற்பிகளில் ஒருவரை பிளேயர் சந்தித்தார். எனவே, ஈராக்கிலிருந்து கவனத்தை திருப்புகின்ற
எதுவும் அவருக்கு அரசியல் ரீதியாக வரவேற்கத்தக்கதுதான். அந்த உண்மைதான் புஷ்ஷிற்கும் பொருந்தும். இந்த
வாரத்தில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் முதல் தடவையாக, பெரும்பாலான அமெரிக்கர்கள் ஈராக்கிற்கு
எதிரான போர் ஒரு தவறு என்று நம்புவதுடன், அமெரிக்காவை மேலும் பாதுகாப்புள்ள நாடாக ஆக்குவதற்கு அது
தவறிவிட்டது என்றும் தெரிவித்தனர்.
பிளேயரின் இந்த விஜயத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச மன்னிப்பு சபை,
ஈராக், கியூபா ஆப்கானிஸ்தான் மற்றும் இதர பகுதிகளில் உள்ள சிறைகளில் நடைபெறுகின்ற சித்திரவதைகளை பிரிட்டனும்
அமெரிக்காவும் தூண்டிவிடுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளது. பிரிட்டனின் பொதுத்தேர்தல் பிரச்சாரம்
உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் பிளேயர், வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ, பாதுகாப்பு செயலாளர் ஜெப்
ஹூன்,
அட்டர்னி ஜெனரல் கோல்ட் ஸ்மித் பிரபு மற்றும் மூத்த இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் கலந்து
கொண்ட கூட்டத்தின் தகவல் 23 ஜூலை 2002 அன்று கசியவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறிப்பில் ஈராக்கிடம்
பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்பட்டதை கையில் எடுத்துக்கொண்டு பிரிட்டன் ஈராக் மீது எந்தவிதமான
ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் தாக்குதலை நியாயப்படுத்தியது. அந்தக் குறிப்புக்களில் பிரிட்டனின்
M16 புலனாய்வு
சேவையின் தலைவரான சேர் ரிச்சார்ட் டியர்லவ் வாஷிங்டனில் ''இந்த போர்க் கொள்கை தொடர்பாக புலனாய்வும்,
உண்மைகளும் முடிவு செய்யப்பட்டு விட்டன'' என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டனில் பரவலாக காலனித்துவ எதிர்ப்புணர்வு நிலவுவதுடன், பிளேயருக்கும் அவரது
அரசாங்கத்திற்கும் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளின் நண்பர் என்று
வர்ணிப்பது குமட்டல் எடுப்பதாக உள்ளது. உண்மையிலேயே, மீண்டும் ஒருமுறை பிளேயர் பிரிட்டனின் ஏகாதிபத்தியத்
திட்டங்களுக்கு உதவுகின்ற கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு மனிதநேய முகமூடியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பிளேயரும் நிதியமைச்சர் கார்டர் பிரெளனும் கடன் குறைப்பு என்ற வடிவத்தில்
தந்திருப்பது மிகக் குறைவானதாகும். மற்றும் அதுவும் கூட குறிப்பாக எண்ணெய், கனிம வளங்கள் போன்ற
உயிர்நாடி பிரிவுகளில் நாடுகடந்த பெருநிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் ஊடுருவுவதை ஆதரிக்கும் கொள்கைகளை
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
தனிப்பட்ட நாடுகளுக்கும், தனியார் துறைக்கும், உலக வங்கி மற்றும் சர்வதேச
நாணய நிதியம் போன்ற அமைப்புக்களுக்கும் உலகிலுள்ள ஏழை நாடுகள் கடன் தரவேண்டியுள்ளது. இதுபோன்ற
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரவேண்டிய 39 பில்லியன் கடனில் ஆண்டிற்கு ---கிட்டத்தட்ட 10 முதல் 11 பில்லியன்
டாலர்களை தரவேண்டும்.
சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி மற்றும் ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி----
போன்ற ''பன்னாட்டு நிறுவனங்களைத்தான்'' பிளேயர் கடனை ரத்துச் செய்யவேண்டும் என்று
கேட்டுக்கொண்டிருக்கிறார்----- 23 நாடுகளின் ஆட்சிகள் போதுமான அளவிற்கு மேற்கு நாடுகளுக்கு சார்பாக
மற்றும் சந்தை சார்பு நோக்குநிலையை கொண்டவை. இந்த கடன் ரத்துச் செய்யப்படுகிற தொகை ஏதாவது ஒரு
வகையில் கடன் பாக்கியுள்ள நிறுவனங்களை திவாலாகாமல் காப்பாற்றவே உதவும். இதில் ஏழை நாடுகள் பெறும்
மொத்த பயன் ஓராண்டிற்கு 500 மில்லியன் டாலர் அளவிற்கு இருப்பதுடன், ஐந்து நாட்களுக்கு கடன் நிலுவையை
திருப்பி செலுத்துவதற்குத்தான் அது போதுமானதாக இருக்கும்.
பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவியளிக்கும் தொகையை 50 பில்லியன்
டாலர்கள் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற அதிக பெரும் எடுப்பிலான பேச்சானது ---அடுத்த
மூன்றாண்டுகளில்--- பிரெளன் வகுத்துள்ள HIPC
திட்டத்தின் கீழ் சர்வதேச நிதி வசதி என்றழைக்கப்படும். இதில் அரசாங்க உதவி உறுதிமொழிகளோடு சர்வதேச
சந்தைகளில் கடன் நிவாரணப் பத்திரங்கள் விற்பனைக்கு விடப்படும். இது உண்மையில், எதிர்கால கடன்
செலுத்துவதை அடமானம் வைப்பதுடன், முதலீடு செய்தவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகையும் கிடைக்கிறது.
முன்மொழியப்பட்ட கடன் செலுத்துவதற்கான தடை, 2015 வரை தான் செயல்படும். அதற்கு பின்னர்,
சம்மந்தப்பட்ட நாடுகள் கடனைவிட 60 லிருந்து 70 சதவீதம் அளவிற்கு அதிகத் தொகையை செலுத்த
வேண்டியிருக்கும்.
இதற்கு பதிலாக, கடன்பட்ட நாடுகள் அனைத்து பெரிய பொருளாதார மற்றும்
சமூகத் திட்டங்களை ''தனியார்துறை'' ஒத்துழைப்போடுதான் கட்டியெழுப்பப்பட்டு செயல்படுத்தப்படும். இந்த
அறிமுகப்படுத்துதலை ஏற்றுக்கொள்வது என்பது அனைவருக்கும் பொருந்தி வரக்கூடிய, நலம்புரி சலுகை விதிகள்
செலுத்துபவரின் திறனைப் பொறுத்து அமையும்.
பிளேயருடைய முன்மொழிவுகளின் அடிப்படையான நோக்கங்களில் வாஷிங்டன் எந்த
ஆட்சேபிக்கத்தக்க அம்சத்தையும் காணவில்லை. ஆனால், பல தசாப்தங்களாக அமெரிக்காவும் இதர பெரிய
வல்லரசுகளும் தங்களது தேசிய வருமானத்தில் 0.7 சதவீத அளவிற்கு உதவி தருகின்ற பழைய உறுதிமொழிகளை
இறுதியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எந்தப் பேச்சையும் புஷ் எதிர்க்கிறார். அமெரிக்கா உலகிலேயே மிகக்
குறைந்த அளவிற்கு 0.2 சதவீத அளவிற்கும் குறைவாக கடன் உதவித் தொகைகளை வழங்குகிறது. ஆனால்,
அமெரிக்க பொருளாதாரத்தின் அளவைக் கொண்டு பார்க்கும்போது அது தருகின்ற தொகை மற்ற நாடுகளைவிட
உயர்ந்த அளவிற்கு காணப்படுகிறது.
அமெரிக்க இராணுவ வலிமையோடு சேர்த்து, வாஷிங்டன் பிரிட்டன் முன்மொழிந்துள்ள
திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமலே ஆப்பிரிக்க அரசுகளுக்கு கட்டளையிட வகை செய்கிறது. (இதன் பொருள்
என்னவென்றால், பிளேயர் உயர்ந்த தார்மீக அடிப்படையில் பேசுவதாக என்று எவரும் நம்பமுடியுமா? பிரிட்டனின்
உதவி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.35 சதவீதமாக இருக்கும் ---- ஐ.நா இலக்கில் பாதியாக உள்ளது.
அரசாங்கம் இதை 0.4 சதவீதமாக 2006 வாக்கில்தான் உயர்த்த உறுதியளித்திருக்கிறது).
பொருளாதார உதவியை கட்டுப்படுத்துவதற்கும், நிபந்தனைகளை விதிப்பதற்கும்
பன்னாட்டு நேரடி உதவி முயற்சிகளை அனுமதிக்காத புஷ் நிர்வாகம், அதற்கு விரோதப் போக்காக உள்ளது.
வாஷிங்டனின் சொந்த உதவித் திட்டங்கள் கிறிஸ்தவ வலதுசாரிகளை மனநிறைவு கொள்ளச் செய்யும் தன்மை
கொண்டவை---- அதில் ஒருபகுதி குடும்பக் கட்டுப்பாடு, மற்றும் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான
குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ''செக்ஸ் உறவுகளை துறப்பது'' ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது.
இந்தக் காரணங்களால் பிளேயர், குடியரசுக் கட்சிக்காரர்களின்
கடும்போக்காளர்களை ஈர்க்கின்ற வகையில் தனது கொள்கையை தருவதற்கு முயன்றாலும், அவரது ஆப்பிரிக்க
முன்மொழிவுகளை புஷ் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டு பத்திரிக்கையாளர் பேட்டியில் பிளேயர் தன்னுடைய
முன்மொழிவுகளில் ''ஒன்றிற்கும் பயனில்லாத பேரம்'' அடங்கியிருக்கவில்லை என்று வலியுறுத்திக் கூறினார்.
பிரிட்டன், அமெரிக்காவுடன் அதே மதிப்புகளை ஏற்றுக் கொள்ளும் ஆப்பிரிக்க தலைமையோடு ஒரு பங்களிப்பை
உருவாக்க முயன்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிளேயருக்கு புஷ் காட்டிய ஒரே சலுகை உலகின் ஏழை நாடுகளுக்கு ஒரு
திட்டவட்டமான விளக்கப்படாத கடன் நிவாரணத்திட்ட உதவி தருவதற்கான உறுதி மொழியும் மற்றும் பஞ்சத்தினால்
பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா மற்றும் எரிட்டிரியா நாடுகளுக்கு 674 மில்லியன் டாலர்கள் அவரச உதவி
அறிவிப்பும்தான். இந்தப் பணம், ஏற்கெனவே தரப்பட்டுள்ள உறுதிமொழிகளில் இருந்து கிடைத்தது. கிறிஸ்தவ உதவி
அமைப்பு இந்தத் தொகையை ''சமுத்திரத்திற்கு விடப்பட்ட ஒரு துளி'' என்று வர்ணித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டாலும், உலகின் ஏழை நாடுகள்
அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய பணக்கார நாடுகளுக்கு பல பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த
வேண்டியிருக்கும். கடைசியாக அவர்கள் காட்டுகின்ற அறக்கட்டளை முயற்சியை முன்னோக்காக நினைவுபடுத்தி
பார்த்தால் கூட, ஏற்கெனவே ஈராக் ஆக்கிரமிப்பிற்கும் போருக்கும் 200 பில்லியன் டாலர் அளவிற்கு
அமெரிக்காவும், பிரிட்டனும் நிதியளித்துள்ளன.
அப்படியிருந்தும் ஒத்து ஊதுகின்ற ஊடகங்கள் வளைகுடாவில் பிரிட்டனின் விசுவாசத்திற்கு
பதிலீடாக, டோனி பிளேயர் ஆப்பிரிக்க உதவியைப் பெறும் உன்னத முயற்சியை மேற்கொண்டிருப்பதாக, அவர் மீது
அனுதாபத்தை கிளப்பிவிட மிகப்பெருமளவிற்கு முயன்றுள்ளது. உண்மையிலேயே, பிளேயரும் புஷ்ஷும் நல்ல
போலீஸ்காரர் மற்றும் கெட்ட போலீஸ்காரர் வேடத்திற்கு இணையான அரசியல் நாடகத்தை நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். அடிப்படைகள் என்று வரும்போது இருவரும் ஒன்றாக இணைந்து கொள்கிறார்கள்.
கவனமாக உருவாக்கப்பட்ட பொது தொடர்பு முயற்சியில் ஒருமுறை அவர்களது
உண்மை ஊசலாடியது. அப்போது ஒரு நிருபர் 2002 ஜூலையில் டவுனிங் தெரு பிரதமர் அலுவலகக் குறிப்பு பற்றி
கேள்வி எழுப்பினார்.
புலனாய்வில், ''சதாமை இராணுவ நடவடிக்கை மூலம் பதவியிலிருந்து நீக்க வேண்டும்
என்ற கொள்கை உருவாக்கப்பட்டது'' என்ற குற்றச்சாட்டு ''உண்மையா'' என்று கேட்கப்பட்டபோது
பிளேயரும், புஷ்ஷும் கூட்டாக அதை மறுத்தனர். ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இல்லை என்ற
உண்மையை பிளேயர் தவிர்த்துவிட்டு, ஐ.நா கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்த ஹூசேன் மறுத்துவிட்டதால்
போர் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று வலியுறுத்திக் கூறினார். புஷ் வழக்கமான பாணியில் திரிக்கப்பட்ட
பதிலைத் தந்து, பிளேயரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவில் அந்தக் குறிப்பு பற்றி கசியவிட்டவர்களின்
நோக்கத்தில் குவிமையப்படுத்தினார்.
இந்த இரண்டு போர்க் குற்றவாளிகளும் தங்களை பூகோள கொடை வள்ளல்கள் என்று
காட்டிக்கொள்வதற்கு, தங்களை மறுவார்ப்பு செய்துகொண்ட முயற்சிகளை, சற்றுக் குறைவான அளவிற்கு ஒத்தூதாத
ஊடகங்கள் குறைவாகத்தான் இருக்கும். எது எப்படியிருந்தாலும், பிளேயர் அவருடைய வாஷிங்டன் மாஸ்டரை விட
சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், பிளேயரோ வேறு எந்த ஸ்தாபன அரசியல்வாதியோ தற்போது ஆப்பிரிக்க
நாடுகள் உள்ள நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதைக்கண்டு எவரும் ஏமாற மாட்டார்கள்.
இராணுவ வலிமையால் வென்றெடுத்து காலனித்துவ பாணியில் ஆக்கிரமிப்புச் செய்வது
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் மிகத் தெளிவான வெளிப்படை அடையாளச் சின்னமாகும். அடிப்படையிலேயே, ஒடுக்கப்பட்ட
நாடுகள் பெரிய வல்லரசுகளுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும் என்பது பொருளாதார உறவுகளில் வேர்விட்டதாகும்.
இந்த முன்மொழியப்பட்டுள்ள உதவி முயற்சிகள் உலகின் ஒடுக்கப்பட்ட மக்களை பெருமளவில் சுரண்டுவதற்கு எந்தவகையிலும்
சவாலாக அமையவில்லை. அது மீண்டும் அவற்றை உறுதிப்படுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கும், ஈராக்கிற்கும் பின்னர் சில படிப்பினைகளை பெறவேண்டிய
தருணம் இது. அடுத்த மாதம் ஸ்கொட்லாந்தில் நடைபெறுகின்ற
G-8 உச்சிமாநாட்டில்
மேற்கொள்ள வேண்டிய ஒரு பொது அணுகுமுறையை தயாரிப்பதற்காகத்தான் புஷ், பிளேயர் சந்திப்பின் நோக்கம்
என்று கூறப்படுகின்றது. அவர்களது தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அவர்கள் ஒரு ஐக்கிய முன்னணியை
அமைத்து தொடர்ந்தும் ஆப்பிரிக்க மக்களையும், வளங்களையும் சுரண்டுவதற்கு மேலும் உறுதி செய்து கொள்வார்கள்.
Top of page |