:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
24 years after PATCO strike
US: dispute over air traffic control
staffing
பற்கோ வேலை நிறுத்தத்தின் 24 ஆண்டுகளுக்கு பின்னர்
அமெரிக்கா: விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் நியமனம் தொடர்பான தகராறு
By Alan Whyte
16 June 2005
Back to screen version
ரொனால்ட் றேகனின் நிர்வாகம், வேலை நிறுத்தம் செய்து வந்த ஏறத்தாழ 10,000
விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை வேலை நீக்கம் செய்து, நாடு தழுவிய தொழிற்சங்கங்களை சிதைக்கும் நடவடிக்கைகளை
ஒரு அலை போன்று தொடக்கி வைத்து ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டிற்கு பின்னர், அமெரிக்காவின் கட்டுப்பாட்டு அறைகளில்
(Towers)
ஊழியர்களை நியமிப்பது சம்மந்தமாக எந்தப் பிரச்சனை தகராறுக்கு அடிப்படையாக அமைந்ததோ அதே பிரச்சனை அமெரிக்காவில்
மீண்டும் வெடித்திருக்கிறது.
மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம்
(Federal Aviation Administration-FAA)
ஜூன் 2-ல் ஒரு 55 பக்க அறிக்கையை வெளியிட்டது, அதில் முக்கிய நியூயோர்க் நகர விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு
அதிகாரிகள் மிதமிஞ்சிய மேலதிக நேரம் (Overtime)
ஊதியங்களை பெறுவதற்காக திட்டமிட்டு பணிப் பட்டியல்களை திருத்தி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளது. அந்தப்
பகுதியில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பிற்கு எந்த விதமான பிரச்சனையுமில்லை அல்லது கட்டுப்பாட்டு அதிகாரிகள்
கிடைப்பதில் எந்த விதமான தட்டுப்பாடும் இல்லையென்று அந்த ஆவணம் மேலும் வலியுறுத்துகிறது.
நியூயோர்க்கிலுள்ள வெஸ்ட்பரி
டேர்மினல் ராடார் அணுகும் கட்டுப்பாட்டு மையத்தில்
(Terminal Radar Approach Control center
-TRACON) பணியாற்றிக் கொண்டிருக்கும் 225 கட்டுப்பாட்டாளர்களையும்
60 நாட்களுக்கு மேலாக கண்காணிப்பதற்காக 35 பேர் கொண்ட உறுப்பினர் குழு அனுப்பப்பட்டது. அவர்கள் தங்களது
அறிக்கையில் முடிவாய் கூறியிருப்பது என்னவென்றால் அவசியமற்ற விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மேலதிக நேரத்திற்காக
மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA)
4 மில்லியன் டாலர்களை செலவிட்டிருக்கிறது, அது நியூ யோர்க் பகுதியில் செயல்பட்டு வரும் மூன்று பெரிய விமான நிலையங்களில்
வந்து சேரும் மற்றும் புறப்படும் விமானங்களுக்கு வழிகாட்டுகிறது.
திட்டமிட்டபடி கட்டாய விடுமுறையில் இருக்கின்ற போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு
பதிலாக மாற்று ஊழியர் இருந்தும் அவர்களுக்கு பதிலாக மேலதிக வேலை நேரம் கொடுக்கப்படுகிறது. விடுமுறையில்
இருக்கும் ஊழியர் பணியாற்ற வருகிறார், அதன் மூலம் அந்த அமைப்பு இரண்டு ஊழியர்களுக்கு மேலதிக வேலை நேரம்
கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்ற சம்பவங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிர்வாகம் இதே
புகாரை நோய்வாய்ப்படும் ஊழியர்களுக்கு எதிராகவும் கூறியுள்ளது, மாற்று ஊழியர்கள் பணிக்கு வந்த பின்னரும்
நோய்வாய்ப்பட்டவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள், அதன் மூலம் இரண்டு ஊழியர்களுக்கு நிர்வாகம் மேலதிக வேலை
நேரம் கொடுக்க வேண்டி வருகிறது.
தொழிற்சங்கத்தின் உள்ளூர் தலைவரான
Dean Iacopelli,
நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் விடுமுறையில் சென்ற விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்கள்
பணியில் சேர்ந்துகொள்வதற்கு ஒப்பந்தம் வகை செய்கிறது மற்றும் தங்களது நோய் சிகிச்சை காலத்தை எந்த ஊழியரும்
முறைகேடாக பயன்படுத்திக்கொண்டதாக குற்றம் சாட்டப்படவில்லை, என்றாலும், அத்தகைய செலவுக்கணக்குகளை
தாக்கல் செய்வதற்கு ஒப்பந்தம் வகை செய்கிறது என்று அவர் கூறினார்.
நியூயோர்க் டேர்மினல் ராடார் அணுகும் கட்டுப்பாட்டு மையத்தில்
(TRACON) உள்ள
மேலாளர்களை ஊழியர்கள் மிரட்டி வருவதாகவும், கண்ணியக்குறைவாக நடத்துவதாகவும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மேலும் கட்டுப்பாட்டு அறையை மிகவும் தீங்காக கட்டுப்பாட்டாளர்கள் பயன்படுத்தினார்கள் என்று மேலும் அது வலியுறுத்தி
கூறியது.
அந்த அமைப்பிற்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் ஊழியர்கள் நியமன அளவுகள் மேலதிக
வேலை நேரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நிலவிவரும் இடைவிடாத தகராறுகளின் கடைசி சுற்றுதான் அந்த
அறிக்கை. கட்டுப்பாட்டு ஊழியர்கள் அந்த அறையில் மிதமிஞ்சிய ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்த அறிக்கை
வலியுறுத்தி கூறுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில், மேலாளர்கள் கூடுதல் நேரத்தை கட்டுப்படுத்த முயன்றபோது,
கட்டுப்பாட்டாளர்கள்ள் அனாமதேய அறிவிப்பில் விமானங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் பறக்கும் வகையில்
''செயல்முறை தவறுகள்'' நடப்பதாக குற்றம் சாட்டின.
ஒரு கட்டுப்பாட்டாளர் மார்ச் மாதம் கட்டுப்பாட்டு அறையில் வாக்குவாதத்தில்
ஈடுபட்டதாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார் அப்போது அவர் ஊழியர் பற்றாக்குறை பற்றி புகார் கூறிக்கொண்டிருந்தார்.
ஒரு மேற்பார்வையாளரை பகிரங்கமாக ஊழியர் பற்றாக்குறை பற்றி விமர்சித்ததன் மூலம், விமானப் பயணப்
பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கியதாக அந்த அறிக்கை
Iacopelli-யையே
கண்டிக்கிறது.
அங்கு ஊழியர் நியமனப் பிரச்சனை எதுவுமில்லை என்று அந்த அறிக்கை நிலைநாட்டி
வந்தாலும், ஊழியர்கள் எண்ணிக்கை சென்ற கோடைகாலத்தில் 240ஆக இருந்ததைவிட இப்போது 210 குறைந்துவிட்டது.
அந்த அமைப்பும், தொழிற்சங்கமும் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்பாக செயற்படுவதற்கு 270
கட்டுப்பாட்டாளர்கள் தேவை என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இந்த அறிக்கை வெளியிடப்பட்டதுடன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்
சங்கத்தலைவரான (NATCA)
ஜோன் கார் பத்திரிகை மாநாட்டில் அந்த அமைப்பின் ஊழியர் நியமன மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு
கட்டுப்பாட்டாளர்களை பலிகடாக்குவதற்கு முயற்சி நடந்து வருவதாகக் கண்டித்தார்.
சென்ற ஆண்டோடு ஒப்புநோக்கும்போது நியூயோர்க் பகுதியில் இந்த ஆண்டு 5 சதவீதம்
விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையில் 76
சதவீதத்தோடுதான்
டேர்மினல் ராடார் அணுகும் கட்டுப்பாட்டு மையம்
(TRACON) இயங்கி
வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். நியூ யோர்க்
TRACON-ல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்
சட்டபூர்வமாக வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றுகின்றனர். 52 வாரங்களில் கிடைக்கின்ற 51 மணி நேர மேலதிக நேர
வேலை செய்ய ஊழியர்கள் பணிக்கப்படுகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
FAA
ஊழியர்களை குறைவாக நியமித்துவிட்டு அவர்களிடமிருந்து வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை வாங்கிவிட்டு அதற்கு பின்னர்
கூடுதல் நேரம் பற்றி புகார் கூறுவது முற்றிலும் சாதுர்யமாக உள்ளது. அந்தப் பகுதியில் செயல்முறைப் பிழைகள்
அதிகரித்திருக்கின்றன, மற்றும் FAA
நியூயோர்க் பகுதியில் விமானப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் பதிவு செய்த 147 நடவடிக்கைப் பிழைகள் பாதுகாப்பிற்கு காத்திரமான
அச்சுறுத்தலை முன்வைக்காதவை என்ற விசாரணை அதிகாரிகளின் கூற்றுடன் காரும் கூட மறுத்தார். பாதுகாப்பு ஆபத்து
அவசியமானதாக இல்லாமல் எப்படி ஏதோ சிலவற்றை ஒரு செயல்முறைப் பிழை என்று அழைக்கப்பட முடியும் என்று அவர்
குறிப்பிட்டார்.
கட்டுப்பாட்டாளர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமும், 39 நிமிடங்களும்தான் பணியாற்றுகின்றனர்,
இது எந்த கட்டுப்பாட்டு அறையிலும் இல்லாத அளவிற்கு மிகக்குறைந்த பணிக் காலங்களில் ஒன்று என்று குறிப்பிட்டிருப்பதை
அவர் புறக்கணித்தார். அந்த அமைப்பு வெளியிட்டுள்ள உற்பத்தித் திறன் பற்றிய புள்ளி விவரங்களை ''பயனற்றவை''
என்று குறிப்பிட்டார். மற்றும் நியூயோர்க் டேர்மினல் ராடார் அணுகும் கட்டுப்பாட்டு மையம்
(TRACON) தனித்தன்மை
கொண்டது, அது மூன்று பெரிய விமான நிலையங்களுக்காக பணியாற்றுகிறது என்று விளக்கினார்----
Kennedy, La Guardia and Newark Liberty
International, அதேபோல் அந்த பிராந்தியத்தை சேர்ந்த பல
சிறிய விமான நிலையங்களுக்காகவும் பணியாற்றுகிறது.
அமெரிக்கா முழுவதிலும் சுமார் 15,000 விமானக் கட்டுப்பாட்டாளர்களும், பொறியாளர்களும்,
இதர விமான நிறுவன தொழிலாளர்களும் NATCA-வில்
இடம்பெற்றிருக்கின்றனர். தொழிற்சங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட தேசிய ஒப்பந்தம் இந்த ஆகஸ்ட் மாதம் காலாவதி
ஆகிறது. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை எதிர்கொள்வதற்கு
FAA-இடம் நிதியில்லை
என்று ஏற்கனவே அது அறிவித்துவிட்டது. ஜனாதிபதி புஷ்ஷும், நாடாளுமன்றமும் அந்த அமைப்பின் பட்ஜெட்டை இந்த ஆண்டு
200 மில்லியன் டாலர் வரை வெட்டிவிட்டன.
போதுமான அளவிற்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டாலும்
மிகப்பெரும்பாலான சுதந்திர பார்வையாளர்கள் புதிய ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு அவசர நெருக்கடி
ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இதற்குக் காரணம் நாடு முழுவதிலும் பணியாற்றி வருகின்ற 15,000 விமானப்
போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களில் ஏறத்தாழ முக்கால்வாசிப்பேர் அடுத்த ஒன்பது ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு
பெறவிருக்கின்றனர்.
1981-ல் பணி தேர்ச்சி பெற்ற விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு
(Professional Air Traffic Controllers
Organization -PATCO) அழைப்பு விடுத்த வேலை நிறுத்தத்தில்
கலந்துகொண்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களில் 11,000-ற்கு மேற்பட்ட புதிதாக நியமிக்கப்பட்ட
பெரும்பாலானவர்களை றேகன்
பதவியிலிருந்து நீக்கினார். 25 ஆண்டுகள் சேவைக்கு பின்னர் இவ்வூழியர்கள் ஓய்வு
பெற முடியும். புதிய ஊழியர்கள் பெருமளவில் நியமிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டால் தேசிய அளவில் விமானப்
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறை ஒரு பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்லும்.
பணி தேர்ச்சி பெற்ற விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கும்
(PATCO) மத்திய
விமானப் போக்குவரத்து நிர்வாகத்திற்கும் (FAA)
இடையில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கசப்பான தகராறை
எதிரொலிக்கிற வகையில் இப்போது சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதுடன் புஷ் நிர்வாகத்தை கடுமையாக கண்டிக்கின்ற
வகையில் அது புதிய ஊழியர்கள் நியமனத்தை ஏற்றுக்கொள்ளாததுடன் நிதி ஒதுக்கீட்டையும் வெட்டிவிட்டது. பயங்கரவாத
தாக்குதல்கள் பற்றிய தொடர்ச்சியான எச்சரிக்கையின் பின்னணியில், விமான போக்குவரத்து பாதுகாப்பிற்கான ஒரு
உண்மைக் கொள்கை மோசமாக அலட்சியப்படுத்தப்படுகிறது. |