World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The dead end of national reformism

Germany: Lafontaine and his "Party of the Left''

தேசிய சீர்திருத்தவாதத்தின் இறுதி முடிவு

ஜேர்மனி: லாபொன்டைனும் அவரது ``இடதுசாரி கட்சியும்``

By Ulrich Rippert
13 June 2005

Back to screen version

ஜேர்மனியில் ''இடதுசாரி கட்சி'' (Links partei) என்றழைக்கப்படும் கட்சியை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் ஒரு புதிய உந்துதலை பெற்றுள்ளன. முன்னாள் மத்திய கூட்டாட்சி அமைச்சரும், மாநில பிரதமருமான ஒஸ்கார் லாபொன்டைன் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து (SPD) பதவி விலகிவிட்டார், மற்றும் ஜனநாயக சோசலிசக் கட்சியின் (PDS) முன்னாள் தலைவரான Gregor Gysi வெளியிட்டுள்ள அறிவிப்பில் தான் நடைபெறவிருக்கின்ற கூட்டாட்சி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளராக போட்டியிடுவதற்கு அறிவித்துள்ளார்.

பெரும்பாலும் சமூக ஜனநாயகக் கட்சியில் விரக்தியடைந்தவர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் உள்ளடங்கிய ``தேர்தல் மாற்றீடு----வேலை மற்றும் சமூக நீதி`` (WASG) குழுவிற்கும், முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச ஆளும் கட்சியின் வாரிசான ஜனநாயக சோசலிசக் கட்சிக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டுள்ள ஐக்கியம் பற்றிய கலைந்துரையாடலுகளுக்கிடையே இந்த நகர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பொதுவானதொரு பெயர் பற்றியும் ஒரு கூட்டு அரசியல் அரங்கை உருவாக்குவது தொடர்பாகவும், இரண்டு அமைப்புக்களும் இன்னமும் வாதிட்டுக் கொண்டிருக்கின்றன, ஆனால் ஒன்றிணைப்பை நோக்கி நெருக்தித் தள்ளுகின்ற பலம்வாய்ந்த சக்திகள் இரண்டு அமைப்புகளுக்குள்ளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து லாபொன்டைன் ராஜினாமா செய்திருப்பது ஜனநாயக சோசலிசக் கட்சி மற்றும் WASG அடிப்படையில் ஒரு புதிய அரசியல் கருவியை உருவாக்குவதற்கான முயற்சியை ஊக்குவிப்பது என்று பரவலாக கருதப்படுவதுடன் மற்றும் அத்தகையதொரு ''இடதுசாரிக் கட்சிக்கு'' பெருமளவிற்கு சட்டபூர்வமான தன்மையையும், கெளரவமும் வழங்கப்படுகின்றது.

ஜனநாயக சோசலிசக் கட்சிக்கும் WASG இற்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளில் ஒரு பிரதான சிக்கல் புள்ளி என்னவென்றால் கிழக்கு ஜேர்மனியின் முன்னாள் மாநில ஆட்சி தனது கட்சி அமைப்பை கலைக்க தயக்கம் காட்டி வருவதுதான். ஜனநாயக சோசலிசக் கட்சி 1989ல் பேர்லின் தடுப்புச் சுவர் சிதைந்த பின்னர், ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி தலைவர்களால் (SED) உருவாக்கப்பட்டது, அந்தக் கட்சி ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் 1946 ஏப்ரலில் ஸ்தாபிக்கப்பட்டது. முன்னாள் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் (GDR--- கிழக்கு ஜேர்மனிக்கு அதிகாரபூர்வமாக சூட்டப்பட்டுள்ள பெயர்) ஜனநாயக சோசலிசக் கட்சி இன்னமும் உள்ளூராட்சி அமைப்புக்கள் மட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அரசியல் பிரதிநிதிகளை கொண்டிருக்கிறது. ஜேர்மனியின் கிழக்கு மாநிலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் அது நிலைநாட்டி வருகிறது, மெக்லன்பேர்க்-மேற்கு பொமேரானியா மாநிலத்தில் அமைச்சர்கள் உள்ளனர் மற்றும் பேர்லினில் மாநில அரசாங்கத்திலும் உள்ளது.

பேர்லின் தடுப்புச்சுவர் வீழ்ச்சிக்கு பின்னர் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், ஓராண்டிற்கு பின்னர் ஜேர்மனி ஜனநாயகக் குடியரசு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து கட்சியை கலைத்து விடுவதை ஜனநாயக சோசலிசக் கட்சி தவிர்க்க முயன்றது. இதற்கு ஒரு பிரதான காரணம் என்னவென்றால் பழைய ஜேர்மன் சோசலிஸ்ட் ஐக்கியக் கட்சியின் கணிசமான சொத்துக்களில் பெரும்பகுதியை புதிய கட்சி தன் வசம் வைத்திருக்கிறது.

ஒப்புநோக்கும் போது, WASG ஒரு ஏழை மணமகள்தான். சில தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் விரக்தியுற்ற சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தவிர இந்த அரசியல் திருமணத்திற்கு அது ஒன்றையும் கொண்டு வரவில்லை. அண்மையில் நடைபெற்ற மேற்கு மாகாணமான வடக்கு ரைன்-வெஸ்ட் பாலியாவில் நடைபெற்ற தேர்தலில் WASG முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்டது, அது 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

ஜேர்மன் தேர்தல் சட்டங்களின்படி இரண்டு கட்சிகளுக்கிடையே சாதாரண கூட்டணி சாத்தியமில்லை. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் அல்லது தனிப்பட்ட வேட்பாளர்கள்தான் போட்டியிட அவை அனுமதிக்கின்றன. இந்த இளவேனிற்கால நாடாளுமன்ற வாக்குப்பதிவிற்கு முன்னர் கிடைக்கின்ற குறுகிய கால இடைவெளியில் இரண்டு கட்சிகளுமே மத்திய அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அவர்களது மேற்பார்வையில் கூட்டாக வேட்பாளர்களை நிறுத்த முயன்று வருகின்றன. அதே நேரத்தில் இரண்டு அமைப்புக்களும் தமது சுயாதீனத்தை நிலைநாட்டி வருகின்றன.

பதவிகள் மற்றும் தேர்தலுக்கான நிதிகள் தொடர்பாக நடைபெற்று வருகின்ற தகராறுகளுக்கு மேலாக எப்படி அத்தகையதொரு கூட்டணி ஜேர்மனியின் 5 சதவீத தேர்தல் விதியை சமாளிக்கப் போகிறது (ஒரு தேர்தலில் நடைபெறுகிற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளில் 5 சதவீத வாக்குகளை பெற தவறிவிடும் கட்சிகளுக்கு ஜேர்மனி அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தில் இடமளிக்க மறுக்கிறது.)----என்பதுதான் ஜேர்மன் ஊடகங்களில் விமர்சனங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது----இந்த அரசியல் திட்டத்தின் வேலைத்திட்ட அடிப்படை என்ன. இங்கே லாபொன்டைன் தெளிவாக தனது தொனியை உருவாக்கியிருக்கிறார்.

பூகோளமயமாக்கல்---- ஒரு சதி?

சமூக சமரச அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டணி பங்குதாரரான பசுமைக்கட்சிக்கு ஒரு மாற்றீட்டுக்கொள்கையை உருவாக்கிவிட இயலும் என்பது லாபொன்டைனின் மைய தத்துவமாகும், ஆனால் அது தற்போது உள்ள முதலாளித்துவ சமூக ஒழுங்கில் தான் நடக்கும் என்று அவர் கூறுகிறார். சர்வதேச முதலாளித்துவ சந்தைகளின் வலிமையால் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மிக தீவிரமான மாற்றங்களை குறைத்து மதிப்பிடுகிறார் மற்றும் பொருளாதார பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிபோக்கை அகநிலைவாத வார்த்தைகளில் பார்க்கிறார். அது, நவீன-தாராளவாதிகள் தங்களது சொந்த நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கற்பனையாக நிலைநாட்டியுள்ள ஒரு சதி என்று அவர் கூறுகிறார்.

''அனைவருக்கும் அரசியல்----ஒரு நியாயமான சமுதாயத்திற்கு ஒரு தத்துவார்த்த போராட்டம்'' என்ற தலைப்பில் லாபொன்டைன் கடைசியாக வெளியிட்டுள்ள நூலில் ஐந்தாவது அத்தியாயத்திற்கு தலைப்பு: ''பூகோளமயமாக்கல் ஒரு அழுகிவிட்ட சதி.'' உலகின் எந்த நாட்டிலும், ''நவீன தாராளவாதத்தின் தவறான போதனைகள், ஜேர்மனி அளவிற்கு நிலையாகவும், தீவிரமாகவும் கொண்டு செலுத்தப்படவில்லை. அங்கு பூகோளமயமாக்கலின் கட்டளைகள் என்று கருதப்படுபவை'' ஒரு சாக்குப்போக்காக மட்டுமே சேவை செய்கிறது.

ஜேர்மனியில் மட்டுமல்ல ஆனால் உலகின் எல்லா இடத்திலும் நவீன-தாராளவாதிகள் முன்னெடுக்கின்ற வாதங்களை இந்த நேரத்தில் நாம் சற்று ஒதுக்கித் தள்ளிவிட்டு லாபொன்டைன் பூகோளமயமாக்கலை கடுமையாக பரிசோதிக்க மறுப்பதிலும், அதன் சமூக விளைவுகளையும் கவனம் செலுத்துவோம். அவர் திட்டவட்டமாகவே இன்றைய தினம் ''மற்றொரு கொள்கையை'' கடைபிடிக்க முடிவது சாத்தியம் என்கிறார் மற்றும் அவர் 1970களின் சமூக சீர்திருத்தங்களை உருவாக்கி நிலைநாட்ட முடியும் என்கிறார்.

அவர் எழுதுகிறார்: "சமூகநலன்புரி அரசு அடையமுடியாகாததாக கூறப்படுவது நமது ஐரோப்பிய பக்கத்து நாடுகளுக்கு இணையான அளவிற்கு பொதுத்துறை செலவினங்களும், அதே அளவிற்கு வரி விகிதங்களும் அமைந்துவிடுமானல் அது அடையக்கூடியதாக ஆகிவிடும்.`` எந்த அளவிற்கு விரிவிதிப்பு மற்றும் பொதுத்துறை செலவினங்கள் அமைய வேண்டும் என்பது குறித்து ஜேர்மனியில் கடுமையான தகராறாக தற்போது நிலவினாலும் முதலாளிகளது நலனைக் கருதி சமூக ஜனநாயகக் கட்சி - பசுமை கட்சி அரசாங்கம் வரி வெட்டுக்களை செய்திருக்கிறது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் பிரான்சு, ஹாலந்து, பெல்ஜியம், இத்தாலி அல்லது எந்த இதர ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் நிலவரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வித்தியாசமாக உள்ளது என்று கூறுவது வெறும் வாய்வீச்சுத்தான்.

உண்மையிலேயே, ஐரோப்பாவிலும் உலகரீதியான போக்காக நடைபெற்றுக் கொண்டுள்ள மாற்றங்கள் என்ன? சமூக வாழ்க்கைத்தரம் ஒவ்வொரு நாட்டிலும் கடுமையாக வெட்டப்பட்டு வருகிறது, அது உற்பத்தியில் பூகோளமயமாக்கல் ஒரு புறநிலையான நிகழ்ச்சிபோக்கு என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, அதற்கு எதிராக 1970களில் கொண்டுவரப்பட்ட சமூக சீர்திருத்த தேசிய வேலைதிட்டங்கள் வல்லமையற்றவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

சமூக ஜனநாயகக் கட்சி, அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் மற்றும் பசுமை கட்சி தலைவர் ஜோஸ்கா பிஷர் ஆகியோர் அமுல்படுத்திய எந்த ஒரு தனி சமூக வெட்டும் ''எந்தவொரு மாற்றீடும் இல்லாதது அல்ல'' அல்லது ''பூகோளமயமாக்கலின் முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகள் அல்ல'' என்று லாபொன்டைன் எழுதுகிறார். ''இதர ஐரோப்பிய அரசுகளைப் போன்று, உற்பத்தித் திறனுக்கு ஏற்ப ஊதியங்கள் அதன் மூலம் ஓய்வு ஊதியங்கள் மற்றும் வேலையில்லாதிருப்போருக்கான பயன்கள் ஆகியவற்றை வளரச் செய்ய முடியும்.'

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் ஊதியங்கள் ஓய்வூதியங்கள் அல்லது வேலையில்லாதிருப்போருக்கான பயன்கள் அண்மை ஆண்டுகளில் உயராது இருப்பது தற்செயலாக நடந்துவிட்ட ஒன்று அல்லது அகநிலைரீதியான கொள்கைளால் உந்தப்பட்டு அவற்றால் ஏற்பட்ட விளைவு அல்ல. லாபொன்டைனின் கூற்று முட்டாள்தனமானது. உண்மையிலேயே, உலகம் முழுவதிலும் ஊதியங்களை குறைப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தை வெட்டுவது என்ற போக்கு நிலவுகிறது. எடுத்துக்காட்டாக பிரான்சில் தற்போது ஆண்டிற்கு 3 சதவீத அளவிற்கு உற்பத்தித் திறனும் உயர்ந்துகொண்டிருக்கிறது, ஆனால் ஆண்டிற்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஊதியம் உயருகிறது.

''ஓப்பல், கார்ஸ்ராட், சிமென்ஸ் மற்றும் மெர்சிடஸ் ஆகியவற்றில் 2004ல் நடைபெற்ற மாற்றங்கள் தேசிய கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை என்று கூறப்பட்ட பூகோளமயமாக்கலின் கட்டளைகளால் உருவானவையா?'' என்று லாபொன்டைன் கேட்கிறார். மற்றும் நிர்வாகத்தின் தவறுகளை பதில்களாக தருகிறார். மற்றும் அவை அவற்றின் ''கொள்கை வழி தவறான முன்மாதிரிகள்'' என்கிறார். இதற்கு ஒரு எதிர்வாதமாக, அவர் பிரெஞ்சுக் கார் நிறுவனங்களான ரெனோல்ட், பேஜோ மற்றும் சித்திரோன் ஆகியவற்றை வெற்றிகரமான நிர்வாகக் கொள்கைக்கு உதாரணம் என்று சுட்டிக்காட்டுகிறார், அவை பத்தாயிரக்கணக்கான புதிய தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியுள்ளதாக கூறுகின்றார்.

அண்மையில் பிரெஞ்சு புதிய கார்களை ஒப்புநோக்கும்போது, அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன, அவை தனிப்பட்ட தொழில்கள் என்று பார்க்கும்போது நிச்சயமாக குறிப்பிட்டத்தக்கவை, ஆனால் கார் தொழில் என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. ஒரு சர்வதேச நிறுவனத்தின் வெற்றி வழக்கமாக மற்றொரு சர்வதேச நிறுவனத்தின் தோல்வியோடு சம்மந்தப்பட்டிருக்கிறது-----எடுத்துக்காட்டாக, Fiat ஐயும் GM ஐயும் எடுத்துக்கொள்வோம்.

பூகோளமயமாக்கலின் தாக்கத்திற்கு ஒரு முன் உதாரண சித்திரமாக விளங்குவது கார்த் தொழில். அங்கே என்ன நடக்கிறதென்றால் ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன மற்றும் ஊதியங்களும் உற்பத்திச் செலவினங்களும் குறைவாக இருக்கின்ற பிறநாடுகளுக்கு உற்பத்தி மாற்றப்படுகிறது மற்றும் பிரான்சில் இது மாறிவிடவில்லை. அண்மை ஆண்டுகளில் அங்கு குறுகிய கால மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். உண்மையிலேயே விற்பனைக்கான பூகோள சங்கிலித்தொடர் போன்ற அமைப்புக்கள் பெருகிக்கொண்டு வருவதால் அவற்றின் மூலம் ஊதியங்களை குறைப்பதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கின்றன.

அது எப்படியிருந்தாலும் லாபொன்டைன் தருகின்ற புள்ளி விவரங்கள் அடிக்கடி மோசடியானவை. 1999 இற்கும் 2004 இற்குமிடையில் ரெனோல்ட் 25,00 புதிய ஊழியர்களை வேலையில் அமர்த்தியது. உண்மை அதே அளவிற்கு வேலையிழப்பு ஏற்பட்டது. ஆக புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2001 இற்கும் 2003 இற்கும் இடைப்பட்ட காலத்தில் 1,000 வரை குறைந்திருக்கிறது. மேலும் ரெனோல்ட் ரஷ்யாவில், ஸ்லோவேனியாவில் மற்றும் துருக்கியில் புதிய தொழிற்சாலைகளை அமைக்கப்போகிறது, அங்கெல்லாம் உற்பத்தியை மாற்றி தனது பிரெஞ்சு தொழிற்சாலைகளில் அதிகமான வேலைகளை வெட்டயிருக்கிறது.

உலகிலுள்ள அத்தனை தொழிலாளர்களும், பெருநிறுவனங்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தை கையாளுவதையும், ஒரு இடத்திலுள்ள மற்றும் ஒரு நாட்டிலுள்ள தொழிலாளர்களை மற்றொரு இடம் அல்லது நாட்டிலுள்ள தொழிலாளர்களோடு மோதவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பூகோளமயமாக்கலின் காரணமாக பதவி விலகும் நிர்வாகிகளுக்கு மில்லியன் கணக்கான யூரோக்களை இழப்பீடு தரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கான விடுமுறை சலுகைகளை குறைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தவில்லை. ''அமெரிக்காவில் இருப்பதைப் போன்று பெருநிறுவன கலாச்சார மோசடி நடவடிக்கையாக அமையும் இடங்களில்கூட எவரும் அவ்வாறு கட்டாயப்படுத்தவில்லை'' என்று அவர் அறிவிக்கிறார்.

என்றாலும் ஏன் சர்வதேச நிதிச் சந்தைகள் ''அமெரிக்க நிலவரங்களை'' ஐரோப்பாவில் புகுத்துகின்றன. ஏன் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் அமெரிக்க முன்மாதிரியை பின்பற்றுகின்றன. மற்றும் ஏன் எல்லா சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இந்த நடைமுறைய எதிர்க்கின்ற வல்லமை இல்லாதவர்களாக நிரூபிக்கப்பட்டுவிட்டனர் என்பதை லாபொன்டைன் கூறவில்லை.

பூகோளமயமாக்கல் ஒரு சதி அதை நவீன தாராளவாதிகள் முன்னெடுத்து வைக்கிறார்கள் என்று தள்ளிவிடுவதற்கு பதிலாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்பட்டுவிட்ட பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் மற்றம் அந்த மாற்றங்கள் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வெகுஜனங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு நாளும் புதிய பேரழிவுகள் ஏற்படுகின்றன, அவை தொழிற்சாலைகள் மூடப்படுவது, வேலை வாய்ப்புக்கள் வெட்டு அல்லது சமூக நலன்களில் வெட்டு என்ற அளவிற்கு மட்டுமே நடைபெறவில்லை. ஆனால் பட்டினிகளாகவும் இன மோதல்களாகவும், வர்த்தக போட்டிகளாகவும், போர்களாகவும் உருவாகின்றன. இவை அத்தனையும் பெரிய வல்லரசுகளின் பொருளாதார செல்வாக்கிற்காகவும், புவியியல் அரசியல் ஆதிக்கத்திற்காகவும் தோன்றுகின்றன.

மேலும், பெரும் அளவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதையும் சூழ்ந்துள்ளது. அமெரிக்கா கடனாளியாகிக் கொண்டிருப்பது அதிகரித்து வருகிறது மற்றும் ஊக பேரங்கள் நிரந்தரமாக பெருகிவருகின்றன, இந்த சூழ்நிலையில் பல நிபுணர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா என்பதைப் பற்றி இப்போது பேசுவதில்லை, ஆனால் எப்போது அது நிகழும் மற்றும் சர்வதேச நிதி நிர்வாக முறை எந்த வடிவத்தில் வீழ்ச்சியடையும் என்பதுதான்.

பூகோளமயமாக்கல் காரணங்களையும், அதன் விளைவுகளையும் விரிவாக விளக்குவது இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் சில புள்ளி விவரங்கள் உலகளவில் வளர்ந்துள்ள சமூக முரண்பாடுகளை தெளிவுபடுத்துகின்றன. பூகோள முதலாளித்துவ சந்தைகளின் மேலாதிக்கத்துடன் வர்க்கங்களிடையே ஏற்பட்டுள்ள துருவ முனைப்பு அளவை பூகோள அளவில் தெளிவுபடுத்துகிறது.

இன்றைய தினம் 475 கோடீஸ்வரர்களின் செல்வம் உலகின் 50 சதவீததிற்கு மேற்பட்ட மக்களது மொத்த வருமானத்திற்கு சமமாக உள்ளது. இப்படி செல்வம் குவிந்துகொண்டே வருவது தொடர்ந்து அதிகரித் வருகிறது. அமெரிக்காவில் மட்டுமே 1982இல் 13 கோடீஸ்வரர்கள் இருந்தனர். 1996இல் அவர்களது எண்ணிக்கை 149 ஆக வளர்ந்துவிட்டது, தொடர்ந்து அதற்குபின்னர் வளர்ந்துகொண்டு வருகிறது.

புத்தாயிரம் ஆண்டு தொடக்கத்தின் போது ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபை ஒரு உலக மேம்பாட்டு அறிக்கையை தந்தது. அதில் உலகின் மூன்று மிகப்பெரும் பணக்காரர்களுக்கு சொந்தமான செல்வம் 48 பரம ஏழை நாடுகளின் மொத்த உள்ளூர் உற்பத்தியை விட அதிகமாக இருந்தன. 15 மிகப்பெரும் பணக்கார தனிமனிதர்களது சொத்து மதிப்பு அனைத்து துணை சஹாரா ஆபிரிக்க நாடுகளின் மொத்த மொத்த உள்ளூர் உற்பத்தியைவிட அதிகமாக இருந்தது. தெற்கு ஆசியாவில் மொத்த உள்ளூர் உற்பத்தியைவிட 32 மிகப்பெரும் பணக்காரர்களின் செல்வம் அதிகமாக இருந்தது. 84 மிகப்பெரும் பணக்கார தனிமனிதர்களின் சொத்துடைமை 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட சீனாவின் மொத்த உள்ளூர் உற்பத்தியைவிட அதிகமாகும்.

இப்படி குவியலாக சேர்ந்துவரும் முதலீடுகளின் ஆதிக்கம் வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமே மேலாதிக்கம் செலுத்துவதாக இல்லை. வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள 4.4 பில்லியன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். மற்றும் மூன்றில் ஒரு பகுதியினருக்கு தூய்மையான குடிதண்ணீர் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில்கூட சர்வதேச பெரும் முதலீட்டாளர்களுக்கு அதிக இலாபமும், செயல்படும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போதுள்ள அனைத்து சமூக உதவித் திட்டங்களும், சலுகைகளும் வெட்டப்படுகின்றன. சமூக காப்புறுதி மற்றும் சுகாதார சேவைகளில் இருந்து போக்குவரத்து சேவைகள் வரை இத்தகைய வெட்டுக்கள் கொண்டுவரப்படுகின்றன.

இந்த நடைமுறைகளை முதலாளித்துவ சொத்துடைமை வடிவங்களை எதிர்க்காமல் நடைமுறைப்படுத்த இயலும் என்று லாபொன்டைன் கூறுவது முட்டாள்தனமானது.

தேசியவாதக் கருத்துக்கள்

லாபொன்டைனின் வாதங்கள் தவிர்க்க முடியாத அளவிற்கு ஒரு தேசியவாதத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. ஜேர்மனி மட்டுமே அதைச் செய்ய முயலுவது பெரிய ஆபத்துக்கள் உள்ளன என்பதை அவர் உணர்ந்திருப்பதால் பிரான்சு - ஜேர்மனி அடங்கிய கூட்டிற்கு அவர் வலியுறுத்துகிறார். இந்த தலைப்பில் அவரது நூலில் அவர் பேர்லினுக்கும், பாரிசிற்கும் இடையில் நிலவுகின்ற ஒத்துழைப்பை பாராட்டுகிறார் மற்றும் இந்த இரண்டு நவீன தொழிற்துறை நாடுகளும் மொத்தம் 142 மில்லியன் மக்களை கொண்டவை. இன்றைய சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்க சமநிலையில் பெரும் வலுவை பெறக்கூடியவை என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஆனால் ஜேர்மனியும் பிரான்சும் முதலாளித்துவ நாடுகள் மற்றும் இரண்டுமே ஏகாதிபத்திய குறிக்கோள்களை பின்பற்றுகின்றன. இந்த ஒரு உண்மையை மறைப்பதற்கு லாபொன்டைன் கடுமையாக முயலுகிறார். அவர் எழுதுகிறார். ''அத்தகையதொரு கூட்டு, ஒரு இராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, அது ஒரு கலாச்சாரீதியான செயலாகவும் அமையும். ஏனெனில் இரண்டு நாடுகளிலும் கைவிட முடியாத ஒரு வளமான தத்துவ, கலை மற்றும் இலக்கிய பாரம்பரியம் நிலவுகிறது.''

அதற்கு பின்னர் அவர் ''ஆங்கில கலைச்சொற்கள் ஐரோப்பிய ஒன்றிய மொழிகளை கெடுத்து வருகிறது'' ஆங்கிலம் ஒரு ஐரோப்பிய ஒன்றிய மொழியல்ல என்றும் அமெரிக்க மற்றும் ஆங்கில நூலாசிரியர்கள் உலக இலக்கியத்திற்கு எந்த கணிசமான பங்களிப்பை செய்யவில்லை என்பது போலவும் அவர் கூறுகிறார்.

சமூகநலன்புரி அரசை தற்காத்து நிற்கிறோம் என்ற பெயரால் தேசியவாத உணர்வுகளை கிளப்பி விடுகின்ற இதுபோன்ற முயற்சிகள் அனைத்தையும் தொழிலாள வர்க்கம் ஏற்க மறுத்து நிராகரிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் தேசியவாத அல்லது ஐரோப்பிய ஒன்றிய பேரினவாத அணுகுமுறைகளை எதிர்த்து நிற்கவேண்டும் மற்றும் அதற்கு மாறாக பெருநிறுவனங்கள் வங்கிகளும் மேற்கொண்டுள்ள தங்களது சொந்த பூகோள தாக்குதல் மூலோபாயத்திற்கு எதிராக சவால்விட்டு எழுந்து நிற்க வேண்டும்.

அத்தகையதொரு மாற்றத்தின் தொடக்கங்கள் பிரான்சிலும், ஹாலந்திலும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக வலுவான அணிதிரட்டல் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு ஒரு நனவுபூர்வ மிக்க சோசலிச முன்னோக்கு தேவை அது உழைக்கும் மக்களது மக்களில் பெரும்பாலாக உள்ளவர்களது தேவைகளையும், நலன்களையும் பெருநிறுவனங்களின் இலாபநோக்கு முயற்சிக்கு மேலாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

அத்தகையதொரு முன்னோக்கை ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டத்தை பிரான்சு பொது வாக்கெடுப்பில் தள்ளுபடி செய்துவிடவேண்டும் என்று வாதாடுகின்ற அனைவருக்கும் தெரிந்த ஒரே ஜேர்மன் அரசியல்வாதியான லாபொன்டைன் திட்டவட்டமாக தள்ளுபடி செய்கிறார். புரட்சிகர போக்குகள் வளர்வதை தடுப்பதுான் தனது பணியாக கொண்டுள்ளார்.

1999 வரை சமூக ஜனநாயகக் கட்சித் தலைவராக இருந்த லாபொன்டைன் எப்படி அக்கட்சியிலிருந்து தமது ராஜினாமாவை நியாயப்படுத்துகிறார் என்பது சுவையானது. இந்த இளவேனிற்காலத்து தேர்தலில் உருவாகின்ற அரசாங்கம் எத்தகைய கட்சிகளை கொண்டதாக இருந்தாலும் அது ஒரு ''தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை'' ஏற்க வேண்டிவரும் என்று அவர் தனது பேட்டிகளிலும் உரைகளிலும் எச்சரிக்கை செய்திருக்கிறார். அது ஒரு சமூக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் சீர்திருத்தங்களை நிறைவேற்றுதில் வெற்றி பெறாவிட்டால் ஒரு ''புரட்சிகரமான நிலவரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.''

அவர் தனது நூலின் முன்னுரையில் ஜேர்மன் பாதிரியார்கள் சங்கத்தலைவர் கார்டினல் கார்ல் லேமான் கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார். அவர் வளர்ந்துவரும் சமூக ஏற்றதாழ்வுகள் பற்றி கூறுகிறார்; ''அத்தகையதொரு மாற்றம் சமூக வீழ்ச்சிக்கான ஒரு சின்னமாகும். அது நீடித்து நிலைநாட்ட முடியாதது மற்றும் அதனால் நமது நடவடிக்கைகள் குறுகிய கால அடிப்படையிலும் நீண்டகால அடிப்படையிலும் தற்போதுள்ள நிலையிலேயே நீடிக்குமானால் அது புரட்சிக்கு முந்தியதொரு சூழ்நிலைக்கு இட்டுச்சென்றுவிடும். ஒரு ஜனநாயகத்தில் ''சமூக சமத்துவமின்மைக்கு ஒரு திட்டவட்டமான வரையறை உண்டு'' என்று லேமான் கூறுகிறார்.

சமூகநலன்புரி அரசு முதலாளித்துவ ஒழுங்கை உறுதி செய்து தரும் ஒரு வழி என்று லாபொன்டைன் கருதுகிறார். மற்றும் முதலாளித்துவ உறவுகளில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது என்றும் அவர் கருதுகிறார். மற்றும் அவர் தனது சொந்தப் பணி மக்களது வளரும் எதிர்ப்பை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்து முதலாளித்துவ ஆட்சிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத சீர்திருத்தவாத வழிகளில் திருப்பிவிட கருதுகிறார்.

எனவேதான் அவர் கிழக்கில் ஜனநாயக சோசலிசக் கட்சியையும், மேற்கில் WASG யையும் நம்பியிருக்கிறார் மற்றும் அந்த இரண்டையும் பொதுவானதொரு தேர்தல் அணியில் இணைக்க முயன்று வருகிறார். முன்னாள் கிழக்கு ஜேர்மனியில், ஜனநாயக சோசலிசக் கட்சி இன்னமும் ஒரு வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. மற்றும் சமூக மோதல்களை ஒடுக்குவதில் பெரும் அனுபவம் நிறைந்ததாகும். WASG மேற்கில் தொழிற்சங்க அதிகாரத்துவ பிரிவுகளால் ஆதரிக்கப்படுகிறது. எனவே அதேபோன்று அத்தகையதொரு அதிகாரத்துவக் கருவியை உருவாக்க முயன்று வருகிறது.

ஜனநாயக சோசலிசக் கட்சியும் WASG யும் இணைந்து உருவாகும் ஒரு இடதுசாரிக்கட்சி முற்போக்கானது ஏனெனில் அது சமூகத்தின் அரசியல் ஆதிக்க சமச்சீர் நிலையை இடதுசாரி பக்கம் திருப்பிவிடும் என்று யார் கூறினாலும் அவர்கள் ஒன்று அப்பாவிகளாக இருக்க வேண்டும் அல்லது திட்டமிட்டு அரசியல் செப்படி வித்தை செய்பவர்களாக இருக்க வேண்டும். 7 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஜனநாயக கட்சி-பசுமை கட்சி அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக இதே வாதங்கள் எழுப்பப்பட்டன. அப்போதே அவை தவறானவை, அதற்குப் பின்னர் அனைத்து அரசு நிர்வாகக் கட்சிகளும் தெளிவாக வலதுசாரி பக்கம் திரும்பின. கிழக்கு ஜேர்மனியில் ஜனநாயக சோசலிசக் கட்சி முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு தூணாக உள்ளது. அதன் அமைச்சர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக வெட்டுக்களை வேகமாக கொண்டு செலுத்துவதில் தங்களது சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய சகாக்களுக்கு இணையான வேகமும் கருணையற்ற போக்கும் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

தேசிய சீர்திருத்தங்கள் தொடர்பான லாபொன்டைனின் திட்டம் ஒரு அரசியல் முட்டுச்சந்திற்கு இட்டுச் செல்கிறது. இன்றைய தினம் அத்தகையதொரு முன்னோக்கை தீவிரமாக ஆதரிப்பவர்களும், அதன் மீது நம்பிக்கைகளை வைத்திருப்பவர்களும் நாளை ஏமாற்றம் அடைவார்கள். தொழிலாளர்கள் விழிப்போடு செயல்பட்டு ஆகவேண்டும். அத்தகைய முயற்சிகள் கடந்த காலத்தில் எப்போதுமே தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்தியது மற்றும் பிற்போக்கு சக்திகளை வலுப்படுத்தியது.

லாபொன்டைன் மீது நம்பிக்கைகளை வைப்பதற்கு பதிலாக அந்த மனிதர் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட தனது அரசியல் நடவடிக்கையில் தனது பிரதான கவலை சமூக அமைதியையும், முதலாளித்துவ கட்டுக்கோப்பையும் காப்பது என்று நடந்து வந்திருக்கிறார்-- எனவே ஒரு சோசலிச சர்வதேசிய முன்னோக்கு பற்றி கடந்த நூற்றாண்டின் வழமான படிப்பினைகள் அடிப்படையில் ஒரு ஆழமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved