World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்:ஆசியா : பாகிஸ்தான்Pakistani troops seize telephone network, strike leaders arrestedதொலைபேசி வலைப்பின்னல்களை பாக்கிஸ்தான் துருப்புக்கள் கைப்பற்றின, வேலை நிறுத்தம் செய்த தலைவர்கள் கைது By Vilani Peiris and Keith Jones ஜூன் 11 சனிக்கிழமை மாலை நாடு முழுவதிலும் உள்ள குறைந்தபட்சம் 150 பாக்கிஸ்தான் தொலைபேசி நிறுவன (PTCL) அலுவலகங்களை பாக்கிஸ்தான் துருப்புக்களும், மற்றும் இதர பாதுகாப்பு படையினரும் பிடித்துக்கொண்டனர். பாக்கிஸ்தானின் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சி ஜூன் 18-ல் அரசிற்கு சொந்தமான தொலைபேசி கம்பெனியின் ஒரு பெரிய பங்கை விற்பனை செய்வது என்று அறிவித்த சிறிது நேரத்தில், இராணுவ நடவடிக்கை மூலம், பலத்த ஆயுதம் தாங்கிய துருப்புக்கள் PTCL அலுவலகங்களில் புகுந்து தொழிற்சங்கங்கத்தை சார்ந்த தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்தது. பாக்கிஸ்தான் பத்திரிகை செய்திகளின்படி, குறைந்தபட்சம் 20 PTCL தொழிற்சங்கத்தலைவர்களும், தொழிலாளர்களும் கைது செய்து காவலில் வைக்கப்பட்டனர். பாதுகாப்பு படைகள், தொழிற்சங்க அலுவலகங்களிலும், தொழிலாளர் வீடுகளிலும் திடீர் சோதனைகள் நடத்தும் என்பதால் மற்றவர்கள் தலைமறைவாகும் கட்டாயம் ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்டவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ தண்டனை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகின்றது. இதற்கு முந்திய வேலை நிறுத்தத்திலும், சென்றவாரம் திரும்ப நடைபெற்ற வேலை நிறுத்தத்திலும், PTCL தனியார்மயமாக்கல் திட்டம் இரத்துச் செய்யப்படாவிட்டால், நாட்டின் தொலைபேசித் தொடர்புகள் செயலிழக்கச்செய்யப்படும் என்ற தொழிலாளர்களது அச்சுறுத்தலை, அரசு சொத்துக்களை சேதப்படுத்துவதற்கான சதி என்று அரசாங்கம் சித்தரித்துள்ளது. PTCL தொழிலாளர்களை மேலும் அச்சுறுத்துகின்ற முயற்சியில், அரசாங்கம் தேசிய தொழிற்சாலை உறவுகள் குழுவின் தீர்ப்பை பெற்றிருக்கிறது, ஒன்பது PCTL தொழிற்சங்கங்கள் அடங்கிய தொழிலாளர்களது கூட்டு நடவடிக்கை குழு சனிக்கிழமை வெளியிடப்பட்ட தனியார்மயமாக்கல் அறிவிப்பிற்கு பதிலடியாக எடுத்துள்ள வேலைநிறுத்த நடவடிக்கை ஒரு ''சட்டவிரோத வேலை நிறுத்தம்'' என்று அது அறிவித்திருக்கிறது. பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சி கொடூரமான தொழிலாளர்-எதிர்ப்பு தொழிற்துறை உறவுகள் சட்டத்தை 2002-ல் பிறப்பித்தது, அதன்படி ஒரு "சட்டவிரோத" வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக்கொள்கின்ற தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட முடியும்.இராணுவ ஆட்சியும், PTCL நிர்வாகமும் மிகவும் போர்க்குணமிக்க தொழிலாளர்களை களைஎடுக்க திட்டவட்டமான சாத்தியங்களை உருவாக்கியுள்ளன. தனியார்மயமாக்கலை தொடர்ந்து உருவாகின்ற தொழில்நுட்ப மாற்றங்களால் கம்பெனியில் பணியாற்றும் 65,000 தொழிலாளர்களில் பாதிப்பேர்வரை ஆட்குறைப்பு செய்யப்பட்டு தங்களது வேலையை இழப்பார்கள் என்று கம்பெனியின் அதிகாரிகள் கூறினர். பாக்கிஸ்தான் இராணுவத்தினரும், துணை இராணுவத்தினரும் தற்போது PTCL அலுவலகங்களை அவற்றின் உச்சிப்பகுதிகளை மற்றும் தரைதளத்தை ஆக்கிரமித்துள்ளனர், அதே நேரத்தில் இராணுவத்தின் சமிக்கைப் படைகளை சேர்ந்த தொலைபேசி தொழில்நுட்பத்துறையினர், PTCL பணிகளில் பெரும்பகுதிக்கு பொறுப்பேற்றுள்ளனர். "பயன்படுத்தப்படுகின்ற கருவிகள் தன்மைக்கு ஏற்ப நாங்கள் தக்க பாதுகாப்பு ஊழியர்களை அனுப்பியிருக்கிறோம்," என்று இராணுவ சேவைகளுக்கு இடையிலான மக்கள் தொடர்புத்துறை டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சவுகத் சுல்தான் அறிவித்தார். பாக்கிஸ்தானின் அதிகம் இலாபம் தரும் நிறுவனங்களில் ஒன்றை தனியார்மயமாக்குவதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு தனது எதேச்சதிகார ஆட்சிக்கும் நவீன தாராளவாத பொருளாதாரக் கொள்கைக்கும் அதை தொடர்ந்து, பாக்கிஸ்தானின் மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு எதிரான பொதுமக்களது எதிர்ப்புக்கு அணி திரளும் ஒரு முனையாக மாறிவிடும் என்ற அச்சத்தின் ஒரு நடவடிக்கைதான், PTCL தொழிலாளர்களுக்கு எதிராக பாக்கிஸ்தான் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தலைவருமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் இராணுவத்தை அனுப்புவதற்கு முடிவு செய்ததாகும். முஷாரஃபும் அவரது பிரதமரான முன்னாள் சிட்டி வங்கி நிர்வாகி, சவுகத் அஜீசும், பாக்கிஸ்தான் உலகத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற பொருளாதரங்களில் ஒன்று என கூறி வருகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த பாக்கிஸ்தானின் பத்திரிகைகளும், அரசியல் எதிர்க்கட்சிகளும் முஷாரஃப்பின் ஆட்சியின்கீழ் வறுமையும் பொருளாதாரத்தில் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்திருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். சென்றவார தேசிய பட்ஜெட் தொடர்பான ஒரு கருத்தை வெளியிட்டுள்ள, தாராளவாத தினசரியான டான், அரசாங்கம் செலவிடுவதில் பாதிக்கு மேற்பட்டதொகை இராணுவத்திற்கும் கடன் சேவைகளுக்கும் சென்று விடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது மற்றும் ஏற்கனவே திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்து வருகின்ற பணக்காரர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தின் மேல் தட்டினருக்கும் சலுகை காட்டுகின்ற வகையில் அரசாங்கம் வரி வெட்டுக்களை தந்துவிடுவதாக கூறியுள்ளது. "எந்தவிதமான நியாய உணர்வு கண்ணோட்டமும் இல்லாமல், பொருளாதார வளர்ச்சியை மேற்கொண்டிருப்பது, பெருகிவரும் வறுமைக்கடல் ஏதாவது ஒரு கட்டத்தில் செல்வவளம் என்கிற தீவுகளை மூழ்கடித்துவிடும்" என்று டான் எச்சரித்துள்ளது. PTCL தொழிலாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை பலவாரங்களாக முன்னேற்பாடு செய்யப்பட்டு வருகிறது.மே 25-ல் தொடங்கி 10 நாட்கள் வரை, நாடு முழுவதிலும் உள்ள பெரிய அலுவலகங்களையும் இஸ்லாமாபாத்திலுள்ள கம்பெனியின் தலைமை அலுவலகங்களையும் PTCL தொழிலாளர்கள் பிடித்துக்கொண்டனர். அவற்றை சுற்றிவளைத்து துருப்புக்களை அனுப்பி அரசாங்கம் பதிலடி கொடுத்தது. ஆனால், துருப்புக்களுடன் ஆக்கிரமித்துக்கொண்டு தொழிலாளர்களை முறியடிக்க முயல்வது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பயந்து இறுதியாக தொழிற்சங்க தலைவர்களையும் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளையும் வேலை நிறுத்தத்தை முறியடிக்க நம்புவதற்கு தேர்ந்தெடுத்தது. அவர்களை பொறுத்தவரை, தொழிற்சங்கத் தலைவர்கள்-----அதில் பாக்கிஸ்தான் சோசலிஸ்ட் இயக்கமும், பாக்கிஸ்தானின் தொழிற்சங்க உரிமைகள் பிரசாரமும் இணைந்து செயல்பட்டன-- அவை PTCL தொழிலாளர்களது வேலை நிறுத்தத்தை ஒரு போர்க்குணம் மிக்க தொழிற்சங்க போராட்ட அளவிலேயே நிலைநாட்ட முயற்சித்தனர். PTCL தொழிலாளர்களது போராட்டமும் மற்றும் அது நேரடியாக முஷாரஃப் ஆட்சிக்கு புறநிலைரீதியாக அரசியல் சவாலாக அமைந்திருக்கிறது. மற்றும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் நாட்டை மலிவு ஊதிய புகலிடமாக மாற்றுவதற்கு திட்டமிட்டதற்கும் சவாலாக அமைந்திருக்கிறது, ஆனால் தொழிற்சங்கங்கள் அரசாங்கம் தனது தனியார்மாக்கல் திட்டத்தை கைவிடுவதற்கு தொழிலாளர்கள் அழுத்தங்களை கொடுக்கமுடியும் என்ற மாயையை பேணிவளர்த்தனர். இறுதியாக, பெனாசிர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP) மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத முத்தாஹிதா மஹ்ஜிலிஸ்- இ-அமல் (MMA) கட்சியின் ஆதரவைக்கூட நாடுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ஜூன் 3-ல், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான குழு, தொழிலாளர்கள் ஒரு மகத்தான வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்து, வேலை நிறுத்தம் முடிந்துவிட்டதாக கட்டளையிட்டது. PTCL நிர்வாகம், தனது கோரிக்கைகள் 29-ல் நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு உட்பட 28 கோரிக்கைகளுக்கு இணங்கிவிட்டதாக அவர்கள் கூறினர். 29-வது கோரிக்கையான--- தனியார்மயத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வெற்றிபெறவில்லை, அரசாங்கம் ஜூன் 10-ந்தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ள பங்குகள் விற்பனையை காலவரையின்றி ஒத்திவைக்க சம்மதித்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தொழிலாளர்கள் தங்களது ஆக்கிரமிப்பை முடித்துக்கொண்டு வேலைக்கு திரும்பியவுடன் அரசாங்க அமைச்சர்கள் தனியார்மயமாக்கல் திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பங்குகள் விற்பனை முன்னேறி செல்லும் என்றும் உறுதியளித்தனர். பெருகிவரும் ஆத்திரம் கொண்ட உறுப்பினர்களை சந்தித்த தொழிற்சங்க தலைவர்கள் புதிய வேலை நிறுத்த அச்சுறுத்தலை வெளியிட வேண்டிய நெருக்குதலுக்கு உள்ளானார்கள், அனைத்து PTCL பணிகளையும் செயலிழக்கச்செய்யும் தேதி ஜூன் 15 என்று அறிவிப்பு செய்தனர். என்றாலும், இந்த முறை அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டது, சனிக்கிழமையன்று தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததும், PTCL அலுவலகங்களை கைப்பற்றுவதற்கு அது இராணுவத்தை அனுப்பியது. தற்போது பாக்கிஸ்தானில் நடைபெற்றுக்கொண்டுள்ள போராட்டம் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அது முஷாரஃப் ஆட்சியின் ஜனநாயக விரோதத்தன்மையை அம்பலப்படுத்துகிறது-----அந்த ஆட்சியை புஷ் நிர்வாகம் உலக ரீதியாக ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஒரு முக்கிய கூட்டணி என்றும், பயங்கரவாதத்திற்கும் கொடுங்கோன்மைக்கும் எதிரான ஆட்சி என்றும் பிரகடனப்படுத்தி வந்தது. எனவேதான் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் பத்திரிகைகளில் PTCL தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எந்த செய்தியும் இடம்பெறாமல் இருக்கிறது என்பதில் வியப்படைவதற்கு எதுவும் இருக்கிறதா? |