World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காWhite House pushes for renewal of Patriot Act தேச பக்த சட்டத்தை புதுபிக்க வெள்ளை மாளிகை அழுத்தம் By Kate Randall புஷ் நிர்வாகம் அமெரிக்காவின் தேச பக்த சட்டத்தை புதுப்பிப்பதற்கு பிரச்சாரம் நடத்தி வருகிறது, அந்தச் சட்டம் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதற்கும், அவர்களது திட்டங்களை சீர்குலைப்பதற்கும் உயிர்நாடியாக அமைந்திருக்கிறது என்றும் கூறுகிறது. 9/11 பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து தேச பக்த சட்டத்திற்கு கையெழுத்திடப்பட்டது, ஐந்தே வாரங்களில் நாடாளுமன்றத்தில் மிக வேகமாக அது நிறைவேற்றப்பட்டது, இதன் வாயிலாக அமெரிக்க போலீசிற்கும், புலனாய்வு அமைப்புக்களுக்கும், இதற்கு முன்கண்டிராத அளவிற்கு வேவுபார்க்கும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, சிவில் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவது பெருமளவில் முடக்கிவிடப்பட்டதன் சமிக்கை காணப்படுகிறது. ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட இந்த அத்துமீறல்களை நிரந்தரமாக்குவதற்கு வெள்ளை மாளிகை முயன்று வருகிறது மற்றும் புதிய பிரிவுகளையும் சேர்க்க முயல்கிறது. நாடாளுமன்ற குடியரசுக் கட்சிக்காரர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பை புஷ் பெற்றிருக்கிறார் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக கட்சிக்காரர்களிடமிருந்து சொற்ப எதிர்ப்பே தோன்றியுள்ளது. எதிர் பயங்கரவாதம் மற்றும் எதிர் புலனாய்வு விசாரணைகளிலும் FBI-க்கு புதிய தீவிரமான ஆணையிடும் அதிகாரங்களை வழங்குவதற்கு வகை செய்யும் சட்டத்திற்கு செனட் சபை குழு ஒன்று செவ்வாய்க்கிழமையன்று ஒப்புதல் கொடுத்தது. தேச பக்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள எட்டு புலனாய்வு விதிகள் இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாக உள்ளன, அவற்றை சட்டத்தில் நிரந்தரமாக இடம்பெறச் செய்வதற்கும் 2001 சட்டத்தில் இடம்பெற்றிருப்பதற்கு மேலாக புதிய தகவல் திரட்டும் அதிகாரங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் இந்த சட்ட முன் வரைவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. பல மணி நேரம் இரகசியக் கூட்டங்கள் நடைபெற்ற பின்னர், புலனாய்வு தொடர்பான செனட் தேர்ந்தெடுப்புக் குழு FBI-க்கு-----நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல்-- குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களது பல்வேறு வகைப்பட்ட தனிப்பட்ட ஆவணங்களை ஆணைகள் அனுப்பி பெறுவதற்கு வகை செய்யும் அதிகாரத்தை வழங்குகின்ற ஒரு முன்மொழிவை முழு செனட் சபையின் வாக்களிப்பிற்கு விடுவது என்று 11-க்கு 4 என்ற வாக்குகளில் முடிவு செய்தது. முழு செனட் சபையின் வாக்கெடுப்பிற்கு வருவதற்கு முன்னர் செனட் சபையின் நீதிமன்றக்குழு இந்த நடவடிக்கையை ஆராய வேண்டும், அதன்படி அமெரிக்க கீழ்சபை (House of Representatives) செயல்பட வேண்டும். அமெரிக்க சிவில் உரிமைகள் சங்க சட்டம் இயற்றும் மூலோபாயத்திற்கான மூத்த அதிகாரா ஆலோசனையில் Lisa Graves அளித்துள்ள கருத்தில், ``நான்காவது அரசியல் சட்ட திருத்தத்திற்கான இன்றைய இரகசிய வாக்கெடுப்பு அமெரிக்க மக்கள் நாம் பேணிக்காக்கின்ற சுதந்திர உரிமைகள் ஆகியவற்றிற்கு ஒரு தோல்வியாகும். அரசியல் சட்ட வழியில் தேச பக்த சட்டம் அமெரிக்கரின் எல்லா வாழ்விலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி வருகின்ற நேரத்தில் ஏற்கெனவே அத்துமீறல் ஊடுருவல் அதிகாரங்களை பெற்றுள்ள தேச பக்த சட்டம் தேவையற்ற வகையில் விஸ்தரிக்கப்படுவதற்கு செனட் புலனாய்வுக் குழு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது`` என்று குறிப்பிட்டிருக்கிறார். தேச பக்த சட்டத்தை விரிவாக்க வகை செய்யும் நகலை அன்றைய அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஸ்கிராப்ட்டின் ஊழியர்கள் தயாரித்திருக்கிறார்கள் என்ற செய்தி 2003 ஆரம்பத்தில் கசியவிடப்பட்டது. ``தேச பக்த II`` என்று பத்திரிகைகள் பெயர் சூட்டிய அந்த நகல் சட்டம் பரவலான பொது விமர்சனங்களை தூண்டிவிட்டது மற்றும் புஷ் நிர்வாகம் அதை கிடப்பில் போட்டது. ``தேச பக்தி II``-ல் கண்டுள்ள நடவடிக்கைகளை சிறிது சிறிதான உணவு மாதிரியில் எந்தவிதமான பொது விவாதத்தையும் தவிர்க்கின்ற முறையில் நிறைவேற்றுகின்ற மூலோபாயத்தை நிர்வாகம் தற்போது மேற்கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஒஹியோ கொலம்பஸ் இல் போலீஸ் அதிகாரிகள் குழுவில் வியாழனன்று உரையாற்றிய புஷ், ''பயங்கரவாதத்தின் மீதான போரில்'' தேச பக்த சட்டத்தின் வெற்றி கதைகளில் ஒன்று Iyman Faris வழக்கு என்று குறிப்பிட்டார். 2003 ஜூனில், Faris ஒரு கொலம்பஸ் டிரக் டிரைவர் மற்றும் காஷ்மீரிலிருந்து வந்து அமெரிக்கக் குடிமகனாக ஆகிவிட்டவர், இரகசிய விசாரணைகளில் நீதிமன்ற விசாரணைக்குரிய தனது உரிமையை கைவிட்டுவிட்டு ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு உதவியதாக இரண்டு குற்றச்சாட்டுக்களில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். நியூயோர்க் நகரத்திலுள்ள புரூக்லின் பாலத்தின் சஸ்பென்ஷன் கேபிள்களை அசிட்டலின் டார்ச்சுகளால் வெட்டி அந்தப் பாலத்தைத் தகர்ப்பது என்ற நடைபெற முடியாத சதியில் சம்மந்தப்பட்டதாக Faris மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை ஒரு ''எதிரிப் போராளி'' என்று பெயர் சூட்டிவிடுவதாக மத்திய அதிகாரிகள் அச்சுறுத்தல்களை விடுத்த பின்னர் மட்டுமே Faris குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதற்கு சம்மதித்தார் என்று பின்னர் அம்பலத்திற்கு வந்தது. எதிரிப் போராளி என்று அழைக்கப்பட்ட பின்னர் அவர் காலவரையற்ற இராணுவக் காவலில் எந்தவிதமான வக்கீல்கள் உதவி இன்றி அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படாமல் காலவரையற்ற இராணுவ காவலில் வைத்திருக்கப்படுவதற்கு உள்ளானார். உண்மையிலேயே, தேச பக்த சட்டம் 9/11 தாக்குதல்களில் தொடர்புடைய எந்த தனி மனிதரும் தண்டிக்கப்படுவதற்கோ அல்லது குற்றம் சாட்டப்படுவதற்கோ வழிவகை செய்யவில்லை. செவ்வாய்க்கிழமையன்று இரகசிய கூட்டத்தில் செனட் சபையின் புலனாய்வுக்குழு, ஒப்புக்கொண்ட நடவடிக்கை முழு செனட் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கீழ்சபை நிறைவேற்றிவிடுமானால் தேச பக்த சட்டத்தால் அங்கீகாரம் தரப்பட்டிருக்கும் போலீஸ் - அரசு அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டுவிடும். மிக தீங்கான விதிமுறைகளில் ஒன்று எந்த நீதிமன்ற மறுபரிசீலனையும் இல்லாமல் FBI, நூலகம் மற்றும் இதர தனிப்பட்ட பதிவேடுகளை பெறுவதற்கு அங்கீகாரம் தருவதாகும், இது தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச பாதுகாப்புக்ளையும் நீக்குவதாக அமைந்திருக்கிறது. "தேச பக்த II" மிகுந்த கண்டனத்திற்கு உள்ளான அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். தேச பக்த சட்ட நடப்பு விதிகளின் கீழ் FBI முதலில் வெளிநாட்டவருக்கான புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றத்திலிருந்து அங்கீகாரம் பெற வேண்டும், ஆனால் தற்போது FBI நூலகங்கள் வர்த்தக அமைப்புக்கள், மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள் முதலியவற்றிலிருந்து பதிவேடுகளை பெறுவதற்கு தனது சொந்த ``நிர்வாக ஆணைகளை `` அனுப்ப முடியும். பதிவேடுகள் தொடர்பான சோதனைகளுக்கு அரசியல் சட்டம் தந்துள்ள பாதுகாப்புக்களை மேலும் குறைக்கின்ற வகையில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் இன்னொரு விதி சேர்க்கப்பட்டிருக்கிறது. தேச பக்த சட்டத்தின் 215-வது விதியின் கீழ், திட்டவட்டமான ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது, அது ``அமெரிக்காவை சேர்ந்த ஒரு மனிதன் மீது முதலாவது அரசியல் சட்ட திருத்தத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கான அடிப்படையில் மட்டுமே விசாரணைகள் நடத்தப்படக்கூடாது`` என்று திட்டவட்டமான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதை வேறு வார்த்தைகளில் விளக்குவதென்றால், அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனிநபர், அவளோ அல்லது அவனோ அரசாங்கத்திற்கு எதிராக அல்லது அதன் கொள்கைகளுக்கு எதிராக பேசினார்கள் என்பதற்காக மட்டுமே FBI பதிவேடுகளை கோர முடியாது. செனட் சபை புலனாய்வு சட்ட முன்வரைவு இந்த குறைந்தபட்ச பாதுகாப்பை புத்திசாலித்தனமான திரிப்பின் மூலம் இரத்து செய்திருக்கிறது. ஒரு விசாரணை முழுவதுமே ஒரு தனி மனிதனின் முதலாவது அரசியல் சட்ட சீர்திருத்தம் பாதுகாப்பளித்துள்ள நடவடிக்கைகளை பற்றி மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட முடியாது என்றாலும், நடைபெற்றுக்கொண்டுள்ள புலன் விசாரணை வேறு வகையாக இருக்குமானால் அதற்கு ஏற்புடையதாக இருந்தால் சில பதிவேடுகளை சோதனையிடுவதற்கு ஆணைகளை அனுப்ப முடியும். கிரிமினல் வழக்குகளில் ஒரு குற்றம் நடைபெற்றிருக்கிறது என்பதை காட்டுவதற்கான "அடிப்படைகளை சுட்டிக்காட்டாமல்" FBI கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த சட்ட முன்வரைவு கூடுதல் அதிகாரத்தை தருகிறது. தேச பக்த சட்டத்தின் நடப்பு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, ஒரு வெளிநாட்டு புலனாய்வு தகவல் நடைபெற்றுக்கொண்டுள்ள புலன் விசாரணை நோக்கத்திற்கு ஒரு "முக்கியத்துவம்" வாய்ந்தது என்ற வெளிநாட்டவர் தொடர்பான புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்தால் மட்டுமே சோதனைகளுக்கு ஏற்பாடு செய்ய முடியும். ''தேச பக்தி II" நீக்கிவிட விரும்பிய வேவுபார்ப்பதன் மீதான மற்றொரு கட்டுப்பாடு இது. புதிய விதிகளின் கீழ், அந்த இரகசிய சோதனைகளும், கண்காணிப்பும், பயங்கரவாதம் போன்ற சில குற்றங்களில் கிரிமினல் வழக்கு தொடருகின்ற நோக்கத்திற்காக மட்டுமே இரகசிய சோதனைகள் மற்றும் கண்காணிப்பை தொடக்க முடியும். ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்று நம்பத்தகுந்த ஆதாரம் காட்டாமல் சான்றுகளை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே அத்தகைய சோதனைகளை மேற்கொள்வது, அமெரிக்க அரசியல் சட்டத்தின் நான்காவது திருத்தம் நியாயமற்ற வகையில் சோதனைகள் மற்றும் பறிமுதல்கள் செய்வதற்கு எதிராக தந்துள்ள பாதுகாப்பை தெளிவாக மீறுவதாக உள்ளது. ``தபால் உறைகள்`` என்றழைக்கப்படும் ஒரு புது வகை சோதனைகளை நடத்துவதற்கும், இந்த சட்ட முன் வரைவு வகை செய்கிறது. குற்றம் நடந்திருக்கிறது என்ற அடிப்படைக் காரணம் காட்டாமல் சாதாரண மக்களது தபால்களை சீலிடப்பட்ட தபாலாக இருந்தாலும், அல்லது சீலிடப்படாத தபாலாக இருந்தாலும் புலனாய்வு ஆய்வாளர்கள் அவற்றை சோதனையிடுவதற்கு வகை செய்கிறது அல்லது இது முற்றிலும் புது வகையான சோதனைகளாகும். ஒரு நீதிமன்ற கட்டளை மூலம் பெறப்படுகின்ற தகவலை பெருமளவில் விரிவுபடுத்துவதாக இந்த சட்ட முன்வரைவு அமைந்திருக்கிறது, ஆனால் குற்றம் நடந்திருக்கிறது என்ற ஆதாரம் காட்டாமல் இணைய தளத்தின் மூலம் தகவல் திரட்ட, கண்காணிப்பு நடத்த இந்த சட்ட முன்வரைவு வகை செய்கிறது. இணைய தளத்தை பயன்படுத்துவோரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் IP முகவரி, எவ்வளவு காலம் அந்த சேவைகளை அவர் பயன்படுத்தினார். (கிரெடிட் கார்டு எண்கள் உட்பட) அவர் எப்படி கட்டணம் செலுத்தினார் என்ற விவரம் மற்றும் சந்தாதாரர் சேவை எவ்வளவு காலமாக நடைபெறுகிறது என்ற விவரங்களை "வலைதள அளிப்பு தகவல்" அடிப்படையில் வலைத் தள சேவைகளை வழங்குவோர் தரவேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தான விளைபயன்களை உருவாக்கக்கூடிய வகையில் போலீஸ் அதிகாரத்தை கொண்ட அரசு அடிப்படையிலேயே விரிவாக்குகின்ற தன்மையில் அமைந்திருக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே, தேச பக்தி சட்டம் சிவில் உரிமைகளுக்கான குழுக்கள் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் மக்களில் பரவலான பிரிவினர் ஆகியோரது விரிவான எதிர்ப்பை கிளறிவிட்டது. என்றாலும், இந்த எதிர்ப்பு அரசியல் ஸ்தாபனத்தில் இடம்பெற்றுள்ள எந்த பிரிவினரிடமும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எடுத்துக்காட்டுவதாக அமையவில்லை மற்றும் சட்ட முன் வரைவின் சில வாசகங்கள் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்படலாம். தேச பக்த சட்டம் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுகின்ற ஒரு நியாயமான கருவி என்ற புஷ் நிர்வாகத்தின் வழியை முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். செனட் புலனாய்வு குழுவின் முன்னணி ஜனநாயகக் கட்சி உறுப்பினரான மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த ஜே. ராக்பெல்லர் புதிய நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். அவர் தேச பக்த சட்டத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் பற்றி வெளியிட்டுள்ள கருத்தில்: ``இந்தக் கருவிகள் அமெரிக்காவின் வாழ்வை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவின என்று நாங்கள் முடிவு செய்தோம்... மற்றும் அவை நிரந்தரமாக்கப்பட வேண்டும்`` என்று குறிப்பிட்டார். செனட் சபை புலனாய்வு குழுவின் உறுப்பினரான மேரிலாந்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிக்காரர் ஆன பார்பரா மிக்குள்ஸ்கி செனட்டில் இந்த சட்ட முன் வரைவு சட்டமாக ஆக்கப்படுகிற நேரத்தில் ``தேசிய பாதுகாப்பை பாதுகாக்கின்ற அதே நேரத்தில் அரசியல் சட்ட உரிமைகளையும் பாதுகாக்கின்ற`` வகையில் திருத்தம் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேச பக்த சட்டத்தை புதுப்பித்து மற்றும் விரிவுபடுத்துவது தொடர்பான முன்மொழிவு பத்திரிகைகளிலும், ஒலி/ஒளிபரப்பு ஊடகங்களிலும், மிகக்குறைந்த அளவிற்கு செய்திகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன, அவை அரசியல் சட்ட உரிமைகளிலும், சிவில் உரிமைகளிலும் மகத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்ற ஒரு பிரச்சனையை மூடி மறைத்துவிட்டன. |