World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US media and the French referendum

அமெரிக்கச் செய்தி ஊடகமும், பிரெஞ்சுக் கருத்தெடுப்பும்

By Patrick Martin
7 June 2005

Back to screen version

முன்மொழியப்பட்டுள்ள ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு பிரெஞ்சு வாக்களார்கள் தீர்க்கமாக "வேண்டாம்" வாக்கு கொடுத்து நிராகரித்து ஒரு வாரம் கடந்த பின்னர், சமூக ஜனநாயகவாதிகள், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் அல்லது "பழமைவாத" என்று எதுவாக இருந்தாலும் ஐரோப்போவில் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் வலதுசாரி வேலைத் திட்டமான சமூக செலவினங்களை குறைத்தல், ஊதியங்களை குறைத்தல், செல்வந்தர்மீது வரிகளைக் குறைத்தல், வணிகத்தின் மீது கட்டுப்பாட்டைத் தளர்த்ததுல் ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தியால் இந்நிராகரிப்பானது செயற்தூண்டல் அளிக்கப்பட்டது என்பது கண்டம் முழுவதும் தெளிவாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் பத்து மில்லியன்களும், நெதர்லாந்தில் மில்லியன் கணக்கான மக்களும் தங்களுடைய சமூக நிலையை பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், இந்த அரசியல் உண்மையை அமெரிக்கச் செய்தி ஊடகம் எதிர்கொண்டுள்ள விதம் பிரெஞ்சு மக்களின் மீது பெரும் காழ்ப்பு, இழிவு உணர்வை வெளிப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. பிரெஞ்சு மக்கள் அறிவிற்கு ஒவ்வாத, காலம் கடந்து விட்ட ஒரு வாழ்க்கை முறையை தொடர விரும்புகிறார்கள் என்றும், முதலாளித்துவ "சுதந்திர சந்தைக்கு" உறுதியான ஆதரவு கொடுக்க விருப்பம் உடையவர்களை பதவியில் இருத்தும் வகையில் பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக் போன்ற அரசியல் தலவைர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் ஏடுகள் கூறுகின்றன.

வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியுறவுக் கொள்கை கட்டுரையாளரான டேவிட் இக்னேஷியஸ் எழுதியதாவது:"நான்கு ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்திருந்தவன் என்ற வகையில், அது எத்தகைய சிறப்பான நாடு, உலகில் மற்றவர்கள் பொறாமை கொள்ளக் கூடிய அளவு உயர்தர வாழ்க்கை நெறியைக் கொண்டுள்ள நாடு என்பதை நான் பாராட்டி மதிக்க முடிந்தது." பிரெஞ்சுக்கார்கள் தமது வாழ்க்கையை இப்படிப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்: "அவர்கள் வளைந்து கொடுக்காத நிர்வாகம், தொழிற் சங்கங்கள், ஆறு வார கால விடுமுறை, வாரம் 35 மணி நேர வலை என்பதை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதுடன் ----வளர்ச்சியுறும், இயக்க சக்தி நிறைந்த, முயலுவோருக்கு ஆதரவு கொடுக்கும் பொருளாதாரத்தையும் பெற விரும்புகின்றனர். இரண்டுவிதத்திலும் திருப்தியுடன் வாழ முடியாது என்று அவர்களுக்குக் கூறுவதற்கு சிராக்கிற்கு மன உறுதி இல்லை."

போஸ்ட்டின் கட்டுரையாளரான ஜோர்ஜ் வில் பிரெஞ்சு சமுதாயத்தின் "நாகரிக'' தன்மை பற்றி குறைவான மதிப்பீட்டையே கொண்டு, அச்சமூகம் "குறைந்த வேலை நாட்கள், பல வாரங்கள் விடுமுறை, வேலையில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு தொழிலாளர்களை 'பாதுகாக்கும்' சட்டங்கள் போன்றவற்றை" விரும்புகிறது எனக் கூறியுள்ளார். அத்தகைய நிலமைகள் தொடர்ந்திருக்கவேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்; "ஏனெனில் குழந்தைகளுக்கு பொருளின் அடக்க மதிப்பு தெரியாது, பல விருப்பங்களும் இயைந்து இருக்க முடியாது என்பதும் தெரியாது."

அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் மிக உயர்ந்த ஊதியம் பெற்று வரும் இக்னாடியஸ் அல்லது வில்லோ அல்லது வேறு எவருமோ, பிரெஞ்சு மக்களுக்கு இவர்கள் கொடுக்க விரும்பும் கசப்பு மருந்தை தாங்கள் உட்கொண்டு, தங்களுடைய வாழ்க்கைத் தரத்தில், அமெரிக்க சமுதாயத்தை பீடித்திருக்கும் வேலையின்மை, வறுமை, குறைவூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பற்ற நிலை என்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பங்களிப்பாக தங்களுடைய வாழ்க்கைத் தரங்களில் பாரியளவு வெட்டை ஏற்கத் தயாராக உள்ளனரா என்று குறிப்பிடவில்லை.

போஸ்ட்டின் தலையங்கம் பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் சரியான முறையில் கசப்பு மருந்துக்கள்தான் இப்பொழுது கட்டாயத் தேவை என்று குறிப்பிட்டுள்ளது. "இரண்டு நாடுகளும் மன வேதனையை தரக்கூடிய பொருளாதார மறுசீரமைப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் இது 1980-களில் மார்க்கரெட் தாட்சர் பிரிட்டனின்மீது கட்டாயமாக சுமத்தியதற்கு இணையாகத்தான் இருக்கும்." என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

பிரெஞ்சு வாக்கெடுப்பு பற்றி, ேவால் ஸ்ட்ரீட் ஜேர்னலின் தலையங்கம் ஆய்வாக குறிப்பிட்டுள்ளதாவது: "பொருளாதார கவலைகள் நலன்புரி அரசின் விளைவாகும்." வலதுசாரி ஏடான ஜேர்னல், "தாராளவாத" வாஷிங்டன் போஸ்ட்டின் கசப்பு மருந்தைத்தான் உபதேசிக்கிறது: அதாவது ஐரோப்பா அனைத்து வகையான சமூக பாதுகாப்புக்களையும் தொழிலாளர்களுக்கு கொடுப்பதை கட்டாயம் தகர்த்துவிடவேண்டும்."

இப்படி அகற்றுவதை இலக்கு கொண்டுள்ளவையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன: "வேலையில்லாதவர்களுக்கு தாராளமான, உயர்ந்த அளவு நலன்புரி கொடுப்பது, அரசு சொத்துடமை அல்லது பெரும் உதவி பெறும் முக்கிய தொழில்கள் (Airbus போன்றவை), தொழிலாளர்களை விருப்பம் போல் வேலைக்கு அமர்த்துவது மற்றும் விலக்குவதை கடினமாக்கும் சட்டங்கள், போட்டி சக்திகளுக்கு இடையே தொழிற் சங்கங்கள் பெற்றுள்ள வலுவான பாதுகாப்புக்கள், சுகாதார காப்பீடு, குழந்தைப் பாதுகாப்பு படிகள், முழு ஊதியத்துடன் மகப்பேறு காலத்தில் விடுமுறை, நான்கிலிருந்து ஆறு வாரகால விடுமுறை, குறுகிய வேலைநேர வாரம் இவையெல்லாம் தகர்க்கப்பட வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தோ! பெருவணிகத்தின் மீதான உயர்ந்த வரிகள் அகற்றப்பட வேண்டும்: தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் நலன்களுக்கு நிறைய வரிகளை கொடுக்க வேண்டும்."

இத்தகைய உண்மையான நாகரிகமுள்ள சமூகத்தின் இன்றியமையாத அடிப்படைகளை தகர்த்தல் எப்படி பொருளாதாரக் கவலைகளைக் குறைக்கும் என்று ஜேர்னல் விளக்கிக் கூறுவில்லை.

நியூயோர்க் டைம்ஸ் தலையங்கம் சற்று குறைந்த ஒலியிலேயே பிரெஞ்சு வாக்கு "பயமுறுத்தக் கூடிய" அரசியல் வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது என்பதைப் பற்றி கவலையைக் காட்டுகிறது: "வணிகர், அரசியல் செல்வந்த தட்டுக்கள் மற்றும் சாதாரண மக்கள் ஆகியோருக்கு இடையே பொது அடித்தளம் இல்லாத நிலை; தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் என்று பெரும்பாலானவர்கள் 'வேண்டாம்' வாக்களித்துள்ள நிலை." ஆனால் டைம்சும் தன்னுடைய சொந்த அவதூறை முன்னெடுக்கும் அதேவேளை, "வேண்டாம்" வாக்கு என்பது பொதுவாக "துருக்கிக்கு எதிரான உணர்வின்" உந்ததுதலினால்தான், அதாவது துருக்கிய, முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் பெருகிவிடுவர் என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில்தான் கூடுதலான ஊக்கத்தைப் பெற்றுள்ளது என்று கருத்துரைத்து, 35 மணி நேர வாரம் என்பதை பிரான்சில் அகற்றிவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.

Times இன் கட்டுரையாளர்கள் இருவரும், இப்பிரச்சாரத்திற்கு தங்கள் குரலையும் கொடுத்துள்ளனர். பழமைவாத டேவிட் ப்ரூக்ஸ் எழுதினார்: "ஐரோப்பியர்களைவிட பில்லியன் கணக்கான மற்ற மக்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் ஐரோப்பிய முன்மாதிரி தத்தளிக்கிறது. ஐரோப்பியர்கள் தங்கள் வாழ்க்கையை பெரிதும் நேசிக்கின்றனர், ஆனால் அதை எப்படித் தக்கவைத்துக் கொள்ளுவது என்பதை அறியாமல் உள்ளனர்."

இத்தகைய பிரெஞ்சு வாக்காளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிக இழிவும், அறியாமையும் நிறைந்த தாக்குதல்களிலேயே மிக மோசமானது ஜூன் 3ம் தேதி தோமஸ் ப்ரீட்மன் டைம்ஸிற்கு எழுதிய "உச்சிக்கு ஒரு போட்டி" என்ற தலைப்பில் வந்துள்ள ஒரு கட்டுரையில் காணப்பட்டுகிறது. இந்தியாவில், பெங்களுரில் இருந்து கட்டுரையை அனுப்பியுள்ள ப்ரீட்மன், "இந்தியப் பொறியாளர்கள் நாளொன்றுக்கு 35 மணி நேரம் உழைக்கத் தயாராக இருக்கும் இந்த உலகில் பிரெஞ்சு வாக்காளர்கள் 35 மணி நேர வாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். நல்வாழ்த்துக்கள்" என்று எகத்தாளமாகக் கூறியுள்ளார்.

"விசேட தகமை வேலைகள் செய்வதில் உலகத்தின் தலைநகராக இருக்கிறது" என்று பெங்களூரை புகழ்ந்து ப்ரீட்மன், மேலும் கூறியுள்ளதாவது: "அழுக்குப்படிந்த சிறிய இரகசியம் என்னவென்றால் இந்தியா, ஐரோப்பாவில் இருந்தோ அமெரிக்காவில் இருந்தோ குறைந்த ஊதியத்திற்காக மட்டும் வேலைகளை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக இந்தியர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பதுடன் உங்கள் தொலைபேசி உரைக்குப் பதில் கூறுவதில் இருந்து உங்களுடைய அடுத்த விமானத்தையோ அல்லது காரையோ வடிவமைக்கவும் தயாராக இருக்கின்றனர்."

ப்ரிட்மன் முடிவுரையாக கூறுவது: "பிரான்சுக்கும் அதன் நண்பர்களுக்கும் கடின உழைப்பிற்கான ஆர்வம் குறைந்துள்ளது என்பது மோசமான காலமாகும்----இதே நேரத்தில்தான் இந்தியா, சீனா மற்றும் போலந்து நாடுகள் அதிகம் உழைக்கலாம் என்று கண்டறிந்து கொண்டுள்ளன."

இப்படி ஆளும் செல்வந்த தட்டுக்களின் இந்திய ''சோசலித்தை'' நிராகரிப்பதற்கும் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட சமூக பாதுகாப்புக்களை தாக்குவதற்கும், பெரும் ஆர்வத்துடன் இந்திய மக்கள் உள்ளனர் என்று மடத்தனமாக கூறுவதும், இந்திய தொழிலாளர்கள் உள்ளூர் தொழில்முயலுவோர், பூகோள பெருநிறுவனங்களினால் சுரண்டப்படுவதற்கு பெரும் களிப்பை அடைகின்றனர் என்றும் கூறும் டைம்சின் கட்டுரையாளர் போகிற போக்கில் ஒரு சொற்றொடரையும் குறிப்பிடுகிறார்: "இந்தியாவில் மிகப் பெரும் பகுதி இன்னமும் மோசமான சேரிகளிலும், வசதியற்ற கிராமங்களிலும் வாழ்கின்றர் என்பதும் உண்மைதான்..."

இந்திய மக்களில் நூற்றுக்கணக்கான மக்களை கொடூரமாக வதைக்கும் வறுமையைப் பற்றி மிகச் சாதாரணமான முறையில் காட்டப்படும் அசட்டைத்தன்மையை வெளியிடும் அறிவார்ந்த மற்றும் அறநெறி இழிந்த தன்மையை பற்றி நாம் கூடுதலாக ஏதும் கூற வேண்டியது இல்லை. இதேபோல்தான் ப்ரீட்மனுடைய அணுகுமுறை பிரான்ஸ் அல்லது அமெரிக்காவில் இருக்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை பற்றியும் இருக்கும் என்று கூறினாலே போதுமானது.

முன்பு பின்தங்கி, ஒதுங்கியிருந்த இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தொழில்நுட்பம் மற்றும், தொழில் துறையில் வளர்ச்சி, ஏன் முன்னரே வளர்ச்சியுற்ற நாடுகளில் இருந்த வாழ்க்கைத் தரங்களையும் சமுதாய நலன்களையும் தகர்க்க வேண்டும் என்பதற்கு இந்தப் பண்டிதர்களில் எவரும் சரியாக விளக்கவில்லை. பூகோளமயமாக்கல் என்பது, மனிதனின் உற்பத்தி சக்திகள் குறுகிய, வரலாற்றளவில் காலம் கடந்துவிட்ட தேசிய அரசு எல்லைக்குள் இனியும் அடக்கி வைத்திருக்கப்பட முடியாத புள்ளியில் விரிவடைதலினால் உந்தப்பட்ட, இயற்கையிலேயே, அதன் வழியிலேயே தவிர்க்க முடியாத நிகழ்ச்சிப்போக்காகும். இது பொருளாதார உற்பத்தித் தொகுப்பை மகத்தான அளவில் அதிகரிக்கும் திறனை கொண்டுள்ளது. பின் ஏன் இந்தச் செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் ஊதியங்களையும், வாழ்க்கைத் தரங்க்களையும் தகர்ப்பது அதற்கு தேவைப்படுகிறது?

தொலைத் தொடர்புத்துறை, கணினி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் ஏற்பட்டுள்ள பெரும் புரட்சி, பூகோள ரீதியாக உற்பத்தியை மகத்தான முற்போக்கு வளர்ச்சித் தன்மை கொண்ட வகையில் அமைப்பதற்கு ஏதுவாகத்தான் உள்ளது. புறநிலைரீதியாக இப்பொழுது வறுமையும் அறியாமையும் கடக்கப்பட இயலும், அனைத்து மனிதர்களின் வாழ்க்கைத் தரமும், ஒரு கெளரவமான நிலைக்கு உயர்த்தப்பட முடியும் என்பதை நிரூபணம் செய்துள்ளது.

ஆனால், முதலாளித்துவத்தின் அமைப்பில், மிகப் பெரிய நாடுகடந்த பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தில் அனைத்து மனிதத் தேவைகளையும் தனி சொத்து திரட்சிக்கு தாழ்த்தும் ஒரு முறையில் இருக்கும் வடிவமைப்பில், சுரண்டுதலும் இன்னும் கூடுதலான முறையில் சமூக சமத்துவமின்மையும்தான் தவிர்க்கமுடியாமல் பெருகும்; அப்பொழுது ஐரோப்பிய, வட அமெரிக்க, ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையை குறைப்பதற்காக, உழைப்புச் சந்தையில் நூறு மில்லியன் கணக்கான புதிய தொழிலாளர்கள், குறிப்பாக ஆசியாவில் தாக்குதல்களை தாங்கிக் கொள்ளுவதற்குத்தான் பயன்படுத்தப்படுவர்.

Le Soir என்னும் ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு ஆதரவு தரும் பெல்ஜிய செய்தித்தாள் ஐரோப்பிய ஒன்றியம் "ஒரு அரக்கத்தனமான இயந்திரமாக மக்களுடைய நலன்களை சந்தை நலன்களுக்காக தாழ்த்தும் கருவி" என்ற மக்களிடையே பரந்த நினைப்பு வந்துள்ளது பற்றி வருத்தத்துடன் குறிப்பிடுகிறது. அமெரிக்கச் செய்தி ஊடகம் இந்தப் பொருளைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. தற்கால வாழ்வின் மிக அடிப்படையான உண்மையைப் பற்றிக்கூட அதாவது உழைக்கும் மக்களின் நலன்களும் முதலாளித்துவ ஆளும் செல்வந்த தட்டுக்களின் நலன்களும் முற்றிலும் எதிரிடையானவை என்பதை பற்றி அவை குறிப்புக்கூட காட்டுவதில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved