:ஆசியா
: பாகிஸ்தான்
Pakistani workers revolt against PTCL
privatization
Security forces poised to attack occupation
PTCL
தனியார்மயமாக்கலுக்கு எதிராக பாக்கிஸ்தான் தொழிலாளர்களின்
கிளர்ச்சி
ஆக்கிரமிப்பு மீது தாக்குதல் நடத்த பாதுகாப்பு படைகள் தயார் நிலை
By Vilani Peiris and Keith Jones
4 June 2005
Back to screen
version
பாக்கிஸ்தான் தொலைபேசி கம்பெனி லிமிடெட் (PTCL)
தொழிலாளர்கள்--- அவற்றின் இஸ்லாமாபாத் தலைமை அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களில் மே 25 முதல்
அந்த கம்பெனிகளை ஆக்கிரமித்துக்கொண்டு----பாக்கிஸ்தானின் மிகப்பெரியதும் அதிக இலாபம் தரக்கூடியதுமான
பொதுத்துறை நிறுவனத்தை தனியார் உடைமையாக்கும் திட்டங்களை பர்வேஸ் முஷாரஃப்பின் இராணுவ அரசாங்கம் கைவிடத்
தவறுமானால் அடுத்த திங்களன்று நாட்டின் தொலைபேசி தகவல் தொடர்பு இணைப்பை துண்டித்துவிடப்போவதாக
அச்சுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பாக்கிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் முழு வலிமையையும்
PTCL தொழிலாளர்களுக்கு
எதிராக பயன்படுத்துவதற்கு இராணுவ அரசாங்கம் தயாராக இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது. மே 30-ல், டான்
வெளியிட்டுள்ள தகவலின்படி PTCL
தலைமை அலுவலகங்களின் மைதானங்களில் 600 போலீசாரும், எல்லைப்புற ஊர்க்காவல் படையினரும், ஆயத்த நிலையில்
இருப்பதாகவும் பாதுகாப்புப் படைகள் விரைவில் அந்த வளாகத்திற்குள் புகுந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கும் என்றும்
``தகவல் அறிந்த வட்டாரங்கள்`` தெரிவித்தன.
இதுவரை எந்த தாக்குதலும் தொடக்கப்படவில்லை என்றாலும், ஏராளமான பாதுகாப்பு
படையினர் PTCL
தலைமை அலுவலகங்களில் இன்னும் இடம்பெற்றிருக்கின்றனர் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலாக இடைவிடாது
பறந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுவதிலும் தொலைபேசி இணைப்பகங்களுக்கு வெளியில் துணை இராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
செய்தி அறிவிப்பின்படி, தொழிற்சங்க தலைவர்களும், செயலூக்கர்களும் (activists)
பாதுகாப்பு படைகளால் அதிக அளவிற்கு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
PTCL
தொழிலாளர் சங்கங்களின் நடவடிக்கைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மாலிக் மக்புல் ஹூசேன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு
பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பு ஒன்றினால் பல மணி நேரம் விசாரணை செய்யப்பட்டார்.
PTCL தொழிலாளர்களுக்கு எதிராக
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திரும்பத் திரும்ப அரசாங்க பேச்சாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். ஜூன்
2-ல் டெய்லி டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சர்தார் அவாய்ஸ்
லெக்காரி ``தேசிய சொத்துக்கள் சேதப்படுத்தப்படுமானால் இரும்புக்கரம் பயன்படுத்தப்படும்`` என்று உறுதிபட
அறிவித்தார். அந்த நிறுவனம் தனது தனியார்மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தும் என்று வலியுறுத்திக் கூறினார்.
தொலைதொடர்பு நிறுவனம் தனது பங்கான 88 சதவீதத்தை ஜூன் 10-ல் விற்கத்
தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்த பின்னர் 60,000
PTCL தொழிலாளர்களும் தங்களது வேலை நடவடிக்கையை
தொடக்கினர். மே 25-ல் வேலை நிறுத்தம் தீவிரமடைந்தது, அப்போது
PTCL தலைமை
அலுவலகங்களுக்கு வெளியில் மறியல் செய்து கொண்டிருந்தவர்கள், அந்த நிறுவனத்திற்கும் 9 உறுப்பினர் தொழிற்சங்க கூட்டு
நடவடிக்கைகள் தோல்வியடைந்துவிட்டன என்ற செய்திகள் வந்ததைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புத் தடுப்புக்களை
சிதைத்துக்கொண்டு கட்டிடங்களை பிடித்துக்கொண்டனர். நாடு முழுவதிலும் உள்ள நகர
PTCL அலுவலகத்தை
விரைவில் பிடித்துக்கொண்டனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக, அனைத்து
PTCL ஆப்பரேட்டர்
சேவைகளும் சாதனங்களும் மற்றும் லைன்கள் பழுதுபார்ப்பு மற்றும் இணைப்புப் பணிகள் அனைத்தும் முடங்கிவிட்டன.
தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கத் தலைவர்களின்
அர்ப்பணிப்பு நிலை குறித்து ஐயுறவாதத்தை குரல் எழுப்பிய சாதாரண தொழிலாளர்களுக்கு உறுதிமொழி தருகின்ற வகையில்
நடவடிக்கை குழு தலைவர்கள் தொழிலாளர்களது கோரிக்கைகளை எந்த நேரத்திலும் தாங்கள் விட்டுக்கொடுக்கப்
போவதில்லை என்று முஸ்லீம்களின் புனித நூலான குரான் மீது சத்தியம் செய்து கொடுத்ததாக பாக்கிஸ்தானின்
தொழிற்சங்க உரிமைகள் பிரச்சாரம் தெரிவித்தது.
சென்ற ஆண்டு 30,000 தற்காலிக தொழிலாளர்கள் பணிகுறைப்பு (layoff)
செய்யப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற வேலை நிறுத்தம், நிர்வாகம் தனது கோரிக்கைகளில் சிலவற்றை சமரசம்
செய்தபின்னர் கைவிடப்பட்டதானது, தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்களின் நம்பிக்கை கீழறுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் நவீன-தாராளவாதத் வேலைதிட்டத்திற்கு ஓர் சவால்
அமெரிக்கா ஆப்கானிஸ்தானை வென்றெடுத்ததற்கும், மத்திய கிழக்கிலும், மத்திய
ஆசியாவிலும், அமெரிக்க இராணுவ மற்றும் புவிசார்-அரசியல் அதிகாரத்தையும் வலியுறுத்தி வருவதற்கும், ஆதரவு
தெரிவித்ததற்காக முஷாரஃப் ஆட்சி ஒட்டுமொத்த ஆதரவையும் கணிசமான இராணுவ மற்றும் நிதியுதவியையும் புஷ்
நிர்வாகத்திடமிருந்து பெற்றது. ஆனால் பாக்கிஸ்தான் IMF
பாணியில் பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்தியதற்காக அதனை வாஷிங்டன் பாராட்டவும் செய்தது.
வெளிநாட்டு முதலீடு குவிந்ததை தொடர்ந்து அண்மை ஆண்டுகளில் பாக்கிஸ்தானில்
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. அப்படி இருந்தாலும் பாக்கிஸ்தான் ஊடகங்களிலேயே கூட, முஷாரஃப் ஆட்சியை
பிடித்துக்கொண்டது முதல் ஐந்தரை ஆண்டுகளில் வறுமையும் சமூக ஏற்றதாழ்வுகளும் பெருகிவிட்டன என்பதை பரவலாக
ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களை விற்பதுடன் மற்றும் சமூக மற்றும் பொது சேவைகளுக்கான
அரசு செலவினங்களையும், விலை ஆதரவுகளையும் வெட்டுவதன் மூலம், முஷாரஃப் ஆட்சி நாட்டின் தொழிலாளர்
சட்டங்களை பிற்போக்குத்தனமாக திருத்தி அமுல்படுத்தி வருகிறது. 2002 தொழிற்துறை உறவுகள் அவசர சட்டத்தின்
(IRO) கீழ்,
பாக்கிஸ்தானின் கூட்டரசாங்கம் மற்றும் மாகாண அரசாங்கம் ''தேசிய நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடியது'' என்று
அறிவிப்பதன் மூலம் எந்த வேலை நிறுத்தத்திற்கும் தடை விதிக்க முடியும் மற்றும் அத்தகைய தடையை தொழிலாளர்கள்
மீறுவார்களானால், அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். 2002
IRO-வின்படி
நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலாளர் பிரிவான --விவசாய தொழிலாளர்களுக்கு--- தொழிற்சங்கங்களை
அமைப்பதற்கோ அல்லது கூட்டாக பேரம்பேசுதற்கோ உரிமையில்லை.
சிட்டிபாங்கில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்த பிரதமர் சவுக்கத் அஜீஸ்
பாக்கிஸ்தானின் நிதியமைச்சராக திரும்பி வந்து பதவியேற்றது முதல் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் ஈர்க்கின்ற வகையில்
ஒரு புதிய கட்ட நவீன-தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்வதாக திரும்பத்
திரும்ப உறுதியளித்துக் கொண்டு வந்தார். இந்த புதிய கட்ட நடவடிக்கைகளுக்கு
PTCL-ஐ
தனியார்மயமாக்குதல் உயிர்நாடியாக கருதப்படுகிறது. ``பொருளாதாரத்தை திறந்துவிட்டு அதிக வெளிநாட்டு முதலீட்டை
ஈர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஓர் அங்கமாக இந்த ஆண்டு அரசிற்கு சொந்தமான மிகப்பெரிய கம்பெனிகள்
சிலவற்றை அரசாங்கம் தனியார்மயமாக்குவதற்கு முயன்று வருகிறது" என்று தனியார் மயமாக்கல் அமைச்சர் ஹபேஸ் ஷேக்
சென்ற மாதம் குறிப்பிட்டார்.
தனியார்மயமாக்கலால் ஆயிரக்கணக்கான
PTCL தொழிலாளர்களின்
வேலைகள் இழக்கக்கூடும். தொழிற்துறை நிபுணர்கள் அறிவிப்பின்படி, தொலைபேசி இணைப்புக்கள் விகிதத்தில்
தொழிலாளர்கள் நியமன விகித தொழில் தரத்தை நிலைநாட்டுவதற்காக அந்த நிறுவனம் தனது தொழிலாளர்களை
பாதியாக குறைக்க வேண்டியிருக்கும். அண்மையில் அந்த நிர்வாகம் தந்துள்ள ஒரு யோசனையின்படி, குறைந்தபட்சம்
பத்தாண்டுகள் வரை பணி நிரந்தரம் அடைந்துள்ள தொழிலாளர்கள் மட்டுமே தனியார்மயமாதலின் கீழ் தங்களது வேலையை
இழக்கமாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
நாட்டில் இலாபம் ஈட்டும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக
PTCL இருந்தாலும்,
1998 லிருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு எதுவும் தரப்படவில்லை.
அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சியின் தனியார்மயமாக்குதல் வேலைதிட்டத்திற்கும் பெருகி
வரும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலை மற்றும் ஏற்றதாழ்வை அடக்குவதற்கும் அடிப்படை ஜனநாயக மற்றும்
தொழிலாளர் உரிமைகளை ஒடுக்குவதற்கும் அது மேற்கொண்டுள்ள முயற்சி ஆகிய இரண்டுக்கும், ஒரு குறிப்பிடத்தக்க
சவாலாக PTCL
தொழிலாளர்கள் போராட்டம் அமைந்துள்ளது.
ஆனால் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான குழுவின் தலைவர்கள்
PTCL தொழிலாளர்
போராட்டத்தை தொழிற்சங்க போர்க்குணமிக்க நடவடிக்கைகளோடு கட்டுப்படுத்தி விடுவதென்றும் தொழிலாளர்களை
முஷாரஃபிற்கு எதிரான, குறிப்பாக பெனாசீர் புட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின்
(PPP) ஆதரவை
திரட்டும்- ---- முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் பக்கம் திருப்புவது என்று தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த தலைமையில் வேலை நிறுத்தத்தின் ஆதரவாளர்களான பாக்கிஸ்தான் சோசலிஸ்ட் இயக்கமும்
அடங்கும், அது தொழிலாளர் அகிலத்தின் குழுவோடு இணைக்கப்பட்டதாகும், இந்தக் குழு பிரிட்டிஷ் மிலிட்டண்ட் குழுவை
சார்ந்தவர்கள். ஜூன் 1 முதல், பாக்கிஸ்தான் சோசலிஸ்ட் இயக்கமும் பாக்கிஸ்தான் தொழிற்சங்க உரிமைகள் பிரச்சாரமும்,
PTCL வேலை
நிறுத்தத்தை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டத்தை நடத்தின, அதில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்,
அவர்களில் PPP,
பாக்கிஸ்தானின் முஸ்லீம் லீக்-நவாஷ் (முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் கட்சி) மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத
கட்சியின் கூட்டணியான MMA
அல்லது முத்தாஹிதா மஜ்லிசே அமல் ஆகியவையும் அடங்கும்.
PPP நீண்ட நெடுங்காலமாக மக்களை
கவரும் வாய்வீச்சுக்களையும், சோசலிச சொற்றொடர்களையும் பயன்படுத்தி வருகிறது, ஆனால் அந்தக் கட்சி முதலாளித்துவ
மிகப்பெரிய நிலவுடைமையாளரான பூட்டோ குடும்பத்திற்கும் மிக அடிப்படையில், பாக்கிஸ்தானின் முதலாளித்துவத்திற்கும்
கடமைப்பட்டதாகும். மே 26-ல், PPP-ன்
மத்திய தகவல் செயலர், ஒரு அறிக்கை வெளியிட்டார், அதில் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் ``நாட்டிற்கும் அதன்
மக்களுக்கும் எதிரான சதி ஆலோசனை என்றும், நிர்வாகத்திற்கு வேண்டியவர்களுக்கு பயன் தருவதற்காக பயன்படுத்தப்படும்
ஒரு கிரிமினல் குற்ற முறை`` என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், பெனாசீர் பூட்டோ பிரதம மந்திரியாக
இருந்தபோது, IMF
மற்றும் உலக வங்கியின் கட்டளைப்படி தனியார்மயமாதல் திட்டத்தை அவரது அரசாங்கம் முன்னெடுத்தது.
அதேபோன்று நடப்பு இராணுவ ஆட்சி தொடர்பான
PPP-ன் அணுகுமுறை இரட்டைவேடமாகும்.
அவரது கடுமையான எதிரியான நவாஷ் செரீபை பதவியிலிருந்து நீக்கியபோது பூட்டோ முஷார ஃபை வரவேற்றார்.
முஷாரஃப் அவரை புறக்கணித்தவுடன் தான் இராணுவ ஆட்சியின் எதிரியாக பூட்டோ மாறினார். மேலும், கடந்த 6 மாதங்களில்,
PPP தலைமையும் இராணுவ ஆட்சியும் இரகசிய பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டிருந்தன, அதில் பூட்டோ இந்த ஆண்டு புதிய தேர்தல்களை நடத்துவதற்கு முஷாரஃப் சம்மதிப்பாரானல் அவர் ஜனாதிபதியாக
நீடிப்பதற்கு சம்மதிப்பதாக பூட்டோ தெரிவித்தார்.
ஜூன் 2-ல், 2002 மோசடித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
PPP கட்சி
மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள், PTCL
தனியார்மயமாக்கலை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். அன்றைய தினம் பின்னர்,
PTCL-ன்
தொழிற்சங்கங்களுக்கிடையிலான குழு தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த தொலைபேசி கம்பெனியின் இஸ்லாமாபாத்
தலைமை அலுவலகங்களுக்கு விஜயம் செய்த MMA
நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றனர்.
PTCL தொழிலாளர்களின் போர்குணமிக்க
போராட்டத்தை இரத்தக்களரி வன்முறை அச்சுறுத்தல்கள் மூலமும் தொழிற்சங்கத் தலைமை முழக்கம் செய்யும்
எதிர்க்கட்சிகளின் ஆதரவு கூற்றுக்கள் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் தலையீட்டின் மூலமும் அந்தப் போராட்டத்தை
நீர்த்துப்போக செய்துவிட முடியும் என்றும் முஷாரஃப் ஆட்சி நம்புகிறது. உண்மையிலேயே, வேலை நிறுத்தம் செய்து
கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றி அரசாங்கம்
தயாராகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலேயே PPP
மற்றும் MMA
போன்ற கட்சிகளது ஆதரவோடு முஷாரஃப் ஆட்சி, பாக்கிஸ்தானின் முதலாளித்துவ அடிப்படையிலான ஏற்றுமதி மூலம்
பொருளாதார வளர்ச்சி காண்பதற்கான மூலோபாயத்திற்கு உயிர்நாடியான தனது தனியார்மயமாக்கல் திட்டங்களை
கைவிட அழுத்தங்களை கொடுக்க முடியும் என்ற தவறான எண்ணத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் வளர்த்து வருகிறார்கள். |