World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பாThe Netherlands: decisive "no" vote on European constitution நெதெர்லாந்து: ஐரோப்பிய அரசியலமைப்பின் மீது உறுதியான "வேண்டாம்" வாக்கு By Chris Marsden நெதெர்லாந்தின் வாக்காளர்கள் திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை பெருவாரியாக நிராகரித்துள்ளனர். ஜூன் 1ல் நடைபெற்ற வாக்கெடுப்பில், பாதிக்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின்படி, ஆரம்ப எதிர்பார்ப்புக்கள் குறைந்தது 62 சதவிகிதத்தினர் உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் வாக்கு பதிவிற்காக வந்த வாக்காளர் எண்ணிக்கையும் 62ல் இருந்து 63 சதவிகிதம் வரை இருக்கலாம் என்றும் தெரிகிறது. பிரான்சில் மகத்தான முறையில் அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிக்கப்பட்ட மூன்று நாட்களுள் வந்துள்ள இந்த ஹாலந்து நாட்டின் "வேண்டாம்" முடிவு, பெரு நிறுவனங்களின் இலாப உந்துதலை ஓர் அரசியலமைப்பு நெறியாக தன்னிடத்தே பொறித்துள்ள பத்திரத்தின் அடிப்படையில், கண்டத்தின் அரசியல் ஒற்றுமையை இணைக்கும் வகையில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் திட்டங்களுக்கு மற்றொரு கடும் தாக்குதலை கொடுத்துள்ளது. "ஒரு பெரும் போட்டியை கொண்டுள்ள சமூக சந்தைப் பொருளாதாரத்தை" தோற்றுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கான எதிர்ப்புத்தான் உண்மையில் மக்கள் அரசியலமைப்பை நிராகரிப்பதற்கு முக்கிய காரணமாயிற்று. பல சமூகப் பிரச்சினைகள் மீதான ஐரோப்பிய சட்டங்கள், நெதர்லாந்தின் சட்டங்களைவிடக் குறைந்த தாராண்மையைத்தான் கொண்டிருக்கும் என்ற அச்சம் -- இந்த அக்கறை வலது மற்றும் இடது சாரி அரசியலமைப்பு எதிர்ப்பாளர்களால் எழுப்பப்பட்டிருந்தது -- யூரோ நாணய முறையை ஏற்றதில் இருந்து தோன்றியுள்ள விலைவாசி ஏற்றத்தால் வந்துள்ள சீற்றத்துடனும், முக்கிய சமூக தாக்குதல்களை மக்கள்மீது சுமத்தியுள்ள அரசாங்கத்தின்மீது காட்டப்படும் விரோதப் போக்கு மற்றும் ஈராக்கின் மீது அமெரிக்க தலைமையிலான போர்தொடுதல் ஆதரவுக்கு விரோதம் என்று அனைத்துடனும் இணைந்து, இம்முடிவைக் கொடுத்துள்ளன. இந்த "வேண்டாம்" வாக்கு, ஆட்சியில் இருக்கும் பிரதம மந்திரி ஜோன் பீட்டர் பல்கெனன்டே தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு மூக்கறுப்பு என்று மட்டும் இல்லாமல் "வேண்டும்" வாக்கை கோரியிருந்த முக்கிய எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு அவமானமாகும். "வேண்டும்" முகாமில் ஆட்சியில் இருக்கும் Christian Democrats (CDA), அதன் கூட்டணிக் கட்சிகள், Freedom and Democracy Party (VVD), Democrats 66 (D66), மற்றும் எதிர்க்கட்சிகளான சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (PvdA) மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான பசுமை இடது ஆகியவையும் உள்ளன. இவை முற்றிலுமாக 80 சதவிகித இடங்களை, டச்சுப் பாராளுமன்ற பிரதிநிதிகள் 150 பேரில் 128 பேரைக் கொண்டிருந்தன. அரசியலமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு என்பது வலதுசாரி Pim Fortuyn List (LPF), மற்றும் முன்னள் VVD உறுப்பு அமைப்பாகவும், LPF போலவே பிறநாட்டார் மீது காட்டும் வெறுப்பின் அடிப்படையில் போட்டி மக்கள் முதன்மைவாத அமைப்பை ஏற்படுத்த விரும்பும் Geert Wilders ஆல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. தன்னுடைய புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு, முஸ்லிம்-எதிர்ப்பு நிலைப்பாட்டை LDF நெதர்லாந்தின் தாராள, சமூக மரபுகளின் பாதுகாப்பு என்று அலங்கரித்துக் காட்டுகிறது. தன்னுடைய பங்கிற்கு வில்டர்ஸ், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைவதற்கு எதிரான முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வை அரசியலமைப்பின்மீதான தாக்குதலுக்கு மையமாகக் கொண்டார். இருவருமே நெதெர்லாந்தின் தேசிய இறைமை காப்பாற்றப்படவேண்டும் என்பதுதான் முக்கிய பிரச்சினை என்று வலியுறுத்தினர். இந்தப் பிரச்சினையில் அவர்கள் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி (SP) யின் மாவோவாதிகளுடன் இணைந்துள்ளனர்; அவர்களும் அரசியலமைப்பின் புதிய தாராளவாத பொருளாதார செயற்பட்டியலுக்கும், ஒரு ஏகாதிபத்திய இராணுவவாத ஐரோப்பா தோற்றுவிக்கப்படும் திட்டத்திற்கும் தங்களுடைய எதிர்ப்பை வலியுறுத்தியுள்ளனர். ஆயினும், "வேண்டாம்" வாக்கெடுப்பு இன்னும் பரந்து, அதிகமான முறையில் இக்கட்சிகளின் இணைந்த அரசியல் செல்வாக்கைவிடக் கூடுதலான முறையில் உறுதியைக் காட்டியுள்ளது. எனவே அதிகாரபூர்வ "வேண்டாம்" பிரச்சாரத்தை மேற்கொண்ட LPF, VVD கூறியதைவிட தாராளவாத சந்தை சீர்திருத்தங்கள் வாழ்க்கைத் தரத்தின்மீது தாக்குதல்களைக் கொள்ளும் பாதிப்பு உள்ளது என்ற அச்சத்தினால் வலுவாக செல்வாக்கைப் பெற்றிருந்திருக்கும்; அதிலும் ஆளும் கூட்டணியால் சுமத்தப்பட்டுள்ள கடுமையான வெட்டுக்களால் தோன்றியுள்ள மக்களின் சீற்றம் அத்துடன் இணைந்திருக்கக் கூடும். இந்த வாக்கெடுப்பு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாதுதான், மற்றும் இன்று இதன் விளைவுகளை பற்றி விவாதிக்க அது கூடுகையில் பாராளுமன்றம் இம்முடிவை அசட்டை செய்யலாம். 30 சதவீதத்திற்கு மேலான வாக்குப் பதிவு இருந்தால் இதன் முடிவை மதிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது; வாக்குப் பதிவு அன்று இந்த எண்ணிக்கை இருமடங்காயிற்று. ஆனால் வாக்குப் பதிவு முடிந்த உடனேயே, பல்கெனென்டே "தான் தனிப்பட்ட முறையில் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக்" கூறினார்; மற்றும் மற்ற நாடுகளில் உறுதிப்படுத்தல் வழிவகை தொடரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 16 மில்லியன் மக்கட்தொகை கொண்ட நெதர்லாந்து ஐரோப்பிய பொதுச் சந்தையை நிறுவிய ஆறு நாடுகளில் ஒன்றாகும்; இது ஐரோப்பிய ஒன்றியத் திட்டத்தின் வலுவான தூணாக அப்பொழுதில் இருந்து உள்ளது. "nee" ("வேண்டாம்") வாக்கை இந்நாடு போட்டது, "non" ("வேண்டாம்") வாக்கை பிரான்ஸ் போட்டது போல் வியப்பானது அல்ல. ஆனால் இது ஐரோப்பிய தொழிலாளர் தொகுப்பிற்கும் ஆளும் செல்வத் தட்டுக்களுக்கும் இடையே ஒவ்வொரு நாட்டிலும் பெரிதும் பெருகியுள்ள பிளவுகளை இது உறுதிபடுத்துகிறது. அத்தட்டுக்களின் அரசியல் இணைப்பிற்கான திட்டங்கள், பொருளாதார மாற்று - சீர்திருத்தம் மற்றும் இராணுவவாத கட்டமைப்பு ஆகியவற்றை இது சீர்குலைத்துள்ளது. ஜேர்மனியின் அதிபரான ஹெகார்ட் ஷ்ரோடரும் ஒப்புதல் வழிவகை தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்: ஆனால் அரசியலமைப்பு அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டால்தான் நடைமுறைப் படுத்தப்படமுடியும். ஐரோப்பியக் குழுவின் உச்ச மாநாடு ஒன்று ஜூன் 16-17 அன்று பிரான்ஸ், நெதர்லாந்தின் வாக்கெடுப்புக்களை தொடர்ந்து என்ன செய்யலாம், அரசியலமைப்பு உடன்பாட்டை கைவிட்டுவிடலாமா என்பது பற்றி விவாதிக்க கூடுகிறது இன்னும் விரிவான வகையில் டச்சு வாக்கெடுப்பு பற்றிய பகுப்பாய்வை உலக சோசலிச வலைத் தளம் நாளை வெளியிடும். |