World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

"Secularism" and hypocrisy: official France mourns pope and bans Muslim scarf

"மதசார்பின்மையும்" பாசாங்குத்தனமும்: பிரான்ஸ் அதிகாரபூர்வமாக போப்பிற்கு துக்கம் அனுசரித்து, முஸ்லிம்களின் தலையங்கியை தடை செய்கிறது

By Barry Grey and Antoine Lerougetel
26 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

மற்ற விஷயங்களைப் போலவே பிரெஞ்சு அரசாங்கமும், செய்தி ஊடகமும் இரண்டாம் போப் ஜோன் போல் காலமானதை எதிர்கொண்ட விதம், பொதுப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் தலை அங்கிகளை அணிந்து கொள்ளும் உரிமைக்கு எதிராக முழு அரசியல் அமைப்புமுறையும் நடத்திய பிரச்சாரத்தின் முழுப் பாசாங்குத்தன்மையை நன்கு புலப்படுத்தியுள்ளது. இந்த பிற்போக்குத்தன்மை வாய்ந்த சிலுவைப் போருக்கு ஒப்பான நிகழ்வானது "மதசார்பின்மை" என்ற பெயரில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டுதான் பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தலை அங்கிகள் அணியப்படக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டு இறுதிகட்டத்தை அடைந்தது.

அதிகாரபூர்வமான இடது அரசியல் மற்றும் செய்தி ஊடகப் பிரமுகர்கள், அதேபோல் நடைமுறை வலது, ஜனாதிபதி ஜாக் சிராக்கில் இருந்து சோசலிசக் கட்சி தலைமை வரை முஸ்லிம் பிள்ளைகள் தலையங்கி அணிவதின் மூலம், தாங்கள் மிகவும் போற்றும் மதசார்பின்மை மரபுகளின் பெருமையை குலைக்கின்றனர் என்று இழிவுணர்வுடன் கூக்குரலிட்டு வந்தனர். பள்ளிகளில் தலை அங்கிகள் காணப்படுவது பிரெஞ்சுக் குடியரசின் அஸ்திவாரங்களையே குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டன என்று அவர்கள் அறிவித்தனர்.

முஸ்லிம்-எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு இத்தகைய மதசார்பின்மை முகப்புத் தோற்றம் போட்டது, மகளிர் உரிமை உணர்விற்கு ஆதரவு கொடுத்த தன்மையில் வெளிப்படுத்தப்பட்டது. முஸ்லிம் பெண்கள் தங்கள் சமய நெறிகளைப் பின்பற்றுவது குற்றம் என்று கூறிய வகையில், தலையங்கியினால் அடையாளம் காணப்படும் மகளிர் அடக்கு முறைக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்துவதாகவும் கூறிக்கொண்டனர். இந்த மகளிர் உரிமைக் கோணம் இன்னும் கூடுதலான முறையில்,"Lutte Ouvriere மற்றும் Ligue Communiste Revolutionnaire போன்ற சந்தர்ப்பவாத தீவிர இடது அமைப்புக்களில் இருப்பவர்களுக்கும், அரசாங்கத்தின் "புனிதப் போரில்" இணைந்து கொள்ளுவதற்கு ஒரு நியாயத்தை கற்பித்துக் கொள்ள இடம் கொடுத்தது. இந்நிலை மடத்தனமானதும் பிற்போக்குத்தனமானதுமாக ஒரு கருத்தான, மகளிர் உரிமைகள் குறிப்பிட்ட சமய நெறிகளுக்கு எதிராக விடப்படும் கடுமையான அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் அடைய முடியும் என்பதற்கு நம்பகத்தன்மையை கொடுத்தது.

இந்தப் பிரச்சாரம் முஸ்லீம்கள் செய்யும் அனைத்துச் செயல்கள் மீதான தாக்குதலுடன் தீவிர வலதுசாரிகளால் பிரான்சில் மட்டுமின்றி, ஐரோப்பா முழுவதும் இணைந்துள்ளது என்பதை பலரும் வசதியுடன் அசட்டை செய்தனர். இதே முறையில்தான் நீண்ட நாட்களாக கத்தோலிக்க திருச்சபைக்கு சிறப்பு மரியாதையை பிரெஞ்சு குடியரசு செய்து வருவதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

ஜனநாயக மற்றும் மதசார்பற்ற கோட்பாட்டின் ஒரு பிரிவான சுதந்திரமாக சிந்தித்தல், அதை வெளிப்படுத்துதல், சமய நெறிக்குட்பட்டு நடத்தல் உட்பட, என்ற உண்மை தலைகீழாக நிறுத்தப்பட்டதோடு, மிதித்துத் தள்ளவும் ஜனநாயகம், மதசார்பின்மை ஆகியவற்றின் பெயரால் நடாத்தப்பட்டது! மேலும், இந்தச் சட்டத்தின் மூலம், அரசாங்கம் ஒரு பெரும் தீமையான முன்னோடியையையும், அதாவது தனிநபர்களின் மிக அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்ற கருத்தையும் நிலைப்படுத்தியது.

ஆனால், அது கடந்த ஆண்டு அவர்கள் முஸ்லிம்கள். ஆனால், தன்னுடைய ரோமன் கத்தோலிக்க புனித போப் இரண்டாம் ஜோன் போல் இம்மாத ஆரம்பத்தில் காலமானபோது, ஜனாதிபதி சிராக்கும், பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃப்ரனும் குடியரசு நீரை அவரது சடலத்தின் மீது தெளிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில் களித்து மகிழ்ந்தனர்.

தங்கள் மனைவியர் மற்றும் அரசாங்க மந்திரிகள் புடை சூழ, சிராக்கும் ரஃப்ரனும் பாரிசின் Notre Dame தேவாலயத்தில், இந்த சமயத் தலைவருக்கு மரியாதை கொடுப்பதற்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு பெற்றனர். "போப் இரண்டாம் ஜோன் போலுக்கு கொடுக்கப்படும் பெரும் மரியாதையுடன் அரசாங்கம் தன்னை உண்மை ததும்பிய முறையில் இணைத்துக் கொள்ளுகிறது. "பள்ளிகள் உட்பட அனைத்து பொதுக் கட்டிடங்களிலும், தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன; பள்ளி மாணவத் தலைவர்கள் "புனித போப்பாண்டவரின் நினைவையொட்டி நிகழும்... பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும்" என்றும் "பிஷப்பை மரியாதை நிமித்தம் சந்தித்து இரங்கலை கூறவேண்டும்" என்றும் கூறப்பட்டது. தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் போப்பை பலமுறையும் "புனித தந்தையார்" என்று குறிப்பிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்த திருச்சபை முன் மண்டியிட்டு நிற்றலுக்கும் முந்தைய "சமயசார்பின்மை" என்ற பெயரில் நடத்தப்பட்ட புனிதப்போரையும் சரிசெய்யும் முயற்சி ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. "பெரிய இடத்தில்" இருப்பவர்களுக்கு மதசார்பின்மை பற்றிய நேற்றைய அறிவிப்புக்கள் முற்றிலும் அறிந்திராதவை என நினைப்பவர்கள் இருக்கையில் எதற்காக அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? போப்பின் இறப்பிற்கு முன்பே அரசாங்கத்தில் இருப்பவர்கள் மற்றும் அதன் அருகில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் தங்கள் கத்தோலிக்க நம்பிக்கைகளை கர்வத்துடன்தான் வெளிக்காட்டி வந்தனர். உதாரணமாக, முன்னாள் நிதி அமைச்சரான நிக்கோலா சார்கோசி பொதுப் படகு பயணத் தொடக்கவிழாவில் சிலுவைக்குறி போட்டுக் கொண்டார்.

அது போலவே சோசலிசக் கட்சி முகாம்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் எந்த எதிர்ப்பும் வரவில்லை. இவர்கள் சில மாதங்கள் முன்புதான் தலையங்கி அணியும் பெண்களால் நாட்டின் அரசியலிலேயே சமய நச்சு புகுந்துவிடும் என்று பெருங் கூக்குரலிட்டு அதைக் கண்டனத்திற்கு உட்படுத்தியிருந்தனர்.

போப்பை பெரும் புகழிற்கு உட்படுத்துதல், முஸ்லிம்கள் தலை அங்கியை அணிந்து கொள்ளுதலை தடைசெய்தல், இவை பற்றிய செயற்பாடுகளில் இருந்த முரண்பாடுகள் பற்றிச் சில இடங்களில் இருந்து, அதைச் சுட்டிக்காட்டிய வகையில் எதிர்ப்புக்கள் வந்தன. இரண்டு முக்கிய பெற்றோர்கள் சங்கங்களில் ஒன்றான FCPE (்்Federation of Councils of Parents of Pupils) பெற்றோர் அமைப்புக்களின் கூட்டணி என்னும் அமைப்பு செய்தி ஊடகத்திற்கு வெளியிட்ட ஏப்ரல் 4 ம் தேதி அறிக்கையில் கூறியதாவது: "ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் சமய அடையாளங்களை அணிந்து கொள்வதை தடுக்கும் சட்டங்கள் மார்ச் 2004 வந்து ஓராண்டிற்கு பின்னர், சமயசார்பற்ற செயல்வீரர்கள் செய்தி ஊடகத்தில் எப்படி போப்பாண்டவரின் மரணம் வரப்போகிறது என்று அநாகரிகமாக எதிர்பார்த்ததுடன் அது ஏற்பட்ட பின்னர் வெள்ளப்பெருக்கு போல் தகவல்களை அதிலும் குறிப்பாக அரசாங்க ஒளிபரப்புப் சேவைகளில் கொடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைகிறது. ...பாடசாலைகளுக்கு முன்பாக அரைக்கம்பத்தில் கொடிகள் பறப்பதின் அசாதாரண முக்கியத்துவம் என்ன? குறிப்பாக, ஒரு புறத்தே தலை அங்கியைத் தடைசெய்தல், மறுபுறத்தில் அரசியல், செய்தி ஊடகங்கள் போப்பின் மரணத்துடன் மிக அதிகமான தொடர்பைக் காட்டுதல் என்பதுடன், இத்தகைய இரட்டை வேட சமய சார்பற்ற தன்மைக்கு இளவயது மாணவர்கள் எவ்வாறு விளக்கம் காண்பர்?

இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் ஏடான SNSS (National Union of Secondary Education) இது பற்றி ஒரு வினாவை எழுப்பியது: "சமய அடையாளங்களை அணியக் கூடாது என்று சட்டத்தின் மூலம் தடைசெய்துவிட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு விசுவாசம் என்று ஆத்திரமூட்டும் வகையில் அடையாளம் காட்டுவது போல் அரசாங்கம் கல்லூரிகளிலும், இடைநிலைக் கல்வி நிலையங்களிலும் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என்று எவ்வாறு உத்திரவு இடலாம்?" என்று குறிப்பிட்டுள்ளது.

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் இந்நிகழ்வை பற்றிய தகவல்களை மிகப் பெரிய அளவில் வெளியிட்டதை பற்றி குறை கூறிய வகையில், ஏராளமான கடிதங்களை பெற்றன. ஒரு நாளேடான Liberation புகார் கடிதங்கள் "வெள்ளப் பெருக்கென மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் மூலம் வந்தன" என்று குறிப்பிட்டுள்ளது.

தலை அங்கி தடை செய்யப்பட்டது சமயசார்பின்மை கொள்கையினால் உந்துதல் பெறப்படவில்லை என்றால், உண்மையில் அதன் தன்மை என்ன? இது மிக வறிய, மிக ஒடுக்கப்பட்ட பிரெஞ்சு மக்களின் பிரிவுகள்மீது நடத்தப்பட்ட பிரிவினை முறையிலான தாக்குதல் ஆகும். மிகப் பெரிய அளவில் வேலையின்மையை எதிர்கொள்ளும் மக்கட் தொகை, சரிந்து வரும் வாழ்க்கைத் தரம், பொதுநலச் செலவினங்கள் மீது அரசாங்கம் நடத்தும் தாக்குதல் ஆகியவற்றால், பிரான்சில் பெருகி வரும் சமூக நெருக்கடியின் அழுத்தங்களில் இருந்து வேண்டுமென்றே மக்களைத் திசை திருப்பும் வகையில், ஒரு சட்டத்திற்கான பிரச்சாரம்தான் இதுவாகும்.

இந்தச் சட்டம் இன, சமய அழுத்தங்களை அதிகரித்து பெருகிய முறையில் அரசாங்க அடக்குமுறைக்கும் வழிவகுத்தது. இன்று வரை, 47 பெண்கள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 550 பெண்கள் தங்கள் தலையங்கியை அகற்றிவிடுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானவர்கள் பள்ளியை விட்டு விலகும் முடிவைக் கொண்டு, தங்கள் கல்வியை முடிக்க அஞ்சல் வழி முறையை நாடியுள்ளனர். இதற்குப் புள்ளி விவரம் இல்லை என்றாலும், சிலர் படிப்பை நிறுத்தி விட்டனர். மூன்று சீக்கிய மாணவர்களும், தங்கள் முடியை மறைத்து வைத்துக் கொள்ளுவோம் என்று வலியுறுத்தியற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தலை அங்கியை அணிந்து கொண்டுவரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிப் பயணங்களில் சேர்ந்து வரக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். பொதுக்கட்டிடங்களில் வேலை செய்ய முகத்திரை அங்கி உடைய மகளிர் தடைக்குட்பட்டுள்ளனர். பொது இடங்கள், தனியார் நிறுவனங்களில் கூட அவர்களது வேலை செய்யும் உரிமை பெருகிய முறையில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இத்தகைய தாக்குதல்கள் சமயப் பிற்போக்குத்தனம், அதையொட்டி சகிப்புத் தன்மையற்ற நிலை, பிற சமயங்களை துச்சமென மதித்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் என்பதை கூறத் தேவையில்லை.

See Also:

பிரான்ஸ்: முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிவதற்கு தேசிய நாடாளுமன்றம் தடைவிதித்தது


பிரான்ஸ்: முஸ்லீம்களுக்கு எதிரான இயக்கமும் மதசார்பின்மை பற்றிய போலி விவாதங்களும்

Top of page