:ஆசியா
: பாகிஸ்தான்
Pakistan: US-backed military regime
mounts new wave of repression
பாக்கிஸ்தான்: அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சி
புதிய அலை ஒடுக்குமுறையை பெருக்கியுள்ளது
By Vilani Peiris
23 May 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
பர்வேஸ் முஷாரஃப்பின் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சியால் சென்ற மாதம்
தொடக்கப்பட்ட ஒரு பாரியளவு ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு பின்னர் நூற்றுக்கணக்கான பெனாசீர் பூட்டோவின்,
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP)
யின் செயலூக்கமான ஆதரவாளர்கள் சிறையில் உள்ளனர்.
Cô PPP
கைதிகள் பாக்கிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தின் 7-A
பிரிவின் கீழ் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றனர். அப்படியிருந்தும் அவர்களது ஒரே "குற்றம்" அமைதியான
முறையில் அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்புக்களை ஒழுங்கமைக்க முயற்சித்ததுதான்.
சென்ற புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
PPP-ன் செனட்டர்
மியான் ராசா ரப்பானியும், PPP
ஆயுள் தலைவர் பெனாசீர் பூட்டோவின் அரசியல் செயலாளர் நாஹித் கானும், இந்த கோடைக்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் மோசடி செய்யும் ஒரு நோக்கில் எதிர்க்கட்சியை ஒடுக்குவதற்காக
அரசாங்கம் முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
PPP மீது நடத்திய தாக்குதலானது,
ஒடுக்குமுறையின் ஒரு பரவலான பிரச்சாரத்தின் பாகமாகும். பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான தேசிய
சட்ட சபையின் சபாநாயகர், இந்த வாரம் விடுத்துள்ள எச்சரிக்கையில் முஷாரஃப் ஜனாதிபதியாகவும், பாக்கிஸ்தானின்
ஆயுதப்படைகளின் தலைவராகவும், பணியாற்றுவதை விமர்சிப்பவர்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதிலிருந்து
தடைவிதிக்கப்படும் என்று எச்சரித்தார். மே 3-ல் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை நடத்திய பத்திரிகையாளர்கள்
மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர், அவர்கள் பிரதம மந்திரியின் அரசாங்க இல்லத்திற்கு வெளியில் ஒரு கண்டனப்
பேரணியையும் நடத்தினர். Dawn-ல்
வந்திருக்கின்ற ஒரு தகவலின்படி, போலீஸ் தாக்குதல் ''பத்திரிகை சுதந்திர தினத்தை ஒரு போலீஸ் தினமாக மாற்றிவிட்டது''
மற்றும் ''இஸ்லாமாபாத்திலேயே பத்திரிகை மீது நடத்தப்பட்ட இதுவரை நடைபெற்றிறாத முரட்டுத்தனமான நடவடிக்கை''
இதுவாகும்.
அது பாக்கிஸ்தானில் பெண்களுக்கு உரிமையில்லாத நிலையையும், பெண்களுக்கு எதிரான
ஒதுக்கல் முறைகளை திணிக்கும் மத வலதுசாரிகள் முயற்சிக்கு எதிராக அரசாங்கம் நிற்கத்தவறிவிட்டது, என்று
கவனத்தை ஈர்ப்பதற்காக மனித உரிமை செயலூக்கிகள் மே 14-ல் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்துவந்தனர்.
அந்தப் பேரணியை போலீஸார் முறியடித்தனர், பல டசின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு
கைது செய்யப்பட்டனர். அண்மையில் பஞ்சாப் மாகாண அரசாங்கம், ஆண்களும், பெண்களும் கலந்துகொள்ளும்
விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத சட்டமன்ற உறுப்பினர் தலைமை ஒரு
கும்பலாகச் சென்று தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருதரப்பினரும் கலந்துகொள்ளும் விளையாட்டுப்
போட்டிகளுக்கு தடை விதித்தது.
``பொது நிகழ்ச்சிகளில் மகளிர் பங்கெடுத்துக்கொள்வதை கட்டாயமாக தடுப்பது,
தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் மற்றும் தங்களது செயல்கள் அரசாங்கத்தினால் மன்னிக்கப்படுகின்றன
என்ற ஒரு செய்தியை மரபுவழி சக்திகளுக்கு தந்துவிடும்`` என்று அரசு சார்பில்லாத பாக்கிஸ்தானின் மனித
உரிமைகள் கமிஷன் அறிக்கை ஒன்று அறிவித்திருக்கிறது, மே 14-ல் நடைபெற்ற கண்டனத்தில் போலீசார்
தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்தது.
பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஒரு நீண்டகால நடைமுறையை பின்பற்றி, முஷாரஃப்
ஆட்சி, தொழிலாள வர்க்கத்திற்கும், பாரம்பரிய, ஆளும் வர்க்க கட்சிகளான மிகக்குறிப்பாக பூட்டோவின்
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஷாரஃபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட
நவாஸ் செரீப்பை ஆதரித்து நிற்கும் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்கின் ஒரு பிரிவினர், ஆகியோருக்கு எதிராக
இஸ்லாமிய அடிப்படைவாத வலதுசாரிகளை ஒரு அரணாக வளர்த்துக்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிராக மக்களிடையே
தோன்றிய எதிர்ப்பைப் பயன்படுத்தி தனது ஆதரவை பெருக்கிக்கொண்ட அமைப்பான ஆறு இஸ்லாமியக் கட்சிகள்
கூட்டணியான முத்தாஹிதா மஜீலிஸ் அமல் (Mutahida
Majilis Amal- MMA) திரும்பத்திரும்ப முஷாரஃப்பிற்கு
உதவியாக செயல்பட்டிருக்கிறது, மிக இழிபுகழ் தருகின்ற முறையில் 2003 டிசம்பரில் அரசியல் சட்ட திருத்தங்கள்
பலவற்றை நாடாளுமன்றம் ஒப்புக்கொள்வதற்கு உதவியிருக்கிறது, அந்தத் திருத்தங்கள் 1999-ல் முஷாரஃப்
மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும் அவர் ஜனாதிபதியாக இருப்பதற்கும், 2007-வரை அவரது அதிகாரங்களை
கணிசமான அளவிற்கு உயர்த்துவதையும் சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு அவை வகை செய்தன.
பாக்கிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஏப்ரல் 16-ல் பூட்டோவின் கணவர் ஆசிப்
சர்தாரி நாட்டிற்கு திரும்பியதை வரவேற்பதற்காக பேரணி நடத்துவதை தடுப்பதற்கு பாக்கிஸ்தான் மக்கள் கட்சி
உறுப்பினர்களையும், தலைவர்களையும் கைது செய்தபொழுது, ஒரு மாதத்திற்கு முன்னர் பல
PPP தீவிர
உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். லாகூர் உயர்நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் கவர்னர் மாளிகைக்கு
மறுநாள் ஒரு பேரணியை பாக்கிஸ்தான் மக்கள் கட்சி நடத்துவதிலிருந்து தடுப்பதற்கு போலீஸ் இரண்டாவது தடவை
கைதுகளின் அலையின்பொழுது மற்றவர்கள் மே 4-ல் , கைதுசெய்யப்பட்டனர்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிராக நடைபெற்றுவரும் அரசு ஒடுக்குமுறை
முஷாரஃப் ஆட்சியின் எதேச்சாதிகார தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது-----இந்த ஆட்சியை புஷ்
நிர்வாகம் திரும்பத்திரும்ப பயங்கரவாதத்தின் மீதான போரில் அதன் பங்களிப்பிற்கும், ஜனநாயகத்தை
கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டிற்காகவும் பாராட்டியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் ஆசிய
இயக்குநர் ஏப்ரல் 20-ல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ``அமைதியான கூட்டங்களை தடுப்பதற்கு ஜனநாயகம்
பலாத்காரத்தை பயன்படுத்துவது இல்லை`` என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெகுஜன கைதுகள் முஷாரஃப்பின் பெருகிவரும் பீதி உணர்வை வெளிப்படுத்துகிறது
மற்றும் அவரும் பாக்கிஸ்தான் இராணுவமும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் செரீப்பின் முஸ்லீம் லீக்
ஆகியவற்றிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் நாட்டின் வர்த்தக மற்றும் அரசியல் செல்வந்தத்தட்டின் இதர
உறுப்பினர்களை கொண்டும் அமைத்துள்ள சிவிலியன் அரசாங்கத்திற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
முஷாரஃப்பை, மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் புஷ் நிர்வகம்
மேற்கொண்டுள்ள நவீன-காலனித்துவ ஆக்கிரமிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிற ஒரு கூட்டளியாக பாக்கிஸ்தான்
மக்களின் பரந்த பிரிவினர்கள் சரியாகவே காண்கின்றனர். வாஷிங்டனின் கட்டளைப்படி முஷாரஃப் தனது
கொள்கைகளை மாற்றிக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார், இவற்றில் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு
தரப்பட்ட ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டது மற்றும் இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவது
ஆகியவையும் அடங்கும், இவை நாட்டின் செல்வந்தத்தட்டினரின் பெரும்பகுதியினரை அதிர்ச்சியடைய செய்துவிட்டது,
ஏனென்றால் அவை அவர்களது பாரம்பரிய நலன்கள் மற்றும் அபிலாஷைகளை வெட்டி முறிப்பதாக அமைந்திருக்கிறது.
முஷாரஃப்பும், அவரது பிரதமர், சிட்டிவங்கி முன்னாள் அதிகாரியுமான பிரதமர்
சவுகத் அஜீசும், வழக்கமாக பாக்கிஸ்தான் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
என்று கூறுகின்றனர். ஆனால், பத்திரிகைகளில் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது என்னவென்றால் ஆட்சியின்
தனியார்மயமாக்கல் மற்றும் செலவினங்கள் குறைப்பின் விளைவாக வறுமை வளர்ந்துகொண்டிருக்கிறது மற்றும் சமூக
ஏற்றத்தாழ்வுகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவற்றை மேலும் சிக்கலாக்குகின்ற வகையில் அண்மை மாதங்களில்
திடீரென்று பணவீக்கம் அதிகரித்துள்ளது, தற்போது ஆண்டிற்கு 10 சதவீத மேல் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
தனது ஆட்சியின் செல்வாக்கை பெருக்கிக்கொள்வதற்கான ஒரு முயற்சியாக, பல
மாதங்களாக முஷாரஃப் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைமையுடன் இரகசிய சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி
வருகிறார். 2007-க்கு பதிலாக இந்த ஆண்டிலேயே புதிய தேர்தல்களை நடத்துவதற்கு சம்மதிப்பாரானால்,
இராணுவத் தளபதி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக நீடிப்பதற்கு சம்மதிப்பதாக பூட்டோவும்
சர்தாரியும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு சமரசத்திற்கு வசதி செய்வதற்காக, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும்,
கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கும் இலக்காகி எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த சர்தாரி அவரை சென்ற நவம்பரில்
ஜாமீனில் விடுதலை செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதற்குப்பின்னர் அவர் தனது குடும்பத்தினரை
சந்திக்கவும், பூட்டோவுடன் ஆலோசனை நடத்தவும் வெளிநாடு செல்ல அனுமதித்தது, பூட்டோ பாக்கிஸ்தான்
நீதிமன்றங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு தொடரப்படலாம் என்று அஞ்சி தற்போது துபாயில்
வசிக்கிறார்.
ஆனால் பாக்கிஸ்தான் மக்கள்கட்சி தலைமை முஷாரஃப்புடன் பேச்சுவார்த்தை நடத்த
என்னதான் வளைந்து கொடுத்தாலும், பாக்கிஸ்தான் அரசின் பாதுகாப்பு அரண், இராணுவம் என்று திரும்பத்திரும்ப
கூறிவந்தாலும், பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தனது மக்கள் ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு இயலாத
அளவிற்கு முஷாரஃப் ஆட்சி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
ஏப்ரல் 16-ல் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி சர்தாரிக்கு வரவேற்பு பேரணி
நடத்துவதை சீர்குலைக்கும் வகையில், முஷாரஃப்பிற்கு ஆதரவான பாக்கிஸ்தான்
Quaid-e-Azam
முஸ்லீம் லீக் (PML-Q)
தலைமையில் நடைபெற்று வருகின்ற பஞ்சாப் மாகாண அரசாங்கம், குற்றவியல் நடைமுறை சட்டம் 144-வது
பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த பிரிவு 144 பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் நான்கு அல்லது
அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு எதிராக வடிவமைக்கப்பட்டதாகும்.
ஏப்ரல் 14-ல் தொடங்கி, ஏராளமான பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களும்
கட்சி காரியாளர்களும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில்
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் செயலூக்கமான ஆதரவாளர்கள் கைது செய்வதற்காக பஞ்சாப் தலைநகர் லாகூரில்
25,000-ற்கு மேற்பட்ட போலீசாரும் துணை இராணுவத்தினரும் அணிதிரட்டப்பட்டனர். நாட்டின் பெரும்பகுதியில்
போக்குவரத்து சீர்குலைந்தது, லாகூர் செல்லும் எல்லா ரயில்களும் இரத்து செய்யப்பட்டன, விமானங்கள்
திருப்பிவிடப்பட்டன மற்றும் பஞ்சாப் எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தேசிய சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண
சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 5,000 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக அரசாங்கம்
ஒப்புக்கொள்கிறது. இதர தகவல்கள் பத்தாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றன. லாகூர்
விமான நிலையத்தில் வந்திறங்கியதும் சர்தாரி
சிறிது நேரம் கைது செய்யப்பட்டார், அவர்
BBC-க்கு
பேட்டியளித்தபோது 70,000 பாக்கிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும்
அவர்களில் கணிசமான தரப்பினர் தாக்கப்பட்டனர்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி மாகாண சட்டசபை பெண் உறுப்பினர்
அஸ்மாபுகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற வகையில் தாக்கப்பட்டார் என்று கூறினார்.
ஏப்ரல் 16-க்கு பின் உடனடியாக சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் இதர தலைமை
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இது பாக்கிஸ்தான்
மக்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தொந்தரவு கொடுப்பதற்கு முற்றுப்புள்ளி
வைக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு
MMA உட்பட
அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அபூர்வமான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக்காட்டும்
வண்ணம்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சிமீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஏப்ரல் 22-ல்
செனட் சபையிலிருந்து MMA
உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சி தலைமை சர்தாரி வரவேற்பு பேரணியில் நடத்தப்பட்ட
ஒடுக்குமுறையையும், MMA
நடத்திய அண்மைக்கால "மில்லியன் மனிதன்" தொடர் பேரணிகளில் அரசாங்கம் தலையிடாத அணுகுமுறையையும் ஒப்புநோக்கியுள்ளது,
அந்தப் பேரணி முஷாரஃப் தனது முக்கிய அரசு பதவிகளில் ஒன்றை விட்டுவிட வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது.
அடிக்கடி MMA-க்கு
அரசாங்கம் ஊக்குவிப்பு தந்துவருகிறது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி இஸ்லாமிய
வலதுசாரிகளைப்போல் முஷாரஃப் ஆட்சிக்கு எதிராக நியாயமான நிலையான போராட்டம் நடத்தும் வல்லமை
இல்லாதது. பாக்கிஸ்தானின் உழைக்கும் மக்களுக்கு எதிராக பாக்கிஸ்தானின் ஆளும் செல்வந்தத்தட்டினரின்
சொத்துக்களையும், சலுகைகளையும் இராணுவம் தற்காத்து நிற்கவேண்டும் என்று பாக்கிஸ்தான் மக்கள் கட்சி எதிர்பார்க்கிறது
மற்றும் அரசியல் அதிகாரத்தின் மீது இராணுவத்தின் பிடியை தளர்த்துவதற்கு அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய
அரசுகளின் ஆதரவிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
பூட்டோவும் சர்தாரியும் முஷாரஃப்பிடம் ஒரு பேரத்திற்கு வராமல் இருப்பதற்கு காரணம்,
உண்மையான அதிகார நடவடிக்கையை பிரித்தல் மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியுடன் முஷாரஃப் நடத்தும்
பேரம் ஆகியவற்றிற்கு எதிராக முஷாரஃப்பின் இராணுவ ஆதரவு முஸ்லீம் லீக்கில் உட்கட்சி கிளர்ச்சி போன்றதொரு
நிலையை தாண்டிவிடும் என்ற அச்சத்தினால்தான்.
பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிரான அரசாங்க நடவடிக்கை தொடங்கி இரண்டு
வாரங்களுக்கு பின்னர் சர்தாரி தன்னை இராணுவ ஆட்சியிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள முயன்றார். "கொல்லைப்புற
வழியாக" அரசியல் அதிகாரத்தை பெறுவதில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கு அக்கறையில்லை என்று குறிப்பிட்டார்.
ஆனால் அவரது கருத்துக்கள் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் உண்மையான பங்களிப்பை ஆட்சி முறையை காட்டுவதாக
அமைந்திருக்கிறது. வெகுஜன ஆதரவை திரட்டுவதற்காக மக்களை கவரும் வாய்வீச்சில் ஈடுபடுகின்ற பாக்கிஸ்தான்
மக்கள் கட்சி பாக்கிஸ்தானின் முதலாளித்துவத்தை சார்ந்த ஒரு பிரிவிற்காக குரல் கொடுக்கிறது.
Dawn
தந்திருக்கின்ற தகவலின்படி, பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் 'நிர்வாகத்தில் இருக்கின்ற மக்கள்' குழப்பத்தில்
இருப்பதாகவும், அவர்களுக்கு இந்த நிலையிலிருந்து வெளியேற ஒரு வழியை அமைத்துத்தர விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
Top of page |