World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French electorate rejects European constitution

பிரெஞ்சு வாக்காளர்கள் ஐரோப்பிய அரசியலமைப்பை நிராகரிக்கின்றனர்

By Peter Schwarz
30 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிறன்று, ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு பற்றி பிரான்சில் நடந்த வாக்கெடுப்பின் முடிவுகளைப்பற்றி கீழே ஒர் ஆரம்ப அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பை பற்றிய விரிவான பகுப்பாய்வும் அதன் அரசியல் தாக்கங்களும் செவ்வாயன்று வெளியிடப்படும்.

பிரான்சின் வாக்காளர்கள் ஞாயிறன்று நடந்த தேசிய வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அரசியலமைப்பை மிக உறுதியுடன் நிராகரித்துள்ளனர். 56 சதவீதத்திற்கும் மேலானவர்கள் "வேண்டாம்" வாக்களித்த நிலையில் 44 சதவீதத்தினர் அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வாக்கு பதிவிற்கு வந்த வாக்காளர்கள் எண்ணிக்கையும் அசாதாரணமாக உயர்ந்திருந்து. ஓராண்டிற்கு முன், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல்களில் 43 சதவீத வாக்காளர்கள்தான் வந்திருந்தனர் என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த வாக்கெடுப்பில் 70 சதவிகித வாக்காளர்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு செய்ய வந்திருந்தனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புக்கள் அரசியலமைப்பிற்கு ஒரு தோல்வி ஏற்படக்கூடும் என்று முன்கூட்டியே ஊகித்திருந்தது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் அரசியல் செல்வந்தத்தட்டுக்களுக்கு இந்த முடிவு பெரும் அதிர்ச்சியாகும். ஐரோப்பிய அரசியல் அமைப்புமுறை முழுவதையும் ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு இது தள்ளியுள்ளது.

ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் அவருடைய பழமைவாத UMP கட்சிக்கு மட்டுமின்றி, சிராக், மற்றும் பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃப்ரனுடன், அரசியலமைப்பிற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இணைந்திருந்த சோசலிஸ்ட் கட்சிக்கும் மக்கள் கொடுத்த தீவிர மூக்கறுப்பின் தன்மையை இந்த வாக்கு பிரதிபலித்துள்ளது. பசுமைக் கட்சியும் உத்தியோகபூர்வமான "வேண்டும்" முகாமில் இருந்தது என்பதுடன் செய்தி ஊடகத்தின் பெரும் ஆதரவும் இம்முகாமிற்கு இருந்தது.

நாட்டின் பாதுகாப்பு மந்திரியான Michele Alliot-Maine (UMP). இந்த முடிவு "ஐரோப்பாவிற்கு ஒரு தோல்வி, பிரான்சிற்கு ஒரு தோல்வி." என்று கூறினார். சோசலிஸ்ட் கட்சியின் Dominique Strauss-Kahn, இந்த முடிவை "ஒரு தீவிர தோல்வி, ஐரோப்பாவிற்கு ஒரு கெட்ட செய்தி" என்று குறிப்பிட்டுள்ளார். லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரியும் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருமான Jean-Claude Juncker, இம்முடிவைக் கண்டு தான் "குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகவும்", முடிவு "ஒரு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பிற்கு எதிராக மிகப் பெரிய வாக்குகள் விழுந்துள்ளதற்கு முக்கிய காரணி, அரசியலமைப்பில் உள்ள "சுதந்திர சந்தை" நோக்குநிலைக்கு பரந்த முறையில் மக்களுடைய எதிர்ப்பு இருந்ததும், இன்னும் கூடுதலான முறையில் வேலைகள் மீது தாக்குதல், வாழ்க்கைத்தரங்கள், நலன்புரி அரசு தகர்ப்பு ஆகியவற்றிற்கு இது மாதிரியாக இருக்கும் என்ற கருத்து இருந்ததும்தான். அரசிலமைப்பிற்கு எதிர்ப்பு சிராக் மற்றும் ரஃபரன் மற்றும் அவர்களுடைய வலதுசாரி சமூகச் செயற்பட்டியல் ஆகியவற்றுடனான சமூக அதிருப்தியுடன் நிறைந்துள்ளது மற்றும் அதனால் தூண்டிவிடப்பட்டது.

இந்த வாக்கெடுப்பிற்கு முன் மிகப் பரந்த அளவில் அரசியல் நடவடிக்கைகள் திரட்டப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கானவர்கள், சில சமயம் ஆயிரக்கணக்கானவர்கள்கூட, நாடு முழுவதும் அரசிலயமைப்பு பற்றி ஆதரவாகவோ, எதிர்த்தோ நடைபெற்ற பல விளக்கக் கூட்டங்களுக்கு வந்திருந்தனர். வியாழக்கிழமை இரவு "அதி இடது" என்று அழைக்கப்படும், பாராளுமன்றத்தில் இடம் பெறாத கட்சிகள் உட்பட அனைத்துப் பெரிய கட்சிகளுடைய பிரதிநிதிகளும் ஒரு மூன்று மணி நேரத் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பெற்றிருந்தனர்.

விவாதம் கூடுதலான பரந்த தன்மையைக் கண்டபோது, இன்னும் கூடுதலான வகையில் சமூக, ஜனநாயக பிரச்சினைகள் முக்கியத்துவத்தை பெற்றன. புகலிடம் கோருவோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி நுழைவதற்கு விரோதம் காட்டுபவர்கள், சட்டம், ஒழுங்கு பிரச்சினை எழுப்புவர்கள் என்று "வேண்டாம்" முகாமின் தீவிர வலதுசாரி கூறுபாட்டின் பிரச்சாரப் பிரச்சினைகள் பின்னணிக்கு தள்ளப்பட்டு, அரசியலமைப்பின் "புதிய தாராள" பொருளாதாரக் கொள்கை அடிப்படை மற்றும் ஜனநாயக விரோத கூறுபாடுகள்தான் முன்னே கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.

பழமைவாதக்கட்சிகளும் அவர்களின் சோசலிஸ்ட் கட்சி கூட்டாளிகளும் இந்த ஒளியில் அரசியல் அமைப்பிற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முயற்சி இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், "வேண்டாம்" வாக்கு "ஐரோப்பாவிற்கு எதிராக" வழிநடத்தப்படவில்லை. அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் அரசியலமைப்பிற்கு எதிராக, மீண்டும் மீண்டும் பலமுறை மக்களிடையே முன்னெடுக்கப்பட்டிருந்த மிகப் பிரபல்யமான வாதங்களுள் ஒன்று, பிரெஞ்சு மக்கள் இதை நிராகரிப்பதன் மூலம் ஐரோப்பா முழுவதிலும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு பலத்த தாக்குதல் கொடுப்பதாக இருக்கும் என்பதாகும்.

ஆரம்பத்தில் செய்தி ஊடகம், அரசியலமைப்பிற்கு எதிராக அளிக்கப்பட்டிருந்த பரந்த வாக்கை, அரசாங்கத்திற்கு எதிரான சீற்றத்தின் காரணமாகத்தான் என்று சுட்டிக்காட்ட முற்பட்டது. ஆயினும், அத்தகைய கருத்துக்கள் வாக்காளர்களின் உண்மையான நோக்கங்களை தவறாக கூறுபவை ஆகும்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு என்பது, வேண்டாம் வாக்கு ஆதரவின் வளர்ச்சியில் ஒரு முக்கி பங்கை கொண்டிருந்தது. ஆனால் இது ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக இயக்கப்பட்டது என்ற உண்மை தற்செயல் நிகழ்வு அல்ல. சிராக் மற்றும் ரஃபரன் ஆகியோரால் ஊக்குவிக்கப்பட்டிருந்த கொள்கைகளின் ஒரு பொதிந்த வடிவம்தான் அரசியலமைப்பு ஆகும். இந்த சமூக விரோத கொள்கைகளை நிராகரிக்க வாக்கெடுப்பு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படலாம் என்ற நிலையை மக்கள் உணரத் தொடங்கியவுடன், மக்கள் எதிர்ப்பு அலை நிறுத்த முடியாததாகிவிட்டது.

நடைமுறையில் உள்ள சோசலிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிகள் என்று நடைமுறையில் இருக்கும் கட்சிகள், "வேண்டாம்" வாக்கு ஆதரவு அலையை பின்னடையச் செய்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் அவற்றிற்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இவ்விதத்தில் வாக்கெடுப்பு மக்களின் பரந்த அடுக்குகளுக்கும் முழு அரசியல் நடைமுறைக்கும் இடையில் எவ்வளவு ஆழமான பிளவு உள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு சமுதாயத்தில் இருக்கும் சமூகப் பிளவுகளைத்தான் வாக்கெடுப்பு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

ஒரு கருத்துக் கணிப்பின்படி, அனைத்து கூலித் தொழிலாளர்களில் நான்கில் மூன்கு பங்கினரும் அனைத்து பணியாளர்களில் மூன்றில் இரு பங்கினரும் மற்றும் விவசாயிகளில் பெரும்பாலானவர்களும் "வேண்டாம்" என வாக்களித்ததாக தெரிகிறது; நிர்வாகிகளும், உயர் கல்வியாளர்களும் பொதுவாக "வேண்டும்" என வாக்களித்ததாக தெரிகிறது. அரசாங்க கட்சிகளின் ஆதரவாளர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் (சிராக்கின் UMP மற்றும் UDF, தடையற்ற சந்தையை விரும்பும் பிரெஞ்சு ஜனநாயக தாராளவாத ஒன்றியம்) அரசியலமைப்பு வேண்டும் என்று வாக்களித்தனர்; சோசலிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் "வேண்டாம்" என வாக்களித்ததாக கூறப்படுகிறது; இது முறையே அக்கட்சிகளின் தலைமையிடங்களின் விருப்பத்திற்கு மாறானது ஆகும்.

இந்த வாக்கெடுப்பு பிரெஞ்சு அரசியலை ஆழ்ந்த முறையில் அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உட்படுத்தியுள்ளது; அதன் எதிர் அதிர்வான விளைவுகள் நீண்ட காலத்திற்கு உணரப்படும்.

முடிவு வந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, சிராக் தொலைக்காட்சியில் தோன்றி அரசாங்கம், அதன் முன்னுரிமைகள் பற்றிய முக்கியமான முடிவுகளை சில நாட்களுக்குள் அறிவிப்பதாக கூறினார்: இதன் பொருள் அவர் பிரதம மந்திரி ரஃப்ரனை பதவியில் இருந்து விலக்குவார் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிகிறது. ஆயினும், UMP க்குள் இருக்கும் பிரச்சினைகளை இது தீர்க்காது; அதில் ஏற்கனவே கட்சித் தலைவர் நிக்கோலா சார்கோசிக்கும் சிராக் முகாமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சோசலிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ தலைமை, பொதுவாக முந்தைய பிரதம மந்திரி லியோனல் ஜொஸ்பனை பின்பற்றுபவர்கள் ஆவர்; அவர்கள் "வேண்டும்" பிரச்சாரம் நடத்திய வகையில் இழிவிற்காளாகியுள்ளனர். இக்கட்சி இப்பிரச்சினையை பொறுத்தவரையில் பெரும் பிளவை கொண்டுள்ளது, உடைந்து போகவும் கூடும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில், ஐரோப்பிய சமூகத்தின் மூல ஆறு உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரான்சில் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளமை ஒரு நீண்ட கால நெருக்கடிக்கான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் மொத்தமாக சிதறுண்டுபோவதை அது ஆரம்பிக்காதிருந்தால், மேலும் அரசியல் ஒருங்கிணைப்பு என்பது கணிசமான காலத்திற்கு தடைப்படலாம்.

See Also:

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பு மீதான "வேண்டாம்" வாக்கிற்கு அமியான் பேரணி
பிரெஞ்சு இடதும், தவிர்க்கும் அரசியல் முறையும்

ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றி பிரான்சில் வாக்கெடுப்பு: உத்தியோகபூர்வமான விவாதம்

பாரிஸ் கூட்டத்தில் வாக்கெடுப்பிற்கு முன்னதாக
ஐரோப்பிய அரசியலமைப்பிற்கான வாக்கெடுப்பில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் "வேண்டாம்" வாக்காளர்களைத் தூற்றுகின்றனர்

ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு : ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி தலைமைதாங்குகிறார்

பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது தோல்வியை தழுவுகிறது

பிரெஞ்சு இடதும் ஐரோப்பிய அரசியலமைப்பு மீதான கருத்தெடுப்பும்

ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பிற்கான ஸ்பெயினின் வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்

Top of page