WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
US woos India with support in becoming a
"world power"
ஒரு "உலக வல்லரசாக'' ஆவதில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு தந்து ஊடாடுகிறது
By Keith Jones
22 July 2005
Back to screen version
"தங்களது நாடுகளின் உறவுகளை ஒரு ''பூகோள பங்குதாரராக'' மாற்றுவதற்கு தாங்கள்
தீர்மானித்திருப்பதை, "இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க ஜனாதிபதி, ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷூம் திங்களன்று
வெளியிட்ட கூட்டறிக்கையில் பிரகடனப்படுத்தினர்.
பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் இராணுவ உறவுகள் உட்பட கூடுதல் இந்திய
அமெரிக்க "மூலோபாய பங்குதாரர் முறையை''' ஏற்படுத்த வேண்டுமென்று பல ஆண்டுகளாக, இந்திய மற்றும் அமெரிக்க
அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த பங்குதாரர் முறை திடீரென்று பூகோள பரிமாணங்களை பெற்றுவிட்டது, புஷ்சும்
சிங்கும் அதை ''உலகம் முழுவதிலும் அமைதியையும், செல்வச் செழிப்பையும், ஜனநாயகத்தையும், ஸ்திரத்தன்மையையும்
முன்னேற்றத் துணைபுரியும் வழி என்று தரகுவேலைசெய்து வருகின்றனர்."அது மிக வேகமாக மாறிக்கொண்டு வருகின்ற புவியியல்-
அரசியல் மற்றும் பொருளாதார இயல் காட்சிகளை சுட்டிக்காட்டுகிறது.
புஷ் நிர்வாகம் இந்தியாவின் நட்பைப் பெறுவதில் ஆர்வத்துடன் உள்ளது, இந்திய-அமெரிக்க
பொருளாதார, புவியியல்-அரசியல் மற்றும் இராணுவத் தொடர்புகள் மூலம் இந்தியா சீனாவிற்கு எதிர்-எடையாக மாற்றக்கூடிய
சாத்தியமுள்ளதாகவும் அமெரிக்காவின் புறநிலைகளுக்கும், அழுத்தங்களுக்கும் வளைந்து கொடுக்கின்ற ஒன்றாகவும் மாற்ற
முடியுமென்று நம்புகிறது. இந்தியா அவுட்சோர்சிங் வர்த்தக நிகழ்ச்சிபோக்கு, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செயல்முறைகள்
மற்றும், நாட்டில் வளர்ந்துவரும் இராணுவ வலிமை மூலம் ஒரு பெரிய மையமாக இந்தியா உதித்தெழுந்து வருவதால்,
உற்சாகமூட்டப்பட்ட நிலையில் இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வந்தத்தட்டினர், இதற்கிடையில், ஐ.நா
பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர இடம் கிடைப்பது உள்பட உலக வல்லரசு அந்தஸ்திற்கு தன்னை நிலைப்படுத்திக்கொள்ள
முடியுமென்று ஆவல் கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரத்தில் மன்மோகன் சிங் மேற்கொண்ட நான்குநாள் விஜயத்தின்போது இந்திய-அமெரிக்க
உறவுகள் பெருகிக்கொண்டு வருவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கு புஷ் நிர்வாக அதிகாரிகள் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டனர்.
வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளித் தோட்டத்தில் மிக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவில் புஷ் இந்திய
பிரதமரை வரவேற்றார், மாலையில் ஒரு அரசு விருந்தளித்து அவரைப் பாராட்டினார். செவ்வாயன்று, சிங் அமெரிக்க
நாடாளுமன்ற இருசபைகளின் கூட்டுக் கூட்டத்தில், வெளிநாட்டு தலைவர்களுக்கு மிக அபூர்வமாக வழங்கப்படும் ஒரு கெளரவிப்பில்
சிங் உரையாற்றினார்.
2004 மேயில் பிரதமராக ஆன பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது அமெரிக்க
விஜயத்தின்போது சிங் புஷ்சையும் அவரது நிர்வாகத்தையும் அசாதாரணமாக நீண்டு புகழ்ந்துரைப்பதில் கடந்து சென்றார்.
அவர், "சர்வதேச பயங்கரவாதத்தின் அறைகூவல்களை சந்திப்பதில் அவரது தளராத உறுதி மற்றும் தலைமைக்காக,
"பயங்கரவாதத்திற்காக" போரிடுகிறோம் என்ற பெயரால், ஆப்கனிஸ்தானையும், ஈராக்கையும் வென்று
கைப்பற்றுவதற்கு அமெரிக்கா படையெடுக்க கட்டளையிட்ட மற்றும், ஜனநாயக உரிமைகள் மீது தீவிரமான தாக்குதல்களை
தொடுத்த, ஜனாதிபதியை புகழ்ந்துரைத்தார்.
அவரது சொந்த காங்கிரஸ் கட்சியைப்பற்றி சொல்லவே வேண்டாம், இந்திய
அரசாங்கங்கள் பாரம்பரியமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போக்கை மேற்கொள்வதாக காட்டிக்கொள்வதற்கு
விடைகொடுக்கும்விதமாக, சிங் திரும்பதிரும்ப இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவுகின்ற பொதுவான
மதிப்புகள் குறித்து பேசினார் மற்றும் அமெரிக்கா சிறப்பாக "நமது சமுதாயங்கள் மற்றும் பொருளாதாரங்களின்
வெளிப்படைத்தன்மை.... நமது பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் நமது சுதந்திரம்" உள்பட சில
அடிப்படைகளை பகிர்ந்துகொள்வதாக பாராட்டினார். இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச பயங்கரவாதத்தின்
பாதிப்பிற்கு இலக்கான இரட்டையர்கள், இருவரும் உலகம் முழுவதிலும் ஜனநாயக நெறிமுறைகளை வளர்ப்பதில்
பொதுவானதொரு அக்கறை கொண்டிருப்பதாகவும் சிங் வர்ணித்திருப்பது புஷ் நிர்வாகத்தின் வாய்வீச்சை எதிரொலிப்பதாக
உள்ளது என்பதை சிங்கின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எவரும் புரிந்து கொள்ளாமல் இல்லை.
தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தில் புதன் கிழமையன்று ஆற்றிய ஒரு உரையில் சிங்,
ஈராக் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான எதிர்ப்பை சுருக்கமாக குறிப்பிட்டார்,
ஆனால், இந்த சர்ச்சை, "கடந்தகால நிகழ்ச்சி" என்று மட்டுமே கூறினார். எனவே அவர் அதன்மூலம் ஈராக் இன்னமும்
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது மற்றும் புஷ் நிர்வாகம் முன் கூட்டியே தாக்குதல் நடத்தும் தத்துவத்தில் ----
அதாவது, சர்வதேச சட்டத்தை துச்சமாக மதித்து தனது நலன்களுக்கு அச்சுறுத்தலாக வரக்கூடும் என்று கருதப்படுகின்ற
எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் தடையில்லா உரிமை பற்றியதில் இன்னமும் உறுதியாக
உள்ளது என்ற உண்மையை அலட்சியம் செய்தார்.
புஷ்சும், சிங்கும் வெளியிட்ட கூட்டறிக்கை, பல்வேறு விவரங்களுக்கு இடையில், ஒரு
CEO அரங்கை
அமைப்பதற்கு அழைக்கிறது, அது இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தக தலைவர்கள் வர்த்தகம் மற்றும் முதலீட்டை வளர்ப்பதற்கு
வகைசெய்கிறது, இந்தியா தனது "முதலீட்டு சூழ்நிலைகளை உயர்த்துவதற்கு" நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறது------தனது உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமாக்குவதற்கு அமெரிக்க முதலீட்டை பயன்படுத்திக்கொள்ள
அது விரும்புமானால்----- தனியார்மயமாக்கல், நெறிமுறைகளை தளர்த்துவது, பாதிப்பு ஏற்படும் வகையில்
தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது ஆகியவற்றை கடுமையாக இல்லாமல் சற்று மிதமாக சொல்கின்ற வார்த்தை - அமெரிக்க
- இந்திய ஒத்துழைப்பை ''இந்தியாவில் ஒரு ஸ்திரமான திறமையான எரிசக்தி சந்தையை'' அபிவிருத்தியடைய பயன்படுத்துவது,
உயர் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிகளில் பொது-தனியார் பங்குதாரர் முறைகொள்வது, மற்றும் அமெரிக்க- இந்திய
பூகோள ஜனநாயக முயற்சியை உருவாக்குவது, அதில் அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கம் ''ஜனநாயக'' அமைப்புக்களை
வளர்த்துக்கொள்ள விரும்புகிற நாடுகளுக்கு உதவியை வழங்க இணைந்து பணியாற்றுவதுமாகும்.
சென்ற மாதம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி மற்றும் அமெரிக்க
பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் உட்பட இந்திய மற்றும் அமெரிக்க தலைமை அதிகாரிகளுக்கிடையில்
கையெழுத்திடப்பட்ட "அமெரிக்க-இந்திய பாதுகாப்பு உறவு தொடர்பான புதிய கட்டமைப்பை" இரண்டு நாடுகளும்
ஆதரிப்பது என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது. அந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் இந்தியாவில் அதிக
விவாதத்தை தூண்டிவிட்டிருக்கிறது. இடது முன்னணி, ஆட்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நீடிப்பதற்கு தனது வாக்குகளை
தந்து ஆதரித்து வருகிறது மற்றும் இந்திய அரசியல் மற்றும் இராணுவ பாதுகாப்பு ஸ்தாபனங்களின் பரந்த பிரிவுகள் இந்த
கட்டமைப்பை எதிர்க்கின்றன. அல்லது அவற்றில் இடம்பெற்றுள்ள பிரிவுகள், இந்த அடிப்படை இந்தியாவின் அரசியல் மற்றும்
இராணுவ சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக கருதுகிறது. குறிப்பாக ஐ.நா அங்கீகாரம் பெறாத வெளிநாட்டு
நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகளோடு சேர்த்து இந்திய இராணுவம் அனுப்பக்கூடும் என்ற ஆலோசனைக்கு எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர் மற்றும் சில அமெரிக்க கொள்கை நிபந்தனைகள் முதல் அமெரிக்க இராணுவத் தளவாடங்களை வாங்குவது
வரை இருதரப்பையும் கட்டுப்படுத்தும் அல்லது எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் ஒப்பந்தப் பிரிவுகளை அவர்கள்
எதிர்க்கின்றனர்.
இந்தியாவிற்கு ஒரு தனித்தன்மைவாய்ந்த அந்தஸ்து
என்றாலும், இந்தவாரக் கூட்டறிக்கையில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால்,
புதுதில்லிக்கும், வாஷிங்டனுக்குமிடையில் ஒரு ஒப்பந்தமாகும், அவற்றின் நோக்கம் சிவிலியன் அணு தொழில்நுட்பத்தையும்
எரிபொருளையும் இந்தியாவிற்கு விற்பதற்கான சர்வதேசத் தடையை நீக்குவதாகும், அப்போது இந்தியா முதலில் ஒரு
அணுகுண்டை வெடித்தபொழுது 1974 முதலிருந்து அவற்றை திணித்து வந்தது.
1998-ல் இந்தியா தன்னை அதிகாரபூர்வமாக அணு ஆயுதங்கள் நாடு என்று
பிரகடனப்படுத்தி கொண்டது, அது ஒரு அரசு அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கான சட்டபூர்வமாக உரிமையான (1968
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த விதிகளை மீறுவதாகும்). புஷ் நிர்வாகம் இந்தியாவை அணுசக்தி நாடு என்று
அங்கீகரிக்கவில்லை. ஆனால் சர்வதேச ஒப்பந்தத்திலும் அணு தொழில்நுட்பம் தொடர்பான நெறிமுறை திட்டத்திலும்
இந்தியாவிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது----- புஷ்-சிங் அறிக்கை
குறிப்பிட்டது என்னவென்றால், "மிக முன்னேறிய அணு தொழில்நுட்பத்தில் ஒரு பொறுப்பான அரசாகும்"---- இந்தியா
சில கட்டுப்பாடுகளுக்கும், சிவிலியன் அணுத் திட்டத்தை சர்வதேச கண்காணிப்பிற்கு உட்படுத்தவும் இந்தியா
சம்மதிக்குமானால், இதர அணுசக்தி நாடுகளும் அமெரிக்க நாடாளுமன்றமும் சம்மதிக்குமானால் இது வழங்கப்படும் என்று
அந்த கூட்டறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை ஒரு பெரும் முன்றேற்ற நடவடிக்கை என்று இந்திய அரசாங்க அதிகாரிகள்
பிரகடனப்படுத்துகின்றனர். வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண் ஊடகங்களுக்கு சுருக்கமாக கூறினார், "அனைத்து
நடைமுறை நோக்கங்களை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இப்போது இதில் அங்கீகாரத்தை அமெரிக்காவால் நாம்
அடைந்திருப்பது என்னவென்றால், இந்தியா ஒரு அணு ஆயுத அரசிற்கு இணையான அதே உரிமைகளையும் சலுகைகளையும்
பெறும்"
இந்தியா, தனது அணு மின்சார உற்பத்தியை பெருக்குவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது,
ஏனெனில் வெளிநாட்டு எண்ணெயை பெருமளவில் சார்ந்திருக்கிறது மற்றும் அவற்றினை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்றால்
வெளிநாட்டு அணு ஆயுத தொழில்நுட்பமும், எரிபொருளும் தேவைப்படும்.
புதுதில்லியும் வாஷிங்டனும் கருத்தில் எடுத்துக்கொண்ட இரண்டாவது பெரிய உண்மை
என்னவென்றால், இந்தியாவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடைகள் இந்தியா சர்வதேச அணு நெறிமுறை ஆட்சிக்கு
வெளியில் செயல்பட்டு வருகிறது என்ற அடிப்படையில் விதிக்கப்பட்ட தடைகளில் அமெரிக்காவின் மிக முன்னேறிய நுட்பமான
இராணுவத்தளவாடங்கள் விற்பனையும் அடங்கும். அமெரிக்காவை தளமாகக்கொண்ட புலனாய்வு அறிக்கையான
Stratfor
அதிகாரபூர்வமாக சொல்வது என்னவென்றால், பென்டகன் அதிகாரபூர்வமாக கசியவிட்டதில் இந்தியாவிற்கு
விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டுவிட்டால், அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து 5 பில்லியன் டாலர்கள்
அளவிற்கு இந்தியா ஆயுதங்களை வாங்கி பயன்படுத்தவிருக்கிறது, இதில் இந்து மகா சமுத்திர கப்பற்படை
பாதுகாப்பதற்காக ஏவுகணை தொழிற்நுட்ப-எதிர்ப்பு மற்றும் நீர்மூழ்கி கப்பல்-எதிர்ப்பு முன்னெடுத்து செல்வதும்
அடங்கும்.
இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பதில் உற்சாகத்தை ஏற்படுத்தும் புஷ் நிர்வாகம் இரண்டு
நோக்கங்களை கொண்டது. அது அமெரிக்க ஆயுதத்தொழில்துறையை ஊக்குவிக்க விரும்புகிறது என்று சொல்லத்
தேவையில்லை, ஆனால் இந்தியா அமெரிக்க இராணுவ தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கிறது என்ற நிலையை உருவாக்குவதில்
மிகத் தீவிரமாக ஆர்வம் கொண்டிருக்கிறது.
அமெரிக்க - இந்திய உறவுகளில் மாற்றம்
இந்தியாவை ஒரு உலக வல்லரசாக மாற்றுவதற்கு அமெரிக்கா உதவும் என்று கடந்த
மார்ச்சில் இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொண்டலிசா ரைஸ் வழங்க
முன்வந்திருந்த உதவி முயற்சிக்கு சர்வதேச அணு நெறிமுறை ஆட்சியின் கீழ் ஒரு சிறப்பு அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்க
வகை செய்வதுதான் புஷ் நிர்வாகத்தின் திட்டமாகும்.
இங்கே அமெரிக்க-இந்திய உறவுகளின் சிக்கல் நிறைந்த வரலாற்றை திரும்ப சொல்வதற்கு
இடமில்லை. ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் கடந்த நான்கு தசாப்தங்களாக முரண்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது,
ஏனெனில் இந்திய தேசிய முதலாளித்துவ வர்க்கம் பிரிட்டனிலிருந்து சுதந்திரத்தை வென்றெடுத்த பின்னர், அதன் வெளியுறவு
கொள்கை சோவியத் ஒன்றியத்துடன் அமெரிக்க குளிர் யுத்த மோதல் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற
அமெரிக்காவின் கோரிக்கைக்கு அடிபணிய மறுத்துவிட்டது. அதற்கு பின்னர் இந்தியாவின் கசப்பான தெற்கு ஆசிய எதிரியான
பாக்கிஸ்தானை தனது குளிர் யுத்த கூட்டணி முறையில் ஒரு அச்சாணியாக வாஷிங்டன் ஆக்கிக் கொண்டது, அதன் விளைவாக
சோவியத் ஒன்றியத்துடன் இந்தியா நெருக்கமான இராணுவ மற்றும் பொருளாதார உறவை உருவாக்கிய நிலை ஏற்பட்டது.
இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வெளியுறவு கொள்கை ஒரு தேசிய
பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தை பின்பற்றுகின்ற தனது முயற்சியோடு பின்னிப் பிணைத்து கொண்டிருந்தது, அது,
முன்னேறிய முதலாளித்துவ வல்லரசுகள் பொருளாதார ஆதிக்கம் செலுத்துவதை குறைக்கின்ற வகையில் ஏற்றுமதிக்கு பதிலாக
உள்நாட்டு உற்பத்திகளை மேற்கொள்வதிலும் நியாயமான அரசிற்கு சொந்தமான தொழில்களை நடத்துவதிலும்
அடங்கியிருந்தது.
குளிர் யுத்தம் முடிந்தவுடன் பூகோள பொருளாதார வளங்களிலிருந்து அது
தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால் இந்திய பொருளாதாரத்தில் நெருக்கடி வளர்ந்தது, அதனால் இந்திய முதலாளித்துவ
வர்க்கம் 1991 முதல் முற்றிலும் மாறுபட்ட மூலோபாயத்தை கடைப்பிடித்தது, அது பூகோள முதலீடுகளின் ஒரு
மலிவுக்கூலிக்கான புகலிடமாக இந்தியாவை மாற்றுகின்ற வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாக
கொண்டது. இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்துடன் சேர்ந்து, இந்தியா சுதந்திரம் பெற்ற
பின்னர் முதல் தசாப்தங்களில் பாரம்பரியமாக தேசிய அளவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை
சிதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கும் தரப்பட்டிருந்த குறைவான சலுகைகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அமெரிக்கா இந்தியாவின்
தனிப்பட்ட மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக ஆயிற்று மற்றும் மிகப்பெரும் வெளிநாட்டு முதலீட்டாளராகவும் உருவானது
மற்றும் அதிகரித்தளவில், கூட்டு இராணுவ நடவடிக்கைகள் உட்பட வாஷிங்டனுக்கும், புதுதில்லிக்கும் இடையில் விரிவடைந்த
உறவுகள் வளர்ச்சியுற்றன.
அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியாவை ஒரு கூட்டணியினராக தழுவிக்கொள்வது
அதிகரித்தது. ஏற்கனவே கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் தெற்கு ஆசியா தொடர்பாக அமெரிக்காவின் போக்கில் ஒரு
பெரிய மாற்றம் ஏற்பட்டது மற்றும் வாஷிங்டன் பாக்கிஸ்தானிடமிருந்து விலகிச் சென்று இந்தியாவுடன் நெருங்கி வந்தது.
சீனாவின் அதிகாரம் வளர்ந்து வந்ததால், அதன் அச்சம் காரணமாக புஷ் நிர்வாகம் 2001-ல் ஆட்சிக்கு வந்தது முதல்
இந்திய உறவுகளை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்றது. ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பது என்ற
அமெரிக்க முடிவினாலும் மற்றும் அதற்கு பின்னர் பாக்கிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளை குறிப்பாக பாக்கிஸ்தான்
இராணுவத்துடன் நெருக்கமான உறவுகளை மீண்டும் நிலைநாட்டியதன் மூலம் இந்தியாவை, "ஒரு மூலோபாய
பங்குதாரராக" சேர்த்துக் கொள்வதற்கான புஷ் நிர்வாகத்தின் முயற்சிகள் சிக்கலடைந்தன.
ஆனால் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள முன்னணித் தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தது----
இந்தியாவை ஒரு ''உலக வல்லரசாக'' ஆக்குவதில் ரைஸ் தந்த உறுதிமொழியை உதாரணமாக எடுத்துக்கொண்டு
பார்த்தால்---- இந்தியாவுடன் ஒரு பங்குதாரரர் முறையை ஏற்படுத்திக் கொள்ள பின்தொடருதல், அதன் உலக
புவிசார்அரசியல் மூலோபாயத்தின் மையமாக அமைந்தது.
மே மாதம், அமெரிக்க அரசுத்துறை படிமுறையில் மூன்றாவது பெரிய பதவியில் இருக்கும்,
அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நிக்கோலஸ் பேர்ன்ஸ் அமெரிக்க - இந்திய உறவுகள் பற்றி
கூறும்போது, "நமது ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை செயலாளரின் ஒரு பிரதான குவிமையப்படுத்துதல் என்ன
என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிக தீவிர மாற்றத்தை குறிப்பதாக
அமையும்" என்று குறிப்பிட்டார்.
அதி முக்கியம் வாய்ந்த பூகோள "ஊசலாட்ட அரசு"
அண்மையில் CIA
வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவை மிக முக்கியமான உலகத்தின் புவிசார் அரசியல் முறையில், "ஊசலாட்ட அரசு"
என்று குறிப்பிட்டிருந்தது - அதாவது ஒன்று அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்ளும் அல்லது அமெரிக்காவிற்கு எதிரான
கூட்டணியில் ஒரு தரப்பாக, சேர்ந்து கொள்ளும்- என்று பொருள். இந்த முக்கியத்துவத்திற்கு ஒரு அடையாளமாகத்தான்
வாஷிங்டன் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான அதிகாரம் படைத்த பிரிவுகள் "இந்தியா துருப்புச் சீட்டை"
பயன்படுத்துகின்றன.
பெரிய வல்லரசுகள் வளங்களை தேடி தங்களது போராட்டத்தை
தீவிரப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சந்தைகளையும் புவிசார் அரசியல்
அனுகூலங்களையும் பெறுவதற்கு முயற்சிக்குமா? என்ற சந்தேகங்கள் தவறானவை அல்ல. இந்திய அரசியல் மற்றும்
தேசிய-பாதுகாப்பு ஸ்தாபனத்தில் இடம் பெற்றுள்ள பலர் அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்தும் புறநிலைகள் குறித்தும்
ஆழமாக சந்தேகிக்கின்றனர். இந்த கவலைகள் புஷ் நிர்வாகத்தின் போர்வெறிக்கூச்சல் மற்றும் ஒருதலைபட்சமான
போக்கால் மேலும் தீவிரமடைந்தே வந்திருக்கிறது.
ரஷ்யாவுடன் நெருக்கமான ராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை இந்தியா நிலைநாட்டி
வருகிறது. 2003-ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததுடன் அமெரிக்காவிற்கு ஆதரவான இந்து மேலாதிக்கவாத
BJP
தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் சீனாவுடன் உறவுகளை சீரமைக்க ஒரு திட்டவட்டமான
முயற்சியை தொடங்கியது. ஏப்ரலில் சீனப் பிரதமர் இந்தியாவிற்கு விஜயம் செய்தார், மற்றும் இரண்டு நாடுகளும் ஒரு
மூலோபாய பங்குதார்ர் முறையை அறிவித்தன, இந்தியா சீனாவுடனும் ரஷ்யா தலைமையிலான ஷங்காய் கூட்டுறவு
அமைப்புடனும் சேர்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தது, அந்த அமைப்பின் மூலம் மாஸ்கோவும் பெய்ஜிங்கும் ஆசியாவில்
சிறப்பாக மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை எதிர்த்து நிற்க முயன்றன.
தற்போதுள்ள புவியிசார் அரசியல் கட்டுக்கோப்பிற்கு எதிர் எடையாக பன்முக உலக
கட்டுக்கோப்பை உருவாக்குகின்ற முயற்சியில் மாஸ்கோவுடனும், பெய்ஜிங்குடனும் இணைந்து கொள்வதற்கு மன்மோகன் சிங்
புறக்கணித்து வந்தாலும் அவர் திரும்ப திரும்ப உலக விவகாரங்களில் தன்னிச்சை போக்கிற்கு எதிராக பேசி வந்தார்,
இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வாஷிங்டனின் நடப்பு கொள்கைக்கு எதிராக செயல்பட்டார். இரண்டு
தெற்கு ஆசிய நாடுகள் ஈரானுடன் ஒரு எரிவாயு குழாய் இணைப்பை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை கைவிடுமாறு
செய்வதற்கு இந்தியாவையும், பாக்கிஸ்தானையும் நெருக்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக
அவரும் அவரது அரசாங்கமும் கருத்து தெரிவிக்கும் கட்டாயம் ஏற்பட்டது.
ரஷ்யாவுடனும் சீனாவுடனும் மற்றும் அமெரிக்காவுடனும் இந்தியா செய்து கொண்டுள்ள பன்முக
மூலோபாய பங்குதாரர் ஏற்பாடுகள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், நடப்பு காங்கிரஸ் தலைமையிலான
UPA இதர பெரிய வல்லரசுகள்
தனது நட்பை பெறுவதற்கு விரும்புகின்றன என்ற தனது அந்தஸ்தை இந்தியா சுரண்டிக்கொள்ள முயன்றுவருகிறது. என்றாலும்
இது ஒரு ஆபத்தான விளையாட்டு ஏற்கனவே இந்தியாவின் முயற்சிகளுக்கான வாய்ப்புகள் சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒரு
கொந்தளிப்பான மூர்க்கத்தனமான கொள்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள அமெரிக்காவை தழுவிக்கொள்வதற்கும்
இன்றைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதை இந்திய நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள் அச்சத்தோடு
அணுகுகின்றனர்.
அதே நேரத்தில் அமெரிக்க அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு நிர்வாகத்தில்
இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க பிரிவுகள் மிக பகிரங்கமாக ஆசிய நாட்டில் சீனாவிற்கு எதிரான ஒரு நாட்டை
தழுவிக்கொள்வதற்கான சிந்தனையை சந்தேகிக்கின்றனர், ஏனென்னால் இந்தியா அமெரிக்காவின் குறிக்கோள்களை எதிர்த்து
வந்த நீண்ட வரலாறு படைத்தது மற்றும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார செல்வந்தத்தட்டை சேர்ந்தவர்கள் வாஷிங்டனிலிருந்து
விலகிச் சென்று சுதந்திரமாக செயல்படுவதை மிகுந்த ஆவலோடு காப்பாற்றி வந்தனர். உடனடியான அர்த்தத்தில் கூட,
புஷ் நிர்வாகம் இந்தியாவை மிகத்தீவிரமாக நாடி வருவது பாக்கிஸ்தானுடன் அமெரிக்க உறவுகளை சிக்கலாக்கிவிடும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், சீனாவின் எழுச்சி கண்டு அதன் கவலைகளை
பகிர்ந்து கொள்கின்ற நாடான, தனது நீண்டகால கூட்டணியான ஜப்பானின் கோரிக்கையை, அதற்கு ஐ.நா பாதுகாப்பு
சபையில் ஒரு நிரந்தர இடத்தை பெற்று தருவதற்கான அதன் கோரிக்கையை ஏற்கனவே அமெரிக்கா ஏற்றுக்கொண்டு
விட்டது, ஆனால் இந்தியாவின் அதே போன்ற நாடலை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தவறிவிட்டது.
சிங்கின் அமெரிக்க விஜயம் குறித்து அமெரிக்க ஊடகங்களுக்குள் ஒட்டு மொத்தமாக
பார்க்கும்போது மிகவும் உயர்வான ஆக்கபூர்வ வரவேற்பே காணப்படுகிறது, உலக சந்தைகளை வென்றெடுப்பதில் ஒரு செலவு
குறைந்த புகலிடமாக இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் அமெரிக்க பெரு நிறுவனங்கள் அதிக குவிமையப்படுத்தி
வருகின்றன என்பதை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இந்த உச்சிமாநாட்டின்போது புஷ் நிர்வாகம் உலக அணு நெறி
முறை அமைப்பில் புதியதொரு சிறப்பு அந்தஸ்த்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பது
குறித்து இந்த முக்கியமான முடிவு மீது நீதிபதிகள் முடிவு செய்யவில்லை. வாஷிங்டன் தனது நட்பு நாடல்ல என்று கருதுகின்ற
எந்த வல்லரசும் அணு ஆயுதங்களை பெறுகின்ற அல்லது பெற முயற்சிக்கின்ற நடவடிக்கைகளை எதிர்த்து வருகின்ற வாஷிங்டன்
சர்வதேச சட்டத்தின் அதிகாரத்தை நிலைநாட்டும் என்று அது கூறும்பொழுது அதன் நம்பகத்தன்மையை இது மேலும்
குறைத்துவிடாதா என்று பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
குறிப்பாக வாஷிங்டன் போஸ்ட் "ஒரு புதிய அணுவாற்றல் சகாப்தம்" என்ற
தலைப்பில் காரசாரமான ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளது "புஷ் நிர்வாகம் தனது சூதாட்டங்களில் பெயர்
பெற்றதாகும்'', மற்றும் திங்களன்று இந்தியாவுடன் அணு ஒத்துழைப்பு தொடர்பாக அது மேற்கொண்ட தலைகீழ் மாற்றம்
காட்டுகிறது" என்று அந்தத் தலையங்கம் தொடங்குகிறது. தனது முடிவுரையில் இப்படிக் கூறுகிறது: "புஷ் குழுவினர் முன்னர்
கண்டுபிடித்திருப்பதைப்போல், ஒரு துணிச்சலான புதிய கொள்கையை அறிவிப்பது அதனை அமுல்படுத்துவதைவிட
எளிதானதாகும்." |