World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: the career of Christian Democratic Union leader Angela Merkel

றிணீக்ஷீt 1: ணிணீst நிமீக்ஷீனீணீஸீஹ்ஹ்ஷீutலீ ணீஸீபீ ஜீஷீறீவீtவீநீணீறீ தீமீரீவீஸீஸீவீஸீரீs

ஜேர்மனி: கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர் ஏஞ்சலா மெர்க்கலின் எழுச்சி

பகுதி 1 : கிழக்கு ஜேர்மனி --இளமைக்காலமும் அரசியல் ஆரம்பமும்

By Lena Sokoll
8 July 2005

Back to screen version

கீழ்வரும் கட்டுரை ஜேர்மனியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவரும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன்களின் இணைப்பான பழைமைவாத யூனியனின் செப்டம்பரில் நடக்கவிருக்கும் கூட்டாட்சி தேர்தல்களில் அதிபர் வேட்பாளருமான ஏஞ்சலா மெர்க்கலின் அரசியல் வாழ்க்கையை பற்றிய இரு கட்டுரை தொகுப்பின் முதல் கட்டுரை ஆகும்.

அண்மையில் இந்த இலையுதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் கூட்டாட்சித் தேர்தல்களில் தன்னுடைய வேட்பாளராக ஏஞ்சலா மெர்க்கலை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் குறிப்பிட்டுள்ளது. ஜேர்மன் அரசியலில் ஒரு "அதிசய நிகழ்வாக" பலமுறையும் மெர்க்கல் விவரிக்கப்படுகிறார். அத்தகைய சித்தரிப்பு ஓரளவிற்கு அவருடைய தனிப்பட்ட குணநலன்களினால் விளைந்தது: அவர் விவாகரத்து செய்தவர், மீண்டும் திருமணம் செய்து கொண்டவர், குழந்தை இல்லாதவர், ஒரு புரடஸ்தாந்து மதப்பிரிவினை சேர்ந்தவர் மற்றும் கிழக்கு ஜேர்மனியில் இருந்து வந்தவர்: இவை வழமைக்கு மாறானவை என்பதுடன் இந்தப் பழைமைவாத கட்சியில் முன்னேறத் தடையாகவும் இருப்பவையாகும். மாறாக, இந்த அம்மையார் தன்னுடைய பொதுத் தோற்றத்தை, இவருடைய ஆசான்களால் நன்கு உருவாக்கப்பட்ட தோற்றத்தை, 1989 பேர்லின் சுவர் சரிவிற்கு முன்பு எவரும் அறியாதவராக இருந்தவர் என்று காட்டிக் கொள்ள முற்படுகிறார்: அதாவது ஜேர்மனிய அரசியலில் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லாத ஒரு வெற்று தாள் போல் இருந்தவர் ஜேர்மன் அரசியலின் உயர்மட்டத்திற்கு எழுந்துள்ளார்.

ஐயத்திற்கிடமின்றி, மெர்க்கல் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒரு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினரானதில் இருந்து முன்னொருபோதுமில்லாத முறையில் வளர்ச்சி அடைந்துள்ளார்; இத்தகைய முக்கிய முன்னேற்றம் கட்சிக்குள் அவருக்குப் பல விரோதிகளையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. பெரும்பாலான மற்ற கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினர்களைப் போல் இல்லாமல், மெர்க்கலின் ஏற்றம் ஜேர்மனியின் கட்சி அமைப்பில் வழக்கமான பாதையான பல தசாப்தங்கள் கட்சி பணி, அதாவது இளைஞர் இயக்கம், உள்ளூர் கட்சிக் குழுக்கள், வட்டார அமைப்புக்கள், மெதுவாக தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு, கவனத்தை ஈர்த்தல், ஒரு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உயர்பதவிக்கு சிபாரிசு பெற்று ஓரிடத்தை இறுதியாகப் பெறல் என்று வரவில்லை. மாறாக, இவ்வம்மையார் வெகு விரைவில் கட்சித் தலைமைக்கு உந்தப்பட்டு, பலகாலம் மேற்கு ஜேர்மனியில் உள்ள கட்சி சக ஊழியர்களை கடந்து இறுதியில் அதிபர் பதவிக்கு வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியனால் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஓர் இயற்பியலாளராக (பெளதீகவியலாளராக) இருந்த மெர்க்கல், பேர்லின் சுவர் சரிவிற்கு பின்தான் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தார். ஆனால் "ஜனநாயக விழிப்பில்'' (Democratic Awakening-DA) அவர் இருந்த காலம் குறைவுதான். நான்கு மாதங்களில் அவர் Lothar de Maiziere தலைமையில் இருந்த கிழக்கு ஜேர்மனிய கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரானார். 1990ம் ஆண்டு ஜேர்மனியின் மறு இணைப்பிற்கு பின்னர், அதிபர் ஹெல்முட் கோல் இந்த 36 வயது நிரம்பியிருந்த, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் ஆறுமாதகாலம்தான் உறுப்பிராக இருந்த மெர்க்கலை தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் 1998ம் ஆண்டு கூட்டாட்சி தேர்தலில் தோற்றது மெர்க்கல் தன்னுடைய மந்திரி பதவியை இழந்தார் ஆனாலும், அதே ஆண்டில் அவர் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் இன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஓராண்டிற்கு பின்னர் கட்சி நன்கொடைகள் பெற்றது பற்றிய ஊழல்கள் அம்பலமானதை அடுத்து. இவர் கட்சியின் கெளரவ தலைவரும் தன்னுடைய முன்னாள் ஆசானுமான ஹெல்முட் கோல் அகற்றப்படவேண்டும் என்று தீவிரமாக முயன்றார். ஏப்ரல் 2000ல் கட்சி தலைமை பொறுப்பையும் ஏற்றார். 2002 கூட்டாட்சி தேர்தல்களில் அவர் அதிபர் வேட்பாளர் நிலையை, பவேரியாவில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உடைய சகோதரக் கட்சியான கிறிஸ்துவ சமுக யூனியனுடைய தலைவரான Edmund Stoiber க்கு அளித்திருந்தார். ஆனால் அப்பொழுதில் இருந்து அவர் தன்னுடைய நிலைமையை "யூனியனுக்குள் (CDU/CSU) வலுப்படுத்திக் கொண்டிருந்ததோடு தன்னுடைய அரசியல் போட்டியாளர்களை விட பெரும் பெயர் பெற்று அதிபர் வேட்பாளராக சவாலின்றி இப்பொழுது வெளிப்பட்டுள்ளார்.

ஏஞ்சலா மெர்க்கலின் விரைவான அரசியல் எழுச்சியை விளக்குவது எங்ஙனம்? ஒரு கட்சி உறுப்பினரான ஆறே மாதங்களில் அவர் அமைச்சராகக் கூடிய வகையில் எந்தக் குணநலன்களை பெற்றிருந்தார்? அவருடைய வாழ்க்கை நூலை எழுதியவர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் இதை விளக்குகையில் அவருடைய நல்லதிருஷ்டம், உறுதிப்பாடு, அதிகாரத்திற்கு ஆர்வம் என்று தனி நலன்களை கூறவது நம்பத்தகுந்தவை அல்ல; ஏனெனில் அவை அனைத்தும் எந்த அரசியல், சமூக நலன்களின் அடிப்படையில் அவருடைய ஏற்றம் நிகழ்ந்தது என்பதை புறக்கணிக்கின்றன.

பேர்லின் சுவர் சரிவிற்குப் பின்னர் அரசியலில் புதிய நபராகத்தான் மெர்க்கல் உண்மையில் அரசியலில் இறங்கினார். தன்னுடைய தந்தையாரின் மூலம் அவருக்கு திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த உள்வட்டங்களுக்குள் அவருக்கு மதிப்பு இருந்தது; இதையொட்டி அவர் முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசு (GDR) இன் முக்கிய அரசாங்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். 1950களில் இருந்தே திருச்சபை ஜேர்மன் ஜனநாயக குடியரசில் குறிப்பிட்ட வகையில் முக்கியமான பங்கை கொண்டிருந்தது; ஸ்ராலினிச ஆட்சி மீதான அரசியல் எதிர்ப்பு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்படிருக்க வேண்டும் என்பது அதன் நோக்கமாக இருந்தது. ஜேர்மன் ஜனநாயக குடியரசின் சரிவின் பின்பு முந்தைய காலத்தில் திருச்சபை, எங்கும் பெருகியிருந்த பாரிய மக்கள் எதிர்ப்பு அலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் மத்திய பங்கு வகித்தது. இது பின்னர் கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவமுறையை மீள்மைப்பதற்கும், மேற்கு ஜேர்மனியுடன் இணைப்பு ஏற்படவும் பெரிதும் பயன்பட்டது.

ஜேர்மன் ஜனநாயக குடியரசு திருச்சபை வட்டங்களுள் இவரின் வளர்ப்பு

ஹாம்பேர்க்கில் ஏஞ்சலா டோரோதியா காஸ்னர் என்று பிறந்திருந்த மெர்க்கல் ஒரு திருச்சபை பாதிரியாரின் மகளாக கிழக்கு ஜேர்மனியில் Templin என்ற இடத்தில் வளர்ந்தார். 1954ம் ஆண்டு சமயக் கல்வியை மேற்கில் முடித்த பின்னர், அவருடைய தந்தையார் Horst Kasner கிழக்கு ஜேர்மனிக்கு திரும்பி உயர் பாதிரியார்களுக்கும், பாதிரியாளர்களுக்கும் நற்செய்தி கல்விமையமாக இருந்த "Waldhof" இற்கு வழிகாட்டியாக இருந்தார்; அங்கு ஒரு செவிலியர் இல்லமும் இருந்தது. ஜேர்மன் ஜனநாயக குடியரசு திருச்சபை வட்டங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கு இது பெரிதும் உதவியது Waldhof ல் மெர்க்கல் ஜனநாயக விழிப்பு கட்சியை (DA) பின்னர் தொடங்கவிருந்த Rainer Epplemann உடன் அறிமுகம் ஆனார்; அந்த அமைப்பு பின்னர் பேர்லின் சுவர் சரிந்த பின் அவரை அரசியலில் ஏற்றம் பெற உதவியது.

மெர்க்கலுடைய தந்தையார் ஆட்சிக்கும், திருச்சபைக்கும் விசுவாசமாக இருந்தல் என வாதிட்டிருந்த "சோசலிசத்தில் திருச்சபை" என்று அறியப்பட்டிருந்த கொள்கைக்கு திருச்சபையின் முக்கியப் பிரதிநிதியாக இருந்தவர் ஆவார். 1950களின் தொடக்கத்தில், சோசலிச ஐக்கிய கட்சி (SED) இன் ஸ்ராலினிச தலைமை திருச்சபையின் செல்வாக்கிற்கு எதிராக ஒரு "போராட்டமே" நடத்தியிருந்தது. ஆனால், 1953ம் ஆண்டின் ஸ்ராலினிசத்திற்கு எதிரான எழுச்சி கிழக்கு ஜேர்மனிய தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பின்னர், Ulbricht அரசாங்கம் கூடுதலான சமரசப் போக்கை கொண்டு, திருச்சபை அமைப்புக்களை அரசாங்கத்துடன் ஒருங்கிணைத்து அவற்றை பயன்படுத்திக்கொண்டு சோசலிச ஐக்கிய கட்சியின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில் செயலாற்றியது. குறிப்பாக, Horst Kasner பங்கு பெற்றிருந்த "வீசென்சீர் செயற்குழு" (Weissenseer working group) என்ற அமைப்பின் மூலம் எவாங்கெலிக்கன் திருச்சபை விரைவில் ஆட்சிக்கு நெருக்கமாயிற்று; 1971ம் ஆண்டில் இருந்து அதிகாரபூர்வமாக இது "சோசலிசத்தின் திருச்சபை" என்றே விளக்கிக் கொண்டது; இதையொட்டி கிழக்கு முகாம் முழுவதும் இல்லாத அளவிற்கு இணையற்ற வகையில் தனது செல்வாக்குத்தரத்தை அது உயர்த்திக் கொண்டது.

பெருகிய முறையில் அரசாங்கமும் திருச்சபையும் இணைந்து செயலாற்றியது, ஜேர்மன் ஜனநாயக குடியரசுக்குள் பெருகிய பொருளாதார, உள்நாட்டு அரசியல் நெருக்கடி ஆகியவை உள்நாட்டில் நிலைமையை உறுதிப்படுத்துவதற்கு திருச்சபை முக்கிய பங்கைக் கொண்டிருந்தது மட்டும் இல்லாமல், இரண்டு ஜேர்மனிய நாடுகளுக்கும் இடையே இரகசியமான இராஜதந்திர உறவுகளிலும் அது தனியான பங்கைக் கொண்டிருந்தது. 1960களின் ஆரம்ப ஆண்டுகளில், திருச்சபை மேற்குடன் கைதிகள் பறிமாற்றத்திற்கான ஒழுங்கமைப்பை வழங்கியது; மேலும் கணிசமான நிதிய மாற்றுக்களும் இதன் மூலம் நடந்தன. பின்னர், இந்த முக்கியமான கிழக்கு-மேற்கு அரசியல் தொடர்பு ஜேர்மன் ஜனநாயக குடியரசு திருச்சபை வட்டங்களுக்கு அனைத்து ஜேர்மனிய அரசியலிலும் ஒரு முக்கிய பங்கை உறுதிப்படுத்தியது.

ஜேர்மன் ஜனநாயக குடியரசுக்குள், திருச்சபையும் அரசாங்கமும் முறையே தங்கள் பிரதிநதிகளை பேச்சுவார்த்தைகள் நடத்தவும் இரண்டிற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்கவும் கொண்டிருந்தனர். இதில் ஒரு முக்கியமான பங்கை உயர் செயல்வாக்கு பெற்றிருந்த எவாங்கேலிக்கல் திருச்சபை ஊழியர், "சோசலிசத்தில் திருச்சபை" என்ற கருத்தின் அரசியல் இயற்றுபவர்களில் ஒருவரான மான்பிரெட் ஸ்டோல்ப் கொண்டிருந்தார்; மேலும், ஜனநாயக சோசலிச கட்சி (Party of Democratic Socialism- PDS) இன் தலைவர் கிரெகோர் கீசியின் தந்தையான, திருச்சபைத் துறைகளுக்கான துணைச் செயலர் Klaus Gysi உம் இருந்தார். கிளவுஸ் கீசியின் கீழ் திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இருந்த உறவு கணிசமாக பலப்படுத்தப்பட்டது: திருச்சபைக்கு ஏராளமான சலுகைகள் கொடுக்கப்பட்டன; ஒளிபரப்பு ஊடகத்தில் திருச்சபை ஒளிபரப்புக்கள் கொடுக்கப்பட்டன; அரசாங்க நிதியும் புதிய தேவாலயங்கள் எழுப்பப்படுவதற்கு கொடுக்கப்பட்டன.

மற்றும் முக்கியமான மத்தியஸ்தர்களாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த கிறிஸ்துவ குழுக்களின் சட்ட ஆலோசகர்களும் இருந்தனர். அதே நேரத்தில், பலர் Stasi எனப்பட்ட அரசாங்க இரகசியப் போலீஸ் ஒற்றர்களாகவும் இருந்தனர்; Lothar de Maiziere, Wolfgang Schnur இருவரும் தீவிர கிறிஸ்துவர்களாகவும், ஒற்றர்களாகவும் இருந்தது மட்டும் இல்லாமல் பின்னர் மெர்க்கலுடைய அரசியல் ஆசான்களாகவும் இருந்தனர்.

இத்தகைய வட்டங்களில் வளர்ந்திருந்த ஏஞ்சலா காஸ்லெர் ஏற்கனவே பல தொடர்புகளை கொண்டிருந்தது, பின்னர் அவருக்கு பெரும் நலன்களை அளித்தது. அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நூலில், வொல்ப்காங் ஸ்டாக் மெர்க்கலின் உயர்நிலை பள்ளி வகுப்பு ஒன்று தங்களுக்கு பிடிக்காத ஆசிரியருக்கு உளைச்சல் கொடுக்கும் வகையில் பள்ளியின் கலாச்சார நிகழ்விற்கு கட்டாயம் கொடுக்கவேண்டிய நிகழ்ச்சியை கொடுக்க மறுத்து, வெறும் கண்துடைப்பு நிகழ்ச்சியை அளிக்க விரும்பினர். குழந்தைகள் தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும்; ஆனால் காஸ்னெர்களின் தலையீடு விவகாரத்தை வேறுவிதமாக மாற்றிவிட்டது: "ஒரு மனு எழுதப்பட்டு, அதை ஏஞ்சலா தானே ஜேர்மன் ஜனநாயக குடியரசின் திருச்சபையின் உயர்ந்த சட்ட ஆலோசகரான மான்பிரெட் ஸ்டோல்பிடம் கொடுத்தார்.... திருச்சபை தொடர்பை ஒட்டி பேர்லின் தலையிட்டு, ஏஞ்சலாவின் ஆசிரியர்தான் தண்டனைக்கு உட்படுகிறார்: மாணவ மாணவியரை பொறுத்தவரையில் "பள்ளிப் பொதுக்கூட்டத்தில்" ஒரு கடினமான வசவுதான் கொடுக்கப்படுகிறது."

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், ஏஞ்சலா காஸ்நெர் இயற்பியலை (பெளதீகவியலை) பயின்று, பின்னர் திருமணம் செய்து கொண்டு அதையடுத்து பேர்லின் விஞ்ஞான கல்விக்கூடத்தில் உயர்கல்விக்கு இடம் பெறுகிறார்; அங்கு அவர் 1986ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். அங்கு பயிலும்போதே, அவர் ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி (SED) ஆட்சிக்கு விசுவாசமாக இருந்த கிழக்கு ஜேர்மனிய இளைஞர் அமைப்பான FDJ இன் போராட்ட மற்றும் பிரச்சாரச் செயலாளராக இருந்தார்; அந்த நிலையை இப்பொழுது வெறும் "கலாச்சார பிரதிநிதி" என்று மட்டுமே அவர் சித்திரிக்க முற்பட்டுள்ளார்.

அக்கல்விக்கூடத்தில் இருந்த இரகசிய போலீசின் தகவல் தெரிவிப்பவர், முக்கியமான விட்டோடியான Ulrich Havemann உடைய மகனைப் பற்றி வேவு பார்ப்பதற்காக இருந்தவர், தன்னுடைய அலுவலக சக ஊழியர் மெர்க்கலை பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளார். இந்த இரகசியப் போலீஸ் ஆதாரத்தின்படி, ஜனநாயக சோசலிச கட்சி ஆட்சிக்கு "உள் எதிர்ப்பு" ஏதும் கிடையாது; ஆனால் மெர்க்கல் தன்னுடைய அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நூலிலும், பேட்டிகளிலும் தன்னுடைய வரலாற்றில் அது இருந்ததாக கூறுகிறார். Stern இதழ் பழைய ஆவணங்களில் ஆய்வு நடத்தி, "அதிகாரபூர்வமற்ற" ஒற்றர் ஒருவர் "மெர்க்கலை பற்றி அரசியலில் பரபரப்புத் தரக்கூடிய தகவல் ஏதும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், மாறாக மற்றொரு காலக்கட்டத்தில் ஏஞ்சலாவிடம் "நேர்மையான அரசியல் கருத்துக்கள்" நிலைந்திருந்ததாகவும் தெரிவிக்கிறது. மற்றபடி அந்த ஒற்றர் அந்தரங்க விஷயங்களை பற்றித்தான் தெரிவித்திருந்தார்; அவை அவருடைய குறைந்த தொடர்புகள் உடைய வழமையான வாழ்வை பற்றித்தான் இருந்தன."

ஆரம்பத்தில் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் 1989ல் இருந்த பெருகிய ஆர்ப்பாட்ட எதிர்ப்பு இயக்கத்தில் மெர்க்கல் அதிக அக்கறை காட்டாதது போல்தான் இருந்தது. "ஓ, வெளியே என்ன நடக்கிறது பாருங்கள்" என்று மட்டுமே அவருடைய கல்விக்கூடத்தில் இருந்த சக ஊழியரிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது; அக்காலக்கட்டத்தில் இருந்த அரசியல் கூட்டத்தில் சிறிதும் அக்கறை காட்டாத இத்தன்மை பற்றி அவ்வூழியர் வியப்படைந்ததாகவும் தெரிகிறது. பேர்லின் சுவர் வீழ்ச்சி, பின்னர் ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி அதிகாரம் இழந்தது ஆகியவை தவிர்க்கமுடியாமல் போனபின்னர்தான், இவர் ஒரு புதிய அரசியல் சார்பை தேட ஆரம்பித்து ஒரு கட்சியையும் நாட முற்பட்டார்.

ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சிக்கு எதிராக பெரும் மக்கள் எதிர்ப்புக்கள் வந்துவிட்ட நிலையில், எவாங்கேலிக்கல் திருச்சபை மற்றும் அதன் பிரதிநிதிகள் ஒரு வெளிப்படையான எழுச்சி ஏற்படுதலை தடுக்கும் வகையில் முக்கிய பங்கினை கொண்டிருந்தனர்; எதிர்ப்பினை பாதுகாப்பான வகையில் திசைதிருப்பி இழிவுற்றிருந்த ஆட்சியில் இருந்து முறையாக அதிகார மாற்றத்திற்கும் ஏற்படாடு செய்தனர். திருச்சபையின் நிதானப் போக்கினால், "வட்ட மேஜை" என அழைக்கப்பட்ட முறை நிறுவப்பட்டு ஆட்சி மாற்றத்திற்கு வகை செய்யப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் தங்கள் தனித்த சுதந்திர அமைப்புக்களை அமைப்பதற்கும் ஸ்ராலினிச குண்டர்களுடன் கணக்குதீர்த்துக்கொள்ளவும் இயலாமல் போயிற்று. திருச்சபை வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து சமூக அமைதி காப்பதற்கு அனைத்தையும் செய்தது.

இத்தகைய முறையில் ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சிக்கு இறுதி நற்பணியையும் அது செய்தது: இது நீண்ட காலமாக இருந்த திருச்சபை-அரசாங்க ஒத்துழைப்பு பின்னணியில் நடைபெற்றாலும், மேற்கு ஜேர்மன் முதலாளித்துவத்தினதும் அதன் அரசியல் கட்சிகளின் நலன்களுக்கு ஏற்பவும் நடைபெற்றது. பின்னர் அக்கட்சிகள் கிழக்கு ஜேர்மன் திருச்சபையில் தாங்கள் கொண்டிருந்த தொடர்பை பயன்படுத்தி ஜேர்மன் ஜனநாயக குடியரசின் விதியை மேற்கு ஜேர்மனிய முதலாளித்துவமுறையுடன் விரைவாக இணைக்க முடிந்தது. கிழக்கு, மேற்கு ஜேர்மனிய அரசியல் தலைவர்களிடையே இருந்த வேறுபாடுகள் அனைத்தும் ஒரு புறம் இருக்க, அடிப்படையில் அவர்கள் திருச்சபையுடன் ஓர் ஆழ்ந்த பொதுவான அடிப்படை பார்வையை கொண்டிருந்தனர்: அதாவது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிவிருத்திக்கு வழியமைக்கும் கட்டுப்படுத்தமுடியாத ஒரு சுயாதீனமான மக்கள் இயக்கம் பற்றிய பயம் அவர்களிடம் இருந்தது.

திருச்சபை பிரதிநிதிகள், அல்லது திருச்சபையுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டவர்கள், 1989ல் புதிய அரசியல் கட்சிகள் நிறுவப்பட்ட கட்சிகள் மலர்வதற்கு பெரிதும் காரணமாவார்கள். அதே நேரத்தில், திருச்சபையுடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் ஜேர்மன் ஜனநாயக குடியரசில் இருந்த முன்னாள் அரசாங்க கட்சிகளிலும் முன்னணி வகித்தனர்; ஏனெனில் அவர்கள் தங்களுடைய முக்கிய இடங்களையும் விட்டுக் கொடுத்துவிட விரும்பவில்லை.

அரசியல் வாழ்வின் ஆரம்பங்கள்

டிசம்பர் 1989ல் ஏஞ்சலா மெர்க்கல் ஜனநாயக விழிப்பில் சேர்ந்தார்; இது திருச்சபை ஊழியர்களான Rainer Epplemann, Friedrich Schorlemmer மற்றும் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் எவாங்கேலிக்கல் திருச்சபையின் நம்பிக்குகந்த சட்ட வல்லுனர் Wolfgang Schnur ஆகியோரால் நிறுவப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு பின்னர், இவர் இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளராக பதவி உயர்வு பெற்றார்; இது கிழக்கு ஜேர்மனியில் விரைவாக முதலாளித்துவ முறையை புகுத்துவதற்கு ஆதரவை கொடுத்திருந்ததுடன் அரசியல்ரீதியில் மேற்கு ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாய யூனியனுடன் இணைந்திருந்தது.

ஜேர்மன் ஜனநாயக குடியரசின் பாராளுமன்ற தேர்தல்கள் 1990ன் வசந்தகாலத்தில் நடைபெற்றபோது, ஜனநாயக விழிப்பு (DA) கிழக்கு ஜேர்மனிய கிறிஸ்தவ ஜனநாய யூனியனுடன் சேர்ந்துகொண்டது; இது "ஜேர்மனிக்கான கூட்டு" என்று ஹெல்முட் கோலின் கோஷத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. கிழக்கு ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாய யூனியன் மிகப் பெரிய அளவில் "முகாம் கட்சிகளில்" (bloc parties) ஒன்று என்று, கிழக்கு பேர்லினில் ஸ்ராலினிச ஆட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தது என்ற காரணத்தினால் இழிவிற்கு உட்பட்டிருந்தது; எனவே ஜனநாயக விழிப்புடைய ஆதரவு இந்த பழைய மரபுடன் முறித்துக் கொள்ளும் தோற்றத்தை கொடுக்க முக்கியமானதாக இருந்தது.

தேர்தலுக்கு சற்றுமுன் Schnur ஒரு நீண்டகால இரகசிய போலீசின் ஒற்றர் என தெரியவந்தமை ஜனநாயக விழிப்புக்கு 0.09 சதவிகித வாக்கு கிடைக்க வைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக அதன் கிழக்கு ஜேர்மனிய கிறிஸ்தவ ஜனநாய யூனியன் மிக வலுவான கட்சியாக வெளிப்பட்டது. கட்சி தலைவரான Lothar de Maiziere கிழக்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் பிரதம மந்திரியானார்; தன்னுடைய மிக முக்கிய பணியாக ஜேர்மன் ஜனநாயக குடியரசின் கரைப்பு மற்றும் மேற்கு ஜேர்மனியுடன் ஒருங்கிணைப்பை துரிதப்படுத்துதலை இது மேற்கொண்டது.

De Maiziere கிழக்கு ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாய யூனியனின் நீண்டகால உறுப்பினர் ஆவார்; சமீபத்தில்தான், தேர்தலுக்கு முன்பு அவர் கட்சித் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். Hans Modrow தலைமையிலான கடைசி ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி (SED) அரசாங்கத்தில் சட்ட வல்லுனர் De Maiziere திருச்சபை விவகார மந்திரியாக இருந்தார்; மேலும் மேற்கு ஜேர்மனியில் அரசியல் உயர்மட்ட தொடர்புகளை சிறந்த முறையில் கொண்டிருந்தார். அவருடைய சிற்றப்பாவான Ulrich De Maiziere, இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மேற்கு ஜேர்மன் மீண்டும் ஆயுதமேந்தும் உரிமையைக் கண்காணிக்கும் பொறுப்பை பெற்றிருந்தார்; General Inspector of the Federal Armed Forces என்ற மிக உயர்ந்த இராணுவ பதவியையும் அவர் வகித்திருந்தார்.

எனவே கிழக்கு ஜேர்மனிய தேர்தல்களில் வெறும் அதிருஷ்ட தற்செயல் நிகழ்வு என்பதையும்விட கூடுதலான முறையில்தான் மெர்க்கல் விரைவில் ஜனநாயக விழிப்பில் இருந்து நீங்கி கிறிஸ்தவ ஜனநாய யூனியனின் வெற்றியை கொண்டாடிய செயல் அமைந்திருந்தது. லோதருடைய ஒன்றுவிட்ட அண்ணனும் உல்ரிச்சுடைய மகனும் ஆன Thomas de Maiziere ஐ அவர் அணுகி புதிய அரசாங்கத்தில் ஒரு பொறுப்பு கொடுக்கமாறு கேட்டுக்கொண்டார். "ஜேர்மனிக்கான கூட்டில்" "ஜனநாயக விழிப்பில்" இருந்து எங்களை போன்ற சிறந்தவர்களை பெற்றிருப்பது உங்களுடைய நல்ல அதிருஷ்டம் என்று நீங்கள் நினைக்க வேண்டும்" என்று மெர்க்கல் அவரிடம் கூறினார். "உங்கள் அரசாங்கத்தை அமைக்கும்போது நீங்கள் இதைக் கருத்திற் கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்." தோமசே பின்னர் கிறிஸ்தவ ஜனநாய யூனியனின் சாக்சோனி மாநில சட்டமன்றத்தில் ஓர் அமைச்சரானார். மெர்க்கலுடைய தந்தையாரை அறிந்திருந்த Lothar de Maiziere, மெர்க்கலுடைய விருப்பமான உயர்பதவிக்கு ஏற்பாடு செய்யும் வகையில் அவரை தன்னுடைய அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளராக்கினார்.

ஜனநாயக விழிப்பு என்பது 1990 ஆகஸ்ட்டில் கிழக்கு ஜேர்மனிய கிறிஸ்தவ ஜனநாய யூனியனுள் கரைக்கப்பட்டுவிட்டது; பிந்தையது அந்த ஆண்டு அக்டோபரில் ஜேர்மன் மறு இணைப்பின் பின்னர் மேற்கு ஜேர்மனிய கட்சியுடன் கரைந்து விட்டது; ஆனால் அந்த சில மாதங்கள் இவருக்கு தன்னுடைய தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும், வலிமைப்படுத்திக் கொள்ளவும் போதுமானதாக இருந்தன. Lothar de Maiziere இன் நெருக்கமான வட்டத்தில் Gunther Krause இருந்தார்; அவர் பாராளுமன்ற செயலர் என்னும் முறையில் நாணய, பொருளாதார ஒருங்கிணைப்பை மேற்கு ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு காண்டார். Krause, De Maiziere இருவருடைய பரிந்துரைகள் கோலிடம் இருந்து பொன் நகர அதிபர் அலுவலகத்திற்கு அழைப்பை மெர்க்கலுக்கு பெற்றுத் தந்தன. கிறிஸ்தவ ஜனநாய யூனியனின் மெக்லென்பேர்க் மேற்கு போமெரேனியாவின் வட்டார தலைவர் என்ற முறையில் மெர்க்கலுக்கு Krause முதல் அனைத்து ஜேர்மனிய தேர்தல்களில் கூட்டாட்சி பாராளுமன்றத்தில் (Bundstag) ஒரு பாதுகாப்பான தொகுதியை கொடுக்க முடிந்தது.

தொடரும்.....


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved