:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
A tale of two classes
இரண்டு வர்க்கங்களைப் பற்றிய ஒரு கதை
By Joseph Kay
20 July 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
சில நேரங்களில் அமெரிக்காவில் உள்ள சமூக உறவு பற்றிய உண்மையான தன்மைகூட
அமெரிக்க செய்தி ஊடகத்தில் சில பக்கங்களை பிடிக்க முடிகிறது. லவால் ஸ்ட்ரீட் பத்திரிகையுடைய செவ்வாய்க்கிழமை
பதிப்பு அதைத்தான் புலப்படுத்தியது. செய்தித் தாளின் முதல் பக்கம் இருக்கும் சந்தை நிகழ்வின்
(Marketplace)
பகுதியில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன; இரண்டையும் இணைத்துக்
காணும்போது அமெரிக்க சமுதாயத்தில் இன்று நிலவியிருக்கும் வர்க்கப் பிளவை பற்றி நன்கு தெரியவரும்.
"நிலையை தொடர்தல் கடினம்" என்ற கட்டுரையில்
Kris Maher,
பென்சில்வேனியாவில் சாதாரணமாகக் காணப்படும் தொழிலாள வர்க்க தம்பதியான மார்க், டோனா பெல்லினி
இருவரின் கதையைப்பற்றி கூறுகிறார். இவர்களுக்கு இரண்டு வளரும் சிறுவர்கள் உள்ளனர்; இருவரின் கூட்டுவருமானமும்
கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றிற்கு $60,000 என்று உள்ளது; இது அநேகமாக திருமணமாகியுள்ள தம்பதிகளின் சராசரி
ஆண்டு வருமனானத்தை ஒத்து இருக்கிறது. உண்மையில் பெல்லினிக்கள் பலவிதங்ளில் அமெரிக்க மாதிரிக் குடும்பத்தை
போலவே உள்ளனர். ஆனால் இதையொட்டி அவர்களுக்கு உறுதியான வாழ்விற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை; பெல்லினிக்கள்
தொடர்ந்த நிதி அழுத்தம், கடன் அழுத்தம் இவற்றிற்கு உட்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் மார்க் பெல்லினியின் வருமானம் தேக்க நிலையை
அடைந்துள்ளது என்று மகேர் குறிப்பிடுகிறார். "Comcast
Corp. நிறுவனத்தில் ஒரு தொழில்நுட்பவியலாளராக இருக்கும்
51 வயது பெல்லினிக்கும், 2002ல் இருந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையில் ஊதிய உயர்வு கொடுக்கப்படவில்லை.
இவருடைய வருமானம் மணிக்கு $19.10 என்றே தேக்கத்தில் இருக்கிறது; அதேவேளை ஒட்டுமொத்த நுகர்வோர்
பொருட்களின் விலையோ 8% உயர்ந்துள்ளது." அடிப்படை தேவைகளின் செலவோ, குறிப்பாக உணவு, எரிவாயு
உயர்வீத்த்தில் அதிகரித்துள்ளது, மற்றும் எரிவாயு விலைகள் மட்டுமே 2002ல் இருந்து 55 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
திரு பெல்லினியின் நிலை ஒரு முக்கியமான உண்மையை உயர்த்திக் காட்டுகிறது:
பொருளாதாரம் மீண்டுவிட்டது, வளர்ச்சி பழையபடி பெருகிவிட்டது என்ற பேச்சுக்கள் எல்லாம் இருந்தபோதிலும்,
வேலையில் இருந்து நீக்கப்பட்டுவிடாத, பெரும்பாலான தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் நிலைமைகள்
படிப்படியாக மோசமாகிக் கொண்டுதான் வருகின்றன. "கிட்டத்தட்ட 4% த்திற்கு பொருளாதார வளர்ச்சி
அடைந்துள்ள போதிலும், வேலையின்மை அளவு மிகக் குறைவாக இருந்தபோதிலும், மொத்த அமெரிக்க
வேலைபார்க்கும் தொகுப்பில் இருக்கும் 80 சதவீதத்தினராகிய, மேலாண்மை நிலையில் இல்லாத தொழிலாளர்களின்
ஆண்டு ஊதியங்கள் கடந்த ஜூன் மாதத்தை விட 2.7% அதிகமாகி உள்ளது" என்று மகேர் எழுதியுள்ளார். இந்த
ஊதிய அதிகரிப்புக்கள் பணவீக்கத்தால் முற்றிலும் அபகரிக்கப்பட்டுவிட்டன. உண்மையில் மிகச்சமீப காலத்தில் உண்மை
ஊதியங்கள் சரிந்துதான் விட்டன.
இதன் விளைவாக, குறிப்பிடத்தக்க சேமிப்புக்களில் ஈடுபடவோ, ஒய்வுதிய
காலத்திற்கு ஒதுக்கி வைப்பதற்கோ வெகு சில தொழிலாளர்களால்கூட முடிவதில்லை. மாறாக, அவர்கள் இன்னும்
கூடுதலான முறையில், ஆழ்ந்த கடன் அவதிக்கு உட்பட்டுள்ளனர். தங்களுடைய செலவினங்களை குறைத்து வாழ்க்கை
முறையை கடினமாக்கிக் கொள்ளும் நிலையைவிட பெல்லினிக்களுக்கு கவலை கொடுக்கும் உண்மை நிலை
என்னவென்றால், "தம்பதியினருக்கு சேமிப்பே கிட்டத்தட்ட இல்லை என்பதும், முன்பு திட்டமிட்டபடி அவர்களால்
தங்களுடைய சிறார்களுக்கு கல்லூரிப்படிப்பிற்கான நிதியத்தை சேமித்துவைக்க இயலவில்லை என்பதும்தான்.
அவர்களுடைய 'பாதுகாப்பு உணர்வு என்பது போய்விட்டது' என்று திருமதி பெல்லினி கூறுகிறார்."
வாழ்வை நடத்துவதற்கே, டோனாவும் மார்க்கும் முழு நேர வேலை பார்க்க
வேண்டும்: இதைத்தவிர டோனா சமீபகாலமாக தன்னுடைய வாரந்திர வேலை மணிகளை 24ல் இருந்து 38 மணி
நேரமாக, மணி ஒன்றுக்கு $10 டாலர் ஊதியத்திற்காக அதிகரித்துக் கொள்ளவும் வேண்டியுள்ளது. வருமான,
சில்லறை வரிகளுக்கு பின்னர் கணவன் மனைவி வீட்டிற்கு ஒரு மாதத்தில் $3,200 எடுத்து வருகின்றனர்; இது
முழுவதும் பல செலவினங்கள், பயன்பாட்டுப் பொருட்கள், அடகு கடன்கள், சொத்துவரிகள், உணவு, காப்பீட்டுத்
தொகை, எரிவாயு, உடை, மற்ற செலவினங்கள் என்று கரைந்துவிடுகிறது.
அவர்களின் கடன் அட்டை கடன்கள் கிட்டத்தட்ட $6,000, அல்லது ஏறத்தாழ
இரண்டு மாதங்கள் வீட்டிற்கு கொண்டுவரும் வருமானத்திற்கு அதிகரித்துள்ளது. பல அமெரிக்க குடும்பங்களை
போலவே, தம்பதிகள் "ஒரு காசோலையில் இருந்து மறு காசோலை வரும் வரை" வாழவேண்டியுள்ளது. திரு
பெல்லினி தன்னுடைய மணிபர்சில் ஒரு டாலர் கூட இல்லை என்பதையும், மறு சம்பளம் வர இருக்கும் இரண்டு
நாட்கள் வரை இருக்காது என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறார்" என்று மகேர் எழுதியுள்ளார்.
வேலைநீக்கம், சுகாரதாரப் பிரச்சினை கார்விபத்து என்று
ஏதேனும் எதிர்பாரதது ஒன்று நிகழ்ந்து விட்டால், என்ன ஆவது?
பெல்லினிக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையை பார்த்தால் சமீபகாலத்தில் திவால் என்று எழுதிக்கொடுக்கும்
செயல்கள் நிறைய நடப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
தற்போதைய வருமானம் தற்சமய செலவினங்களுக்குத்தான் சரியாக இருக்கிறது என்ற
நிலையில் கல்லூரிக்கட்டணங்கள், ஒய்வூதிய நிதி போன்றவை உள்பட வருங்காலத் தேவைகளுக்கு எவ்வாறு
தயார்நிலையில் இருக்க முடியும்? பல தொழிலாளர்களையும் போலவே, திரு பெல்லினியும் தன்னுடைய 401(k)
ஒய்வூதியக் கணக்கில் இருந்து செலவினங்களுக்காகக் கடன் வாங்கும் கட்டாயத்தில்தான் உள்ளார். இதுவும் பங்குச்
சந்தைச் சரிவும் சேரும்பொழுது, ஓய்வூதியத்திற்காக சேமிக்கப்படும் தொகையான $60,000க்கும்
குறைவாகத்தான், அதாவது இவர்களுடைய தற்கால ஓராண்டு வருமானத்தைவிடக் குறைவாகத்தான்,
கொண்டிருக்கவேண்டும் என்று அர்த்தமாகிறது.
இதே செய்தித் தாளின் அதே பக்கத்தில்,
Carol Hymowitz
"தலைமை நிர்வாகிகளின் ஊதியத்தைக் கட்டுப்படுத்துக, ஏன் இவர்களுடைய பதவியையும் அயல்நாட்டினருக்கு
அனுப்பிவைக்கக் கூடாது?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். வேலைகளை வெளிநாட்டிற்கு அனுப்புதல்
போன்று, தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பெருநிறுவனங்கள் செய்து
கொண்டிருக்கையில், அமெரிக்க தலைமை நிர்வாகிகளின் ஊதியங்கள் மட்டும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம், வேறு
எங்கும் காணப்படாத வகையில், உயர்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டி கட்டுரையை தொடக்குகிறார்.
ஊதியங்கள், போனஸ்கள், பங்குவிருப்பங்கள் உட்பட பல பெரு நிறுவனங்களிலும்
தலைமை நிர்வாகிகளுடைய வருமானங்கள் மில்லியனின் பன்மடங்கு தொகுப்புக்களை அடைந்துள்ளன; இதே
நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சராசரி வருமானத்தை விட இவை நூற்றுக் கணக்கான மடங்குகள்
அதிகமானவை ஆகும்
உயர்தர நிர்வாகிகளை தக்கவைத்துக்கொள்ள இது தேவை என்று இப்படி உயர்
ஊதியத் தொகுப்புக்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. ஹைமோவிட்ஸ் இதைப்பற்றிக் கூறுகையில், "உயர்ந்த
பொறுப்பான நிர்வாகத் தன்மை என்ற காலத்தில் கூட வருமானம் என்பது செயற்பாட்டுடன்தான்
இணைக்கப்படுகிறது. புதிதாக நியமிக்கப்படும் தலைமை நிர்வாகிகள் கூட எந்த வேலையையும் தொடங்குவதற்கு
முன்னரே குவிப்பான பணம் கொடுக்கப்படுகின்றனர். அவர்கள் தோற்று, வேலையில் இருந்து நீக்கப்பட்டாலும்கூட,
இன்னும் கூடப் பணம் கொடுத்தே வெளியே அனுப்பப் படுகின்றனர்." என்று பதைபதைக்கிறார்.
மந்த நிலைக் காலத்தில் விலைக்கட்டுப்பாட்டை கொண்டுவரும் அரசாங்கத்தின்
முயற்சிகளை எள்ளி நகையாடும் வகையில், Catch-22
என்னும் தன்னுடைய புதினத்தில் Joseph Heller
தீவனப்புல்வகை (alfalfa.)
வளர்க்காததில் நேர்த்தி படைத்த ஒரு பாத்திரத்தை பற்றி விவரிக்கிறார். "ஒவ்வொரு மரக்கால் (bushel)
தீவனப்புல்வகை அவர் தயாரிக்காததற்கும் அரசாங்கம் அவருக்கு
நிறையப் பணம் கொடுத்தது.... அவர் அதைக் கெட்டிக்காரத்தனமாக நிலத்தில் முதலீடு செய்தார்; விரைவில்
நாட்டில் வேறு எந்த மனிதனையும் விடக் கூடுதலான முறையில் தீவனப்புல்வகை தயாரிக்காமல் இருந்தார்."
ஹெல்லருடைய பாத்திரத்தை உயர்மட்டத்தில் எடுத்துச் செல்லும் உதாரண
வகையில்தான் என்று ஏராளமான நிர்வாகிகள், நிர்வாகம் செய்யாமல் இருக்கின்றனர். ஹெவ்லெட்-பாக்கர்டின்
தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது எந்த வறுமைப் பிரச்சினையும் இல்லாமல் இருந்த
Carly Fiorina
உண்மையில் இந்த ஆண்டு நிறுவனத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டபோது மகத்தான இலாபத்தைத்தான்
பெற்றார். வெளியே அனுப்புவதற்கு அவருக்கு நிறுவனம் மொத்தமாக $14 மில்லியன் கொடுத்ததோடு இன்னும் ஒரு
$7 மில்லியன் ஊக்கப் பணமாகவும், $23.4 மில்லியன் பங்குகளாகவும், ஓய்வூதியத் தொகையாகவும் கொடுத்தது.
Morgan Stanley இன்
முன்னாள் தலைமை நிர்வாகி Phil Purcell
பணிநீக்க, ஒய்வுத் தொகுப்பு ஊதியமாக அவரை வெளியே அனுப்பும்போது $100 மில்லியனை பெற்றார்.
"முன்னாள் [மோர்கன்
ஸ்ரான்லி]
இணைத் தலைவர் ஸ்டீவ் கிராபர்ட் இரண்டு ஆண்டுகள் நீக்குதல் தொகையாக
$32 மில்லியனை, அந்த வேலை போய் மூன்றரை மாதங்கள் கழித்துப் பெற்றார்," என்று ஹைமோவிட்ச்
எழுதியுள்ளார்.
பர்செலுக்குக் கொடுத்த மொத்தப் பணம் பெல்லினிக்கள் இருவருக்கும் இணைந்த
ஒய்வூதியத்தைப் போல் 2,000 மடங்காகும்.
பெல்லினிக்கள் போன்ற தொழிலாளிகளுடைய ஊதியங்கள் தேக்கம் அடைந்துள்ள நிலையில்,
தலைமை நிர்வாகிகளுடைய சராசரி ஊதியங்கள், போனஸ்கள், கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 15 சதவிகிதம் அதிகமாயின.
ஜனாதிபதிகூட இதைப்பற்றி பொறாமைப்படலாம். ஹார்வர்ட் வணிக உயர்கல்விக் கூடப் பேராசரியர்
Rakes Khurana
வை மேற்கோளிட்டு, ஹைமோவிட்ச் குறிப்பிட்டுள்ளதாவது: "1960களில் தலைமை நிர்வாகிகள் சராசரியாக அமெரிக்க
ஜனாதிபதியைவிட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதித்தனர். இன்று அவர்கள் சராசரியாக ஜனாதிபதியைவிட 62
மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர்."
இப்படிப் புள்ளிவிவரங்களை கொடுக்கையில், ஏன் இப்படி பகுத்தறிவற்ற முறையில்,
தோல்வியுற்ற தலைமை நிர்வாகிகளுக்கு ஏன் இப்படி மகத்தான நீக்கப் பணம் அளிக்கப்படும் இச்செயல்
நடைபெறுகிறது, இது ஏன் இன்னும் தொடர்கிறது என்பது பற்றி ஹைமோவிட்ச் முற்றிலும் விளக்க முடியாமல்
உள்ளார். செய்தி ஊடக நடைமுறையில் பொதுத் திகைப்பு, ஆளும் செல்வந்தத் தட்டிலேயே ஒரு பகுதியின் திகைப்பு
இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், தன்னுடைய கட்டுரையின் முடிவில் பெருநிறுவன இயக்குனர் குழுக்கள் இன்னும்
கூடுதலான பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று முறையிடத்தான் அவரால் முடிந்துள்ளது.
உண்மையில் பெல்லினிக்களின் கடினமான நிலையும், பர்செல்கள், பியோரினாக்களின்
அளப்பரிய செல்வமும் விடுவித்துக்கொள்ளமுடியாமல் பிணைந்தவை ஆகும். அடித்தளத்தில் இருக்கும் ஒரே வழிவகையில்
இரண்டு கூறுபாடுகள்தாம் இவை. ஒருபுறத்தில், அமெரிக்காவில் உள்ள ஆளும் செல்வந்தத்தட்டு அமெரிக்க
முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் தொழிலாளர்கள் மீது ஊதியத்தைக் குறைத்தல், ஊழியர்
எண்ணிக்கையை குறைத்தல், வேலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல் என்ற கடும் தாக்குதல்களை
நடத்துகிறது. மறுபுறத்தில் அமெரிக்க உற்பத்தி தொழில் சரிவுற்ற நிலையில், இலாபகரமான உற்பத்தி என்பது
பெருகிய முறையில் பிரச்சினைக்கு ஆட்பட்டுவிட்ட நிலையில், பெருநிறுவன செல்வந்தத்தட்டினர் நேரடியாகவே
திருடுவதற்கும் புறப்பட்டுவிட்டனர்.
தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் எஞ்சிய லாபம் அனைத்தும் நேரடியாக
ஒரு மிகச் சிறிய தனிநபர்கள் நிறைந்த குழுவின் கைகளுக்கு மாற்றப்பட்டுவிடுகிறது. பெருநிறுவன நிர்வாகக் குழுக்கள்
இந்த நடைமுறைக்கு ஒத்துப் போகின்றன; ஏனெனில் அவர்கள் நேரம் வரும்போது அவர்களுக்கும் இதேபோல்
பெரும் சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர்.
இத்தகைய மகத்தான பெருகிய முறையில் ஊதியத் தொகுப்புக்கள் கொடுப்பது உற்பத்தி
சக்திகளின் வளர்ச்சியுடன் எவ்வித தொடர்பும் அற்று உள்ளன; இது செயல்திறன், தகுதி இவற்றில் இருந்தும் பொருத்தமின்றி
உள்ளது. ஒரு பெரு நிறுவனத்தில் நிர்வாகி என்னும் நிலைமை இப்பொழுது கொள்ளையடிப்பதற்கு உரிமம் என்று ஆகியுள்ளது.
இது அமெரிக்க சமுதாயத்திற்கு புதிதல்ல என்பதுடன் இது வெறும் பேராசை என்று மட்டுமில்லை. இன்னும்சொல்லப்போனால்,
தொழிலாளர் இயக்கம் எத்தகைய செயற்பாட்டையும் மேற்கொண்டு கட்டுப்படுத்தாத நிலையில் இருக்கும் பேராசை:
கிட்டத்தட்ட மனநோய் தன்மையை கொண்டு வளர்த்துவிடப்பட்டுள்ள சமுதாய நிலை பற்றிய பிரச்சினையாக இருக்கிறது.
அமெரிக்க மேட்டுக்குடி தன்னுடைய கனவுகளை அடைவற்கான தன்னுடைய வாய்ப்பு இப்பொழுது
என்று, ஒருவேளை இது கடைசியாக கூட இருக்கலாம் என்று உணர்கிறது. அமெரிக்க பெருநிறுவனங்களின் உயர்மட்டங்களில்
இருக்கும் சூழ்நிலை களிப்பை பெருக்கிக் கொள்ளும் தன்மையை சிறப்பாக கொண்டுள்ளது.
"இரண்டு நகரங்களை பற்றிய ஒரு கதை" என்ற தன்னுடைய புதினத்தை டிக்கன்ஸ்
ஆரம்பிக்கும்போது கூறுகிறார்: "சிறந்த காலங்களில் அது ஒன்று; அதேநேரத்தில் மோசமான காலங்களிலும் அது
ஒன்றாகும்." பிரெஞ்சுப் புரட்சிக்கு சற்று முன் ஐரோப்பிய சமுதாயத்தில் இருந்த மகத்தான முரண்பாடுகளை
சுட்டிக்காட்டும் வகையில் அவர் எவ்வாறு இந்த நிலைமைகள் தவிர்க்கமுடியாமல் பெரும் எழுச்சிகளுக்கு இட்டுச்
சென்றது எனக் காட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலைமதான் இங்கு இன்று நிலவுகிறது. பலவிதங்களிலும் பிரான்சின்
புரட்சிக் காலத்திற்குமுன் இருந்த சீரழிந்த மேட்டுக்குடியினரைத்தான் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்கள்
ஒத்திருக்கின்றனர். அடித்தளத்தில் இருக்கும் பிரச்சினைகளின் நெருக்கடிக்கு விடை காண முற்படும் அமெரிக்க முதலாளித்துவத்தின்
வகைகள் பிரச்சினையை அதிகரிக்கத்தான் செய்யும். ஒரு புறத்தில் அது சமத்துவமின்மையை பெருக்கிக் கொள்ளும்
வகையிலும், சமூக பதட்டங்களை அதிகப்படுத்தும் முறையிலும் நடந்து கொள்ளுகிறது. மறு புறத்தில், பெருநிறுவன
சொத்துக்களை கொள்ளையடிக்கும் செயற்பாடுகள் அமெரிக்க பொருளாதாரத்தின் நலனை பெரிதும் பாதிக்கின்றன.
இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நடைபெறமுடியாது.
Top of page |