ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Villepin government attacks the
working class
பிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்தை தாக்குதல் தொடுக்கும்
வில்ப்பன் அரசாங்கம்
By Antoine Lerougetel
18 July 2005
Back to screen version
மே 29-ல் நடைபெற்ற கருத்தெடுப்பில் பிரெஞ்சு வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றிய
அரசியலமைப்பை புறக்கணித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ஜாக் சிராக்கினால் பிரதமராக டோமினிக்-டு-வில்ப்பன் நியமிக்கப்பட்டார்.
பொறுப்பேற்றுக்கொண்டதும், தான் 100 நாட்களுக்குள் பிரெஞ்சு மக்களின் பிரதான கவலையான வெகுஜன வேலையில்லாத
நிலமை மீது தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.
அரசியலமைப்பு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள நவீன-தாராளவாத ''சுதந்திர சந்தைக்''
கொள்கைகள் வேலை பாதுகாப்பின்மையையும், வேலையில்லாத நிலையையும் தூண்டிவிடுவதாக நிலவிய புலப்பாடுதான்
ஐரோப்பிய அரசியலமைப்பை புறக்கணிப்பதற்கான பெரிய காரணம் என்பதை புதிய பிரதமர் உணர்ந்திருந்தார்.
தற்போது பிரான்சில் வேலையில்லாதிருப்போர் 10.2 சதவீதமாக உள்ளனர் மற்றும் இந்த
விகிதம் கடந்த இரண்டு தசாப்தங்களில் 8 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடையவில்லை. 25 வயதிற்கு குறைந்தவர்களில்
நான்கு தொழிலாளர்களில் ஒருவர் வேலையில்லாதிருக்கின்றனர், இதில் தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளிலும்,
புலம்பெயர்ந்தோருக்கிடையிலும் இது மிக அதிகமாகும்.
ஜீன் 8-ல், வில்ப்பன் ''வேலை வாய்ப்பிற்கான அவசர திட்டத்தை'' அறிவித்தார். ''உடனடியாக
செயல்படவேண்டியதன்'' அவசியத்தை வலியுறுத்திய அவர், கட்டளை மூலம் தனது கொள்கைகளை திணிக்க பிரெஞ்சு
அரசியலமைப்பின், 38-வது பிரிவை பயன்படுத்தினார், மற்றும் இவ்வாறு நாடாளுமன்ற விவாதத்தை தவிர்ப்பது, தொழிற்சங்கங்களுடன்
ஆலோசனை நடத்துவது, அல்லது வழக்கமான ஜனநாயக நிகழ்ச்சி போக்குகள் எதையும் தவிர்ப்பதற்கு வகை செய்தார்.
வேலை வாய்ப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டம் என்ற போர்வையில், அவரது திட்டம்
தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே உள்ளது----- அதிகாரபூர்வமான ''இடது''
மற்றும் வலுதுசாரி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே உள்ளது---- தொழிலாளர்களின் உரிமைகளை குறைத்து மற்றும்
தொழிலதிபர்களுக்கு சலுகைகளை வழங்கி, அவர்கள் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊக்குவிப்பதாகும். அத்தகைய
வெகுமதிகள் தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்படுவது வேலையில்லா நிலையை குறைக்கும் என்று அறிவிக்கப்பட்ட
நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.
வில்ப்பனின் ''புதிய வேலை வாய்ப்பு ஒப்பந்தம்'' 10 பேருக்கு குறைந்த ஊழியர்கள்
அடங்கிய நிறுவனங்களுக்கு பொருந்துவதாக உள்ளது. மற்றும் பயிற்சி காலம் புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டவர்களுக்கு
தற்போது இரண்டு முதல் மூன்று மாதங்கள் என்றிருப்பதை, இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கிறது. இந்தக் காலகட்டத்தில்,
தொழிலதிபர்கள் எந்தவிதமான நியாயப்படுத்துதல்கள் இல்லாமல் மற்றும் தொழிலாளர்கள் நியாயமற்ற அல்லது தவறான
பதவி நீக்கங்களுக்காக எந்த சட்டபூர்வ நிவாரண வழிமுறையையும் இல்லாமல் பதவி நீக்கம் செய்வதற்கு வகை செய்கிறது.
இந்தத்திட்டப்படி வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வேலையில்லாதோர்
சலுகைகள் மற்றும் மற்றொரு வேலை வாய்ப்பை தேடுவதற்கான உதவிகள் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும், அது வேலை
பாதுகாப்பின் மீது கூடுதல் தாக்குதல் என்பதை எந்த வகையிலும் குறைப்பதாக இல்லை. அது இரண்டாம் உலகப்போர்
முடிவிலிருந்து வளர்ச்சியுற்ற சட்டபூர்வமான தொழிலாளர் பாதுகாப்பு நெறிமுறைகளை பெருமளவில் மீறுவதாக உள்ளது.
பெரிய பிரதான தொழிலதிபர் அமைப்பான
Medef வில்ப்பன் திட்டத்தை சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை
என்று அங்கீகாரமளிக்கிறது, ஆனால் மிகக் குறைவாக இருப்பதாக விமர்சனம் செய்துள்ளது. குறிப்பாக பொது சேவை
வேலை நிறுத்தங்களுக்கு தடைவிதிக்கப்படாதது பற்றியும் பொதுச் செலவினங்களை வெட்டுவதற்கான முன் மொழிவு
இல்லாதது குறித்தும் Medef
''வருத்தம்'' தெரிவித்துள்ளது.
வில்ப்பன் திட்டம் செயல்படும் சிறிய தொழிற்சாலைகள் 2.2 மில்லியன் தொழிற்சாலைகளையும்
4 மில்லியன் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாகும்---இவர்கள் பிரான்சின் மொத்த தொழிலாளர்களில் 36 சதவீதம்
பேராவர். தொழிற்சங்கங்களில் அவர்கள் இடம் பெற்றிருக்காததால் தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு
அவர்கள் எளிதான இலக்குகள் என்று கருதப்படுகிறார்கள்.
புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் சிறிய நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும்
அரசாங்கத்தின் திட்டத்தில் பிற வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன. 25 வயதிற்கு குறைந்த தொழிலாளர்களை வேலையில்
அமர்த்தும் இந்த தொழிற்சாலைகளுக்கு சமூக திட்டங்களுக்கான கட்டணங்களை வசூலிப்பதில் தளர்வு காட்டப்படும். இது
தவிர புதிதாக வேலையில் அமர்த்தப்படுபவர்களுக்கான நிபந்தனைகளை இந்த நிறுவனங்கள் மிகவும் சுதந்திரமாக மாற்றிக்
கொள்ள முடியும்.
Libération பத்திரிக்கையின்
தொழிலாளர் பற்றிய செய்தித்தொகுக்கும் செய்தியாளர் ஜீன் 9-ல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:
"ஊதியம், பணிசெய்யும் காலம், ஒப்பந்தகாலம் ஆகியவற்றை திட்டவட்டமாக வரையறை செய்யும் பணி ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவதற்கான கடப்பாட்டை வேலைவாய்ப்பு காசோலையானது அகற்றுகிறது... முதலாளி 12 யுரோக்கள் தருவதாக
உறுதியளித்துவிட்டு 7 யுரோக்களை மட்டுமே வழங்க முடியும். அல்லது ஊதியமில்லாமல் மேலதிக நேரம் பணியாற்ற
கட்டளையிட முடியும். அது போன்ற சமயங்களில், தொழிலாளி அதனை மீண்டும் சரிசெய்வதற்கு பெரும் கஷ்டத்திற்கு
ஆளாவார்``.
வில்ப்பன் திட்டத்தில் வேலையில்லாதிருப்போர் அவர்களுக்கு வழங்கப்படும் வேலையை ஏற்றுக்கொள்ள
மறுத்தால் அத்தகைய தொழிலாளர்களுக்கு அபராதங்கள் விதிக்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்சில் நிலவும் வேலையில்லாதோர் விகிதத்தை மட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கைகள்
மிகக்குறைந்த அளவிற்கே பயன்களை தரக்கூடும் என்பதில் எந்த அதிகாரபூர்வமான இடதுசாரி அல்லது வலதுசாரி அரசியல்
விமர்சகரும் தங்களது கரிசனையான நம்பகத்தன்மையை தெரிவிக்கவில்லை.
Le Monde
தனது ஜீன் 10 தலையங்கத்தில் பிரெஞ்சு பொருளாதாரம் முடங்கிக்கிடப்பதாக வலியுறுத்திக் கூறியுள்ளது.
``பொருளாதார மீட்சியில்லாமல் வேலை வாய்ப்பில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் பயனற்றவை``.
வில்ப்பனின் நடவடிக்கைகள் வாய்மொழியாக எதிர்ப்புக்களை சந்தித்திருக்கின்றன, ஆனால்
தொழிலாளர் இயக்கத்திலிருந்து எந்த கடுமையான அறைகூவலும் வரவில்லை.
CGT தொழிற்சங்க
கூட்டமைப்பின் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமான பெர்னார்ட் திபோ வில்ப்பன் அரசாங்கம் ``ஒரு கெட்ட
ஆரம்பத்தை" செய்திருப்பதாக கூறியிருக்கிறார், ஆனால் அதன் சட்டபூர்வமான தன்மையை அவர் ஆட்சேபிக்கவில்லை.
Medef கோரியதுபோல, புதிய பணி ஒப்பந்தமானது ''நிரந்தர பணி
ஒப்பந்தங்களை திட்டமிட்டு முடக்கி வைப்பதை அதிகரித்துள்ளது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகார மையங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி கவலையடைந்து திபோ கூறியுள்ள
புகாரில் ``சமரசப்பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு எந்தக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை, சமூக கலந்துரையாடல்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆரோக்கியமற்ற வகையில் சமூக கொள்கை, கட்டளைகளால் மாற்றப்பட்டிருக்கிறது``
என்று கூறியுள்ளார்.
CGT ஜீன் 21-ல் வில்ப்பன் இன் நடவடிக்கைகளுக்கு
எதிராக ஒரு பேரணி நடத்துவதற்கு அழைப்பு விடுத்தது, அதற்கு மற்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு தரவில்லை, எனவே
மற்றவர்கள் கவனத்திற்கு வராமலே அது முடிந்துவிட்டது. முந்திய ரஃப்பரன் அரசாங்கம் எரிவாயு, மின்சாரத் துறைகளை
தனியார்மயமாக்கியது, ஓய்வூதிய உரிமைகளை குறைத்தது மற்றும் தேசிய கல்வி சேவையை சிதைப்பதற்கு நடவடிக்கைகளை
எடுத்தது ஆகியவற்றை எதிர்த்து மிகப்பெரிய வேலைநிறுத்தம் மற்றும் கண்டனப் பேரணி இயக்கங்கள் நடாத்தப்பட்டதோடு
இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.
வில்ப்பன் அரசாங்கத்தை பொது கருத்துக்கணிப்பில் 33 சதவீதம் பேர் ஏற்றுக்கொள்கின்றனர்,
அதே நேரத்தில் ஜனாதிபதி சிராக் ஆதரவு கருத்துகணிப்பு 24 சதவீதமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. இது நெருக்கடியும் குழப்பமும்
நிறைந்த அரசாங்கமாகும். வாக்காளர்கள் அதன் விசுவாச எதிர் கட்சியான சோசலிஸ்ட் கட்சியுடன் சேர்த்து ஐரோப்பிய
அரசியலமைப்பு கருத்தெடுப்பில் ஒதுக்கித்தள்ளி விட்டனர், ஆளும் கோலிச கட்சி பரந்த வெகுஜன மக்களிடமிருந்து ஒட்டு
மொத்த அரசியல் ஸ்தாபனங்களும் பிளவுபட்டு நிற்பதன் சின்னமாக உள்ளது.
எனவேதான் வில்ப்பன் தனது வேலைத்திட்டத்தை அரசாங்க கட்டளைகள் மூலம் திணித்து வருகிறார்.
அதிகாரபூர்வமான இடது எதிர்க்கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்களிடமிருந்து எந்தவிதமான அக்கறைகொண்ட எதிர்ப்பும்
இல்லாத காரணத்தினால் மட்டுமே இந்த நிர்வாகம் நீடித்திருக்க முடிகிறது.
ஆளும் குழுவிற்கு மிகத்தெளிவான எதிர்ப்பு உள்ளேயிருந்தே வருகிறது:
உள்துறை அமைச்சரும் கோலிச UMP
ஒன்றிய தலைவருமான நிக்கோலா சார்க்கோசி, ஆளும் UMP-யை
வலதுசாரி பக்கம் கூர்மையாக திருப்பி விட முயன்று வருகிறார், மற்றும் தேசிய முன்னணியில் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக
அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறார்.
சார்க்கோசி இடைவிடாது சட்டம் ஒழுங்கு அடிப்படையிலான பிரசார வாய்வீச்சை நடத்தி
வருகிறார், மற்றும் புலம்பெயர்வோருக்கு எதிரான இனவாதத்தை கோரி வருகிறார், அதே நேரத்தில் தொழிலாளர்
உறவுகளில் எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடவேண்டுமென்று
Medef விடுத்துவரும் கோரிக்கைகளை முழுமையாக ஆதரிக்கிறார்.
2007 தேர்தல்களில் சிராக் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக போட்டியிடுவாரானால் அவருக்கு எதிராக தாம்
போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
பிரதமராக பதவியேற்றுக் கொண்டவுடன் டு வில்ப்பன் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக
நடைபெறாத, முதல் முறையாக நவீன-பாசிச தேசிய முன்னணியை பிரதமரின் ஆலோசனைகளின் ஒரு சுற்றில் கலந்து
கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார். ஜோன்-மரி லூ பென்னின் கட்சியை தலைமறைவிலிருந்து பகிரங்கமாக வெளியே
கொண்டுவருகின்ற இந்த முயற்சியில் சார்க்கோசி மிகத்தீவிரமான ஆதரவாளராக செயல்பட்டுவருகிறார். |