World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Live 8: Who organised the PR campaign for Blair and Bush?

நேரடி 8: பிளேயருக்கும், புஷ்ஷிற்கும் பொதுத் தொடர்பு பிரச்சாரத்தை அமைத்îது யார்?

By Ann Talbot
11 July 2005

Back to screen version

"இறுதி உந்துதல்" என்று விளக்கப்பட்டிருந்த கடைசி Live 8 இசை நிகழ்ச்சி ஜூலை 6-ம் தேதியன்று G8 உச்சிமாநாட்டிற்காக கிளேனெகிள்ஸில் நாடுகளின் தலைவர்கள் கூடியபோது நடாத்தப்பட்டது. மழையில் நன்கு நனைந்த வண்ணம் 50,000 பேர் அடங்கிய கூட்டமானது வீடியோ தொடர்பு மூலம், "இப்புதிய நூற்றாண்டில் உலகில் மிக வறிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டும், தளைகளில் கட்டுண்டும் உள்ளனர். அச்சிறைகளுக்கு வறுமை என்று பெயர். அவர்களை விடுவிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று நெல்சன் மண்டேலா கூறியதைக் கேட்டது.

உண்மையிலேயே மிகப் பெரிய செய்தி ஊடக நிகழ்வாக எடின்பரோ இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது. ஜூலை 2 சனிக்கிழமையன்று AOL இன் நேரடி வீடியோ காட்சியை ஐந்து மில்லியன் மக்கள் கண்டு களித்ததாக கூறப்படுகிறது. ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் நேரடி 8 நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். நூற்றுக் கணக்கான மில்லியன் மக்கள் இசை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்ததாக கூறப்படுகிறது. கால் மில்லியன் மக்கள் எடின்பரோத் தெருக்களில் அணிவகுத்துச் சென்றனர்.

Live 8 பரிமாணம் வியத்தகு வகையில் இருந்தது. ஆனால் அதன் அடிப்படை நோக்கம், வெளிப்படையாக அது தோற்றுவித்திருந்த மனித நேயத் தன்மையில் இருந்து அரசியல் ரீதியான தீமை நிறைந்ததாகத்தான் இருந்தது. டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளால் இது அமைக்கப்பட்டிருந்து, அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஆதரவிற்கும் உட்பட்டிருந்தது. G8 உச்சி மாநாட்டில் உறுதியளிக்கப்பட்டிருந்த அற்ப கடன் தொகை நிவாரணத்தை பெருக்கிக் காட்டியும், பிளேயரின் சொந்த ஆபிரிக்காவிற்கு உதவி, நிவாரணம் என்பதற்கான குழுவின் செயல்களை தடையற்ற சந்தை முயற்சிகளுடன் பிணைத்த வகையிலும், பிளேயர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இருவருடைய செயற்பாடுகளுக்கும் பெரிதும் தேவைப்பட்டுள்ள மனிதாபிமான அக்கறை என்ற முகமூடியை கொடுப்பதற்கு இது உதவியது.

இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்களும் அதன் முக்கிய செய்தித் தொடர்பாளர்களுமான----பொப் கெல்டோப் மற்றும் பூனோ----இருவரும் 1985ல் Live Aid என்று Live 8 இன் முன்னோடி நிகழ்ச்சி பற்றியும் குறிப்பிட்டனர். ஆனால் Live Aid மில்லியன்கள் என்ற கணக்கில் பவுண்டுகளை, எதியோப்பிய பஞ்சத்தை எதிர்த்துப் போரிடத் திரட்டியது என்றால் இம்முறை "உங்கள் பணம் வேண்டாம்" என்பதை வலியுறுத்தியுள்ளது என்றனர். 1914-ம் ஆண்டு கிச்சனர் பிரபு இராணுவத்திற்கு ஆட்சேகரிக்க அழைப்பு விட்டபோது கொடுத்த ஒலியான அவர்களுக்கு "நீங்கள்தான்" வேண்டும் என இது கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இதன் பொருள் பணம் கை மாறிவிடவில்லை என்பது அல்ல. 10 இசை நிகழ்ச்சிக்குமான செலவு 25 மில்லியன் பவுண்டுகளாகும். 1.6 மில்லியன் பவுண்ட் பிரின்ஸ் அறக்கட்டளைக்கு அந்த அமைப்பு தன்னுடைய விருந்தை பார்க்கில் இரத்து செய்வதற்காக கொடுக்கப்பட்டது. இசைவாணர்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை, ஆனால் பிலடெல்பியா நிகழ்வில் இசைவாணர்களுக்கு 1,700 பவுண்டுகள் மதிப்புடைய வெகுமதிப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்வுகளுக்கு கிடைக்கக்கூடிய பெரும் ஊக்கம் ஒரு கால் இசைத்தட்டு விற்பனை மிகப் பெரிய அளவில் இருந்தது என்பதாகக் கூடும். சேர் பால் மக்கார்ட்னி, "Sergeant Pepper's Lonely Hearts Club Band" என்பது சில மணி நேரங்களிலேயே விற்பனைக்கு வந்தது. லண்டனில் இருக்கும் இசைத்தட்டு விற்பனை நிலையங்கள் 1,000 சதவிகிதம் பிங் பிளாயிட்டின் ஒலித்தட்டுக்கள் மறுநாள் விற்பனையானதாக தெரிவிக்கின்றன. பிளேயிட்டின் முக்கிய கிட்டார் கலைஞரான டேவிட் கில்மோர் உடனே தன்னுடைய பங்கு தர்மத்திற்குச் செல்லும் என்று கூறினார்; பல கலைஞர்களும் இதைத் தொடர்ந்து அவ்வாறே அறிவித்தனர். ஆனால் கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் இசைத்தட்டு நிறுவனங்கள் விற்பனை மூலம் பெற்ற இலாபத்தில் மிகச் சிறிய பகுதிதான். இவ்விடத்தில் இருந்து பெருந்தன்மையான கொடைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இந்த டிஜிட்டல் உலகில், (CD) இசைத்தட்டு குறுந்தகடுகள் விற்பனை, ஒலிபரப்பு உரிமை, வணிகப் பொருளாக்குதல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடையும் சந்தையின் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றன. பெரும்பாலான செலவுகள் இவ்விதத்தில் எடுக்கப்பட்டுவிடும்; இங்குதான் இலாபத்தின் பெரும் பகுதியும் ஒப்புமையில் எளிய, மிக அதிக அளவு பெரும் விளம்பரமும் வரவேற்கப்படும். அப்பட்டமான வணிகமுறைதான் செயல்பாட்டின் பெரும் அறக்கூறுபாட்டில்கூட வெளிப்படையாகக் காணப்பட்டது. "வறுமையை வரலாற்றுப் பொருளாக்கு" என்ற கைப்பட்டைகள் பிரச்சாரத்தில் கண்கூடாகத் தெரிந்த அடையாளங்களில் அதிகமானதாக இருந்தது. தொடக்கத்தில் இருந்து, இதில் எல்லாம் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த கைப்பட்டைகளில் சில சீனாவில் கடும் உழைப்பாளிகளால் செய்யப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.

செய்தியாளர் ஸ்டூவர்ட் ஹோட்கின்சன் Red Pepper ஏட்டில் சில கைப்பட்டைகள் தொழிலாளர்களின் உரிமைகளை மீறும் நிறுனங்களின் முத்திரையுடன் விற்கப்பட்டன என்று காட்டினார். இதில் அமெரிக்க தொழிலாளர் கல்வி நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் கோட்சினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள Tommy Hilfiger என்ற நடைப்பாங்கு நிறுவனமும் அடங்கியுள்ளது; "இந்நிறுவனம் தொழிலாளர்கள் நடத்தப்படுவதற்கு பொறுப்பு ஏற்க மறுக்கும் நிறுவனங்களின் பட்டியலில் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். இப்படி உளைச்சலை தரும் கைப்பட்டைகள் ஸ்காட்டிஷ் மிலிலியனரான Tom Hunter-க்குச் சொந்தமான கடைகளில் விற்கப்பட்டது; இவர் வறுமை வரலாற்று பழமையாகட்டும் பிரச்சாரத்திற்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் நன்கொடையளிப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், கையெழுத்திட்டுள்ள சில பெருநிறுவன வணிகங்களோடு ஒப்பிடுகையில் ஹன்டர் மிகச் சிறிய வணிகர்தான். செய்தி ஊடகப் பிரபு ரூபர்ட் முர்டோக் Live 8 க்குக் கொடுத்த ஆதரவு எந்த அளிவிற்கு வணிக எந்திரம் மகத்தான முறையில் இயக்கப்பட்டது என்பதற்கு ஒரு அடையாளமாகும். பிரிட்டனின் முக்கிய பரபரப்பு ஏடான Sun (முர்டோக்குடையது) இந்த நிகழ்விற்கு உற்சாகமான ஆதரவைக் கொடுத்தது; இந்த ஏடு ஒன்றும் ஆபிரிக்காவிற்கோ தாராளக் கொள்கைகளுக்கு ஆர்வம் காட்டிய நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றாலும், பிளேயரின் முக்கிய ஆதரவாளராக இருக்கிறது.

முர்டோக்கும் Live 8 தொடர்புகளும் நெருக்கமானதேயாகும். ரூபர்ட் முர்டோக்கின் மகளான எலிசபெத் முர்டோக் அமைப்பாளர்களுள் ஒருவரான மாத்தியூ பிராய்டின் மனைவியாவார். பிராய்ட் ஒரு முக்கிய பொது உறவுகள் நிறுவன உரிமையாளர் ஆவார்: பைனான்சியல் டைம்சின் கருத்தின்படி அந்த நிறுவனம் இங்கிலாந்திலேயே மிகவும் செல்வாக்கு உடையதாகும். நாட்டில் அதனுடைய செய்தி ஊடக, கேளிக்கையாளர் வாடிக்கையாளர் பட்டியல் நீண்டதாகும்; இதல் புகழ் பெற்ற நடிகர்கள், AOL போன்ற பெரும் நிறுவனங்கள் அடக்கமாகும்----அது பற்றிப் பின்னர் கூறுவோம். அவரும் அவருடைய மனைவியும் பிளேயர் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் பல அரசாங்கக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர், இவருடைய நிறுவனம் Freud Communications என்பது அரசாங்கத்திற்காகவும், தொழிற்கட்சிக்காகவும் பல நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

பிரோய்டுடைய சகோதரி, எம்மா, Love Actually, the Bridget Jones Movies Notting Hill, Mr. Bean மற்றும் Four Weddings and a Funeral என்பவற்றிற்கு கதாசிரியர்/ இயக்குனர்/தயாரிப்பாளரான ரிச்சார்ட் கர்ட்டிஸை மணந்துள்ளார். இவருடைய கடைசிப் படமான The Girl in the Cafe என்பது G8 மாநாட்டையொட்டிய கற்பனை காதல் கதையாகும்; சாதாரண மக்கள்கூட மனச்சாட்சியின் உந்துதலினால் அரசியல் நடைமுறைக்கு உதவ முடியும் என்பதை காட்டுவதாக சொல்லப்படுகிறது. Live Aid ஐ அடுத்து Comic Relief என்ற அறக்கட்டளையை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவர். Live 8 ன் முக்கிய அமைப்பாளர்களில் இவரும் ஒருவராவார். சான்ஸ்லர் கார்டன் பிரெளன்க்கு மிகவும் நெருக்கமாக இவர் உள்ளார் என்றும் கூறப்படுகிறது; அவரது சமீபத்திய திரைப்படத்தில் இவர் அதிகம் மறைக்கப்படாமல் பரிவுணர்வுடன் அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

கெல்டாப்பின் தயாரிப்பு நிறுவனமான Ten Alps, ஹைட் பார்க்கில் இரண்டு பெரிய திரைகளை கொடுத்தது; இதுவும் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. கல்வி, திறமைகள் துறைக்கு நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அமைப்பான Teachers TV-யில் இதன் பங்குகள் 70 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு இதன் இலாபம் 400 சதவிகிதம் அதிகரித்தது. Ten Alps பிரிட்டனில் ஒரு முக்கியமான, சுதந்திரமான தொலைக்காட்சி நிறுவனம் என்ற இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. பன்னாட்டுப் பார்வையில் Live 8 என்னும் உயரிட நிகழ்வினால் இந்த நிறுவனத்தின் மதிப்பு பெருகும்.

நேரடி 8 விற்பனை சந்தை வாய்ப்பை முன்னோடியில்லாத வகையில் உயர்த்தியது. Nokia, Volvo இரண்டுமே பெருவணிக புரவலர் பட்டியலில் இருந்தன. Volvo வின் செய்தித் தொடர்பாளர் Soren Johansson இந்நிகழ்வு "எங்கள் நிறுவனத்தின் மரபணுவுடன் நன்கு பொருந்தியுள்ளது", "மக்களுடைய உணர்வுகளுக்கு அழைப்பு விடுகிறது'' என்று கூறியுள்ளார்.

படக்காட்சியாக AOL காட்டியதுடன், Live 8 ஐ, "உலகத்தை இசை மாற்றிய நாள்" என்றும் கூறியுள்ளது. படக்காட்சி அதன் வணிக மதிப்பையும் நிரூபித்தது என்பதே பொதுக்கருத்தாகும். Live 8 உண்மையில் உலகத்தை மாற்றியிருக்கலாம், அல்லது உலகில் விளம்பரம் என்ற தலைப்பின் கீழ் உள்ள பகுதியை மாற்றியிருக்கலாம்.

அமெரிக்காவில் இருக்கும் ABC பெரும் ஏமாற்றத்திற்கு உட்பட்டது, ஏனெனில் அதற்கு 2.9 மில்லின் பார்வையாளர்கள்தான் கிட்டினர்; சனிக்கிழமை இரவன்று வீட்டில் இருப்பவர்களை மட்டும் ஈர்க்கும் வகையில் அதன் "காட்சிகள்" அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒரு செய்தி ஊடக வல்லுனர் கூறியுள்ளபடி, விளம்பரத் தொகை முன்கூட்டியே வந்துவிட்டது.

வறுமையை வரலாற்றுப் பொருள் ஆக்குவோம் என்பதுடன் இணைந்திருந்த சில அறக்கட்டளைகள் கைப்பட்டைகளை சூழ்ந்திருந்த ஊழல் பற்றித் தங்கள் எச்சரிக்கையை உணர்த்தியிருந்த போதிலும்கூட, பிரச்சாரத்தின் வணிகச்சார்பு இரகசியமாக ஒன்றும் இருந்துவிடவில்லை. Live 8 என்பது இப்பொழுதும் AOL இன் இசை பதிவிறக்க (download) பணிக்கு தொடர்பைக் கொடுக்கிறது.

அதன் தோற்றம் ஒரு புறம் இருக்க, Live 8 என்பது ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி அல்ல. இது ஒரு அரசாங்க-சார்பு அணிவகுப்பாகும். பிளேயரும் அவருடைய நிதி மந்நிரி பிரெளனும் தங்களை நேரடி 8 உடன் நெருக்கமாக தொடர்பு படுத்தியிருந்தனர். எடின்பரோவில் வறுமை வரலாற்றுப் பொருள் ஆகட்டும் ஊர்வலம் நடப்பதற்கு முதல் நாள் மாலை பிரெளன் ஓர் அறக்கட்டளை அரங்கில் பங்கு பெற்றிருந்தார்; அவருக்கு அது அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்னரே MTW யில் பிளேயர் ஓர் ஒருமணி நேரப் பேட்டி ஒன்றைக் கொடுத்தார்; அப்பொழுது அவருடன் கெல்டாப்பு இருந்தார்; Destiny's Child லிருந்து வந்த வினாக்களுக்கு விடையிறுக்கப்பட்டது.

வேறு எந்த அமைப்பும் கொடுக்காவிட்டாலும், நோட்டிங் ஹில் பகட்டுக் காட்சி பிளேயருக்கு "நன்மையைத்தான் கொடுத்தது". ஒப்சேர்வர் பத்திரிகையின் களிப்பு நிறைந்த செய்தியாளர் கூறினார்: "இன்று காலை முதல் வெளிச்சம் வருவதற்கு முன்பு டோனி பிளேயருக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை நலனாக உலகத்தில் பெரும்பாலானவர்கள் அளித்திருப்பர்".

ஓர் இசை நிகழ்ச்சிக்குச் செல்லுதல், அதை தொலைக்காட்சியில் பார்த்தல் இவற்றை ஒரு ஜனநாயக இசைவு என நம்பவேண்டும் என்று நமக்குக் கூறுகிறார்கள். பிளேயர் அரசாங்கம் இங்கிலாந்தின் 20 சதவிகித வாக்காளர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. வரலாற்றிலேயே எந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இவ்வளவு குறைந்த ஒப்புதல் இருந்தது கிடையாது. இந்தப் பிரச்சாரத்தின் கோஷம் "தேர்தல்களை வரலாற்றுப் பொருளாக ஆக்கிவிடு" என்று கூட வைத்திருக்கலாம்.

இசை நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்புக்கள், புகழ் பெற்றவர்களுக்கு தனி இருக்கைகள் போன்றவை Live 8 எப்படி அடிப்படையில் உயர் செல்வந்த தட்டின் தன்மையைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகின்றன. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் மரபு வழியிலான மதிப்பீடுகள் அல்ல இந்த செல்வந்தத் தட்டினரின் வாதம், மாறாக புதிய பூகோள செல்வம் கொழித்தவர்கள், தொழிற்கட்சி அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பவர்கள், வரிச்சலுகைகளை அள்ளித்தரும் லண்டனை தளமாகக் கொண்டு இருப்பவர்களுடையதாகும். திறமை மிகுந்த கறுப்பு ஆபிரிக்க கலைஞர்கள் கோர்ன்வாலில் நிகழும் துணை நிகழ்ச்சிக்கு ஒதுக்கி அனுப்பப்பட்டனர், ஏனெனில் அவர்களுக்கு ஹைட் பார்க் நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்தவர்களைப் போல் வணிக வலு கிடையாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved