:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
White House aide Karl Rove witch-hunts Iraq
war opponents
வெள்ளை மாளிகை ஆலோசகர் கால் ரோவ் ஈராக் போர் எதிர்ப்பாளர்களை பழி வாங்குகிறார்
By Patrick Martin
25 June 2005
Back to screen
version
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க போருக்கான எதிரிகளை அச்சுறுத்துகின்ற ஒரு
தீவிரமான முயற்சியாக வெள்ளை மாளிகையின் தலைமை அரசியல் ஆலோசகர் கால் ரோவ் நியூயோர்க் நகரில் புதன்கிழமையன்று
ஆற்றிய ஒரு உரையில் இந்தப் போர்களை விமர்சிப்பவர்கள் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாகவும், தஞ்சமளிப்பதாகவும் குற்றம்
சாட்டினார். புஷ் நிர்வாகம் 9/11 தாக்குதல்களுக்கு பதிலளிக்கின்ற வகையில் போர் தொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில்,
தாராளவாதிகள் ''நம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அனுதாபத்தோடு மருந்திடுகின்றனர்'' என்று அறிவித்தார்.
அமெரிக்க காவல் முகாமான குவாண்டநாமோ வளைகுடாவில் பயன்படுத்தப்படுகின்ற முறைகள்
பாசிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிச சர்வாதிகாரங்களோடு ஒப்பிட்டு இல்லிநோய் செனட்டர் ரிச்சார்ட் டர்பின் அண்மையில் வெளியிட்டுள்ள
கருத்துக்களை அவர் கண்டித்தார். இதற்கு முந்திய நாளில், டர்பின் செனட் சபையில் அழுதுவடிந்துகொண்டு அவருடைய
கருத்துக்களை வாபஸ் வாங்கினார்.
டர்பினின் ஆரம்பஅறிக்கை மீண்டும் அல் ஜசீராவில் ஒளிபரப்பட்டதை குறிப்பிட்ட ரோவ்
''அது அமெரிக்காவின் இராணுவ சீருடை அணிந்த ஆண்களையும் பெண்களையும் பேராபத்தில் நிச்சயமாக தள்ளிவிட்டது?
மற்றும் தாராளவாதிகளின் நோக்கங்கள் பற்றி மேலும் கூறவேண்டிய அவசியமில்லை'' என்று கூறி முடித்தார்.
இந்தக் கருத்துக்கள் ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் ஆத்திரமூட்டலாகும். குடியரசுக்கட்சியின்
வாக்குப்பதிவில் மாநிலம் தழுவிய ஆதரவு திரட்டும் நியூயோர்க் பழமைவாத கட்சியின் திரட்டப்பட்ட ஒரு அதிதீவிர-வலதுசாரிகளின்
பின்னணி அமைப்பில் ரோவ் உரையாற்றினார். பாரம்பரியமாக ஜனநாயகக்கட்சி தாராளவாதத்தின் ஒரு கோட்டை என்று
கருதப்படும் மன்ஹாட்டனில் அவர் பேசினார், அது ஏறத்தாழ 3,000 பேர் மடிந்த உலக வர்த்தக மையத்திலிருந்து சில
மைல்கள் மட்டுமே தள்ளியுள்ளது.
அவரது உரையின் தொனி 1950களில் பழிவாங்கும் மக்கார்த்தியிசத்தின் (McCarthyite)
படுமோசமான நாட்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அப்போது குடியரசுக் கட்சியினதும் மற்றும் ஜனநாயகக்
கட்சியினதும் சிவப்பை வெறுப்பவர்கள், ஒவ்வொரு வகையான இடதுசாரி அரசியல் நடவடிக்கையையும் கிரிமினல் குற்றங்களாக்க
முயன்றனர், அப்போது சோசலிச கொள்கைகளுக்காக போராடியவர்களை அல்லது அமெரிக்க இராணுவவாதம், இன
அநீதியை மற்றும் பெருநிறுவன மேலாதிக்கத்தை எதிர்த்தவர்கள் உளவாளிகள் என்றும் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும்
முத்திரை குத்தப்பட்டனர்.
இராணுவவாத வாய்வீச்சோடு பயங்கரவாதத்தை நோக்கிய அனுதாபத்தையும், உண்மைக்கு
புறம்பான குற்றச்சாட்டுடன் ரோவ் இணைத்தார். செப்டம்பர் 11 ''நிதானத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும்'' ஏற்ற
நேரமல்ல என்று அறிவித்தார். ''நமது தேசிய உறுதிப்பாட்டை திரட்ட வேண்டிய தருணம் அது----
மற்றும் நாம் எஃகு போன்ற உறுதியான முடிவெடுக்க வேண்டும்'' என்று
அறிவித்தார்.
இதன் கருத்து என்னவென்றால், ஜனநாயகக் கட்சி தாராளவாதிகள் துரோகிகளைவிட சற்று
உயர்வானவர்கள் என்றாகிறது. ரோவ் தொடர்ந்து பேசும்போது கூறினார் ''பழமைவாதிகள் 9/11-இல் நமக்கு என்ன
நடந்தது என்பதை பார்த்தார்கள் மற்றும் கூறினார்கள்: நாம் நமது எதிரிகளை முறியடிப்போம். தாராளவாதிகள்
நமக்கு என்ன நடந்தது என்பதை பார்த்தார்கள். மற்றும் கூறினார்கள்:
நாம் நமது எதிரிகளை புரிந்துகொள்ள வேண்டும். பழமைவாதிகள் அமெரிக்கா ஒரு மகத்தான நாடு என்றும், அது
உன்னத நோக்கத்தில் ஈடுபட்டிக்கிறது என்றும் பார்த்தார்கள்; தாராளவாதிகள் அமெரிக்காவை பார்த்து அங்கு அவர்கள்
பார்ப்பது.... நாஜிக்களது கைதிகள் முகாம்கள், சோவியத் குலாக்குகள் மற்றும் கம்போடியாவின்
கொலைக்களங்காகும்''.
முற்றுகையிடப்பட்ட ஒரு நிர்வாகம்
இந்த பிற்போக்குதனமான வெடிப்பிற்கு பின்னணியாக அமைந்திருப்பது புஷ் நிர்வாகம்,
குடியரசுக்கட்சி மற்றும் ஒட்டுமொத்த ஆளும் செல்வந்தத்தட்டினரை எதிர்நோக்கியுள்ள தீவிரமாகிக்கொண்டு வரும் அரசியல்
நெருக்கடியாகும், அதற்கு உந்துசக்தியாக செயல்பட்டு வருவது ஈராக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போருக்கு
எதிராக அமெரிக்க பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்தின் கூர்மையான மாற்றமாகும். கருத்துக்கணிப்புக்கள் போர்
தொடர்பான அதிருப்தி திடீரென்று அதிகரித்து வருவதை காட்டுகின்றன மற்றும் அது அங்கு நீடிப்பதற்கு பகிரங்கமான
எதிர்ப்பும் பெருகி வருகிறது, தெளிவான பெரும்பான்மையினர் அந்தப் போர் தவறான போலிக்காரணத்துடன்
ஆரம்பிக்கப்பட்டது என்று நம்புவதுடன் அனைத்து அமெரிக்க துருப்புக்கள் அல்லது ஒரு பகுதி விலகிக்கொள்ளப்படுவதை
ஆதரிக்கின்றன.
ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களை இரண்டு
கட்சிகளையும் சேர்ந்த முன்னணி செனட்டர்கள் ஆட்சேபிக்கத் தொடங்கியிருக்கின்றனர். முன்னாள் வியட்நாம் போரில்
பங்குகொண்ட நெப்ராஸ்காவை சேர்ந்த குடியரசுக்கட்சியின் சக் ஹேகல் சென்ற வாரம்'' அமெரிக்கா ஈராக்கை
இழந்து கொண்டு வருகிறது'' மற்றும் புஷ் நிர்வாகம் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக கூறுவது ''அந்த
போர் பற்றிய உண்மையிலிருந்து முற்றிலும் தொடர்பற்று விட்டதாகும்'' அறிவித்தார்.
செனட்டின் வெளியுறவு குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சியினரான ஜோசப் பைடன் ஜூன்
21ல் ஆற்றிய ஒரு உரையில் விடுத்திருந்த எச்சரிக்கை என்னவென்றால் ஈராக்கில் அமெரிக்காவின் இராணுவ நிலைப்ாடு
அரசியல் ரீதியில் ஏற்புடையதல்ல மற்றும் ஆக்கிரமிப்பினால் ஸ்தாபித்துள்ள ஈராக் அரசாங்கம் பாக்தாத்திலுள்ள பச்சை
மண்டலத்திற்கு வெளியில் எந்தவிதமான அதிகாரமும் பெற்றிருக்கவில்லை.
புஷ் நிர்வாகம் நம்பிக்கை அளிக்கின்ற வாய்வீச்சு உண்மை நிலவரத்திற்கு முற்றிலும்
விரோதமாக உள்ளது என்று அவர் கூறினார், மேலும் அவர், ''இந்த தொடர்பற்ற நிலை ஐயுறவாதத்திற்கு தூபம்
போடுகிறது என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், நமது துருப்புக்கள் தங்களது கடமையை செய்வதற்குரிய வல்லமை
தருவதற்கு நமக்குத் தேவைப்படுகின்ற ஒரே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதமான அமெரிக்க மக்களின்
விட்டுக்கொடுப்பற்ற ஆதரவை இல்லாதொழிக்கின்ற வகையில் அது ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆதரவு மங்கிக் கொண்டு
வருகிறது'' எனக் கூறினார்.
ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவுகின்ற அதிர்ச்சி வியாழனன்று செனட் மற்றும் கீழ்சபை குழு
விசாரணைகளில் போர் பற்றிய முன்னேற்றம் தொடர்பான விசாரணைகளில் வெளிப்பட்டது, அங்கே பாதுகாப்பு
அரசுத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் மூன்று தலைமை இராணுவ அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர்.
ரம்ஸ்பீல்டு இராஜினாமா செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்ட ஜனநாயகக்கட்சி செனட்டர் எட்வார்ட் கென்னடி மற்றும்
ரம்ஸ்பீல்ட் இடையே நடைபெற்ற மிகப்பெருமளவிற்கு பிரசுரிக்கப்பட்டுள்ள வாக்குவாதங்களைவிட அதிக முக்கியத்துவம்
வாய்ந்தது, அதே செனட் குழுவில் இடம்பெற்றிருந்த தீவிரமான போர் வெறியர்கள் தெரிவித்த கவலைகள் காணப்பட்டன.
கொனக்டிக்கட்டை சேர்ந்த ஜனநாயகக்கட்சி உறுப்பினர் ஜோசப் லிபர்மேன்
எச்சரித்தார்: ''அமெரிக்க பொதுமக்கள் கருத்து இந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறது என்று நான்
அஞ்சுகிறேன். ''தெற்கு கரோலினாவை சேர்ந்த குடியரசுக்கட்சிக்காரர் ஆன லின்சே கிரஹாம் கூறினார்: ''நான்
கற்பனை செய்தே பார்க்க முடியாத அளவிற்கு மிகுந்த தேச பக்திமிக்க மாநிலத்திலிருந்து சொல்வதற்கு நான் இங்கே
வந்திருக்கிறேன், செயலாளர் அவர்களே மக்கள் கேள்வி கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.... வியட்நாம்
போரைப்போல் மேலும், மேலும் ஒவ்வொரு நாளும் மக்கள் இதை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.''
அமெரிக்க இராணுவம் அங்கிருப்பது ''கிளர்ச்சிக்காரர்களுக்கு அதிக உற்சாகமூட்டுகிறது,''
மேலும் அவர்கள் வெற்றி பெற ஒரே வழி இங்கு உள்நாட்டிற்கு திரும்புவதாகும். நாம் அமெரிக்க மக்களது ஆதரவை
அரசியல் ரீதியில் இழந்துவிடுவோமானால் நம்மை வீழ்த்திவிட முடியும்'' என்று நேவடாவைச் சேர்ந்த மற்றொரு
குடியரசுக்கட்சி உறுப்பினர் ஜோன் என்சைன் குறிப்பிட்டார்.
ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் இரண்டிலும் அமெரிக்க மத்திய படைக்கு தலைமை வகிக்கும்
பொறுப்பு அதிகாரியான ஜெனரல் ஜோன் அபிஜய்ட் செனட் குழுவில் உரையாற்றும்போது உள்நாட்டில் பொதுமக்களுடைய
கருத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதை களத்திலுள்ள போர் வீரர்கள் அறிந்தேயுள்ளனர் மற்றும் அவர்கள் தன்னிடம் கேட்பது
என்னவென்றால் ''அமெரிக்க மக்கள் ஆதரவு தங்களுக்கு உண்டா அல்லது இல்லையா''என்பதுதான் என்று கூறினார்.
கடமைக்காக, அமெரிக்க போர் வீரர்கள் வெற்றியில் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர்
கூறினார், ஆனால் தொடர்ந்து உரையாற்றும்போது நாடாளுமன்றத்தையும் ஊடகங்களையும் பகிரங்கமாக விமர்சித்தார்.
''நான் இங்கே திரும்பி பார்க்கும்போது, நான் வாஷிங்டனில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கிறேன்,
பெல்ட்வேய்க்குள் என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறேன், இந்த அளவிற்கு நம்பிக்கை குறைவை இதற்கு முன்னர் நான்
எப்போதும் பார்த்ததில்லை.'' என்றார்.
ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பொதுமக்களது ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதற்கு நாடாளுமன்ற
விமர்சகர்கள் மீது ரம்ஸ்பெல்டும் பழிபோட்டார். அமெரிக்க மக்கள் அந்தப் போருக்கு எதிராக
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், ''அவர்கள் அந்த அளவிற்கு உந்தித்தள்ளப்படுகிறார்கள் என்ற உணர்வு எனக்கு
ஏற்பட்டிருக்கிறது'' என்று கூறினார்.
இராணுவத் தலைமையும் புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள முன்னணி அங்கத்தவர்களும்
பெற்றிருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால், வியட்நாம் போரில் அமெரிக்கா ஒரு இராணுவ வெற்றியை
வென்றெடுத்தது, ஆனால் போர் எதிர்ப்பு இயக்கத்தின் நடவடிக்கைகளாலும், ஜனநாயகக் கட்சியின் பிரிவுகள் ஒத்துழைத்து
உதவியதாலும் அந்த வெற்றி தட்டி பறிக்கப்பட்டது என்பதாகும்.
இந்தக் கருத்து ஜேர்மனி முதல் உலகப்போரில் தோல்வியடைந்ததற்கு உள்நாட்டு யூதர்களும்
சோசலிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட்டுகளும் தான் காரணம் என்று ஹிட்லரும் நாஜிக்களும், பழிபோட்ட
"முதுகில் குத்தும்''
தத்துவ பிணைப்பை நினைவுபடுத்துவதாக உள்ளது. இது இரண்டு வகையில் போரின் ஏகாதிபத்திய தன்மையை
மூடிமறைப்பதற்கும், ஜேர்மன் முதலாளித்துவ நெருக்கடிக்கான ஒரு பொருத்தமான உள்நாட்டு பலிகடாக்களை
வழங்குவதாகும்.
ஈராக் போர் தொடர்பாக அதேபிரச்சனை எழுகிறது. புஷ் ரோவ் மற்றும் அவர்களது
கூட்டாளிகள் வியட்நாமிலிருந்து பெற்ற படிப்பினை என்னவென்றால், போருக்கான எல்லா எதிர்ப்பையும் சட்ட விரோதமானது
நாட்டிற்கு துரோகமிழைப்பது என்றுகூட முத்திரை குத்தலாம் என்று எடுத்துக்கொண்டனர். ரோவின் உரை ஜனநாயகக்
கட்சிக்காரர்களின் முதுகெலும்பில்லாத விமர்சனத்திற்கு எதிரானது மட்டுமல்ல ஆனால் பத்து மில்லியன் கணக்கான உழைக்கும்
மக்களிடையே போருக்கு எதிராக நிலவுகின்ற ஆழமான மகத்தான எதிர்ப்பை முன்கூட்டியே எடுத்துக்காட்டுவதாகும். வெள்ளை
மாளிகை அதை ஒரு அரசியல் எதிர்தாக்குதலாக நடத்தி வருவதன் பாகமாக இது உள்ளது, ஈராக் தொடர்பாக புஷ்
ஜூன் 28ல் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றவிருக்கிறார்.
தமது நியூயோர்க் உரையின் கருத்துக்களுக்கு அதற்கு முந்திய நாள் ரோவ் ஒத்திகை
பார்க்கும் முறையில் உரையாற்றினார், MSNBC
க்கு பேட்டியளித்த, அவர் பெரும்பாலான அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக
திரும்பிவிட்டனர் என்பதை மறுத்தார். அதற்கு மாற்றாக அப்படி அவர்கள் தெரிவிப்பார்களானால் அவர்கள்
கிளர்ச்சிக்காரர்களின் மூலோபாயத்திற்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று ஆகிறது. ''நாம் நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டியது'' ''கிளர்ச்சிக்காரர்களின் குறிக்கோள்களில் அது ஒரு பகுதியாகும்.'' என்று கூறினார். நமது உறுதிப்பாட்டை
மிகுந்த வன்முறை மற்றும் ஆபத்தான முறைகளால் மற்றும் அருவருக்கத்தக்க காரியங்கள் மூலம் நம்மை பலவீனமாக்குவதே
அவர்களின் நோக்கம். அதனால் நாம் வாலை கிளப்பிக்கொண்டு ஓடுவோம் என்று நம்புகிறார்கள்`` என்று அவர் கூறினார்.
மண்டியிடும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள்
அத்தகைய ஆத்திரமூட்டல்களை அரங்கேற்றுவதன் மூலம், புஷ் நிர்வாகம் முதுகெலும்பற்ற,
இயலாமையிலுள்ள ஜனநாயகக் கட்சியை தனது கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தாராளவாதிகள் பயங்கரவாதத்தின் மீதும்
அல்-கொய்தா மீதும் உள்ளூர் அனுதாபம் கொண்டவர்கள் என்று ரோவ் தன்மைப்படுத்துவது ஒரு பொய்குற்றச்சாட்டாகும்.
ஆனால் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கோழைகள் என்றும் உளறல் பேர்வழிகள் என்றும் அவர் வர்ணித்திருப்பது புஷ்
நிர்வாகத்திற்கு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் அவர்களது பங்களிப்பிற்கு வரும்போது பொருத்தமானதுதான்.
செனட்டர் டர்பின் செனட் சபையில் இரண்டாவது முறையாக தனது கருத்துக்களை திரும்பப்
பெற்றார் ----அவர் குவாண்டநாமோவை நாஜிக்கள் அல்லது ஸ்ராலினிச காவல் முகாமோடு ஒப்பிட்டிருந்தார்----
அது வியாழனன்று ஜனநாயகக்கட்சி ரோவின் உரைக்கு பதிலாக கூறிய உளறலைத் தொடர்ந்து வந்தது. எந்த முன்னணி
ஜனநாயகக் கட்சிக்காரர்களும், ரோவின் உரையை அதன் தன்மைக்கேற்ப விமர்சனம் செய்யவில்லை:
ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் மற்றும்
ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் போருக்கு அரசியல் எதிர்ப்பின் சட்டப்பூர்வமான தன்மையை மறுக்கும் ஒரு
முயற்சியாகும். மாறாக, அவர்கள் ''பயங்கரவாதத்தின் மீதான போரில்'' தாராளவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும்
இடையில் எந்தவிதமான பிளவும் இல்லை என்று அவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
சபையின் சிறுபான்மை தலைவரான நான்சி பெல்லோசி ''9/11க்குபின்னர் நமது நாடு
ஒன்றுபட்டு நின்றதை ரோவ் எல்லா அமெரிக்கார்களையும் போல் நன்றாகவே அறிந்திருக்கிறார்'' என்று கூறினார்.
2004ல் தோல்வியுற்ற ஜனாதிபதி வேட்பாளர் கெர்ரி, ரோவின் அறிக்கைகள் ''நாட்டை பிளவுபடுத்துகின்ற
ஆத்திரமூட்டும் முயற்சி'''என்று குறிப்பிட்டார்.
நியூஜெர்சியை சேர்ந்த செனட்டர் ஜோன் கார்சன் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு
பின்னர் நாம் ''பிளவுபட்டு நிற்கவில்லை. நமக்குள் தாராளவாதிகள் என்றும், முற்போக்காளர்கள் என்றும் எவருமில்லை.
பதிலளிப்பதற்கு அவசியம் நம்மிடமில்லை'' என்று குறிப்பிட்டார். அவர் ஆப்கானிஸ்தான் போருக்கு அங்கீகாரம் அளிக்கும்
தீர்மானம் ''அனைத்து தேவையான மற்றும் தகுந்த படையை'' பயன்படுத்தும் அதிகாரம் புஷ்ஷிற்கு வெற்று காசோலை
வழங்குவதற்கு வகை செய்து செனட்டில் 98-0 மற்றும் கீழ்சபையில் 420-1 என்ற வாக்குகள் வேறுபாட்டில் நிறைவேற்றப்பட்டதை
சுட்டிக்காட்டினார்.
ஜனநாயகக் கட்சி அடிபணிந்து நடப்பது அதன் வர்க்க நிலைப்பாட்டை அடிப்படையாகக்
கொண்டது. உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை பாதுகாக்கும் முதலாளித்துவ ஆளும் செல்வந்த தட்டு கட்சியாக
எந்த விதத்திலும் குடியரசுக் கட்சிக்காரர்களைவிட குறைந்ததாக இல்லை. அதன் கருத்து வேறுபாடுகள் புஷ்
நிர்வாகத்தோடு வெறும் தந்திரோபாய அடிப்படையில் அமைந்ததாகும். குறிக்கோள்களை பற்றி கருத்து வேறுபாடுகள்
இல்லை, அவை பயன்படுத்தும் நடைமுறையை பற்றிய கவலை கொண்டிருக்கின்றன.
செனட்டர் டர்பின் குவாண்டநாமோ சித்திரவாதையை கண்டிக்கலாம், செனட்டர் கென்னடி,
ரம்ஸ்பீல்டின் திறமையைக் குறைவை அல்லது புஷ்ஷின் பொய்களை சுட்டிக் காட்டலாம், ஆனால் எந்த ஒரு ஜனநாயகக்
கட்சிக்காரரும், ஈராக் போர் சூறையாடும் போர் படையெடுப்பு என்று தெளிவாகச் சொல்லவில்லை மற்றும் அந்தப்போர்
எண்ணெய் வளங்களை கைப்பற்றி, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஏகாதிபத்திய போட்டி நாடுகளுக்கு எதிராக, ஓரு தீர்க்கமான
மூலோபாய சாதகத்தை கொண்டது என்று கூறவில்லை.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெற்ற ஏகாதிபத்திய குறிக்கோள்களை இரண்டு கட்சிகளுமே
ஆதரிக்கின்றன. இரண்டு நாடுகளில் எப்படி நடவடிக்கை எடுப்பது, மற்றும் கிளர்ச்சிக்காரர்களை எப்படி அடக்குவது என்பதில்
இரண்டு கட்சிக்காரர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
போரை நடத்துகின்ற விதம் வியட்நாம் போல் அரசியல் ஆதரவை வீழ்ச்சியடையச் செய்து
விடும் என்ற விமர்சனங்களைக் கண்டு குடியரசுக்கட்சிக்காரர்கள் அஞ்சுகிறார்கள் என்றால், ஜனநாயகக் கட்சிக்காரர்களின்
பயம் என்னவென்றால் குடியரசுக் கட்சிக்காரர்களின் அகந்தையும், திறமைக்குறைவும் அமெரிக்காவிற்கு உள்ளேயும் சர்வதேசரீதியாகவும்
எதிர்ப்பை தூண்டிவிடுகிறது என்பதாகும்.
ஆக பைடன் ஜூன் 21ல் ஆற்றிய உரையில் ''எதிர்காலத்தில் தோல்வி ஏற்படும் என்றால்
அது ஒரு பேரழிவாக, இருக்கும்'' என்று எச்சரித்தார். ஈராக்கில் தந்திரோபாயங்களை மாற்ற வேண்டும் என்று தமது
பரிந்துரையை, வெளியிட்டார், ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகளை கலந்து ஆலோசித்து அதன் விளைவாக
ஈராக்-சிரியா எல்லையில் ஒரு நேட்டோ தடுப்புப்படையை ரோந்துப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உட்பட தமது
பரிந்துரைகளை வெளியிட்டார். மற்றும் அவர் பேசும்போது அமெரிக்க மக்கள் போரை எதிர்க்கிறார்கள் என்றார் அது
சாவு எண்ணிக்கையால் அல்ல, ஆனால் வெற்றிபெறுவதுற்கு ஒரு திட்டம் இல்லை என்பதால் என்று குறிப்பிட்டார்.
செனட் சபையில் வெளியுறவுக்கொள்கை தொடர்பான ஜனநாயகக் கட்சியின் தலைமை
பேச்சாளரான பைடன் தனது உரையில் ''அமெரிக்க ஜனாதிபதி ஈராக்கில் வெற்றிபெற வேண்டும் என்று நான்
விரும்புகிறேன். ஈராக்கில் வெற்றி பெறுவது ஜனாதிபதிக்கு அவசியமாகும். அவரது வெற்றி அமெரிக்காவின் வெற்றியாகும்.
அவரது தோல்வி அமெரிக்காவின் தோல்வியாகும். எனவே எந்த நல்லெண்ணம் கொண்ட அமெரிக்கரும் ஈராக்கில் அவர்
வெற்றி பெறுவதையே விரும்புகின்றனர்.'' என குறிப்பிட்டார். |