World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US "democracy" in Iraq: death squads, torture and terror

ஈராக்கில் அமெரிக்க "ஜனநாயகம்": கொலைப் படைப்பிரிவுகள், சித்திரவதை மற்றும் பெரும் அச்சுறுத்தல்

By James Cogan
6 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 1 ம் தேதி, அமெரிக்க ஆதரவுச் சக்திகள் எவ்வாறு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரிகள் என்று சந்தேகிக்கப்படுகிறவர்களை நீதிமன்ற முறைக்குப் புறம்பான வகையில் கொல்லுகிறார்கள் என்ற பரந்த குற்றச்சாட்டுக்களுக்கு Knight Ridder செய்தியாளர்கள் சான்றுகள் சேகரித்துள்ளது பற்றி உலக சோசலிச வலைத் தளம் எழுதியிருந்தது.

இந்த செய்தியாளர்களின் ஆய்வு முடிவுரைகளைப் பற்றிய விரிவான அறிக்கை ஜூன் 27 ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களில் ஒருவரான யாசீர் சாலிஹீ என்பவர் அமெரிக்கச் சோதனைச் சாவடியை நெருங்கியபோது தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக்கிய உள்துறை அமைச்சக அதிகாரத்தின்கீழ் செயல்பட்டு வந்த சிறப்புப் போலீஸ் கமாண்டோக்களில் மிகவும் முக்கிய பிரிவாகிய ஓநாய் பிரிகேட்டினால் (Wolf Brigade) காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது பிரேதக் கிடங்குகளில் டஜன் கணக்கில் மக்களின் பிணக் குவியல் அடுக்கிவைக்கப்பட்டது பற்றி மே, ஜூன் மாதத்தில் ஆவணங்கள் மூலம் ஆதாரம் காட்டி, யாசீர் சாலிஹீயும் அவருடைய சக செய்தியாளர் டாம் லாசெட்டரும் எழுதியிருந்தனர்.

Knight Ridder ல் வந்த செய்திகள் இப்பொழுது ஜூலை 3 ம் தேதி பிரிட்டிஷ் அப்சர்வர் பதிப்பில் "ஈராக்கில் புதிய சித்திரவதை முகாம்களில் நிகழும் கொடூரமான நிகழ்வுகள் வெளியிடப்படுகின்றன" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.

பாக்தாத்தைத் தளமாகக் கொண்டுள்ள புலனாய்வு செய்தியாளரான பீட்டர் பியூமான்ட் பின்வருமாறு எழுதினார்: "ஆறு மாதங்களுக்கு முன்பு மனித உரிமைக் கண்காணிப்புக் குழு (HRW), பயங்கரவாதம் என்று சந்தேகத்திற்குட்பட்டவர்கள்மீது எவ்வாறு முறைகேடுகள் நிகழ்வதாகக் கூறப்படுகின்றன என்பதை பட்டியல் இட்டு, ஈராக்கில் இருக்கும் சுதந்திரமான அமைப்பு இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது. ...

''மனித உரிமைக் கண்காணிப்புக் குழுவிடைய குற்றச்சாட்டுக்களான அடித்தல், மின்சாரம் பாய்ச்சுதல், விதிமுறையற்ற கைதுகள், பலாத்காரமாகப் பெறப்படும் வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையின்றிக் காவலில் வைத்தல் போன்றவற்றுடன் அப்சர்வர் பத்திரிகை தானும் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. இதில் மிகக் கொடூரமான சித்திரவதைகள், சதாம் காலத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும் செயல்படுத்துதல், கூடுதலான முறையில் நீதிமுறைக்குப் புறம்பாக கொலை செய்தல், சர்வதேச உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள், அரசு சாரா அமைப்புக்கள் புதிய ஈராக்கிய அரசாங்கத்தின் மனித உரிமைக் குழுக்களுக்கும் தெரியாத வகையில், ''மர்மமான'' வலைப்பின்னல் இரகசிய காவல் முகாம்களை அமைத்தல் ஆகியவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன."

"இந்தப் பெரும்பீதிக்கு ஒரு மையத் தளம் உண்டு என்றால், அது பாக்தாத்தின் உள்துறை அமைச்சகமும் அங்கிருந்து செயல்படும் போலீஸ் கமாண்டோப் பிரிவுகளும்தான்" என்று பீட்டர் பியூமான்ட் மேலும் இதுபற்றி தெரிவித்தார். இக்கட்டுரை கீழுள்ள குறிப்பான குற்றச்சாட்டுக்களையும் கூறுகிறது:

* உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தின் ஏழாம் மாடியில் கைதிகள் முறைகேடாக நடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

* பாக்தாத்தின் கார்க் மாவட்டத்தில், உள்துறை அமைச்சகம் நடத்தும் அல் ஹடெளட் விசாரணை மையங்களிலும், ஷெளலா மாவட்டத்தில் ஒரு மருத்துவ மனையின் கீழ்மட்டத் தளத்திலும் கைதிகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

* அல் முதனா விமானத் தளத்திலுள்ள உள்துறை அமைச்சக மையங்களிலும் மற்றும் முன்னாள் தேசியப் பாதுகாப்புத் தலைமையகத்தில் சித்திரவதைகள் நடைபெறுகின்றன.

* பாக்தாத்தில் நிசர் சதுக்கத்தில் உள்ள ஓநாய் பிரிகேட் (Wolf Brigade) தலைமை அலுவலகத்திலும் தகவலை அறிந்துகொள்ள சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன

Knight Ridder செய்தியாளர்களைப் போன்றே போலீஸ் கமாண்டோக்களின் காவலில் வைக்கப்பட்டிருந்து, பின்பு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களிடம் இருந்து கிடைத்த சான்றுகளை பியூமான்ட் பரிசீலனை செய்தார். ஓநாய் பிரிகேடினால் சித்திரவதைக்குட்பட்டவர்கள் எனக் கூறிக் கொள்பவர்களையும் இவர் பேட்டி கண்டுள்ளதுடன் மேற்கு மற்றும் ஈராக்கிய அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டார்.

ஆக்கிரமிப்பிற்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹசன் அன் நியாமி என்னும் மதகுரு போலீஸ் கமாண்டோக்களால் மே மாதக் கடைசியில் சிறைபிடிக்கப்பட்டார். கொடூரமான வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அவருடைய சடலம் 12 மணி நேரம் கழித்து ஒரு சவக் கிடங்கில் தூக்கியெறியப்பட்டது. அவரது கை மணிக்கட்டுக்களைச் சுற்றி போலீஸ் விலங்குகள் அப்பொழுதும் காணப்பட்டன. அவருடைய மார்பில் தீக்காயங்கள் ஏராளமாக இருந்தன. இக்காயங்கள் எரியும் சிகரெட்டினால் விளைந்திருக்கக் கூடும். அவரைச் சாட்டையாலும் அடித்திருந்தனர். அவருடைய மூக்கும் ஒரு தோளும் உடைபட்டிருந்தன. இன்னும் கொடூரமான வகையில் அவருடைய முழங்கால் முட்டிகள் மின்சாரக் கோலினால் துளைபோடப்பட்டிருந்தன போல் தெரிகிறது. இறுதியாக தலையிலும், மார்பிலும் பல குண்டுகள் துளைக்கப்பட்டு அவர் இறுதியில் இறந்தும் போனார்.

தஹர் மகம்மது சுலைமான் அல்-மஷாடனி என்ற மற்றொருவர் மேற்கு பாக்தாத்தில் கமாண்டோக்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ''சித்திரவதைக்குட்பட்டிருந்து அடையாளமே கண்டு பிடிக்கப்படமுடியாத நிலையில்'' அவருடைய சடலம் 20 நாட்களுக்குப் பிறகு கிடைத்து என அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர். "அபு அலி" என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு நபர் மே மாத நடுவில் தான் கமாண்டோக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். தனது கால்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், உத்தரத்தில் இருந்து தலைகீழாகக் கட்டிவைக்கப்பட்டதாகவும், தான் ஒரு "பயங்கரவாதி" என ஒப்புக் கொள்ளாவிட்டால் ஒரு பாட்டிலை ஆசனவாயிலில் புகுத்திவிடுவோம் என அவர்கள் அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

சித்திரவதையை ஈராக்கிய அரசாங்கம் ஒப்புக் கொள்ளுகிறது

பியூமான்ட் இவ்வாறு அம்பலப்படுத்திச் செய்தி வெளியிட்டதை அடுத்து, ஜூலை 4 ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஈராக்கிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் லைத் குப்பா என்பவர், அப்சர்வர் அறிக்கை உண்மைதான் என்று சற்றும் அக்கறையின்றி ஒப்புக் கொண்டார். "இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. எங்களுக்கு அது பற்றித் தெரியும். ஒரு கொள்கை என்று அரசாங்கம் இதனை ஏற்காவிடினும், ஒப்புதல் கொடுக்காவிடினும் இது நின்றுவிடப்போவதில்லை. நாள் முடிவில், இத்தகைய அத்துமீறல்களை ஏற்கும் பண்பாடு உடைய ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதுதான் என்னுடைய வருத்தம். வன்முறைப் பண்பாடு பெருகிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு வருத்தம்தான்" என்று குறிப்பிட்டார்.

மார்ச் 2003 ல் இருந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் தன்மையை, அமெரிக்கச் செயல்பாட்டின் இந்தக் கொடூரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் கொள்கை மிருகத்தனமானது அல்ல என்ற குப்பாவின் மறுப்பு இங்கு முரணாகிறது. அபு கிரைப் சித்திரவதைகள், பல்லுஜா நகரம் எரித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது, அமெரிக்க, அரசாங்கப் படைகள் சாதாரண மக்களை அன்றாடம் கொன்று குவித்தல், ஆகியவை வெளியானதில் இருந்தே ஈராக்கிய மக்கள், அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் அதன் உள்ளூர் ஒத்துழைப்பாளர்கள் ஆகியோரிடம் பெரும் அடக்குமுறை இடர்பாடுகளைத்தான் கண்டுவருகின்றனர் என்பது தெரிந்ததேயாகும்.

இது ஒன்றும் "போக்கிரி பற்றிய" கூறுபாடுகள் என்ற பிரச்சினை அல்ல. ஈராக்கிய அரசாங்கத்தினுடைய மனித உரிமைகள் குழுவின் சாத் சுல்தான் என்பவர், லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்சிடம் ஈராக்கியச் சிறைகளில் இருக்கும் 12,000 ம் கைதிகளில் 60 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் தவறாக நடத்தப்படுகின்றனர் என்று ஜூன் மாதம் ஒப்புக் கொண்டதில் இருந்தே அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. "பல சித்திரவதை நிகழ்வுகளுக்கு ஆவணச் சான்றுகளை வைத்துள்ளோம். அடித்தல், குத்துதல், உடலிலுள்ள பல மென்மையான பாகங்கள் உட்பட முழுவதற்கும் மின் அதிர்ச்சி கொடுத்தல், கைதிகளை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுதல், தரையில் இழுத்துச் செல்லுதல் ஆகியவை நடைபெறுகின்றன" என்று அவர் கூறினார்.

"உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட போலீஸும், பாதுகாப்புப் படைகளும் இந்த முறைகேடுகள் பலவற்றிற்குப் பொறுப்பாக உள்ளனர்" என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது.

சில தவறுகள் மறைக்கக் கூடப்படுவதில்லை. "பயங்கரவாதிகள்" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், சித்திரவதைக்குட்பட்ட அடையாளங்களைக் கொண்டவர்கள், நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படாதவர்கள் பலரும், நீதியின் பிடியில் பயங்கரவாதம் எனப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் அணிவகுத்துக் காட்டப்பட்டு, பகிரங்கமாகத் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்வதும் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஓநாய் பிரிகேட்டின் தளபதியான அபுல் வாலீடும் காட்டப்படுகிறார். இது அமெரிக்க நிதி பெறும், அரசாங்கத்தால் நடத்தப்படும் Al Iraquiya தொலைக்காட்சியில் வருகிறது.

1980 களில் மத்திய அமெரிக்காவில், எழுச்சிக்கு எதிரான அமெரிக்கச் செயற்பாடுகளை மாதிரியாகக் கொண்ட உத்திகளைக் கடைப்பிடித்து, ஈராக்கிய எழுச்சிக்கு எதிராகப் போரிடவேண்டும் என்ற அமெரிக்க ஆட்சி வட்டங்களின் முடிவில் இருந்து இந்த நடைமுறைகள் நேரடியாக வந்துள்ளன. மக்கள் எழுச்சிகள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக மிகப் பெரிய அளவில் வந்திருந்தபோது, 2004 நடுப்பகுதியில் உள்துறை அமைச்சகம் போலீஸ் கொமாண்டோக்களை நியமித்தது. பாக்தாத்தில் எழுச்சி, தெற்கு ஈராக்கில் ஷியாட் மதகுருவான மொக்ததா அல் சதாரின் தலைமையின் கீழ் நடந்த எழுச்சிகள் மற்றும் அமெரிக்க இராணுவம், எதிர்ப்புப் படைகளில் இருந்து ஷன்னி (Sunni) நகரமான பல்லுஜாவை மீட்க முடியாமற் போன நிலை போன்றவற்றிற்கு விடையிறுக்கும் வகையில் அத்தகைய போலீஸ் படை அமைக்கப்பட்டது.

"சால்வடோர் விருப்புரிமை" எனப்படும் கொலைப்படையைப் பயன்படுத்துதல், சித்திரவதை மற்றும் பாரிய அடக்குமுறைகள் மூலம் ஈராக்கிய மக்களை அடக்குதல் என்பன, அமெரிக்கா கொண்டுள்ள கட்டுப்பாட்டை ஏற்கவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு உத்தரவு கொடுக்கும் வகையில் 1980 களில் ஹோண்டுராசில் அமெரிக்கத் தூதரகத் தலைவராக இருந்த ஜோன் நெக்ரோபான்ட் ஈராக்கில் ஏப்ரல் 2004 ன் பொது தூதராக நியமிக்கப்பட்டார். கொலம்பியாவில் அமெரிக்கச் செயற்பாடுகளில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த ஸ்டீவ் காஸ்டீல் ஈராக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். எல் சால்வடோரின் துணை இராணுவப் பிரிவுகளுக்கு அமெரிக்கச் சிறப்புப் படைகளின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஜேம்ஸ் ஸ்டீல் என்பவரிடம் ஓநாய் பிரிகேட்டை அமைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

காஸ்டீலும், ஸ்டீலும் இந்த ஓநாய் பிரிகேட்டுக்காக, முன்னாள் குடியரசுப் பாதுகாப்புப் படைப்பிரிவு என்ற சதாம் ஹுசைனின் சிறப்புப் படைகளில் இருந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் ஈராக்கிய மக்களுக்கு எதிரான பெரும் பயங்கரத்தைக் கொடுத்து, அதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்டோபர் 2004 ல் இருந்து அவர்கள் சமாரா, மோசூல், சமீபத்தில் பாக்தாத்தின் புறநகர்ப்பகுதிகள் என்ற எழுச்சி மையங்களில் செயலாற்றி வருகின்றனர். நீதிமன்றமுறைக்குப் புறம்பான கொலைகளும் மற்ற கொடூரங்களும் இதைத் தொடர்ந்து வெளிவரலாயின. விளக்கப்படாத, பெரும் சந்தேகத்திற்குரிய கொலைகள், கடத்தல்களும் நடைபெற்று வருகின்றன. இதில் டஜன் கணக்கில் செய்தியாளர்கள், ஆக்கிரமிப்பு எதிர்ப்பு மதகுருமார்கள், உயர் கல்வியாளர்கள் எனப் பலர் உயிரிழந்துள்ளனர்.

புதிய ஈராக்கிய அரசாங்கத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் மீது இத்தகைய நீதிமன்றத்திற்குப் புறம்பான கொலைகளுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இடைக்கால பிரதம மந்திரியாகப் பதவியேற்க இருந்த அயத் அல்லாவி எப்படி ஆறு கைதிகளை பாக்தாத் சிறையில் சுட்டுக் கொன்றார் என்றும், உள்துறைக் காவலர்கள் எவ்வாறு சந்தேகத்திற்குட்பட்ட எழுச்சியாளர்களை நடத்தவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இது இருக்கும் என்றும், ஆஸ்திரேலியச் செய்தியாளர் போல் மக்ஜியென் என்பவரிடம் இரண்டு நேரடிச் சாட்சிகள் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் Age, Sydney Morning Herald என்ற இரண்டு ஆஸ்திரேலிய செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்தன

இதற்கு ஓராண்டிற்குப் பின்னர், அல்லாவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கை கொடுக்கும் வகையில் மறுக்கப்படவோ அல்லது அதுபற்றி சுதந்திரமான விசாரணை நடத்தப்படவோ இல்லை. இதைப் பற்றிய சமீபத்திய குறிப்பு கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஏடான Sun-Herald ல் வந்தது. அதில் பல பெயரிடப்படாத ஆதாரங்கள், கொலைகள் நடைபெற்றது பற்றி பொய் கண்டறியும் கருவிகள் நடத்திய சோதனையில் அல்லாவியின் அமெரிக்கச் சிறப்புப் பாதுகாவலர்கள் மற்றும் சில ஈராக்கிய அதிகாரிகள் தேறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

விசாரணையின்றி மரண தண்டனை செயல்படுத்துவதாக அல்லாவியின் மீது குற்றம்சாட்டப்பட்ட அதே மாதத்தில்தான், உள்துறை அமைச்சகத் தலைமை அலுவலகத்திற்குள்ளிருந்த முற்றத்தில் போலீஸ்காரர்கள் கைதிகளை அடித்துக் கொண்டிருந்தபோது, சீற்றமுற்ற அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளூர் போலீசாரிடம் இருந்து ஆயுதங்களை அகற்றி, கட்டிடங்களையும் சோதனைக்குட்படுத்தினர். அமெரிக்க அதிகாரி காப்டன் ஜாரெல் சவுத்தால் என்பவர் டஜன்கணக்கான காவலுக்குட்பட்டவர்கள், "உடல் முழுவதும் சிராய்ப்புக்களுடனும், உடலில் வெட்டுத் தழும்புகளுடனும், அடிபட்ட அடையாளங்களுடனும்.... அங்கிருந்தனர். நடக்கக்கூட முடியாத பல கைதிகளையும் அங்கு நான் பார்த்தேன்" என்று கூறினார். ஆனால், இந்தப் பாதுகாப்பாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமெரிக்க மேற்கட்டுப்பாட்டினர் கைதிகளை உள்துறை அமைச்சரகக் காவலரிடம் மீண்டும் ஒப்படைத்துவிட்டு, இடத்தை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டனர்.

அமெரிக்க இராணுவம் அல்லது ஈராக்கில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் இத்தகைய நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், முறைகேடுகள் என்பன பற்றி அறியாதவர்கள் என்ற கூற்று பொய்யானது ஆகும். அமெரிக்க உளவுத்துறையானது, எழுச்சியாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களிடம் தகவல் திரட்டுவதில் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளது. ஓநாய் பிரிகேட் மற்றும் ஏனைய போலீஸ் கமாண்டோப் பிரிவுகள் அமெரிக்கப் பிரிவுகளுடன் இணைந்துதான் செயல்படுகின்றன. மேலும், ஈராக்கிய இடைக்கால அரசியல் அமைப்பு விதிகளின்படி, நாட்டில் இருக்கும் எல்லாப்படைகளுடைய செயற்பாடுகள் என்பன அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளிடம்தான் உள்ளது. அதனால் அனைத்துச் சட்ட, அரசியல் பொறுப்பு அவ்வமைப்பையே சாரும்.

பாக்தாத்தில் புஷ் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட ஆட்சியின் முழுமையான தன்மையின் உண்மை எவருக்கும் தெளிவாகத் தெரியும். "ஜனநாயகம்" என்பதற்கு மிகவும் தொலைவில், ஒரு பயங்கரம் கொடுக்கும் இயந்திரம் ஒன்று ஈராக்கிய மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கும், அவர்களது நாட்டை எடுத்துக் கொள்ளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

Top of page