WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: 14 months after falling from power,
BJP in turmoil
இந்தியா: அதிகாரத்திலிருந்து வீழ்ச்சியுற்று 14 மாதங்களுக்கு பின்னர் கொந்தளிப்பில் பாரதிய
ஜனதா கட்சி
By Sarath Kumara
5 July 2005
Back to screen
version
ஞாயிறன்று பாரதீய ஜனதாக் கட்சியின் (BJP)
தேசிய செயலாளர், BJP-ன்
தலைவர் L.K.
அத்வானியின் செயலாளர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் என்று தான் வகித்த மூன்று தலைமை பதவிகளில் இருந்தும்
சுதீந்திர குல்கர்னி ராஜினாமா செய்தார்.
பத்திரிகை தகவல்களின்படி, இந்திய நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி தலைவர்
போல இரண்டு பதவியையும் சேர்த்து வகித்து வரும் அத்வானி, தனது சொந்த முற்றுகையிடப்பட்ட தலைமைக்கு ஏற்பட்டுவிட்ட
சரிவை சரிக்கட்டுவதற்காக குர்கர்னியின் ராஜினாமாவிற்கு வலியுறுத்தினார்.
ஜூன் 7-ல் கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகிய அத்வானியே, மூன்று நாட்களுக்கு பின்னர்
அந்த ராஜினாமாவை திரும்ப பெற்றார், குல்கர்னியை அவர் "தியாகம் செய்ய" தேர்ந்தெடுத்தது, கட்சி தலைமையிலிருந்து
அவரை களையெடுப்பது பிஜேபி-யை உருவாக்க உதவிய மற்றும் அதற்கு பல காரியாளர்களை வழங்கி இருக்கிற இந்து மேலாதிக்கவாத
நிழல் அமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க்கிற்குள்ளும் (RSS)
அதைச் சுற்றிலும் உள்ள சக்திகளை சமாதானப்படுத்தும் என்ற தெளிவான நம்பிக்கையில்தான்.
கடுங்கோட்பாட்டாளரான இந்து மேலாதிக்கவாதிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-சோடு
இணைக்கப்பட்டுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் (உலக இந்து சபையில்), அத்வானி அதிகாரபூர்வமாக பாக்கிஸ்தானில் மே, 31
முதல் ஜூன் 5 வரை சுற்றுப்பயணம் செய்த போது கூறிய கருத்துக்கள் "இந்து நாட்டை" காட்டிக்கொடுக்கும் வகையில்
அமைந்துவிட்டது என்று குற்றம் சாட்டினர். தமது இளமைக்காலம் முதல்
RSS உறுப்பினராக
இருந்து வருகின்ற, 77 வயது அத்வானி இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக பேசுவதிலும், பாக்கிஸ்தானுக்கு
எதிராக நாசவேலை செய்வதிலும் இழிபுகழ் பெற்றவர். அப்படியிருந்தும் அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும்
என்று VHP
கோரி வருகிறது மற்றும் குஜராத் மாநில தலைநகரில் அமைந்துள்ள அவரது நாடாளுமன்ற தொகுதியில் அவரது ராஜினாமாவை
வற்புறுத்தி ஒரு கிளர்ச்சியை தொடக்கப்போவதாக உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் முன்னணி தலைவர்களை பொறுத்தவரை, அத்வானியின் தலைமைக்கு
நிபந்தனையற்ற ஆதரவு தர தவறிவிட்டது. அத்வானி தனது இரண்டு தலைமை பதவிகளில் ஒன்றை கைவிட்டு விட வேண்டும்
என்று RSS
தலைவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர், மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில்
RSS தலைவர் கே.எஸ்.
சுதர்சன் BJP
தனது தலைமையில் ஒரு தலைமுறை மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் மிகவேகமாக நெருங்கி வருவதாக கருத்து
தெரிவித்தார். (அத்வானி தவிர, BJP-ன்
இதர தலைமை பேச்சாளர் 80 வயதுகளை
(octogenarian) கடந்துவிட்ட முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி
வாஜ்பாய்.)
பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் உறவுகளும், அபிலாசைகளும் இந்த வாரம் சூரத்தில்
நடைபெறவிருக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்
மாநாட்டின் தலைமை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்
மற்றும் பிஜேபி தலைவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் பிரதானமாக
கருதிப்பார்க்கின்ற ஒன்று அத்வானிக்கும் அவரது நெருங்கிய கூட்டாளியான வாஜ்பாயிக்கும் (பாக்கிஸ்தானில் அவர் கூறிய
கருத்துக்களுக்கு பின்னர், எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி அத்வானியின் தலைமையை ஏற்றுக்கொண்ட முதல் நிலை
பிஜேபி தலைவர்கள் சிலரில் கடைசியான நபர்) எதிராக RSS
தனது அதிகாரத்தை அப்பட்டமாக வலியுறுத்திக் கூறியிருப்பதால்
ஏற்படக்கூடிய ஒரு தாக்கத்தை பற்றித்தான், அது, BJP
தலைமை தாங்குகின்ற பல கட்சிக் கூட்டணியான, மற்றும் அது இல்லாமல்
அடுத்த தேர்தலில் அதிகாரத்திற்கு வருவதற்கு உண்மையில் வாய்ப்பிருக்காத தேசிய ஜனநாயக முன்னணி (NDA)யின்
மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தைத்தான். தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இரண்டாவது மிக முக்கிய
உறுப்பினரான (ஐக்கிய) ஜனதா தளத்தை சேர்ந்த பல முன்னணி தலைவர்கள்,
RSS-ம் அதன்
கூட்டணியினரும் இந்துதுவா, இந்து மேலாதிக்க கருத்தியல் வெற்றிக்கு,
RSS-BJPயின் அடித்தள
முன்னெடுப்பு போதுமான அளவிற்கு உறுதிப்பாட்டுடன் இல்லை என்ற காரணங்களால், அத்வானியை ராஜினாமா செய்யுமாறு
நிர்பந்தித்தால் தங்களது கட்சி NDA-விலிருந்து
விலகுகின்ற கட்டாயம் ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
மிக மூத்த--(ஐக்கிய) ஜனதா தள தலைவரும்
NDA
''அவைத்தலைவருமான''---- ஜோர்ஜ் பெர்னாண்டஸ்--- ஜூன் 29-ல்
RSS-க்கும்,
BJP-க்கும் இடையிலான
''பதட்டங்களை'' முடிவுற செய்வதற்காக நாக்புரியிலுள்ள தலைமை அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ் தலைவரை இரண்டரை
மணி நேரம் சந்தித்து பேசினார். பெர்னாண்டஸ் பேச்சு வார்த்தை பற்றிய மேல் விவரங்கள் எதையும் பகிரங்கமாக
கூறுவதற்கு மறுத்துவிட்டார், ஆனால் மறுநாள் சுதர்சன் உடன் தான் நடத்திய கலைந்துரையாடல்கள் குறித்து அத்வானி,
வாஜ்பாய் இருவருக்கும் சுருக்கமாக கூறினார்.
BJP- ல் நிரந்தர நெருக்கடி
2004 மே பொதுத்தேர்தலில் பதவியிலிருந்து விரட்டப்பட்டது முதல்
NDA வும்
BJP-யும் நெருக்கடியில்
சிக்கித்தவிக்கின்றன. பெருவர்த்தகங்களின் ஆதரவை பெற்று, அதன் நவீன தாராளவாத ஏற்றுமதி-வளர்ச்சி செயல்திட்டத்தை
வலியுறுத்தி முன்னெடுத்து சென்றதன் மூலமும் எதிர்க்கட்சியான காங்கிரஸைவிட பல மாநில தேர்தல்களில் சிறப்பாகயிருந்தாலும்,
பிஜேபியும், உண்மையிலேயே ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனங்களும்,
NDA கூடுதல்
பெரும்பான்மையோடு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். மாறாக தேர்தல்கள் இந்தியாவின்
வெகுஜனங்கள், தங்களது ஆத்திரத்தை பெருகிவரும் பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மைகள் மீது
காட்டுவதற்கும், பிஜேபியின் பிற மத பழிப்பு இந்து வாதத்திற்கு தங்களது அலட்சியப்போக்கை காட்டுவதற்கும் ஒரு வழியாக
பயன்படுத்திக்கொண்டனர்.
இதில் பிஜேபி தலைவர்கள் சரிசமமாக அதிர்ச்சியடைந்தது, இந்திய பெருவர்த்தக
நிறுவனங்களின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகள் இடது முன்னணியின் உதவியோடு காங்கிரஸ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை
உருவாக்கியதை தழுவிக்கொண்டபோதாகும், இடதுசாரி முன்னணி இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தலைமையில் இயங்குகின்ற பல கட்சி அணியாகும்.
தேர்தல் முடிவுகளை பார்த்தும் மற்றும் 1991-ல் இந்தியாவின் தேசிய ரீதியாக நெறிமுறை
படுத்தப்பட்ட பொருளாதாரத்தை அழிப்பதற்கு முயற்சியை தொடக்கிய அன்றைய நிதியமைச்சரை புதிய பிரதமராக
நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்ததை மறு உறுதி செய்துகொண்ட இந்தியாவின் வர்த்தக செவ்வந்த தட்டினர் மிக
விரைவாக ஒரு முடிவிற்கு வந்தனர், அது என்னவென்றால், இந்தியாவின் பாரம்பரிய ஆளும்கட்சியான காங்கிரஸ்
தலைமையில் அமைகின்ற ஒரு அரசாங்கம் மற்றும் அதிகாரபூர்வமான இடதுசாரிகளின் ஆதரவை பெற்றிருக்கின்ற ஒரு
அரசாங்கம், சமூக அதிருப்தியை நீர்த்துப்போகச் செய்து திசை திருப்புகின்ற ஒரு சிறந்தவழி என்றும் அதே நேரத்தில்
இந்தியாவை பூகோள முதலீடுகளுக்கு ஒரு மலிவூதிய புகலிடமாக மாற்றும் முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும்
சிறந்தவழி என்று முடிவு செய்தனர்.
திடீரென்று ஆட்சி அதிகாரத்திலிருந்து வீழ்ந்துவிட்ட நோக்குநிலையற்ற தனத்தாலும்,
கசப்புணர்வாலும் BJP
தேர்தல்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதன் பேச்சாளர் திரும்பத் திரும்ப காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடனடியாக வீழ்ச்சியடையும் என்று முன்கணித்துக்கொண்டிருந்தார் மற்றும் அவசர அவசரமாக
நாடாளுமன்றத்தை செயலிழக்கச்செய்து, புறக்கணிப்புக்கள் மற்றும் வெளிநடப்புகளில் ஈடுபட்டது மற்றும் பல்வேறு
அவதூறுகளையும், போலி பிரச்சனைகளையும் கிளப்பி அரசாங்கத்தின் கண்ணில் மண் தூவப் பார்த்தது.
ஆனால் அதன் அப்பட்டமான பேரினவாதமும், கம்யூனிச எதிர்ப்பு முழக்கங்களும் மக்களிடம்
எடுபடவில்லை. மக்களிடம் மட்டுமல்ல. பெருவர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக பெருவர்த்தக
நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் BJP-ன்
''தடையை'' மிகப்பெருமளவில் விமர்சிக்கத் தொடங்கின, அந்தக் கட்சியை ஒரு ''விசுவாச எதிர்கட்சி'' என்ற
பங்கை செய்யத்தவறிவிட்டதாக குற்றம் சாட்டின, NDA
அரசாங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டது முதல் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாகாணத்
தேர்தல்கள் தவிர பிஜேபி ஒரு முடிவற்ற தொடரும் தேர்தல் தோல்விகளை சந்தித்தது.
புஷ் நிர்வாகத்தை, ஆட்சியில் இருந்தபோது பிஜேபி மிக உறுதியாக நேசித்தது, அதுவும்,
பிஜேபி தலைமைக்கு வெறுப்பு ஏற்படுகிறவகையில், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை தழுவிக்கொண்டது.
புதுதில்லியில் இந்து மேலாதிக்கவாதிகள் ஆட்சியில் இருந்தபோது அத்துடன் பணியாற்றுவதற்கு எந்த சங்கடத்தையும்
அடையாத வாஷிங்டன் உண்மையிலேயே, அண்மையில் குஜராத்தின் பிஜேபி முதலமைச்சர், 2002-ல் முஸ்லீம்களுக்கு எதிரான
ஒரு படுகொலையை தூண்டிவிட்டதில் இழிபுகழ் பங்களிப்பை செய்த நரேந்திர மோடிக்கு----அமெரிக்க விஜயத்திற்கு விசா
வழங்க மறுத்துவிட்டது.
இவை அனைத்தும் பிஜேபிக்குள் நெருக்கடியை ஆழப்படுத்துவதற்கு மட்டுமே உதவியது,
இறுதியாக இந்தியாவின் பொருளாதார செல்வந்தத்தட்டினரின் ஆதரவை திரும்ப பெற வேண்டுமென்றால்,
BJP தன்னை
மறுநிலைப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்ற முடிவிற்கு அத்வானி உந்தித் தள்ளப்பட்டார்.
பிஜேபியை மறுநிலைப்படுத்தலுக்கு அத்வானியின் முயற்சி
இந்த மாற்றத்தை முதலில் அத்வானி இந்திய தொழில் கூட்டமைப்பில் (CIU)
ஆற்றிய ஒரு உரையில் சமிக்கை காட்டினார் மற்றும் அவரது பாக்கிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது பாரம்பரிய
BJP-RSS
கருத்தியல்களிலிருந்து மிகவும் துணிச்சலாக கவனமாக தயாரிக்கப்பட்ட பேச்சுக்களில் விலகிச் சென்றார்.
மே நடுவில் CII-ன்
ஆண்டு கூட்டத்தில் உரையாற்றியது, இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வர்த்தக ஆதரவாளர்களுடையதாகும், சென்ற
பொதுத் தேர்தலில் இருந்து பிஜேபி கடைபிடித்துவருகின்ற ஏறத்தாழ ஒட்டுமொத்த தடையிலிருந்து அத்வானி பின்வாங்கிச்
சென்றார், தமது கட்சி "இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியமான எந்த சீர்திருத்தத்தையும்"
ஆதரிக்கும் என்று கூறினார். 1991-க்கு முந்திய காங்கிரஸ் "சோசலிசத்திற்கு" எதிர்ப்பு தெரிவித்து வந்தது உட்பட,
பெருவர்த்தக நிறுவனங்களின் செயல்திட்டங்களை மேம்படுத்துவதில் பிஜேபியின் நிலைச்சான்றை எடுத்துரைத்தார், நவீன
தாராளவாத சீர்திருத்தங்களை தீவிரமாக பின்பற்றுவதற்காக தனது இடதுசாரி கூட்டணியினர்களை காங்கிரஸ்
கைவிடுமானால், அக்கட்சியோடு கைகோர்த்து செயல்பட அத்வானி உறுதியளித்தார். "ஒரு நாடு மகத்தான குறிக்கோள்
சாதனையையும், எதிர்பார்ப்புகள் நிறைந்த இலக்குகளையும் பரந்த தேசிய பொது கருத்து அடிப்படையில்தான் அடைய
இயலும்" என அத்வானி அறிவித்தார்.
அதற்கு இரண்டு வாரங்கள் கூட முடிந்திருக்காத நிலையில், அத்வானி பாக்கிஸ்தான்
விஜயத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். BJP-ன்
ஒரு நெருக்கடியை தூண்டிவிடுவதை திட்டமிட்டு தெளிவான கருத்துக்களை தொடர்ந்து கூறினார் மற்றும் மிகத்தீவிரமான இந்து
மேலாதிக்கவாதிகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பாக்கிஸ்தானை நிறுவியதாக அதிகாரபூர்வமாக
மரியாதையுடன் கொண்டாடப்படும் மற்றும் இந்து தேசியவாதிகளால் 1947 நாட்டு பிரிவினைக்கு வித்திட்டவர் என்று
கண்டிக்கப்படும் முஹமது அலி ஜின்னாவை அத்வானி வெகுவாக புகழ்ந்துரைத்தார். முதலில் ஜின்னாவை, "ஒரு மா மனிதன்"
என்று கூறினார். அதற்கு பின்னர் ஒரு உரையில் அவரை ''ஒரு மதச்சார்பற்றவர்'' என்று அறிவித்தார். இதற்கு ஒரு
எடுத்துக்காட்டாக, அவரது முஸ்லீம் லீக், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிரிட்டிஷார் வகுப்புவாத அடிப்படையில்
பிரிக்க சம்மதித்த பின்னர், பாக்கிஸ்தானில் எல்லா மத நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சரிசமமான குடியுரிமை வழங்கப்பட
வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜின்னா ஆற்றிய ஒரு உரையை குறிப்பிட்டார்.
மேலும் பாரம்பரிய ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி
கருத்தியலுக்கு சவால் விடுகிற வகையில், பாக்கிஸ்தான் பத்திரிகைகளிடம், "அகண்ட பாரதம்" ----பற்றி கேள்விகளுக்கு
கூறும்போது, ஒட்டுமொத்த துணைக்கண்டத்தையும் அனைத்துக்கொள்ளும் ஒரு இந்தியா---- நீண்ட காலத்திற்கு முன்னரே
தீர்த்துவைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். 1992-ல் இந்து மேலாதிக்கவாத போர் குணம் கொண்டவர்கள் தானே
முன்னின்று நடத்திய ஒரு பிரசாரத்தினால் வேகம் பெற்று, அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துத்தள்ளியதை
''எனது வாழ்நாளில் நடைபெற்ற துயரம் மிக்க நாள்" என்று மிகவும் ஆத்திரமூட்டுகின்ற வகையில் அவர் குறிப்பிட்டார்.
இந்தப்புள்ளியை விளக்குகின்ற வகையில் தனது பாக்கிஸ்தான் பயணத்தை மேற்கோள்காட்டினார், அதில் தான் பிறந்த
கராச்சி விஜயமும் அடங்கியிருந்தது, "எனது முழு வாழ்நாளிலும் இது தலைசிறந்த வாரம்" என்று குறிப்பிட்டார்.
பாக்கிஸ்தானுடன் தற்போது நடந்து வருகின்ற சமரச பேச்சுவார்த்தைகளை தொடக்கியது
குறைந்தபட்சம் இந்திய தரப்பிலிருந்து, பிஜேபி தலைமைதான் என்பதை நினைவூட்டல்களோடு முடிச்சுப்போடுகின்ற
வகையில்தான், அத்வானியின் உரைகள் அமைந்திருந்தன. இந்தியாவின் பெருநிறுவன செல்வந்தத்தட்டை சேர்ந்தவர்கள்
இந்திய-பாக்கிஸ்தான் சமாதான நடைமுறைக்கு வலுவான பின்பலமாக உள்ளனர் என்பதை அத்வானி மிகத்தெளிவாக
அறிந்திருக்கிறார், ஏனெனில் 2001-02-ல்
பிஜேபி-யினால் உசுப்பிவிடப்பட்ட போர் நெருக்கடிகள் போன்றவை, வெளிநாட்டு
முதலீட்டிற்கு ஒரு தடைக்கல் என்றும், இந்தியாவின் பெரிய மற்றும் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய
கம்பெனிகளும் பாக்கிஸ்தான் அடங்கிய தெற்கு ஆசிய பொருளாதார அணியின் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற
நிலைக்கு சிறப்பாக தயாராகி விட்டன என்பதையும் அது நம்புகிறது.
ஆனால் அத்வானி பிஜேபிக்கு உள்ளே ஓரளவிற்கு எதிர்ப்பை,
RSS மற்றும்
VHP போன்றவற்றின்
புகார்களையும் தாங்கிக் கொள்ள முடியும் என்று விருப்பத்துடன் இருந்தாலும் அதன் மூலம் பெருவர்த்தக நிறுவனங்களுடன்
பிஜேபியின் நட்பை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்று அவர்
கருதினாலும் அவர் வியப்படைகிற வகையில் நிகழ்வுகள் நடந்தன. பிற மத பழிப்பு இந்து வாத கடின-போக்கினரிடமிருந்து
எதிர்பார்க்கப்பட்ட கூக்குரலை அவரது கருத்துக்கள் கிளப்பிய நேரத்தில் வாஜ்பையை தவிர, பிஜேபி தலைமையில் வேறு
எவரும் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவைத் திரட்ட முன்வரவில்லை. இந்தியா திரும்பிவந்ததும், அத்வானி தனது
ராஜினாமாவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பிஜேபியின் செல்வாக்கை மறுசீரமைப்பு செய்வதற்கான
தனது முயற்சிகளுக்கு ஆதரவாக திரளுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தவர்களுக்கு அழுத்தங்கள் கொடுப்பதற்காக இதைச்
செய்தார்.
தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக அவரது
பாக்கிஸ்தான் பயணத்தை "புது-வழிகாணும்" ஒரு பயணம் என்று புகழ்ந்துரைக்கும் ஒரு தீர்மானத்தை
BJP வெளியிட அத்வானி
கட்டாயப்படுத்தினார். ஆனால் அவர் தனது விமர்சகர்களுக்கு ஒரு பெரிய சலுகையைத் தரவேண்டி வந்தது. ஜின்னா பற்றி
அத்வானியின் அறிக்கைகளை தள்ளுபடி செய்கின்ற வகையில் தீர்மானம் அமைந்திருந்தது. "ஜின்னா நிறுவிய நாடு"
மதச்சார்புள்ளது மதச்சார்பற்ற நிலைக்கு விரோதமானது" என்று ஹிந்து பேரினவாதிகளும்/இந்திய
தேசியவாதிகளும் வலியுறுத்தி கூறிவருகின்ற, ஜின்னா போன்ற முஸ்லீம் வகுப்புவாதிகளும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமும் மட்டுமே
1947 நாட்டுப் பிரிவினைக்கு பொறுப்பு என்று அது அறிவித்தது.
இந்த நெருக்கடி பிஜேபியில் வரும் வாரங்களிலும் மாதங்களிலும் எப்படி உருவாகும்
என்பதை முன்கணித்துக்கூற சாத்தியமற்றது, VHP
மற்றும் RSS
சை சுற்றியுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகள் மிகவும் கொந்தளிப்பான நிலையிலுள்ளன. மேலும்,
BJP ஆட்சி அதிகாரத்திலிருந்து
வீழ்ச்சியடைந்த பின்னர் தாங்கள் ஓரம் கட்டப்பட்டுவிட்டது குறித்து ஆத்திரமடைந்துள்ளனர் மற்றும் அண்மைகாலம் வரை
தங்களில் ஒருவர் என்று கருதிய அத்வானி தங்களுக்கு ஒரு கடிவாளம் போட முயலுகிறார் என்பது குறித்தும் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஹிந்து மேலாதிக்கவாதிகளில் வலதுசாரி பிரிவுகளை சார்ந்தவர்கள் இந்துத்துவா அடிப்படையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது
என்று BJP
தலைமைக்கு அழுத்தங்களை கொடுக்கும் RSS
தலைமையின் முயற்சிகளை வெட்டி முறிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்பதற்கு திட்டவட்டமான சாத்தியக்கூறுகள்
உண்டு.
அதே நேரத்தில் BJP-க்குள்
அத்வானிக்கு ஆதரவு உற்சாகமளிக்கிற வகையில் இல்லை, பத்திரிகைகள் அனைத்தும் ஒருமனதாக அவரை ஆதரிக்கின்றன,
மிகத் தீவிரமான இந்து பேரினவாதத்தின் பிளவுற்ற மற்றும் ஸ்திரமற்ற அரசியலிருந்து
BJP-ஐ விலகிச் செல்லச்
செய்வதற்கு அவர் முயன்று கொண்டிருக்கிறார். ஜூன் 8 இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கள் குறிப்பிட்டது:
"இந்த போட்டியில் BJP-ன்
உயிர்நாடியே அடங்கியிருக்கிறது. VHP
மற்றும் RSS
போன்ற வெறியர்கள் கருத்தியல் வெறி கொண்டவர்கள், ஆவேசத்தை கிளப்புபவர்கள் ஆகியோர் அடங்கிய ஆதரவாளர்களை
கொண்ட கட்சியாக மட்டும் இருக்குமா? அல்லது 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆளுகின்ற ஒரு நியாயமான நடுநிலைப்போக்குள்ள
கட்சியாக இருக்குமா?"
என்றாலும் நிச்சயமாக இரண்டு அம்சங்களைக் கூற முடியும்.
1998-2004 BJP
தலைமையிலான NDA
அரசாங்கத்தில் அத்வானி உள்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார், அந்த அரசாங்கம் நவீன இந்திய வரலாற்றில் மிகத்
தீவிரமான வலதுசாரி அரசாங்கமாகும். அது நவீன-தாராளவாத, சமூக -பொருளாதார செயல்திட்டம், அணு
ஆயதமயமாக்கல், பாரியளவு இராணுவத்தை கட்டியெழுப்புதல், ஆகிய கொள்கைகளை மேற்கொண்டதுடன், ஒரு கொடூரமான
பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தையும் கொண்டுவந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய கூட்டணியை
விரும்பியது, குஜராத்தில் 2002-ல் நடைபெற்ற வகுப்புவாதப் படுகொலைகளுக்கு தலைமை வகித்தது, மற்றும் பாக்கிஸ்தானுடன்
அணு ஆயுதப் போர் விளிம்பிற்கே இட்டுச் சென்றது.
பிஜேபியை இந்திய பெருவர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சமூகத்தில் கொந்தளிப்பை
கிளறிவிடும் செயல்திட்டத்தை செயல்படுத்த மிகவும் தகுதியுள்ள ஒரு கருவியாக ஆக்குவதற்கு அத்வானி முயன்று வருகிறார்.
தேசிய அடிப்படையில் நெறி முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் அதோடு தொடர்புடைய சமூக நலன்புரி
திட்டங்களில் மிச்சம் மீதி இருப்பவைகளை ஒழித்துக் கட்டுவதும், இந்தியாவை ஒரு பெரிய இராணுவ வல்லரசாக பூகோள
அரசியலில் இடம்பெறச் செய்யவும் இந்திய செல்வந்தத் தட்டினர் மேற்கொண்டுள்ள அபிலாஷைகளை செயல்படுத்துவது.
அதன் முன்னோடியான ஜனசங்கத்தைப்போல்,
BJP-யும் ஹிந்து
பேரினாவாதத்தில் ஊறிய கட்சி, அதன் பேரினாவாத கோரிக்கையை மட்டுப்படுத்திக் கொள்வதில் அதற்கு சில
நேரங்களில் வசதியாக இருக்கலாம், ஆனால் அது தனது இந்து தேசியவாதக் கருத்தியலை கைவிட்டுவிட முடியாது அதுதான்
காரியாளர்களுக்கு உயிர்துடிப்பைக் கொடுக்கிறது. அதன்மூலம் அது வர்க்க மற்றும் ஜாதி வேறுபாடுகளைத் திசை திருப்பி,
சமூக வெறுப்புணர்வுகளை இந்தியாவின் சிறுபான்மையினருக்கும் போட்டி நாடுகளுக்கும் எதிராக திசை திருப்பி
விடுகிறது----- இதில், இந்திய பெருவர்த்தக நிறுவனங்களின் செயல்திட்டம் எந்தவகையிலும் குறைந்தது அல்ல, ஏனெனில்
மிகக் சிறிய சலுகைமிக்க தட்டிற்குத்தான் ஏற்றதாக அது உறுதிப்படுத்தியிருக்கிறது. |