World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காWhitewash of Christian fundamentalist bigotry at US Air Force Academy அமெரிக்க விமானப்படை கழகத்தில் கிறிஸ்தவ அடிப்படைவாத வெறியை மூடிமறைக்கிறார்கள் By Kate Randall கொலராடோ, கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியிலுள்ள அமெரிக்க விமானப்படை கழகத்தில் (US Air Force Academy-USAFA) மதம் வளர்க்கப்படுகிறது மற்றும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை புலன் விசாரணை செய்வதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு ஒன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அது அந்த அதிகாரிகள் பயிற்சி அமைப்பில் வளர்க்கப்படும் திட்டமிட்ட கிறிஸ்தவ அடிப்படைவாத வெறியை மூடிமறைக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. அந்த பயிற்சி கழகத்து அதிகாரிகளும் பயிற்சியளிக்கும் பேராசிரியர்களும் தங்களது பதவிகளை பயன்படுத்தி அந்தப் பயிற்சி கழகத்தில் எவான்கேலிக்கல் கிறிஸ்தவ நம்பிக்கைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தினார்கள், மற்றும் கிறிஸ்தவரல்லாத கடற்படை வீரர்களது தேவைகளை நிறைவேற்ற தவறிவிட்டார்கள் என்பதை முடிவு செய்த நேரத்தில் அந்தக் குழு "ஒரு மத சூழ்நிலையை கண்டதாகவும், அது வெளிப்படையான மத பாரபட்சம் சம்மந்தப்பட்டதல்ல என்றும்" கூறிற்று. பென்டகன் ஒரு புதிய மாநாட்டில் புதன்கிழமையன்று அதிகாரபூர்வமான விமானப்படை பணிக்குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதற்கு ஒரு நாளைக்கு முன்னர், அந்த பயிற்சி கழகத்தை சேர்ந்த ஒரு விமானப்படை மதகுரு மெலிண்டா எஸ்.மோர்டன் இராணுவத்திலிருந்து தனது இராஜினாமாவை தாக்கல் செய்தார். அந்த லுத்தரன் மதப்பிரிவின் மதகுரு அதற்கு முன்னர் அந்தப் பயிற்சி கழகத்தில் எவாஞ்கேலிச கிறிஸ்தவ மதமாற்றம் செய்து வருவதாக தனது மேலதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார். தான் பகிரங்கமாக விமர்சனம் செய்ததற்காக தனது நிர்வாகப் பதவியிலிருந்து தன்னை நீக்கியிருப்பதாகவும் ஜப்பானுக்கு செல்ல கட்டளையிடப்பட்டிருப்பதாகவும் மோர்டன் கூறினார். அந்த 16 உறுப்பினர் குழுவின் முடிவுகள் "வெளிப்படையாக மத பாரபட்சம்" அந்த பயிற்சி கழகத்தில் நடக்கவில்லை என்று கூறியிருப்பதை அந்த அறிக்கையின் பொருளடக்கமே பொய்யாக்கியிருக்கிறது. அந்தக் குழு குறிப்பிட்டுள்ள மதவெறி சம்பவங்கள் பல இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அதற்கு முன்னர் யேல் இறைப்பணி பள்ளி ஆய்வு அறிக்கையிலும், அதேபோல் தேவாலயங்களையும் அரசையும் பிரிக்கும் அமெரிக்கர்கள் ஐக்கிய அமைப்பும் (AUSCS) வெளியிட்டுள்ள இரண்டு அறிக்கைகளிலும் ஆவணங்களாக இடம் பெற்றுள்ளன. அமெரிக்க விமானப்படை பயிற்சி கழகத்தில் நிலவுகின்ற மத சூழ்நிலை தொடர்பான தலைமை அலுவலகங்களின் ஆய்வுக்குழு அறிக்கை ''சம்பவங்களின் கால வரிசைப்பட்டியை'' வெளியிட்டிருக்கிறது, அந்தப் பட்டியலில் 2003 ஏப்ரல் முதல் 2005 ஜூன் வரை அந்த கழக நிகழ்ச்சிகளை ஆய்வு செய்திருக்கிறது. அந்த கால வரிசைப்பட்டியை மேலெழுந்த வாரியாக பார்த்தால் கூட அந்த பயிற்சி கழகம் அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தத்தை மீறுகின்ற வகையிலும் மதத்தையும் அரசையும் தனித்து பிரித்து வைத்திருப்பதற்கு விரோதமாகவும் மத பாரபட்ச சூழ்நிலையை அந்த பயிற்சி கழகம் அனுமதித்திருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 2003 ஏப்ரலில், USAFA கமாண்டர் ஜெனரல் Johnny A. Weida ஒரு USAFA தழுவிய மின்னஞ்சலை தேசிய வழிப்பாட்டு தினமாக பிரசுரித்திருந்தார்---அதை பல பயிற்சிபெறுபவர்களும், பயிற்சி பேராசாரியர்களும் ஊழியர்களும் "பொருத்தமற்ற வகையில் பதவியை பயன்படுத்தி மதத்தை பரப்புவது மற்றும் பிறரை ஒதுக்கித் தள்ளுவது" என்று அந்த அறிக்கை கூறுகிறது, (நாடாளுமன்றத்தில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள், இரு தரப்பினரும் மிகப்பெருமளவில் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து 1988ல் ரொனால்ட் றேகன் தேசிய வழிபாட்டு தினத்தை சட்டமாக ஆக்கினார் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்). தன்னை மீண்டும் பிறந்த கிறிஸ்தவர் என்று தானே வர்ணித்துக்கொள்ளும் ஜெனரல் Weida 2003 செப்டம்பரில் அந்த பயிற்சி கழகத்தில் புதிதாக சேர்ந்துள்ளவர்களின் புரட்டஸ்டண்டுகள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றினார். மற்றும், "J என்பது ஜீசஸ்'' என்ற கைச்சின்னத்தை அறிமுகப்படுத்தினார், அதற்கு பயிற்சிபெறுபவர்கள் "ராக்ஸ்" என்று பதிலளிக்குமாறு கட்டளையிடப்பட்டனர். அதற்கு பின்னர் Weida திட்டவட்டமானதொரு புரட்டஸ்டண்டு நிகழ்ச்சி என்று வகைப்படுத்தப்படாத ஒரு சிறு விளக்கக் கூட்டத்தில் இந்த கைச்சின்னத்தை பயன்படுத்தினார். 2003 டிசம்பரில், கிறிஸ்தவ தலைமை பாதிரியார்கள் அமைப்பு (CLM) USAFA இன் தள செய்தி பத்திரிகையான Academy Spirit இல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது, அந்த விளம்பரத்தில் கீழ்க்கண்ட செய்திகளும் அடங்கியிருந்தன. "ஏசு கிறிஸ்துதான் உலகின் ஒரே உண்மையான நம்பிக்கை என்று நாங்கள் நம்புகிறோம்", மற்றும் "மீட்சி என்பதற்கு வேறு ஒருவரும் இல்லை, இறைவனின் கட்டளைபடி நாம் காப்பாற்றப்படுவதற்கு, மனிதர்களிடையே இதர பெயர்கள் எதுவுமில்லை. சட்டங்கள் 4:12 "இந்த விளம்பரம் 250 க்கும் மேற்பட்ட தனிமனிதர்களால் கையெழுத்திடப்பட்டிருக்கிறது, அதில் USAFA இன் முக்கிய அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். 2004 பிப்ரவரியில் மெல் ஜிப்சனின் திரைப்படமான The Passion of The Christ என்ற திரைப்படத்தின் சுவரொட்டி விளம்பரங்கள் இராணுவ பயிற்சி பெறுபவர்களின், சாப்பாட்டு அறைகளில் 4,000 இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் திரைப்படத்தை பார்ப்பதற்கான நிர்பந்த உணர்வு தங்களுக்கு ஏற்பட்டதாக பயிற்சிபெறுபவர்கள் கூறினர். "யூத பயிற்சிபெறுபவர்கள் அந்தக் குழுவிடம் கூறியது என்னவென்றால், 'The Passion of The Christ' திரைப்படம் தொடர்பான சுவரொட்டி விளம்பர சம்பவத்தால் தாங்கள் யூத எதிர்ப்பு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது, என்று நம்புவதாக குறிப்பிட்டனர்." என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த சம்பவம் தொடர்பான புகார்களை தொடர்ந்து நண்பகல் உணவின்போது மத சகிப்புத் தன்மை பற்றி ஜெனரல் வைதா பயிற்சிபெறுபவர்களிடம் பேசினார் "அவர் உரைகளில் தினசரி அறிவிப்புக்கள் ஒரு தானியங்கி டைமருடன் (automatic timer) இணைக்கப்பட்டிருந்தது, அது சாப்பாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த திரைப்பட திரைகள் போன்றவற்றில் காட்டப்பட்டன. அந்தத் திரையில் அவரது உரையின்போது காட்டப்பட்ட அறிவிப்புக்களில் ஒன்று பைபில் வாசகங்களை மேற்கோள்காட்டுவதாக அமைந்திருந்தது.'' என்று அறிக்கை குறிப்பிடுகிறது. தற்போது USAFA வின் பட்டதாரிகளில் ஒருவராக உள்ள தன்னை ஒரு நாத்திகர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட பயிற்சிபெறுபவர் ஒருவர் 2004 மே-யில் அங்கு மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை நீக்கமற நிறைந்திருந்ததாக காணப்பட்டது, என்றும் கிறிஸ்தவ கருத்துக்களை எடுத்துரைக்காத எந்த பயிற்சிபெறுபவருக்கும் எதிராக ஒரு திட்டமிட்ட பாரபட்சம் நிலவியது என்றும் குறிப்பிட்டார். அந்த பயிற்சி கழகத்தில் இடம் பெற்றிருந்த மிக உயர்ந்த மட்டத்து தலைமை எடுத்து வைத்த கருத்துக்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் விளைபயன் கொண்டதாகும் என்று அவர் குற்றம்சாட்டினார். அந்த அறிக்கையில் தந்துள்ள தகவலின்படி அவர் எடுத்துக்காட்டாக இறைவன் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக என்பது போன்ற குறிப்புள்ள விமர்சனங்களும் வழிபாடுகளும் மதக் குறிப்புக்களை கொண்ட பாடல்களும் அதிகாரபூர்வமான (கட்டாய) விழாக்களிலும் பல்வேறு மின்னஞ்சல்களின் அடிப்பகுதிகளில் மதச் செய்திகளும் ஒரு மதக் குறிப்புள்ள படைப்பிரிவின் அடையாளச் சின்னமும் இடம் பெற்றிருந்தன" என்று அவர் புகார் கூறினார். சுதந்திர சிந்தனையாளர்கள் குழுவான ஒரு SPIRE குழுவை அமைப்பதற்கு தான் விடுத்த கோரிக்கையை USAFA மதகுருவின் அலுவலக ஊழியர்கள் மறுத்துவிவிட்டனர். அந்த சுதந்திர சிந்தனையாளர்கள் குழு நாத்திகர்களைக் கொண்டது. அது நம்பிக்கை அடிப்படையில் அமைந்ததல்ல என்று அந்த அனுமதி மறுக்கப்பட்டது. USAFA கண்காணிப்பாளர் அவரிடம் வெளியிட்டதாக கூறப்படும் விமர்சனத்தில் "நரிகளின் புதர்களுக்குள் நாத்திகர்கள் எவரும் இல்லை" என்று கூறியிருக்கிறார். ஒவ்வொரு கோடைக்காலத்திலும் புதிதாக சேர்ந்த பயிற்சிபெறுபவர்களுக்காக நடத்தப்படும் USAFA வின் அடிப்படை பயிற்சி முகாமில் (BLT) 2004 ஜூலை மாதம் ஒரு வாரம் ஏல் இறைப்பணி பயிற்சிப் பள்ளியை சேர்ந்த ஒரு குழுவினர் கலந்து கொண்டனர். BCT பூர்த்தி செய்யப்பட்டதை தொடர்ந்து டாக்டர் கிரிஸ்டன் லெஸ்லீயும் சேப்ளின் மீலிண்டா மோர்டனும் ஒரு குறிப்பை எழுதினர். அதில் "BCT இன் போது பொதுவான புரட்டஸ்டன்ட் சேவைகளில் கிறிஸ்துவ மதமாற்றம் திட்டவட்டமாக இடைவிடாது இடம் பெற்றிருந்தது." அதே நேரத்தில் நடைபெற்ற சேவையின்போது யேல் இறைப்பணி பயிற்சி பள்ளி குழுவின் சில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அந்தக் குழுவிற்கு மதமாற்ற பெந்தேகோஸ்ட் பிரிவைச் சார்ந்த சர்வதேச Foursquare Gospel பிரசார குழுவினால் ஒரு பாதிரியாராக அங்கீகரிக்கப்பட்டவர் தலைமை வகித்தார். அந்த சேவையின்போது, "இதுதான் நமது ஆலையம் தேவதூதன் நமது கடவுள்" என்று முழக்கமிட ஊக்குவிக்கப்பட்டனர். "இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்ள விரும்பாத சக BCT உறுப்பினர்களின் மீட்புக்காகவும் வழிபாடு நடத்துமாறு" அந்த பயிற்சிபெறுபவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பயிற்சிபெறுபவர்கள் தங்களது வகுப்பறை தோழர்களுக்கு நிர்பந்தம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கையை ஏற்று செயல்படுத்தாவிட்டால், அவர்கள் "நரகத்தில் எரிவார்கள்" என்று சொல்லுமாறு கூறியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சேப்ளின் மறுத்தார். 2004 நவம்பரில் USAFA தலைமை கால்பந்து பயிற்சியாளர் வகுப்பு அறையில் "ஏசு அணி" என்ற பதாகையை தொங்கவிட்டார். விளையாட்டுத்துறை தலைவரின் புகார்களைத் தொடர்ந்து அதே நாளில் அந்தப் பதாகை நீக்கப்பட்டது. அத்தகைய அப்பட்டமான மதத்தை பரப்பும் மற்றும் மிரட்டும் அத்தகைய நடவடிக்கைகள்- அந்தப் பயிற்சி கழகத்தின் மத தலைவர்களால் சகித்துக் கொள்ளப்பட்டு USAFA ஊழியர்களில் முன்னணியினர், நடைமுறைப்படுத்துவதை விமானப்படை விசாரணைக் குழு "வெளிப்படையான மத பாரபட்சமாக கருத முடியாது" என்று கூறியிருப்பது முற்றிலும் முட்டாள்தனமானது. யேல் இறைப்பணிப்பள்ளி ஆய்வு மற்றும் AUSCS ஆகிய இரண்டும் நடத்திய ஆய்வுகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கின்ற வகையில் அதிகாரபூர்வமான விமானப்படை விசாரணைக் குழு திரட்டியுள்ள தகவல் நிரூபிக்கிறது. இதர உறுதிப்படுத்தும் தகவல்கள் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் USAFA பட்டதாரி மிக்கே வின்ஸ்டீனையும், நியூமெக்ஸிகோ வக்கீல் ஒருவரையும் மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள தகவல் உட்பட பத்திரிக்கைகளில் செய்திகள் வந்திருக்கின்றன. அந்த வக்கீல் அவரது மகன் குர்டீஸ், சென்ற பள்ளி ஆண்டில் அந்தப் பயிற்சி கழகத்தில் சேர்ந்த ஒரு மாணவர் என்றும் அவர், "ஒரு அருவருக்கத்தக்க யூதர்" என்று அழைக்கப்பட்டதாக கூறினார் "அவர்கள் என்னை ஒரு யூதர் என்று அழைக்கிறார். மற்றும் ஏசு கொல்லப்பட்டதற்கு நான் தான் பொறுப்பு என்று கூறுகிறார்கள்" என்று குர்டீஸ் தனது தந்தையிடம் கூறினார். அந்த அறிக்கையின், "பின்னணி தகவல்" பிரிவில், அந்த விமானப்படை விசாரணைக் குழு அந்தப் பயிற்சி கழகத்தில் நீக்கமற நிறைந்துள்ள மதச் சூழ்நிலையை நியாயப்படுத்த முயன்றிருக்கிறது. "மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக செயல்படுத்துவதில் அரசு தலையிடுவதை தடுப்பது என்ற சட்டத்தடையோடு, அரசு மதத்தை "நிறுவுவதற்கு" விதித்துள்ள தடையையும் சேர்த்து முதலாவது அரசியல் சட்ட திருத்தம் தொடர்பாக, கம்பிமேல் நடப்பது போன்ற ஒரு சவாலை USAFA சந்தித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எழுதுகிறார்கள்: "நாட்டை தற்காத்து நிற்பதற்காக, தனி மனிதர்கள் தங்களது உயிரையும் இழக்க வேண்டிய மிக உண்மையான சாத்தியக் கூறை உள்ளடக்கியதுதான் இராணுவ சேவை. இதில் சில தனிமனிதர்கள் இராணுவ சேவையின் கடுமையை, தியாகத்தை தாக்குப்பிடித்து நிற்பதற்காக மற்றும் தங்களது கடமைகளை செய்யும் போது மரணம் வரும் சாத்தியக் கூறை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, அவர்களது குணாதிசய வலுவான தன்மை, அவர்களது மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது." இந்த அணுகுமுறையின் மோசடியை அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தமே அம்பலப்படுத்தியுள்ளது, அது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது; "மதத்தை நிறுவுவது சம்மந்தமாக நாடாளுமன்றம் எந்த சட்டத்தையும் இயற்றக் கூடாது, அல்லது சுதந்திரமாக, அந்த உரிமைகள் அனுபவிக்கப்படுவதை தடுக்க கூடாது; அல்லது பேச்சு சுதந்திரத்தை குறைத்துவிடக் கூடாது அல்லது பத்திரிகை சுதந்திரத்தை, அல்லது அமைதியாக மக்கள் கூடுவதை, மற்றும் மனக்குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அரசாங்கத்திற்கு மனுக்கொடுப்பதற்கு தடுக்கும் எந்த சட்டமும் இயற்றப்படக் கூடாது". அமெரிக்க விமானப்படை பயிற்சி கழகத்தின் தலைவர்கள்---அது இளைஞர்களையும் இளம் பெண்களையும் அமெரிக்க இராணுவப் பிரிவு ஒன்றில் அதிகாரிகளாக, பணியாற்றுவதற்கு பயிற்சியளிக்கிறது - மத பாரபட்சம் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கு எதிராக, கடைப்பிடிக்கப்படுவதை வளர்த்து காத்துக்கொள்வார்களானால், மற்றும் பகிரங்கமாக அதிகாரபூர்வமான பயிற்சி கழகத்தின் நிகழ்ச்சிகளில் மதமாற்ற கருத்துக்களை பரப்புவார்களானால், இது தெளிவாக மதத்தை நிறுவுவதற்கு, எதிராக அரசியல் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்புக்களுக்கு முரணானதாகும். என்றாலும் கிறிஸ்தவ வலதுசாரி சக்திகள் புஷ் நிர்வாகத்திலும், குடியரசுக் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அமெரிக்காவின் அரசாங்கத்தின் எல்லா அம்சங்கள் செயல்பாட்டிலும் அவை தங்களது பெருகிவரும் கட்டுப்பாட்டை நிலைநாட்டி வருகின்றன, கிறிஸ்தவ அடிப்படைவாதத்தை நிர்வாகத்தில் ஊடுருவ செய்திருப்பதற்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் அது மத துவேஷம் என்றும் மதத்தின் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்கு இணையானது என்றும் கருதப்படுகிறது. USAFA அமைக்கப்பட்டுள்ள கொலராடோ ஸ்பிரிங் பகுதியில் Focus on the Family, New Life Church மற்றும் International Bible Society உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மதமாற்ற கிறிஸ்தவ அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.ஏல் இறைப்பணி பயிற்சிப்பள்ளி ஆய்வுஅறிக்கை விமானப்படை பயிற்சி கழகம் தொடர்பாக வெளியிடப்பட்டதும் Focus on the Family அமைப்பை சார்ந்த பொதுக் கொள்கை தொடர்பான துணைத் தலைவர் டாம் மின்னேரி வெளியிட்டுள்ள, விமர்சனத்தில் "90 சதவீத பயிற்சிபெறுபவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வார்களானால், அந்த பயிற்சி வளாகத்தில் கிறிஸ்தவ மதம் தெளிவாக தெரியும் என்பது பொது அறிவுள்ளவர்களுக்கு தெரியும். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளையே வேரோடு களைவதற்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, என்று நான் நினைக்கிறேன். 90 சதவீதம் உள்ள ஒரு குழுவில் நிலவுகின்ற ஒன்றை ஒழித்துக்கட்டுவது, எள்ளி நகையாடத்தக்கதாகும்". என்று குறிப்பிட்டார். விண்கோசின் மாநிலத்தை சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான டேவிட் ஓபி ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர், பாதுகாப்பு துறை நிதி ஒதுக்கீடுகள் மசோதாவில் ஒரு திருத்தத்தை முன்மொழிவு செய்யும் வாசகங்களை கொண்டுவந்தார் என்பதற்காக அடிப்படைவாத சக்திகளால் அவர் கண்டிக்கப்பட்டார், அந்த முன்மொழிவு விமானப்படை செயலாளர், விமானப்படை பயிற்சி கழகம், "கட்டாயப்படுத்தும் மத மிரட்டல் மற்றும் பொருத்தமற்ற வகையில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் மற்றவர்கள் அந்த விமானப்படை பயிற்சிக்கழகத்தில் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது தடுக்கும் வகையில் உறுதி செய்து தரவேண்டும், என்று அந்த முன்மொழிவு கூறிற்று. இண்டியானா மாநில குடியரசுக்கட்சி உறுப்பினரான ஜோன் ஹாஸ்டெல்லர் ஓபே மீது தாக்குதல் தொடுத்தார். அவர் "கிறிஸ்தவ மதத்தின் மீது அமெரிக்காவில் ஒரு நீண்ட போரை தொடக்கியுள்ளார். அது இன்றைக்கும் இந்த சபையில் நீடிக்கிறது.... நெருப்பில் விழுந்த ஒரு கறையானைப்போல் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கிறிஸ்தவர்களை இழிவு படுத்தியும் பூதாகரமாக சித்தரித்தும் தங்களுக்குள் உதவிக்கொள்ள முடியாது. உண்மையிலேயே, பெரும்பாலான நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சிக்காரர்கள் விமானப் படை பயிற்சிக்கழகம் தொடர்பான கருத்து வேறுபாட்டில் அமைதியாகவே இருந்தனர். ஏனென்றால் அவர்கள் ''கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு'' என்று ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்றும் கிறிஸ்தவ வலதுசாரிகள் முன்னெடுத்து வைக்கின்ற தார்மீக நெறி இல்லாதவர்கள் என்று கருதப்படுவோம் என்றும் பயந்தார்கள். USAFA இல் மதத்தின் பங்களிப்பு தொடர்பான விவாதம் ஒரு எச்சரிக்கை விடுவதாக பயன்பட்டிருக்கிறது. இராணுவ அதிகாரிகள் படைகளில் பயிற்றுவிக்கப்படுபவர்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதை அது கோடிட்டுக்காட்டுகிறது----- அவர்கள் சிவிலியன் அதிகாரத்திற்கு மற்றும் அரசியல் சட்டக் கொள்கைகளுக்கு பொறுப்பானவர்களல்ல, ஆனால் மிக பிற்போக்கான கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவையாகும். முதலில் ''கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று பயிற்றுவிக்கப்படும் இராணுவத் தலைமை அழிவு ஆயுதக் குவியலைக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமை பொறுப்பில் அமர்த்தப்படுவது, ஜனநாயக உரிமைகள் மற்றும் உலக மக்களின் பாதுகாப்பு இரண்டிற்கும் ஆபத்தான விளைவுகளை உருவாக்குவதாகும். |