:
செய்திகள்
ஆய்வுகள் :ஆசியா
:
கொரியா
Bush administration intensifies pressure
on North Korea
வடகொரியா மீது புஷ் நிர்வாகம் அழுத்தங்களை தீவிரப்படுத்துகிறது
By Peter Symonds
8 June 2005
Back to screen
version
வடகொரியா தொடர்பாக மேலும் தீவிரமானதொரு நிலைப்பாட்டை நோக்கி அமெரிக்கா
நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மேலும் சமிக்கைகள் எழுந்துள்ளன. தந்திரோபாயங்கள் மற்றும் அவற்றிற்கான
நேரம் குறித்து உள்ளுக்குள்ளேயே வேறுபாடுகள் நிலவினாலும், புஷ் நிர்வாகம் பியோங்யாங்கின் (Pyongyang)
அணுத்திட்டங்கள் தொடர்பாக அதைத் தனிமைப்படுத்தவும் மிரட்டல்களை
விடுக்கவும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
வடகொரியா தொடர்பாக ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதில் வாஷிங்டன்
உறுதியோடு இருப்பதாக திங்களன்று அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொண்டலிசா ரைஸ் உறுதியளித்தார். அந்த பிரச்சனையை
ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்கா கொண்டு செல்லவிருப்பதாக ஞாயிறன்று பெயர் குறிப்பிடப்படாததொரு
பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி வெளியிட்ட கருத்துகளை அவர் தள்ளுபடி செய்தார். என்றாலும், அந்த சாத்தியக்கூறை
அவர் முற்றிலுமாக தள்ளுபடி செய்துவிடவில்லை. மாறாக, அந்தக் கருத்துக்கள் "சிறிதளவு முன்னோக்கி சாய்பவை" என்று
வர்ணித்து, அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் அறிவித்தார்.
இந்தப் பிரச்சனையை ரைஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்
ஆகிய இருவரும் குறைத்து மதிப்பிட்டாலும், வடகொரியாவிற்கு எதிராக சற்று கடுமையான நடவடிக்கையை எடுப்பது
குறித்து வாஷிங்டன் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அமெரிக்கா "கொரியா
தீபகற்பத்தில் மிக வலுவானதொரு கூட்டணியைக் கொண்டிருக்கிறது" என்று பியோங் யாங்கிற்கு ஏப்ரல் நடுவில் ரைஸ்
பகிரங்கமாக நினைவுபடுத்தினார். மற்றும் வடகொரியா ஆறு நாடுகள் பேச்சில் மீண்டும் கலந்து கொள்வதற்கு மறுத்துவிடுமானால்,
அமெரிக்கா "பாதுகாப்புசபைக்கு செல்லுகின்ற சாத்தியக்கூற்றை மற்றும் உரிமையை வைத்திருக்கிறது" என்றும் அவர் எச்சரித்தார்.
பேச்சுவார்த்தைகள் நடத்தும் ஆறு நாடுகளில் சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா
அத்துடன் அமெரிக்காவும் வடகொரியாவும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் சென்ற ஜூன் முதல் முடங்கிவிட்டன.
குறைந்தபட்ச பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்திரவாதங்களை ஏற்றுக்கொண்டு அதற்குபதிலாக, தனது அணு வசதிகளை
தகர்த்துவிட கட்டாயப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு பதிலடியாக, வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில்
கலந்துகொள்ள மறுத்தது. பிப்ரவரியில், பியோங்யாங் முதல்தடவையாக, பகிரங்கமாக "தற்காப்பிற்காக, அணு ஆயுதங்களை
தயாரித்தது" என்று அறிவித்தது------ அந்தக்கூற்றை ஏப்ரல் மாதம் அமெரிக்கா கையில் எடுத்துக்கொண்டு, வடகொரியா
ஒரு அணு ஆயுத வெடிப்புச் சோதனையை நடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியது.
துவக்கத்திலிருந்தே, புஷ் நிர்வாகம் வடகொரியாவுடன் இருதரப்பு சமரசப் பேச்சுவார்த்தைகளை
நடத்துவதற்கு மறுத்து வந்தது. ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என்று வடகொரியாவிற்கு பாதுகாப்பு உத்திரவாதம்
தருகின்ற ஒப்பந்தத்தை செய்துகொண்டு அந்நாட்டுடன் பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகளை சாதாரண நிலமைக்கு
கொண்டு வருவதற்கு அமெரிக்கா இணங்குமானால், அதற்குபதிலாக பியோங் யாங் தனது அணுத்திட்டத்தை முடக்கிவிட
முன்வந்ததையும் அது ஏற்றுக்கொள்ள மறுத்து தள்ளுபடி செய்தது. பன்னாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவது, கலந்துகொள்ளும்
இதர நாடுகளுக்கு குறிப்பாக சீனா, வடகொரியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அழுத்தம்
கொடுக்கும், ஆதலால் பியோங் யாங்கிற்கு ஒரு மிரட்டலாக அதனைப் பயன்படுத்தலாம் என்பதும் வாஷிங்டனின் நோக்கமாகும்.
என்றாலும், வடகொரியாவை பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப நெருக்குதல் கொடுக்கும் நேரத்திலேயே,
சீனா தனது கூட்டணியினருக்கு எதிராக எந்த பொருளாதார தடையையும் ஆதரிக்க மறுத்துவிட்டது. மற்றும் வடகொரியாவில்
2003 ல் 1.3 மில்லியன் டாலர்களாக இருந்த தனது முதலீடுகளை சென்ற ஆண்டு 200 மில்லியன் டாலர்களாக சீனா
நீட்டித்துள்ளது. தென் கொரியாவின் ஜனாதிபதியான Roh
Moo-hyun தனக்கு முந்தைய ஜனாதிபதி மேற்கொண்ட
Sunshine கொள்கை
என்றழைக்கப்படுவதை தொடர முயன்றார்----- அதாவது, வட கொரியா தனது குறைவூதிய மலிவு தொழிலாளர் அரங்கை
திறந்து விடுவதற்கு பதிலாக பொருளாதார சலுகைகளை தென்கொரியா வழங்கும் என்பதாகும்.
ஆகவே, வடகொரியாவை தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை
வெட்டி முறிப்பதாக இந்த நடவடிக்கைகள் அமைந்துவிட்டன. ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையை வாஷிங்டன் ரத்து
செய்துவிட்டு ஐ.நா பாதுகாப்பு சபைக்கு சென்றால்கூட இந்தக் கூட்டத்தில் பெய்ஜிங் அல்லது இதர பெரிய வல்லரசுகள்
பியோங்யாங்கிற்கு எதிராக பொருளாதார அல்லது இராணுவ நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கும் என்பதற்கு
எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை. வடகொரியா ஆட்சியைப் பொறுத்தவரை, ஒரு பொருளாதார
முற்றுகையையானது, போர் நடவடிக்கை என்றே கருதி அதற்கு ஏற்ப, தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக
திரும்பத்திரும்ப அறிவித்து வருகிறது.
நடப்பு முட்டுக்கட்டை நிலை, புஷ் நிர்வாகத்திற்குள் பதட்டங்களுக்கு தூபம் போட்டுள்ளது.
வடகொரியாவிற்கு அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் பொதுவான உடன்பாடு காணப்பட்டாலும், பென்டகனில்
இடம்பெற்றுள்ள கழுகுகள் என்றழைக்கப்படுபவர்கள் ரைசும் அரசுத்துறையும் மேற்கொண்டுள்ள ராஜதந்திர அணுகுமுறை
தொடர்பாக பொறுமையிழந்து காணப்படுகின்றனர். ஞாயிறன்று நிருபர்கள் குழு ஒன்றிடம் பேட்டியளித்த பெயர் குறிப்பிடப்படாத
பாதுகாப்பு துறை மூத்த அதிகாரி ஒருவர், எந்த நேரத்திலும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு செல்வது பற்றி முடிவு எடுக்கப்படலாம்
என்று கூறினார். இந்த அதிகாரி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு பாதுகாப்பு மாநாட்டிற்கு ரம்ஸ்பெல்ட்டுடன் சென்றவர்
ஆவர். எனவே அவரது மறைமுக ஆதரவு இந்த அதிகாரிக்கு இருக்கிறது என்பது தெளிவாகும்.
ரம்ஸ்பெல்ட் இந்த மாநாட்டில் உரையாற்றும்போது அச்சுறுத்தலின் ஒரு மறைமுக குறிப்பை
உருவாக்கி, சீனாவின் இராணுவ செலவினங்களை விமர்சிப்பதில் அவர் குவிமையப்படுத்தினார். பெய்ஜிங், பியோங்யாங்கிற்கு
அழுத்தம் கொடுத்து ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வருமாறு செய்யவேண்டுமென்று அவர் வலியுறுத்திக்
கேட்டுக்கொண்டார். மேலும் ஐ.நா வடகொரியாவின் அணுத்திட்டங்கள் குறித்து முடிவு செய்ய வேண்டிய அவசியம்
ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஐ.நா நடவடிக்கை பற்றிய ஊகத்தை
தள்ளுபடி செய்து, சீன இராணுவம் பற்றி ரஸ்பெல்ட்டுவின் கூற்றுக்களை ரைஸ் குறைத்து மதிப்பிட்டு, அமெரிக்க-சீன
உறவுகள் முன்னெப்போதும் இருந்திராத அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது'' என்றுஅறிவித்தார்.
துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனி சென்றவாரம்
CNN தொலைகாட்சிக்கு
அளித்த பேட்டியிலும் இந்த கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டன. மே 30 ல் வடகொரியா ''ஒரு பெரிய பிரச்சனை''
என்று அவர் வர்ணித்து, ''உங்களுக்குத் தெரியும் இன்றுவரை அந்த
[ஆறு நாட்கள்]
பேச்சுவார்த்தைகள் அதிகம் சாதிக்கவில்லை'' என்று சர்வ சாதாரணமாக அறிவித்தார்.
அதற்கு பின்னர் பியோங்யாங்கை ஆத்திரமூட்டவேண்டும் என்ற நோக்கில்
வடகொரியாவின் தலைவர் கிம்-ஜோங் Il
''உலகிலுள்ள மிகப்பொறுப்பற்ற தலைவர்களில் ஒருவர்'' என்று வர்ணித்தார். மக்களைப்பற்றி கவலைப்படாத அவர் ஒரு
போலீஸ் அரசை நடத்துகிறார் என்றும் ''மிகப்பெரும்பாலான மக்கள் வறுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்,
பல்வேறு மட்டங்களில் சத்தூட்டக்குறைபாடு நிலவுகிறது'' என்றும் செனி குறிப்பிட்டார்.
அடுத்த நாள், ஜனாதிபதி புஷ் வடகொரியாவின் உணர்வுகளை தணிப்பதற்கு வடகொரியா
தலைவரை "திருவாளர் கிம்" என்று குறிப்பிட்டார். அதற்குப் பின்னர், அமெரிக்காவிற்குள்ளேயே நடைபெற்றுக்
கொண்டுள்ள விவாதங்களை குறிப்பிடுகின்ற வகையில் புஷ் அறிவித்தார்: "நான் ராஜதந்திர அல்லது இராணுவம் என்ற
நிலையில் இல்லை. நான் ராஜதந்திர அணுகுமுறையையே விரும்புகிறேன். மற்றும் பிரச்சனையை தீர்ப்பதற்கு நமது
இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், எல்லா தேர்வுகளும் நம்
முன் உள்ளன. இதை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்த்துவைப்பதற்கு நமக்கு வழிகள் இருக்கின்றன."
பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகள்
வடகொரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்னர், புஷ்ஷிற்கு
ராஜதந்திர ரீதியாக ''செல்வதற்கு பல வழிகள் இருக்கின்றன"----- அது ஒரு கவனக்குறைவான நடவடிக்கை மூலம்
பேரழிவு விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உண்டு---- அது மனநிறைவு தருவதல்ல. ஏற்கெனவே புஷ் நிர்வாகம்
வடகொரியாவின் கழுத்தைச் சுற்றி இறுக்குகின்ற வகையில், பல்வேறு பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறது. அவற்றில் கீழ்கண்ட நடவடிக்கைகளும் அடங்கும்....
* மனிதநேய நெருக்கடி வளர்ந்துகொண்டு வருகிறது என்பதற்கான சமிக்கைகளுக்கு
அப்பாலும், இந்த ஆண்டு வடகொரியாவிற்கான ஐ.நா அவசர உணவு உதவித் திட்டத்திற்கு எந்த பங்களிப்பையும் தருமா
என்பதை இதுவரை வாஷிங்டன் கோடிட்டுக் காட்டவில்லை. சென்ற ஆண்டு அமெரிக்கா 50,000 தொன் உணவு வகைகளை
நன்கொடையாக வழங்கியது. ஐ.நா உலக உணவுத் திட்டத்திற்கான ஆசிய இயக்குனரான அந்தோனி பென்பூரி மே 27 ல்
தென்கொரியாவில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில், இந்த ஆண்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருட்கள்
230,000 தொன்கள். இதில் 6 சதவீதம்தான் ஜ.நா அமைப்பு வழங்கியுள்ளது. "அரசாங்கம் இப்போது மக்களுக்கு
தர முடிகிற உணவு தினசரி 250 கிராம். இது ஒரு பட்டினி ஒதுக்கீடுதான்" என்று அவர் கூறினார்.
* கிம் ஜோங் Il
"மக்களை பட்டினி போடுகிறார்" என்று சென்னியின் வாய்வீச்சு விமர்சனங்கள் வடகொரிய மக்கள் எதிர்கொள்ளும்
நிலைகுறித்து அவரது பாசாங்குத் தன்மையை காட்டுகிறது. வடகொரிய ஆட்சி தெளிவான ஒடுக்குமுறை ஆட்சிதான்.
ஆனால், புஷ் நிர்வாகத்திற்கு வடகொரிய மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றியோ, அவர்கள் வாழ்கின்ற
நிலைகுறித்தோ, ஈராக் மக்களை கருதுவது போன்றே எந்த கவலையும் இல்லை. 1950-53 ல் நடைபெற்ற கொரியா
போரிலிருந்து, வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நிலைநாட்டி வருகிறது. மற்றும்
தற்போது அவற்றை இறுக்குவதற்கு மேலும் முயன்று வருகிறது. இது திட்டமிட்டே அந்த நாட்டின் ஆழமான சமூக மற்றும்
பொருளாதார நெருக்கடியை அதிகரிப்பதாகும்.
* ஜூன் 1 தேதி வேர்ல் ஸ்டீரிட் ஜேர்னலில் ஒரு கட்டுரை
வெளியிடப்பட்டிருந்தது. அதில், சட்ட விரோத நடவடிக்கை என்று அறியப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று,
போலியான பொருட்கள் மற்றும் பண பரிவர்த்தனையை வடகொரியாவிலிருந்து தடுத்து வடகொரியாவின் கழுத்தை
நெரிக்கின்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். பியோங்யாங்கிற்கு வெளிநாட்டு வருமான ஆதாரங்கள் சட்டப்படி மற்றும்
''சட்டவிரோதமாக'' நடப்பதை ஏவுகணைகள் விற்பனை உட்பட தடுப்பது சம்மந்தப்பட்ட பரவலான ஒரு முயற்சியின்
ஒரு பகுதியாக இது இருந்தது. இந்தக் குழுவின் நோக்கங்களை அமெரிக்க அதிகாரி
Larry Wilkerson
விளக்கினார். பியோங்யாங் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வராவிட்டால், ''வடகொரியாவின் பொருளாதார வாழ்வை
கடுமையாக வெட்டிவிட முடியும்'' என்று அமெரிக்கா காட்ட வேண்டும் என அவர் வேர்ல் ஸ்டீரிட் ஜேர்னலிடம்
தெரிவித்தார்.
* வடகொரியா இராணுவத்துடன் தான் மேற்கொண்டிருந்த ஒரே கூட்டு நடவடிக்கையும்
பென்டகன் தற்காலிகமாக நிறுத்திவிட்டது---- அது கொரியா போரில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின்
உடல்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையாகும். மே 25 ல் இந்த முடிவை அறிவித்த, அமெரிக்க இராணுவப் பேச்சாளர்கள்
வடகொரியாவின் அணுத் திட்டங்கள் தொடர்பாக அதிகரித்துவரும் பதட்ட சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்க மீட்புக்
குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைத் தெரிவித்திருந்தனர். இந்த முடிவு, அன்னிய செலாவணி வளங்களை
வெட்டுவதுடன், எந்த இராணுவ தாக்குதலுக்கும் எதிரான தடைகளை நீக்குகிறது ------இந்த விளைபயனை உணர்வதற்கு
பியோங்யாங் தவறவில்லை.
* கொரியா தீபகற்ப எரிசக்தி வளர்ச்சி அமைப்பின், தலைவராக பணியாற்றி வந்த
சார்லஸ் கார்ட்மேனுக்கு பதிலாக ஒரு வாரிசை நியமிக்க புஷ் நிர்வாகம் தவறிவிட்டது. இந்த அமைப்பு வடகொரியா
கணநீர் அணு மின்சார உலையை கட்டிக்கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தது----1994 உடன்படிக்கை கட்டமைப்பின்
கீழ் பியோங் யாங் அதை மூடிவிடவும் அணு வசதிகளை சர்வதேச கண்காணிப்புக்குழு கண்காணிக்க அனுமதிக்கவும்
சம்மதித்தது. குடியரசுக் கட்சி வலதுசாரி பிரிவினர், இந்த பேரம் வடகொரியாவிற்கு ஒரு மன்னிக்க முடியாத சலுகை
தருவதாகும் என்று மறுபடியும் கண்டித்தனர்.
* 2001 ல் புஷ் நிர்வாகம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக வடகொரியாவுடன் தனது
உறவுகளை முடக்கியது. 2002 அக்டோபரில், அந்த கட்டமைப்பு உடன்படிக்கையை சீர்குலைப்பதற்காக, ரகசியமாக
யுரேனிய செறிவூட்டத் திட்டத்தை வைத்திருப்பதாக பியோங்யாங் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டதை வாஷிங்டன் பயன்படுத்தி
வடகொரியாவிற்கு உலை எண்ணெய் வழங்குவதை நிறுத்திவிட்டது. 2003 ல் கட்டி முடிக்க வேண்டிய அந்த கணநீர் அணுஉலை
கட்டுமானம் இந்த நடவடிக்கையால் முடக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா தன்னிச்சையாக அந்தத் திட்டத்தை ரத்துச் செய்கிற
நிலையில் இல்லையென்றாலும், ஒரு விமர்சகர் குறிப்பிட்டதைப்போல் "கார்ட்மேன் பதவியை ரத்துச் செய்ததன் மூலம்
அந்தத் திட்டம் செயல்பட முடியாமல் செய்யப்பட்டது''.
* மே 27 ல், பென்டகன் 15
F-117A ரகசிய போர் விமானங்கள் தென்கொரியாவிற்கு அனுப்பப்பட்டன
என்று உறுதிப்படுத்தியது. அவை, தென்கொரியா படைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக நீண்டகாலமாக திட்டமிடப்பட்டவை
என்று பென்டகன் கூறியது. சாக்குப்போக்குகள் எதுவாக இருந்தாலும், ராடார் மற்றும் விமான பாதுகாப்புப் படைகள்
கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்ட அந்த விமானங்கள் வடகொரியாவை அச்சுறுத்துவதற்காகத்தான்
தென்கொரியாவிற்கு அனுப்பப்பட்டன. 2003 ல் ஈராக்கில் அடிப்படை உள்கட்டமைப்புக்களை குண்டுவீசி விரிவாக
அழிப்பதற்கு இந்த F-117A
விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த முடிவை பியோங்யாங் ''போருக்கான ஒரு ஆபத்தான முன்னோடி'' நடவடிக்கை
என்று கண்டித்து, இந்த போர் விமானங்களை திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த நடவடிக்கைகள் வடகொரியாவை தீவிர அழுத்தங்களுக்கு
உள்ளாக்குவதை தெளிவான நோக்கமாக கொண்டிருக்கின்றன. வாஷிங்டனிலுள்ள பசிபிக் ஆய்வுகள்
Mansfield நிலையத்
தலைவரான L.George Flake
என்பவர் லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்கு பேட்டியளிக்கும்போது வெளியிட்ட
கருத்தில், "வட கொரியாவிற்கு ஏதாவதொரு வகையில் பயன் தருகின்ற எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா தடுத்து
வருகிறது" எனக் குறிப்பிட்டார். ஆறு நாடுகள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிடுமானால், ''அடுத்தக்கட்டத்திற்கு
தனது நடவடிக்கைகளை முடுக்கிவிடும்'' முடிவுகளை அமெரிக்கா மேற்கொண்டிருப்பதாக அவர் விவரித்தார். முன்னாள் அரசுத்துறை
அமெரிக்க அதிகாரி ஒருவர் அந்த பத்திரிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் போது, ''வடகொரியாவைச் சுற்றி அதற்கு உதவும்
அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றாக சேர்த்து மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு வடகொரியா தயாராக இருக்கக்கூடும் என்பதற்கு
இந்த வாரம் சில சமிக்கைகள் தோன்றின. திங்களன்று
நியூயோர்க்கில் அமெரிக்க அதிகாரிகள் ஐ.நாவிலுள்ள வடகொரிய
பிரதிநிதிகளை சந்தித்ததாக அமெரிக்க அரசுத்துறை தெரிவித்தது. என்றாலும் ஆறு நாடுகள் சமரச பேச்சுவார்த்தைகள்
திரும்ப கூட்டப்பட்டாலும் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு எதுவுமில்லை. ஏனெனில் வடகொரியா ஒட்டுமொத்தமாக
சரண்டைய வேண்டும் என்றும், அனைத்து அணுத்திட்டங்களையும் கைவிட வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக சோதனை செய்து
பார்க்கும் அளவிற்கும் மற்றும் இனி திரும்ப கட்டமுடியாத அளவிற்கு தனது அணுத்திட்டங்களை சுருக்கமாக சொல்வதென்றால்
''CVID ä''
கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்த ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வெறும் பொது பிரகடனங்களை புஷ்
வெளியிட்டு வந்தாலும், வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களை மட்டுமே உக்கிரமடைய செய்கின்ற மற்றும் மோதல்
ஆபத்தை அதிகரிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. |