WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
Instability follows final round of Lebanon elections
லெபனான் தேர்தல்களின் இறுதிச் சுற்றை தொடர்ந்து ஸ்திரமற்ற நிலை
By Chris Talbot
25 June 2005
Back to screen version
லெபனானில் பாராளுமன்ற தேர்தலில் நான்காவது மற்றும் இறுதிச்சுற்று முடிந்து இரண்டே
நாட்களில் லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் ஜோர்ஜ் ஹாவி ஒரு கார் குண்டுவெடிப்பால் சிதைக்கப்பட்டார்,
அது லெபனானில் தொடர்ந்து கொண்டுள்ள ஸ்திரமற்ற நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு
முன்னர் பத்திரிகையாளா சமீர் காசீரை கொன்றதுபோன்ற அதே தன்மையுள்ள வெடிகுண்டாகும் இது. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
முறித்துக்கொண்டு சென்ற, ஜனநாயக இடதுசாரி தலைவர்களில் ஒருவர் காசிர். ஷாத் ஹரிரி
Druze தலைவர் வாலிட்
ஜூம்பிலாட் தலைமையிலான சிரியாவிற்கு எதிரான பெரும்பான்மையை வென்றுள்ள அணியில் அந்த இருவரும் தீவிர பங்கெடுத்துக்கொண்டவர்கள்----ஞாத்
ஹரிரியினது தந்தை ரபீக், முன்னாள் பிரதமர் அவர் பெப்ரவரியில் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த படுகொலைகளுக்கு எவரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை, ஆனால் மிகப்பெரும்பாலான
விமர்சகர்கள் சிரியாவின் புலனாய்வு அதிகாரிகள் அல்லது இன்னும் சிரியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் லெபனான்
பாதுகாப்பு இயந்திரம் பொறுப்பு என்று கருதுகின்றனர். இந்தத் தத்துவம் என்னவென்றால் அமெரிக்காவின் அழுத்தத்தின்
கீழ் லெபனானை விட்டு அதன் படைகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபின்னர், அது தொடர்ந்து ஆக்கிரமித்துக்
கொண்டிருக்காவிட்டால் ஸ்திரமற்ற நிலை உருவாகும் என்பதை காட்டுவதற்கு சிரியா தனது அரசியல் எதிரிகளை கொலை
செய்து வருகிறது என்பதாகும்.
லெபனானின் ஜனாதிபதி எமிலே லஹூதின் பதவிக்காலம் தேர்தலுக்கு பின்னரும் நீடிக்கிறது,
இன்னமும் சிரியாவினால் நடத்தப்படும் பாதுகாப்பு இயந்திரத்தின் மையமாக அவர் விளங்குகிறார் என்று சிரியாவிற்கு எதிரான
எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. ஜேர்மனியின் தலைமை பிராசிகியூட்டர் டெட்லே மெஹ்லிஸ் தலைமையில் அமெரிக்க போலீஸ்காரர்கள்
உட்பட ஐ.நா.வின் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று இந்தக் கொலைகள் குறித்து புலன் விசாரணைகளை தொடக்கியுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதியின் மெய்க்காவலர் படையின் தலைவரை விசாரணைக்காக அழைத்துள்ளது.
ஹெஜ்பொல்லாவை நிராயுதபாணியாக்கும் அதன் உந்துதலின் ஒரு பகுதியாக சிரியா
தொடர்ந்து லெபனானில் தலையிட்டு வருவதாக குற்றம் சாட்டி, லெபனானின் தென் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும்
அரசியல் இயக்கத்தையும், சிரியா-சார்பு குடிப்படையையும், நிராயுத பாணியாக்கவும், தனது முயற்சியை
மேற்கொள்வதற்காகவும்-----அவர்களை ''பயங்கரவாதிகள்'' என்று வாஷிங்டன் அழைக்கிறது---- மற்றும்
டமாஸ்கஸ்சிலேயே ஆட்சி மாற்றம் செய்வதற்காகவும் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா தனது பிரசாரத்தை முன்னின்று
நடத்தி வருகிறது.
வாரக்கடைசியில் மத்திய கிழக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து,
அமெரிக்க வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் அந்தக் கொலையில் சிரியா சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றம்
சாட்டினார் மற்றும் ''வெளியேறுமாறு'' அவர்களுக்கு கூறினார். காசிர் கொலைக்குப் பின்னர் லெபனான் தலைவர்களை
குறி வைத்து சிரியா ஒரு கொலை செய்வதற்கான பட்டியலை வைத்திருக்கிறது என்ற வாஷிங்டனின் கூற்றை திரும்பக் கூறிய
அவர், ``ஆம், அவர்களது இராணுவப் படைகள், அவர்களது கண்ணுக்குத் தெரியும் படைகள் போய்விட்டன, ஆனால்,
இன்னமும் அவை லெபனானில் தெளிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன மற்றும் இன்னமும் அது ஒரு ஸ்திரப்படுத்தும்
சக்தியாக இல்லை. அவர்கள் நிறுத்துவதற்கு அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது அந்த சூழ்நிலையில் குழப்பத்தை
ஏற்படுத்துகிறது`` என்று குறிப்பிட்டார்.
என்றாலும், சிரியதான் குற்றவாளி என்பது நிச்சயமில்லை. லெபனானின் கம்யூனிஸ்ட் கட்சி
நடப்பு பொதுச் செயலாளரான கலீல் ஹதீதா ''புலனாய்வு கருவிகள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் அத்தகைய
ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு காரணமான இஸ்ரேல்'' மீது குற்றம்சாட்டினார். லெபனான் உள்நாட்டு போரின்போது
ஹாவி பாலஸ்தீனியர்களுக்காக ஆதரவு அளித்து வந்ததில் நன்கு பிரபலமானவர், 1982-ல் லெபனான் மீது இஸ்ரேல்
இராணுவம் படையெடுத்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் மற்றும் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாத்
அரசியல் படுகொலைகளில் பங்களிப்பு செய்து வருவதை நன்றாக அறிந்திருந்தார். அவரது வளர்ப்பு மகன் ரஃபி
மாதோயன் தந்துள்ள தகவலின்படி அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் ``ஜோர்ஜ்
Detlev Mehlis-ஷை
சந்தித்தார், ஏனென்றால் உள்நாட்டு அரசியல் நிலவரம் தொடர்பாக அவர் மிகவும் தெளிவாக விவரம்
அறிந்திருந்தார்.``
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்
Michel Aoun-கூட
சிரியாவிற்கு எதிரான மக்களைக் கவரும் வாய்வீச்சில் ஈடுபடுபவர், மூன்றாவது சுற்று தேர்தலில் ஹரிரி பட்டியலில் இருந்து
பெரும்பகுதி கிறிஸ்தவ வாக்குகளைப் பெற்றவர். ஒரு மனிதர் தாக்கப்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் ஜனாதிபதி மாளிகையான
பாபதாவை [ஜனாதிபதி
மாளிகை]
குற்றம்சாட்ட முடியாது. லெபனான் உலகம் முழுவதிற்கும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறினார். என்றாலும்
அரசியல் சூழ்ச்சிகளிலும் புதிய MPகளைச்
சேர்த்து அரசியல் வியாபாரம் செய்வது லெபனானின் ஆளும் செல்வந்தத் தட்டினரை இயக்கிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில்
அவுன் தனது சொந்த அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவர் ஜனாதிபதியை ஆதரிக்கக்கூடும்.
வடக்கு லெபனானில் நடைபெற்ற இறுதிச் சுற்று தேர்தல்கள் லெபனான் அரசியலில் ஆதிக்கம்
செலுத்தும் குறுங்குழுவாதத்தையே வலியுறுத்தியுள்ளன. மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை வளர்ப்பதில் அமெரிக்கா பெருமையடித்துக்கொள்வதாக
ரைஸ் கூறினாலும்---- ஒட்டுமொத்த அர்த்தத்தில் இந்த பிராந்தியத்தில் ஜனநாயக சீர்திருத்த அர்த்தத்தில் தற்பொழுது
திறந்துவிடப்படுவது...... அமெரிக்காவின் கொள்கையினால் உருவான ஒரு பகுதியாகும்----ஆனால் சான்றுகள் அதற்கு
மாறாக உள்ளன.
ஹரிரி-ஜும்ப்லட் கூட்டணி 28 இடங்களையும், கைப்பற்றியுள்ளது, அவை சுன்னி முஸ்லீம்கள் மேலாதிக்கம்
செலுத்தும் ஒரு பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் பார்வையாளர்கள் குறிப்பிட்டிருப்பதைப்
போல் லெபனான் வாக்குப்பதிவு முறையில் காணப்படும் இந்த குறுங்குழு தன்மைகள் தவிர, தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கு நிதி வழங்குவதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, மற்றும் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டதாக
பல குற்றச்சாட்டுக்கள் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 128 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில்
ஹரிரி-ஜும்ப்லட் கூட்டணி 72 இடங்களை பெற்றிருக்கிறது இவை சுன்னி அல்லது
Druze வேட்பாளர்கள்
மேலாதிக்கம் செலுத்தக்கூடிய பட்டியலில் இருந்து பெற்றதாகும். பிரதானமாக கிறிஸ்தவ ஆதரவோடு அவுனும் அவரது
கூட்டணியினரும் 21 இடங்களை பெற்றது, ஷியா கட்சிகளான ஹெஜ்பொல்லா மற்றும் அமல் 35 இடங்களைப் பெற்றன.
ஒரு அரசியல் வேலைதிட்டத்தின் அடிப்படையில் எந்தக் கட்சிகளும் போட்டியிடவில்லை,
என்றாலும், ஹரிரி லெபனானின் பொருளாதாரத்தில் கடன்பட்டிருக்கும் நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச நிதி
நிறுவனம் கோரிய கூடுதலான சுதந்திர சந்தை கொள்கைகளை ஆதரிப்பதாக அவர் கூறினார். மற்ற தலைவர்கள்
தனியார்மயமாக்கல் கொள்கைகளை ஆதரிக்கிறார்களா என்பது தெளிவாக இல்லை. ஏனெனில் அது ஆயிரக்கணக்கான
பொதுத்துறை ஊழியர்கள் வேலைகளை பறிப்பதாகும், அவர்கள் பெரும்பாலும் அரசுத்துறையை சார்ந்திருந்து
பயனடைபவர்கள்.
ஹெஜ்பொல்லா நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான
கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பது நிச்சயமல்ல, லெபனானின் ஆயுதப் படைகள் பலவீனமாக
இருப்பதைக் கணக்கில்கொள்கையில், ஹெஜ்பொல்லா குடிப்படை இஸ்ரேல் படையெடுப்பிற்கு எதிராக தடுப்பாக
செயல்பட்டுக் கொண்டிருப்பதால் பலர் அது நீடிப்பதை ஆதரிக்கின்றனர். |