:
வட அமெரிக்கா
US doctors tied to torture at
Guantanamo, Abu Ghraib
குவாண்டாநாமோ, அபுகிரைப் சித்திரவதையில் சம்மந்தப்பட்டிருக்கும் அமெரிக்க டாகடர்கள்
By Kate Randall
13 January 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
குவாண்டாநாமோ வளைகுடா அபுகிரைப் மற்றும் இதர அமெரிக்க இராணுவ தடுப்புக்காவல்
சிறைகளில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதற்கு ஒத்துழைத்ததன் மூலம் அமெரிக்க இராணுவ டாக்டர்கள், ஜெனீவா
ஒப்பந்தங்களை மீறியிருக்கிறார்கள் என்று ஜனவரி 6-ல் வெளியிடப்பட்டுள்ள
New England Journal of Medicine
(NEJM) சஞ்சிகை குறிப்பிட்டிருக்கிறது.
"டாக்டர்கள் போருக்கு போகும்போது" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள
NEJM
கட்டுரையை Washington DC,
ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் டாக்டர்
M.Gregg Bloche,
ஒரு பிரிட்டிஷ் பாரிஸ்டரும் ஜோர்ஜ் டவுன்
பல்கலைக்கழக சட்ட மைய ஆய்வாளருமான
Jonathan Marks-ம்
இணைந்து எழுதியிருக்கின்றனர். அவர்களது ஆய்வு, அண்மையில், அமெரிக்க குடியுரிமைகள் ஒன்றியம் (ACLU),
பத்திரிகை தகவல் சுதந்திர சட்டத்தின் (FOIA)
கீழ், பெற்ற ஆவணங்கள் மற்றும் இராணுவ மற்றும் மருத்துவ அதிகாரிகளது பேட்டிகள் அடிப்படையிலும் அமைந்திருக்கிறது.
மருத்துவ அதிகாரிகள் சர்வதேச போர் தொடர்பான சட்டங்கள் மற்றும் மருத்துவ
நெறிமுறைகளை நேரடியாக மீறுகின்ற வகையில், கைதிகளுக்கு எதிராக சித்திரவதை செய்யும் நுட்பங்களை
உருவாக்குவதில் அமெரிக்க இராணுவத்தோடு இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அந்தக்
கட்டுரை புதிய ஆதாரத்தை தருகிறது.
சர்வதேச செஞ்சிலுவைக் குழு (ICRC)
சென்ற ஆண்டு கடைசியில் வெளியிட்ட ஒரு இரகசிய அறிக்கையும்
அமெரிக்க விசாரணை அதிகாரிகள், உளவியல் ரீதியாகவும், உடலை வருத்துகின்ற முறையிலும், விசாரணை செய்ததாகவும்
''மருத்துவ நெறிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல்'' என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு மருத்துவ அதிகாரிகள்
அதில் பங்கெடுத்துக் கொள்வதற்கு அவர்களை சேர்த்ததாகவும் குற்றம் சாட்டியது. (குவாண்டாநாமோவில்
புஷ்ஷின்ன் சித்திரவதை -- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், திட்டமிட்ட முறைகேடு பற்றி குற்றம் சாட்டுகிறது--
என்ற கட்டுரையையும் காண்க)
NEJM கட்டுரை ஆசிரியர்கள், குறிப்பிட்டிருப்பது:
"நாங்கள் பேட்டி கண்ட ஈராக் அல்லது குவாண்டாநாமோ வளைகுடாவில் பணியாற்றிய அல்லது அங்கிருந்த பலர்,
தங்களது அனுபவங்கள் பற்றியும் கருத்துக்களையும் வெளியில் பேசக்கூடாது என்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டனர்.
அபு கிரைப் சிறைச்சாலையில் துருப்புக்கள் கொடூரமாக சித்திரவதை செய்தது தொடர்பான புகைப்படங்கள்
அம்பலத்திற்கு வந்த நேரத்தில் அங்குள்ள மருத்துவ பிரிவு தளபதியாக பணியாற்றிய டாக்டர்
David Auch,
சிறைக்காவலில் கைதிகள் எவரும் இறந்துவிட்டால், அதைப்பற்றி எந்த விவரத்தையும் தனது மருத்துவ அதிகாரிகள்
கலைந்துரையாடக் கூடாது என்று இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்று கூறினார்.
அப்படியிருந்தும், கிடைத்திருக்கின்ற தகவல் அமெரிக்காவின் இராணுவச்சிறைகளில் பணியாற்றிய
மருத்துவர்களின் நடத்தை அமெரிக்காவின் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோள போரில்'' அந்த மருத்துவர்கள்
புரிந்த மற்றொரு போர்க் குற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.
Bloche மற்றும்
Marks எழுதுகிறார்கள்: "சிறைக் காவல் பொறுப்பை வகிப்பவர்கள்
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கைதிகளின் உடல் நிலை பற்றிய தகவல்களை மட்டும் வழங்கவில்லை, காவல் கைதிகளின்
உடல் நிலைக்கு ஏற்ப கட்டாயப்படுத்தும் விசாரணை நடைமுறைகளையும், தூக்கத்தை பறிப்பது உட்பட, விசாரணை
மூலோபாயங்களை வடிவமைப்பதிலும், மருத்துவர்கள் உதவினர். மருத்துவ அதிகாரிகள் கூட கைதிகளை விசாரணை செய்யும்
நடைமுறைகள் தொடர்பாக, விசாரணை அதிகாரிகளுக்கு பயிற்சி தருகிறார்கள்."
கட்டுரை ஆசிரியர்கள் டாக்டர்கள், சித்திரவதையில் நேரடியாக
பங்கெடுத்துக்கொண்டார்கள் என்று குற்றம் சாட்டவில்லையே தவிர ''அது நிகழந்திருக்கக்கூடும் என்று
சந்தேகிப்பதற்கு வழியிருக்கிறது என்று எழுதுகின்றனர். என்றாலும், அவர்கள் வாதிடுவது, எந்த டாக்டரும் அல்லது
இதர மருத்துவ அதிகாரிகளும் மிகத் தீவிரமான கிளர்ச்சி- எதிர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு
உதவுவார்களானால்...... அது போர் தொடர்பான சட்டங்களை மீறுவதாகும்" என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
அத்தகைய நடவடிக்கைகள் மூன்றாவது ஜெனீவா ஒப்பந்தத்தை தெளிவாக
மீறுவதாகும், அந்த ஒப்பந்தம் கூறுகிறது:
"போர்க் கைதிகளிடம் எந்தவிதமான தகவலைப் பெறுவதற்கும் எந்தவித உடலியல் அல்லது மனத்தளவு அல்லது வேறு
எந்த வகையான நிர்பந்தமும் தரக்கூடாது.
அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்துள்ள ஈராக்கில் உள்ள சிறையில் நடைபெற்ற
முறைகேடுகள் தொடர்பாக ஒரு விசாரணை நடைபெற்றபோது, 2004 பெப்ரவரியில் அபு கிரைப்பின் இராணுவ
புலனாய்வு தலைவர் கேர்னல் தோமஸ் M.
பாப்பாஸ் அளித்த சாட்சியத்தினை
NEJM கட்டுரை
சுட்டிக்காட்டுகிறது. (அது சமீபத்தில் FOIA
-வின் கீழ் பகிரங்க பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது.) கைதியின்
உடல்நிலை மற்றும் "தூக்கத்தை பறிப்பது" உட்பட ''விசாரணை நடத்துவதற்கான திட்டங்களை'' தனிநபராக,
ஒவ்வொரு கைதி தொடர்பாகவும் இராணுவ புலனாய்வுக் குழுக்கள் தயாரிப்பதில் "ஒரு மருத்துவரும் ஒரு உளவியல்
மருத்துவரும், கண்காணிப்பிற்காக உடனிருந்தனர்" என்று பாப்பாஸ் சாட்சியமளித்தார்.
சென்ற டிசம்பரில் ACLU
பெற்ற FBI
உள் ஆவணத்தில் கண்டுள்ளபடி, அபு கிரைப் சிறைச்சாலையில் இருந்த வசதிகளில் ஒரு வழியில் கண்ணாடியும்
இடம்பெற்றிருந்தது, அதற்குப் பின்னால் இருந்துகொண்டு மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் விசாரணை
நடப்பதில் கண்காணிப்பு செய்து வந்தனர்.
இராணுவத்திற்கான மருத்துவ நெறிமுறை ஆலோசகர்கள் தயாரித்துள்ள ஒரு விளக்கப்பட
(Slide)
காட்சி எப்படி இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது:
ஒருவரை நாங்கள் பிடிப்போம், அவர் விசாரணைக்கு தகுந்த உடல்வாகு உள்ளவரா என்பதை சோதித்து மருத்துவர்
உறுதி செய்வார். அவர் ஏதாவது சோதிக்க வேண்டுமென்றால் கண்காணிப்பு டாக்டரை கலந்தாலோசிப்பார்.
மருத்துவ உதவியாளர் தருகின்ற சான்றிதழில் டாக்டர் கையெழுத்திடுவார். அதற்கு பின்னர் கண்ணாடிக்கு பின்னால்
இருந்து கொண்டு மருத்துவ ஊழியர்கள் விசாரணை நடப்பதை கண்காணிப்பார்கள்".
கைதிகளை விசாரணை செய்வது தொடர்பான புதிய நகல் விதிகளில் இராணுவ
மருத்துவ ஊழியர்கள் விசாரணையில் கலந்துகொள்ள வகை செய்யப்பட்டிருக்கிறது, என்றாலும் நன்னெறி சார்ந்த அடிப்படையில்
தங்கள் பணியாற்ற மறுப்பதற்கும் வகை செய்வது தெளிவாகிறது.
2004 ஜனவரியில் உருவாக்கப்பட்ட இராணுவ நினைவுக்குறிப்பு "புலன்விசாரணை மற்றும்
எதிர்-கிளர்ச்சி எதிர்ப்புக்கொள்கை" தொடர்பான குறிப்பு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
கேட்டுக்கொள்கிறது. அந்த குறிப்பில் இடம்பெற்றுள்ள விசாரணை முறைகளில் சில வருமாறு: "மருத்துவ உதவியாளர்கள்
கண்காணிப்பில், குறைந்தபட்ச அளவிற்கு ரொட்டி மற்றும் தண்ணீர் வழங்கும் உணவுக் கட்டுப்பாடு"; "சுற்றுப்புற சூழலை
கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கை அதாவது கோடைகாலத்தில் ஏசியை
[குளிரூட்டி வசதியை]
குறைப்பது, குளிர்காலத்தில் வெப்பத்தைக் குறைப்பது"; "மருத்துவ பணியாளர் கண்காணிப்போடு 72 மணி நேரத்திற்கு
தூங்கவிடாமல் தடுப்பது---" ; "72 மணி நேரத்திற்கு உணர்வுகளை மருத்துவர் கண்காணிப்போடு பிரித்து வைப்பது---"
; "30 நாட்களுக்குமேல் தனிமைச் சிறையில் வைத்திருப்பது"; "சங்கடமான நிலைகளில் தொடர்ந்து உட்காரச்
சொல்வது"; ''துப்பறியும் நாய்களை விசாரணையின்போது பயன்படுத்துவது."
இத்தகைய சித்திரவதை நடைமுறைகளை பயன்படுத்துவதில் சிறைக் காவலர்களுடனும்,
இராணுவ விசாரணை அதிகாரிகளோடும், மருத்துவர்கள் ஒத்துழைத்தார்கள் என்று பாப்பாஸ் சாட்சியமளித்துள்ளார்.
டாக்டரும் மனவியல் வல்லுநரும் விசாரணைத் திட்டத்தை ஆராய்வர், "எது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று
இறுதியாக கூறுவது அவர்கள்தான்" என்று பாப்பாஸ் கூறுகிறார். இந்த நடைமுறைகளுக்கு முன்மாதிரிகள் எதுவுமில்லை
--- அவை "கொள்கைவழியில் இடம் பெற்றிருக்கவுமில்லை"---- ஆனால் அவை குவாண்டாநாமோவிலும்
அபுகிரைப்பிலும் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.
''நடத்துமுறை தொடர்பான விஞ்ஞான ஆலோசனைக் குழுக்களை''---
B.S.C.T என்று
அழைக்கிறார்கள். சுருக்கமாக அந்தக் குழுக்களை "பிஸ்கட்" என்று குறிப்பிடுவது வழக்கம் இந்த குழுக்களில்
உளவியல், மனநோய் மருத்துவர் இடம் பெறுவர், குவாண்டாநாமோவில் அத்தகையவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
ஊழியர்கள், பற்றாக்குறை மற்றும் இதர நிர்வாக பிரச்சனைகள் காரணமாக அபுகிரைப்பில் அவர்களது பங்களிப்பு
மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குவாண்டாநாமோவில், பிஸ்கட் குழுக்கள் மருத்துவக் குழுக்களுடன் அடிக்கடி சந்திப்பு
நடத்தி கைதிகளின் உடல்நிலை குறித்து விவாதிப்பர். சென்ற ஆண்டு
ICRC
வெளியிட்டுள்ள அறிக்கை இப்படி ''பலாத்கார முறையுடன் மருத்துவ கவனிப்பில் விசாரணையை மேலோட்டமாக
அணுகுவது" என்பது கைதிகளின் உடல்நிலை பற்றிய முழுவிவரத்தையும் விசாரணை அதிகாரிகள் தெரிந்துகொள்வதற்கு
வகை செய்கிறது என்று வாதிடுகிறது. மருத்துவர்கள் அறிந்திருக்கின்ற உண்மையை சித்திரவதையில்
சம்மந்தப்பட்டிருக்கக் கூடிய ''விசாரணைத்திட்டத்திற்காக'' பயன்படுத்தி வந்தார்கள் என்று அந்த அறிக்கை
வாதிடுகிறது.
NEJM கட்டுரையை எழுதியவர்கள்
பேட்டி கண்ட பல இராணுவ மருத்துவ அதிகாரிகள், இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி வாதிட்டனர். "இது
போன்ற பங்களிப்பில் கலந்து கொள்கின்ற மருத்துவர்கள், புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவுகிறார்களே தவிர,
மருத்துவ அதிகாரிகள் என்ற முறையில் பணியாற்றவில்லை என்றும் நோயாளி பற்றிய நோக்கு நெறிமுறைகள் இதற்கு
பொருந்தாது என்பது பொதுவான புரிதலாகும்" என்று அவர்கள் குறிப்பிட்டனர். பாதுகாப்பு சுகாதார விவகாரங்கள்
தொடர்பான துணை உதவிச்செயலாளர் டாக்டர் David
Tornberg கருத்து தெரிவிக்கும்போது, ஒரு மருத்துவ பட்டம்
என்பது ஒரு ''புனிதமான உறுதிமொழி'' அல்ல. ஒரு டாக்டர் புலன்விசாரணைக்கு தயார் செய்யும் போது
அல்லது அதில் பங்கெடுத்துக்கொள்ளும் போது அவர் ஒரு மருத்துவர் என்ற முறையில் பணியாற்றவில்லை'' என்று அவர்
வலியுறுத்தினார்.
இராணுவ புலனாய்வு குழுக்களில் பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு கைதிகளுடன்
டாக்டர்-நோயாளி உறவு இல்லை, மருத்துவ உதவி அளிப்பது தொடர்பான எந்த பொறுப்பும் இல்லை, உயிர்போகும்
ஆபத்து என்கிற அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் மருத்துவர்களாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும்
என்று Tornberg
வாதிடுகிறார். இப்படி அவர் சொல்வது முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது:
டாக்டர்களும் இதர மருத்துவ உதவியாளர்களும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக இல்லாவிட்டால், வேறு எதற்காக
சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள்?
New England Journal of Medicine
அறிக்கையானது அமெரிக்க இராணுவம் தங்களது பணிகளை நேரடியாக குற்றவியல்
முறைகேடுகள் மற்றும் கைதிகள் சித்திரவதை நடவடிக்கைகளுக்கு உதவியாக சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை
நிரூபிப்பதற்கு புதிய சான்றாக உள்ளது, இது நாஜிக்களின்
Auschwitz
மரண முகாம்களில் ஜோசப் மெங்காலே போன்ற அருவருப்பான டாக்டர்கள் செயல்படுத்திய குற்றங்களை ஒத்த
நடவடிக்கையாக இருக்கிறது.
மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு (PHR)
அமெரிக்காவின் இராணுவ காவல்களில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது
தொடர்பாக ஒரு விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணையை நடத்தக் கோரி இருக்கிறது.
PHR பாதுகாப்பு
செயலாளர் சென்ற ஆகஸ்ட்டில் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் -இடம் ஒரு விசாரணை நடத்துமாறும், இராணுவ சிறைகளில்
பணியாற்றுகின்ற மருத்துவர்களும், உதவியாளர்களும் மருத்துவ தார்மீக நெறிமுறைகளையும் சட்டபூர்வமான தேவைகளையும்
மீறி செயல்படுவது தொடர்பாகவும், இராணுவ அதிகாரிகள் அவர்களிடம் அத்தகைய கோரிக்கைகள் விடுவது
தொடர்பாகவும், மற்றும் இரகசிய மருத்துவ தகவல்களை புலன் விசாரணைக்காக முறைகேடாக பயன்படுத்துவது
தொடர்பாகவும் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுநாள்வரை அத்தகைய விசாரணை நடத்தப்படவில்லை.
Top of page |