World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சுனாமி பேரழிவுThe Asian tsunami disaster: causes and consequences WSWS and Socialist Equality Party public meeting in Colomboஆசிய சுனாமி அழிவு: காரணங்களும் விளைவுகளும்கொழும்பில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்கக் கூட்டம்25 January 2005ஆசிய சுனாமியில், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து மற்றும் ஏனைய நாடுகளிலும் 200,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி இருப்பதோடு அதன் வேகம் ஒரு பெரும் பேரழிவை விட்டுச் சென்றுள்ளது. சுனாமிக்கு இயற்கை காரணமாக இருந்த போதிலும், பேரழிவின் அளவு தவிர்க்க முடியாததல்ல. தெளிவான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. முன்கூட்டியே எச்சரிக்கப்படாதது ஏன்? மில்லியன் கணக்கான மக்கள் இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பின்றி மிகவும் ஆபத்தான நிலையில் வசிப்பதேன்? உயிர் தப்பியவர்களுக்கான நிவாரண முயற்சிகள் ஒழுங்கின்றியும் வரம்புக்குட்பட்டதாகவும் இருப்பதேன்? இத்தகைய கேள்விகள் சம்பந்தமான எந்தவொரு விசாரணையும், இலாப அமைப்பின் தன்மையிலேயே ஊடுருவியுள்ள இந்தப் பேரழிவின் சமூக மற்றும் அரசியல் வேர்கள் பற்றிய ஒரு ஆய்வுக்கு வழிவகுக்கும். ஆரம்பத்தில் இந்த அனர்த்தத்திற்கு அலட்சியத்துடன் பிரதிபலித்த உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள், இப்போது அதை தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்காக சுரண்டிக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா "மனிதாபிமான நிவாரணம்" என்ற போர்வையில், வியட்னாம் யுத்தத்திற்குப் பின்னர் இராட்சதப் போர்க் கப்பல்களை இப்போது இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையிலும் மற்றும் இந்தோனேசியாவிலும் அமெரிக்கத் துருப்புக்கள் தரையிறங்கியுள்ளன. இங்கு பிரதான கப்பற் போக்குவரத்து பாதையூடாக ஒரு மூலோபாய தலையீடு செய்வதை பென்டகன் தனது நீண்டகால இலக்காகக் கொண்டுள்ளது. இந்தப் பேரழிவு, கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை உக்கிரமாக்கியுள்ளது. உள்நாட்டு யுத்தம் மற்றும் சமூகத் துயரங்களற்ற ஒரு எதிர்காலத்துக்கான சாதாரண மக்களின் எதிர்பார்ப்பை இட்டு நிரப்ப முடியாத ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வெளிப்படையான எதேச்சதிகார நடவடிக்கைகளை நியாயப்படுத்த சுனாமியை பயன்படுத்துகின்றார். அதேபோல், அவசரகால நிலைமையை அமுல்படுத்தி மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இராணுவத்தை நியமித்துள்ள அவர், இப்போது அரசியல் யாப்பை ஓரங்கட்டிவிட்டு ஐந்து வருடங்களுக்கு எல்லாத் தேர்தல்களையும் ஓத்திவைக்க முன்மொழிகின்றார். கொழும்பில் நடைபெறவுள்ள உலக சோசலிச வலைத் தளம்/சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில், சுனாமி பேரழிவில் உள்ள வரலாற்று மற்றும் அரசியல் விடயங்களைப் பற்றியும் வறுமை, சமூக சமத்துவமின்மை மற்றும் யுத்தத்திற்கும் பதிலீடாக ஒரு சோசலிச பதிலீட்டை அபிவிருத்தி செய்வதைப் பற்றியும் கலந்துரையாடப்படும். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே. ரட்னாயக பிரதான உரையை நிகழ்த்துவார். திகதியும் நேரமும்: பெப்பிரவரி 1, மாலை 4.30. இடம்: Public Library Auditorium, Colombo |