World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈராக்New Yorker journalist corroborates murder allegations against Iraq's prime minister ஈராக் பிரதமருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் நியூயோர்க்கர் பத்திரிக்கையாளர் By James Cogan நியூயோர்க்கர் சஞ்சிகையின் ஒரு செய்தியாளரான Jon Lee Anderson பாக்தாத்திலுள்ள Al-Amaryah சிறையில் இருந்த குறைந்தபட்சம் 6 கைதிகளை ஈராக்கின் இடைக்கால பிரதமர் இயத் அல்லாவி நீதி நிர்வாகத்துறைக்கு அப்பாற்பட்ட முறையில் சென்ற ஜூலை மாதம் நேரடியாக சுட்டுக்கொன்றார் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இந்த வாரம் மேலும் ஆதாரத்தை தந்திருக்கிறார். ஜனவரி 17-ல் நியோர்க்கர் வெளியிட்டுள்ள, பொதுவாக விமர்சனம் இல்லாத Allawi பற்றிய ஒரு நீண்ட சிறப்பு கட்டுரையில் மூன்று பந்திகளில் Anderson -ன் சாட்சியம் அடங்கியுள்ளது ("ஒரு நிழல் மனிதன்" - கட்டுரையை காண்க). விருதுபெற்ற வெளிநாட்டு செய்தி சேகரிப்பு நிருபரான ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Paul Mc Geough, அந்தக் கொலைகளை நேரில் கண்டபோது தான் பக்கத்தில் அமர்ந்திருப்பதாக Anderson காலங்கடந்து தாமதமாக உறுதிப்படுத்துகிறார். Mc Geogh தனது மூல கட்டுரையில் தான் கண்டுபிடித்த இரண்டு சாட்சிகளில் ஒருவரை பேட்டிகாணும்போது "மற்றொரு பத்திரிகையாளரும்" அங்கிருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அல்லாவி கைதிகள் குழு ஒன்றை சுட்டுக்கொன்றார் என்ற பரவலான வதந்திகள் பாக்தாத்தில் உலவியதைத் தொடர்ந்து, Mc Geough புலனாய்வு செய்து முடித்த பின்னர் இரண்டு பேரை கண்டுபிடித்து, தனித்தனியாக அவர்களை பேட்டிகண்டார். ஜூன் மத்தியில் Al-Amarya சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவங்களை இரண்டு சாட்சிகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக விவரித்தனர். அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மறுப்பை தர தவறிவிட்ட பின்னர், Mc Geough-ம் அவரது Sydney Morning Herald ஆசிரியர்களும் தங்களது தகவல்களை நம்பகத்தன்மை கொண்டது என்று நம்பி, 2004 ஜூலை 17-ல் அந்த தகவலை பிரசுரித்தனர். நேரில் கண்டவர்கள் தந்துள்ள சாட்சியங்களின்படி, சிறையின் ஒரு முற்றத்து சுவற்றில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்த, கைவிலங்கிடப்பட்ட, கண்கட்டப்பட்ட 7 கைதிகளை அல்லாவி தானே சுட்டார். 6 பேர் உடனடியாக மடிந்துவிட்டனர். அவர்களது உடல்களை அல்லாவியின் மெய்காவலர்கள் எடுத்துச் சென்றனர். அங்கு நின்ற 4 முதல் 6 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மற்றும் ஈராக்கின் இடைக்கால உள்துறை அமைச்சர் Falah al-Naqib உட்பட அங்கு நின்றவர்கள் பலரிடம் அல்லாவி அந்த கைதிகள் "மரணத்தைவிட மோசமான தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்கள்" என்று கூறியதாக சாட்சிகள் தெரிவித்தனர். "அல்லாவி தனது போலீஸாருக்கும், இராணுவ வீரர்களுக்கும் அவர்களை எவரையும் கொல்வதற்கு பயப்படவேண்டியதில்லை என்று தகவல் அனுப்ப விரும்பினார்." என்று நேரில் கண்ட ஒருவர் Mc Geough - விடம் தெரிவித்தார். Mc Geough மேற்கொண்ட ஆய்வு மூலம் கொலை செய்யப்பட்ட 3 பேர் அஹமது அப்துல்லாஹ் அஷாமி, அமர் லுக்தி முஹமது அஹ்மத் அல் குர்சியா மற்றும் Walid Mehdi Ahamed al Sammarai என்ற முடிவிற்கு வந்தார்.இந்தக் கொலைக் குற்றங்கள் தொடர்பாக அவர்களிடம் நேரில் கேள்வி எழுப்பப்பட்ட சில சந்தர்ப்பங்களில் Allawi -யும் Naqub -ம் அதை சிரித்தே மழுப்பிவிட்டனர் என்றாலும், அமெரிக்க அரசுத் துறையை சார்ந்த ரிச்சர்ட் பவுச்சர் அமெரிக்க புலனாய்வு எதுவும் நடைபெறவில்லை என்று கோடிட்டுக் காட்டினாலும் ஆகஸ்ட் 3-ல் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் கேள்வி கேட்கப்பட்டபோது, அந்த குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "அந்த செய்திகள் உண்மை என்று கோடிட்டுக் காட்டுகின்ற வகையில் அமெரிக்க அரசாங்கத்திடம் எந்தத் தகவலும் இல்லை" என்றுமட்டுமே சொல்ல முடிந்தது. "அந்த கதை நீடித்துக்கொண்டேயிருந்தது. முழுமையாக உறுதிப்படுத்தப்படவுமில்லை, அல்லது ஏற்றுக்கொள்ளதக்கவகையில் மறுக்கப்படவுமில்லை" என்று நியூயோர்க்கரில் ஆன்டர்சன் எழுதுகிறார். என்றாலும் அண்மையில் ஜோர்டானுக்கு சென்றிருந்தபோது, "பிரபலமான முன்னாள் ஈராக் அரசாங்க அமைச்சர், ஒரு அமெரிக்க அதிகாரி நடைபெற்ற கொலையை உறுதிப்படுத்தியதாக" தம்மிடம் குறிப்பிட்டதாக ஆன்டர்சன் குறிப்பிடுகிறார். அந்த அமெரிக்க அதிகாரி ஈராக் முன்னாள் அமைச்சரிடம் "என்ன குழப்பம் இது, ஒரு நாயின் மகனை (சதாம் உசேன்) ஒழித்துக் கட்டிவிட்டோம், அதன்மூலம் இன்னொரு நாயின் மகன்தான் கிடைத்திருக்கிறார்" என்று கூறினார். ஈராக்கில் அல்லாவி பொதுவாக, "மீசையில்லாத சதாம்" என்று குறிப்பிடப்படுகிறார். 1975 வரை அவர் பாத்திஸ்ட் அரசாங்கத்திற்கு படுமோசமான ஆள்காட்டியாக பணியாற்றி வந்தார். சதாம் குசேனுடன் மோதிக்கொண்ட பின்னர், பிரிந்து சென்று M15 மற்றும் CIA வுடன் பணியாற்றினார். சதாம் குசேனின் அஞ்சத்தக்க முக்காபரத் இரகசிய போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஈராக் ஆட்சி மீது அதிருப்தி கொண்ட தரப்பினரோடு அவரது ஈராக் தேசிய உடன்படிக்கை கட்சி, உறவுகளை வளர்த்துக்கொண்டது. அல்லாவியின் மைத்துனர் ஆன்டர்சனிடம், "முக்காபரத் மிரட்டல் கலாச்சாரத்தை அவர் அறிந்திருக்கிறார்" என்று கூறினார். அல்லாவியின் நடவடிக்கைகள் தொடர்பாக சென்ற ஜூனில் கிடைத்தத் தகவல் மேலும் அம்பலத்திற்கு வருவதற்கு இதுவரை இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டதற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. சிட்னி மோர்னிங் ஹெரால்டில் அந்தத் தகவல் வெளியிட்டபின்னர், Mc Geoguh -வின் தகவலைத் தொடர்ந்து சர்வதேச பத்திரிகைகள் குறிப்பாக அமெரிக்காவிலுள்ள பத்திரிகைகள் திட்டமிட்டு அதனை முன்தணிக்கை செய்தன அல்லது அமுக்கி வாசித்தன மற்றும் அதனைப் பின்தொடர முயற்சிக்கவில்லை. குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் மவுனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு பத்திரிகைகளுமே புறநிலை ஆய்விலும் தாராளவாத முறையிலும் குரல் கொடுப்பவை என்று நாடகம் ஆடுபவை. அப்படியிருந்தும் ஈராக் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான பொய்களுக்கு அப்பாலும், அபு கிரைப் சிறைச்சாலையில் அமெரிக்க போர்வீரர்கள் ஈராக் கைதிகளை சித்திரவதை செய்தது அம்பலத்திற்கு வந்தபின்னரும், வெள்ளை மாளிகை ஒரு ஈராக் முரடரை ஈராக் தலைவராக அமர்த்தி, நீதிமன்றத்திற்கு அப்பால் சென்று கொலை செய்து தப்புவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுகளை இரண்டு பத்திரிகைகளுமே ஆராய்வதற்கு மறுத்துவிட்டன. Mc Geough - ம் சிட்னி மோர்னிங் ஹெரால்ட் உம் வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு ஊன்றுகோலில் நிற்க வேண்டிய அளவிற்கு விடப்பட்டன. எப்படி பார்த்தாலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அவர்கள் பிரசுரித்தார்கள், அதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமான ஊடகங்களின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து புஷ் நிர்வாகத்தையும் அதன் பொம்மையான அல்லாவியையும் விசாரணையிலிருந்து காப்பாற்றி விட்டன. .நியூயோர்க் டைம்ஸ் பொது விவகாரங்கள் ஆசிரியர் Daniel Okrent -ற்கு உலக சோசலிச வலைத் தளம் விடுத்திருந்த கேள்விகளுக்கு 2004 ஜூலை 29-ல் அனுப்பியிருந்த பதிலில், அந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவோ அல்லது மறுக்கவோ இயலாத நிலையில் அதைப்பற்றி விவரங்களை வெளியிட்டால், பத்திரிகை தார்மீக நெறிக்கு முரணான இதழியல் நடவடிக்கையை எடுத்த குற்றத்திற்கு ஆளாகும் என்று Times -ன் நடவடிக்கையை நியாயப்படுத்தி நின்றார். இந்த நிலைப்பாட்டிற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் பதிலை "ஈராக்கின் அல்லாவிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுக்கள்: நியூயோர்க் டைம்ஸ் பொது விவகாரங்கள் ஆசிரியருடன் கடிதப் போக்குவரத்துக்கள்" என்ற கட்டுரையில் காணலாம். மேலும் ஒரு உடனடி அக்கறை நியூயோர்க்கர் கட்டுரையிலிருந்து எழுந்திருக்கிறது என்றாலும், அவரது பதிலில் வேறு ஒன்றை எழுதியிருக்கிறார். டைம்ஸின் "தலைசிறந்த நிருபர்களில்" ஒருவர் அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார் என்று Okrent -உறுதியளிக்கப்பட்டிருந்தார். சென்ற ஜூலை மாதம் Paul Mc Geough வெளியிட்ட கட்டுரை புலனாய்வு இதழியலில் தொடர் விசாரணைக்கு ஏற்ற பல்வேறு தகவல்களை தந்திருக்கிறது. அந்தக் கொலைகள் நடந்த தோராய தேதி, எங்கு நடந்தது என்ற விவரம், பலியான மூவரது பெயர்கள், கொல்லப்பட்ட விவரங்கள், அமெரிக்கர்கள் அங்கிருந்தார்கள், ஆகிய விவரம் தரப்பட்டிருக்கிறது. டிசம்பரில் Jon Lee Anderson ஈராக்கின் முன்னாள் அமைச்சர் ஒருவரை கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது. அவர் அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று ஒரு அமெரிக்க அதிகாரி தன்னிடம் கூறியதாக தெரிவிப்பதற்கு தயாராக இருந்திருக்கிறார். அதற்கு மாறாக நியூயோர்க் டைம்ஸ் க்கும் வளங்கள் எதற்கும் குறைவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் உச்சாணி மட்டங்களில் அதனது தொடர்புகளுக்கும் குறைவில்லை, ஈராக் இடைக்கால ஆட்சியிலும் தொடர்பு இருக்கிறது, என்ற சந்தேகம் உள்ளது, அப்படிப்பட்ட நிலையில் கடந்த 6 மாதங்களில் அந்த பத்திரிகை எந்த தகவலையும் கண்டுபிடித்து வெளியிடவில்லை. சென்ற ஆண்டு உலக சோசலிச வலைத் தளம் சுட்டிக்காட்டிய ஒரு அம்சத்தை வலியுறுத்துவதாக ஆன்டர்சன் கட்டுரை அமைந்திருக்கிறது. அல்லாவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக டைம்ஸ், போஸ்ட் போன்ற செய்தி பத்திரிகைகள் அப்பாவித்தனமான விளக்கங்களை தந்துவிட முடியாது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஒரு தேர்தல் நடத்தப்படும், அதை புஷ் நிர்வாகம் பல தசாப்தங்கள் சர்வாதிகாரத்திற்கு பின் ஈராக் ஜனநாயக மறுமலர்ச்சியை காணப்போகிறது என்று சித்தரித்து காட்ட தீவிரமாக முயன்று வருகிறது. வாஷிங்டன் அதிகம் விரும்புகிற, ஆதரிக்கிற வேட்பாளர் அல்லாவி மற்றும் அவரது ஈராக் தேசிய உடன்பாட்டு கட்சி ஆகும். அவர் ஒரு கொலைகாரர் என்ற நம்பகத்தன்மையுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தவறிவிட்டமையானது, ஈராக் போரை நியாயப்படுத்த நடத்தப்பட்ட பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் உடந்தையாக, மற்றும் ஆக்கிரமிப்பானது ஈராக்கை "விடுவிப்பதற்காக" என்ற அந்த பொய்யை சீர்குலைக்கிற வகையில் வெளியிடப்படுகின்ற எந்த செய்தியையும் முன்தணிக்கை செய்வது என்ற அமெரிக்க ஊடகங்களின் கொள்கையிலிருந்து பெருக்கெடுக்கிறது. |